JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

மஞ்சம் 21

Subageetha

Well-known member
எரிச்சலும் கோவமும் போட்டி போட வேறு வழி இல்லாமல் கிளம்பினாள் அதிதி. அவளுக்கு நிரஞ்சன் சொல்வதில் இருக்கும் நியாயம் புரிகிறது. அதே சமயம் இப்போது இருக்கும் மனோ நிலையில் தன்னால் முடியுமா... இந்த முயற்சி பிறகு... செய்து கொள்ளலாமே என்ற எண்ணம். மனம் என்னவோ சுற்றி சுற்றி கணவனின் செய்கைகளில் நின்றது. அவள் வாழ்க்கையில் இது இடிதான்.
அம்மா ஏதாவது சொல்லக்கூடுமோ என்று வித்யாவின் முகத்தை பார்த்தாள் அதி. வித்யாவோ அதியின் ஐடி கார்டை எடுத்து பெண்ணின் ஹாண்ட் பாகில் வைத்தாள். அம்மா நிரஞ்சனுக்கு துணை செய்கிறாள் என்று புரிந்தது." அப்பா -அம்மா இதோ இவன் நிரஞ்சன் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் என்னை இந்த பாழும் கிணற்றில் இருந்து மேலே தூக்க முயலும் பொழுது நான் ஏன் துன்பக் கடலில் மூழ்கணும்? எனக்கும் வாழ உரிமை உண்டுதானே?" என்று முகத்திற்கு லேசான ஒப்பனைகள் செய்துகொண்டாள்.'இதுல ஒண்ணுமே குறைச்சல் இல்ல...'என்று வினயனின் குரல் காதுகளில் ஒலித்தது. காதுகளை பொத்திக்கொண்டாள்.கண்கள் சுற்றி லேசான கருவளையம் வேறு வந்து விட்டிருந்தது. நான் எப்படி இவற்றில் இருந்து வெளி வரப் போகிறேன்? ஆயாசம் மிக, அவசரமாக தன் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தாள். மகளின் முகத்தை பார்த்த வித்யா சற்றே நிம்மதியாக உணர்ந்தாள். மனதினுள் நம்பிக்கை வெளிச்சம் பரவத் தொடங்கியது.

காரில் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருந்த நிரஞ்சனுக்கு அதியை பார்த்து லேசாக புன்னகை வந்தது. முன்னிருக்கையில் அமர்ந்தவளை ஆசையாக பார்த்துக்கொண்டான். அவ்வளவு அருகில் அவளுடன் அமர்ந்து ஒரு பயணம். நீண்ட இடைவெளிக்கு பிறகு.

இருவரும் அதியின் ஜெஸ்ட்டில் வகுப்புகளுக்கு செல்வதும் வெளியே சுற்றுவதும்... நிரஞ்சன் தன் அப்பா வீட்டை விட்டு வெளியேற்றபட்டு இவள் வீட்டில் அடைக்கலம் புகுந்த நாள் முதல் அதி இவனிடம் வண்டியை கொடுத்துவிட்டு பின்னால் அமர்ந்து வருவதை பழக்கம் ஆக்கிக்கொண்டாள். என்றுமே தன்னுடைய பொருட்கள் என்று அவள் யோசித்ததில்லை.

தான் கார் வாங்கி இரண்டு வருஷங்களுக்கு பிறகு இப்போதுதான் தன்னுடன் அவள். நிரஞ்சன் தன் அம்மா தவிர வேறு யாரையும் காரில் அனுமதித்தது இல்லை...

'அதி....ஏதாவது பேசேன்...

ம்ம்ம்... என்ன பேச நீரு? நமக்குள்ள பேச ஏதாவது இருக்கா... நா வேண்டாம்னு தானே என்னோட காண்டாக்ட் கட் பண்ணே... எனக்குதான் புரிஞ்சுக்க லேட்டாகிடுச்சு.

ப்ச்... வினய் சொன்ன மாதிரி நா எல்லா விஷயத்துலயும் தத்திதான் இல்ல... சொன்னவளின் கண்கள் நீர் படலத்தில் ஜொலிக்க,

'ஷி இஸ் மோர் எமோஷனல்... இப்ப பேசினா சரியா வராது' என்று மனதிற்குள் மந்திரித்து கொண்டவன் இனி வாயை திறப்பானா!

