JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ப்ரிய தர்ஷினி - சந்ததி (சிறுகதை)

JLine

Moderator
Staff member
View attachment 285
#சந்ததி (சிறுகதை)

"ஆட்கள் குறைப்பு காரணமாக, தாங்கள் பணியிலிருந்து நீக்கப்படுகின்றீர்."
காலையிலேயே தான் பணிபுரியும், அலுவலகத்திலிருந்து வந்திருக்கும் மின்னஞ்சலின் சாராம்சத்தைக் கண்டு கவலைக்கொண்டான் ஹரிஷ்.
மென்பொருள் துறையில் இது போன்று ஆட்குறைப்பின் காரணமாக பணியாளர்கள் பணி நீக்கம் செய்வது நடைமுறையில் இருப்பது தான். அதில் தானும் ஒருவனாக ஆனது ஹரிஷால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
திடீரென வேலை போனது கவலையில் ஆழ்த்த அவனின் நினைவுகள் தனது கிராமத்தை நோக்கி பயணித்தது. கூடவே தந்தையுடனான அன்றைய வாக்குவாதமும்,
"படிச்சு முடிச்சிட்ட அடுத்து என்னப்பா"
தந்தை எதைப்பற்றி கேட்கின்றார் என்பதை அறிந்த போதிலும், தெரியாததைப்போல் "அடுத்து என்னப்பா" என்று அவர் கேட்டதையே மீண்டும் கேட்டான் ஹரிஷ்.
மகனின் அகத்தினை கண்டுகொண்ட தந்தை... "என்ன வேலைப்பா செய்ய போகிறாய்" என்றார் நேரடியாக,
எவ்வளவு படித்திருந்தாலும் தனக்கடுத்து தனது மகனும் விவசாயத்தை நடத்த வேண்டுமென கனவு கண்ட தந்தையின் மனம் ஹரிஷ் கூறிய பதிலில் வெகுவாய் காயப்பட்டது.
தந்தையின் மனத்தினை அறிந்திருந்தவன், எவ்வித பூசலுமின்றி தன்னுடைய பதிலைக் கூறியிருந்தான்.
"என்னால் இந்த கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு சேற்றில் வேலை பார்க்க முடியாதுங்க, எனக்கு பட்டணத்தில் பெரிய மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கு.. இன்று மாலை நான் சென்னை கிளம்புறேங்க."
"இவ்வளவு நாள் உனக்கு பிடிச்ச படிப்பை தான் படிப்பேன்னு எங்களை விட்டுவிட்டு வெளியூரில் இருந்தீங்க.. இப்போ வேலையை காரணம் காட்டி எங்களை தனியா விட்டு போகப்போறீங்களா கண்ணு?"
'ஹரிஷின் தாய் பதறினார்.'
"என்னால் இங்கு இருக்க முடியாதுங்கம்மா"
"இங்கு போன் சிக்னல் கூட ஒழுங்கா கிடைக்காது, அட்லீஸ்ட் வை-பை கூட கனெக்ட் பண்ண முடியாது... பேஸ்புக், வாட்ஸாப், இன்ஸ்டா இதுலாம் இல்லாமல் எப்படிங்கம்மா இருக்க முடியும்.. அதை விடுங்க ஒரு வீடியோ எடுத்து டிக்-டாக்கில் அப்லோட் செய்வதற்குள் ஒரு நாளே முடிஞ்சிடுங்க..."
"நீ சொல்றதெல்லாம் எனக்கு புரியலையே கண்ணு"
"இந்த பட்டிக்காட்டுல நானெப்படிங்க இருக்க முடியும்?", "நாகரிகம் இல்லாத ஆளுங்க".. அவனின் வாய் முணுமுணுத்தது.
"பட்டிக்காடு...." ஹரிஷ் கூறிய வார்த்தை மனதில் வலியை எழுப்ப தந்தை எதுவும் பேசவில்லை.
முடிவெடுத்து பேசுபவனை என்ன சொல்வதென்று அவருக்கு தெரியவில்லை.
"என்னாப்பா?.. நீங்க எதுவும் சொல்லாமல் இருக்கீங்க.."
"இந்த பட்டிக்காட்டு சேத்துலயிருந்த வந்த பணத்துல தான்ப்பா, நீ படிச்ச... அது தான் உன்னை நாகரிகம் பற்றியெல்லாம் பேச சொல்லுது" என்றவர்,
"நீ எவ்வளவு கோடி சம்பாரித்தாலும், சேற்றில் இறங்கி வேலை பார்க்கும்போது நீ தான் முதலாளி.. மற்ற இடங்களில் ஒருவனுக்கு நீ அடிமையே!!"எனக்கூறி துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டார்.
