JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

லூனா... டீஸர் 1

JLine

Moderator
Staff member

நிலா (லூனா) - டீஸர்


பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை..
பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை..
எதற்கு உன்னைப் பிடித்ததென்று தெரியவில்லையே..
தெரிந்துகொள்ளத் துணிந்த உள்ளம் தொலைந்ததுண்மையே...
பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை...
பிடிக்குதே திரும்பத் திரும்ப உன்னை...

--அஷ்வத்

அஷ்வத் வில்ஸன்..
மேட்வில் குழுமங்களின் சி.இ.ஒ..
பிரிட்டன் நாட்டினை சேர்ந்தவரான பில்லியனர் மேத்யூ வில்ஸன் மற்றும் தமிழ் நாட்டைச் சேர்ந்த சுமித்திரா அவர்களின் ஒரே பேரன், 27 வயது இளைஞன்.. பிஸ்னஸ் டைக்கூன் என்று தன் இருபத்தி நான்கு வயதிலேயே உலக நாடுகள் முழுவதிலும் உள்ள தொழில் சாம்ராஜ்யங்களை ஆளும் அதிபர்களால் அழைக்கப்பட்டவன்.

"சத்யா! என் வாழ்க்கையில் நான் சந்திச்சவங்களிலேயே மறக்க முடியாதவங்கன்னா, அதுல ஃபர்ஸ்ட் என்னுடைய கிராண்ட்மா [Grandma] தான்.. பட் ஷி இஸ் நோ மோர்.. அவங்க அடிக்கடி ஒண்ணு சொல்லுவாங்க.. உலகத்திலேயே தனிமை மாதிரி ஒரு கொடுமையான விஷயம் ஒன்னும் இல்லைன்னு.. பிரிட்டிஷ்காரரான என் கிராண்ட்பாவை [Grandpa] அவங்க கல்யாணம் செய்துக்கிட்டு இந்தியாவை விட்டு அவங்கப் போனப்போ, சொந்தப்பந்தம்னு எவ்வளவோ பேர் இருந்தும் தனியா வாழுற மாதிரி ஒரு சூழ்நிலை அமைஞ்சிடுச்சேங்கிற ஏக்கத்துல அவங்க ரொம்ப வேதனைப்படுவாங்களாம்.. அப்போ எல்லாம் அவங்களுக்குத் துணை, வானத்தில் நடக்கிற மாறுதல்கள் தான்... அதுவும் இரவு நேரத்தில் வானத்தில் தெரிகிற விண்மீன்களும், நட்சத்திரங்களும், நிலாவும், விண்கற்களும், விண்மீன்களைப் போலவே தெரியும் கோள்களும், மழை நேரத்தில் தோன்றும் மின்னலும் இடியும் தான் அவங்களுக்கு அப்போ துணைன்னு அடிக்கடி சொல்லுவாங்க.. அதை விவரம் தெரிஞ்ச நாளில் இருந்து கேட்டு கேட்டே வளர்ந்த எனக்கும் வானத்துல நடக்கிற நிகழ்ச்சிகள் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.. அதுலயும் குறிப்பா நிலா.." என்று கூறி முடித்த அஷ்வத்தை அதுவரை இமைக்க மறந்தது போல் பார்த்திருந்த சத்யா, தன் கண்களின் முன் சொடுக்கிட்டவனின் சத்தத்தில் தான் சுயநினைவிற்கு வந்தான்.

"என்ன சத்யா? நீங்களும் அந்த ஆகாயத்துக்கே போயிட்டீங்க போல இருக்கு?"

"சார்.. அமெரிக்காவில் இருந்து 'மேட்வில்' கம்பெனியின் சி.இ.ஓ [C.E.O of MatWil Enterprises] வருகிறார்னு சொன்னவுடனே, அதுவும் அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர்ன்னு கேள்விப்பட்டவுடனேயே உங்களுக்குத் தமிழ் வராதுன்னு நினைச்சேன்.. ஆனால் எப்படி சார், இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க?"

"அதுவும் என் கிராண்ட் பேரண்ட்ஸால தான் சத்யா.. அப்போ எல்லாம் எனக்குத் தமிழ் கத்துக்கிறதுக்கே பிடிக்காது.. ஆனால் நல்ல வேளை பிடிச்சோ பிடிக்காமலேயோ கத்துக்கிட்டேன்.. இல்லைன்னா நான் பேசுற இங்கிலிஷ் என்னவளுக்குப் புரியாமலும், அவ பேசுற தமிழ் எனக்குப் புரியாமலும், எங்க நிலைமை ரொம்ப மோசமா ஆகிருக்கும்.."

தான் கோவை விமானநிலையத்தில் சந்தித்த நாள் முதல், ஒரு சொல்லிற்குள் இத்தனைக் கட்டளைகளா என்று வியக்கும் வண்ணம் மூன்றாவது வார்த்தையை என்னை உதிர்க்க வைக்காதே என்று மிரட்டும் வகையில், ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் பேசியிராதவன், இந்த அஷ்வத் வில்ஸன்.

அதுவும் அவன் ஏதேனும் தீவிர சிந்தனைகளில் உழன்று கொண்டிருக்கும் வேளையிலோ அல்லது அவனைச் சீற்றப்படுத்தும் விஷயங்கள் நடந்தேறியிருந்தாலோ, நாம் தொடுக்கும் வினாக்களுக்குத் தலையைக் கோதியவாறே அவன் நிமிர்ந்து நோக்கும் பொழுது அவனைச் சுற்றி இருப்பவர்கள் தன்னிச்சையாக நான்கடிகள் தள்ளி நிற்பார்கள்.

