• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online

வைரத்தாரகை-12

Rudhivenkat

Well-known member
அத்தியாயம்-12:

"இப்படி ஸ்லோ பாய்ஸன் கொடுத்து இருக்காங்களான்னு இரத்தத்தில் பரிசோதனை பண்ணி பார்க்கற அளவுக்கு ரிஸ்க் இருக்குன்னா உண்மையை நேரடியா அவகிட்ட கொண்டு போலாமே நீலா?" பரிசோதனை முடிவுகளை அதனுடைய காகித உரையில் போட்டவள், வளர்மதியின் மேஜையில் அதை வைத்தாள்."பார்த்தியா நீ ஒரு அக்மார்க் படிப்ஸ் குடாக்னு நிருபிக்கிற?" தான் கேட்ட கேள்விக்கு சம்பந்தமில்லாது பதில் பேசுபவனை முறைத்தாள் ரிஷிதா.

"நான் என்ன கேட்டா நீ என்ன சொல்ற‌ நீலா? ஒரு விஷயம் யோசிச்சு பாரு.. இப்போ ரிப்போர்ட்ல ஸ்லோ பாய்ஸன் கலக்கலன்னு வந்துடுச்சு. ஆனால் ஒருவேளை நாளைக்கு யாராச்சும் பாய்சன் கொடுத்தே வைஜெயந்தியை கொன்னுட்டாங்கன்னா?" ஆதங்கத்துடன் தன் கருத்தை முன்வைத்தாள் அவள்."உன் மூளையோட ஜிபிஎஸ் அநியாயத்துக்கு தூரம் தாண்டுது. அதை கொஞ்சம் அடக்கி வை குடாக். ஆதாரத்துடன் நான் போய் சொன்னாலும் வைஜெயந்தி உடனே நம்புற ஆளா?" கேசியின் கேள்வியில் விழித்தாள் ரிஷிதா.

ஆம்! சொன்னவுடன் கேட்டுக்கொள்ளும் ஆளா அவள்?!

"ஆமா ஒத்துக்கொள்ள மாட்டா. திமிருக்குள்ள மூழ்கி முக்குளிக்கறவ ஆச்சே!" மனதின் ஆதங்கம் வெளிவந்தும் விட,

"இந்தப் பாராட்டை நானே அவகிட்ட நேரடியா சொல்லிடறேன்" கேசியின் முகத்தில் புன்னகை அரும்பியது.

"அவளை பேசுனா மட்டும் எப்படி உன் முகம் பளிச்சுன்னு ஆகுது. இத்தனைக்கும் அவ நம்மகூட பழகுன ஆள் கூட கிடையாது.

அண்ட் அவகிட்ட சொல்லனும்னா தாராளமா சொல்லிக்கோ. அதை வச்சு அவ ஏதாவது என்னை ஏடாகூடமா பேசினா, வேலு அவளை கொல்றதுக்கு முன்னாடி நான் அவளை விஷ ஊசி போட்டு கொன்னுடுவேன்" இன்னும் வைஜயந்தியின் மிடுக்கும் அதிகாரமும் மனதிற்குள் எரிச்சலை ஏற்படுத்த, வீராவேசமாக பேசியவளை கண்டு கேசி அடக்கமாட்டாது சிரித்தான்.

"ஹே.. குடாக்.. வேலு நிச்சயம் அவளை கொல்ல மாட்டான். அதுமட்டுமில்ல அவ உயரத்துக்கு நீ ஸ்டூல் வச்சு ஊசி போடறதுக்குள்ள உன்னை புடிச்சு தூர தள்ளிட்டு போயிகிட்டே இருப்பா" அவளை கேலி பேசியதை கூட நினைக்காமல் அவன் முன்னால் சொன்ன வார்த்தைகளில் யோசனைக்கு சென்று விட்டாள் ரிஷிதா.

"இப்படியெல்லாம் யோசிக்கிற மாதிரி போஸ் கொடுக்காதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்" அவளது சிந்தனையை கலைக்கும் விதத்தில் அருகிருந்த பேனாவை எடுத்து அவள் தோளில் தட்ட,

"வேலு கொல்ல மாட்டாரா? அப்ப யாரால் தான் பிரச்சனை‌ வரப்போது?" கேசியின் முகம் பார்த்து மிகவும் தீவிரமாக கேட்டவளை‌‌, ஆதுரமாக பார்த்தான் அவன்.

