JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

மஞ்சத்தின் மேல் மன்னிப்பாயா 6

Subageetha

Well-known member
பெண் அவளது தேடல்கள் என்ன என்பது இதுவரை அவளால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தன் கணவனை விட நிரஞ்சனின் துணையைதான் அவள் மனம் தேடியது.இந்த பிரிவுதான் அவளை மிகவும் சோர்வடைய செய்தது. அவளைப் பொறுத்தவரை நிரஞ்சனின் பிரிவு இனி நிரந்தரம். அவனது கம்பீரம் நிறைந்த கண்கள் அதில் ஏக்கம் நிறைந்த பார்வை. ஏக்கம் அவளுக்காக மட்டுமே... திருமண சமயத்தில் அவன் ஏதேனும் தம்மிடம் சொல்ல நினைத்தானா... என்ற குழப்பம் அவளை விட்டு நீங்கவே இல்லை.

அதிதி, அவள் தன் கணவன் வினயனை விட அதிகம் நிரஞ்சன் பற்றியே சிந்திக்கிறாள். சரியா தவறா என்றால் சிறு வயது முதல் தன் குடும்ப நபரில் ஒருவன் போல அவனை நினைந்து கொண்டிருக்கிறாள். அவளைப் பொறுத்தவரை வித்யா, விஸ்வம், பாட்டி, அத்துடன் நிரஞ்சன்.

இந்த உறவு தவறான நோக்கம் உடையது இல்லை தான். சரியாக சொல்ல வேண்டும் எனில் பதினோரு வயதில் அவனுடன் ஆரம்பித்த தோழமை இதோ, இருபத்து மூன்று வயது வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், பெற்றோர் எவ்வளவு நெருக்கமோ, நீரு,அவன் தன் வயதின் ஒத்த தோழன். அந்த புனிதத்தை மாற்ற அவள் என்றும் நினைக்க போவதில்லை. அவள் மனதளவில் அவன் வெறும் தோழன் மட்டும்தான். ஆனால் இதை வினையன் புரிந்து கொள்வான் என்பது திட்டவட்டமாக சொல்ல முடியாதே!

ஆனால்,பெற்றோரின் அரவணைப்பு... சூழ்நிலையின் கதகதப்பு இரண்டையும் விடுத்து, இதோ இந்த அந்நிய மண்ணில் இவள் தனியாக இருப்பதன் காரணம், வினய் மட்டுமே, இதை அவன் ஏன் இன்னும் புரிந்து கொள்ளவில்லை?

அவன் வரும் நேரங்களில் நிச்சயம் கணவன் எனும் உரிமையை நிலை நாட்டுகிறான். எல்லா விதத்திலும். ஆனால், மனைவிக்கு பள்ளியறையில் எவ்வளவு கடமையும், கணவன் மீதான உரிமையும் உண்டோ, அவனது எல்லா விஷயங்களிலும் அவளுக்கு உரிமை உண்டே? இருவரும் உடலால் தனித்தனி எனினும் உயிர் ஒன்றியிருத்தல் தாம்பத்தியதின் அடி நாதம் அல்லோ? வினயன் பற்றி என்ன சொல்வது?அவனும் தன் மனைவியை பற்றி புரிந்து கொள்ள தனது முதல் அடி கூட எடுத்து வைக்கவில்லை. தன் மனைவியையும் தன் மனதருகில் நெருங்க விடவில்லை. ஒருவேளை இதெல்லாம் அவசியம் இல்லை என்ற எண்ணம் அவனுக்குள் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.

ஒரு வேளை பள்ளியறையில் கூட அவன் அவளுக்கு உரிமையை கொடுக்கவில்லையோ? நினைக்க நினைக்க அவளுக்கு தலை சுற்றல் அதிகமாக உணர்ந்தாள் அதிதி.

அவன் தேவை தீர்ந்த பிறகும், தன்னை அர்ப்பணிக்கும் சஹிக்கும், தேவை, தாகம், மோகம், காமம் உண்டென அவன் யோசித்ததில்லையோ? இன்று வரை சுகித்து, சுவைத்து முடித்த பிறகு ஏற்படவேண்டிய திருப்தியை விட உச்சு கொட்டல்களே அதிகம்!

இவ்வளவு மாதங்களில் அவன் இவளுக்கு மனைவிக்கு உரிய எந்த. அங்கீகாரமும் கொடுக்கவில்லை.