அப்படிப்பட்டவனா இப்படிப் பேசுகின்றான்?

எந்த நாட்டில் பிறந்தாலும், எத்தகைய சூழ்நிலையில் வளர்ந்திருந்தாலும், எப்பேற்பட்ட தொழில் சாம்ராஜ்யத்தை ஆட்சிப்புரிபவனாக இருந்தாலும் காதல் என்று ஒன்று வந்துவிட்டால் அவனது இயற்கையான குணாதிசயங்களே மாறிவிடுமோ?

அதுவும் ஒரே நாளில் ஒரே பார்வையில் இத்தகைய ஜாம்பவானை வீழ்த்துவது என்றால்?

கற்பாறையாம் இவன் இதயத்திற்குள் மின்னலாய் ஊடுருவி கல்வெட்டாய் பதிந்திருப்பவளை அக்கணமே காண வேண்டும் என்ற பேராவல் அஷ்வத் வில்சனின் பி.எ சத்யாவிற்குத் தோன்றியதில் வியப்பில்லையே?

****************************************

அடுத்த ஒரு மணி நேரத்தில் அஷ்வத்தின் கறுப்பு நிற Mercedes G class Jeep/Wagon மதுரை மாவட்டத்தின் வடக்குப் புறத்தில் உள்ள சிற்றூரானத் தேனூருக்கு சில மைல்கள் தொலைவில் இருக்கும் காத்தனூரை அடைய, தனது அலைபேசியில் இளங்குமரனை அழைத்த சத்யா அஷ்வத்தின் வருகையை அறிவிக்க, ஏற்கனவே சத்யாவின் எண்ணை அலைபேசியில் கண்டதுமே பதட்டம் அடைந்த இளங்குமரன், அஷ்வத் தங்களது ஊருக்கு நேரிடையாக வருகைத் தருகின்றான் என்பதைக் கேள்விப்பட்டதில் ஏறக்குறைய மயங்கும் நிலையைத் தழுவினான்.

"சா.. சார்.. எ.. என்ன சார் சொல்றீங்க? 'மேட்வில்' கம்பெனிஸோட C.E.O காத்தனூருக்கு வருகிறாரா? அதுவும் எ.. எங்க வீட்டுக்கா? சார்.. எனக்கு இப்பவே கை கால் எல்லாம் நடுங்குது சார்.. எங்களுக்குத் தெரியாமலேயே நாங்க ஏதாவது தப்புப் பண்ணிட்டோமா சார்?"

"இல்லை இளங்குமரன்.. சாருக்கு வில்லேஜஸைப் பார்க்கணும்னு ரொம்ப ஆசை.. உங்க ஊரு தான் எப்பவுமே பச்சைப் பசேல்னு பார்க்க கண்ணுக்குக் குளிர்ச்சியா இதமா இருக்குமே.. அதான் பார்க்கலாமான்னு கேட்டாரு.. அதுவும் இல்லாமல், நம்ம புதுசா துவங்கப்போற எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலை [Gas Processing Refinery plant] சம்பந்தமா ஒரு வேலையா இந்தப் பக்கம் வந்தோம்.. உங்க அப்பா தான் ஊர் தலைவருன்னும், அவர் தான் இந்த ஊர்களில் இருந்து நமக்குத் தேவையான தொழிலாளர்களை தேர்ந்தெடுக்க அனுமதிக் கொடுத்திருக்காருன்னும் சொன்னேன்.. அப்போ உங்க அப்பாவையும் பார்க்க விரும்புறதா சொல்லிட்டாரு.. அதான் அப்படியே பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்.."

பிசிரற்றக் குரலில் வெகு அழகாய் பொய் சொல்லும் தனது பி.ஏவைத் திரும்பியும் பாராது, சாலையில் பார்வையைச் செலுத்தியவாறே மெல்லிய முறுவலை தன் இதழ்களுக்கு இடையில் தவழவிட்ட முதலாளியைக் கண்டு, 'இவருக்குச் சிரிக்கக் கூடத் தெரியுமா?' என்று உலகின் எட்டாவது அதிசயமாய் அஷ்வத்தின் புன்சிரிப்பை கருதிய சத்யா வியப்பில் உயர்ந்த புருவங்களுடன், தங்களை ஊர் எல்லையில் சந்திக்குமாறு இளங்குமரனைப் பணித்தான்.

********************************************
"அப்பா! இவர் தான் மிஸ்டர் அஷ்வத் வில்ஸன்.."

இளங்குமரனின் கூற்றில், கருநீல நிற முழுக்கை சட்டையும் [Salvatore Ferragamo Tonal Gancini dark blue shirt] பேய்ஜ் [beige] நிற பேண்டும் அணிந்து தன்னெதிரே கால் மேல் கால் போட்டவனாய், வலது கர முழங்கையை நாற்காலியின் இருக்கையில் வைத்தவாறே கம்பீரமாய் இராஜதோரணையுடன் அமர்ந்திருந்த அஷ்வத்தினைக் கண்ட ஊர் தலைவர் காத்தமுத்து,

"தம்பி! உங்களைச் சந்திப்பதுல ரொம்பச் சந்தோஷம்.. " என்று துவங்கியவரின் 'தம்பி' என்ற வார்த்தை ஏனோ அஷ்வத்திற்குப் பிடிக்கவில்லை என்பதைச் சட்டென்று இலேசாகக் குனிந்து, தனது வலது கரத்தால் கேசத்தைக் கோதி பின் நிமிர்ந்தவனின் செய்கையிலேயே உணர்ந்துக் கொண்டார்கள் இளங்குமரனும் சத்யாவும்.

