JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 1

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை

அத்தியாயம் - 1

"If you do not like a rule, just follow it.. Reach on the top and change the rule."

--Adolf Hitler
************************************************************
"The quality of decision is like the well-timed swoop of a falcon which enables it to strike and destroy its victim.”

-- Sun Tzu, The Art of War

தி லீலா பேலஸ் ஹோட்டல்... புது டெல்லி...

K.A.V Group of Industries-ன் அதிபர்கள் அபிமன்யு கிருஷ்ணா, ஆதித்ய வர்தன், அபிஷேக் வர்தன் மூவரும் கான்ஃபிடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரியின் [CII] சிறந்த விருதுகள் பெற்ற தொழிலதிபர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த விழாவில் சந்தித்த அதே ஹோட்டல்.

பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கும், ராஷ்ட்ரபதி பவனுக்கும் அருகில் அமைந்திருக்கும், பெரு நிறுவன உயர் அதிகாரிகளும், வெளிநாட்டு வணிகப் பயணிகளும், மற்றும் பிரபலங்களும் தங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கொள்கை வகுப்பாளர்கள், இருநூறுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச தொழில் அதிபர்கள், அரசியல் மற்றும் பொருளாதார விமர்சகர்கள் ஆகியோரும் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடும் மாநாடு, இந்தியாவின் தொழிற்சங்க மாநாடு.

இந்த வருடம் இம்மாநாட்டைப் புதுத் தில்லியில் நடத்துவது என்று அதன் வைஸ் ப்ரெஸிடெண்டும், தலைவர்களும், நிர்வாக இயக்குனர்களும் முடிவு செய்திருக்க, மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்கு என்றும், எதிர்கால இந்தியாவின் வளமைக்கான வழிகளையும் நாட்டின் மேம்பாட்டிற்கான முறைகளையும் பற்றிப் பேசுவதற்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்,

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாயிகளின் திறனை வளர்ப்பதன் மூலம் வறுமை ஒழிப்புக்கு உதவிகள் செய்வதையும், இயற்கை வளங்களை நீட்டிக்கச் செய்வதையும் தனது வாழ்வின் முதன்மையான குறிக்கோளாகக் கொண்டிருக்கும், வேளாண்மை துறை மத்திய அமைச்சர் பார்த்திபன்.

புது டெல்லி.

மாலை மணி ஐந்து.

கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்க, 'தி லீலா பேலஸ்' ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் அறை முழுவதிலும் விலை உயர்ந்த கோட் சூட்கள், ப்ளேஸர்கள், அணிந்த ஆண்களும், இந்திய பாரம்பரிய உடைகள் மற்றும் மேற்கத்திய பாணி உடைகள் அணிந்திருந்த பெண்களும் சூழ்ந்திருக்க, பல ஆயிரம் சதுரடிகள் கொண்ட அந்த அரங்கமே, தொழிலதிபர்களாலும், மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாலும் [CEO], பன்னாட்டு நிறுவனங்களின் சேர்மன்கள், நிர்வாக இயக்குனர்கள் மற்றும் பிரதிநிதிகளாலும் நிறைந்து வழிந்தது

அனைவரும் அவரவரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருக்க, நெடு நேரம் கிசுகிசுப்பான குரல்களிலும், சிறிதே உரத்த சாரீரங்களிலும், பெண்களுக்குள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த கலகலப்பான உரையாடல்களிலும் அந்த அரங்கம் முழுவதிலும் மூழ்கியிருக்க, ஒரே நேரத்தில் பலருடைய முகங்களும் அரங்கத்தின் வாயிலை நோக்கி சரேலெனத் திரும்பின.

பளீர் வெள்ளை ஷர்ட்டும், கரு நீல நிற கில்டன் [Kilton] ப்ராண்ட் கோட் சூட்டில், கடுமை கலந்த கவர்ச்சியுடன் சிந்தனை ரேகையும் படிந்திருக்கும் முகத்துடன் அபிமன்யு கிருஷ்ணாவும், அவனுக்கு வலது புறமும் இடது புறமுமாக, வெள்ளை நிற டீ ஷர்ட்டும் அதன் மேல் கருமை நிற ஜியோர்ஜியோ அர்மானி ப்ராண்ட் ப்ளேசரும் [giorgio armani blazer] அதற்கு ஏற்றார் போல் கருப்பு நிற பேண்டும் அணிந்து, ஆளுமையும் கவர்ச்சியும் கலந்த கம்பீரமான வதனத்தில் அழகிய புன்னகை படர்ந்திருக்க ஆதித்ய வர்தனும், அபிஷேக் வர்தனும் உள்ளே நுழைந்தனர்.

அரங்கம் முழுவதிலும் வழிந்து கொண்டிருந்த கூட்டத்தினரின் பார்வை தங்கள் மூவரின் மீது தான் படர்ந்திருக்கின்றது என்பதை உணர்ந்திருந்தாலும், தங்களைப் பார்த்துப் புன்னகைப்பவர்களை மட்டும் கண்டு மெல்லிய முறுவல் ஒன்றை உதடுகளில் பூக்கச் செய்த மூவரும், முதல் வரிசையில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர், கால் மேல் கால் போட்டு வெகு ஸ்டைலாக.

பிரதான வேட்டைக்காரர்களாகிய இவர்கள் மூவரும் தனித்து இருக்கும் பொழுதே தொழில் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இருப்போரை அரளச் செய்திருந்தவர்கள்.

இப்பொழுது நாங்கள் எங்கள் இரையை ஒன்றாகவே வேட்டையாடுவோம் என்பது போல் அருகருகே அமர்ந்திருப்பதைக் கண்டவர்களுக்கு நெஞ்சுக் கூடு படபடக்கத் துவங்கியது என்றால், அவர்கள் அறைக்குள் நுழைந்த விநாடியில் இருந்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு இளம் தொழில் அதிபனுக்கு உடல் முழுவதிலும் பரவி கொண்டிருந்த இரத்தத்தின் ஓட்டம் ஆக்ரோஷத்தில் வெகுவாய் உயர்ந்திருந்தது.

"இவங்க K.A.V க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸோட மூணு எம்.டிஸ் அபிஷேக் வர்தன், அபிமன்யு கிருஷ்ணா, ஆதித்ய வர்தன், ரைட்?"

வெகு கம்பீரமான குரலில் அழுத்தமான தொனியுடன் கூறிய அந்த இருபத்தி எட்டு வயது இளைஞனின் பள்ளிப்படிப்பு அவனது அன்னையின் பிறப்பிடமான சென்னையில்.

கல்லூரி வாழ்க்கை அமெரிக்காவில்.

க்யூஎஸ் குளோபல் எம்பிஏ பட்டியலில் உலகின் சிறந்த வணிகக் கல்லூரிக்கான மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கும் The Wharton School Of Business -ல் வனிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு.

வளர்ந்ததும் தற்பொழுது வாழ்வதும் தந்தையின் பிறப்பிடமான மும்பையில்.

தொழில் சாம்ராஜ்யம் ஏறக்குறைய ஏழு கண்டங்களிலும் பரவி இருக்கின்றது என்று கூறலாம்.

அவன் வருண் தேஸாய்.

வெளிர் க்ரே நிற உள் ஷர்ட்டும், அதற்கு மேல் அடர்ந்த சார்க்கோல் க்ரே நிற ப்ரியோனி சூட்டையும் அணிந்தவனாய் [brioni charcoal grey suit] இருக்கையில் அமர்ந்திருந்த அவனது ஒய்யாரத் தோரணையும், புன்னகை என்பதே இல்லாத முகத்தில் ஈட்டி போல் துளைத்தெடுக்கும் பார்வையுடன் K.A.V க்ரூப் அதிபர்களைப் பார்த்த தீட்சண்யமான தோற்றமும் விளக்கியது, இவனது நான்கடிகள் தூரத்தில் அரிமாக்ககள் பல நின்றிருந்தாலும் சிறிதளவும் அச்சம் என்பதே இல்லாது அவற்றை எதிர்கொள்ளும் அபார துணிச்சல் பெற்றவன் இவன் என்று.

"யெஸ், இவங்க தான். ஹர்ஷ வர்தன் அண்ட் அர்ஜூன் கிருஷ்ணா அவங்களுடைய பசங்க. இப்ப தான் K.A.V க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸைத் துவங்கி இருக்.."

வருண் தேஸாய் கேட்ட கேள்விக்கு அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவர் கூறி முடிக்கவில்லை, போதும் என்பது போல் மெள்ள தன் இடது கையை உயர்த்தி நிறுத்தியவன்,

"I just asked right or not. அது மட்டும் சொல்லுங்க போதும், அதற்கு மேல் அவங்களுடைய சரித்திரத்தை நான் கேட்கலை.." என்று வெடுக்கென்று பதில் கூறியதில், இவனைப் பற்றித் தெரிஞ்சும் இவ்வளவு விளக்கம் கொடுக்க முனைந்த நான் தான் முட்டாள் என்பது போல் அவன் அருகில் அமர்ந்திருந்த அவனது தந்தையின் செயலாளர் வாயை இறுக்க மூடிக்கொண்டார்.

நிமிடங்கள் கடக்க, உலகம் முழுவதும் தங்களின் கொடிகளைப் பறக்க விடத் துவங்கியிருக்கும் K.A.V க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸின் மூன்று எம்.டிக்களையும் ஒன்றாக மேடைக்குப் பேசுவதற்கு வேளாண்மை துறை மத்திய அமைச்சர் பார்த்திபன் அழைக்க, அவன் மீது படிந்த வருண் தேஸாயின் பார்வை பின் மேடையில் ஏறிய அபிமன்யு, ஆதித்யா மற்றும் அபிஷேக்கின் மீது நிலைத்தது.

"இந்தச் சின்ன வயசிலேயே நீங்க மூணு பேரும் எவ்வளவோ பெரிய சாதனைகளைச் செஞ்சிருக்கீங்கன்னு நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். உங்கள் மூன்று பேருக்குமான ஊக்கம் எது? நீங்க நினைச்சதை சாதிக்கிறவங்கன்னும், ஒருத்தொருக்கொருத்தர் சளைத்தவர் இல்லைன்னும், நீங்க எடுத்து வைக்கிற வியூகம், அது எந்த வியூகமா இருந்தாலும் அதை உடைக்காமல் திரும்பி வர மாட்டீங்கன்னும் நிறையப் பேர் சொல்லி நான் அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கேன். நிச்சயம் அதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு நியமம் இருக்கும்? அது என்ன? ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடியுமா?''

பார்த்திபனது கேள்விக்கு, K.A.V-ன் எம்.டிக்கள் பதிலளிக்கத் துவங்கியதுமே வருண் தேஸாயின் கண்களில் கூர்மைப் பரவியது.

"Today is our day, today we will seize the day!"