"என்னாலதான். நான் எதுக்கு இருக்கேன்? நாளைக்கு சாகப்போறவளை நான் கொன்னுட்டா நல்லாருக்குமா? நல்லா திடகாத்திரமா இருக்கறவளை கொன்னாதானே நாளைய வரலாற்றுக்கு நல்லாருக்கும்" அப்பட்டமான நக்கல் சுமந்த அவன் குரலில் ரிஷிதா எரிச்சல் ஆகி விட்டாள்.

"பதில் சொல்ல இஷ்டமில்லன்னா, தயவுசெய்து வெளியே போயிடு" என்றவள் எரிச்சலுடன் வெளிப்புறம் கையை நீட்டினாள்.

"இப்போதைக்கு இந்த யோசனை நமக்கு தேவையில்லை குடாக். நான் கிளம்புறேன்‌" என்றவன் விடைபெற்று கொள்ள இடையில் பத்து முறைக்கும்‌ மேல் வைஜெயந்தி இவனது அலைபேசிக்கு அழைத்து ஓய்ந்திருந்தாள்.வெள்ளை நிறத்தில் ஸ்லிட் ஸ்கர்ட்டும் அதற்கேற்ற ட்யூனிக் டாப்பும் அணிந்து நடந்து கொண்டிருந்தவளை கண்டு எரிச்சலாக வந்தது வைஜெயந்திக்கு.

கேசியின் செக்ரட்டரி மெலிசா என தெரிந்து தான் இருந்தது அவளுக்கு. தனக்குரிய நடையில் ஒயிலாக நடந்து வந்து தன்னை அறிமுகப்படுத்தி கொண்டவள்,

"மேம்.. சார் வர்ற வரைக்கும் நீங்களும் சாரும் இந்த ரூமில் தான் வெயிட் பண்ணனும்" தேனொழுகும் பேச்சென்றாலும் கண்களில் தெரிந்த அலட்சியம் நன்றாகவே புரிந்தது வைஜெயந்திக்கு.

"இது எங்களுடைய ஆஃபிஸ். எங்களுக்கு நீ எப்படி உத்தரவு போட முடியும்? வழியை விட்டு தள்ளி நில்லு" என்றவள் மீட்டிங் நடக்கும் அறைக்குள் செல்லப்போக, கை நீட்டி தடுத்தாள் மெலிசா.

"எங்க சார் ஆர்டர் மேம். அதை நாங்க மதிச்சு தான் ஆகனும்" எதிர்புறத்து அறையை‌ காண்பித்தவளை, சத்தம் போட வைஜெயந்தி வாயெடுக்க,

"குட்டிமா கொஞ்சம் அமைதியா இரு. பக்கத்து ரூம்ல தான் நம்ம போர்ட் மெம்பர்ஸ் எல்லாரும் இருக்காங்க. இப்ப சத்தம் வந்தா நமக்கு தான் அது தேவையில்லாத டேமேஜ்.நம்ம வெயிட் பண்ணலாம்" தடுத்து விட்டார் வேலு.

"டாட்..‌" அவரை ஆட்சேபனையாக பார்க்க, அமர்ந்து விட்டார் வேலு.

வேறு வழியில்லாது உடன் அமர்ந்தவள், நேரத்தை பார்க்க,கூட்டம் ஆரம்பிக்கும் நேரத்தை கடந்து கொண்டிருப்பதை உணர்ந்தவளாக, கேசிக்கு அழைப்பெடுத்தாள்.

"அவனுக்கு எதுக்குமா கால் பண்ற?" வேலு ஆட்சேபித்தார். எதிர்ப்புறம் அழைப்பு சென்று கொண்டிருந்ததே தவிர, ஏற்கப்படவில்லை.