மீண்டும் நிரஞ்சனை மனம் வெகுவாக தேடியது. ஆதரவாக கணவன் இருந்திருந்தால் நிச்சயம் அவள் மனம் கணவனுடன் ஒன்றி இருந்திருக்கும். அந்தரங்க விஷயங்களை நிரஞ்சனுடன் நிச்சயம் பகிர்ந்து கொள்ள முடியாது. ஆனால் தோண்டித் துருவாமலே அவன் அவளது தோள் தட்டி ஆறுதல் கொடுக்கக்கூடிய தோழன்.

நடப்பவை என்ன என்பது அவளுக்கே புரியாத பரிதாப நிலை. திருமண ஏற்பாடுகள் நடக்கும் வேளையில், ஆடிட்டிங் வேலை அதிகம் சேர, நிரஞ்சன் கை சேர்த்தும், அதிதியின் அப்பாவால் அழுத்தம் தாள முடியவில்லை. இதயத்தின் ஓரத்தில் சிறு அழுத்தம். மகளை அயல் தேசம் அனுப்பும் ஆயாசம். திருமணத்திற்கு ஒரு மாதம் முன்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சற்று கஷ்டப்பட்டுதான் மீண்டு வந்தார். நடந்த களேபரத்தில் மாப்பிள்ளையை முழுமனதுடன் தண்ணி ஏற்றுக்கொண்டு வருமா என்பது பற்றி பெண்ணே உனக்கு புரியவில்லை. ஒரு விதத்தில் மனதளவில் இது அவளுக்கு கட்டாயத் திருமணம் தான். திருமணம் ஏற்பாடு ஆகிய பிறகுகூட வினை என் அத்தையுடன் பேசுவதற்கு பெரிதாக எந்த முயற்சியும் செய்யவில்லை. இவளிடம் எந்த ஈடுபாடும் அவனுக்கு இல்லையோ என்று அப்போது அவளுக்கு தோன்றியது. தானாக அவனுக்கு அலைபேசியில் அழைப்பதற்கும் அவளுக்கு தயக்கம். ஓரிருமுறை விநாயனே அழைத்தான். ஆனால் அவன் குரலில் ஏதும் இவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் பேச்சுக்களையும் முன்னெடுத்து யோசிக்கும் அளவுக்கு அந்த வார்த்தைகளில் எந்த அர்த்தமும் இருப்பதாக என்னவளுக்கு தோன்றவும் இல்லை. அதேசமயம் ஸ்வீட் ஃபார் நத்திங் ரகமும் இல்லை. அவனை வெறும் புகைப்படத்தில் மட்டும்தான் பார்த்திருக்கிறாள். வீடியோ காலிங் செய்ய விநயனுக்கு இஷ்டமில்லை. அவன் அழைத்த இருமுறையும் இவளை பேச விடாமல் தானே தனது கருத்துக்களை இவள் மீது திணித்து விட்டு போனை வைத்து விடுவான்.

திருமணத்தை நிறுத்தி விடலாம் என இவள் அழ, பெண்ணின் தகப்பன் அவருக்கு பதட்டம் கூடியது. வேறு வழி இல்லாமல் சிரித்த படியே அதிதி மணவறை ஏற, அருகிருந்த வினய், அவனது அழகு, ஆளுமை, சிரிப்பு என வயதுக்குண்டான உணர்வுகள் அவளுக்குள்ளும் எழ, சந்தோஷமாகவே கழுத்தை நீட்டினாள் அதிதி. எல்லாவற்றையும் தாண்டி இந்த நொடி வரை கணவன் அவன் மீது பெண் அவளுக்கு மயக்கம் உண்டு. மறுக்க அவளால் முடியாது.

அதை சொல்வதில் அவளுக்கு தயக்கம் கிஞ்சித்தும் இல்லை தான். அதே மயக்கம் அவனுக்கு உண்டா?
விடை தெளிவில்லை. அப்படி மயக்கம் உண்டெனில், கூடலின் சமயங்களில் அவனின் வார்த்தைகள்?

இதுவரை யாரும் பதிந்திருந்த அவளது பால் மனதில் கணவன் தனது தடம் பதித்தது ஒன்றும் கடினமான விஷயமாக இல்லை.

ஆனால் மயக்கம் காதலாக இந்த நொடி வரை இருவருக்குமே பரிணாம வளர்ச்சி அடையவில்லை.