கம்பீரமான தொனியில் கூறிய ஆதித்யா புன்முறுவலுடன் அடுத்து அபிஷேக் பேசுவதற்கு ஏதுவாக ஒலிப்பெருக்கியை அவனை நோக்கி நீட்ட, "Why would we want to conclude every single day of our life with success?" என்ற அபிஷேக் அபிமன்யுவைத் திரும்பிப் பார்க்க, இறுதியாகத் தனது கம்பீரக் குரலில், "BECAUSE WE CAN..." என்று முடித்தான் அபிமன்யு கிருஷ்ணா.

[இன்றைய நாள் எங்களது.. இதை நாங்கள் கைப்பற்றுவோம் - ஆதித்யா. எங்கள் வாழ்கையின் ஒவ்வொரு நாளையும் ஏன் வெற்றிகரமாக முடிக்க விரும்புகிறோம்? - அபிஷேக். ஏனெனில் அது எங்களால் முடியும் - அபிமன்யு]

அரங்கத்தில் எழுந்த கரகோஷம் அடங்குவதற்கு வெகு நேரமாயிற்று.

அது வரை அமைதியாகக் காத்திருந்த அமைச்சர் பார்த்திபன் அவர்கள் மூவரும் அகன்றதும்,

"வல்லவர்களான K.A.V க்ரூப்பின் மூன்று அதிபர்களையும் பார்த்தாச்சு. அடுத்து நான் மேடைக்கு அழைக்க விரும்புவது, The most efficient and brilliant young business magnet.. Mr. Varun Desai.. நம்ம எல்லாருக்குமே தெரியும் அவர்களுடைய தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சி.இ.ஒ மிஸ்டர் வருண் தேஸாய் பதவி ஏற்றுச் சில மாதங்கள் தான் ஆகியிருக்கின்றது என்று. ஆனால் அதற்குள்ளாகவே இவரது புகழ் இந்தியா மட்டும் அல்லாமல் ஏறக்குறைய அனைத்துக் கண்டங்களுக்கும் பரவி இருக்குன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு இவங்களுடைய நிறுவனங்களிற்குள் இவர் கொண்டு வந்திருக்கும் வணிகத் தந்திரங்களும், நிர்வாக உத்திகளும், புதிய முயற்சிகளும் எல்லோரையுமே பிரமிக்க வச்சிருக்கு. நிச்சயமாக வருங்காலத்தில் அசைக்க முடியாத தொழிலதிபராக, உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய பிஸ்னஸ் டைக்கூனாக இவர் வருவாருங்கிறதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தென்னிந்தியாவில் K.A.V நிறுவனத்தின் அதிபர்கள் மூன்று அரிமாக்கள் என்றால் இவர் வட இந்தியாவின் அரிமா என்றே சொல்லலாம். மிஸ்டர் வருண் தேஸாய், நீங்களும் எடுத்து வைக்கிற வியூகம், அது எந்த வியூகமா இருந்தாலும் அதை உடைக்காமல் திரும்பி வர மாட்டீங்கன்னு இந்தச் சில மாதங்களுக்குள்ளாகவே நிரூபிச்சிருக்கீங்க. ஆனால் இன்று நீங்கள் இந்த அரங்கத்தில் பல வியூகங்கள் வகுக்கும் சூத்திரதாரிகளைப் பார்த்திருப்பீர்கள். இவர்களை உங்களால் வெல்ல முடியும்னு தோன்றுகிறதா? இதற்கான உங்களுடைய பதிலை மற்றவர்களைப் போல் நானும் ரொம்ப ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். May I invite Mr. Varun Desai to come up on stage?"

பார்த்திபன் வினவியதுமே அவனது கேள்விக்குப் பதில் அளிக்க வருண் தேஸாய் இருக்கையில் இருந்து எழுந்த நேரம் அந்த அரங்கம் அதிர்வது போல் மீண்டும் கரகோஷம் கிளம்பியது.

அது அடங்குவதற்கு வெகு நேரமானது.

K.A.V க்ரூப் அதிபர்களுக்கு நிகரானவன் இவன் என்பதை அக்காட்சி, அந்த அதிர்வு வெளிப்படுத்தியது.

தங்களது இருக்கைகளுக்கு வந்து அமர்ந்த அபிமன்யுவும், ஆதித்யாவும், அபிஷேக்கும் வருண் தேஸாய்க்கு கிடைத்த ஆர்ப்பரிப்பான வரவேற்பைக் கண்டதும் ஒருவருக்கு ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

"இவனைப் பற்றி நாம கேள்விப்பட்டதுக்கும், இங்க இவனை ‘The most efficient and brilliant young business magnet Mr.Varun Desai’ ன்னு அனௌன்ஸ் பண்றதுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்குதே.."

கூறிய ஆதித்யாவைத் திரும்பிப் பார்த்த அபிஷேக்,

"யெஸ் ஆதி, மற்றவர்களைப் பொறுத்தவரை இவன் ஒரு புத்திசாலியான, அதி திறமை வாய்ந்த பிஸ்னஸ் மேன், ஆனால் எனக்குத் தெரிஞ்சவரை.." என்ற ஆதித்யாவை முடிக்க விடாது,

"If you don’t like a Rule, just follow it.. Reach on the top, and change the Rule.." என்ற அபிமன்யுவை ஒரு சேர திரும்பிப் பார்த்தனர் இரட்டையர்.

"என்ன அபிமன்யு சொல்ல வர?"

“ஹிட்லரோட கோட்..”

“யெஸ், பட் அதுக்கும் இந்த வருண் தேஸாய்க்கும் என்ன சம்பந்தம்?”

"இவனுடைய தாத்தா காஷ்யப் தேஸாய் ஆரம்பிச்ச நிறுவனங்களை அவரைத் தொடர்ந்து அவரது மகன் சஞ்சீவ் தேசாய் கவனிச்சிட்டு வந்தாருன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனால் சஞ்சீவ் தேசாய் உயிருடன் இருக்கும் போதே அவருடைய நிறுவனங்கள் எல்லாத்தையும் சாமர்த்தியமா, சி.இ.ஓ பதவி உட்படக் கைப்பற்றிக் கொண்டவன் இந்த வருண் தேஸாய். வெளியே பார்க்கும் போது இவனுடைய அப்பா அவரா விரும்பி இவனைச் சி.இ.ஓ வாக அறிமுகப்படுத்தியதாகத் தான் தெரியும், ஆனால் அது உண்மை இல்ல."

ஆதித்யாவின் கேள்விகளுக்கு அபிமன்யு கொடுத்த பதில் இது.

"அப்படின்னா இவனா அந்தப் பதவியைப் பிடுங்கிக்கிட்டான்னு சொல்றியா?"

"பிடுங்கலை."

"பின்ன?"

"அதான் சொன்னேனே, If you don’t like a rule, just follow it. Reach on the top and change the rule -ன்னு. அவங்க அப்பா பிஸ்னஸ் செய்து வந்த விதம் அவனுக்குப் பிடிக்கலை, அவருடைய அபரிதமான நேர்மை அவனுக்குப் பிடிக்கலை. அவர் போட்டிருந்த சட்டத்திட்டங்கள் அவனுக்குப் பிடிக்கலை.. ஆனால் அவன் எதுக்கும் எப்பவும் எதிர்ப்புத் தெரிவிக்கலை. அமைதியா அதை அனைத்தையும் ஃபாலோ பண்ணிட்டு வர மாதிரி நடந்துக்கிட்டான், அதாவது நடிச்சான். அப்படியே அவருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமானான், கொஞ்ச கொஞ்சமா மேல வந்தான். என்ன தான் அவனது அடாவடியான குணத்தைப் பற்றித் தெரிஞ்சிருந்தாலும் ஒரு வேளை படிப்பும், அனுபவங்களும் அவனை மாற்றிடுச்சோன்னு நினைச்ச அவனுடைய அப்பா, ஒரு கட்டத்தில் அவன் மேல் வச்ச நம்பிக்கையில் அவன்கிட்ட எல்லாப் பொறுப்புக்களையும் கொடுக்க வந்தார். ஆனால் ஏதோ காரணத்துக்காக நிறுத்திட்டார். அந்த நிமிஷம் தன் சுயத்தைக் காட்ட ஆரம்பிச்சான் வருண் தேஸாய்…..

அது வரை அவன் அமைதியா செய்துட்டு வந்த திட்டங்கள் எல்லாம் வெளிவந்துச்சு. அதாவது அவன் இல்லாமல் அவங்களுடைய எந்த ஒரு பிஸ்னஸும் நடக்க முடியாதுங்கிற அளவுக்கு அவருக்கே தெரியாம மறைமுகமா அவன் நிறையக் காரியங்களை வெகு சாமர்த்தியமா செஞ்சு முடிச்சிருந்தான். தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் ஒட்டு மொத்த கண்ட்ரோலையும் அவனுக்குக் கீழ கொண்டு வந்திருந்தான். அந்த நிமிஷம் அவங்க அப்பாவால் ஒண்ணுமே செய்ய முடியலை. வேற வழியில்லாமல் அவர் சேர்மென் போஸ்டில் இருந்து விலகி இவனை அவருடைய எல்லா நிறுவனங்களுக்கும் சி.இ.ஒவாக அமர்த்த வேண்டியதா போச்சு. இதோ இப்போ எல்லாமே இவன் கண்ட்ரோலில். ஹிட்லரின் கோட் போல. மேல வந்ததும் எல்லாத்தையும் அவனுக்கு ஏற்ற மாதிரி மாத்திட்டான்.. அது மட்டும் இல்லை, அவனுடைய நிறைய விஷயங்களுக்குத் துணையா இருக்கிறது அரசியல். குறிப்பா, ஒரு கேபினட் மினிஸ்டர்.."

"நானும் கேள்விப்பட்டிருக்கேன் அபிமன்யு.. ஆர்யன்.. ஆர்ய விக்னேஷ், ரைட்?"

"யெஸ் அவனே தான்."

"அப்படின்னா ஆர்யனுடைய தயவுல தான் இவனுடைய பிஸ்னஸ் சாம்ராஜ்யமே நடக்குதோ?"

"இல்லை, இவனுடைய தயவாலத் தான் ஆர்யன் தன்னுடைய அரசியல் கோட்டையையே கட்டியிருக்கான். ஐ மீன், வருண் தேஸாயை நம்பித்தான் ஆர்யனே இருக்கான்."

அபிமன்யு கூறி முடித்ததும் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் வருண் தேஸாயை நோக்கி இரட்டையர்கள் திரும்ப, அவங்கு அவன் கூறிக் கொண்டிருந்த வார்த்தைகளுக்கும் அபிமன்யூவின் கூற்றிற்கும் எத்தனை பொருத்தம் என்பது புரிந்தது.