தந்தை சொன்னதன் பொருள் புரிந்தாலும், அவனின் பகட்டு வாழ்க்கை மோகம்.. விவசாயமென்று மார்தட்டிக்கொள்வது இப்போதெல்லாம் பேஷனாகி விட்டதென்று நினைத்து சிரித்துக்கொண்டான்.
"அந்நேரம், பல லைக்குகளுக்காக தானும் விவசாயத்தைப் பற்றி உயர்வாக சமூக வலைதளங்களில் கருத்திடுகிறோம் என்பதை வசதியாக மறந்துபோனான்."
அவரிடம் சொல்லாது கூட பட்டணம் வந்தவன், தனக்கு பிடித்த வேலையில் அமர்ந்தான். கையிலும் தாராளமாக பணம் புழங்க தன் செலவுகள் போக மீதியை தந்தைக்கு அனுப்பி வைத்தான்.
தன் மனம் போனப்போக்கில் சந்தோஷ வானில் உல்லாசமாக பறந்து கொண்டிருந்தவனின் மகிழ்ச்சி ஒரு மின்னஞ்சலினால் மொத்தமாக பறிப்போனது.
"அடுத்து என்னாப்பா"
அன்று தந்தை கேட்ட கேள்வி... இன்று மிகப்பெரியதாகத் தோன்றியது.
அடுத்த இரண்டு மூன்று மாதங்கள் ஏறாத கம்பெனி இல்லை... ஆனால் எல்லா இடங்களிலும் ஒரே பதில்தான்,
'வேலையில்லை'
கையிறுப்பு அனைத்தும் காரைந்துபோக தன் ஊர் நோக்கி பயணமாகினான். ஆனாலும், மனம் நகர வாழ்க்கையிலிருந்து மீள முடியாது தவித்தது. ஆன்லைன் மூலமாக வேலைத்தேடிக்கொண்டு சீக்கிரம் இங்கிருந்து கிளம்பிட வேண்டுமென்றே நினைத்தான்.
இன்னும் ஊருக்கு செல்லவேயில்லை, ஆனால் அதற்குள் இங்கிருந்து செல்வதைப்பற்றி கணக்கிட்டான்.
அவன் ஊருக்கு வந்தே மூன்று வருடங்கள் ஆகியிருந்தது.
மூன்று வருடங்களில் பல மாற்றங்கள்.
எப்போதும் சாலையின் இருபக்கமும் பச்சை பாயினை விரித்ததைப்போல் காணப்படும் வயல் வெளிகளின் எண்ணிக்கை குறைந்து போயிருந்தது. நீரின் சலசலப்பு குறைந்து குட்டை போன்று காட்சியளித்தன ஆறுகள். பாதிக்கு மேல் காய்ந்த பூமியும், பட்டுப்போன மரங்களுமே அவ்வூருக்கு அடையாளமாக திகழ்ந்தது.
ஊருக்குள் சென்ற பிறகு தான் குடிக்கும் நீருக்கு கூட இங்கு பற்றாக்குறை என்பதை அறிந்தவன் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமே என உள்ளுக்குள் அலறினான்.
பாட்டிலிலும், பாக்கெட்டிலும் அடைத்திருக்கும் நீரினைக் குடிப்பவனுக்கு நிலத்தடி நீரின் சுவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் தனது சகோதரனிடம், "எப்படிடா இன்னும் இங்கிருக்கின்றாய்?" என்றான்.
அதற்கு அவனின் பதில் புன்னகை மட்டுமே,
வந்தவன் தாங்கள் எப்படி இருக்கின்றோம் என்று கூட விசாரிக்காது, தான் பிறந்து வளர்ந்த ஊரினைப்பற்றி ஏளனமாக கேள்வி கேட்டது கிராமத்தானாகிய தந்தையை மிகவும் பாதித்தது. இருந்தும் வெளியில் எதையும் காட்டிக்கொள்ள வில்லை.
சற்று ஓய்வெடுத்து விட்டு வருகிறேன் என்றவன் தன்னுடைய அறைக்குள் நுழைந்த அடுத்த நிமிடம் "அம்மா" என்ற கத்தலுடன் வெளியில் வர,
அடுப்படியிலிருந்து மெல்ல எட்டிப்பார்த்தார்.
"என்னம்மா பேன் ஓடல, ஒரு ஏசி போட வேண்டியது தானே".. மாடியிலிருந்து கத்திக் கொண்டிருந்தான்.
ஹரிஷின் அண்ணன், அவனை அழைத்துக்கொண்டு தோட்டத்து பக்கம் சென்றவன்... வேப்பமரத்தடியில் போட்டிருக்கும் கயிற்றுக் கட்டிலை எவ்வித பேச்சுமின்றி காண்பிக்க...
