JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

பதிப்புரிமை பெறுவது எப்படி?

JB

Administrator
Staff member
உங்களது நாவல்களுக்கு எவ்வாறு பதிப்புரிமை பெறுவது?

பத்து மாதங்கள் சுமந்து வலியின் உச்சியை அடைந்து நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளை, இவர்கள் எனது குழந்தைகள் தான் என்று மற்றவர்களுக்கு நிரூபணம் செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்படுகின்றது..

அங்கனம் இருக்க நமது இல்லத்தில் தனியறையில் நாம் பல மணி நேரங்களை (மாதங்கள்/வருடங்கள்) செலவு செய்து உருவாக்கும் படைப்புகளை "எனது படைப்பு" தான் என்று எவ்வாறு பிறருக்கு நிரூபிப்பீர்கள்? அவ்வாறு நிரூபிப்பதும் ஒவ்வொரு எழுத்தாளரின் கடமை ஆகும், அதாவது சட்டப்பூர்வமாக உங்களது படைப்புகள் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிரூபியுங்கள்..

ஏனெனில் நமக்கு மட்டுமே நமது படைப்புகளின் மீது முழு உரிமை இருக்கின்றது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தாலும், சில புல்லுருவிகள் ஒரு படைப்பிற்குப் பின் எத்தனை எத்தனை உழைப்புகள், சிரமங்கள், இன்னல்கள், உடல் உபாதைகள் ( முக்கியமாக முதுகு வலி) இருக்கின்றன என்பதைச் சிறிதும் உணராது, அவற்றைப் பொதுப்படைப்பாக மாற்றிவிடுகின்றன..

இவ்வாறு திருடப்படுவது Plagiarism/ கருத்து திருட்டு என்றழைக்கப்படுகின்றது.. ஆக, நமது படைப்புகளைத் திருடுபவர்களைத் திருடர்கள் என்று கூறினாலும் மிகையாகாது.. அவர்களாகவே திருந்தினால் ஒழிய இத்தகைய திருடர்களை ஒழிக்க முடியாது..

சில வேளைகளில் காவலர்களை விட குற்றவாளிகள் மிகுந்த புத்திசாலியாக இருக்கின்றார்களே, என்ன செய்வது?

ஆகவே தான் இந்தப் பகுதி...

எழுதிவிட்டோம், முடிந்தளவிற்கு நமது கதையை ஒருவரும் pdf ஆகப் போட முடியாத அளவிற்குப் பாதுகாப்போம் என்று மட்டும் இருந்துவிடாது, உங்களது உரிமையை நீங்கள் தான் நிலைநாட்ட வேண்டும்.. ஆனால் இது என்னுடையது தான் என்று நாம் பேசுவதற்கு முன்பு அதற்கான சான்று இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.. அதற்குத் தான் உங்களது கதைகளுக்குப் பதிப்புரிமை பெற்றுவிடுவது மிகவும் நல்லது..

பதிப்புரிமை எவ்வாறு பெருவது என்று நிறைய எழுத்தாளர்களுக்குச் சந்தேகங்கள் இருக்கும்..

இங்குக் கீழே சில ஸ்கிரீன் ஷாட்ஸுடன் என்னால் இயன்றவரை பதிப்புரிமை பெறுவது எப்படி என்று விளக்கியிருக்கிறேன்.. ஏதாவது கேள்விகள் இருப்பின் இங்கேயே நீங்கள் அவற்றைக் கேட்கவும் செய்யலாம்.. என்னால் இயன்றவரை நேரம் கிடைக்கும் பொழுது பதிலளிக்கிறேன்.

1. இந்திய பதிப்புரிமை தளத்திற்குச் செல்லக் கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

http://copyright.gov.in/

2. உங்களது கதைகளைப் பதிவு செய்வதற்கு ஆகும் செலவு, 500 ரூபாய். அதற்கான விளக்கங்களுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

http://copyright.gov.in/frmFeeDetailsShow.aspx

84

3. நீங்கள் ஆன்லைனிலோ அல்லது தபால் வழியாகவோ உங்களது படைப்புகளுக்குப் பதிப்புரிமை பெறுவதற்கு
உங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கீழே உள்ள படத்தில் சிகப்புக் கட்டங்கள் இட்டிருக்கும் பகுதிகளுக்குள்ளே சென்றால் அதற்கான விவரங்களை நீங்கள் கண்டறியலாம்.