“The quality of decision is like the well-timed swoop of a falcon which enables it to strike and destroy its victim. சன்சூவின் மேற்கோள் இது.. நாம் எடுக்கும் முடிவின் தரம் சரியான நேரத்தில் எதிரியின் மீது பாயும் பருந்தின் உத்தியை போன்றது. அது தான் பருந்துக்களின் வியூக முறை. நம்முடைய எதிரிகள் யார் என்று அறிந்திருப்பது மட்டும் முக்கியம் அல்ல, எப்பொழுது அவர்களை அணுக வேண்டும், அவர்களுடன் எப்பொழுது போரில் ஈடுபட வேண்டும், எப்படி அவர்களை வெற்றிக்கொள்ள வேண்டும் என்ற நேரத்தை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பது ரொம்ப முக்கியம்.. இதுவே எனது போர் முறையும் கூட.I mean this is my strategy when it comes to war. It doesn't matter if it is a business or personal.”

பேசி முடித்தவனாய் மிக ஸ்டையிலாக இறங்கி வந்து கொண்டிருந்த வருண் தேஸாயின் மீது இமைக்காது விழிகளைச் செலுத்திக் கொண்டிருந்தவர்கள், கீழே அமர்ந்திருப்பவர்களில் எவரையோ கண்டு அவன் புன்னகைப் புரியவும், அவர்களின் பார்வையும் அவ்விடத்தை நோக்கி நகர்ந்தது.

அங்கு அமர்ந்திருந்தவன் ஆர்ய விக்னேஷ்.. சுருக்கமாக ஆர்யன் என்று அழைக்கப்படுபவன். மத்திய அரசின் துறைமுக அமைச்சர் [Central minister of Ports Shipping and Waterways]

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தினைச் சேர்ந்த சிக்கல் என்ற சிற்றூரில் பிறந்து, படிப்படியாக அரசியலில் உயர்ந்து, தனது முப்பத்தி ஐந்து வயதிலேயே மத்திய அமைச்சராகப் பதவியில் அமர்ந்திருப்பவன்.

பாம்பிற்குப் பல்லில் விஷம் என்றால் இவனுக்கு உடம்பு முழுவதுமே விஷம் என்று கூறலாம்.

பார்வை, செயல், சிந்தனைகள், திட்டங்கள், முடிவுகள் என்று அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கும். ஏறக்குறைய உலகிலேயே மிக அதிகமான நஞ்சு கொண்ட [inland taipan -The snake with the world’s deadliest venom] தைப்பான் பாம்பினைப் போன்றவன்.

ஆனால் அத்தகைய கொடியவனே ஒருவனை அண்டித்தான் அரசியலில் நிலைத்திருக்கின்றான் என்றால் அந்த ஒருவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்.

தைப்பான் பாம்பினைப் போன்று விஷம் கொண்டவனா அல்லது எத்தகைய சக்தி வாய்ந்த எதிரிகளையும் அழிக்கும் திறமை கொண்ட அரிமாவா?

அல்லது காலமும் நேரமும் கனிந்து வரும் வரை எதிரியை பொறுமையாகக் கண்காணித்துக் கொண்டே வரும், தான் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் நிமிடத்தில் அவனை அதிரடியாய் அழிக்கும் ஃபால்கன் பருந்தா?

***********************************

ஒரு வழியாக மாநாடு இனிதே நிறைவு பெற, இருக்கைகளை விட்டு எழுந்த அபிமன்யுவும், இரட்டையர்களும் அரங்கத்தின் வாயிலை நோக்கி நடக்க, வெகு அருகில் கேட்ட கம்பீரமான வசீகரிக்கும் ஒரு குரல் அவர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தது.

“ஐ ஆம் வருண்.. வருண் தேஸாய். தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சி.இ.ஒ..''

கூறிய வருண் தேஸாய் கரத்தை நீட்ட, சில மாதங்களுக்கு முன்னர்த்தான் சி.இ.ஒவாகப் பொறுப்பேற்றிருந்தாலும், தனது முதல் அடியே K.A.V குழுமத்தைப் போன்ற இன்னும் சில பெரு நிறுவனங்களை அடியோடு அழிக்கும் அடியே என்று சூளுரைத்திருந்த வருண் தேஸாயின் கரத்தை தன் வழக்கமான ஸ்டைலாக, தலை குனியாது, பார்வையை மட்டும் லேசாகக் கீழே தாழ்த்தி ஆழ்ந்து பார்த்த அபிமன்யு கிருஷ்ணா அவனது கரத்தைக் குலுக்க, அபிமன்யு ஒரு அடிவிட்டு நகர்ந்ததும், வருண் தேஸாயின் கையை இறுக்கப் பற்றிக் குலுக்கினார்கள் ஆதித்யாவும், அபிஷேக்கும்.

அபிமன்யுவின் உதாசீனத்தையும், இரட்டையர்களின் ஆர்வத்தையும் கண்டு தானும் அலட்சியமாய்ப் புன்னகைத்தவாறே அவர்களின் கைகளைக் குலுக்கியவனாய் பேசத் துவங்கியவனின் உரையாடல் சட்டென்று நின்று போனது.

அவனது அமைதியையும் அவன் பார்வைப் போகும் இடத்தையும் நோக்கித் திரும்பிய அபிமன்யுவின் உதடுகளில் இலேசான நகைப் படிந்தது.

அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் நின்றுக் கொண்டிருந்தவன் ஷிவ நந்தன், எஸ்.எஸ்.பி [Senior Superintendent of Police, Intelligence]

முப்பது வயதை சில நாட்களுக்கு முன்னர்த் தான் தொட்டிருந்த இளைஞன்.

பிறப்பும் படிப்பும் சென்னையில். தற்பொழுது பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பைக்கு.

நெடுநெடுவென்று உயரமான தோற்றமும் இரும்பு போன்ற உடலும் கொண்ட ஷிவ நந்தனின் தேகம் மட்டும் கடினம் அல்ல, அவனது மனமும் அப்படியே.

காவல்துறையினரால் மட்டும் அல்ல, முழுத் தேசத்தினாலும் 'வசீகரிக்கும் தோற்றம் கொண்டவன் ஆனால் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரினால் புகழப்படும் ஒரு அழகான அரக்கன்’ என்றே விளிக்கப்படுபவன்.

தங்களிடம் பேசிக் கொண்டிருந்த வருண் தேஸாயின் கண்கள் பளபளக்க, அவனது மனத்திற்குள் பொங்கிக் கொண்டிருக்கும் ஆக்ரோஷத்தைப் புரிந்துக் கொண்டவர்களாய் புன்முறுவல் பூத்தவாறே அபிமன்யுவும், இரட்டையர்களும் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தனர்.

“ஷிவ நந்தனைப் பார்த்ததும் வருண் தேஸாயோட முகமே மாறுச்சுப் பார்த்தியா அபி.." என்றான் ஆதித்யா.

"ஆமா ஆதி. It is believed that to whichever district he goes, criminals are greately feared and they either go back to jail or leave the district. இப்படிப்பட்டவனை இங்க மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்காங்கன்னா கண்டிப்பா ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கும். அந்தக் காரணம் இந்த வருண் தேஸாயா கூட இருக்கலாம்.."

"யெஸ், என்கவுன்டரின் பெயர் வரும்போதெல்லாம், ஷிவ நந்தனின் பெயர் தானாகவே மனசுல தோணும்னு சொல்வாங்க. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இவன் 83 குற்றவாளிகளுடைய மரணத்தில் தொடர்புடையவன். அதாவது என்கௌண்டருங்கிற பெயரில் இவனால் கொல்லப்பட்டவர்கள் 83 பேருன்னு சொல்றாங்க, ஆனால் அதுக்கும் மேலேயும் இருக்கலாங்கிறது நிறையப் பேருடைய கணிப்பு. இங்கேயும் இனி நிறைய என்கௌண்டர்ஸை எதிர்ப்பார்க்கலாம்னு நினைக்கிறேன், ஏன் இவனுடைய என்கௌண்டர்ஸ் லிஸ்டுல இந்த வருண் தேஸாயோட பெயர் கூட இருக்கலாம்."

கூறியவாறே அபிமன்யு ஷிவ நந்தனின் மீது பார்வையைப் பதிக்க, சொல்லி வைத்தார் போன்று அவர்களின் புறம் திரும்பிய ஷிவ நந்தனும் நட்பாய் புன்னகைத்தான்.

அவனைக் கண்டு முறுவலித்த மூவரும் வெறும் தலையசைத்து அவனிடம் விடைப்பெற்றவர்கள் தங்களிடம் பேசுவதற்கு என்று விருப்பத்துடன் தங்களை நெருங்கும் பத்திரிக்கையாளார்கள் மற்றும் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் துவங்கிய வேளை அங்கு ஷிவ நந்தனின் அலை பேசி அலறியது.

அழைத்தது ஷிவ நந்தனின் அத்தை மகள் துர்க ரூபினி.

இன்னும் சில நாட்களில் அவனது கரங்களினால் மாங்கல்யத்தைப் பெற்றுக்கொள்ளப் போகின்றவள்.

"என்ன துர்கா?"

"மா.. மா.. மாமா.. எ.. எ.. எங்க இ.. இ.. இருக்கீங்க?"

"ஏய் என்ன? அ ஆ இ ஈ உ ஊ-ன்னு எழுத்து பழகிட்டு இருக்கியா இன்னும், இப்படித் திக்குற?"

"ம்ப்ச்.."

"ம்ம்ம் சலிச்சுக்க, ஒரு வார்த்தை பேசுறதுக்குள்ள ஏன் தான் இப்படித் திக்குறியோ தெரியலை?"

"எனக்கு ஒண்ணும் திக்குவாயில்லை.."

"தெரியுதுல்ல, அப்புறம் என்ன?"

"உங்கக்கிட்ட பேசுறதுன்னாலே எனக்குப் ப.. பயம் தான் வருது. நான் என்ன செய்ய?"

"பொறந்ததுல இருந்து என்னைப் பார்த்துட்டு தானடி இருக்க, ஆனால் ஏதோ பேயைப் பார்த்த மாதிரி வாய் எல்லாம் இப்படிக் குழறுது."

"என் வாய் மட்டுமா குழறுது? உங்களைப் பார்த்தா எல்லாருடைய வாயும் தான் பயத்துல குழறுதுன்னு பேசிக்கிறாங்க?"

"தப்புச் செஞ்சவங்களுக்கு மட்டும் தான் அப்படி. நீ என்னடி தப்பு செஞ்ச இப்படித் திக்குறதுக்கு?”

"நான் தப்பெல்லாம் ஒண்ணும் செய்யலை. ஆனால் உங்கக்கிட பேசுறதுன்னாலே தானா எனக்குப் பயத்துல வியர்க்குது.. நான் என்ன செய்யறது?"

"ம்ப்ச்.. நீ திருந்தவே மாட்ட, சரி சொல்லு, எதுக்குக் கூப்பிட்ட?"

"எங்க இருக்கீங்கன்னு அம்மா கேட்கச் சொன்னாங்க?"

"இது என்ன கேள்வி? ஒரு முக்கியமான வேலையா டெல்லி போறேன்னு சொன்னேன் இல்லையா, அப்புறம் என்ன?"

"நம்மக் கல்யாணத்துக்குப் புடவை எடுக்கணுமில்ல, அதான் என்ன கலர் உங்களுக்குப் பிடிக்கும்னு அம்மா கேட்கச் சொன்னாங்க"

"புடவை எனக்கா, உனக்கா?"

