• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

நிலவினும் இனியாள்!அத்தியாயம்:-12

Roja

Active member
Episode-12

தன் மேல் சரிந்திருந்த மனையாளின் இதழ்களை முற்றுகையிட்டிருந்த அஸ்வின்..மென்மையில் தொடங்கிய அந்த இதழ் ஒற்றலை வன்மையாக மாற்றிப் பல நிமிடங்கள் கழிந்துப் பின்...மெதுவாக அவளை விடுவித்த போதும் கூட...மதி கண்விழித்துப் பார்க்கவும் இல்லை, கணவனின் முத்த முற்றுகை தாங்காது இறுகப் பற்றி இருந்த அவன் சட்டைக் காலரையும் விடவில்லை.

அன்று அந்நிய ஆணாக தொட்ட போது திமிரி விலகிய மதி...இன்று அஸ்வினின் தாலி கழுத்தில் ஏறியதும் தன் உள்ளம் அவனை கணவனாக ஏற்று,அவன் தொடுகையை அங்கீகரித்ததோ என்னவோ!அவள் உடல் அவளையுமறியாமல் அஸ்வினின் முத்தத்துக்கு இசைந்திருந்தது.

அவனை நீலகண்டர் விரதம் இருக்கச் சொன்ன மதி...விரதம் அவனுக்கு மட்டுமல்ல தனக்கும் சேர்த்துத் தான் என்பதை உணராதவள் போல் கணவனின் முத்தத்தில் திளைத்து,மோனநிலையில் ஆழ்ந்திருக்க.அந்த நிலையே அஸ்வினுக்குப் போதுமானதாக இருந்தது...தன் மனைவியை மென்மேலும் நெருங்குவதற்கு.

இருந்தும்! அன்று தன் அன்னை சொன்ன...பெண்ணின் மனதை வெல்வதே வீரனுக்கு அழகு.என்ற வார்த்தைகளும்,இன்று மதி அவனிடம் வைத்த கோரிக்கையும் முன்னிறுத்தி. மனைவியை முழுதாக எடுத்துக்கொள்ள துடித்த மனதை அடக்கி..அவளின் மோன நிலையை தெளிவித்து கூடலுக்கு முழுச் சம்மதம் பெரும் பொருட்டு.... இதழ் சிவந்து இறுக்க விழி மூடி தன் நெஞ்சில் சாய்ந்திருந்த மனையாளின் செவியில் தன் உதட்டைப் பொருத்தி மென்மையாக "மதி" என்றழைத்து....நாம விரதத்த ஒத்தி வச்சுட்டு கேம ஸ்டார்ட் பண்ணலாமா?? என்று தாபம் வழியும் குரலில் கேட்டான்... அஸ்வின்.

கணவனின் இறுகிய அணைப்பில்... கொட்டிக்கிடந்த அவனது காதலை, மனையாளின் உள்ளம் தெரிந்து கொண்டதோ என்னவோ மதியின் பேச்சை கேட்காது வேறு உலகில் சஞ்சரித்து, கணவன் தீண்டலில் மெய்சிலிர்த்து, அவனிடமே தஞ்சம் அடைந்திருந்த மனதை. அவன் செவியில் கூறிய விரதம்,கேம் ஸ்டார்ட் பண்ணலாம்...என்ற வார்த்தைகள் தட்டி எழுப்ப...இனம் புரியா உணர்ச்சிகளில் சிக்கியிருந்த மதி மெல்ல கண் திறந்து பார்த்தாள். வெகு அருகில் தெரிந்த கணவனின் முகமும் அவனின் கண் சிமிட்டலும் நடந்து கொண்டிருப்பதை அவளுக்கு உணர்த்த...விருட்டென்று அவன் பிடியிலிருந்து விலகி கட்டிலை விட்டு இறங்கி நின்று அஸ்வினை முறைத்தாள்.


மனைவி தன்னை விட்டு விலகி எழவும் தானும் எழுந்து அமர்ந்த அஸ்வின்... தன்னையே முறைத்துப் பார்த்திருந்த மனைவியைப் பார்த்து"என்னாச்சு மதி எதுவும் வேணுமா" என்று ஒன்றுமே நடவாதது போல் வினவினான்.

கணவனின் கேள்வியில் மேலும் அவனை நோக்கித் தீப் பார்வை வீசியவளை... 'பழைய மதி எட்டிப் பாக்குறா' என்று அவனும் ரசனையாய்ப் பார்க்க அந்தப் பார்வையில் சிவந்தவள், லேசாகத் தலை குனிந்தவாறு "நம்ப ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கிட்டு அதுக்கப்புறம் இதெல்லாம் வச்சுக்கலாம்னு சொன்னேன்...ஆனா நீங்க இப்படி பண்ணிட்டீங்களே" என்று அவனைப் பார்த்து குற்றம் சாட்ட.

