JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா 15

Subageetha

Well-known member
அதிதி அவளது முகத்தை தனது வயிற்றில் இறுக்கி கட்டிக் கொண்ட நிரஞ்சனின் தொடுகையைக் கூட உணராமல் அதிதி. அவளை நினைத்து நிரஞ்சனுக்கு கோபம் தான் வந்தது. படித்த பெண் தானே இவள்... பள்ளியிலிருந்து போலவே இன்றும் பூ
னைக்குட்டி போல் வாழவேண்டும் என்றால் அது எப்படி சாத்தியமாகும்?

அந்த பூனை குட்டி கூட தன்னை தாக்குபவரை தன் நகங்கள் கொண்டு பிராண்டிவிடும். வினயன் இவ்வளவு தூரம் கேவலமாக நடத்திய பிறகும் இந்த பெண் ஏன் இப்படி இருக்கிறாள்?நிரஞ்சனின் மனதில் கொலைக்களமாக கொதித்தது. வினயன் அவனை ஏதாவது செய்தாக வேண்டும்... அதற்கு பின்பு இருந்து கொண்டு செய்தால் சரியாக வராது என்று மனதிற்குள் முடிச்சிட்டவன் வாயை திறந்து ஏதும் சொல்லினான் இல்லை.

சற்று நேரத்தில் அழுகை மட்டுப்பட தன்னை கொஞ்சமாக சுதாரித்தவள் நிமிர்ந்து பார்த்தால் நிரஞ்சனின் வயிற்றை இறுகக் கட்டிக் கொண்டு அவனிடம் தஞ்சம் புகுந்து இருப்பது புரிந்தது. தான் தன் அம்மாவில் தானே எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தோம்? இவன் எப்போது வந்தான் என்று அப்போதுதான் அவள் மனதில் உரைத்தது.
ஆனால் அவற்றையெல்லாம் கண்டு கொண்ட நிலையில் நிரஞ்சன் இல்லை.கண் துடைப்பதற்காக தனது கைகுட்டையை அவளிடம் கொடுத்து அவன் என்ன நினைத்தானோ தானே அந்தக் கைக்குட்டையை வைத்து அவள் கண்களில் ஒற்றி எடுத்தான்.இந்த மௌன நாடகத்தை பார்த்து கொண்டேயிருந்தாள் வித்யா.அவளுக்கு மனம் முழுவதும் நிரஞ்சனின் மனம் நிறைந்த காதல். தன் மகளுக்கு கிடைத்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற எண்ணம். இதற்குமேல் இவற்றைப் பற்றியெல்லாம் யோசித்து ஒரு பிரயோஜனமும் இல்லை என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு, லேசான தொண்டை கமறல் மூலம் தன் இருப்பை மீண்டும் அங்கே பதிவு செய்தாள் வித்யா. நிரஞ்சனுக்கு மனதிற்குள் வித்யா என்ன நினைப்பாளோ என்ற பயம் ஓங்கி நின்றது. ஆனால் இதற்காகவெல்லாம் அதிதியை விட்டுவிடவும் தயாராக இல்லை.
அதிதியிடம் சரி அதி, ஆபீஸ் வேலை அதிகம். நா ரூமுக்கு போறேன் என்றுவிட்டு, தான் எதையும் கேட்கவில்லை என்ற பாவனையில் அங்கிருந்து நகர்ந்து விட்டான். உண்மையில் அவன் முகத்தை பார்த்து பேசும் தைரியம் அதிதி பெண்ணிற்கு இல்லை. அவன் தான் தன் கணவனைப் பற்றி சொன்னதை எல்லாம் கேட்டு இருப்பானோ என்ற அசவுகரியம் வேறு. முன்பானால் எல்லாவற்றையும் நிரஞ்சனிடம் தானே நேராக சொல்லியிருப்பாள். ஆனால் இப்போது நிலைமையே வேறு... அவன் தெளிவாக தான் விரும்புவதை மறைமுக செய்கைகளால் சொல்லிவிட்டான். இதற்கு மேலும் அவனிடம் போய் தனது பழைய நட்பை வைத்து தனக்கு நடந்தவற்றை பகிர்ந்து கொள்ள அவள் தயாராக இல்லை. அத்துடன் ஆண் -பெண் என்ற பேதம் அவளுக்கு இப்போது நிறைய புரிகிறது.
நிரஞ்சன் விலகி நின்று அதற்கான காரணம் கூட தெரிகிறது.இதற்கெல்லாம் மேல் வினயன் அவன் சொன்ன வார்த்தைகள்... நீ வேஸ்ட் பீஸ்னு தெரிஞ்சு தான் நிரஞ்சன் உன்கிட்ட காதல் சொல்ல வில்லையா இந்த கேள்வி இன்றும் கூட அதிதியின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது, அதில் இருந்து வெளியே வர முடியவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு நிரஞ்சன் முகத்தை தோழமையுடன் பார்ப்பதற்கு கூட அவளுக்கு கூச்சமாக இருக்கிறது.
ஒருபுறம் இவ்வாறான யோசனைகள் ஓடிக் கொண்டிருக்க மறுபுறம் அவள் மனம் முழுவதும் நிரஞ்சன் இந்த நேரத்தில் தன் அருகில் இருந்தால் பரவாயில்லை என்றுதான் அவள் நினைக்கிறாள்.
