JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

வானவில்

JLine

Moderator
Staff member

# வானவில்.

என் பெண்வடிவில்
உரு கொண்டதோ!

மஞ்சளிட்ட முகத்தினிலே
சிவப்பூ மூக்குத்தி மின்னிட
என் மனம்
துளையிட்டவளே..
வெண்நிற பட்டாடை
இடை மறைக்க
அங்கேயும் அழகு
இளமஞ்சள் நிறமோ..
ரதிமகளே நீயோ..
என நான் வியக்க.
உதட்டின் மேல்
ஒரு மச்சம் அதன்
கருமை நிறமே
எனை வீழ்த்தியது
என்னவளே..
நீள் கூந்தல்
முகட்டினிலே
வாடாமல்லி
ஊறு கொண்டதோ..
நெற்றி முகட்டினிலே
அருணம் குடி கொண்ட
நுதல் அழகே..
உன் நீல நயணங்களில்
எனை சிறையெடுத்தவளே
பச்சை வயல் பரப்பிலே
உன் வெண் பஞ்சு பாத
கொலுசொலி கேட்க
காத்திருக்கேன்..
இன்றும் உன்
வரவைக்காண
வானவில் அழகியே...
காத்திருந்த நிமிடமெல்லாம்
கசந்திருக்க...
உன் சிரிப்பொலி
எனை உசுப்பிவிட
என் நேத்திர இமை
விழித்திட ...
வந்தால் என் பாவை
நான் நினைத்த ஓவியமாய்!!
 

Members online

No members online now.

Latest Updates

Top