இருவரும் நேரே நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இன்ஸ்டிடியூட் சென்று விசாரித்தார்கள்.ஆன்லைன் மூலம் செய்ய முடிந்தவற்றை கூட அவளை நேரில் அழைத்து வந்து செய்தான். நல்ல வேளை.. இன்னும்
ரெஜிஸ்ட்ரேஷன் செய்தது முடியவில்லை.ஒரு வருடம் மீதம் உண்டு.அவளுக்கு லைப்ரரி சென்று தேவையான புத்தகங்கள் எடுத்துகொடுத்தான். அவனுக்கு வகுப்புகள் எடுத்த ஆசிரியர்களுடன் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, அங்கிருந்து இருவரும் ஏற்கனவே படித்த கோச்சிங் சென்டர் கூட்டி சென்று மீண்டும் அவளை காலை நேர வகுப்புகள் செல்ல ஏற்பாடு செய்தான். அதி அவனுடன் சென்றாளே தவிர எதுவும் சொல்லவில்லை. அதை எல்லாம் நிரஞ்சன் கண்டுகொள்ளவும் இல்லை.' நா சொல்றத கேளு 'என்பதை போல் இருந்தது அவன் நடவெடிக்கை.
அதிதி இவனது போக்கை பார்த்து பல்லை கடித்துக்கொண்டாள். வினய் தன்னை கண்டுகொள்ளாத பொழுது இப்படியெல்லாம் அவள் உணர்வுகள் தளும்பியதில்லை. ஆனால் இது ஏன் என்று அவள் உணரபோவதில்லை.
அங்கிருந்து ராயப்பட்டை சீதாராம் அண்ட் கோ சென்று அவளுக்கு அப்டேட் செய்துகொள்ள சில புத்தகங்கள் வாங்கினான்.
அதிதியின் மனதில் புத்தகங்களை கையில் தொட்டதும் தனக்கான உலகிற்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்தார் போல் உணர்வு. நிரஞ்சன்-அதி இருவருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருந்தது முதல் அட்டெம்ப்ட்டில் பாஸ் செய்ய வேண்டும் என்று. ஆனால் இருவரும் விதியின் வேறு வேறாக எழுதப்பட்டிருக்கிறது. இதோ இன்று நிரஞ்சன் பிராக்டீசிங் சார்ட்டட் அக்கவுன்டன்ட்... நானோ இப்போது மீண்டும்... என்னால் முடியுமா என்ற கேள்வி மீண்டும் பூதாகாரமாக அவள் மனதிற்குள் எழ நிரஞ்சனின் தோளை கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

இருவரும் வேலைகளை முடித்துவிட்டு மதிய உணவிற்கு மத்சயா செல்ல நிரஞ்சன் அதிதிக்காக பஃபெ முறையை தேர்ந்தெடுத்தான். உள்ளே உணவருந்த போகும் முன் அதியின் கண்கள் கலங்கியது. இவன் என்னை பற்றிய எதையும் மறக்கவில்லை ஆர்ட்டிகள்ஷிப் பண்ணும் போது இங்க அடிக்கடி வருவோமே நீரு என்றாள்.

'ம்ம்ம், அதனாலதான் இங்கே கூட்டிட்டு வந்தேன் '

'நீ எதையும் மறக்கல நிரஞ்சன் 'பட் என்னை மட்டும்...'. என்னை மட்டும் விட்டுட்ட ' மீண்டும் ஒரு குற்றச்சாட்டு அதிதியிடமிருந்து.
அதிதி இருக்கும் மனநிலையில் இது போன்ற பல விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று புரிந்து வைத்திருந்தான் நிரஞ்சன். அவள் குற்றச்சாட்டுகளுக்கு அவனிடம் பதில் உண்டு ஆனால் அதை சொல்வதற்கு மனமில்லை.

சற்றே தன்னை சமாதானம் செய்துகொண்டு, உணவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு இருவரும் உணவுகள் வைக்கப்பட்டிருக்கும் இடம் நோக்கி நகர்ந்தனர். அதிதிக்கு பிடித்தவற்றை நிரஞ்சனும், அவனுக்கு பிடித்தவற்றை அதியும் தட்டுகளில் பரிமாறிக் கொண்டார்கள். இதுவும் முன்பு அவர்களுக்குள் இருந்த புரிதல்தான்.

ஒருவாறாக இவர்கள் கிளம்பும் போது அதியின் மனது பாரம் நீங்கி புது ரத்தம் பாய்ந்தது போல் உணர்ந்தாள். அவள் முகம் கொஞ்சம் சந்தோஷத்தை காட்டியது.
இருவரும் வீடு வந்து சேர்ந்த பொழுது மாலை ஆயிட்டு. வித்யா கணவர் கொடுத்த கணக்குகள் பார்ப்பதில் தீவிரம் காட்ட இவர்கள் வந்ததும் தெரியாது. விஸ்வம் வாசல் கதவை திறந்து விட மகளின் மலர்ந்த முகம் அவருக்குள் மூச்சை சீராக்கியது. நிரஞ்சன் முகம் பார்க்க முடியாது தலை குனிந்து எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார். அதிக்கு மீண்டும் குழப்பம்... அப்பாவும் நிரஞ்சனும் பேசிக்கொள்வதில்லை என்பது தெரிகிறது... ஆனால் ஏன் எனும் கேள்விக்கு விடையறிய முற்பட்டாள்.