"எனக்கு மட்டும் என்ன ஆசையா டாட்? மீட்டிங்கிற்கு சொன்ன நேரம் தாண்டிடுச்சு, அந்த டெவிலை நம்ப முடியாது. இன்னைக்கு மீட்டிங் கேன்சல் ஆகிடுச்சு, எதுக்கு இங்க தேவையில்லாம உட்கார்ந்திருக்கிங்கன்னு கேட்டாலும் கேட்பான்?" மகளின் பதில் ஏனோ தந்தைக்கு பிடிக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அவனை இவளுக்கு உணர்த்தி கொண்டிருக்கிறானா?! இவளறியாமலேயே அவனின் விசைக்கேற்ப செயல்பட்டு கொண்டிருக்கிறாளா?!

"அவன் என்ன பண்ணா நமக்கென்ன குட்டிமா? இனி அவனுக்கு கால் பண்ணாத" சற்று எரிச்சல் கலந்த குரலுடனே சொன்னார் அவர்.

"டாட்.. நான் ஒண்ணும் சின்னப்பொண்ணில்ல?" வைஜெயந்தியும் எரிந்து விழுந்தாள்.

"எல்லாத்துக்கும் பதில் பேசனுங்கற அவசியமில்லை குட்டிமா" சற்றே சலித்த குரலில்,நெற்றி வியர்வையை துடைத்துவிட்டு கொண்டே சொன்னவரை அதன்பின்பு எதிர்த்து பேசவில்லை அவள்.

குளிரூட்டப்பட்டிருந்த அந்த அறையிலும் தந்தைக்கு வியர்ப்பது விசித்திரமாக இருந்தது அவளுக்கு. ரிமோட்டை தேடியவள், அது அங்கில்லாது போக, எழுந்து தானே ஏசியின் அளவை அதிகரித்தாள்.

"மெஷினை கழட்டி வேணுன்னா கையில் பிடிச்சுக்கயேன்" அறையை திறந்து நின்று கொண்டிருந்த கேசியின் குரலில் வைஜெயந்தி திரும்பி பார்க்க, எழுந்து நின்றார் வேலு.

"உனக்கும் டைமிங்கும் விரோதமா டெவில்? தப்பான நேரத்துல தான் எப்பவும் என்ட்ரி கொடுக்குற?" வைஜெயந்தி அவனை நோக்கி நடந்து வர, குறுக்கே கைகைளை நீட்டி தடுத்தார் வேலு.

"மீட்டிங்கு டைம் ஆச்சு போகலாமா?" கேசியை பார்த்து கேட்க,

"ஓ தாராளமா மாமா" என்றவன் அவருக்கு வழிவிட, அவர் முன்னால் நடக்க, பின்னால் வந்த வைஜெயந்தியின் கைகளை பிடித்து கொண்டான் கேசி.

கேசியின் வரவை அறிந்ததும் வேகமாக அங்கு ஓடிவந்த மெலிசாவின் கண்களிலும் இது பட, "கேசி என்ன பண்ற?" முக்கிய நபர்கள் கூடியிருக்கும் இடம் என்பதால், தணிவாகவே பேசிய வைஜெயந்தியை குனிந்து அவள் முகம் பார்த்தான் அவன்.

"உண்மைய சொல்லு? நீ வைஜெயந்தியோட க்ளோனா?" அவள் முகத்தை பிடித்து நிமிர்த்தி திருப்பி பார்க்க, பட்டென்று அவன் கைகளை தட்டிவிட்டாள் அவள்.

"இடியட்..." அவன் கையே உதறி விட்டு முன்னே நடக்க முற்பட, பிடியோ இரும்பு பிடியாக இருந்தது.

"கேசி நீங்க நடந்துக்குறது நல்லா இல்லை? எம்பொண்ணு கையை விடுங்க" வேலு அவர்களை நோக்கி வர,

"டாட்.. இவன்கிட்ட நீங்க ஏன் கெஞ்சறிங்க!" கத்தினாள் வைஜெயந்தி.

"மெலிசா.." கேசியின் ஓர் அதட்டலில் வேலுவின் நடை தானாக நின்றது.

"அவருக்கு கொஞ்சம் வயசாகிடுச்சு. கையை பிடித்து மீட்டிங் ரூமிற்கு கூட்டிப்போ. இல்லை உங்களுக்கு சௌகர்யமா ஜார்ஜ உள்ள கூப்பிடட்டுமா மாமா?" என்றவனின் பேச்சில் நேருக்கு நேராகவே அவனை முறைத்து முன்னே சென்று விட, மெலிசா அவர் பின்னால் கிட்டதட்ட ஓடினாள்.