View attachment 79

4. ஆன்லைனில் அல்லாது தபால் வழியாக அப்ளை செய்ய நினைப்பவர்கள் இவ்வாறு உங்களது பாரத்தை [form] டௌன்லோட் செய்யலாம். [To download the form]

80

5. ஆன்லைனில் அப்ளை செய்ய விரும்புவோர் தளத்தின் வலது பக்கத்தில் இருக்கும் e-Filling of Application ஐ க்ளிக் செய்யுங்கள்..

81

6. இங்கு நீங்கள் உங்களுக்கென்று பிரத்யேகமான ஐடியையும் பாஸ்வேர்டையும் பதிவு செய்ய வேண்டும்..

View attachment 82

7. உங்களது விண்ணப்பதை சமர்ப்பித்தற்குப் பிறகு நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடிக்குப் பதிப்புரிமை அலுவலகத்தில் இருந்து ஈமெயில் வரும்.. அதனில் உங்களது விண்ணப்பத்தின் எண் [Diary No] இருக்கும்.. அந்த எண்ணை கொண்டே நீங்கள் உங்களது விண்ணப்பத்தின் நிலையைக் கண்டு பிடிக்க இயலும்.

8. நீங்கள் உங்கள் ஐடியைக் கொண்டு உங்களது விண்ணப்பத்தின் நிலையைக் கண்டு பிடிப்பதற்கு "Status of the Application" இணைப்பை க்ளிக் செய்யவும்..

85

9. இங்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினைப் போன்று தான் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தின் ஸ்டேட்ஸை கண்டறிய முடியும்..

83

10. இவற்றில் மிகவும் முக்கியமான விஷயங்கள் இரண்டு இருக்கின்றன..

ஒன்று: Published and Unpublished works. ஏற்கனவே வெளியிடப்பட்ட படைப்பு (புத்தகம்) அல்லது இன்னும் புத்தகங்களாக வெளியிடப்படாத கதைகள்.. அதாவது அன்பப்ளிஷ்ட் வெர்க்ஸ் என்றால் நீங்கள் இனி எழுதப் போகும் கதைகளுக்கோ அல்லது ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் கதைகளுக்கோ பதிப்புரிமைக்கு அப்ளை செய்யலாம் என்று.. பதிப்புரிமை பெறுவதற்கு மாதங்கள் பல எடுத்தாலும், எந்தத் தேதியில் நீங்கள் விண்ணப்பித்து இருக்கின்றீர்களோ அன்றில் இருந்தே உங்களது படைப்புகளுக்கான உரிமை உங்களுக்குச் சொந்தமாகிவிடும்.. உங்கள் விண்ணப்பத்திற்குக் கொடுத்த எண்ணே அதற்கு உபயோகப்படும்..

இரண்டு: பதிப்புரிமைக்கான விண்ணப்படிவத்தை அனுப்பும் பொழுது நீங்கள் அதனுடன் இணைத்து சில டாக்குமெண்ட்ஸையும் அனுப்ப வேண்டும்.. அதற்கான விவரங்கள் அடங்கிய படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

86

87

11. கீழே உள்ள இணைப்பிற்குச் சென்றால் உங்களது அனைத்து கேள்விகளுக்குமான விடைகளும் [Frequently Asked Questions ] இருக்கும்..

http://copyright.gov.in/frmFAQ.aspx

12. பதிப்புரிமை கையேடு

http://copyright.gov.in/Documents/handbook.html

ஒரு கதையை எழுதுவதற்கு செலவிடும் நேரத்தில் ஒரு துளிக்கூட எடுக்காது பதிப்புரிமை பெறுவதற்கு அப்ளை செய்ய.. ஒரு முறை இதன் கையேடை நன்கு படித்துவிட்டு பிறகு உங்களது விண்ணப்பதை சமர்ப்பியுங்கள்.. ஏதாவது கேள்விகள் இருப்பின் இங்கேயே நீங்கள் அவற்றைக் கேட்கவும் செய்யலாம்.. என்னால் இயன்றவரை நேரம் கிடைக்கும் பொழுது பதிலளிக்கிறேன்.

ஜேபி
 
Bvisri

New member
Thanks JB. It's really a very useful information for me. Deep inside had a doubt of how all writers copyrighting. But am lazy to search. Surprisingly you are posting answer for my doubt like a soulmate. Thanks again JB. My best wishes for your success.
 