ஆயினும் காத்தமுத்துவையும் தடுக்க இயலாது அச்சத்துடனும் பதற்றத்துடனும் அவரின் பேச்சைக் கவனிக்கத் துவங்க, வார்த்தைக்கு வார்த்தைக்கு அவர் 'தம்பி, தம்பி' என்றழைத்தது இருவரின் வயிற்றிலும் புளியைக் கறைக்கத் துவங்கியது என்றால், அவரைத் தொடர்ந்து,

"தம்பியை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு.. ஆனால் பார்த்தா வெள்ளக்காரவக மாதிரியும் இருக்கீக.. எங்க மண்ணோட சாடையும் இருக்கு.. எந்த ஊரு தம்பி?" என்று தன் அன்னை திடுமென வினவியதில் மானசீகமாக படபடவெனத் தலையில் அடித்துக் கொண்டான் இளங்குமரன்.

பாண்டியம்மாளின் வினாவில் அவரைச் சடாரென்று திரும்பிப் பார்த்த அஷ்வத்தின் இடுங்கிய புருவங்களுக்கு இடையில் பளீரிட்ட பார்வையில் இளங்குமரனின் இதயம் தடதடவென்று துடிக்கத் துவங்க,

'ஐயோ! ஏற்கனவே அப்பா பேசுறதுல இவர் செம்ம காண்டாகியிருக்க மாதிரி தெரியுறாரு.. இதுல இந்த அம்மா வேற..' என்று எண்ணியவனின் மனம் ஏகத்திற்கும் கதிகலங்கிப் போனதில், அஷ்வத் அமர்ந்திருக்கும் இருக்கைக்குச் சில அடிகள் தள்ளி நின்றிருந்தவனின் கால்களும் வெடவென நடுங்கத் துவங்கின.

ஆயினும் சட்டென்று பதிலளிக்காது விநாடிகள் சில அமைதி காத்து, பின்,

"நீங்க சொல்றது கரெக்ட் தான்.. I am from different ethnic backgrounds.. ஹாஃப் இண்டியன், ஹாஃப் அமெரிக்கன்னும் சொல்லலாம்.." என்ற அஷ்வத்தின் பேச்சுச் சத்தியமாகப் பாண்டியம்மாளுக்குப் புரியவே இல்லை என்றால், அவனின் கூற்று ஊர் தலைவர் காத்தமுத்துவின் உள்ளத்திற்குள் சட்டென்று ஒரு வெறுப்பினைக் கொணர்ந்ததில் அது அப்பட்டமாக அவரது முகத்திலும் தென்ப்பட்டது.

"உங்க பேரைப் பார்க்கும் போதே நினைச்சேன்.. என்னடா அஷ்வத்தாமனோட பேரையும் ஏதோ கிறிஸ்தவங்களோட பேரையும் சேர்த்து வச்சு இருக்கிறாரேன்னு? அப்படின்னா நீங்க கிறிஸ்தவங்களா? சர்ச்சுக்குப் போவீங்களா அல்லது கோவிலுக்குப் போவீங்களா? இல்லை அதுலயும் பாதிக் கிறிஸ்தவர், பாதி ஹிந்துன்னு சொல்லலாமா?"

தன் கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் [Rhodium] ரோடியத்தினால் செய்யப்பட்ட சங்கிலியில் கோர்த்திருக்கும் சிலுவையின் அடையாளத்தில் (pendant] கண்களைப் பதித்தவாறேக் கேட்ட காத்தமுத்துவின் நோக்கம் தெள்ளத்தெளிவாகப் புரிந்ததில், ஏற்கனவே சாய்ந்திருந்த நாற்காலியில் நன்றாகவே சாய்ந்தவனாய்,

"ஐ டோண்ட் பிலிவ் இன் காட்.. " என்ற அஷ்வத் பாண்டியம்மாளிற்கும் புரியும் வகையில், "எனக்குக் கடவுள் மேல நம்பிக்கையில்லை.." என்று தமிழிலும் உரைக்க, அவன் கூறிய சொற்களிலும், கூறும் பொழுது தான் அமர்ந்திருந்த தோரணையைச் சாவதானமாக மாற்றி ஒய்யாரமாக நாற்காலியில் சாய்ந்து அமர்ந்ததில் காத்தமுத்துவின் நாடி நரம்பெல்லாம் ஜிவ்வெனச் சினம் பரவத் துவங்கியது என்றால்,

'ஜாதி விட்டு ஜாதிக் காதலிக்கிறாங்கன்னு தெரிஞ்சாலே இவனுங்க கொன்னுப்புடுவானுங்க, இதுல பாதி கிறிஸ்டியன், பாதி ஹிந்துவா இருக்கிறவரு அவங்க பொண்ணைக் கல்யாணம் செய்ய விரும்புறாருன்னு தெரிஞ்சா, என்னத்துக்கு ஆகுறது? இங்க ஒரு கலவரம் நடக்கப் போறது உறுதிடா டேய்..' என்று சத்யாவின் உள்ளம் காட்டுக்கூச்சல் போட ஆரம்பித்தது.

************************************************
''ஐயோ! செத்தேன்.. இவுக இப்படித் திடீர்னு வீட்டுக்கு வந்திருப்பாகன்னு யாருக் கண்டது.."