"அச்சோ.. கல்யாணப் புடவை மாமா.."

"துர்கா, ஏகப்பட்ட பிஸ்னஸ்மென், பாலிட்டிஷியன்ஸ், இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் எல்லாரும் கலந்துக்கிற ப்ரோக்ராம் இது. கேபினட் மினிஸ்டர்ஸ் கூட வந்திருக்காங்க. எல்லாத்துக்கும் ரொம்பப் பாதுகாப்புத் தேவைன்னு என்னை அனுப்பிச்சிருக்காங்க. இப்பப் போய்க் கல்யாணத்துக்குப் புடவை எடுக்கணும், என்ன கலர் பிடிச்சிருக்குமுன்னு ஃபோன் பண்ணிக் கேட்கிறியே, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன்."

"அம்மா தான் கேட்கச் சொன்னாங்கன்னு சொன்னேனுல்ல."

"உனக்கு என்ன கலர் பிடிக்குமோ அதையே எடுத்.." என்றவன் முடிப்பதற்குள்,

"ரெட்.. ரெட் கலர்.. ஐ மீன், ரெட் கலர் வெட்டிங் சாரிஸ் தான் எப்பவும் என் சாய்ஸ்னு சொல்ல வந்தேன்." என்ற குரல் தன் வெகு சமீபத்தில் கேட்டதில், நன்கு பரிச்சயமான அந்தக் குரல் யாருடையது என்று தெரிந்திருந்ததில், கையில் பிடித்திருந்த அலைபேசியில் இறுக்கத்தைக் கூட்டினான், எஸ்.எஸ்.பி ஷிவ நந்தன் ஐ.பி.எஸ்.

"சாரி மிஸ்டர் ஷிவ நந்தன்.. உங்க வெட்டிங் பற்றிப் பேசிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?"

தனக்குப் பின்னால் நின்றுப் பேசுபவனை நோக்கி மெள்ள திரும்பிப் பார்த்த ஷிவ நந்தனுக்கு அக்கணமே அவனை முழங்காலிடச் செய்து அவனது நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றுவிடும் வெறி வந்தது.

ஆனால் அவனை அல்ல, அவனது நிழலைக் கூடத் தொட முடியாத உயரத்தில் அவன் இருக்கின்றான்.

அதுமட்டும் அல்ல, அவனைச் சுற்றிலும் பதவி ஏறியிருந்த இந்தச் சில மாதங்களுக்குள்ளாகவே அவன் அமைத்திருந்த பலம் வாய்ந்த கோட்டையை அணுக முடியாது இந்திய அரசாங்கமே திகைத்து நிற்கும் வேளையில் தன்னால் என்ன செய்ய இயலும்.

அரசியல்வாதிகள், பல பெரும் நிறுவன அதிபர்களின் கரங்களைப் பொம்மலாட்டக் கயிறுகள் போன்று தன் விரல்களுக்குள் முடிச்சிட்டு தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு இழுத்துக் கொண்டிருப்பவன்.

இதில் தற்பொழுது அவனுக்குப் பின்னால் இரும்பாக நிற்பது கேபினட் மினிஸ்டர் ஆர்ய விக்னேஷ்.

ஆயினும் இவனைப் பிடிப்பதே எனது முக்கிய வேட்டை என்பது போல் டி.ஜி.பி வரை சென்று, ஹோம் மினிஸ்டரின் உதவியுடன் மும்பைக்குப் பதவி மாற்றம் வாங்கிக் கொண்டு வந்திருக்கும் ஷிவ நந்தனுக்குத் தன்னைச் சீண்டிக் கொண்டிருப்பவனைச் சும்மா விட்டுவிடவும் மனம் வரவில்லை.

"தி மோஸ்ட் எஃபிஷியண்ட் யங் பிஸ்னஸ் மேக்னெட்டுனு இந்த அரசாங்கமே புகழும் அளவிற்குப் பெரிய பெயரும் புகழும் வாங்கியிருக்கும் மிஸ்டர் வருண் தேசாய்க்கு இன்னொருத்தருடைய ப்ரைவெசியில் தலையிடறது தப்புன்னு யாரும் சொல்லிக் கொடுக்கலையா என்ன?"

"நான் உங்களுடைய ப்ரைவெசியில் எங்க தலையிட்டேன் ஷிவ நந்தன். எனக்கு ரெட் கலர் பிடிக்கும்னு சொன்னேன், அவ்வளவு தான்."

இதழ்கோடியில் இலேசான நகைப்புடன் கூறியவனின் கண்களை ஒரு சில விநாடிகள் கூர்ந்துப் பார்த்த ஷிவ நந்தன், "எனிவேஸ்.. கங்கிராட்ஸ் ஃபார் ஃயுவர் அச்சீவ்மெண்ட் மிஸ்டர் வருண் தேஸாய்." என்று கரத்தை நீட்டினான்.

"என்னை வெறும் வருண்னு சொல்லியே நீங்க கூப்பிடலாம்."

தனது கரத்தை இறுக்கப் பற்றிச் சிநேகத்துடன் கூறியவனின் பிடியில் நிச்சயமாய் நட்பு இருக்கவில்லை என்பதை உணர்ந்து கொள்ள இயலாதவனா, கொடூரமான கொலையாளிகளையும் ஆபத்தான பயங்கரவாதிகளையும் அவர்களின் கண்களைப் பார்த்தவாறே கொன்றுப் போடுவதில் வல்லவன் என்று பெயர் எடுத்திருக்கும் ஷிவ நந்தன்.

"ஷ்யூர் வருண்.. கங்கிராட்ஸ் அகெய்ன்.."

"தாங்க்ஸ் ஷிவ நந்தன், மற்ற எல்லாரும் பாராட்டுறதைவிட என்னவோ நீங்க பாராட்டும் போது கொஞ்சம் த்ரில்லா தான் இருக்கு."

அவன் ஏன் அப்படிக் கூறுகின்றான் என்பதைப் புரிந்துக் கொண்டதில் ஷிவ நந்தனின் உதடுகளில் இகழ்ச்சி புன்னகை நெளிந்த அக்கணம்,

"A charming personality but attained notability as an encounter specialist.. இவ்வளவு பெரிய புகழுடையவர் பாராட்டும் போது கண்டிப்பா த்ரில் இருக்கத்தானே செய்யும் வருண்.." என்றது மற்றொரு குரல்.

ஆளுமையுடன் கனகம்பீரமாய்க் கேட்டக் குரலில் ஷிவ நந்தனும் வருண் தேசாயும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்க்க, அமைச்சர்கள் என்றால் என்ன குர்தாவும் பைஜமாவும் மட்டும் தான் போட வேண்டுமா?

நான் அப்படி அல்ல என்பது போல் அடர் நீல நிற ட்க்ஸீடோ அணிந்து [Brunello Cucinelli Tuxedo] வருண் தேஸாய் ஷிவ நந்தன் இருவரின் உயரத்திற்கு ஈடாய் ஆறு அடிக்கும் மேல் உயரமாய் வலிமையான தேகத்துடன் நின்றுக் கொண்டிருந்தவனைக் கண்டு ஷிவ நந்தனின் புருவம் இடுங்கியது.

"சாரி மிஸ்டர் ஷிவ நந்தன்.. நானும் உங்க ப்ரைவெஸியில் தலையிடலை. ஜஸ்ட் உங்களை விசிட் பண்ணிட்டுப் போகலாம்னு தான் வந்தேன், நீங்க பேசிட்டு இருந்தது காதில் விழுந்தது.. அதான் பதில் கொடுத்தேன்.."

தங்களது உரையாடல்களை முன்னர் இருந்தே கவனித்து இருக்கின்றான் இவன் என்பதைப் புரிந்து கொண்ட ஷிவ நந்தன், தன்னை நோக்கி கையை நீட்டிக் கொண்டிருப்பவனின் ஆழ்மனதைப் படிப்பது போல் மௌனமாய் நின்றவன் நொடிகள் சில கடந்து அவனது கரத்தைப் பற்ற,

"நீங்க மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வரப் போறதா கேள்விப்பட்டதுமே எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாகிடுச்சு.. என்ன தான் நாம் மூணு பேரும் இப்போ வட நாட்டில் வாசம் செய்தாலும் நாம் பிறந்தது தமிழ் நாட்டில் தானே. ஸோ, நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்து இப்பேற்பட்ட பெயர் எடுத்திருக்கிற நீங்களும் இப்போ எங்களுடன் இணைந்து இருப்பதில் எனக்குப் பெருமை தானே மிஸ்டர் ஷிவ நந்தன்.." என்றவாறே அழுத்தமாய்ச் சிவ நந்தனின் கைப்பற்றிக் குலுக்கினான்.

உடம்பெல்லாம் விஷம் என்றாலும் கள்ளிப்பூ போல் அழகான புன்னகையுடன் பேசும் ஆர்ய விக்னேஷின் தோற்றமும், மருந்துக்கும் சிரிப்பு என்பதே இல்லாது இரும்பாய் நிற்கும் ஷிவ நந்தனின் கடிய முகமும், அவனை ஆழம் பார்ப்பது போல் சலனமற்ற முகத்துடன் வெகு அமைதியாய், ஆனால் புயலுக்கு முன் நிலவும் அமைதி போல் நிற்கும் வருண் தேஸாயின் தோரணையும் அங்கு நிருபர்களிடம் பேசிக் கொண்டிருந்த ஆதித்யா அபிமன்யு அபிஷேக் ஆகியோரின் மனத்திற்குள் ஒரே ஒரு சிந்தனையை விளைவித்தது.

'கத்தியின்றி இரத்தமின்றி ஒரு யுத்தம் (வேட்டை) துவங்குகின்றது!'

ஒருவருக்கொருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டவர்கள் சில அடிகள்விட்டு பிற நிறுவன அதிபர்கள் சிலரிடம் பேசிக் கொண்டிருந்த வேளாண்மை மத்திய அமைச்சர் பார்த்திபனை நோக்கித் திரும்ப, அதே நேரம் அவனது பார்வையும் ஷிவ நந்தன், ஆர்ய விக்னேஷ் மற்றும் வருண் தேஸாயின் மீது நிலைத்தது.

‘தென்னிந்தியாவில் K.A.V க்ரூப் ஆஃப் கம்பெனிஸ் அதிபர்களின் யுத்தம் இப்பத்தான் முடிஞ்சுதுன்னா, மீண்டும் ஒரு யுத்தமா? அதுவும் மும்பையிலா?’

பார்த்திபனின் வாய் முணுமுணுத்தது.

அவ்வேளை மீண்டும் ஒரு குருக்ஷேத்திரப் போர் துவங்கியது.

ஆனால் இந்த முறை தொழில் சாம்ராஜ்யத்திற்குள் மட்டும் நடக்கும் யுத்தம் அல்ல அது.