"ரொம்ப நாய்ஸியா இருந்துச்சுல்ல? இப்ப நாம ஃப்ரீயா போகலாம் வைரா" என்றவன் அவள் கைகோர்த்து கொள்ள, அவனுக்கு இணையாக தானும் நிமிர்வுடனே நிமிர்ந்தாள் அவள்.சற்று முன்பு மறுத்தவள், தன்னுடன் இணையாக நடந்து வருவதை அவன் ஆச்சரியத்துடன் பார்க்க,

"என்னை கஷ்டப்படுத்தனுங்கற முடிவ நீ எடுக்க முடியாது. நான் தான் எடுக்கனும் நீலேகேசி" என்றவளின் நேருக்கு நேரான‌ பார்வையில் ஒன்று மட்டும் புரிந்தது, வேலு பெண்புலியை வளர்த்திருக்கிறார் என்று.

இந்த பேச்சும் அவர்கள் மீட்டிங் நடத்த அறையில் நுழையும் போது நடந்திருக்க, அனைவரது பார்வையும் அவர்களது ஜோடி பொருத்தத்தில் தான்‌.

ஆனால் வேலுவின் கண்களுக்கு மட்டும் அந்த பொருத்தம் பிடிக்காமல், உறுத்திக் கொண்டு தான் இருந்தது.

'யார் முடிவு செய்ததை யார் மாற்றுவது?' அவரது மனம் பல சிந்தனைகளில் கொதித்து கொண்டிருக்க, கைகோர்த்து வந்த இருவரையும் காண முடியாமல் எழபபோனவரை பிடித்து அமர வைத்தான் ஜார்ஜ்.

அவருக்கு பாதுகாவலனாக அவரது சீட்டின் பின்னால் தான் நின்றிருந்தான்.

"வெல்.. இந்த மீட்டிங் எதுக்காகன்னு எல்லாருக்கும் தெரியும்.ரொம்ப வளவளன்னு பேசி நான் இழுக்க போறதில்லை.

என்னைப்பற்றிய விவரங்கள், கம்பெனி பற்றிய விவரங்கள் எல்லாமே உங்க முன்னாடி இருக்கற ஃபைல்ல விளக்கமாவே இருக்கு.

அண்ட் வைஜெயந்தி எனக்கு என்ன வேணும்னு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சே தான் இருக்கும்" கேசி தன் அறிமுக உரையை இப்படி வெடியாக ஆரம்பிக்க, அவனை தெரிந்தவர்கள் முகத்தில் சிரிப்பும், தெரியாதவர்களுக்கு வியப்புமாக இருந்தது.அதில் இருவர் மட்டும் அவனை வெறுப்புடன் பார்த்து கொண்டிருந்தனர், ஒருவர் வேலு மற்றொருவர் தாஸ்.

ஆம்!! பினாமியின் பெயரில் தாஸ் ஆர்.வி குரூப்ஸின் ஷேர்களை வைத்திருந்தார் அவர்.

அதனால் இந்த முக்கியமான மீட்டிங்கிற்கு அவரே‌ நேரில் வந்திருக்க, வைஜெயந்திக்கு அது அதிர்ச்சி தான்.

தந்தையை ஒரு பார்வை பார்க்க, அவரது பார்வையோ இன்னும் கேசியின் கைளைவிற்குள் சிக்கியிருந்த அவளது கைகளில் இருந்தது.

அவள் கைகளை விடுவித்துக் கொள்ள முயல, அவளது கைகளை விடுவித்தவன், அவளை நடுநாயகமாக இருந்த இருக்கையில் அமரவைத்து விட்டு, அதன் மீது கைகளை ஊன்றி இவன் நிற்க, தவறாது அது புகைப்படமாக ஜார்ஜின் புகைப்படக் கருவியில் பதிவானது.

'இவன் தன்னை கொடுமைப்படுத்துகின்றானா? கொண்டாடுகின்றானா?' வைஜெயந்தியையே தன்னை சுற்றி நடக்கும் சூழலை எண்ணி குழம்பச் செய்திருந்தான் கேசி.

