JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

1-anamikavaagiya naan ...!!

saaral

Well-known member
அனாமிகாவாகிய நான் ....!!!

அனாமிகா -1



தாவணிப்பெண்கள் சுற்றி வர , இளவட்டங்கள் பார்வைகள் தடம் புரள , வாண்டுகள் இங்கும் அங்கும் ஓடி விளையாட அந்த கல்யாண வீடே கலை கட்டி இருந்தது .



திருச்சியில் இருக்கும் ஒரு பெரிய வீடு அது . பெண் வீட்டார் அனைவரும் மிகவும் பரபரப்பாக வேலை செய்துக் கொண்டிருந்தனர் . சிவா மற்றும் சதீஷ் தங்களின் சித்தி பெண் திருமணத்தில் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தனர் .



"என்ன சதீஷ் அடுத்து உன் கல்யாணம் தான ??" உறவில் ஒருவர் கேட்க அவன் சொல்லற்று நின்றான் .



அவனின் மனதிலோ அந்த முகம் மின்னி மறைந்தது . எதிரில் இருப்பவர் தன்னை உற்று நோக்குவதை கண்டு மென் புன்னகை புரிந்தான் .



தன் பெரியம்மா மகனும் ,தோழனுமாகிய சதீஷின் நிலை அறிந்த சிவா அவனின் தோல் தொட்டு கவனத்தை தன் பக்கம் திருப்பினான் .



சிவா , சதீஷ் மற்றும் அன்றைய மணப்பெண் இலக்கியாவின் அன்னையர்கள் மூவரும் சகோதரிகள் . ஜெயா சதீஷின் அன்னை மூத்தவர் . ஜெயாவின் கணவர் தொழில் செய்கிறேன் பேர்வழி என்று இருந்த அனைத்தையும் தொலைத்து கடன் , பணம் என்று ஓடி ஓய்ந்தவர் .

ஜெயா-லக்ஷ்மணன் தம்பதியருக்கு சதீஷ் மற்றும் ராஜேஷ் இரு மகன்கள் .



அடுத்ததாக இருப்பவர் லலிதா அவரின் கணவர் கணக்கராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர் . லலிதா-சௌந்தர் தம்பதியருக்கு சிவா என்ற பெரிய மகனும் , ஸ்வர்ண என்ற மகளும் இருந்தனர் .



இப்பொழுது மணப்பெண்ணாக இருக்கும் இலக்கியாவிற்கு ஒரு தங்கை பெயர் லோகேஸ்வரி . இவர்களின் அன்னை சுப்புலக்ஷ்மி இவரின் கணவர் அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர் பெயர் சுரேஷ் .



ஜெயா மற்றும் லலிதா இருவரும் ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் . மகன்களின் வருமானம் வந்து வீட்டை நிலை நிறுத்தவும் ஓய்வு பெற்று வீட்டில் இருக்கின்றனர் . சுப்புலட்சுமியின் வாழ்கை முறை மீது இரு அக்காவிற்கும் சற்றே பொறாமை இருந்தாலும் மூவரில் அவராவது நன்றாக இருக்கிறாரே என்று தங்களையே தேற்றி கொள்வர் .



சிவாவின் தங்கை ஸ்வர்ணாவிற்கு இரு மாதம் முன்பு தான் திருமணம் முடிந்தது . அவள் இப்பொழுது லண்டனில் இருக்கிறாள் . சிவாவும் பெங்களூரில் மென்பொறியாளனாக இருக்கிறான் , ராஜேஷும் அதே நிறுவனத்தில் சென்னையில் வேலை செய்கிறான் .



இதில் சதீஷ் மட்டுமே தந்தை வாங்கிய கடனை அடைக்கவென்று சிங்கப்பூர் சென்று ஒரு வங்கியில் வேலை செய்கிறான் . வருடம் இருபது நாள் இந்தியா வருபவன் கை நிறைய சம்பாத்தியத்துடன் இருக்கிறான் . என்ன ஒன்று அவனிற்கு திருமண நேரம் இன்னும் கூடி வரவில்லை . வீட்டில் முப்பது வயதில் மூத்தவன் இருக்க அடுத்து சிவாவிற்கு பார்க்க அனைவரும் தயங்கினர் . சிவாவே முதலில் சதீஷிற்கு முடியுங்கள் என்று விட்டான் .



