Kadhal kanavugal
Member
மீண்ட சொர்க்கம் நீ எனக்கு
பகுதி 17
“என்ன ரெண்டு கோடியா? என்ன விளையாடுறியா!.. என் பிள்ளை நிச்சயம் அப்படி உன் கிட்ட வாங்கி இருக்க மாட்டான். நீ அபாண்டமாக பழி சொல்ற.. முதல்ல இந்த வீட்டை விட்டு வெளியில் போ” என்று அந்த பெரியவரின் குரல் வாயில் வரை அதிர்வுடன் கேட்டது.
“ஓ தாராளமாக போயிடறேன்! உன் புள்ள சாவு வீட்டுக்குள்ள பேச வேண்டாம்னு நினைச்சேன். உனக்கு ஒரு வாரம் தான் டைம்!! அதுக்குள்ள வேலு பதுக்கி வைச்சுட்டு போன ரெண்டு கோடி ரூபா என் கைக்கு வந்தாகணும்.. அப்படி இல்லை அவ்வளவுதான்” என்று அவனும் பதிலுக்கு மிரட்டி விட்டு கிளம்பும் அரவம் கேட்டது. உடனே மதுவும் மகேஷும் தூரச் சென்று இருந்தார்கள்.
காரில் மதுவும் மகேஷும் வெகு தூரம் கடந்து வந்த பின்.. “என்ன மது.. வேலாயுதம் அப்பா சொல்றதக் கேட்டா.. எல்லாத்துக்கும் காரணம் உங்க சார் தான் போல தெரியுது” என்று மகேஷ் கூற.. அதுவரை அமைதியாக இருந்தவள்.. மெல்லப் பேசத் தொடங்கினாள்.
“தெரியல மகேஷ்.. பரத்துக்கு என்ன ஆச்சு? சிலை எங்க இருக்கு என்றும் தெரியல? நான் எத்தனை நாள் இன்னும் பர்தா போட்டு சுத்துறதோ.. அதுவும் தெரியல”.. என்று மது சொல்லி முடிக்க.. இரவு நிலா வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்க.. அவர்கள் வீட்டை எட்டி இருந்தார்கள்.
அவர்கள் காரில் இருந்து இறங்கும் முன்.. மகேஷின் கரம் அவள் கரத்தை பற்றி இழுத்து நிறுத்தி இருந்தது. மதுவின் விழிகள் கேள்வியுடன் அவனை பார்க்க.. “மது.. எனக்கு உன் மனசுல இருக்க தவிப்பு புரியுது.. ஆனா நீ எப்ப நான் உன் மனசுல இருக்கேன்னு மறைமுகமா ஒத்துக் கிட்டியோ!.. அப்பவே நீ என்னவள் ஆயிட்ட!! உன் கஷ்டம் இனி என் கஷ்டம். உன் துன்பம் இனிமேல் என் துன்பம். என்னை நம்பு மது. பிளீஸ் இனிமே கொஞ்சம் நார்மலாக இரு. உன்ன இப்படியே பாக்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு”.. என்று மகேஷ் உருகி கூற..
மது ஒரு மென் புன்னகையை மட்டும் உதிர்த்து.. அவள் அறையை நோக்கி நடக்கத் தொடங்கினாள். வீட்டிற்குள் சென்ற மகேஷ்.. “அம்மா அவள் பசிக்கலைன்னு சொல்லிட்டாம்மா.. ஒரு டம்ளர் பால் மட்டும் சந்தியா கிட்ட கொடுத்து.. குடிக்க வைக்கச் சொல்லுங்கம்மா” என்று அவனும் சுற்றி வந்த களைப்பில் தூங்கச் சென்றான்.
பின் நடு நிசியில்.. மகேஷ் அயர்ந்து உறங்கி கொண்டிருக்க.. ஒரு உடுக்கை சத்தம் அவன் தூக்கத்தை கலைத்தது.
“யாரது? இந்த நேரத்துல இப்படி சத்தம் போடுறது?” என்று எண்ணிய மகேஷ் கண்களை தேய்த்து விட்டு.. எழுந்து அமர்ந்தான். அவன் அறையை விட்டு வெளியில் வர.. சின்ன விடிவிளக்கு மட்டும் வீட்டின் இருளைத் தணியச் செய்து கொண்டிருந்தது.