ஆக்ரோஷத்தின் மறுபிறப்பு என்று பெயரெடுத்திருக்கும், பெரும் பதவியில் இருக்கும் இளம் காவல்துறை அதிகாரி ஒருவனுக்கும், மத்திய அமைச்சராக அரசியலில் தான் வைப்பதே சட்டம் என்பது போல் கோலோச்சி கொண்டிருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும், என் பாதையில் குறுக்கிடும் எவரையும் அழிக்கக் கடுகளவும் தயங்கமாட்டேன், அவன் யாராக இருந்தாலும் சரி என்று தன் சாம்ராஜ்யத்தை ஆளத்துவங்கியிருக்கும் இளம் தொழில் அதிபனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம்.

மீண்டும் ஒரு குருக்ஷேத்திரப் போர்!

We do not meet people by accident. They are meant to cross our path for a reason!

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..
 
Last edited by a moderator:

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க. First of all I would like to wish you all A Very Happy Thanksgiving. Next a small announcement.
நான் குருக்ஷேத்திரம் -2 எழுதப் போவதாக ஏற்கனவே அறிவிச்சிருக்கேன். ஆனால் அதை எழுதி முடிப்பதற்குக் கொஞ்ச நாள் ஆகும் போல் தெரியுது. இதற்கு இடையில் நிறையப் பேர் எனக்குத்தனிப்பட்ட முறையில் அதைப்பற்றி மெசேஜ் அனுப்பிட்டு இருக்கீங்க. அதற்கான பதில் தான் இது.
குருக்ஷேத்திரம் - 2 -ல் ஆதித்யாவோ, அல்லது அபிமன்யூவோ அல்லது அபிஷேக்கோ வரப்போவது இல்லை. அவர்களது வாரிசுகளும் இந்தக் கதையில் இல்லை. ஆனால் இதுவும் குருக்ஷேத்திரம் தான்.
என்னால் சில காரணங்களால் டீஸர் எல்லாம் போட முடியலை. அதனால் உங்களுக்காகக் குருக்ஷேத்திரம் - 2 அரிமாக்களின் வேட்டையோட முதல் அத்தியாயத்தைக் கொடுத்திருக்கேன்.
ஏனோ இந்த Thanksgiving நாளில் இதனைப் போடணும்னு தோனுச்சு. உங்களுக்கு என்னுடைய நன்றிகளைச் சொல்வதற்காகவும் என்று எடுத்துக்கலாம். ஆனால் மீதிக் கதை அடுத்த வருடம் தான்.
ஸோ, இப்போதைக்கு இந்த முதல் அத்தியாயத்தைப் படித்து, இந்தக் கதையில் யாருக்கு இடையில் குருக்ஷேத்திரப் போர் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கங்க. Thank you for everything dearies!

(PS : இடையிடையில் ஆங்கில வாக்கியங்கள் வரும். தயவு செய்து Google translator use பண்ணித்தெரிஞ்சுக்கங்க. தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதினால் சரியா வர மாட்டேங்குது, அந்த ஸ்டையிலை மாற்றலாம்னுதான் இப்படி எழுதியிருக்கேன். Please adjust.)

உங்கள்

ஜேபி.
 
Zaira

New member
குருக்ஷேத்திரம் 2 - அரிமாக்களின் வேட்டை

அத்தியாயம் - 1

"If you do not like a rule, just follow it.. Reach on the top and change the rule."

--Adolf Hitler
************************************************************
"The quality of decision is like the well-timed swoop of a falcon which enables it to strike and destroy its victim.”

-- Sun Tzu, The Art of War

தி லீலா பேலஸ் ஹோட்டல்... புது டெல்லி...

K.A.V Group of Industries-ன் அதிபர்கள் அபிமன்யு கிருஷ்ணா, ஆதித்ய வர்தன், அபிஷேக் வர்தன் மூவரும் கான்ஃபிடரேஷன் ஆஃப் இண்டியன் இண்டஸ்ட்ரியின் [CII] சிறந்த விருதுகள் பெற்ற தொழிலதிபர்களுக்கென்று அமைக்கப்பட்டிருந்த விழாவில் சந்தித்த அதே ஹோட்டல்.

பிரதம மந்திரியின் அலுவலகத்திற்கும், ராஷ்ட்ரபதி பவனுக்கும் அருகில் அமைந்திருக்கும், பெரு நிறுவன உயர் அதிகாரிகளும், வெளிநாட்டு வணிகப் பயணிகளும், மற்றும் பிரபலங்களும் தங்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்.

உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் கொள்கை வகுப்பாளர்கள், இருநூறுக்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச தொழில் அதிபர்கள், அரசியல் மற்றும் பொருளாதார விமர்சகர்கள் ஆகியோரும் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடும் மாநாடு, இந்தியாவின் தொழிற்சங்க மாநாடு.

இந்த வருடம் இம்மாநாட்டைப் புதுத் தில்லியில் நடத்துவது என்று அதன் வைஸ் ப்ரெஸிடெண்டும், தலைவர்களும், நிர்வாக இயக்குனர்களும் முடிவு செய்திருக்க, மாநாட்டிற்குத் தலைமை தாங்குவதற்கு என்றும், எதிர்கால இந்தியாவின் வளமைக்கான வழிகளையும் நாட்டின் மேம்பாட்டிற்கான முறைகளையும் பற்றிப் பேசுவதற்கும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்,

இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், விவசாயிகளின் திறனை வளர்ப்பதன் மூலம் வறுமை ஒழிப்புக்கு உதவிகள் செய்வதையும், இயற்கை வளங்களை நீட்டிக்கச் செய்வதையும் தனது வாழ்வின் முதன்மையான குறிக்கோளாகக் கொண்டிருக்கும், வேளாண்மை துறை மத்திய அமைச்சர் பார்த்திபன்.

புது டெல்லி.

மாலை மணி ஐந்து.

கிட்டத்தட்ட நானூறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருக்க, 'தி லீலா பேலஸ்' ஹோட்டலின் கான்ஃபரன்ஸ் அறை முழுவதிலும் விலை உயர்ந்த கோட் சூட்கள், ப்ளேஸர்கள், அணிந்த ஆண்களும், இந்திய பாரம்பரிய உடைகள் மற்றும் மேற்கத்திய பாணி உடைகள் அணிந்திருந்த பெண்களும் சூழ்ந்திருக்க, பல ஆயிரம் சதுரடிகள் கொண்ட அந்த அரங்கமே, தொழிலதிபர்களாலும், மிகப்பெரிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாலும் [CEO], பன்னாட்டு நிறுவனங்களின் சேர்மன்கள், நிர்வாக இயக்குனர்கள் மற்றும் பிரதிநிதிகளாலும் நிறைந்து வழிந்தது

அனைவரும் அவரவரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்திருக்க, நெடு நேரம் கிசுகிசுப்பான குரல்களிலும், சிறிதே உரத்த சாரீரங்களிலும், பெண்களுக்குள் நடைப்பெற்றுக் கொண்டிருந்த கலகலப்பான உரையாடல்களிலும் அந்த அரங்கம் முழுவதிலும் மூழ்கியிருக்க, ஒரே நேரத்தில் பலருடைய முகங்களும் அரங்கத்தின் வாயிலை நோக்கி சரேலெனத் திரும்பின.

பளீர் வெள்ளை ஷர்ட்டும், கரு நீல நிற கில்டன் [Kilton] ப்ராண்ட் கோட் சூட்டில், கடுமை கலந்த கவர்ச்சியுடன் சிந்தனை ரேகையும் படிந்திருக்கும் முகத்துடன் அபிமன்யு கிருஷ்ணாவும், அவனுக்கு வலது புறமும் இடது புறமுமாக, வெள்ளை நிற டீ ஷர்ட்டும் அதன் மேல் கருமை நிற ஜியோர்ஜியோ அர்மானி ப்ராண்ட் ப்ளேசரும் [giorgio armani blazer] அதற்கு ஏற்றார் போல் கருப்பு நிற பேண்டும் அணிந்து, ஆளுமையும் கவர்ச்சியும் கலந்த கம்பீரமான வதனத்தில் அழகிய புன்னகை படர்ந்திருக்க ஆதித்ய வர்தனும், அபிஷேக் வர்தனும் உள்ளே நுழைந்தனர்.

அரங்கம் முழுவதிலும் வழிந்து கொண்டிருந்த கூட்டத்தினரின் பார்வை தங்கள் மூவரின் மீது தான் படர்ந்திருக்கின்றது என்பதை உணர்ந்திருந்தாலும், தங்களைப் பார்த்துப் புன்னகைப்பவர்களை மட்டும் கண்டு மெல்லிய முறுவல் ஒன்றை உதடுகளில் பூக்கச் செய்த மூவரும், முதல் வரிசையில் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்தனர், கால் மேல் கால் போட்டு வெகு ஸ்டைலாக.

பிரதான வேட்டைக்காரர்களாகிய இவர்கள் மூவரும் தனித்து இருக்கும் பொழுதே தொழில் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இருப்போரை அரளச் செய்திருந்தவர்கள்.

இப்பொழுது நாங்கள் எங்கள் இரையை ஒன்றாகவே வேட்டையாடுவோம் என்பது போல் அருகருகே அமர்ந்திருப்பதைக் கண்டவர்களுக்கு நெஞ்சுக் கூடு படபடக்கத் துவங்கியது என்றால், அவர்கள் அறைக்குள் நுழைந்த விநாடியில் இருந்து அவர்களின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு இளம் தொழில் அதிபனுக்கு உடல் முழுவதிலும் பரவி கொண்டிருந்த இரத்தத்தின் ஓட்டம் ஆக்ரோஷத்தில் வெகுவாய் உயர்ந்திருந்தது.

"இவங்க K.A.V க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸோட மூணு எம்.டிஸ் அபிஷேக் வர்தன், அபிமன்யு கிருஷ்ணா, ஆதித்ய வர்தன், ரைட்?"

வெகு கம்பீரமான குரலில் அழுத்தமான தொனியுடன் கூறிய அந்த இருபத்தி எட்டு வயது இளைஞனின் பள்ளிப்படிப்பு அவனது அன்னையின் பிறப்பிடமான சென்னையில்.

கல்லூரி வாழ்க்கை அமெரிக்காவில்.

க்யூஎஸ் குளோபல் எம்பிஏ பட்டியலில் உலகின் சிறந்த வணிகக் கல்லூரிக்கான மூன்றாவது இடத்தைப் பெற்றிருக்கும் The Wharton School Of Business -ல் வனிக நிர்வாகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு.

வளர்ந்ததும் தற்பொழுது வாழ்வதும் தந்தையின் பிறப்பிடமான மும்பையில்.

தொழில் சாம்ராஜ்யம் ஏறக்குறைய ஏழு கண்டங்களிலும் பரவி இருக்கின்றது என்று கூறலாம்.

அவன் வருண் தேஸாய்.