"அதனால் இனி எங்க மாமனாரின் விருப்பப்படி நானும் என் மனைவியாகப் போகிற வைஜெயந்தியும் நிர்வாகத்தை முழுவதுமாக எடுத்து நடத்தப்போறோம்" இந்த அறிவிப்பு பெரிய அளவில் முதலீட்டாளர்களிடையேயும் பங்குதாரர்களிடமும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

மேலும் சிறிது நேர கலந்துரையாடல்கள், வேலுவின் சமாளிப்புகள், வைஜெயந்தியின் விளக்கங்கள் என கூட்டம் முடிவுக்கு வரும் நேரம் கிட்டதட்ட முக்கால்வாசி பங்குகள் கேசியின் பெயருக்கு ஒருமனதாக மாற்றி கொடுக்கப்பட்டது.

இத்தனை நேர பேச்சவார்த்தைக்கே தாஸின் ஆட்கள் தான் காரணம். கேள்விகளை எழுப்பும் படி அவர்தான் ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் அனைத்திற்கும் விடை நீலகேசியிடம் இருந்தது. கொளுத்திப்போட்ட திரிகள் அனைத்தும் நமத்துப்போயின.

மற்றைய அனைவரும் வருங்கால தம்பதிகளுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு கிளம்பி விட,

"ஒரு முறை எல்லா இடத்தையும் சுற்றி பார்த்துட்டு வரலாம் வைரா" வைஜெயந்தியின் கையை பிடித்து கேசி எழுப்ப,

"இது என்ன டூரிஸ்ட் ப்ளேஸா?" கேட்டவளை மிகவும் பிடித்தது.

"சிரிப்பு வரலையே வைரா" என்றவனை முறைத்தவள்,

"டாட்.." அவனை கண்டு கொள்ளாது வேலுவை அழைத்தாள்.

தாஸிடம் ஏதோ பேசிவிட்டு அவனை வழியனுப்பி வைத்து திரும்பியவர்," கிளம்பலாம் குட்டிமா" நேரடியாக விஷயத்திற்கு வந்தார் அவர்.

"நான் இன்னும் பர்மிஷன் கொடுக்கலையே? அப்பறம் நீங்க எப்படி கிளம்ப முடியும் வேலு சார்?" என்றவன் நிதானமாக சேரில் அமர்ந்து கொண்டு அவரை பார்த்து கேள்வி கேட்டான்.

தந்தையும் மகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க," என்ன சரிதானே நான் பேசறது? இனி வைஜெயந்தி என்கூட முழுநேரமும் ஆஃபிஸ்ல இருந்து வேலை பார்க்கனும். அப்பதான் உங்களுடைய இருபத்தைந்து சதவீதமாவது உங்க கைக்கு வந்து சேரும்" கேசியின் பேச்சு புதிதாக படவில்லை அவளுக்கு.

அதுமட்டுமில்லாது புத்திசாலித்தனமாக தான் பேசுகிறான்?! புது இடத்தில் அவனது ஆளுமையை ஊழியர்களிடம் எப்படி கோலோச்ச‌ முடியும்? அதற்கு அவர்களது பழைய முதலாளியும் அவனுடன் வேண்டுமே?!

"நீ இல்லைன்னாலும் என்னுடைய அதிகாரத்தை என்னால நிலைநாட்ட முடியும் வைரா" மனதில் நினைத்ததற்கு பதில் பேசியனை கண்டு நிச்சயம் இவன் ராட்சசன் தான் என்று நினைத்தாள் வைரா.‌

"நான் அதை செய்றேன் கேசி.‌ இன்னைக்கு ஒருநாள் வைஜெயந்தி ரெஸ்ட் எடுக்கட்டும்" வேலு மகளுக்கு கண்ஜாடை செய்து வெளியே சொல்லுமாறு கூற,

"ஓகே டாட். பார்த்துக்கோங்க" கிளம்பிவிட்டாள் அவளும். முதலில் அவளுக்கு இந்த சூழலில் இருந்து சிறிது ஓய்வு தேவைப்பட்டதோ உண்மை தான்.

"மொத்தம் எத்தனை பில்லர் வைரா?" வேலுவை கண்டு கொள்ளாது அவன் வைஜெயந்தியிடம் கேள்வி கேட்க, குழப்பமாக அவனை பார்த்தாள் அவள்.