அவன் பார்வை அவன் அறைக்கு இரண்டு அறைகளைத் தள்ளி இருந்த மதுவின் அறையில் சென்று நிற்க.. அந்த அறையின் கதவு திறந்து கிடந்தது. “ஏன் கதவு திறந்திருக்கு.. இந்த அர்த்த ராத்திரியில் இவள் என்ன செய்கிறா” என்று மகேஷ் உள்ளே சென்று பார்க்க..
அவள் அறையில் இருந்த பெரிய ஜன்னல் திறந்திருக்க.. அதன் வழியாகத்தான் அப்போதும் அந்த உடுக்கை சத்தம் கேட்டது.
மகேஷ் ஓடிச் சென்று எட்டி பார்க்க அங்கு இவ்வளவு நாளாக அனைவரும் வர்ணித்த அகோரி உடுக்கையுடன்.. “வேகமா வெளிய வா.. உன்னை மரணம் துரத்திட்டு இருக்கு!” என்று கத்த.. மகேஷுக்கும் ஒரு நிமிடம் பக் என்று தான் இருந்தது.
“ஐயையோ.. மது எங்க போனா?” என்ற நினைவு சட்டென்று வர.. அவன் வேகமாக அவள் அறையை விட்டு வெளியில் வந்தான்.
அவன் பார்வையை வீட்டில் நாலாபுறமும் சுற்றி தேட.. மது அவர்கள் வீட்டு கதவைத் திறந்து கொண்டிருந்தாள்.
“வேகமா வெளிய வா”என்ற குரல் அதிர..
மது கதவைத் திறந்து.. வெளியில் கால் வைக்க..
மகேஷ் ஓடிச்சென்று... அவளை மறித்து நின்றான். மதுவின் கண்கள் இமைக்க மறந்து அப்படியே நின்றது. அவள் சுயநினைவே இல்லாமல்.. மகேஷைத் தாண்டி.. அந்த உடுக்கை ஒலியும், குரலும் வந்த திசையை நோக்கி செல்லப் போக.. செய்வது அறியாத மகேஷ்.. “மது”.. என்று அவள் கன்னத்தை அவன் தட்ட.. அவள் அப்போதும் ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருக்க..
அவர்களின் அரவம் கேட்டு.. கற்பகவல்லி அவர் அறைக் கதவை திறந்து வெளியே வந்தார்.
“மகேஷ் என்ன ஆச்சு”..
“அம்மா நான் வர்றவரை மதுவைப் பத்திரமா பார்த்துக்கோங்க.. அவள் வெளிய போயிடாம” என்று இருவரையும் உள்ளே தள்ளி கதவை பூட்டிச் சென்றான்.
“ முதல்ல இந்த சாமியாரைப் பிடிக்கணும்” என்று வெளியில் வந்தவன் வாட்ச்மேன் இருக்கையைப் பார்க்க அது காலியாகக் கிடந்தது.
இவன் எங்கே போய்த் தொலைஞ்சானோ.. என்று திட்டியவாறே கேட்டை மூட..
“சார்.. சாரி சார் டீ குடிக்க போயிருந்தேன்”..
“ சரி கதிர்.. இப்ப ஒரு சாமியார் மாதிரி ஒரு ஆளு உடுக்கைய வச்சி சத்தம் போட்டாரு.. நீ இந்த பக்கம் போய் தேடிப் பாரு.. நான் அந்த பக்கம் போய் பார்க்கிறேன்”.. என்று இருவரும் ஓட..
ஆனால் ஜன்னல் வழியாகப் பார்த்த உருவம் இப்போது எங்குமே இல்லை. அவர்கள் அந்த சந்தின் நாலாபுறமும் ஓடிச் சென்று பார்க்க.. அந்த அகோரி வந்து போனதற்கான அடையாளமே இல்லாமல் இருந்தது.
“எங்க போனாரு” என்று யோசித்தவன் குழப்பத்துடன் நிற்க.. தேடிச் சென்றிருந்த வாட்ச்மேன்.. “சார் நான் எல்லா இடமும் தேடிப் பார்த்துட்டேன்!.. நீங்க சொன்ன மாதிரி யாருமே இல்ல”.. என்று வாட்ச்மேன் சொல்ல..