வெளிர் க்ரே நிற உள் ஷர்ட்டும், அதற்கு மேல் அடர்ந்த சார்க்கோல் க்ரே நிற ப்ரியோனி சூட்டையும் அணிந்தவனாய் [brioni charcoal grey suit] இருக்கையில் அமர்ந்திருந்த அவனது ஒய்யாரத் தோரணையும், புன்னகை என்பதே இல்லாத முகத்தில் ஈட்டி போல் துளைத்தெடுக்கும் பார்வையுடன் K.A.V க்ரூப் அதிபர்களைப் பார்த்த தீட்சண்யமான தோற்றமும் விளக்கியது, இவனது நான்கடிகள் தூரத்தில் அரிமாக்ககள் பல நின்றிருந்தாலும் சிறிதளவும் அச்சம் என்பதே இல்லாது அவற்றை எதிர்கொள்ளும் அபார துணிச்சல் பெற்றவன் இவன் என்று.

"யெஸ், இவங்க தான். ஹர்ஷ வர்தன் அண்ட் அர்ஜூன் கிருஷ்ணா அவங்களுடைய பசங்க. இப்ப தான் K.A.V க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸைத் துவங்கி இருக்.."

வருண் தேஸாய் கேட்ட கேள்விக்கு அவனுக்கு அருகில் அமர்ந்திருந்தவர் கூறி முடிக்கவில்லை, போதும் என்பது போல் மெள்ள தன் இடது கையை உயர்த்தி நிறுத்தியவன்,

"I just asked right or not. அது மட்டும் சொல்லுங்க போதும், அதற்கு மேல் அவங்களுடைய சரித்திரத்தை நான் கேட்கலை.." என்று வெடுக்கென்று பதில் கூறியதில், இவனைப் பற்றித் தெரிஞ்சும் இவ்வளவு விளக்கம் கொடுக்க முனைந்த நான் தான் முட்டாள் என்பது போல் அவன் அருகில் அமர்ந்திருந்த அவனது தந்தையின் செயலாளர் வாயை இறுக்க மூடிக்கொண்டார்.

நிமிடங்கள் கடக்க, உலகம் முழுவதும் தங்களின் கொடிகளைப் பறக்க விடத் துவங்கியிருக்கும் K.A.V க்ரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸின் மூன்று எம்.டிக்களையும் ஒன்றாக மேடைக்குப் பேசுவதற்கு வேளாண்மை துறை மத்திய அமைச்சர் பார்த்திபன் அழைக்க, அவன் மீது படிந்த வருண் தேஸாயின் பார்வை பின் மேடையில் ஏறிய அபிமன்யு, ஆதித்யா மற்றும் அபிஷேக்கின் மீது நிலைத்தது.

"இந்தச் சின்ன வயசிலேயே நீங்க மூணு பேரும் எவ்வளவோ பெரிய சாதனைகளைச் செஞ்சிருக்கீங்கன்னு நான் நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். உங்கள் மூன்று பேருக்குமான ஊக்கம் எது? நீங்க நினைச்சதை சாதிக்கிறவங்கன்னும், ஒருத்தொருக்கொருத்தர் சளைத்தவர் இல்லைன்னும், நீங்க எடுத்து வைக்கிற வியூகம், அது எந்த வியூகமா இருந்தாலும் அதை உடைக்காமல் திரும்பி வர மாட்டீங்கன்னும் நிறையப் பேர் சொல்லி நான் அடிக்கடிக் கேள்விப்பட்டிருக்கேன். நிச்சயம் அதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு நியமம் இருக்கும்? அது என்ன? ஒரு சில வார்த்தைகளில் சொல்ல முடியுமா?''

பார்த்திபனது கேள்விக்கு, K.A.V-ன் எம்.டிக்கள் பதிலளிக்கத் துவங்கியதுமே வருண் தேஸாயின் கண்களில் கூர்மைப் பரவியது.

"Today is our day, today we will seize the day!"

கம்பீரமான தொனியில் கூறிய ஆதித்யா புன்முறுவலுடன் அடுத்து அபிஷேக் பேசுவதற்கு ஏதுவாக ஒலிப்பெருக்கியை அவனை நோக்கி நீட்ட, "Why would we want to conclude every single day of our life with success?" என்ற அபிஷேக் அபிமன்யுவைத் திரும்பிப் பார்க்க, இறுதியாகத் தனது கம்பீரக் குரலில், "BECAUSE WE CAN..." என்று முடித்தான் அபிமன்யு கிருஷ்ணா.

[இன்றைய நாள் எங்களது.. இதை நாங்கள் கைப்பற்றுவோம் - ஆதித்யா. எங்கள் வாழ்கையின் ஒவ்வொரு நாளையும் ஏன் வெற்றிகரமாக முடிக்க விரும்புகிறோம்? - அபிஷேக். ஏனெனில் அது எங்களால் முடியும் - அபிமன்யு]

அரங்கத்தில் எழுந்த கரகோஷம் அடங்குவதற்கு வெகு நேரமாயிற்று.

அது வரை அமைதியாகக் காத்திருந்த அமைச்சர் பார்த்திபன் அவர்கள் மூவரும் அகன்றதும்,

"வல்லவர்களான K.A.V க்ரூப்பின் மூன்று அதிபர்களையும் பார்த்தாச்சு. அடுத்து நான் மேடைக்கு அழைக்க விரும்புவது, The most efficient and brilliant young business magnet.. Mr. Varun Desai.. நம்ம எல்லாருக்குமே தெரியும் அவர்களுடைய தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சி.இ.ஒ மிஸ்டர் வருண் தேஸாய் பதவி ஏற்றுச் சில மாதங்கள் தான் ஆகியிருக்கின்றது என்று. ஆனால் அதற்குள்ளாகவே இவரது புகழ் இந்தியா மட்டும் அல்லாமல் ஏறக்குறைய அனைத்துக் கண்டங்களுக்கும் பரவி இருக்குன்னு சொல்லலாம். அந்த அளவுக்கு இவங்களுடைய நிறுவனங்களிற்குள் இவர் கொண்டு வந்திருக்கும் வணிகத் தந்திரங்களும், நிர்வாக உத்திகளும், புதிய முயற்சிகளும் எல்லோரையுமே பிரமிக்க வச்சிருக்கு. நிச்சயமாக வருங்காலத்தில் அசைக்க முடியாத தொழிலதிபராக, உலகமே திரும்பிப் பார்க்கக் கூடிய பிஸ்னஸ் டைக்கூனாக இவர் வருவாருங்கிறதில் எந்தச் சந்தேகமும் இல்லை. தென்னிந்தியாவில் K.A.V நிறுவனத்தின் அதிபர்கள் மூன்று அரிமாக்கள் என்றால் இவர் வட இந்தியாவின் அரிமா என்றே சொல்லலாம். மிஸ்டர் வருண் தேஸாய், நீங்களும் எடுத்து வைக்கிற வியூகம், அது எந்த வியூகமா இருந்தாலும் அதை உடைக்காமல் திரும்பி வர மாட்டீங்கன்னு இந்தச் சில மாதங்களுக்குள்ளாகவே நிரூபிச்சிருக்கீங்க. ஆனால் இன்று நீங்கள் இந்த அரங்கத்தில் பல வியூகங்கள் வகுக்கும் சூத்திரதாரிகளைப் பார்த்திருப்பீர்கள். இவர்களை உங்களால் வெல்ல முடியும்னு தோன்றுகிறதா? இதற்கான உங்களுடைய பதிலை மற்றவர்களைப் போல் நானும் ரொம்ப ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன். May I invite Mr. Varun Desai to come up on stage?"

பார்த்திபன் வினவியதுமே அவனது கேள்விக்குப் பதில் அளிக்க வருண் தேஸாய் இருக்கையில் இருந்து எழுந்த நேரம் அந்த அரங்கம் அதிர்வது போல் மீண்டும் கரகோஷம் கிளம்பியது.

அது அடங்குவதற்கு வெகு நேரமானது.

K.A.V க்ரூப் அதிபர்களுக்கு நிகரானவன் இவன் என்பதை அக்காட்சி, அந்த அதிர்வு வெளிப்படுத்தியது.

தங்களது இருக்கைகளுக்கு வந்து அமர்ந்த அபிமன்யுவும், ஆதித்யாவும், அபிஷேக்கும் வருண் தேஸாய்க்கு கிடைத்த ஆர்ப்பரிப்பான வரவேற்பைக் கண்டதும் ஒருவருக்கு ஒருவர் திரும்பிப் பார்த்துக் கொண்டனர்.

"இவனைப் பற்றி நாம கேள்விப்பட்டதுக்கும், இங்க இவனை ‘The most efficient and brilliant young business magnet Mr.Varun Desai’ ன்னு அனௌன்ஸ் பண்றதுக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்குதே.."

கூறிய ஆதித்யாவைத் திரும்பிப் பார்த்த அபிஷேக்,

"யெஸ் ஆதி, மற்றவர்களைப் பொறுத்தவரை இவன் ஒரு புத்திசாலியான, அதி திறமை வாய்ந்த பிஸ்னஸ் மேன், ஆனால் எனக்குத் தெரிஞ்சவரை.." என்ற ஆதித்யாவை முடிக்க விடாது,

"If you don’t like a Rule, just follow it.. Reach on the top, and change the Rule.." என்ற அபிமன்யுவை ஒரு சேர திரும்பிப் பார்த்தனர் இரட்டையர்.

"என்ன அபிமன்யு சொல்ல வர?"

“ஹிட்லரோட கோட்..”

“யெஸ், பட் அதுக்கும் இந்த வருண் தேஸாய்க்கும் என்ன சம்பந்தம்?”

"இவனுடைய தாத்தா காஷ்யப் தேஸாய் ஆரம்பிச்ச நிறுவனங்களை அவரைத் தொடர்ந்து அவரது மகன் சஞ்சீவ் தேசாய் கவனிச்சிட்டு வந்தாருன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனால் சஞ்சீவ் தேசாய் உயிருடன் இருக்கும் போதே அவருடைய நிறுவனங்கள் எல்லாத்தையும் சாமர்த்தியமா, சி.இ.ஓ பதவி உட்படக் கைப்பற்றிக் கொண்டவன் இந்த வருண் தேஸாய். வெளியே பார்க்கும் போது இவனுடைய அப்பா அவரா விரும்பி இவனைச் சி.இ.ஓ வாக அறிமுகப்படுத்தியதாகத் தான் தெரியும், ஆனால் அது உண்மை இல்ல."

ஆதித்யாவின் கேள்விகளுக்கு அபிமன்யு கொடுத்த பதில் இது.

"அப்படின்னா இவனா அந்தப் பதவியைப் பிடுங்கிக்கிட்டான்னு சொல்றியா?"

"பிடுங்கலை."

"பின்ன?"