மகளின் பார்வை சொல்லும் வார்த்தைகள் வித்யாவுக்கு புரியாமல் இல்லை.ஆனால் நிரஞ்சன் இங்கு அதி சொன்ன வார்த்தைகளை கேட்டுகொண்டு நின்றிருந்தால் அதை நினைத்து பிற்காலத்தில் மகள் என்பதற்காகவே வாயை மூடிக் கொண்டிருந்தாள்.அதேபோல் நிரஞ்சன் தன் மகளின் பார்க்கும் பார்வையில் இருக்கும் காதல் இருவருக்குமே நல்லது இல்லை என்பதும் வித்யாவிற்கு ஓரளவுக்கு புரிந்தது. தன் மகளுக்கு இந்த வாழ்க்கையில் இருந்து வெளியே வந்த பிறகு வேறொரு வாழ்க்கையை அமைத்துத் தருவதற்கு பெற்றோர் நிச்சயம் முயற்சி செய்யப் போகிறோம் ஆனாலும் கூட நிரஞ்சன்... ம்ஹும்... வேண்டாம். ஏற்கனவே அவன் கேட்டபோது மறுத்து விட்டோம்.
இதற்கு மேலும் அவன் நண்பனாகவே இருந்துவிட்டுப் போகட்டும். தன் மகளுக்கு மீண்டும் ஒரு வாழ்க்கை தேடும் சமயம் அந்த மாப்பிள்ளையும் ஏற்கனவே மண முறிவு ஏற்பட்ட வராக இருந்தால் தான் தன் மகளை புரிந்து கொள்ள முடியும் என்று கணக்கு போட்டாள். நிரஞ்சனின் காதல் தெரிகிறது.அவன் தன் மகளுக்காக அவளை விரும்புகிறான் என்பது புரிகிறது.
அப்போது கேட்டபோது வேறு வேறு காரணங்கள் சொல்லி மறுத்து விட்டு இப்பொழுது முதல் திருமணம் தோல்வி அடைந்த பிறகு,என் மகளை திருமணம் செய்து கொள் என்று அவனிடம் கேட்பதற்கு வித்யாவின் மனது ஒப்புக்கொள்ளவில்லை அதேபோல் நிரஞ்சன் அவனின் அம்மாவும் இந்த திருமணத்திற்கு எந்த காலத்திலும் சம்மதிக்க மாட்டார்.
அதுபோல் நீருவின் அம்மாவும் ஆயிரம் கனவுகளை சுமந்து கொண்டிருக்கிறார் அவள் மனதில் தன் மகனின் திருமணத்தை எப்படி எல்லாம் செய்ய வேண்டும் என்று எண்ணங்கள் இருக்கலாம். ஏற்கனவே கணவரால் சிறுமைப் படுத்தப் பட்ட பெண்மணி அவள். வலி நிறைந்த வாழ்க்கை அவளது.தன் மகன் தலையெடுக்க வேண்டும். அவனுக்கு சீரும் சிறப்புமாக வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம் அவர் வைத்திருக்கும் வைராக்கியம். ஒரு தாயாக வித்யாவிற்கு நிரஞ்சன் அம்மாவின் நிலைமையும் புரிகிறது. இந்த ஜன்மத்தில் தன் மகளின் வாழ்க்கையில் விதித்திருப்பது நடந்தே தீரும்.என்று மனதை தேற்றிக் கொண்டு கீழே தனது கணவர் எழுந்து விட்டாரா என்று பார்க்கச் சென்றாள்.
விஷ்வம் அவரிடம் தங்கள் மகளுக்கு நடந்த கொடுமைகள் பற்றி சொல்வதற்குள் வித்யாவிற்கு மூச்சு முட்டியது. ஒரு பெண்ணாக சில வார்த்தைகளை சொல்வதற்கு அவருக்கு நா எழவில்லை... தனக்குள்ளேயே அவள் விழுங்கும் விஷயங்களை தோண்டாமல் மௌனம் காத்தார் அவர். ஒரு தகப்பனாக அவருக்கு நெஞ்சில் பேரிடி. ஆனால் தன் மனைவிக்கும் இதே நிலைமைதான் மனதில் இருக்கும் என்பதற்காக அமைதியாக இருந்தார். நல்ல வாழ்க்கை ஏற்படுத்தி தருவதாக தன் மகளை தள்ளி விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி அவருக்கு.
நிரஞ்சன் இதில் எதிலுமே கலந்து கொள்ளாமல் அலுவலக வேலையில் மூழ்கிவிட்டான்.அதிதி தன் அறையிலிருந்து வெளியே வரவே இல்லை. ஆனால், அதிதி மீது கவனம் வைத்து இருந்தான் நிரஞ்சன். மனதின் ஓரத்தில் அடுத்து இந்த பெண்ணை எப்படி கையாள்வது என்று எண்ணங்கள் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது அவனுக்குள். தன்னுள் ஒரு திட்டத்தைத் தீட்டியவனாக அடுத்த நாளே விசுவம் வீட்டிலிருந்து கிளம்பி விட்டான். எந்தக் காரணத்தைக் கொண்டும் அதிதி பெண்ணின் முன் செல்லவே இல்லை.