“இப்ப தான் இங்க நின்னு பாத்துட்டு இருந்தாரு.. அதுக்குள்ள காணோம். சரி இனி கொஞ்சம் கவனமா இரு..
அந்த சாமியார் மட்டும் வந்தா.. இங்கேயே பிடிச்சு வை”.. என்று அவன் வீட்டை நோக்கி நடந்தான்.
“மது.. இந்தா தண்ணி குடிம்மா”.. என்று கற்பகவல்லி அவளை உலுக்க.. மது யாரையும் கவனிக்காமல்.. “நான் இதோ வந்து விடுகிறேன்.. வந்து விடுகிறேன்” என்று அவள் உதடுகள் மட்டும் முணுமுணுத்து.. எந்த அசைவும் இன்றி நின்று கொண்டிருந்தாள்.
மகேஷுக்கு அவள் நிலையைg பார்த்து இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. கற்பகவல்லி மகேஷைப் பார்த்தவுடன்.. “என்னடா இது.. இவள் இப்படி நிக்கிறா?.. எனக்கு பயமா இருக்கு”
“ம்.. பயப்படாதீங்க அம்மா..” என்றவன் அவள் கன்னத்தில் தட்டி பார்த்து விட்டு.. அங்கிருந்த வாட்டர் ஜக்கை கையில் எடுத்தவன்.. அந்த குளிர் நீரை அவள் முகத்தில் தெளித்தான்.
அந்த குளிர்ந்த நீர் பட்டவுடன் மதுவின் கண்கள் தானாகவே இமைக்கத் தொடங்க.. அவள் கைகள் அவள் முகத்தில் இருந்த நீரைத் துடைத்தது.. “மது ஆர் யூ ஒகே“.. என்று மகேஷ் வினவ.. மதுவுக்கு எங்கு இருக்கிறோம்? என்ன நடந்தது?” என்று எதுவும் புரியாமல் விழிக்க.. “நான் எப்படி மாடியிலிருந்து கீழே வந்தேன்” என்று கேட்டாள்.
மகேஷும் கற்பகவல்லியும் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “ஒன்னும் இல்ல மது.. ஏதோ கெட்ட கனவு கண்டுட்ட போல.. அதான் பயந்து கீழே வந்துட்ட”.. என்று கற்பகவல்லி சொல்ல..
“இல்லை ஆன்டி.. நல்லா தூங்கிட்டு இருந்தேன். திடீரென அந்த சாமியார் வந்தார்.. அப்புறம்”.. என்று மது சிரமப்பட்டு யோசித்து சொல்லத் தொடங்கியதுமே.. அவள் முகத்தில் பழையபடி அச்சம் வந்து அப்பிக் கொள்ள..
“வேண்டாம் மது.. இப்ப அது பத்தி எதுவும் பேச வேண்டாம். நீ கீழேயே அம்மா ரூம்ல அவங்க கூட படுத்துக்கோ.. அம்மா மதுவைக் கூட்டிட்டுப் போய் தூங்க வைங்க” என்றான் மகேஷ்.
மகேஷின் மனம் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தது. மகேஷுக்கு இப்போது அவளை துரத்திக் கொண்டு வந்த எதிரிகளை நினைத்துக் கூட பயம் இல்லை. ஆனால் மதுவின் மனதில் இருக்கும் மரண பயத்தை நினைத்து தான் அஞ்சிக் கொண்டிருந்தான்.
மகேஷ் மட்டும் சில நொடிகள் தாமதமாக வந்திருந்தால் கூட.. மது வீட்டைவிட்டு சென்றிருப்பாள். நடுநிசியில் அவள் மட்டும் தனியாக வெளியில் சென்று இருந்தால்? என்னென்ன ஆபத்தை சந்திக்க நேர்ந்திருக்கும்!! அதற்கு மேல் மகேஷால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஏதோ கடவுள் புண்ணியத்தில் அவனுக்கும் அதே நேரம் விழிப்பு வந்திருக்கிறது.
கற்பகவள்ளி அறை வாயில் அருகிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன்.. நிறைய யோசித்தான். மதுவை எப்படி பழைய நிலைக்கு கொண்டுவருவது.. என்று பல கோணங்களில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தான்.
