JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

பவானி பாலசுப்ரமணியம் - திருக்குறள் 962

JLine

Moderator
Staff member


#சீரினும்
சீரல்ல செய்யாரே சீரோடு
பேராண்மை வேண்டுபவர்.
"வீட்டுத் தலைவன்.."
தன் குலப்பெருமைகாக்க
தன் நல்வழிதடத்தலிலே
தன் மகவை இட்டுச் செல்வான்
நல் குணமும் புகழும் கொண்ட
பெருமகன்...
தானே குருவாயும் தனே வழியாயும்
என்னைப்பார் என் வழிப்பற்றிக்கொள்
என தட்டிக் கொடுக்கும் ஆண்மகனே
சிறந்த இல்மகனும் கூட...
வீட்டிலும் இவன் வழி நல்வழி எனில்
நாட்டிலும் இவன் நல் குடிமகனே
இவன் எத்தனை புகழுடன் ..
செல்வம் சேர்பினும் தீ வழி
சேராதிருப்பான்...!
அழகு புகழ் செல்வம் வீரம்
அத்தனை வசமிருந்தாலும்
இவனின் இழுக்கற்ற செயல்
செயல் வடிவம் பெறாதிடத்து
இக்குணங்களே இவனின்
உயர்வை பறைசாற்றும்...!!
நிரம்பலற்ற புகழோடு
செல்வளமும் கொஞ்சமாயினும்
இவனிடத்தில் உறையும் இகழ்ச்சி
அற்ற செயல்கலால்...
இவனின் புகழோடு செல்வ..
நிலையும் குன்றாத கோபுரமே...!!



https://www.facebook.com/ufi/reacti...JhY2s6OTQzNjc1Mzc5Mzk2OTAy&av=100024677769645
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top