மூன்று சகோதரிகளின் அன்னை மற்றும் தந்தை மிகவும் கடுமையாக உழைத்து தங்களின் செல்ல மகள்களுக்கு சேர்த்த சொத்து என்பதோ அவர்களின் படிப்பு . மூவரும் அந்த காலத்திலே நன்கு படித்தவர்கள் . என்பது வயதிலும் அவர்களின் தந்தை சொக்கநாதன் தன் மனைவி பாக்கியத்துடன் தனியே வசிக்கிறார் .



அவர்களின் தோட்டத்தை குத்தகைக்கு விட்டுருக்கும் வருமானமே அவர்களின் ஜீவனாம்சம் . மூன்றும் பெண்பிள்ளைகள் என்றவுடன் பாக்கியம் கணவனின் வருமானத்தில் முன்பே இந்த சொத்தை வாங்கி போட்டார் . ஒரு புரா கூண்டு போல கே கே நகரில் வீடு ஊருக்கு ஒதுக்குப்புறமா ஒரு தோட்டம் . மகள்களை நம்பி இருக்க கூடாது என்று சரியாக திட்டமிட்டு வாழ்கிறார் .



பேரப்பிள்ளைகளுக்கு அவர்களின் அன்னை வழி தாத்தா பாட்டி இருவரும் என்றால் அவ்ளோ பிரியம் .



ஜெயாவின் மகன் சதீஷிற்கு நல்லவிதமாக திருமணம் முடிக்க வேண்டும் என்றே முயல்கின்றனர் . ஆனால் முடியவில்லை . நேரம் கைகூடி வரவில்லையா இல்லை ஜெயா அதை வர விடவில்லையா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம் .



சதீஷிற்கு இரு வருடம் முன்பு திருமணம் முடித்தே ஆகவேண்டும் என்று ஜோசியர் கூறிய காரணத்தினால் வேகமாக பெண் பார்த்தனர் , திருமண தேதியும் குறித்தனர் . ஆனால் ஜெயா மற்றும் லக்ஷ்மணின் பேராசையால் நின்றுவிட்டது .



சொக்கநாதன் மற்றும் பாக்கியம் அதற்கு மிகவும் வருந்தினார்கள் . "ஜெயா நல்ல குடும்பம் , அருமையான பெண் ஏன்மா இப்படி கல்யாணத்தை நிறுத்துறீங்க ?" அற்றமாட்டாமல் கேட்டுவிட்டார் பாக்கியம் .



"அம்மா உங்க மாப்பிள்ளை என்ன பெருசா கேட்டுட்டார் பௌவுன் கொஞ்சம் அதிகமா போடுங்க வைர செட் கேட்டார் அப்பறம் கொஞ்சமா ஏழு லக்ஷம் ரொக்கம் கேட்டார் , அந்த ரொக்கத்திலயும் மூன்றரை லக்ஷம் பெண் பெயர்ல டெபாசிட் போடறோம் சொல்லிட்டோம் அனாலும் அவங்க வீட்ல இருக்க அந்த பாட்டி ஒத்துக்கவே இல்லை அதான் விட்டுட்டோம் "



"ஆனாலும் இது தப்பு ஜெயா , நம்ம வீட்ல உங்களை எல்லாம் கரை சேர்க்க நாங்க எவ்ளோ கஷ்ட பட்டிருப்போம் " பெண் பிள்ளைகளை கரை சேர்ப்பது என்பது எவ்ளோ பெரிய கடமை என்று உணர்ந்து கூறினார் அவர் .



"அம்மா சும்மா இருங்க என் மகன் இருக்க இருப்புக்கு வாங்குற சம்பளத்துக்கு இத விட அதிகம் போட்டு செய்யவே ஆள் இருக்கு " இறுமாப்புடன் சொல்லி சென்றவர் இன்று வரை தேடுகிறார் பெண் தான் அமையவில்லை .