அவனோ..."நான் இன்னும் ஒண்ணுமே பண்ணலியேடி" எனத் தொடர்ந்தான்... "நீயா வந்து என் மேலே விழுந்தும் என்ன முழுங்குற மாதிரி பாத்தும் வெறும் முத்தத்தோட நிறுத்தி. நீ சொன்ன விரதத்த உனக்கு ஞாபகப்படுத்தின எனக்கு.....நீ நன்றி தான் சொல்லணும்" என்று நேர்மையாளனைப் போல் பேசியவனைக் கண்டு உதட்டை கடித்து தன்னைத் தானே கடிந்து கொண்டாள்.மதி


'சேச்'சே'நீயே! அவங்ககிட்ட இப்போதக்கி எதுவும் வேணான்னு சொல்லிட்டு அவங்க மேலேயே போய் விழுந்து அவங்களையே திங்கிற மாதிரி பார்த்து வச்சு அவங்க நெஞ்சுலயே மயங்கி கெடந்தியே உனக்கு வெக்கமா இல்ல'...என்று மானசீகமாய் தலையில் அடித்துக் கொண்டவள்.
'அவங்ககிட்ட எதுவோ இருக்கு மதி...அவங்க பக்கத்துல இருந்தா கண்டிப்பா நீ...நீயா இருக்க முடியாது... ஒன்னு! பயப்பட வக்கிறாங்க,இல்ல படபடக்க வக்கிறாங்க, இல்லனா இப்ப நடந்த மாதிரி எதுனாச்சும் பன்றாங்க. அவங்க பக்கத்துல நெருங்காம இருக்கதுதா ஒனக்கு நல்லது'...என்று பல வாறு யோசித்தவள்...தான் அவன் அருகில் இப்படி நிலை இழப்பதற்கு, என்ன காரணம் என்பதை மட்டும் யோசிக்க மறுத்தாள்.

உதட்டைக் கடித்தவாறு பல யோசனையில் குழப்பம் படிந்த முகத்தோடு நின்றவளை அவள் முகத்தின் முன்னால் சொடுக்கிட்டு"மதி" என்றழைத்த அஸ்வின்...அவள் நிமிர்ந்து தன்னைப் பார்க்கவும்"கண்டிப்பா நீலகண்டர் விரதம் இருந்துதா ஆகணுமாடி" என்றான். ஏமாற்றத்தை மறைத்து ஏக்கத்தை நிரப்பிய குரலில்.

அவனுக்கு அவள் வேண்டும் முழுதாக... ஆனால் அவளின் முழுச் சம்மதத்தோடு.

கணவனின் உரிமையான டி என்ற அழைப்பும், அவன் குரலும் அவளை என்னவோ செய்தாலும். அவனிடம் நெருங்க விடாமலும் எதுவோ தடுத்தது.அது எது என்று அவளால் சரியாகக் கூற முடியாது. அக்காவின் இப்போதைய நிலைமையா,அல்லது அக்காவை இந்த நிலைக்கு ஆளாக்கிய ஆண் வர்க்கத்தைச் சேர்ந்தவன் தானே இவனும் என்ற எண்ணமா, இல்லை திருமணமே வேண்டாம் என்று இருந்தவளை காதல் என்று சுற்றி... தன் வாயாலேயே திருமணத்திற்கு ஒத்துக்கொள்ள வைத்து விட்டானே...என்று அவன் மேல் எழுந்த ஈகோவா இப்படி பல காரணங்களை சொன்னாலும்.அஸ்வினுக்கு தன் மேல் இருக்கும் காதலை! புதிய பொம்மையை பார்க்கும் ஒரு சிறுவனுடைய ஆவல் என்றுதான் நினைத்தாள்!மதி.
வேறு ஒரு புதிய பொம்மை கிடைத்துவிட்டால்,தான் பழைய பொம்மையாய் தூக்கி எறியப்பட்டு விடுவோமோ என்று பயந்தவள்.அஸ்வின் ஏற்கனவே தன் மனக் கதவை உடைத்து உள்ளே அமர்ந்து விட்டான்.என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து....தன் மனம் அவனை ஏற்றுக் கொள்ளும் வரை உடலால் விலகி இருப்பதே நல்லது என்று முடிவெடுத்திருந்தாள் நம் இனியாள்.

திருமணத்திற்கு முன்பே இப்படி ஒரு முடிவெடுத்திருந்த மதி கணவன் ஏக்கக் குரலில் விரதம் தொடர வேண்டுமா!என்று கேட்ட கேள்விக்கு ஆம் என்பது போல் தலையை மட்டும் அசைக்க.....

