JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஸ்ரீ அகி - தருணங்கள்

JLine

Moderator
Staff member
#தருணம்....

நான் மட்டுமே என்ற
தருணத்தை உடைத்து!!!
அவனும் என்னுடன்
வந்த தருணம்!!
ஆண்வாசம் என்
வாழ்கையில் வீசிய
தருணம்!!
நட்பு எனும் படகில்
பயணித்த தருணம்!!
இனம்புரியாத எதோ ஒரு
அலை எனை தாக்கிய தருணம்!!
நட்பு காதலாக மாற
துடித்த தருணம்!!
இருவர் மனதிலும் எதிர்கால
நிலை குறித்து கேள்வி
எழுந்த தருணம்!!
தத்துவங்களும் தார்பரியமும்
குழப்பிய தருணம்!!
இது நடக்குமா?
உண்மைதானா?
என்ன‌ செய்ய ?

இந்த தருணத்திற்கு தான்
என் மீது கொள்ளை
பிரியம் ஆயிற்றே!!!
கொன்றே விட்டது
துளிர்விட்ட காதலையும்!!
விருட்சமாய் வளர்ந்த நட்டையும்!!
இருப்பினும் அவனுடனான
நினைவுகளின் தருணம்
நீங்காத தருணமாய்
என் நெஞ்சோரத்தில்!!
நாகரிகமாய் நடந்து கொள்ள
இருவரும் முடிவெடுத்த தருணம்!!
மீண்டும் நட்பை புதுப்பிக்க
முயற்சிகள் கொண்ட தருணம்!!
நட்பில் காதல் காற்று வீச
அதனை சுயமே அறியா
வண்ணம் அழிக்க நினைத்த
தருணம்!!
முழு உரிமை என் மீது
அவன் எடுக்க ஆசைக்
கொண்ட தருணம்!!
அவன் உணர்வுகள் அனைத்தும்
எனக்கே சொந்தமாக்கிக்
கொள்ள கற்பனைகள்
செய்த தருணம்!!
விட்டு விலகவும் முடியாமல்
எட்டி நிற்கவும் முடியாமல்
சிறுஇடுக்கில் நடுவிரல்
சிக்கி துடித்த தருணம்!!
நட்பு எனும் கயிற்றை
காதல் கைகள் கொண்டு
இருபுறமும் இருக்கி
பிடிக்க கயிற்றுக்கு
மூச்சு திணறிய தருணமாய்
மாறியது இத்தருணம்!!!
என்ன செய்ய???
வெறும் அன்பை மட்டுமே
அடிப்படையாய் கொண்டு
அஸ்திவாரம் போட்ட
தருணமாயிற்றே!!
என்ன செய்ய???
மறக்க முடியுமா??அல்ல
மரணிக்கதான் முடியுமா??
தருணமே நீயே சொல்...
எனக்கு எந்த தருணத்தை தரபோகிறாய்??

View attachment 289
 

Praveen

Member
உரியைான தருணம் அது
காதலா? நட்பா?
அதுனலும் எனக்கு சரி
 

Shri Aki

New member
இரண்டுமே இல்லாத தருணமாக இருந்தால்?.....

நன்றி
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top