ஜெயா மற்றும் லக்ஷ்மணன் சொந்தங்களில் பலருடன் சண்டை போட்டு இருக்கிறார்கள் அதை கேள்வி பட்டு பெண் கொடுக்க தயங்கினர் , இல்லையேல் சொத்து பத்து இருக்கிறதா என்று விசாரித்தனர் , பூர்விக வீடு என்று பழைய வீடு ஒன்று உண்டு அதை தவிர்த்து அவர்களிடம் ஒன்றும் இல்லை அந்த பூர்விக வீட்டையும் கடனில் இருந்து மகன் இப்பொழுதுதான் மீட்டு எடுத்தான் . மகனின் வருமானத்தில் அனைத்தையும் மீட்டவர்கள் அதன் பிறகு ஒரு பைசா சேர்க்கவில்லை .



புதிதாக கையில் பணம் பார்ப்பதால் எதற்கு செலவு செய்கிறோம் என்றே யோசியாமல் அதிகமாக செலவு செய்தனர் .



ஒருகாலத்தில் அன்னை கஷ்டப்பட்டவர் என்று உணர்ந்த சதீஷ் மற்றும் ராஜேஷ் தங்களின் வருமானத்தை ஏன் என்றே கேக்காமல் அன்னையிடம் கொடுத்துவிடுவார்கள் . கணக்கும் கேட்டது இல்லை .



இப்படியே சதீஷிற்கு பெண் அமையாமல் தட்டி போய்க்கொண்டே இருந்தது .



இன்று இலக்கியாவின் திருமண நிச்சயம் ஆகையால் அனைவரும் பாரதி நகரில் இருக்கும் சுப்புலக்ஷ்மி மற்றும் சுரேஷின் இல்லத்தில் கூடி இருந்தனர் .



"சுப்பு எத்தனை மணிக்கு மண்டபத்துக்கு போகணும் ?" என்று வினவினார் ஜெயா .



"நிச்சயம் காலைல முடிஞ்சிடும் அக்கா , சாயங்காலம் வரவேற்பு ஒரு நாலு மணிக்கு மேல கிளம்பினா சரியாய் இருக்கும் . இலக்கியாவும் ரெடி ஆக டைம் இருக்கும் " சுப்புலக்ஷ்மி தமக்கைக்கு பதில் கூறிக்கொண்டே பொருட்களை எடுத்து வைத்தார் .



"ஆமா சுப்பு பணம் இருபது லக்ஷம் ,கார் நகைன்னு எல்லாத்தையும் நீ இலக்கியாவுக்கு போட்டுட்டா லோகுக்கு என்ன பன்னுவ இல்ல உங்க கடைசி காலத்துக்கு என்ன பண்ணுவ ?" இதை கேட்டது லலிதா .



"அக்கா நானும் பேங்க்ல வேல பார்த்தேன் அவரும் பேங்க் தான் எங்க வருமானதுல அம்மா மாதிரி அளவா சேர்த்து வச்சுக்கிட்டோம் . இலக்கியா , லோகு ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல இருந்தே சேர்த்தோம் இன்னும் லோகுக்கு கல்யாணம் செய்ய நாலு வருஷமாவுது ஆகும் எங்களுக்கும் ரிடியர்மெண்ட் ஆய்டும் பென்ஷன் வரும் அதுவே போதுமானதாக இருக்கும் அக்கா " கள்ளம் கபடம் இல்லாமல் கூறினார் .



"ஆமா உனக்கென்னமா நல்ல வேலைல இருக்க கணவர் எங்களுக்கு அப்படியா ஏதோ எங்க பசங்க வளந்தப்புரம் தான் கைய கடிக்காம இருக்கு " பொருமினார் ஜெயா .



"அக்கா சதீஷ் வேலைக்கு போய் பல வருஷம் ஆச்சு , அத்தான் வாங்கின கடன் எல்லாம் அடைச்சாச்சு இன்னும் ஏன் வீடு வாங்காம இருக்கீங்க சேர்த்து வச்சு வாங்கினா வாங்கலாம் அக்கா . இப்ப ராஜேஷும் வேலைக்கு போறான் "



"எங்க சுப்பு வாழ்ந்து கெட்ட ஊர்ல நான் வாழ்ந்து காட்ரேன்னு இந்த மனுஷன் பூர்விக வீட்டை இடிச்சு கட்டிட்டார் , பத்தாதுக்கு யாராச்சும் உதவின்னு கேட்டா தூக்கி கொடுக்க சொல்றார் ....இவங்க எல்லாம் என்கிட்ட காசு இல்லாதப்ப என்ன பேச்சு பேசினாங்கனு சொல்லிக்குவார் ..."உண்மையில் ஜெயாவிற்கு ஊரின் முன் நான் இப்பொழுது கொடுக்கும் இடத்தில இருக்கிறேன் என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பாக மகன்களின் வருமானத்தில் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் எவரேனும் கேட்டால் கணவரை கை காட்டுவது .