"எல்லாம் எந்நேரம்" என்ற புலம்பலோடு கயிற்று கட்டிலில் சென்று படுத்தவன்... அடுத்த நிமிடம் உறங்கியிருந்தான்.
அவன் உறங்கி எழுந்த போது நேரம் மூன்று..
"இவ்வளவு நேரம் உறங்கி விட்டோமா".. சற்று சத்தமாக தன்னைத்தானே ஹரிஷ் கேட்டுக்கொள்ள, பதில் வந்தது அவன் தந்தையிடமிருந்து.
"வேப்ப மரத்து காத்துக்கு இம்புட்டு நேரம் தூங்கலன்னா தான் ஆச்சரியப்படனும்... இயற்கை காத்து உடம்புக்கு நல்லது.. இந்த சுகம் அந்த செயற்கை பொட்டிக்குள்ள இருந்து வர காத்து கொடுத்திடுமா?"
"கேட்டால்.. நாகரீக வளர்ச்சி".. உதடு சுளித்தவர் சென்று விட்டார்.
தந்தையின் பேச்சினை கருத்தில் கொள்ளாதவன், தன்னுடைய போனினை தட்டிக்கொண்டு வீட்டிற்குள் கடுப்புடன் நுழைந்தான்.
"எதிரில் பட்ட தன் அண்ணனிடம்,இங்க வந்து நிம்மதியா போன் கூட நோண்ட முடியல... போன் பார்க்காமல் எப்படி பொழுது போகும்" எரிச்சலுடன் கேட்டான்.
தன் தம்பியை ஏற இறங்க பார்த்தவன், மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்றான்.
அங்கு கிராமத்து சிறுவர் சிறுமியர் அனைவரும் பட்டம் விடும் காட்சி பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது.
அருகிலிருந்த மரத்தில் ஊஞ்சலாடிய சிறுவர்கள், மணலில் வீடு கட்டி மகிழும் மழலையின் புன்னகை முகம்... மைதானத்தில் கபடி விளையாடும் இளம் காளையர்களின் ஆர்ப்பாட்டம்... அதற்கு பக்கத்திலேயே பாண்டி, நொண்டியென சலசக்கும் கன்னியர்களின் சிரிப்பொலி.. வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பல கதைகள் பேசியபடி பாக்கு இடிக்கும் பாட்டிகளின் மேவாய் அதிசயங்கள்.. காலையில் உழைக்க சென்ற ஆண்களும், கால்நடைகளும் வீடும் திரும்பும் காட்சிகளென பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அவ்வளவு விஷியங்கள் அங்கு நிரம்பி வழிந்தன.
"இன்னும் கிராமத்திலிருக்கும் நல்ல விஷயங்களை உங்க தம்பிக்கு எடுத்து சொல்லுங்க.... சுத்தி மாசுபட்ட வாகன புகைச்சலுக்கு நடுவுல இருப்பவருக்கு இந்த காட்சிகள் எல்லான் காண கிடைக்காத பொக்கிஷம்".
முதுகுக்கு பின்னால் ஒலித்த தந்தையின் பேச்சில் ஏதோ புரிந்தும் புரியாத ஒன்று அவனுள்.
"என்ன தான் இருந்தாலும் சிட்டி வாழ்க்கை மாதிரி வருமா??.. வரும் வழியிலெல்லாம் பார்த்தேன் இன்னும் சில வருடங்களுக்கு பிறகு விவசாயம்ன்னு சொல்லிக்கக்கூட முடியாது போலிருக்கே, அப்புறம் பொழப்புக்கு எல்லோரும் நகரத்தை தேடி தான் வரணும்."
ஹரிஷின் வார்த்தைகளுக்கு பதிலளிக்காது தந்தை மாடியிறங்க,
"இங்கிருந்து நீ மட்டும் என்னடா பண்ணப்போற.. நீயும் என்னுடன் சென்னை வந்துவிடு உன் வாழ்க்கையே மாறிவிடும், விவசாயத்தில் அப்படியென்ன பணம் சம்பாதித்து விடப்போகிறாய்?"
ஹரிஷ் தன்னுடைய சகோதரனிடம் பேசுவது தந்தைக்கும் நன்கு கேட்டது. அவருக்கு கேட்க வேண்டுமென்று தான் சத்தமாக பேசினானோ.
'அங்கிருக்கும் நன்மைகள் புரிந்தாலும், தந்தையிடம் மல்லுக்கு நின்றான் அந்நாகரிக மனிதன்.'
