JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

மலரே என்னிடம் மயங்கிவிடு...! 9

Roja

Member

அத்தியாயம் 9​

திருமணம் முடிந்து பத்து நாட்கள் கழிந்தும் கூட ஒட்டாது திரியும் பேரனும் பேத்தியும் தனியாக மோட்டார் சைக்கிளில் கோவிலுக்கு செல்ல வேண்டுமென்று ஆசைப்பட்ட நாச்சியம்மை, கதிரின் உதவியோடு யுவாவின் ஜீப் டயரை பஞ்சர் செய்தவர் பேரனின் கையில் புல்லட்டின் சாவியையும் கொடுத்து விட்டு குடும்பத்தினரோடு காரில் சென்று ஏறிக்கொள்ள...​

பத்து நாட்கள் கடந்தும் கூட தன் நிபந்தனைக்கு செவி சாய்க்காமல், தன்னிடம் சவால் விட்டிருக்கும் மலர்விழி மேல் (அப்படி அவனே எண்ணிக் கொண்டு) மிகுந்த கோபத்தில் இருந்தவனோ, அப்பத்தாவின் வார்த்தைக்காகவோ, அல்லது குதூகலமாக பைக்கில் ஏறி அமர்ந்து கொண்டு "வேகமா வண்டிய எடுங்க மாமா" என்று ஆர்ப்பரித்த மலரின் ஆசைக்காகவோ தன் கோபத்தை எல்லாம் விடுத்து அந்த புல்லட் வண்டியில் ஏறி அமர்ந்த யுவா தன் தோளில் கை வைத்த மலர்விழியைத் திரும்பி எரித்து விடுவது போல் முறைத்துப் பார்த்தவன்,​

"என்னடி அப்பத்தா கூட சேந்துகிட்டு ஆட்டம் காட்றியா, அப்பத்தா சொல்லுச்சுன்னுதே நா உன் கூட கோவிலுக்கே வர்றேன் கோவிலுக்கு போய் சேர்ர வரைக்கும் என் மேல கை பட்டுச்சு அப்றம் நான் பொல்லாதவனாகிடுவேன் ஆமா" என்று உறுமி விட்டு வண்டியை உயிர்பித்தவன் அந்த குண்டும் குழியுமான கோவில் சாலையில் மிதமான வேகத்தோடே வண்டியைச் செலுத்த....​

யுவாவின் உணர்ச்சிகள் எதுவும் புரிபடாத மலரோ அவனுடைய பிடிவாத குணத்தை கண்டு வழக்கம் போல் "இவக என்ன தொட்டாச் சுருங்கியா நா தொட்டவொன்னையும் சுருங்கியா போயிருவாக..." என்று தனக்குள்ளே பேசிக் கொண்டவளுக்கு யுவாவுடைய இறுக்கமான முகத்தையும் அவன் வண்டியைச் செலுத்தும் வேகத்தையும் பார்த்து 'ஏண்டா இந்த பைக்ல ஏறினோம்' என்றே இருந்தது.​

மலர்விழி தன் நிபந்தனைக்கு சம்மதிக்கும் வரை அவளிடம் விலகியே இருக்க வேண்டும் என முடிவு செய்திருந்த யுவராஜ் மிக மெதுவாகவே அந்த புல்லட் வண்டியை செலுத்திக் கொண்டு வர...​

கதிரின் கைகளில் குடும்பத்தினர் அனைவரையும் சுமந்து சென்ற அந்த பழைய காலத்து அம்பாசிடர் மகிழுந்து கூட சற்று வேகமாகவே சென்றது...​

அனாதைச் சிறுவனாக இருந்த கதிர் அவர்கள் வீட்டில் வந்து சேர்ந்த கொஞ்ச காலத்திலிருந்தே அவனை நேசிக்கத் தொடங்கியிருந்த ஜானவி சில வருடங்களாக அவனிடம் அதை வெளிப்படுத்தவும் தொடங்கியிருக்க, ஆனால் அவளவனோ உறவென்று சொல்லிக் கொள்ள யாருமில்லா தன்னை அழைத்து வந்து தங்கள் வீட்டில் ஒருவனாகத் தங்க வைத்து தன் வாழ்க்கைத் தரத்தை இவ்வளவு உயர்த்திக் கொடுத்திருக்கும் ஜானுவின் குடும்பத்தினரிடம் மிகப் பெரிய மரியாதை வைத்திருப்பவன், அவர்களுக்கு சிறு சிணுங்களைக் கூட கொடுத்து விடக் கூடாது என்பதில் உறுதியோடு இருப்பவனோ மனதுக்குள் ஜானுவை அளவில்லாது நேசித்தாலும் ஒரு பொழுதும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் தான் வலம் வரத் தொடங்கியிருந்தான், கதிரவன்.​