கொல்லைப்புறத்தில் அடர்ந்து பரந்து விருட்ஷமாய் வளர்ந்திருந்த வேம்பு மரத்தின் அடியில் வாய்விட்டு முணுமுணுத்தவளாய், பதற்றமும் அச்சமும் கலந்த கலங்கிய வதனத்துடன் அமர்ந்திருந்த பேதையவளின் தோற்றம், அஷ்வத்தின் இரும்பாய்க் கடினப்பட்டிருந்த இதயத்தில் இனிய சாரல் ஒன்றை சில்லென வீசச் செய்தது.

"வேர் டு வாஷ் மை ஹேண்ட்ஸ்?"

கணீரென்று தனக்கருகில் கேட்கும் கம்பீரமான ஆணவனின் குரலில் தூக்கிவாரிப் போட எழுந்தவள், அவன் தன் முன் கையை நீட்டியதைக் கண்டு ஓர் விநாடித் திகைத்தப் பின், அவனது கேள்வியின் பொருள் உணர்ந்தவளாய் மருண்ட விழிகளுடன் அவனையேப் பார்த்திருக்க,

"கை எங்க கழுவறதுன்னு கேட்டேன்.." என்று அழுத்தமான பார்வையுடன் அமர்த்தலான குரலில் கேட்டவனின் கூரிய விழிகளைக் கண்டு அரண்டுப் போனவளாய் தண்ணீர் தொட்டியை நோக்கி வேகவேகமாய் ஓடினாள், கண்ட பொழுதே காதல் என்ற அழகிய நுண்ணுணர்வை ஆண்மகனது உள்ளத்தில் அச்சாணியாய்ப் பதித்திருக்கின்றோம் என்பதை கடுகளவும் அறியாத அவனது மனம் கவர்ந்த அவனவள்.

ஏதே பூதத்தைப் பார்த்தது போல் தன்னைக் கண்டு அரண்டு அடித்து ஓடுபவளை இரண்டே எட்டுகளில் அடைந்தவன், மருந்துக்கும் புன்னகை என்பதை முகத்தில் காட்டாது இறுகிய உதடுகளுடன் மீண்டும் அவளின் முன் தன் கரத்தை நீட்டவும், கைகள் நடுநடுங்க குவளையில் நீரை முகர்ந்து எடுத்தவள் ஊற்ற,

தன்னை நிமிர்ந்துப் பார்க்கும் துணிவற்று தலை கவிழ்ந்தவளாய் தண்ணீரை ஊற்றிக் கொண்டிருப்பவளின் சிரசின் மீதே இமைதட்டாது விழிகளைப் பதித்தவாறே கைகளை அலம்பி முடித்தவன், அவள் சுதாரிக்கும் முன்னர் மாராப்பு போல் அவள் மார்பினைப் போர்த்தியிருந்த துணியை வெடுக்கென்று உறுவினான்.

"ஐயோ! எ.. என்ன பண்றீக?"

''ம்ம்ம்.. கைத் துடைக்கிறேன்.."

அவனது செய்கையில் ஏகத்திற்கும் அதிர்ந்து தன்னிச்சையாகத் திரும்பி வீட்டினைப் பார்த்தவள் மீண்டும் அவன் புறம் திரும்பி படக்கென்று தலையைக் கவிழ்ந்தவாறே,

"அ.. அதுக்கு இ.. இப்படியா போர்த்தியிருக்கிற துணியை ஒரு பொண்ணுக்கிட்ட இருந்து உருவுவாக.." என்றாள், ஒரு வேளை வீட்டினுள் அமர்ந்திருக்கும் தந்தை காத்தமுத்துவும் தமையன் இளங்குமரனும் தன்னைத் தேடி கொல்லைப்புறத்திற்கே வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பேரச்சத்துடன்.

திக்கித் திணறும் குரலில் தலைகுனிந்தவாறே கூறுபவளின் தோற்றம் அஷ்வத்தின் ஒவ்வொரு அணுவிலும் சரசரவென ஒரு புது உணர்வை பரவச் செய்ய,

அவளின் உயரத்திற்கு ஏதுவாய் தாழ்ந்தவன் அவளது வதனத்தை நோக்கிக் குனிந்தவனாய், வெகு அரிதான தனது மெல்லிய நகையை உதடுகளில் பரவவிட்டவாறே,

"பொண்ணா? அப்படி யாரும் இங்க இருக்கிற மாதிரி தெரியலையே.." என்றான் குறும்பு தெளித்திருக்கும் சாரீரத்தில்.

அவனது நக்கலான பேச்சில் திகைத்து நிமிர்ந்தவளாய், அகன்ற விழிகள் மேலும் அகல விரியப் பார்த்தவாறே பதிலேதும் சொல்லாது நிற்க, அவளின் முகம் வாடி சுணங்கியதில் அவளது எண்ணத்தைப் புரிந்துக் கொண்டவனாய்,

"ஓ, உன்னைச் சொல்றியா? போட்டுருக்கிறது ஆம்பளைங்க போடுற ஷேர்ட்.. இதுல அப்பப்ப ஸ்கேர்ட்டையும் மடிச்சுக் கட்டிக்கிற.. தலை முடியை மறைக்க துப்பட்டா வேற.. ஆம்பளையா பொம்பளையான்னு வித்தியாசமே தெரியாம இப்படி ட்ரெஸ் பண்ணினா அப்புறம் எப்படி நான் உன்னைப் பொண்ணா ஒத்துக்கிறது.. பட், ஆம்பளைக்கும் உனக்கும் ஒரே ஒரு வித்தியாசம் இருக்கு.." என்றவாறே தனது விஷமம் வழியும் கண்களைப் பெண்ணவளின் நெற்றியில் துவங்கி, அவளது அரண்ட அழகிய விழிகளுடன் ஓர் விநாடி கலக்கவிட்டு, கூரிய நாசியில் பதித்து, சிறிதாய் விரிந்திருக்கும் மெல்லிய அதரங்களை ஆசையாய் தழுவி, பின் கழுத்திற்கு கீழ் இறங்கி மார்பினில் உறைய வைக்க,