"அதான் சொன்னேனே, If you don’t like a rule, just follow it. Reach on the top and change the rule -ன்னு. அவங்க அப்பா பிஸ்னஸ் செய்து வந்த விதம் அவனுக்குப் பிடிக்கலை, அவருடைய அபரிதமான நேர்மை அவனுக்குப் பிடிக்கலை. அவர் போட்டிருந்த சட்டத்திட்டங்கள் அவனுக்குப் பிடிக்கலை.. ஆனால் அவன் எதுக்கும் எப்பவும் எதிர்ப்புத் தெரிவிக்கலை. அமைதியா அதை அனைத்தையும் ஃபாலோ பண்ணிட்டு வர மாதிரி நடந்துக்கிட்டான், அதாவது நடிச்சான். அப்படியே அவருடைய நம்பிக்கைக்கும் பாத்திரமானான், கொஞ்ச கொஞ்சமா மேல வந்தான். என்ன தான் அவனது அடாவடியான குணத்தைப் பற்றித் தெரிஞ்சிருந்தாலும் ஒரு வேளை படிப்பும், அனுபவங்களும் அவனை மாற்றிடுச்சோன்னு நினைச்ச அவனுடைய அப்பா, ஒரு கட்டத்தில் அவன் மேல் வச்ச நம்பிக்கையில் அவன்கிட்ட எல்லாப் பொறுப்புக்களையும் கொடுக்க வந்தார். ஆனால் ஏதோ காரணத்துக்காக நிறுத்திட்டார். அந்த நிமிஷம் தன் சுயத்தைக் காட்ட ஆரம்பிச்சான் வருண் தேஸாய்…..

அது வரை அவன் அமைதியா செய்துட்டு வந்த திட்டங்கள் எல்லாம் வெளிவந்துச்சு. அதாவது அவன் இல்லாமல் அவங்களுடைய எந்த ஒரு பிஸ்னஸும் நடக்க முடியாதுங்கிற அளவுக்கு அவருக்கே தெரியாம மறைமுகமா அவன் நிறையக் காரியங்களை வெகு சாமர்த்தியமா செஞ்சு முடிச்சிருந்தான். தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் ஒட்டு மொத்த கண்ட்ரோலையும் அவனுக்குக் கீழ கொண்டு வந்திருந்தான். அந்த நிமிஷம் அவங்க அப்பாவால் ஒண்ணுமே செய்ய முடியலை. வேற வழியில்லாமல் அவர் சேர்மென் போஸ்டில் இருந்து விலகி இவனை அவருடைய எல்லா நிறுவனங்களுக்கும் சி.இ.ஒவாக அமர்த்த வேண்டியதா போச்சு. இதோ இப்போ எல்லாமே இவன் கண்ட்ரோலில். ஹிட்லரின் கோட் போல. மேல வந்ததும் எல்லாத்தையும் அவனுக்கு ஏற்ற மாதிரி மாத்திட்டான்.. அது மட்டும் இல்லை, அவனுடைய நிறைய விஷயங்களுக்குத் துணையா இருக்கிறது அரசியல். குறிப்பா, ஒரு செண்ட்ரல் மினிஸ்டர்.."

"நானும் கேள்விப்பட்டிருக்கேன் அபிமன்யு.. ஆர்யன்.. ஆர்ய விக்னேஷ், ரைட்?"

"யெஸ் அவனே தான்."

"அப்படின்னா ஆர்யனுடைய தயவுல தான் இவனுடைய பிஸ்னஸ் சாம்ராஜ்யமே நடக்குதோ?"

"இல்லை, இவனுடைய தயவாலத் தான் ஆர்யன் தன்னுடைய அரசியல் கோட்டையையே கட்டியிருக்கான். ஐ மீன், வருண் தேஸாயை நம்பித்தான் ஆர்யனே இருக்கான்."

அபிமன்யு கூறி முடித்ததும் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் வருண் தேஸாயை நோக்கி இரட்டையர்கள் திரும்ப, அவங்கு அவன் கூறிக் கொண்டிருந்த வார்த்தைகளுக்கும் அபிமன்யூவின் கூற்றிற்கும் எத்தனை பொருத்தம் என்பது புரிந்தது.

“The quality of decision is like the well-timed swoop of a falcon which enables it to strike and destroy its victim. சன்சூவின் மேற்கோள் இது.. நாம் எடுக்கும் முடிவின் தரம் சரியான நேரத்தில் எதிரியின் மீது பாயும் பருந்தின் உத்தியை போன்றது. அது தான் பருந்துக்களின் வியூக முறை. நம்முடைய எதிரிகள் யார் என்று அறிந்திருப்பது மட்டும் முக்கியம் அல்ல, எப்பொழுது அவர்களை அணுக வேண்டும், அவர்களுடன் எப்பொழுது போரில் ஈடுபட வேண்டும், எப்படி அவர்களை வெற்றிக்கொள்ள வேண்டும் என்ற நேரத்தை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பது ரொம்ப முக்கியம்.. இதுவே எனது போர் முறையும் கூட.I mean this is my strategy when it comes to war. It doesn't matter if it is a business or personal.”

பேசி முடித்தவனாய் மிக ஸ்டையிலாக இறங்கி வந்து கொண்டிருந்த வருண் தேஸாயின் மீது இமைக்காது விழிகளைச் செலுத்திக் கொண்டிருந்தவர்கள், கீழே அமர்ந்திருப்பவர்களில் எவரையோ கண்டு அவன் புன்னகைப் புரியவும், அவர்களின் பார்வையும் அவ்விடத்தை நோக்கி நகர்ந்தது.

அங்கு அமர்ந்திருந்தவன் ஆர்ய விக்னேஷ்.. சுருக்கமாக ஆர்யன் என்று அழைக்கப்படுபவன். மத்திய அரசின் துறைமுக அமைச்சர் [Central minister of Ports Shipping and Waterways]

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தினைச் சேர்ந்த சிக்கல் என்ற சிற்றூரில் பிறந்து, படிப்படியாக அரசியலில் உயர்ந்து, தனது முப்பத்தி ஐந்து வயதிலேயே மத்திய அமைச்சராகப் பதவியில் அமர்ந்திருப்பவன்.

பாம்பிற்குப் பல்லில் விஷம் என்றால் இவனுக்கு உடம்பு முழுவதுமே விஷம் என்று கூறலாம்.

பார்வை, செயல், சிந்தனைகள், திட்டங்கள், முடிவுகள் என்று அனைத்திலுமே நஞ்சு கலந்திருக்கும். ஏறக்குறைய உலகிலேயே மிக அதிகமான நஞ்சு கொண்ட [inland taipan -The snake with the world’s deadliest venom] தைப்பான் பாம்பினைப் போன்றவன்.

ஆனால் அத்தகைய கொடியவனே ஒருவனை அண்டித்தான் அரசியலில் நிலைத்திருக்கின்றான் என்றால் அந்த ஒருவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும்.

தைப்பான் பாம்பினைப் போன்று விஷம் கொண்டவனா அல்லது எத்தகைய சக்தி வாய்ந்த எதிரிகளையும் அழிக்கும் திறமை கொண்ட அரிமாவா?

அல்லது காலமும் நேரமும் கனிந்து வரும் வரை எதிரியை பொறுமையாகக் கண்காணித்துக் கொண்டே வரும், தான் எதிர்பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் நிமிடத்தில் அவனை அதிரடியாய் அழிக்கும் ஃபால்கன் பருந்தா?

***********************************

ஒரு வழியாக மாநாடு இனிதே நிறைவு பெற, இருக்கைகளை விட்டு எழுந்த அபிமன்யுவும், இரட்டையர்களும் அரங்கத்தின் வாயிலை நோக்கி நடக்க, வெகு அருகில் கேட்ட கம்பீரமான வசீகரிக்கும் ஒரு குரல் அவர்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தது.

“ஐ ஆம் வருண்.. வருண் தேஸாய். தேஸாய் க்ரூப் ஆஃப் கம்பெனிஸின் சி.இ.ஒ..''

கூறிய வருண் தேஸாய் கரத்தை நீட்ட, சில மாதங்களுக்கு முன்னர்த்தான் சி.இ.ஒவாகப் பொறுப்பேற்றிருந்தாலும், தனது முதல் அடியே K.A.V குழுமத்தைப் போன்ற இன்னும் சில பெரு நிறுவனங்களை அடியோடு அழிக்கும் அடியே என்று சூளுரைத்திருந்த வருண் தேஸாயின் கரத்தை தன் வழக்கமான ஸ்டைலாக, தலை குனியாது, பார்வையை மட்டும் லேசாகக் கீழே தாழ்த்தி ஆழ்ந்து பார்த்த அபிமன்யு கிருஷ்ணா அவனது கரத்தைக் குலுக்க, அபிமன்யு ஒரு அடிவிட்டு நகர்ந்ததும், வருண் தேஸாயின் கையை இறுக்கப் பற்றிக் குலுக்கினார்கள் ஆதித்யாவும், அபிஷேக்கும்.

அபிமன்யுவின் உதாசீனத்தையும், இரட்டையர்களின் ஆர்வத்தையும் கண்டு தானும் அலட்சியமாய்ப் புன்னகைத்தவாறே அவர்களின் கைகளைக் குலுக்கியவனாய் பேசத் துவங்கியவனின் உரையாடல் சட்டென்று நின்று போனது.

அவனது அமைதியையும் அவன் பார்வைப் போகும் இடத்தையும் நோக்கித் திரும்பிய அபிமன்யுவின் உதடுகளில் இலேசான நகைப் படிந்தது.

அவர்களுக்குச் சற்றுத் தொலைவில் நின்றுக் கொண்டிருந்தவன் ஷிவ நந்தன், எஸ்.எஸ்.பி [Senior Superintendent of Police, Intelligence]

முப்பது வயதை சில நாட்களுக்கு முன்னர்த் தான் தொட்டிருந்த இளைஞன்.

பிறப்பும் படிப்பும் சென்னையில். தற்பொழுது பணிமாற்றம் செய்யப்பட்டிருப்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் தலைநகரமான மும்பைக்கு.

நெடுநெடுவென்று உயரமான தோற்றமும் இரும்பு போன்ற உடலும் கொண்ட ஷிவ நந்தனின் தேகம் மட்டும் கடினம் அல்ல, அவனது மனமும் அப்படியே.

காவல்துறையினரால் மட்டும் அல்ல, முழுத் தேசத்தினாலும் 'வசீகரிக்கும் தோற்றம் கொண்டவன் ஆனால் என்கௌண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்ற பெயரினால் புகழப்படும் ஒரு அழகான அரக்கன்’ என்றே விளிக்கப்படுபவன்.

தங்களிடம் பேசிக் கொண்டிருந்த வருண் தேஸாயின் கண்கள் பளபளக்க, அவனது மனத்திற்குள் பொங்கிக் கொண்டிருக்கும் ஆக்ரோஷத்தைப் புரிந்துக் கொண்டவர்களாய் புன்முறுவல் பூத்தவாறே அபிமன்யுவும், இரட்டையர்களும் அவ்விடத்தைவிட்டு நகர்ந்தனர்.

“ஷிவ நந்தனைப் பார்த்ததும் வருண் தேஸாயோட முகமே மாறுச்சுப் பார்த்தியா அபி.." என்றான் ஆதித்யா.