வெகு நாட்களுக்குப் பிறகு அப்பத்தாவின் தயவால் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த கதிருக்கு நேரெதிரே பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஜானுவோ கதிரின் பிரத்தியேக வாசனையை நாசியிலும், அவனின் பிரதி பிம்பத்தை விழிகளிலும் நிரப்பியவாறு வந்தவளுக்கு காதலனைத் தீண்டவே கைகள் பரபரக்க...​

காருக்குள் இருந்த அனைவரையும் சுற்றி முற்றி பார்த்த ஜானுவோ சற்றே முன்னே சாய்ந்து கதிரின் பிடரியில் "ஊப்" என்று ஊதியவளின் செய்கையில் அவன் உடல் முழுதும் மயிர்க் கூச்செரிய, அவனோ 'அவள் ஏதோ செய்யப் போகிறாள்' என்று கண்டு கொண்டவன், எப்பொழுதும் போல் அவள் சில்மிஷங்களை இன்றும் தடுக்க முடியாது அமர்ந்திருந்தவனின் இடையை ஓட்டுநர் இருக்கையின் இடைவெளியில் கையை விட்டு நறுக்கென்று கிள்ளினாள் அந்த குறும்புகாரி ஜானு...​

ஜானுவின் செய்கையில்...​

"ஆ" என்று அலறிய கதிரோ காரின் நிறுத்து விசையை அழுத்தமாக மிதிக்க, அந்த அம்பாசிடரோ மிகப்பெரிய குலுங்கலோடு நிற்க... முன்னே இருந்த பேனட்டில் தலையை மோதிக் கொண்ட கதிரோ... 'இவ்ளோ பேர் இருக்கப்போ ஏண்டி ஜானு இப்டிலாம் என்ன படுத்துற' என்று சொல்லவும் முடியாத மெல்லவும் முடியாத தவிப்புக்குத்தான் ஆளானவனிடம்...​

"என்னா கதிரு? என்னல ஆச்சு? ஏம்பா என்னாச்சு?" என்று அனைவரும் பதற...​

அவர்கள் அனைவரையும் பார்த்து அசடு வழிந்த கதிரோ...​

"நாய் குறுக்க போயிருச்சு அப்பத்தா, அதே" என்று திணறியவாறு கூறி சமாளித்தவன் ஜானுவை முறைக்க முயன்று, அவள் கண் சிமிட்டலில் தோற்றவன், மீண்டும் வண்டியை கிளப்பினான் ஜானுவின் கதிரவன்.​

இத்துணை நேரமும் தன்னவனைச் சீண்டி அவன் தவிப்பில் குளிர் காய்ந்த குறும்புக்காரி ஜானுவுக்கு...​

"இந்த ராசா ஏன் புல்லட்டு வண்டிய மாட்டு வண்டியாட்டம் ஓட்டிக்கிட்டு வருது" என்ற நாச்சியின் கூற்றில் பின்னே திரும்பி மெதுவாக வந்து கொண்டிருந்த அண்ணனையும் மலரையும் பார்த்தவளுக்கோ, தன் சிறுவயது தோழியாக இருந்து இப்பொழுது தனக்கு அண்ணியாக மாறியிருக்கும் மலரையும் சீண்டத்தான் ஆசை வந்ததோ.?​

கைபேசியை எடுத்து மலரின் எண்ணுக்கு அழைத்தவள்....​

"ஏண்டி மலரு, என் மாமா கூட புல்லட்டுல போறீன்னு பெருமையா பீத்திக்கிட்டுப் போன, இப்ப நீங்க வர்ற வேகத்தப் பாத்தா எப்டியும் அடுத்த வருஷந்தே கோவிலுக்கு வந்து சேருவீக போல, மாட்டு வண்டியில வாறவேன் கூட உங்கள முந்திக்கிட்டு போறாண்டி" என்ற ஜானு அடக்கப்பட்ட சிரிப்புடன் கூற...​