அவனுடைய பார்வை சொல்லும் அர்த்தத்தைக் கண்டு நடு நடுங்கிப் போனவள் தன்னையும் அறியாது குவளையை சடாரென்று நீர் தொட்டியில் விட்டவளாய் இரு கரங்களாலும் மார்பினை மூட, அவளின் செய்கையில் சொக்கிக் கரைந்தவனாய், மையல் கலந்த விழிகளுடன்,

"நான் அதைச் சொல்லலை.. இதோ முன்னால் தொங்க விட்டிருக்கியே இந்தப் பெரிய நீளமான சடை.. அதைத்தான் சொன்னேன்.." என்றதில் பெண்ணவளின் தேகம் கூச்சத்தில் குன்றிக் குறுகிப் போனது.

இதற்கு மேலும் அவனது கண்களைப் பார்க்க துணிவில்லாதது போல் வெடுக்கென்று வீட்டிற்குள் செல்ல அடியெடுத்தவளைக் கண்டு வீட்டின் உள்ளே தானும் ஒரு முறைப் பார்வையைச் செலுத்தியவாறே,

"அவங்க இப்ப வரமாட்டாங்க.. அதை என் பி.ஏ பார்த்துக்குவான்.. பட் உன்கூட நான் கொஞ்சம் பேசணும்.. உங்க ஊர் எல்லையில் இருக்கிற அந்த இடிஞ்ச கட்டிடத்துக்குப் பக்கத்துல வெயிட் பண்றேன்.. உடனே வா.." என்றான்.

"எ.. என்கிட்டயா? எ.. என்ன பேசணும்?"

"அங்க வா சொல்றேன்.."

"இ..இல்லை அ.. அப்பாக்குத் தெரிஞ்சா என்னைக் கொண்டே புடுவாக.."

"ம்ப்ச்.. எல்ல்ல்ல்ல்லாத்தையும் உங்க அப்பாக்கிட்டு பெர்மிஷன் வாங்கிட்டு தான் செய்வியா?"

'எல்லாத்தையும்' என்ற வார்த்தையில் அவன் கொடுத்த அழுத்தத்தின் அர்த்தத்தைப் புரிந்துக்கொள்ளும் நிலையில் கூட இல்லாதவளாய்,

"இ.. இல்லை நான் வர மாட்டேன்..." என்றவாறே மறுப்பாய் தலையசைப்பவளின் முகம் நோக்கி மேலும் குனிந்தவனாய்,

"நான் வான்னு சொன்னா நீ வர.. வரணும்.." என்று வெகு அழுத்தமாய் உத்தரவிடும் தொனியில் கூற,

அவன் மூச்சுக்காற்றுப் படும் அளவிற்குத் தன்னருகே நிற்பதே பெருந்திகிலைப் உருவாக்கியிருந்தது என்றால், அவனது குரலில் துலங்கிய கடுமையும், அவனது உஷ்ண மூச்சுக் காற்றினில் தெறித்த கோபமும், பெண்ணவளின் தொண்டைக் குழிக்குள் வார்த்தைகளை அடைக்கச் செய்ததில் பேச்சு வராது அவளது மெல்லிய உதடுகள் ஒன்றோடு ஒன்றாக ஒட்டிக் கொண்டன.

*********************************************


'வேணாம்டி போகாத.. அவர் நல்லவரா கெட்டவரான்னு தெரியாது.. எங்க இருந்து வந்தாருன்னும் தெரியாது.. எதுக்கு இப்போ கூப்பிட்டுருக்காருன்னும் தெரியாது.. இதுல அவர் உயரத்தையும் உடம்பையும் வேற பார்த்தல்ல.. ஒரே தூக்குல உன்னைத் தூக்கிட்டுப் போய் ஜீப்புக்குள்ள போட்டாருன்னா என்ன செய்வ? இந்த ராவேளையில, அதுவும் இடியும் மின்னலுமா இருக்கிற நேரங்கெட்ட இந்த நேரத்தில ஒரு மண்ணுக்கும் இங்க நடக்கிறது தெரியாது.. அப்புறம் நீ செத்தடி..'

மனம் அலறித் துடிக்க, தான் அஞ்சிய ஒன்று இன்னும் சில மணித்துளிகளில் நடக்கப் போகின்றது என்பதை உணராதவளாக, சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தவளாய் மெல்ல அந்த இடிந்தக் கட்டிடத்தை நோக்கி நடக்க, கரிய நிற போர்வையை ஆகாயம் முழுவதுமே படரச் செய்தது போல் காரிருள் நிறைந்த அந்தி சாய்ந்த அவ்வேளையில், பதட்டத்தில் மார்பில் போர்த்தியிருந்த துணியை இறுக்கப் பற்றியவளாய் மெள்ள நடந்து வருபவளின் தோற்றம் அஷ்வத்தின் இதயத்தைத் தாறுமாறாய் துடிக்கச் செய்தது.

"You are killing me with your tantalizing eye and enchanting beauty, babe!"