அப்போது கற்பகவள்ளி மெல்ல அந்த அறையை விட்டு வெளியில் வரும் அரவம் கேட்க..
“அம்மா மது தூங்கிட்டாளா”
“ம்.. இப்பதான் தூங்க ஆரம்பிச்சா மகேஷ்” என்று கற்பகவல்லி முடிக்கும் முன்.. மகேஷ் மெல்ல அந்த அறைக்குள் சென்று.. மது அருகில் அமர்ந்தான். அவளின் சீரான மூச்சுக்காற்று அவளின் ஆழ்ந்த நித்திரையை பறைசாற்றியது.
சற்றுமுன் அவள் நின்ற கோலத்தைப் பார்த்து அதிர்ந்து போனவனுக்கு.. அவளின் அந்த நிம்மதியான தூக்கம் அவன் மனதுக்கும் இதம் தந்தது. தாமரை போன்ற அவள் முகத்தை பார்த்து ரசித்தவன் அரவம் இல்லாமல் வெளியேறினான்.
மகனைப் பார்த்த கற்பகவல்லி “தம்பி.. எனக்கு என்னமோ ரொம்ப பயமா இருக்கு.. நம்ம பொறுப்புல இருக்க பொம்பிளை பிள்ளை.. இப்படி இராத்திரி வேளையிலே தனியா வெளிய போய் இருந்தா என்ன பண்றது? நினைச்சாலே மனசு பதறுது.”
“அம்மா.. நானும் அதைதான் யோசிக்கிறேன். இந்த பிரச்சினையை சமாளிக்க நமக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு”
“என்ன வழி மகேஷ்” என்று கற்பகவல்லி புரியாமல் கேட்க..
தன் மனதில் யோசித்து வைத்திருந்த திட்டத்தை மகேஷ் சொல்லத் தொடங்கினான். “மகேஷ் என்ன சொல்ற.. அது ரொம்ப தப்பு” என்று கற்பகவல்லி சொல்ல..
“அம்மா ஆபத்துக்கு பாவம் இல்ல.. இந்த நிலையில அவள் மனசு மாறுவதற்கு இது ஒன்னு தான் வழி. நாம இப்படியே அவளை விட்டா.. அவள் பைத்தியம் ஆயிடுவாளோன்னு எனக்கு பயமா இருக்குமா.. அம்மா ப்ளீஸ்.. எனக்காக கொஞ்சம் யோசிங்க”.. என்று மகேஷ் கற்பகவல்லியின் கைகளைப் பிடித்துக் கெஞ்ச..
மகேஷின் மனவேதனை கற்பகவல்லிக்கும் புரிந்தது. “மகேஷ் இது நாம மட்டும் முடிவு எடுக்கிற விஷயம் இல்லையே.. உனக்கு தெரியாதா.. இதுல என்ன சிக்கல் இருக்குன்னு?” என்று கற்பகவல்லி சொல்ல..
“தெரியும்மா.. ஆனா இது அவள் உயிரைக் காப்பாற்றுவதற்காக நாம் எடுக்கிற முயற்சி! இதுல எந்த தப்பும் இல்லை.” என்ற மகேஷ் கற்பகவல்லிக்கு புரியவைக்க.. பின் அதற்கான வேலைகளை இருவருமாக திட்டமிட.. அவர்கள் கண் அயர வெகுநேரம் பிடித்தது.
நேற்றைய களைப்பிலும், கடும் மன உளைச்சலிலும்.. எட்டு மணிக்குத்தான் மது காலையில் கண் விழித்தாள். சூரியனின் ஒளிக்கதிர்கள் திரைச்சீலையையும் மீறி அவள் அறைக்குள் வெளிச்சத்தை பரப்பிக் கொண்டிருக்க.. அங்கு ஏதோ பேச்சுக் குரலும் மந்திரங்களின் சத்தமும் கேட்க.. “அய்யோ ரொம்ப நேரமாயிடுச்சோ” என்று பதட்டத்துடன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள்.
“ஹாய் மது! எந்திரிச்சிட்டியா” என்று சந்தியா அந்த அறைக்குள் புடவை உடுத்தி வர..