இவற்றை அம்மாவிடம் கூட வாய் விட்டு சொல்ல முடியாது. அப்பா நிலை சொல்லவே வேண்டா. தோழிகளிடம் பேசலாம் எனில் நெருக்கம் கொண்ட தோழிகள்...

...ம்ஹும் இல்லவே இல்லை.

நெருங்கியவன் நீரு, நீரு மட்டும்தான். இவ்விதமான அந்தரங்கத்தை அவனிடம், ஒரு ஆணிடம் எப்படி பகிர முடியும்?

இத்தனை வருஷங்களாக வெறும் தோழனாக மட்டுமே தெரிந்தவன், பால் வேறுபாடு இன்றி பழக முடித்தவன் , இப்பொழுது ஆண் என பாகுபடுத்தி தெரிகிறான்.

திருமணம் முடிந்து அந்நிய மண் வந்த பிறகு அவளுக்கு தாமதமாக புரிந்த உண்மை.

ஒரு வேளை, முன்பே புரிந்திருந்தால்... உப்ஸ் புரிந்திருந்தால் மட்டும் என்ன மாறி இருந்திருக்கும்? நிச்சயம் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

அடி வயிற்று வலி பிடித்து இழுக்க, தான் காலை முதலே இன்னும் உணவு சாப்பிடவில்லை என்பது மெல்ல உறைக்க உணவருந்த சென்றால், இன்னும் சமைக்கவில்லை எனும் உண்மை அவளை அழ வைத்தது.
அம்மா உடன் இருந்தால் பசியில் இப்படி தவிக்க விட மாட்டாள்.

விடி காலையில் வகுப்புகளுக்கு செல்லும்போது டிபன், நிரஞ்சனுக்கும் சேர்த்தே கொடுத்து அனுப்பி இருக்கிறாள் வித்யா. அம்மாவின் பரிவுக்கு மனது ஏங்கியது.
மெல்ல தன்னை தேற்றியவளாக மீண்டும் பின்புறம் இருக்கும் ஆப்பிள் மரத்தை தஞ்சம் அடைந்தாள். இங்கே வந்த பிறகு அம்மா செய்யும் வேலை, பசிக்கு உணவு கொடுப்பது செய்வது ஆப்பிள் மரமே !

மனிதர்கள் மாறினாலும், இயற்கை வள்ளல்தான் ! இரண்டு ஆப்பிள்களை பறித்துக் கொண்டு ஊஞ்சலில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தாள்.

பசி கொஞ்சம் அடங்க இன்று உப்புமா கிளறி ஒட்டிக்கொள்ளலாம் என்று கேரட், வெங்காயம், பீன்ஸ் எல்லாம் சேர்த்து நறுக்கி கொண்டாள்.

உடலில் குளிர் எலும்பு வரை தாக்கியது. அறையின் கதகதப்பு கூட்ட ஹீட்டர் போட்டுக்கொண்டாள். மனதின் வெறுமை தீர வழி இருந்தால் பரவாயில்லை.

அந்த வாரம் இறுதி வழக்கம் மாறாமல்... வினய் வந்தான். திங்கள் காலை விமானம் பிடித்து மீண்டும் சென்று விட்டான்.

இருவருக்கும் இடையில் நடந்த உரையாடல்,
அது சில சமயங்களில் உதிர்க்க படும் வார்த்தைகள் இல்லை... சொல்ல படாத சொற்கள் என்றுமே எதிர் வினையை உண்டு பண்ணுகிறது !

வினய், நீங்க... எப்ப... வார்த்தைகள் முண்டியடிக்க, உங்க கரெண்ட் ப்ராஜெக்ட் எப்ப முடியும்? நிரந்தரமா எப்ப இங்க வருவீங்க? வார்த்தைகள் வேகமெடுத்து வந்து விழுந்தன...மனதோடு தான்.

இவள் ஏதோ கேட்க விழைகிறாள் எனும் எதிர்பார்ப்பில் இவள் முகத்தை பார்த்து கொண்டிருந்தான் வினய்.
அவனுக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான் !
சில நிமிடங்கள்... ம்ஹும் நொடிகள் அவள் முகம் ஆழ்ந்து பார்த்தவன் நீண்ட பெருமூச்சுடன் கிளம்பி சென்றான்.
அவன் எதிர்பார்ப்பை எதிர்கொள்ளும் மங்கை இவள் இல்லை. இந்த திருமண பந்தம் பற்றி மீண்டும் அவனுக்கு சந்தேகம். அவளால் எவ்வகையிலும் அவன் தேவைகளை புரிந்து கொள்ள முடியவில்லை.