வாய் திறந்து இரகசியக் குரலில் கூறியவன், தான் பல தொழிற் சாம்ராஜ்யங்களைக் கட்டிக்காக்கும் டைக்கூன் என்பதையும் மறந்து தன்னவளின் அச்சம் நிறைந்திருக்கும் மருண்ட விழிகளில் மதிமயங்கிப் போனவனாய் இரசித்துக் கொண்டிருக்க, அதற்குள் கட்டிடத்தை நெருங்கியிருந்தவள் அந்த இருளிற்குள் அவனை சட்டென்று அடையாளம் கண்டறிய இயலாது தாடுமாறியவளாய் கட்டிடத்தை நெருங்க, தனக்கும் அவளுக்கும் இடையேயான இடைவெளி சில அடிகளே இருந்தும் அவளால் தன்னைக் காண இயலவில்லை என்பதைப் புரிந்துக் கொண்டவனாகச் விறுவிறுவென்று அவளை நெருங்கியவன் அவளின் கைப்பற்றிய அக்கணமே, "ஐயோ!" என்ற கூச்சலுடன் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தவளாய் தன் மேலேயே மயங்கி சரிந்ததில் தவித்து தத்தளித்துப் போனான் அஷ்வத்.

"ஏய்... ஏய்.." என்றவனாய் அவளைத் தாங்கிப் பிடிக்க, சுயநினைவற்று அவனது வலிய கரங்களில் சரிந்தவளை சிறு குழந்தையென இலகுவாய் ஏந்தியவன் திடுமென வீசிய மின்னல் ஒளியில் பார்க்க,


பூப்பொதியாய் தன் கரங்களில் கிடப்பவள், தான் பிடித்ததும் அரண்டுப் போனதில் மயக்கத்தைத் தழுவியிருக்கின்றாள் என்பதைப் புரிந்துக் கொண்டவனாக ஜீப்பை நோக்கி நடந்தவன் அதன் பின்னிருக்கையில் அமர்ந்து அவளைத் தன் மடியில் ஏந்தியவாறே அவளது கன்னத்தைத் தட்ட, அப்பொழுதும் அவள் விழித்தாள் இல்லை.

"Come on, wake up.."

மீண்டும் மீண்டும் கூறியவனாய் அவளை விழிக்க வைப்பதற்கு முயற்சி செய்ய அவள் எழும் அறிகுறியே இல்லாதுப் போக,

"சே.. இப்படியா பயந்த சுபாவமா இருப்பா?" என்று ஏசியவனாய், இருக்கையில் தலையைப் பின் சாய்த்து தன் முடியைக் கோதியவனாய் விநாடிகள் சில படுத்திருந்தவன் ஆழ இழுத்து மூச்சினைவிட்டவாறே அவளின் முகம் நோக்க, முற்றிலும் தன்னிலை இழந்தவள் போல் அவள் இருந்த நிலையையும் மீறி அஷ்வத்தின் கண்களுக்கு விருந்தாக மாறிப் போனாள் அவனவள்.

வெளிர் நீல நிறத்தில் ஆடவர்கள் அணியும் மேல் சட்டையும் கறுப்பு நிறப் பாவாடையையும் அணிந்திருந்தவள், மெழுகு பொம்மை ஒன்று அழகாய் படுத்திருப்பதைப் போல் தன் மடியில் கிடக்க, அடர்ந்த கேசத்தைச் சடையாகப் பின்னலிட்டு இருந்தாலும் மழையில் நனைந்தவாறே ஓடி வந்ததினால் கேசம் களைந்து முகத்திலும் கழுத்திலும் ஆங்காங்கு படர்ந்திருக்க, வானின் இரு மூன்றாம் பிறை நிலவுகளாய் வளைந்து இருக்கும் புருவங்களும், அகல விரிந்து தன்னை மருண்ட பார்வை பார்த்திருக்கும் கண்கள் இப்பொழுது முத்துக்களை அடக்கி வைத்திருக்கும் சிப்பிகளாய் மூடியிருக்க, கூரிய நாசியும் அதற்குக் கீழ் தீட்டிய ஓவியம் போல் வடிவெடுத்திருக்கும் இதழ்களும், புரண்டிருக்கும் கேசத்திற்கு இடையில் வெளிப் போந்திருக்கும் சங்கு கழுத்தும் ஆடவனின் சித்தத்தைச் சிதறடித்தது என்றால்.

அணிந்திருந்த வெளிர் நிறச் சட்டை மழையின் உபயோகத்தால் தொப்பலாக நனைந்திருந்ததில் பெண்ணவளின் அழகு கோபுரங்களின் வடிவங்கள் திமிறிக் கொண்டு காட்சியளிக்க,

தான் இங்கு இல்லாதிருக்கின்றேன் என்று வரிவடிவமாய் மெல்லிடை ஒளிந்திருக்க, இடைக்கு அருகில் மேல் சட்டை சற்றே விலகியிருந்ததில் கருப்பு நிறப் பாவாடைக்கு மேல் தெரிந்த ஆலிலை வயிறு வளவளத்துப் பளீரிட்டிருக்க,

அதன் மத்தியில் தெளிந்த நீரோடையின் நடுவே தோன்றும் நீர்ச்சுழியாய் நாபி அமைந்திருக்க, ஓர் இரவில் மழை நேரத்தில் மின்னல் ஒன்று ஊடுருவியது போல் தன் இதயத்தில் நுழைந்து ஆன்மாவிற்குள் பதிந்திருந்தவளின் பேரழகில் தன்னிலை இழக்கத் துவங்கினான், ஒற்றை விரல் கொண்டு தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஆட்டிப் படைக்கும் அந்தக் கட்டிளங்காளை.

"எங்கே இருந்துடி வந்த? நான் நினைச்சுக் கூடப் பார்க்கலைடி.. இப்படி ஒருத்திக்கிட்ட வந்து சிக்குவேன்னு.. உன் பேருக்கூட எனக்கு இன்னும் முழுசா தெரியாது.. ஆனால் நீ எனக்கு மட்டும் தான்னு எப்பவோ முடிவு பண்ணிட்டேன்.."