ஏற்கனவே கடுப்புடன் வந்து கொண்டிருந்த மலரோ ஜானுவின் கிண்டலில் மேலும் கடுப்பாகியவள் "ஆமடி மாட்டு வண்டிய விட மெதுவா புல்லட்ட ஓட்டிகிட்டு வந்தா என் நாத்திக்கு சீக்ரம் கல்யாணமாகும்னு ஒரு ஜோசியக்காரன் சொன்னான்டி, அதனால உனக்காகத்தேண்டி நானும் என் மாமாவும் இவ்ளோ மெதுவா வாறோம் போதுமா.? போன வச்சுட்டு நீ பாத்துட்டிருக்க வேலைய ஒழுங்கா பாருடி" என்று அப்பொழுதும் யுவாவை விட்டுக்கொடுக்காமல் என் மாமா என்றே விளித்துக் கூறி தனைச் சீண்டிய ஜானுவை பதிலுக்கு வாரிய மலர்விழி...​

"இங்க இவக பண்றது பத்தாதுன்னு போன்ல இவக தங்கச்சி வேற, ரெண்டு பேத்துக்கும் நம்மள சீண்டலன்னா தூக்கமே வாராது" என்று வழக்கம் போல் நொடித்துக் கொண்டவளின் சாம்பாஷனையில் அடக்கப்பட்ட புன்னகையோடு அமர்ந்திருந்த யுவாவின் உருவத்தை பைக்கின் முன்னே இருந்த குவி ஆடியில் பார்த்தவளோ...​

'செய்றதையும் செஞ்சுட்டு உனக்கு சிரிப்பு வேறயா மாமா' என்று மீண்டும் உள்ளூரக் குமுறியவள் அந்த கண்ணாடியில் தெரிந்த அவனின் வசீகர பிம்பத்தைப் பார்த்து "வவ்வவ்வ்வே" என்று மூக்கைச் சுழித்து, உதட்டை வளைத்து கொண்ணை வைத்தவளின் செய்கையில் தனை மறந்து அந்தக் கண்ணாடி வழியாகவே அவளை ரசித்துக் கொண்டு வந்தான் யுவா....​

காற்றில் ஆடும் கூந்தலுக்குப் போட்டியாக அவள் உடலைத் தழுவியிருந்த பட்டுப் புடவையின் முந்தியும் சேர்ந்தாட, பட்டாம்பூச்சியாய் படபடக்கும் இமைகளுக்குள் இருந்த அவளின் கருவண்டு விழி வீச்சிலே தன்னை முற்றிலும் தொலைத்தவனுக்கு, அவளின் மலர் முகத்தில் இருந்த சிறு சிணுக்கம் கூடத் தாங்கவில்லை போல....​

அந்த சிணுக்கத்தின் காரணத்தை அறிந்தவனோ தன் கைபிடியில் இருந்த ஆக்சிலேட்டரை நன்றாக முறுக்கத்தொடங்க, அவர்களைச் சுமந்து வந்த புல்லட் வண்டியோ, மலர் எதிர்பார்த்ததுபோல் வேகமாக பாயத் தொடங்கியது.​

திடீரென்று வண்டியின் வேகம் அதிகரிக்கவும் சீட் கம்பியை மட்டும் பிடித்து அமர்ந்திருந்த மலர்விழியோ அதன் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது தடுமாறியவள் "மாமா மாமா" என்று கத்தத் தொடங்க, அதற்குள் பல மைல் தூரம் வந்து விட்டிருந்த புல்லட்டை ஒரு ஓரமாக நிறுத்திய யுவாவோ மலர்விழியிடம் திரும்பி...​

"வேகமா போனும் தான ஆசப்பட்ட அப்றம் ஏண்டி கத்தற.?" என்று வினவியவனிடம்...​

"இல்ல மாமா நீங்க உங்களயும் தொடக்கூடாதுன்னு சொல்லிட்டீக, ரோடு வேற பள்ளம் பள்ளமா இருக்கா, இவ்ளோ வேகமா போனா என்னால கம்பிய மட்டும் புடிச்சுட்டு உக்கார முடில மாமா விழுந்துருவன்னு பயமாயிருக்கு"​

என்று இமை கொட்டியவளை சில நிமிடங்கள் பார்வையாலே மேய்ந்தவன் எதுவும் பேசாமல் வண்டியை கிளப்பியவனோ, மீண்டும் ஆக்சிலேட்டரை உச்ச வேகத்தில் திருக பின்னே அமர்ந்திருந்த மலர்விழியோ இப்பொழுது "மாமா பயமாயிருக்கு மாமா" என்று மீண்டும் கத்தத் தொடங்கினாள்.​