"இல்லை இவ்வளவு நேரம் நீதான் ஆஃபிஸ் பில்டிங் பில்லரை எல்லாம் தாங்கி பிடிச்ச மாதிரி பேசிட்டிருக்காரே உங்க டாடி?" அவனின் கேள்வியில் நிச்சயம் அவன் தன்னை இப்போதைக்கு விடப்போவதில்லை என்று தெள்ளத்தெளிவாக புரிந்தது.

"ஜார்ஜ்.." கேசி அழைத்ததும் கையில் ஒரு கவருடன் வேகமாக வந்தான் அவன்.

அதை கையில் வாங்கியவன்," நீங்க ஜோத்பூர் போறதுக்கான விமான சீட்டு. இன்னைக்கு கடைசி கன்டெய்னர் டெலிவரி ஆகப்போகுது. அதை சரிபார்க்க, வைஜெயந்திக்கு பதிலாக நீங்க போகனும். இனி உங்களுக்கும் வைஜெயந்திக்கும், புது செகரட்டரியா என் கம்பெனியில் இருந்து செபாஸ்டியனை நியமிச்சுருக்கேன். அவன் உங்களை வரவேற்க காத்திருப்பான்" அடுத்தடுத்த ஆணைகள்!! மறுக்கமுடியாத ஆணைகளும் கூட!!

"நோ..‌டாட்.. அங்க போயிட்டு ரிட்டர்ன் ஆக நள்ளிரவு ஆயிடும். நானே போறேன்" இது முழுக்க முழுக்க அவள் கவனித்த பணியும் கூட, அதனால் தன்னை மீறி பேசிவிட்டு யோசித்தாள் வைஜெயந்தி. இவன் தான் ஒன்றை சொன்னால், அதற்கு நேர்மாறாக தானே செய்வான்?

அவள் நினைத்தபடி தான் நடந்தது. "நேரமாகுது மாமா.நீங்க புறப்பட்டலாம்" என்றவன், வைஜெயந்தியை திரும்பி பார்க்க, தந்தையை ஒரு பார்வை பார்த்து விட்டு முன்னே நடந்து விட்டாள் அவள். அந்த பார்வை சொல்லாமல் சொல்லியது, நீ இன்னும் முழு உண்மையை என்னிடம் சொல்லவில்லை என்று?!

கிட்டதட்ட இரண்டு மணி நேரங்கள் கழிந்திருந்தது, முழு பகுதியையும் இருவரும் பார்வையிட்டு முடித்து, இறுதியாக இருவரும் வந்து சேர்ந்தது வைஜெயந்தியின் அறை.

கடைசியாக அவள் இங்கு வந்தது கதிரை திட்டி பேசிய அன்று தான். அவன் நினைவும் வர, கூடவே தன்னை ஆட்டுவித்து கொண்டு அருகில் நிற்பவனின் நினைவும் சேர்ந்து வந்தது.

அவளது அறையில் நுழைந்ததும் வைஜெயந்தி தனது சீட்டில் சென்று அமர, அவள் பின்னால் விரிப்புகள் அமைப்பில் அமைக்கப்பட்டிருந்த ஜன்னலை பாதி திறந்து விட்டான் கேசி.

பின்புறம் அமைக்கப்பட்டிருந்தது கணிணி உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை. தயாரிப்பு பாகங்களின் தரத்திற்கான பரிசோதனை அங்கு நடந்து கொண்டிருக்க, வெளிக்காற்றால் ஒளிவெள்ளம் பாதி ஜன்னலின் வெளியே ஊடுருவவும், இருட்டும் பாதி பாதி கலந்து வந்து கொண்டிருக்க, அறையின் விளக்கை உயிர்ப்பிக்க போனவளை தடுத்தான் கேசி.

"இப்படியே இருக்கட்டும்" என,

"உன் வேலை முடிஞ்சது. இனி நீ கிளம்பலாம் இல்லை" அருகிருந்த தண்ணீர் குவளையை தனது தொண்டையில் சரித்தவள், சாய்விருக்கையின் குஷனில் சாய்ந்து கொண்டாள்.