அதற்கு இன்னும் கொஞ்சம் இருவரையும் கவனிக்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டே தன் அறைக்குள் சென்றுவிட்டாள். நிரஞ்சன் தன் அலுவலக வேலைகளை இனிமேலாவது தொடங்க வேண்டும் என்று அவனும் தன் அறைக்குள் சென்று விட்டான்.
அன்றைய மகிழ்ச்சி அந்த வீட்டில் இரண்டு நாட்கள் வரை நீடித்தது. மூன்றாம் நாள் கோர்ட்டிற்கு செல்ல வேண்டிய நிலை. காலையிலிருந்தே அதியின் முகம் சரியில்லை..மத்சயாவில் அவள் விநயனை அவன் நண்பர்களுடன் பார்த்தாள். அவனும் அதியை பார்த்தான் தான். அதிக்கு 'நான் மீள்கிறேன் பார்'என்று காட்டும் வேகத்தில் அவனைக் கண்டு கொள்ளாதது போல் போய்விட்டாள். அன்று அவன் கோவத்தில் கண்களில் ஜொலித்ததை அவள் பார்த்திருக்கவில்லை.

இன்று பயம் நெஞ்சை கவ்வியது. அவனிடம் சென்று ஓரிரு வார்த்தைகள் பேசியிருக்கலாம் என்ற யோசனை... தான் எதற்காக அவனிடம் இவ்வளவு பயம் கொள்ள வேண்டும் என்றுதான் அவளுக்கு தெரியவில்லை. பிடிக்கவில்லை பிரிந்து விடலாம் என்று முடிவு செய்த பிறகு சாதாரண விஷயங்களுக்கு கூட மரியாதை இல்லை. அவன் அவ்வளவு திடமாக நிற்கும்போது தான் ஏன் இவ்வளவு பூஞ்ச்சையாக பயந்தாங்கொள்ளியாக அவனை சந்திப்பதற்கு மிரண்டு... ப்ச் முதலில் இதுபோன்ற தேவையில்லாத அச்சத்தை தூக்கி தூர போட வேண்டும் என்று யோசித்தாள். ( சில சமயங்களில் நம் பெண்ணுக்கு இதுபோன்ற வீரமங்கைக்கான யோசனைகள் வருவது கூட வருவது எனக்கு ஆச்சர்யம் தான்!)
கோர்ட் செல்ல தான் வர இயலாது என்று ஒதுங்கிக் கொண்டுவிட்டான் நிரஞ்சன். அவன் வராதது சரி என்று யோசித்தாள் வித்யா. அதி தன் அப்பா அம்மாவுடன் சைதை குடும்ப நல நீதிமன்ற வளாகத்தில் நுழைய அவர்களுக்கு முன்பே வினயனின் குடும்பம் அங்கே காத்துக்கொண்டிருந்தது. வினய் கையில் ஊன்றுகோல் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தான். அதியின் மனதிலோ என்னவாயிற்று உனக்கு எதற்காக இவ்வாறு என்று யோசித்து கொண்டே இருந்தாள்.ஆனால் அதையும் வாய்விட்டு கேட்கவில்லை.

உள்ளே நுழையும் முன் வினயனின் அப்பா விஸ்வத்திடம் மீண்டும் இருவரையும் திருமண பந்தத்திற்கு சேர்த்து வைப்பதற்கு பேச முயற்சித்தார்.
' ரெண்டு பேரும் சின்னவங்க... இன்னமும் நல்லது கெட்டது என்னன்னு புரியும் பக்குவம் வரல. நாம பெரியவங்க தான் புரிய வைக்க முயற்சி செய்யணும். அத விட்டுட்டு நானும் அவங்களோட சேர்ந்து எப்படி கோர்ட் வாசல் ஏறுவது நல்லா இல்ல சம்பந்தி... என்றவரை ஏளன பார்வை பார்த்தால் அதிதி. அந்த பார்வையை வினய் கண்டு கொண்டான். அவன் மனதில் முழுதும் வன்மம். அவன் உடல்மொழியும் தன் தந்தை பேசுவதில் எனக்கு முழு சம்மதம் என்று காண்பித்தது. இதைப் பார்த்ததும் அதிக்கு ஆச்சர்யம்! இது எப்படி சாத்தியம்? ஆச்சரியத்தின் மீது அவளுக்கு அதிர்ச்சியும் பயமும் கவ்விக்கொண்டது.