தனக்குத் தானே முனகிக் கொண்டவனாய் தன்னவளின் அழகு வதனத்தில் ஆங்காங்கு சிதறியிருக்கும் முடிக்கற்றைகளை மென்மையாய் ஒதுக்கியவாறே மையல் சூழ்ந்த இதயத்துடனும், தாபம் வழியும் கண்களுடனும் அவளையே பார்க்க,

ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்ததைப் போல் பிரக்ஞையற்றுத் துவண்டிருந்தாலும், தன்னவன் தன்னைக் கபளீகரிம் செய்துக் கொள்ளும் வேட்கையுடன் தன்னையே பார்த்திருப்பதை உள்ளுணர்வு உணர்த்தியதோ, அல்லது 'நீ எனக்கு மட்டும் தான்' என்று உரிமையுடன் அவன் கூறியதில் இதயம் தன் துடிப்பை அதிகரித்ததோ, சின்னவளின் புருவங்கள் சுருங்கின.

அவளையே இமைக்கொட்டாது பார்த்திருந்தவன் அவள் விழிப்புத் தட்டியதை உணர்ந்த விநாடியே, 'இதற்கு மேலும் என்னால் தாங்க முடியாதுடி' என்று எண்ணியவனாய் தன்னவளின் கழுத்தின் பின் தன் இடது கையைக் கொண்டு சென்றவன் அவளின் இடையை அழுந்த பற்றியவாறே தன் முகத்தை நோக்கி ஏந்த, அவனின் இறுக்கமான ஸ்பரிசத்தை உணர்ந்தவளாக மெல்லிய குரலில்,

"என் பேரு பொன்னி.. பொன்னிலா.." என்று முனகியதில், அதுவரை உணர்ந்திராத உணர்வுகளை உணர்ந்ததில், ஏதோ ஒன்று மார்புக்கூட்டினை உடைத்துக் கொண்டு தனது இதயத்தைத் தீண்டிச் சென்றதைப் போன்ற இனிமையைத் துய்த்ததில், அஷ்வத்தின் வாயில் இருந்து உதிர்த்த சொற்கள், பெண்ணவளின் தளிர் மேனியை தன்னிச்சையாக நடுங்கச் செய்தது.

'நிலா.. நீ எனக்கு மட்டுமேயான நிலாடி.."

I saw the murk hiding the blue sky, but why?
Oh the blue drowned in the darkness embarrassed as it cannot defeat her beauty!

Deep dark skies with intermittently blinking bright lightning strips.
Nevertheless defeating thine fluttering eyes is futile!

I saw the glittering stars disappeared in the gloomy ether...
After all they can't compete with thine tempting to bite nostrils!

Red sky drowning into the ocean lost the bright bed, but why?
Oh thine tantalizing lips mocked the sky with its glitter!

What did I touch? The silky kiss of drizzle softened the field?
Oh thine velvety cheeks!

Soothing sensations of the gentle breeze of spring..
Oh thine gasping for breath to get away from my tight hug!

I feel the intensity of the blazing fire in me..
Nothing but her touch!

Dare to deny me or refuse my love!
I will merge in the dark black sky,
Coalesce with you!
-JB

நீலவானவளை காரிருள் கரங்கள் பீடீக்க கண்டேன்..
நீலம் கரைந்ததா!!! அல்லவே..
காரிருளும் கருமை பூசிக் கொள்ளும் அவளின் அழகை மறைக்க தவறிய தன் தவறினை நினைத்தே..
வான் இருளில் இமைக்கும் நொடியில் தோன்றும் அம்மின்னல் ஒளியும் தோற்குமே, காரிகையின் கயல் விழி வீச்சினிலே..
செவ்வானமும் செயலிலழுந்து அடி பணிந்ததோ?
செல்ல சிணுங்கலால் உண்டான அவள் செவ்விதழிகளின் ஈர்க்கும் தோற்றம் கண்டு?
நான் தீண்டியது எதுவோ, நிலமதை முத்தமிட்ட அம்மழைதுளியையா? அல்லவே அது
நன்மங்கை தான் கொண்ட மிருதுவான கன்னமது..
என்னை உடல் தீண்டி குளிர்விப்பது, வசந்தக்கால இளந்தென்றலா? அல்லவே
என்னால் இறுக்கமாய் ஆலிங்கனம் செய்யப்பட்ட தேவதையுடைய என் உயிர் தாங்கும் மென் ஸ்வாசமன்றோ!!
என்னுள் உயிர் தீ மூட்டப்பட்ட தருணமெது?
என்னவள் தீண்டி தீ மூட்டிய அத்தருணம் தானோ!!!!
துணிவிருந்தால் என்னை மறுத்துப் பார் அல்லது என் காதலை நிராகரித்துப் பார்!
அந்நீலவானோடு காரிருளாய் அமிழ்ந்துப் போவேன்...
உன்னுடன் ஒன்றிணைந்து!