"மாமா பெரிய பள்ளம் மாமா, பயமா இருக்கு மாமா" என்று கத்திக் கொண்டு வந்தாலும் அவன் கூறியதற்காக அவனைத் தொடாமலே அமர்ந்திருந்த மலர்விழியின் கத்தலை எதுவும் காதில் வாங்காதது போல் புல்லட்டை பாய விட்டவன், அங்கிருந்த பெரிய பள்ளத்தை நெருங்குவதற்குள் ஒரு கையால் வண்டியைச் செலுத்திக் கொண்டே மறுகையால் மலரின் வலது கரத்தை இழுத்து தன் கழுத்தை சுற்றியும், அவளின் இடது கரத்தை தன் இடுப்பைச் சுற்றிலும் படரவிட்டு அவளைத் தன் முதுகோடு அழுத்திக் கொண்டவனோ...​

"மாமா இருக்கும் போது உனக்கென்னடி பயம், மாமா மேல சாஞ்சுக்க விழி" என்று குரலில் அத்துணைக் காதல் வழியக் கூறியவனோ அந்த நிமிடம், சிறு வயதிலிருந்தே அவளைத் தன் இதயச்சிறையில் அடைக்காக்கும் அவளின் மாமனாய் மட்டுமே உருமாற்றம் கொண்டிருந்தவன் உல்லாசமாய் வண்டியைச் செலுத்தினான் யுவராஜ்...​

சற்று நேரத்திற்கு முன்னால் எந்தப் பள்ளத்திலும் வண்டியை விடாது அழுங்காமல் ஓட்டி வந்தவன் இப்பொழுது "விழி மாமாவ நல்லா இறுக்கிப் புடிச்சிக்கடி" எனக் கூறிக்கொண்டே அனைத்து பள்ளத்திலும் அந்த புல்லட்டை ஏற்றி இறக்க, அந்த உடல்களின் உரசலோ அந்த அரிமாவின் உள்ளமதில் மாபெரும் வேள்வித் தீயைத் தான் பற்ற வைத்துச் செல்ல....​

இப்பொழுது தன் மனையாளின் பின்னே கைகொடுத்து அவள் மோவாயை தன் தோள் மேல் தாங்கிக் கொண்டவன் அவள் மூச்சுக் காற்றை சுவாசித்தவாறு ஒரு மோன நிலையோடே வண்டியைச் செலுத்திக் கொண்டு வர.​

கணவனின் அருகாமையில் அவனின் காதல் ஊட்டும் குரலில் சற்று முன்னர் இருந்த சுணக்கம் யாவும் மறையப் பெற்றவளோ "மாமா" என்று மேலும் மேலும் அவனை இருக்கிக் கொண்ட மலரும், ஒரு கிறக்க நிலையோடே அவன் தோளில் கிளியாய் தொத்திக் கொண்டாள்.​

காதல் என்ற மாயவலையில் சிக்கிக் கொண்ட யுவாவும் மலரும் கோவில் வந்து சேர்ந்தும் கூட விழிகள் பிணைத்தவாறே குடும்பத்தினரோடு இணைந்து தங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வேண்டுதலை நிறைவேற்றத் தயாராக,​

கோவிலுக்குள் நுழைந்த யுவாவின் குடும்பத்தினரை வரவேற்ற​

கோவில் அர்ச்சகரோ...​

"வாங்கம்மா, வணக்கங்கய்யா, என்ன விஷயம் எல்லாரும் ஒண்ணா வந்துருக்கீக.?" என்று வினவியவருக்கு​

"அது ஒண்ணுமில்ல சாமி, தம்பி கல்யாணத்தப்போ சாமிக்கு நக சாத்துறதா ஆத்தா வேண்டுதல் வச்சுருக்காக, அதே இன்னிக்கு செஞ்சரலாம்னு வந்தோம்" என்று யுவாவைக் கைக்காட்டிக் கூறிய அவனின் அப்பா சிதம்பரமோ தாங்கள் கொண்டு வந்த சாமி நகையை தட்டில் வைத்து நீட்ட,​