அதற்கு தகுந்தாற் போல் நீதிபதியிடம் வக்கீல் வினய் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கவும் அதிதி வெகுவாக மிரண்டு விட்டாள்.

நீதிபதியும் ஒரு பெண் ஆதலால் அவருடன் தனித்துப் பேச விரும்புவதாக அதிதி சொல்ல, வினய் மனதில் அவள் என்ன பேசக் கூடும் என்று யோசனை. எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக தான் இருக்கிறான்.

மதியம் ஒரு மணிக்கு மேல் நீதிபதி அதியை தன்னை வந்து பார்க்கச் சொல்ல, அதிதி ஒருவாறாக தன்னை சமன் செய்து கொண்டு நீதிபதியை பார்க்க சென்றாள். அவளுக்கு மட்டும்தான் அனுமதி. அவள் பெற்றோர் வெளியே காத்திருக்க அதி முதன்முறையாக தைரியத்தை கூட்டி கொண்டு, தனக்கு சியாட்டல் வீட்டில் நடந்தது முதற்கொண்டு, நங்கநல்லூரில் சிறைவாசம், அங்கு வினய் தனக்கு செய்தவைகள்,அதன் மூலம் அவளுக்குள் இருக்கும் மன அழுத்தம்,இந்த ஞாபகங்களில் இருந்து வெளிவருவதற்கு எடுத்துக்கொள்ளும் முயற்சி என்று ஒன்று விடாமல் சொல்லி முடித்தாள்.
'எனக்கு அவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு ஒரு சதவிகிதம் கூட விருப்பமில்லை. இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழ அனுமதியுங்கள்' என்றவளுக்கு தான் பட்ட வேதனைகளை மீண்டும் மீண்டும் யோசிக்கும் போது ஏற்படும் துன்பம் தாளாமல் கண்ணீர் வழிந்தது.கேட்டவருக்கும் மனதில் பாரம்.

'அப்போ ஹாரஸ்மென்ட் னு போட்டு டிவோர்ஸ் பைல் பண்ணலாமே என்றார் '
அதியிடம் கசந்த முறுவல். டிவொர்ஸ் பண்ண பைல் செஞ்சது முழுக்க முழுக்க அவர்தான். இப்போ ஏன் இப்படி பேசுறாரு எனக்கு புரியல... அண்ட் ம்யுடுவல் அக்ரீமெண்ட்ல டைவர்ஸ் வேணும்... எனக்கு இதுக்கு மேல அவருடைய எந்த பிரச்சனைக்கும் இன்டெரெஸ்ட் இல்ல மேம்' என்றுவிட்டாள்.

அவள் மனம் அவருக்கும் புரிகிறது. வினயை தனியாக அழைத்து அதியின் விருப்பமின்மை பற்றி பேசி விவாகரத்து கொடுப்பதற்கு ஒப்புக் கொள்ளுமாறும் இல்லாவிட்டால், நிலைமை வேறு மாதிரி மாறக்கூடும் என்றும் எச்சரித்து அனுப்பினார். அவன் மனம் முழுவதும் கையாலாகாத கோபம். ஆனால் இந்த நிலைமை ஒன்றும் செய்ய முடியாது. ஏதேனும் சிக்கல்களை இழுத்துக்கொண்டால் மீண்டும் யு. எஸ் சென்று வேலையில் சேர்வது கஷ்டமாகி விடும் என்று ஒருவாராக ஒப்புக்கொண்டான்.
இருவருக்கும் ஒரு வழியாக விவாகரத்து கிடைத்தது.

அதி கடக்க வேண்டிய பாதை நீண்டது. மீண்டும் அவள் வாழ்வில் வினய் வந்தால் அவள் சமாளிக்க முடியுமா? இன்று திடீர்னு வந்த தைரியம் மீண்டும் அவளுக்கு உதவி செய்யுமா?
 
அருமை 👌👌👌, அதி ஒருவழியாக வினய் நடத்தை பற்றி கூறி விவாகரத்து தைரியம்மாக வாங்கி விட்டாள் இனி அவள் வாழ்வில் முக்கிய பங்கு நிரஞ்சனுக்கு இருக்குமா 🤭🤭🤭🌺🌺🌺
 

Subageetha

Well-known member
அருமை 👌👌👌, அதி ஒருவழியாக வினய் நடத்தை பற்றி கூறி விவாகரத்து தைரியம்மாக வாங்கி விட்டாள் இனி அவள் வாழ்வில் முக்கிய பங்கு நிரஞ்சனுக்கு இருக்குமா 🤭🤭🤭🌺🌺🌺
அதை அவள்தான் யோசிக்கணும்
 

Members online

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top