மரக்கட்டை ஜென்மம்...ஒண்ணுக்கும் லாயக்கில்ல... பின்ன கல்யாணம் எதுக்கு செஞ்சு இங்க வந்து என் உசிரு வாங்குறா... திட்டிக்கொண்டே கலிபோர்னியா வந்து சேர்ந்தான்.
நிஜத்தில் உடல் தேவை இல்லை என்றால் அவன் சியாடெல் போகவே மாட்டான்.
திருமண உறவே இந்த தேவையை நிறைவேற்ற என்று வெகு தீவிரமாக நம்புகிறான்.

அவள் புகைப்படம் பார்த்து மயங்கியது, 5'11 அவள் உயரம் என்றதும் தன் உயரத்திற்கு ஈடு என பெருமிதம் கொண்டது,
உரையாடல் நேரம் அவளது ஒற்றை வார்த்தை பதில்களில் சந்தோஷம், எல்லாமே இப்பொழுது வேறு நிறத்தில், கானல் நீராய் அவன் கைகளில் ஏந்திக்கொண்டிருப்பது போல் பிரமை.

அவன் மறந்து போனது, புத்தம் புது மலரை அவன் கைகளில் மனைவி எனும் பெயரில் ஏந்தி கொண்டிருக்கிறான். அந்த மலர் இயற்கை குணம் மாறாமல் அவனிடம் பொக்கிஷம் போல்.

'யானை குழிக்குள் சிக்கி விட்டேனோ? அவன் மனம் அவனை கூறாக்கி வேடிக்கை பார்க்க அலுவலக வேலைகளுள் தன்னை முழுவதும் மூழ்கடித்து கொண்டான்.

கட்டிலில் அவன் எதிர் பார்க்கும் பலவற்றை அவளால் செய்ய முடியவில்லை. அவன் எதிர்பார்ப்புகள் வேறாக இருந்தது.

சில விஷயங்கள், அவள் கூச்சத்தை அதிகரிக்க செய்ய அவன் சொல்லி தரும் பொறுமை இன்றி கடிந்தான். சிலவை அவளுக்கு அருவருப்பு செய்ய அவளிடம் கோவம் கொண்டான். ஆக மொத்தம் கட்டில் அவனுக்கு அவன் நினைக்கும் கற்பனை காட்சிகளை நிஜம் ஆக்கவில்லை, அவளுக்கு கட்டில் மீது பயம் வந்துவிட்டது.

அவளுக்கு அவனிடம் மயக்கம் உண்டு. லயிப்பில் கிறங்கி இருப்பது நிஜம்... ஆனாலும்?

அவனுக்காக பலவற்றை அனுசரித்து அவன் சொன்ன படிக்கு நடந்து கொண்டாள். அவளை முழுவதும் வளைக்கும், ஆக்கிரமிக்கும் திறமை அவனிடம் இல்லை. அவன் எதிர் பார்புகள் ஒரு வழி பாதை !

நிறைய சி. டி க்கள் அவளிடம் உண்டு? தனியா இருக்கும் போது போட்டு பாரு... என்கிட்ட எப்படி நடக்கணும்னு புரியுதான்னு பாப்போம் என கத்திவிட்டு கிளம்பியிருந்தான்.

முதல் சி டி பார்க்கும் பொழுதே வயிறு பிரட்ட அவற்றை ஒதுக்கி வைத்தாள். இது போன்ற படம் பாக்க கூடாது என சொல்லி வளர்க்க பட வில்லை தான். ஆனால், ஒழுக்கம் -சுய கட்டுப்பாடு பற்றி வீட்டில் நிறைய சொல்லி கொடுக்க பட்டிருக்கிறதே?

இவ்வாறு படம் பார்ப்பது ஒழுக்க கேடு என நினைக்கும் மனம். குற்ற உணர்வில் குறுகுறுக்கும் நெஞ்சம்.
படபடவென வேகமாக அடித்து கொள்ளும் இதயம் !
இதில் எதை சமாளிக்க? சமாதானம் செய்ய?
இது போன்ற விஷயம் எனக்கு ம்ஹும்... சரி வராது என்று, அவர் கேட்டா சொல்லிக்கலாம்., என்று முடிவு செய்து கொண்டாள்.

நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்?
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top