அதை பயபக்தியோடு வாங்கிய அர்ச்சகரோ... "அம்பாள்கு நக சாத்துற வேண்டுதலா ரொம்ப சந்தோஷம், பேஷா பண்ணிட்லாம்" என்றவர் யுவாவையும் மலரையும் முன் நிறுத்தி அவர்கள் கூறிய வேண்டுதலை நிறைவேற்றி, அம்மனுக்கு அர்ச்சனையும் செய்து முடித்தவர், பெண்கள் எல்லாம் பொங்கல் வைக்க விலகிச் செல்லவும் யுவாவின் அப்பாவை நோக்கி...​

"சித்திரத் திருவிழா நெருங்கிக்கிட்டு இருக்கு காப்பு கட்றது எப்போனு அய்யா ஒரு தேதி சொன்னீகன்னா நாங்க அதுக்கான ஏற்பாட்ட பண்ணுவோம்" என்று சிதம்பரம் ஊர்த் தலைவர் என்கிற முறையில் அவரிடம் வினவியவருக்கு பதிலாக...​

சற்றே தாடையை நீவி யோசனை செய்த சிதம்பரமோ, தன் அப்பாவிடமும் மகன்களிடமும் ஒரு வார்த்தை கேட்டு விட்டு ஒரு தேதியை சொல்லவும்... "ரொம்ப சந்தோசம்ய்யா" என்ற அர்ச்சகரும் அவர்களை கும்மிட்டு விடைபெற....​

ஆண்கள் அனைவரும் அப்படியே கோவில் கூடத்தில் அமர்ந்து சித்திரை மாதம் வரப்போகும் பூஞ்சோலை திருவிழாவைப் பற்றி ஆவலாக உரையாடத் தொடங்கினர்.​

பொங்கல் பானையோடு அங்கு விறகடுப்பு இருந்த இடத்தை நோக்கிச் சென்ற பெண்களோ பிரசாத பொங்கல் வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருக்க...​

நாச்சியம்மையின் வேண்டுதல் படி மலர்விழியோடு இணைந்து தங்கள் குலதெய்வத்திற்கு நகை சாற்றி முடித்து வந்த யுவாவோ சற்று தள்ளிக் கதிரோடு அமர்ந்திருக்க, அவனின் பார்வையோ அங்கு அரக்கு நிறக் காஞ்சிப் பட்டில் பொங்கலுக்கு.... வெல்லத்தை இடிக்கிறேன் என்ற பெயரில், வெல்லத்தில் பாதியை காலி செய்து கொண்டிருந்த மலரின் மேலேதான் நிலைத்திருந்தது.​

வெல்லம் போன்ற இனிமையான பெண்ணவளின் முகத்திலும், மேனியிலும் தன் காதல் சொட்டும் பார்வையை வஞ்சகமின்றி ஊற விட்ட யுவா, தன்னிடம் கைக்குட்டை நீட்டிய கதிரை "எதுக்குடா.?" என்று கேள்வியாக நோக்க...​

"ரொம்ப வழியுதுடா மாப்ள, பாக்க முடில தொடச்சுக்க" என்று கதிர் வாரியும் கூட அலட்டிக் கொல்லாமல் ஆண்களின் வெட்கம் கூட இத்துணை அழகா என்று வியக்கும் வகையில் அவனைப் பார்த்து ஒரு வெட்கச் சிரிப்பை உதிர்த்தவனோ...​

"உன்ன யாருடா அதெல்லாம் பாக்கச் சொன்னாக.? அங்க உண்டகட்டி கொடுக்குறாகளாம் அதப் போய் வாங்கித் திண்ணு" என்று அவனை விரட்டி விட்டவன் மறுபடியும் தான் விட்ட வேலையைத் தொடரலானான் யுவராஜ்...​

வெல்லத்தை இடித்து முடித்த மலரிடம்​

"எத்தா உங்களுக்கான வேண்டுதல்னால நீதே ஆத்தா கோவில் கொளத்துல போய் தண்ணி மோண்டு வரணும்" என்ற அப்பத்தாவிடம்​

"சரி அப்பத்தா" என்ற மலர்விழி குடத்தோடு குளத்தை நோக்கி நடக்க,​

மலர் சென்றப் பின் அங்கு அமர முடியாது தவித்த யுவாவும் அவள் பின்னோடு விரைய...​

அவர்கள் இருவரையும் பார்த்திருந்த நாச்சியோ மலரோடு செல்லவிருந்த ஜானுவை "நீ இந்த தேங்காய செத்த திருக்காத்தா" என்று இழுத்து அமர வைத்தார்.​