JLine

Moderator

No problem dear. If you have any questions, they have a handbook, faq pages etc. And thanks for the wishes :)
 
Subageetha

Well-known member
நன்றி...என்னை போல புது எழுத்தாளர்களுக்கு நீங்கள் செய்திருப்பது பேருதவி.
 
Suhana

Well-known member
உங்களது நாவல்களுக்கு எவ்வாறு பதிப்புரிமை பெறுவது?

பத்து மாதங்கள் சுமந்து வலியின் உச்சியை அடைந்து நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளை, இவர்கள் எனது குழந்தைகள் தான் என்று மற்றவர்களுக்கு நிரூபணம் செய்வதற்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்படுகின்றது..

அங்கனம் இருக்க நமது இல்லத்தில் தனியறையில் நாம் பல மணி நேரங்களை (மாதங்கள்/வருடங்கள்) செலவு செய்து உருவாக்கும் படைப்புகளை "எனது படைப்பு" தான் என்று எவ்வாறு பிறருக்கு நிரூபிப்பீர்கள்? அவ்வாறு நிரூபிப்பதும் ஒவ்வொரு எழுத்தாளரின் கடமை ஆகும், அதாவது சட்டப்பூர்வமாக உங்களது படைப்புகள் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நிரூபியுங்கள்..

ஏனெனில் நமக்கு மட்டுமே நமது படைப்புகளின் மீது முழு உரிமை இருக்கின்றது என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயமாக இருந்தாலும், சில புல்லுருவிகள் ஒரு படைப்பிற்குப் பின் எத்தனை எத்தனை உழைப்புகள், சிரமங்கள், இன்னல்கள், உடல் உபாதைகள் ( முக்கியமாக முதுகு வலி) இருக்கின்றன என்பதைச் சிறிதும் உணராது, அவற்றைப் பொதுப்படைப்பாக மாற்றிவிடுகின்றன..

இவ்வாறு திருடப்படுவது Plagiarism/ கருத்து திருட்டு என்றழைக்கப்படுகின்றது.. ஆக, நமது படைப்புகளைத் திருடுபவர்களைத் திருடர்கள் என்று கூறினாலும் மிகையாகாது.. அவர்களாகவே திருந்தினால் ஒழிய இத்தகைய திருடர்களை ஒழிக்க முடியாது..

சில வேளைகளில் காவலர்களை விட குற்றவாளிகள் மிகுந்த புத்திசாலியாக இருக்கின்றார்களே, என்ன செய்வது?

ஆகவே தான் இந்தப் பகுதி...

எழுதிவிட்டோம், முடிந்தளவிற்கு நமது கதையை ஒருவரும் pdf ஆகப் போட முடியாத அளவிற்குப் பாதுகாப்போம் என்று மட்டும் இருந்துவிடாது, உங்களது உரிமையை நீங்கள் தான் நிலைநாட்ட வேண்டும்.. ஆனால் இது என்னுடையது தான் என்று நாம் பேசுவதற்கு முன்பு அதற்கான சான்று இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.. அதற்குத் தான் உங்களது கதைகளுக்குப் பதிப்புரிமை பெற்றுவிடுவது மிகவும் நல்லது..

பதிப்புரிமை எவ்வாறு பெருவது என்று நிறைய எழுத்தாளர்களுக்குச் சந்தேகங்கள் இருக்கும்..

இங்குக் கீழே சில ஸ்கிரீன் ஷாட்ஸுடன் என்னால் இயன்றவரை பதிப்புரிமை பெறுவது எப்படி என்று விளக்கியிருக்கிறேன்.. ஏதாவது கேள்விகள் இருப்பின் இங்கேயே நீங்கள் அவற்றைக் கேட்கவும் செய்யலாம்.. என்னால் இயன்றவரை நேரம் கிடைக்கும் பொழுது பதிலளிக்கிறேன்.

1. இந்திய பதிப்புரிமை தளத்திற்குச் செல்லக் கீழே உள்ள இணைப்பை க்ளிக் செய்யவும்.

http://copyright.gov.in/

2. உங்களது கதைகளைப் பதிவு செய்வதற்கு ஆகும் செலவு, 500 ரூபாய். அதற்கான விளக்கங்களுக்கு இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்.

http://copyright.gov.in/frmFeeDetailsShow.aspx

View attachment 84

3. நீங்கள் ஆன்லைனிலோ அல்லது தபால் வழியாகவோ உங்களது படைப்புகளுக்குப் பதிப்புரிமை பெறுவதற்கு
உங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். கீழே உள்ள படத்தில் சிகப்புக் கட்டங்கள் இட்டிருக்கும் பகுதிகளுக்குள்ளே சென்றால் அதற்கான விவரங்களை நீங்கள் கண்டறியலாம்.