அவளின் ஆசுவாசத்தில் அவனது முகத்தில் புன்னகை மலர," நான் இன்னும் வேலையை ஆரம்பிக்கவே இல்லை வைரா" என்றவனை சலிப்புடன் பார்த்தாள் அவள்.

"நீ என்னை படுத்துறதெல்லாம் ஓகே கேசி. ஆனால் ஒரு விஷயம் மட்டும் என்னால் சகிச்சுக்கவே முடியலை" பேசியவளின் முகத்தையே அவன் பார்த்து கொண்டிருக்க, அவன் கவனிப்பதை உறுதிபடுத்தி கொண்டு தொடர்ந்து பேசினாள் வைஜெயந்தி.

"சில இம்சைங்கள ஆரம்பத்துல சகிச்சுக்க ரொம்பவே கஷ்டமாயிருக்கும். ஆனால் ஒரு கட்டத்துல அந்த இம்சைங்க இல்லாம வாழ்க்கை சுவாரசியமா இருக்காது. அப்படி உன்னை ரசிக்க ஆரம்பிச்சுட்டேனோ, உன் வரவை விரும்ப ஆரம்பிச்சுட்டேனோன்னு எனக்கு ரொம்பவே எரிச்சலாயிருக்கு" சொன்னவளின் பேச்சில் இருந்த எரிச்சல், மனதில் குளிர் சாரலை வீச, முயன்று எரிச்சலை பிடித்து கொண்டு பேசியவளின் அருகே, மற்றொரு இருக்கையை இழுத்து கொண்டு அமர்ந்தான் கேசி.

இது காதலா?! உள்ளடக்கிடக்கையா? என்று புரியாமல் பேசுவது வைஜெயந்தியா?! என்று நினைத்தாலும்,

"இன்ட்ரெஸ்டிங்" மட்டுமே முணுமுணுத்தன அவனது உதடுகள். அவனது இன்ட்ரெஸ்டிங்குகளில் இந்த இன்ட்ரெஸ்டிங் ஏனோ பயத்தை தரவில்லை அவளுக்கு. அந்த அளவிற்கு கனிந்து இருந்தது அவனது குரல்.

"என்னை பிடிச்சுருக்குங்கறதை இவ்வளவு கேவலமா வேற யாராலும் சொல்ல முடியாது டயன்" என்றவனின் பேச்சில் முதன்முறையாக வைஜெயந்தியின் முகத்தில் ஆசுவாசமான புன்னகை.

"இதுக்குதான் சொல்றேன் கேசி. நீயும் நானும் நிச்சயமா நல்லவிதமா கல்யாண வாழ்க்கை வாழ முடியாது. என்னை விட்டு விலகிடு. என்மேல் உனக்கு காதலும் கிடையாது. நீ உபயோகப்படுத்தி தூக்கிப்போட நான் ஒண்ணும் வணிகப்பொருள் கிடையாது" ஆழ்ந்த பேச்சு, உணர்ந்த வார்த்தைகள், இருந்தும் ஒரு வலியுடன் சொன்னவளை கண்டு சற்றே திருப்தியாக உணர்ந்தது அவனது மனம்.

"காதல் அது சாத்தியமில்லை டயன். ஆனால் நான் சொன்னது நடந்தே தீரும்" என்றுவிட்டு எழுந்து கொண்டவனை, ஆத்திரத்துடன் கையை பிடித்து தடுத்தாள் வைஜெயந்தி.

"உன் மனசுல என்னதான் நினைச்சுட்டுருக்கே டெவில்?" கூந்தல் அலைபாய தளர்ந்த தோற்றத்திலும் அந்தி நேர நிலவின் முதற்கதிராய் நிற்பவள், தன்னை அவளே ஸ்பரிசித்து கேள்வி கேட்பது அவனது தடைகளை உடைத்தெறிய,

"என்னை கண்டால் உன் கண்கள் காதலால் மிரள வேண்டும், கன்னியின் கனிமொழி குளர வேண்டும், நீயே சர்வமும் என சரணடைய வேண்டும், உன் மெய்காதல் பித்து தலைக்கேறி நான் பிதற்ற வேண்டும்?! நடக்குமா வைஜெயந்தி?" பேசியவனின் கண்கள் முழுக்க முழுக்க காதலை மட்டுமே பிரதிபலிக்க, சித்தம் கலங்கி தான் போனது... வைஜெயந்திக்கு?!