தேங்காயைத் திருகி முடித்த ஜானுவோ மெல்ல யாருக்கும் தெரியாமல் அவ்விடம் விட்டு அகன்றவள், அங்கு அப்பத்தா கூறியபடி மாலை வாங்கிக் கொண்டிருந்த கதிரின் அருகில் சென்று அவனை இடித்தவாறு நின்றவளை முறைத்த கதிரோ...​

"ஏன் ஜானு இப்டி இம்ச பண்ற, கார்ல வேற இடுப்பக் கிள்ற, யாரும் பாத்தா என்னாகும் ஜானு" என்று சற்றே கண்டிப்புக் குரலாகத் தொடங்கியவன், அவளின் உருளும் விழிகளைக் கண்டு பேச்சை நிறுத்தியவனுல்... தன்னால் ஜானுவுக்கோ அவளின் குடும்பத்துக்கோ எந்த வித கலங்கமும் வந்து விடக் கூடாது என்ற பெரும் கலக்கமே இருக்க...​

ஆனால் அவனவளோ அவனின் கலக்கத்தை எல்லாம் சிறிதும் கண்டு கொல்லாமல் "இதப் பாரு கதிரவா, நா எதுக்கு உன்ன இம்ச பண்றேன்னு உனக்கே நல்லாத் தெரியும், நாயமா பாத்தா நீதே என் இடுப்பக் கிள்ளனும், என்னோட நேரக்கொடும எனக்கு மட்டும் எல்லாம் தல கீழா நடக்கு, என் இம்ச உனக்கு புடிக்கலன்னா நாளக்கே என்ன கல்யாணம் பண்ணி நீ வேணா என்னய பதிலுக்கு என்ன இம்ச பண்ணிக்கோ" என்று விழியில் காதலும், குரலில் விசமமுமாகக் கூறியவள்...​

"சரி அதெல்லாம் விடு, எனக்கு இப்ப மொதோ பூ வாங்கிக் குடுடா" என்று இடையில் கை வைத்து சட்டமாகக் கேட்டவளை, அடக்க முடியாது என்றறிந்தவனோ...​

"ஏன் ஜானு" என்று சலித்தவாறே இரண்டு முழம் ஜாதிமல்லியை வாங்கி அவள் கைகளில் வைத்தவன் நாச்சியம்மை கொடுத்த பணத்தையே மல்லிப்பூவுக்கும் கொடுக்க, அதைப் பறித்து எடுத்த ஜானுவோ...​

"உன் பாக்கட்லயிருந்து பூவுக்கு காசக் கொடு கதிரவா" என்றவளின் வார்த்தையில் அவளையே இமைக்க மறந்து பார்த்தவன் கைகள் தானாக தன் பணத்தை எடுத்து நீட்ட, அதைப் பார்த்த ஜானுவோ...​

"நா வேணாமாம், ஆனா நா சொல்ற எல்லாத்தையும் செய்வாராம், நீ ஒரு 90ஸ் கிட்னு சரியா நிரூபிக்கிறடா" என்று இன்னமும் நன்றாக அவன் தோள்களை இடித்துத் தள்ளியவள், அவன் வாங்கிக் கொடுத்த பூவை தலையில் வைத்தவாறே ஓடிவிட, ஜானுவின் அதிரடிக் காதலிலும், அவளின் அசராத நேசத்திலும் என்றும் போல் இன்றும் தவித்து நின்றான் கதிர்.​

அங்கு தண்ணீர் மோள குடத்தோடு குளக்கரைக்குச் சென்ற மலர், தன் கணவன் தன்னைப் பின்தொடர்வதைக் கூடக் கவனியாது நீண்ட கருநாகப் பின்னல் இடையில் நர்த்தனமாட அதிகம் கட்டிப் பழக்கமில்லா பட்டுப் புடவை அவிழ்ந்து விடுமோ என்று அஞ்சியவள் போல் கெண்டை கால் தெரியும் வண்ணம் அதைத் தூக்கிப் பிடித்தபடி அன்ன நடை நடந்து செல்லும் மலர்விழியை அவளின் பின்னழகை ரசித்த வண்ணம் பூனை நடை நடந்து அவள் பின்னோடே சென்ற யுவா...​