*************************************************************************

JB Books available in Amazon Kindle

https://www.amazon.in/JB-Jeline/e/B087RKB6LG - India
https://www.amazon.com/JB-Jeline/e/B087RKB6LG - USA
https://www.amazon.co.uk/JB-Jeline/e/B087RKB6LG - UK
https://www.amazon.de/JB-Jeline/e/B087RKB6LG - Europe
https://www.amazon.co.jp/JB-Jeline/e/B087RKB6LG - Japan
https://www.amazon.nl/JB-Jeline/e/B087RKB6LG - Netherlands
https://www.amazon.it/JB-Jeline/e/B087RKB6LG - Italy
https://www.amazon.es/JB-Jeline/e/B087RKB6LG - Spain
https://www.amazon.ca/JB-Jeline/e/B087RKB6LG - Canada
https://www.amazon.com.au/JB-Jeline/e/B087RKB6LG - Australia
 
Last edited:

Priyadharshini.S

Active member
Akka fantastic... Athuvum last la andha kavithai sema.... 😘😘😘😘😘😘😘😘😘.. romba pidichiruku..... Story start panrathukulla innum niraiya teaser podunga 😍😍
 

Chitra Balaji

Active member
Super Super Super mam... Chance ah illa.. Semma semma teaser.. Ashwanth namba hero semma semma geththu mam .... Ponnila mela avvallavu காதல்.... அசத்தல் ah naa teaser... Eagerly waiting for episodes
 
Akkaaa sema am speechless.....Ashwath join in my list😍😍😘.... ena oru luv wow ...ashwath manarisom right handla thalai kothurathu super ponga its jb's touch fr heroes😍😍😍....last poem awesome waiting fr luna😍😍😍
 

Nuha

Member
padichiten 😍😍 😍😍 😍😍
Asthalaaana teaser ma'am ...
Ashvath Wilson asathuraan.. enathu metvil enterprises Oda CEO kathanoor KU vararaa. .....cracked me up 😂 specialy unga heroes KU appavi PA irupanga pola .adichivitathu lam poiyaa daa sathya 😀
Caste kaga panjayath vaikravaroda ponna virumburaan ahhhh ...ithu Enna mayam epdi ivungaloda frst meeting epdi irunthurkum ..oh god ..😍😍 ..muruku meesai Oda kathamutthu patchayath koota porathu confirm.. 😂
ana namma aalu athukula Enna pannuvarooo semmaa avonada mannerism mass😎 ..nd Kai pudichathuke mayangi uluthutaa pesina Enna avaaloo
Ponnila ..nice name. Enna ponnu daaa. Apdinu vaya pilanthuten mathurai ponnu bayentha ponna iruku sema slang very beautiful she is ❤
And finally ur poem vs kavithai ...(Kavithai aah athu.... ipdi 😱 asathureengale menmaiyaana aazhamana varigal ..
neelavanoda karaiven unodu 💘)
now I'm sincerely waiting for them .. epovum hero Mela mattum than mutthella kannu pogum ipo heroin un serthu edhir pakuthu..
இவர்களோடு இனைத்து நிலவில் கரைய காத்திருக்கிறேன் JB (jenu) ma😘😘
 

JLine

Moderator
Staff member
padichiten 😍😍 😍😍 😍😍
Asthalaaana teaser ma'am ...
Ashvath Wilson asathuraan.. enathu metvil enterprises Oda CEO kathanoor KU vararaa. .....cracked me up 😂 specialy unga heroes KU appavi PA irupanga pola .adichivitathu lam poiyaa daa sathya 😀
Caste kaga panjayath vaikravaroda ponna virumburaan ahhhh ...ithu Enna mayam epdi ivungaloda frst meeting epdi irunthurkum ..oh god ..😍😍 ..muruku meesai Oda kathamutthu patchayath koota porathu confirm.. 😂
ana namma aalu athukula Enna pannuvarooo semmaa avonada mannerism mass😎 ..nd Kai pudichathuke mayangi uluthutaa pesina Enna avaaloo
Ponnila ..nice name. Enna ponnu daaa. Apdinu vaya pilanthuten mathurai ponnu bayentha ponna iruku sema slang very beautiful she is ❤
And finally ur poem vs kavithai ...(Kavithai aah athu.... ipdi 😱 asathureengale menmaiyaana aazhamana varigal ..
neelavanoda karaiven unodu 💘)
now I'm sincerely waiting for them .. epovum hero Mela mattum than mutthella kannu pogum ipo heroin un serthu edhir pakuthu..
இவர்களோடு இனைத்து நிலவில் கரைய காத்திருக்கிறேன் JB (jenu) ma😘😘
Super Super Super.. Semma semma semma (Chithra style lol) Thanks thahi, ஆனா அது என்ன என் ஹீரோவோட PA's எல்லாம் அப்பாவியா, ஐயகோ.. கதிர் எவ்வளவு பெரிய அப்பாவி, சூர்யா பாவம் சின்ன பையன்.. LOL.. அவங்க எல்லாம் குருவையும் சில நேரங்களில் மிஞ்சும் சிஷ்யர்களாகிற்றே.. அதே மாதிரி சத்யாவையும் கொண்டு வர முயற்சிக்கிறேன், பார்ப்போம் :)
 

JLine

Moderator
Staff member
Akkaaa sema am speechless.....Ashwath join in my list😍😍😘.... ena oru luv wow ...ashwath manarisom right handla thalai kothurathu super ponga its jb's touch fr heroes😍😍😍....last poem awesome waiting fr luna😍😍😍
haha, namma list persua aakitte poguthu :-D
 

Selvi

Member
Wow! JB maam, can't wait for the story till 8 May. It's amazing, where o you get such creative ideas for your stories.
 

sinthu

New member
Nice teaser but still waiting 4 kadhala Karvama and many thanks for malarinum meliyaval ud ippa athai padithu manasa athikiren :love::love::love: ur novels r great and different.
 

sinthu

New member
hi 10th ud missing pls udate pannunga iam reading continuously i read before but love to read again and again such a wonderful novel :love: :love: :love: :love: :love:
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top