அவளது குழப்பத்தில் சிரித்தவன்," இப்படியெல்லாம் பேசனுன்னு தானே வைரா எதிர்பார்க்குற" என, தன்னிலை மீண்டவள், ஆத்திரத்தில் அவனது பிடரி முடியை பிடித்து ஆட்ட,

"ம்ம்.. நல்லாருக்கு டயன். காலைலருந்து மண்டையெல்லாம் ஒரே குடைச்சல், நல்லா இன்னும் அழுத்து" என்றவனின் பேச்சில் அவள் கைகளை விலக்கி விட்டு தள்ளிப்போக, அடுத்த நொடி கேசியின் இறுகிய அணைப்பில் இருந்தாள் வைஜெயந்தி‌.

"உன்னை கிஸ் பண்ணிகட்டுமா வைரா" அவன் கண்ணில் இருந்தது கனிவா? காதலா?! அறிய முடியாவிட்டாலும் இம்முறை புத்திசாலித்தனமாக பதில் சொல்வதாக நினைத்து,

"பண்ணிக்கோ டெவில்" என்று அனுமதி வழங்க, யார் அதரம் என்று பிரித்தறிய முடியா வண்ணம், பிரிக்க முடியா காந்தமென அவளது இதழ்களை தன் இதழ்களோடு புதைத்திருந்தான் கேசி.

முதலில் திமிறினாலும், அவனது மூர்க்கத்தனமான வலிமையில் தொய்ந்து விழ, அணைப்பும் தளர்ந்தது.எப்பொழுதும் அவள் வேண்டாமென்றால் வேண்டுமென்ரே செய்பவன் இம்முரை அவள் முடிவை செயல்படுத்துவான் என்று கனவா கண்டாள்?

அச்சிறு நேர தளர்வில், அவனிடமிருந்து விலகியவள், வேகமாக வாயிலை நோக்கி செல்ல,

"ஒண்ணு‌ மட்டும் உண்மை வைரா. கதிரை‌ நான் கொல்லலை" என, வைஜெயந்தியின் நடை தானாக நின்றது.

திரும்பி அவனை பார்க்க," உண்மைதான் வைரா.அவன் ஒரு சிறந்த விசுவாசி. நடக்கப் போவதை முன்பே அறிந்து மெல்ல கொல்லும் விஷத்தால் உயிர் மாய்த்து கொண்டவன்" இந்த விஷயம் வைஜெயந்தியை யோசிக்க வைத்தது.

வேகமாக கேசியின் அருகில் வந்தவள்," அவனுக்கு எப்படி நடக்கப்போறது முன்னாடியே தெரியும்? அவன் உன்னுடைய ஆள் இல்லையே? ஆனால் அவனுடைய டெத் ரிப்போர்ட் அப்படி சொல்லலையே? நீயே எல்லாம் பண்ணிட்டு என்னை ஏமாத்த பார்க்குறியா?" அவனது சட்டையை பிடித்திருக்க, விடுவிக்க விரும்பவில்லை அவன்.

"நான் வேணுன்னா உனக்கு பிடிச்ச விதத்துல உண்மையை சொல்றேன். ஆனால் அதுக்கு சட்டையை பிடிச்சுருக்க உன் கையை இறக்கி என்னை கட்டிகிட்டா போதும்" அவனது விருப்பத்தில் அவள் வேகமாக அவன் சட்டையை விடுவித்தவள்,

"செத்தவனை பத்தி நான் கவலைப்பட ஒண்ணுமில்லை" தனது வேகநடையில் வெளியே சென்று விட்டாள்.தாரகை தடமிடுவாள்🖤🖤🖤....
 
Last edited:

Jovi

Member

நல்லா போகுது பேபி ஆனால் நிறைய சஸ்பென்ஸ்😪
But very interesting
2nd time படிச்சிருக்கேன் பேபி
எனக்கென்னவோ வேலு தாஸ் இவங்களை விட வேற யாரோ பெரிய வில்லன் இருக்குமோனு தோணுதே
 
asasa11
asasa11

Members online

Latest Updates

Top
document.oncontextmenu = document.body.oncontextmenu = function() {return false;}