“சாரி சந்தியா.. ரொம்ப அசதியா இருந்துச்சு! அதான் ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போல.. ஆமா என்ன சந்தியா.. ஹால்ல ஏதோ சத்தம் கேட்குது? நீ புடவை கட்டி இருக்க? எதுவும் விஷேசமா?” என்று வினவ..
“அது ஒன்னும் இல்ல மது.. அம்மா கணபதிஓமத்திற்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க. எல்லாரும் பூஜையில் உட்காரணும். அதுக்கு தான் புடவை. உனக்கும் அம்மா புடவை கொடுத்து விட்ருக்காங்க.. இந்தா.. குளிச்சுட்டு.. இதை உடுத்தி வேகமா ரெடியாகு” என்று சொல்லிச் செல்ல..
மதுவுக்கு எதிலும் விருப்பமும் நம்பிக்கையும் இல்லாத போதும்.. அவர்கள் வீட்டில் தங்கிக் கொண்டு அவர்கள் நம்பிக்கைக்கு மரியாதை கொடுக்காமல் இருப்பது மிகவும் தவறு என்று எண்ணியவள் குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து நைட்டி அணிந்து வெளியில் வர.. அப்போது தான் சந்தியா கொடுத்த அந்த புடவையைக் கவனித்தாள்.
அது அடர் சிவப்பு வண்ணத்தில்.. பெரிய பெரிய ஜரிகைகளை கொண்டு மின்னியது அந்த காஞ்சிபுரப் பட்டு. அப்போது யாரோ கதவை தட்ட கற்பகவல்லி தான் உள்ளே வந்தார்.
“மது.. வேகமா புடவையை கட்டிட்டு வாம்மா” என்று அவர் சொல்ல..
“ஆன்டி இந்த புடவை விலை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும் போல இருக்கு.. அதுவும் புது புடவையா தெரியுது. எங்கம்மா அன்னைக்கு கொடுத்து விட்டதில் கூட.. ஒரு நல்ல புடவை இருக்கு ஆன்டி! நான் அதையே கட்டிக்கிறேன். நீங்க இதை சந்தியாக்கு வச்சிருங்க” என்று சொல்ல..
“இல்ல மது.. நீயும் எனக்கு சந்தியா மாதிரி தான். இந்த புடவை நான் உனக்குன்னு தான் வாங்கினேன். சந்தியாவுக்கு நான் வேற வாங்கி இருக்கேன். வேகமா கட்டிட்டு வா மது” என்று கற்பகவல்லி சொல்லிச் செல்ல.. அவரை அதற்கு மேல் எதிர்க்க முடியாமல் அந்த புடவையை கட்டி முடித்து இருந்தாள் மது.
அவள் புடவை கட்டி முடிக்கவும்.. சந்தியா உள்ளே வரவும் சரியாக இருந்தது. “மது.. புடவையில சூப்பரா இருக்க.. மம்.. கொஞ்சம் உட்கார் மது.. உனக்கு பூ வச்சி விடறேன்” என்று அவள் பதிலுக்கு கூட காத்திராமல்.. அவளை உட்கார வைத்து.. தலை நிறைய பூ வைத்து விட்டிருந்தாள் சந்தியா.
கண்ணாடியில் பார்த்த அதிர்ந்த மது.. “என்ன சந்தியா.. நீ வாட்டிக்கு இவ்வளவு பூ வச்சு விட்ட?? ஏதோ கல்யாண பொண்ணு மாதிரி இருக்கு” என்று மது கூச்சத்துடன் சொல்ல..
“என்னைக்கோ தான மது.. அதனால ஒன்னும் தப்பு இல்ல..” என்று சந்தியா சொல்லி விட்டு செல்ல..
“மது”.. என்று மகேஷ் அடுத்து கதவை தட்ட..
“எஸ்.. கம் இன்”.. என்று மது அழைக்க..
மகேஷ் உள்ளே நுழைந்ததும்.. அங்கு புடவையில்.. சிற்பமாய் நின்றவளின் மீது அவன் பார்வை நிலை குத்தி நின்றது. அவன் இமைக்க மறந்து அவள் அழகில் மெய்மறந்து நின்றான்.
தொடரும்.
அன்புடன் லக்ஷ்மி.