சகோதரன் நகர்ந்ததும் ஹரிஷின் மனம் பலவற்றையும் சிந்தித்தது. 'இன்னும் நாகரிகத்தின் பிடியில் சிக்கிடாத முந்தைய தலைமுறைகளின் வாழ்க்கை முறையும், இப்போதைய தலைமுறைகளின் நாகரிக வாழ்க்கையும்.'
தாயின் குரலில் கீழிறங்கி வந்தவன்,
உணவுக்கூடத்தில் சகோதரன், தந்தையுடன் அமர்ந்தான்.
வராமல் வந்த மகனிற்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து சமைத்திருந்தார் ஹரிஷின் தாய்.
"வேலை போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன்."
தந்தையின் கேள்வியில் எள்ளல் வழிந்ததோ!!.. ஹரிஷிற்கு அப்படித்தான் தோன்றியது.
"வேறு வேலை உடனடியாக கிடைத்துவிடும்." அடக்கப்பட்ட சினம் அவனிடத்தில்,
"விவசாயம் பார்த்திருந்தால், அடுத்தவன் எப்போ வேலைவிட்டு தூக்குவான்னு பயப்படாமல் ராஜா கணக்கா இருந்திருக்கலாம். இப்படி வேலையிழந்து, கையில் பணமில்லாமல் அப்பாவை நம்பி ஓடி வந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்காது."
"அப்படியென்ன வருமானம் இந்த விவசாயத்தில் வருகிறது. அடுத்த சந்ததிக்கு காஞ்சிப்போன களி மண்ணைத் தவிர என்ன சேர்த்து வச்சிருக்கீங்க?"
மகனின் வார்த்தைகளில் அனல் தெறித்தது.
"நாகரிகத்திற்கு ஏற்றவாறு மாறுவது தான் மனிதனின் வளமான வாழ்க்கைக்கு சரியாக இருக்கும்."
"சும்மா விவசாயம், சந்ததின்னு பேசி பேசி கொல்லாதீங்க" என்று கோபம் பொங்க பேசியவன் பாதி உணவில் எழுந்து கொள்ள,
ஹரிஷின் வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருந்த தந்தை அவனின் கைபிடித்து அமர வைத்து, நிதானமாக அவனின் முகம் பார்த்து...
"உட்கார்ந்து சாப்பிடுப்பா... எல்லாமே நம்ம வயலில் விளைந்த அரிசி, நம்ம தோட்டத்து காய்கறிகள் தான்" என்றவர்,
தனது இலையிலிருக்கும் உணவினை ரசித்து உண்ண ஆரம்பித்தார்.
அவர் சொல்லிய அந்த ஒரு வரி அனைத்தையும் ஹரிஷிற்கு உணர்த்தியது.
முற்றும்....
நாகரிக வளர்ச்சி என்பது... முந்தைய சந்ததிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கி பயன்பெறுவதே தவிரே... நம் வாழ்வின் துடிப்பையே அழித்துவிட்டு இது தான் நாகரிகமென்று மார்தட்டிக்கொள்வது இல்லை.
ஆரோக்கியமான சந்ததி உருவாக, நம் ஆணிவேரான விவாசயத்தை காக்க களத்தில் இறங்கி பணி செய்ய வேண்டுமே தவிர, சமூக வலைதளங்களில் கருத்துக்களை மட்டும் பகிர்வதல்ல.
'நான் விவசாயி மகனென்று ஸ்டேட்டஸ் வைக்கும் அறிவிலிகளுக்கு, நான் விவசாயி என்று சொல்வதில் தான் எவ்வளவு கவுரவ குறைச்சல்.'
"தொழில்நுட்பம் அவசியம்... விவசாயம் அத்தியாவசியம்."
"நாகரிக வளர்ச்சி ஒரு சந்ததியின் முன்னேற்றம்.... விவசாயத்தின் வளர்ச்சி பல சந்ததிகளின் வாழ்வாதாரம்."
(Pic.. எங்க வயல்😊)
 
Praveen

Member
நல்ல கருத்துள்ள சிறுகதை
இன்றை ய தலைமுறை புரிந்து
காெண்டால் சரி
 
இந்த தளம் இன்னிக்கு தான் லாக் இன் பன்னேன். முதல் கதை உங்களோடதுதான் படிச்சேன். நல்ல அருமையான கதை. கிராமத்த முக்கியத்துவம் நல்ல சொல்லி இருக்கீங்க வாழ்த்துக்கள் 💐
 
Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top