லக்ஷ்மணனிற்கும் ஊரில் மரியாதை கூடியதால் இப்படி தூக்கி கொடுப்பது என்பது பெருமையாக தான் பட்டது .



"அக்கா சொல்றேன்னு கோச்சுக்காத தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் .... பசங்க கஷ்ட பட்டு உழைக்கிறது தூக்கி கொடுக்க இல்ல ...நம்ம சதீஷுக்கு என்ன குறை நல்ல சம்பாதிக்கிறான் பார்க்க லட்சணமா இருக்கான் ஆனால் சொந்தமா வேற வீடு சேமிப்புனு இல்லைனு வரன் தகயலை .....கௌரவத்திற்காக நீங்க இப்ப செய்ற செலவு பசங்க வாழ்க்கைல விடியும் முதல ரெண்டு பேர் சம்பாத்தியத்துல ஒரு வீடு கட்டுங்க " தனக்கு தெரிந்ததை பொறுமையாக எடுத்து கூறினார் சுப்பு .



"ஹ்ம்ம் பார்ப்போம் " என்றார் ஜெயா . ஜெயா மற்றும் லக்ஷ்மணனிற்கு இனி எது வந்தாலும் வர பெண் கொண்டு வர வேண்டும் என்ற ஆணவம் .



காலை நிச்சியதார்தம் நன்றாக முடிந்தது . மாப்பிள்ளை வீட்டார் பெரும் பணக்காரர்கள் அதை கண்ட ஜெயாவிற்கு தனக்கு வரும் மருமகள்களும் இவ்வாறு இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதே தான் லக்ஷ்மணனிற்கும் .



ஆனால் இவர்கள் ஒன்றை மறந்தனர் அடுத்தவர் கொடுப்பதை வாங்கி வைத்துக்கொள்ள எண்ணுபவர்கள் நாம் என்ன வைத்திருக்கிறோம் என்பதை யோசிக்கவில்லை . செல்வந்தர் வீட்டிற்கு செல்லும் மகள் நன்றாக வாழ வேண்டும் என்றே சுப்பு தம்பதியர் அதிகமாக செய்து கல்யாணம் செய்து வைக்கிறார்கள் . இத்தனைக்கும் மாப்பிள்ளை வீட்டில் எதுவும் கேட்கவில்லை .



............................................................



மாலை மண்டபத்தில் வரவேற்பு தடபுடலாக நடந்துகொண்டிருந்தது . மாப்பிள்ளை வீட்டார் அமெரிக்காவில் வாசம் செய்பவர்கள் , அவர்களின் இளைய மகன் மட்டும் பெங்களூரில் ஒரு பள்ளி நடத்திக்கொண்டிருக்கிறான் .



ஜெயாவின் மனதில் தங்களின் மகனிற்கு அனைத்தும் இதுபோல் பெரிதாக நடக்க வேண்டும் என்ற ஆசை பேராசையாக மாறியது . அவர் கவனிக்க தவறிய ஒன்று திருமணத்தில் பாதி செலவை மாப்பிள்ளை வீட்டார் ஏற்றதையும் மேலும் இலக்கியா கொண்டுவருபவை எதையும் அவர்கள் தொடப்போவது இல்லை என்பதையும் அவர் கருத்தில் கொள்ளவில்லை .



உள்ளே வரவேற்பு நடந்து கொண்டிருக்க சதீஷ்,சிவா மற்றும் ராஜேஷ் வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர் .



மாப்பிள்ளையின் தம்பி ஆதி அவனின் பள்ளி கல்லூரி தோழமைகளோடு சற்று தள்ளி நின்று அரட்டை அடித்துக்கொண்டிருந்தான் . சட்டென்று நண்பர்களிடையே பெரும் கூச்சல் .