இப்போதைக்கு மதி தன் முடிவை மாற்றிக் கொள்ள மாட்டாள் என்று அறிந்ததும் பெருமூச்சு விட்ட அஸ்வின்....'இவள எல்லாம் கிறக்கத்திலேயே வச்சு வேலைய முடிச்சிருக்கணும்...நியாயமா நடந்துக்க நெனச்சேலடா அஸ்வினா! உனக்கு கிடைச்சிருக்க பரிசு இதுதான் என்ஜாய் பண்ணு' என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டவன்.

மதியை நோக்கி "இட்ஸ் ஓகே மதி!நம்மள நாம புரிஞ்சுக்கிற வரைக்கும் நான் காத்திருக்கிறேன் "எனக்கூறி பக்கத்துல டிரஸ் சேஞ்ச் பண்ற ரூம் இருக்கு அங்கயும் ஒரு கட்டில் இருக்கு நீ அங்க படுத்துக்கோ நா இங்கயே படுத்துக்கறேன் என்றவன். "ம்...அப்புறம். ஒரு டவுட் மதி...நார்மலா விரதம் இருக்கிறவங்க இடையில பழம் பால் இதெல்லாம் சாப்பிடுவாங்க... அது மாதிரி உனக்காக விரதம் இருக்கப் போற எனக்கும்,உன்னோட ஸ்டாபெர்ரி பழத்த மட்டும் அப்பப்போ கொடுத்துடு!என்ன" என்று அவள் உதட்டில் பார்வையை பதித்து கண்ணடித்துச் சிரித்தவனைப் பார்க்க...கோபியர்கள் கொஞ்சும் கோகுலக்கண்ணனும், இவனும் ஒன்றோ... என்றே தோன்றியது நம் ராதைக்கு.

இன்னும் சிறிது நேரம் அங்கே நின்றால் அந்த கோகுலக்கண்ணன் கோபியர்களின் மனதை கொள்ளை அடித்தது போல், இவர் நம் மனதை கொள்ளை கொண்டு விடுவாரோ....என்று தோன்ற குட் நைட் என்று கூறிவிட்டு அவன் காட்டிய அறைக்குள் சென்று வேகமாக கதவை பூட்டிக் கொண்டாள் மதி...தன் மனக் கதவையும் தான்.

புதுமணத் தம்பதியர் அனைவரும் இன்னும் நீளாதோ என ஏங்கும் இரவு, இவர்களுக்கு மட்டும் சீக்கிரம் விடியாதா என்று இருக்க... இருவரும் ஒருவரைப் பற்றிய ஒருவர் சிந்தனையில் தூக்கத்தை தொலைத்து இருந்தனர்....
அஸ்வின் தன் விருப்பத்துக்கு செவி சாய்க்க மாட்டான் என்று எண்ணியிருந்த மதிக்கு...அவன் உனக்காக விரதம் இருக்கிறேன் எனக் கூறியது சற்றே நிம்மதியைத் தர, இவருக்கு நீலகண்டர் பத்திலாம் தெரிஞ்சிருக்கு, தமிழ் இலக்கியமும் படிச்சிருப்பாரோ என்று வியந்து .இந்த ஒரு மாசத்துல நம்ம வாழ்க்கைல என்னவெல்லாம் நடந்துருச்சு என்று அனைத்தையும் அசை போட்டவள்...தன் கணவனின் குறும்புகளையும் நினைத்துச் சிரித்து "நாட்டிமேன்" எனக் கூறி...அவன் நினைவுகளுடனே கண்ணயர்ந்தாள்.

மதி அறைக்குள் சென்று கதவை அடைத்ததும் கட்டிலில் விழுந்த அஸ்வினுக்கு...மனையாளை நினைக்க, நினைக்க. நித்திரா தேவி அவனை விட்டு காத தூரம் சென்றாள்....'அவளுக்கு என் மேல காதல் இருக்கு ஆனா அத ஒத்துக்க மாற்றா எத்தன நாளக்கிதா லவ்வ...மறச்சு வப்பான்னு நானும் பாக்குறேன்! எதயும் கேர் பண்ணாத என்னையே இப்படி புலம்ப வச்சுட்டேல்ல பேபி... என் விரதம் முடியற அன்னக்கி இருக்குடி உனக்கு' என்று கைப்பேசியில் இருந்த மனயாளின் புகைப்படத்திடம் பேசிக் கொண்டிருந்தவன்...

மனைவியின் படம் நெஞ்சில் பதியுமாறு கைப்பேசியைத் தன் மார்பின் மேல் வைத்துக் கொண்டு...மெல்ல தூக்கத்தை தழுவினான்.நம் வேங்கை!

காதலால் நிரம்பிய இரு உள்ளங்களும் விலகி இருப்பது...காலத்தின் விதியா? இல்லை கயவனின் சதியா?.

இனியாள் வருவாள்🌹
 
asasa11
asasa11

Members online

Latest Updates

Top
document.oncontextmenu = document.body.oncontextmenu = function() {return false;}