மறைந்து நின்று அவளைப் பார்க்க​

தெப்பக்குளப் படிக்கட்டில் இறங்கி முதலில் குளத்தில் இருந்த தெளிந்த நீரில் தன் பிம்பத்தைப் பார்த்து ரசித்தவளோ, "அழகாத்தாண்டி இருக்க" எனச் சொல்லிக் கொண்டே அந்த குளக்கரைப் படியில் அமர்ந்தவள் கையோடு கொண்டு வந்திருந்த பொரி உணவை நீரில் இருக்கும் மீன்களுக்குப் போட்டு கும்மலாக அடித்து கொண்ட மீன்களைப் பார்த்து "ஏய் மீனுகுட்டிகளா சண்ட போடாம சாப்புடுக எல்லாருக்கும் இருக்கு" என்று இதழ் பிரித்துச் சிரித்தவளோ கையிலிருந்த பொறியில் பாதியை தன் வாயிலும் மீதியை மீன்களுக்கும் போட்டு முடித்து "சரி சரி எல்லாரும் தள்ளிப் போங்க நா தண்ணி மெத்தோணும்" எனக் கூறியவள்...​

சேலை முந்தியை இழுத்து இடையில் சொருகிக் கொண்டு, குனிந்து அந்தக் குளத்து நீரில் குடத்தை வைத்து அங்கும் இங்கும் நீரை விலக்கியவள், அந்த படிக்கட்டில் இருந்த பாசியில் கால் வைத்த நொடி அவளின் பொற்பாதம் வழுக்க... "ஆத்தீ" என்று கத்தியபடி நீருக்குள் விழப் போனவளை விழ விடாமல் தாங்கியிருந்தது ஒரு கரம். அவளுக்கு மட்டுமே உரிமையான அவள் ஆசை அத்தான் யுவராஜின் கரம்.​

மலரின் பின்னோடே யுவாவும் குளக்கரைக்கு வந்தவன் அவளின் குழந்தைத் தனமான செயல்களையெல்லாம் ரசித்தவாறே அவளருகில் நெருங்கிய யுவராஜ் அவள் நீருக்குள் விழப் போன சமயம் ...​

"விழி பாத்துடி" என்று குடத்தோடு சேர்த்து அவளையும் இடைசுற்றி வலைத்துப் பிடிக்க... அவளும் பிடிமானத்திற்கு அவன் சட்டைக் காலரை இறுகப் பற்ற, அந்த திடீர் நிகழ்வில் இருவரின் உடலில் மட்டுமல்லாது உள்ளத்திலும் கூட கோடி மின்னல்கள் தான் தாக்கி விட்டுச் சென்றது.​

எதிர்பாராத யுவாவுடனான இத்துணை நெருக்கத்தாலும், அவன் கரம் அவளிடையை பற்றியிருந்த அழுத்தத்தாலும் உள்ளுக்குள் அவஸ்தையாய் உணர்ந்து செந்தூரமாய்ச் சிவந்து, உதடு கடித்து நின்றிருந்த மனையாளின் மலர் முகத்திலிருந்து விழிகளை அகற்றத் தோன்றாது மெய்மறந்து நின்றிருந்தவனோ "அத்தான், அத்தான்" என்ற மலரின் குரலில் தன்னை மீட்டுக் கொண்டாலும்...​

இன்னும் அவன் பிடியிலேயே இருப்பதால் உள்ளே போன குரலில் அவள் கூறிய அந்த "அத்தான்' என்ற வார்த்தையே அவனைப் பித்துக் கொள்ளத்தான் வைத்தது.​

மலர்விழி மெல்ல தன் பிடியில் இருந்து விலகவும் அவனும் ஓரளவு அவனை நிலைபடுத்திக் கொண்டாலும், ஏனோ சற்று முன்னர் அத்தான் என்ற வார்த்தையிலே அவனுக்கு அப்படி ஒரு போதையைக் கொடுத்த அவளின் இதழ்களில் இருந்து மட்டும் தன் பார்வையை விலக்காது, பதித்திருந்தவனை மறுபடியும்​

"அத்தான்" என்றழைத்து நீங்க எப்பத்தான் இங்க வந்தீக.?" என்ற மலர்விழியின் கேள்வியில் இப்பொழுது முழுவதுமாக தன்னை மீட்டுக் கொண்டவன்...​

"ம்ம்ம்... என்ன கேட்ட.?" என்று தலையை உலுக்கிக் கொண்டவனோ... "நீ மீனுக கிட்ட பேசிட்டிருக்கப்போவே வந்துட்டேன்" என்றவனின் பதிலில்...​