மாப்பிள்ளையின் அப்பா வேகமாக வெளியே வந்தார் , சதீஷ் எழுந்து சென்று "மாமா என்னாச்சு எதாவது வேணுமா ?" பொறுப்பாக கேட்டான் .



"இல்லை தம்பி என் ஒன்று விட்ட அண்ணன் மகள் வந்திருக்கா , அவ ஆதியோட படிச்சவ ....அவளை கூட்டிட்டு போகதான் வந்தேன் " புன்னகையுடன் ஆதியும் அவன் நண்பர்கள் நிற்கும் இடம் பார்த்துக்கொண்டே கூறினார் .



"ஓஹ் அதான் அங்க சத்தமா ?" சதீஷும் புன்னகையுடன் கேட்டான் .



"ஹ்ம்ம் ஆமாம் நல்ல கலகலப்பான பெண் , கொஞ்ச நாளா அவளை யாருமே பார்க்கலயா அதான் ஓட்டித் தள்றாங்க, என்னை காப்பாத்துங்க சித்தப்பான்னு மெசேஜ் பண்ணினா ... அதிகிட்ட இருந்து தப்பிக்க எப்பயும் என்கிட்ட தான் வருவா " அதே புன்னகை அவர் முகத்தில் . சுந்தரம் ,ரேகா தம்பதியருக்கு அபிஷேக் ,ஆதி இரு மகன்கள் . அபிஷேக் மற்றும் இலக்கியாவின் திருமணம் தான் நடந்து கொண்டிருக்கிறது .



சற்றே அங்கு கூச்சல் அடங்க ஆதி ஒரு பெண்ணை விரிந்த புன்னகையுடன் அழைத்துக்கொண்டு தந்தையின் அருகே வந்துகொண்டிருந்தான் .



சிவாவுடன் பேசிக்கொண்டிருந்த சதீஷ் ஆதி வருவதை பார்த்தான் . தூரத்தில் வரும்பொழுது அவன் முகத்தில் இருந்த புன்னகை ஆதி அருகே வர வர ஸ்தம்பித்தது .



சதீஷின் பார்வை செல்லும் திசையை கண்ட சிவாவும் அங்கே பார்த்தான் . பார்த்தவன் உறைந்தான் .



"ஹே அனாமிகா இப்பதான் வர நேரமா ? உன் சித்தி தேடிட்டே இருந்தா " சுந்தரம் ஆதியுடன் வரும் பெண்ணை பார்த்து கேட்டார் .



"ஐயோ சித்தப்பா உங்க மகன் அங்க எல்லாத்தையும் போட்டது போட்டபடி வந்துட்டான் .....எல்லாத்தையும் ஒழுங்கு பண்ணிட்டு வரதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு . இங்க வந்தா எல்லாருமா கலாய்க்கிறாங்க " சொல்லிக்கொண்டே திரும்பிய அனாமிகா சற்று இடைவெளி விட்டு நின்று தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் சதீஷை புருவம் சுருக்கி பார்த்தாள் .



"இவங்க அண்ணியோட பெரியம்மா பசங்க , இவர் சதீஷ் சிங்கப்பூர்ல ஒர்க் பன்றார் . இவர் சிவா அண்ட் அது ராஜேஷ் ரெண்டு பேரும் சாப்ட்வேர் " அவளின் பார்வை கண்டு ஆதி பொதுவாக அறிமுகம் செய்து வைத்தான் .



"இவங்க ?" என்று ராஜேஷ் இழுத்தான் அவனிற்கு எதுவோ புரிவது போல் இருந்தது .



"இவ என்னோட ஆறுமாத தங்கை , ப்ரண்ட் சொல்லலாம் ஒன்னாதான் படிச்சோம் பெயர் அனாமிகா " என்றான் ஆதி .

அனாமிகாவும் பொதுவாக புன்னகை சிந்தி அவ்விடம் விட்டு நகர்ந்தாள் .



"அண்ணா இவங்க?" என்று ராஜேஷ் இழுக்கையில் 'ஆம் ' என்று தலை ஆட்டினான் சிவா .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top