அடுத்த நாள் மதியத்திற்கு மேல் தன் அறையிலிருந்து வெளியே வந்தவளுக்கோ தன்னையும் அறியாமல் கண்கள் நிரஞ்சனைத்தான் தேடின. வித்யாவிடம் நிரஞ்சன் பற்றி விசாரிக்க அவளுக்கு கிடைத்ததோ அவன் கிளம்பி விட்டான் என்ற தகவல்தான். மிகவும் ஏமாற்றத்துடன் சோர்ந்து போனாள் பெண். அதிதி பெண் நிரஞ்சனிடம் எதிர்பார்ப்பது என்ன என்பது அவளுக்கே புரியாத புதிர். ஏமாற்றத்தை தனக்குள்ளேயே புரிந்து கொண்டாள். வித்யாவிற்கு தனது மகளின் தேடுதல் புரிகிறது. ஆனால் எதிர்காலம் இல்லாத இந்த தேடுதலுக்கு துணை செய்வதற்கு வித்யா தயாராக இல்லை.
வித்யா வீட்டிலிருந்து ஒரு ஹோட்டலில் தனக்கான அறையை எடுத்துக்கொண்டு ஒரு வாரம் தங்கி கொண்டான் நிரஞ்சன். Lஎப்படியும் வீட்டுக்கு சென்று உரிமையுடன் அப்பா -அம்மா என்று அழைத்துக் கொண்டு அண்ணன் குடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பதற்கு அவனுக்கு வாய்க்கவில்லை.
அதேபோல் இப்போது ஒரு வாரமாக இங்குதான்சென்னையில் தங்கி இருக்கிறேன் என்று அம்மாவுக்கு சொன்னால் அம்மாவின் மனது எப்படி யோசிக்கும் என்றும் அவனுக்கு தெரியவில்லை.
அதனால்தான் சென்னையில் இருப்பதை பற்றி யாருக்கும் சொல்லாமல் அமைதியாக இருப்பதே சாலச் சிறந்தது என்று முடிவு செய்து கொண்டான்.
பள்ளியில் படிக்கும் போது இருந்த அதே கோவம், வேகம் அவனிடம் உண்டு. ஆனால் படிப்பு,அந்தஸ்து, போன்ற விஷயங்களால் அவற்றை மூடி வைக்க புரிந்து கொண்டான். அதேபோல் கோபத்தை காண்பிக்கும் வழிமுறையையும் மாற்றிக் கொண்டான்.
வினயனை வித்யா -விஸ்வம் இருவராலும் ஒன்றும் செய்ய முடியாமல் போகலாம். ஆனால் எனது கைகளை அவனால் கட்டிப் போட முடியாது என்று சிரித்துக்கொண்டவன் ஏதேச்சையாக வினயனை இரண்டு நாட்களின் பின் சென்னையின் மிகப்பெரிய மாலில் பார்த்தான். வினயன் முதலில் நிரஞ்சனை பார்க்கவில்லை.கஃபேயில் அமர்ந்து தன் போக்கில் ஞாயிறு அன்று யு எஸ் திரும்ப டிக்கெட் புக் செய்ய எஜன்டிடம் பேசி கொண்டிருந்தான். அதாவது இன்னும் மூன்றே நாட்கள். அவன் முயற்சி செய்து பார்த்துவிட்டான். நிஷ்பலன் தான். அதனால் ஏஜென்ட் மூலம் அடுத்த முயற்சி. அங்கு நடாலி இவனை எப்போது வருவாய் என்று உருகுகிறாள். அவள் உருகலில் இவன் கரைகிறான்.. தெய்வீக காதல். இவன் பேசுவதை கஃபே காபி டேயின் இன்னொரு புறம் அமர்ந்து கேட்டு கொண்டிருந்தது சாட்சாத் நிரஞ்சன்தான். அவன் மனதில் சிறு திடுக்கிடல். வினயன் இங்கிருந்து சீக்கிரம் கிளம்புவது அவ்வளவு சரி இல்லையே! என்ன செய்யலாம் என்று அவன் மனம் வேகமாக கணங்கிட்டது.வினயன் கிளம்பும் வரை காத்திருந்தவன் அவன் பின்னோடே சென்றான். வினய் தனது யூனிகார்னில் வந்திருக்க நிரஞ்சன் காரில். வழியில் யாருடனோ பேசியவன் வினயன் பின்னோடே சென்றான். மாலில் இருந்து வினயன் கிளம்பும் போதே மணி எட்டுக்கு மேல். வழியில் டிராபிக் தாண்டி நங்கநல்லூர் செல்ல அவனுக்கு பத்து மணிக்கு மேல் ஆகியது. நிரஞ்சன் காரால் விநயனை தொடர முடியவில்லை. ஆனால், வினயன் ஏர்போர்ட் எதிரில் பாலம் தாண்டி திரும்புகையில் எதிரில் வந்த வாகனத்தில் மோதி கீழே விழுந்தவனுக்கு காலில் எலும்பு முறிவு, வலது கையிலும் தான். மோதிய வாகனம் நிற்காமல் பறக்க, அந்த நேரம் அங்கு ஆள் நடமாட்டம் இல்லை.அதற்குள் விநயனை தேடி நிரஞ்சன் வந்துவிட்டான். வலி தாங்காமல் வினயன் மயங்கிவிட விநயனை ஆம்புலன்ஸ் அழைத்து அருகிருந்த பிரபல மருத்துவமனையில் சேர்த்தவன் அவனது பெற்றோருக்கு அழைத்து தகவல் சொல்லி விட்டு காத்திருந்தான்.வித்யாவுக்கும் அழைத்து சொன்னவன் அதிக்கு சொல்ல வேண்டாம் என்றுவிட்டான்.
என்ன இருந்தாலும் நம்ம நீரு பக்கா ஜெண்டில்மேன் இல்லையா மக்களே?
ஏனோ வித்யாவுக்குதான் நிரஞ்சன் இன்னும் சென்னையிலா இருக்கிறான் என்று தோன்றுகிறது.
 