"அய்யோ, அப்ப நா லூசு மாறி உலர்ணதெல்லாம் பாத்துடீகளா.?" என்று சாசறாய் விழி விரித்தவளைக் கண்டு...​

"அய்யோ சாவடிக்கிராளே" என்று எண்ணிக் கொண்டவனோ... இனியும் அவளருகில் நிற்க முடியாது சட்டென்று அவளை விட்டு விலகியவன்...​

"இனிமே மீனுக கூட பேசணும்னா என்கிட்ட சொல்லு, நா கூட்டிட்டு வாறேன் இப்டி தனியாலாம் வந்து வழுக்கி விழுக வேணாம்..." என்று மலரின் முகத்தைப் பாராமலே கூறியவன்.....​

"வா நேரமாச்சு" என்று அவள் மறுக்க மறுக்க அந்த தண்ணீர்க் குடத்தை அவளிடமிருந்து தான் வாங்கிக் கொண்டவன், மறு கையால் அவள் விரல்களையும் அழுந்தப் பற்றிக் கொண்டு குளத்தை விட்டு மேலேறி கோவில் நோக்கிச் சென்ற தன் அத்தானின் இணக்கமான செய்கையில், அவனுடன் நடந்து வந்த மலரின் விழிகளோ ஆச்சர்யத்தில் தான் விரிய...​

அந்தப் பூஞ்சோலை கிராமத்திற்கே முடிசூடா மன்னன் போல் வலம் வரும் யுவா தன் ஆண் கர்வம் மறந்து தன்னவளுக்காக தண்ணீர் குடம் தூக்கி வந்ததோ அவன் குடும்பத்தினரோடு சேர்த்து அங்கு குழுமியிருந்த ஊர் மக்களுக்கும் கூட இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.​

யுவா பிறந்து வளர்ந்து வாலிபம் அடைந்த இந்த இருபத்தி ஏழு வருடங்களில் முதன்முறையாக தன் மனையாளுக்காக தண்ணீர் குடம் தூக்கி வந்து பொங்கப் பானையின் அருகில் வைத்தவனை அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாய் பார்த்துக் கொண்டிருக்க ஆனால் அவளவனோ அதையெல்லாம் சிறிதும் கண்டு கொள்ளாது அவளோடிணைந்து பொங்கப் பானைக்குள் அரிசி வெல்லம் போட்டது, பொங்கும் பொங்கலைப் பார்த்து "பொங்கலோ பொங்கல்" என்று ஆர்ப்பரித்த மலர்விழியை விழுங்கும் பார்வையாலே சிவக்க வைத்தது, பொங்கல் பிரசாதத்தோடு தம்பதி சமேதராய் குலசாமியை வழிபட்டது... என்று தன் குடும்பத்தினர் கூறிய அனைத்தையும் மனதில் மகிழ்ச்சியோடும், உதட்டில் புன்னகையோடும் குறைவில்லாது நிறைவேற்றி முடித்தவன்...​

"மலருக்கு வச்சு விடு ராசா" எனக் கூறி.​

தன் அப்பத்தா கொடுத்த குங்குமத்தைக் கையில் வாங்கி அந்த கருமாரியின் சந்நிதியில் விழி மூடி நின்றிருந்த மனையாளின் உச்சி வகிட்டில் திலகத்தைத் தீட்டிய யுவாவின் மனமுருகிய பிரார்த்தனை கூட....​

"நானும் என் மாமன் மகளும் நீண்ட வருடங்கள் சந்தோஷமாக வாழ வேண்டும்" என்பதாகவே இருந்தது...​

மலர்விழியின் கரத்தோடு கரம் பிணைத்தவாறே அம்மனை ஒத்த அவளின் அலங்கார அழகையும் ரசித்தவாறு மீண்டும் அவளோடு புல்லட் பயணத்தைத் தொடர்ந்த யுவா தான்... 'திருமண நாள் இரவில் அப்படி ஒரு நிபந்தனையை தனக்கு விதித்தானா.?' என்று இந்த நிமிடம் மலர்விழி மலைத்திருக்க...​

ஆனால் அவளவனோ "நேசத்தால் உன்னை நிந்திப்பவனும் நானே, நிபந்தனையால் உனை நிர்பந்திப்பவனும் நானே" என்று அடுத்த சில பல நாட்களிலே மலர்விழிக்கு நிரூபித்திருந்தான்.​

மயக்கம் கொள்ளுமா மலர்...??💘

 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top