View attachment 79

4. ஆன்லைனில் அல்லாது தபால் வழியாக அப்ளை செய்ய நினைப்பவர்கள் இவ்வாறு உங்களது பாரத்தை [form] டௌன்லோட் செய்யலாம். [To download the form]

View attachment 80

5. ஆன்லைனில் அப்ளை செய்ய விரும்புவோர் தளத்தின் வலது பக்கத்தில் இருக்கும் e-Filling of Application ஐ க்ளிக் செய்யுங்கள்..

View attachment 81

6. இங்கு நீங்கள் உங்களுக்கென்று பிரத்யேகமான ஐடியையும் பாஸ்வேர்டையும் பதிவு செய்ய வேண்டும்..

View attachment 82

7. உங்களது விண்ணப்பதை சமர்ப்பித்தற்குப் பிறகு நீங்கள் கொடுத்த ஈமெயில் ஐடிக்குப் பதிப்புரிமை அலுவலகத்தில் இருந்து ஈமெயில் வரும்.. அதனில் உங்களது விண்ணப்பத்தின் எண் இருக்கும்.. அந்த எண்ணை கொண்டே நீங்கள் உங்களது விண்ணப்பத்தின் நிலையைக் கண்டு பிடிக்க இயலும்.

8. நீங்கள் உங்கள் ஐடியைக் கொண்டு உங்களது விண்ணப்பத்தின் நிலையைக் கண்டு பிடிப்பதற்கு "Status of the Application" இணைப்பை க்ளிக் செய்யவும்..

View attachment 85

9. இங்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினைப் போன்று தான் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தின் ஸ்டேட்ஸை கண்டறிய முடியும்..

View attachment 83

10. இவற்றில் மிகவும் முக்கியமான விஷயங்கள் இரண்டு இருக்கின்றன..

ஒன்று: நீங்கள் கதை எழுதத் துவங்கும் பொழுதே உங்களது பதிப்புரிமைக்கு அப்ளை செய்யலாம்.. பதிப்புரிமை பெறுவதற்கு மாதங்கள் பல எடுத்தாலும், எந்தத் தேதியில் நீங்கள் விண்ணப்பித்து இருக்கின்றீர்களோ அன்றில் இருந்தே உங்களது படைப்புகளுக்கான உரிமை உங்களுக்குச் சொந்தமாகிவிடும்.. உங்கள் விண்ணப்பத்திற்குக் கொடுத்த எண்ணே அதற்கு உபயோகப்படும்..

இரண்டு: பதிப்புரிமைக்கான விண்ணப்படிவத்தை அனுப்பும் பொழுது நீங்கள் அதனுடன் இணைத்து சில டாக்குமெண்ட்ஸையும் அனுப்ப வேண்டும்.. அதற்கான விவரங்கள் அடங்கிய படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

View attachment 86

View attachment 87

11. கீழே உள்ள இணைப்பிற்குச் சென்றால் உங்களது அனைத்து கேள்விகளுக்குமான விடைகளும் [Frequently Asked Questions ] இருக்கும்..

http://copyright.gov.in/frmFAQ.aspx

12. பதிப்புரிமை கையேடு

http://copyright.gov.in/Documents/handbook.html

ஒரு கதையை எழுதுவதற்கு செலவிடும் நேரத்தில் ஒரு துளிக்கூட எடுக்காது பதிப்புரிமை பெறுவதற்கு அப்ளை செய்ய.. ஒரு முறை இதன் கையேடை நன்கு படித்துவிட்டு பிறகு உங்களது விண்ணப்பதை சமர்ப்பியுங்கள்.. ஏதாவது கேள்விகள் இருப்பின் இங்கேயே நீங்கள் அவற்றைக் கேட்கவும் செய்யலாம்.. என்னால் இயன்றவரை நேரம் கிடைக்கும் பொழுது பதிலளிக்கிறேன்.

ஜேபி
Thk u jb sis... Romba clr ah sollirukinga 😍😍
 
JB

Administrator
Staff member
நன்றி...என்னை போல புது எழுத்தாளர்களுக்கு நீங்கள் செய்திருப்பது பேருதவி.
You are welcome dear :)
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top