அருமை 👌👌👌, நிரஞ்சன் காதல் அதிமீது இன்னும் இருபது வித்தியாவிற்கு தெரிந்தாலும் நிரஞ்சன் தாய் உள்ளம் தன் மகன் வாழ்வு எவ்வாறு இருக்கவேண்டும் என்று அவர் ஆசை பாடுவார் என்று தெரிந்து வித்தியா புரிந்து கொள்வது அருமை 👌👌👌, தன் மகள் வாழ்வு என்ன விதிக்க பட்டுள்ளதோ அது நடந்தே தீரும் என்று நினைக்கிறார், இங்கு நிரஞ்சன் வினய் அதிதிக்கு அவன் செய்த கொடுமை அதற்கு அவன் பலனை அனுபவிக்க செய்து விட்டானோ வினயனுக்கு வினயமை அவன் செய்த வினையை 🤭🤭🤭🌹🌹🌹
 

Subageetha

Well-known member
அருமை 👌👌👌, நிரஞ்சன் காதல் அதிமீது இன்னும் இருபது வித்தியாவிற்கு தெரிந்தாலும் நிரஞ்சன் தாய் உள்ளம் தன் மகன் வாழ்வு எவ்வாறு இருக்கவேண்டும் என்று அவர் ஆசை பாடுவார் என்று தெரிந்து வித்தியா புரிந்து கொள்வது அருமை 👌👌👌, தன் மகள் வாழ்வு என்ன விதிக்க பட்டுள்ளதோ அது நடந்தே தீரும் என்று நினைக்கிறார், இங்கு நிரஞ்சன் வினய் அதிதிக்கு அவன் செய்த கொடுமை அதற்கு அவன் பலனை அனுபவிக்க செய்து விட்டானோ வினயனுக்கு வினயமை அவன் செய்த வினையை 🤭🤭🤭🌹🌹🌹
நன்றி
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top