"ஆமா ஆதி. It is believed that in whichever district he goes, criminals are greately feared and they either go back to jail or leave the district. இப்படிப்பட்டவனை இங்க மும்பைக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணிருக்காங்கன்னா கண்டிப்பா ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கும். அந்தக் காரணம் இந்த வருண் தேஸாயா கூட இருக்கலாம்.."

"யெஸ், என்கவுன்டரின் பெயர் வரும்போதெல்லாம், ஷிவ நந்தனின் பெயர் தானாகவே மனசுல தோணும்னு சொல்வாங்க. அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இவன் 83 குற்றவாளிகளுடைய மரணத்தில் தொடர்புடையவன். அதாவது என்கௌண்டருங்கிற பெயரில் இவனால் கொல்லப்பட்டவர்கள் 83 பேருன்னு சொல்றாங்க, ஆனால் அதுக்கும் மேலேயும் இருக்கலாங்கிறது நிறையப் பேருடைய கணிப்பு. இங்கேயும் இனி நிறைய என்கௌண்டர்ஸை எதிர்ப்பார்க்கலாம்னு நினைக்கிறேன், ஏன் இவனுடைய என்கௌண்டர்ஸ் லிஸ்டுல இந்த வருண் தேஸாயோட பெயர் கூட இருக்கலாம்."

கூறியவாறே அபிமன்யு ஷிவ நந்தனின் மீது பார்வையைப் பதிக்க, சொல்லி வைத்தார் போன்று அவர்களின் புறம் திரும்பிய ஷிவ நந்தனும் நட்பாய் புன்னகைத்தான்.

அவனைக் கண்டு முறுவலித்த மூவரும் வெறும் தலையசைத்து அவனிடம் விடைப்பெற்றவர்கள் தங்களிடம் பேசுவதற்கு என்று விருப்பத்துடன் தங்களை நெருங்கும் பத்திரிக்கையாளார்கள் மற்றும் நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் துவங்கிய வேளை அங்கு ஷிவ நந்தனின் அலை பேசி அலறியது.

அழைத்தது ஷிவ நந்தனின் அத்தை மகள் துர்க ரூபினி.

இன்னும் சில நாட்களில் அவனது கரங்களினால் மாங்கல்யத்தைப் பெற்றுக்கொள்ளப் போகின்றவள்.

"என்ன துர்கா?"

"மா.. மா.. மாமா.. எ.. எ.. எங்க இ.. இ.. இருக்கீங்க?"

"ஏய் என்ன? அ ஆ இ ஈ உ ஊ-ன்னு எழுத்து பழகிட்டு இருக்கியா இன்னும், இப்படித் திக்குற?"

"ம்ப்ச்.."

"ம்ம்ம் சலிச்சுக்க, ஒரு வார்த்தை பேசுறதுக்குள்ள ஏன் தான் இப்படித் திக்குறியோ தெரியலை?"

"எனக்கு ஒண்ணும் திக்குவாயில்லை.."

"தெரியுதுல்ல, அப்புறம் என்ன?"

"உங்கக்கிட்ட பேசுறதுன்னாலே எனக்குப் ப.. பயம் தான் வருது. நான் என்ன செய்ய?"

"பொறந்ததுல இருந்து என்னைப் பார்த்துட்டு தானடி இருக்க, ஆனால் ஏதோ பேயைப் பார்த்த மாதிரி வாய் எல்லாம் இப்படிக் குழறுது."

"என் வாய் மட்டுமா குழறுது? உங்களைப் பார்த்தா எல்லாருடைய வாயும் தான் பயத்துல குழறுதுன்னு பேசிக்கிறாங்க?"

"தப்புச் செஞ்சவங்களுக்கு மட்டும் தான் அப்படி. நீ என்னடி தப்பு செஞ்ச இப்படித் திக்குறதுக்கு?”

"நான் தப்பெல்லாம் ஒண்ணும் செய்யலை. ஆனால் உங்கக்கிட பேசுறதுன்னாலே தானா எனக்குப் பயத்துல வியர்க்குது.. நான் என்ன செய்யறது?"

"ம்ப்ச்.. நீ திருந்தவே மாட்ட, சரி சொல்லு, எதுக்குக் கூப்பிட்ட?"

"எங்க இருக்கீங்கன்னு அம்மா கேட்கச் சொன்னாங்க?"

"இது என்ன கேள்வி? ஒரு முக்கியமான வேலையா டெல்லி போறேன்னு சொன்னேன் இல்லையா, அப்புறம் என்ன?"

"நம்மக் கல்யாணத்துக்குப் புடவை எடுக்கணுமில்ல, அதான் என்ன கலர் உங்களுக்குப் பிடிக்கும்னு அம்மா கேட்கச் சொன்னாங்க"

"புடவை எனக்கா, உனக்கா?"

"அச்சோ.. கல்யாணப் புடவை மாமா.."

"துர்கா, ஏகப்பட்ட பிஸ்னஸ்மென், பாலிட்டிஷியன்ஸ், இண்டஸ்ட்ரியலிஸ்ட்ஸ் எல்லாரும் கலந்துக்கிற ப்ரோக்ராம் இது. சென்ட்ரல் மினிஸ்டர்ஸ் கூட வந்திருக்காங்க. எல்லாத்துக்கும் ரொம்பப் பாதுகாப்புத் தேவைன்னு என்னை அனுப்பிச்சிருக்காங்க. இப்பப் போய்க் கல்யாணத்துக்குப் புடவை எடுக்கணும், என்ன கலர் பிடிச்சிருக்குமுன்னு ஃபோன் பண்ணிக் கேட்கிறியே, உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் என்ன செய்யப் போறேன்."

"அம்மா தான் கேட்கச் சொன்னாங்கன்னு சொன்னேனுல்ல."

"உனக்கு என்ன கலர் பிடிக்குமோ அதையே எடுத்.." என்றவன் முடிப்பதற்குள்,

"ரெட்.. ரெட் கலர்.. ஐ மீன், ரெட் கலர் வெட்டிங் சாரிஸ் தான் எப்பவும் என் சாய்ஸ்னு சொல்ல வந்தேன்." என்ற குரல் தன் வெகு சமீபத்தில் கேட்டதில், நன்கு பரிச்சயமான அந்தக் குரல் யாருடையது என்று தெரிந்திருந்ததில், கையில் பிடித்திருந்த அலைபேசியில் இறுக்கத்தைக் கூட்டினான், எஸ்.எஸ்.பி ஷிவ நந்தன் ஐ.பி.எஸ்.

"சாரி மிஸ்டர் ஷிவ நந்தன்.. உங்க வெட்டிங் பற்றிப் பேசிட்டு இருக்கும் போது டிஸ்டர்ப் பண்ணிட்டேனோ?"

தனக்குப் பின்னால் நின்றுப் பேசுபவனை நோக்கி மெள்ள திரும்பிப் பார்த்த ஷிவ நந்தனுக்கு அக்கணமே அவனை முழங்காலிடச் செய்து அவனது நெற்றிப்பொட்டில் சுட்டு கொன்றுவிடும் வெறி வந்தது.

ஆனால் அவனை அல்ல, அவனது நிழலைக் கூடத் தொட முடியாத உயரத்தில் அவன் இருக்கின்றான்.

அதுமட்டும் அல்ல, அவனைச் சுற்றிலும் பதவி ஏறியிருந்த இந்தச் சில மாதங்களுக்குள்ளாகவே அவன் அமைத்திருந்த பலம் வாய்ந்த கோட்டையை அணுக முடியாது இந்திய அரசாங்கமே திகைத்து நிற்கும் வேளையில் தன்னால் என்ன செய்ய இயலும்.

அரசியல்வாதிகள், பல பெரும் நிறுவன அதிபர்களின் கரங்களைப் பொம்மலாட்டக் கயிறுகள் போன்று தன் விரல்களுக்குள் முடிச்சிட்டு தன் விருப்பத்திற்கு ஏற்றவாறு இழுத்துக் கொண்டிருப்பவன்.

இதில் தற்பொழுது அவனுக்குப் பின்னால் இரும்பாக நிற்பது செண்ட்ரல் மினிஸ்டர் ஆர்ய விக்னேஷ்.

குருக்ஷேத்திரம்!

We do not meet people by accident. They are meant to cross our path for a reason!

அரிமாக்களின் வேட்டை!

APRIL 28 2023 வெள்ளிக்கிழமை முதல்!
Wow aarambamey asatala irruku. Waiting .....
 
Aww… GS 1 last scene ah apdiye recreate panni irukkenga… Abhimanyu Aadhithya Abhishek 😍😍😍 adhulayum intha Varun Desai varuwan la…

Ingayum 2 Lions
Shiv Nandan
Varun Desai
Arya Vignesh
🔥🔥🔥

But enakkennavo Durga Roobini yoda pair Varun nu than thonuthu
 
ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க. First of all I would like to wish you all A Very Happy Thanksgiving. Next a small announcement.
நான் குருக்ஷேத்திரம் -2 எழுதப் போவதாக ஏற்கனவே அறிவிச்சிருக்கேன். ஆனால் அதை எழுதி முடிப்பதற்குக் கொஞ்ச நாள் ஆகும் போல் தெரியுது. இதற்கு இடையில் நிறையப் பேர் எனக்குத்தனிப்பட்ட முறையில் அதைப்பற்றி மெசேஜ் அனுப்பிட்டு இருக்கீங்க. அதற்கான பதில் தான் இது.
குருக்ஷேத்திரம் - 2 -ல் ஆதித்யாவோ, அல்லது அபிமன்யூவோ அல்லது அபிஷேக்கோ வரப்போவது இல்லை. அவர்களது வாரிசுகளும் இந்தக் கதையில் இல்லை. ஆனால் இதுவும் குருக்ஷேத்திரம் தான்.
என்னால் சில காரணங்களால் டீஸர் எல்லாம் போட முடியலை. அதனால் உங்களுக்காகக் குருக்ஷேத்திரம் - 2 அரிமாக்களின் வேட்டையோட முதல் அத்தியாயத்தைக் கொடுத்திருக்கேன்.
ஏனோ இந்த Thanksgiving நாளில் இதனைப் போடணும்னு தோனுச்சு. உங்களுக்கு என்னுடைய நன்றிகளைச் சொல்வதற்காகவும் என்று எடுத்துக்கலாம். ஆனால் மீதிக் கதை அடுத்த வருடம் தான்.
ஸோ, இப்போதைக்கு இந்த முதல் அத்தியாயத்தைப் படித்து, இந்தக் கதையில் யாருக்கு இடையில் குருக்ஷேத்திரப் போர் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கங்க. Thank you for everything dearies!

(PS : இடையிடையில் ஆங்கில வாக்கியங்கள் வரும். தயவு செய்து Google translator use பண்ணித்தெரிஞ்சுக்கங்க. தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதினால் சரியா வர மாட்டேங்குது, அந்த ஸ்டையிலை மாற்றலாம்னுதான் இப்படி எழுதியிருக்கேன். Please adjust.)

உங்கள்

ஜேபி.
Great Ma'am.Awaiting eagerly to read
 
Superb
 
Vijinandha

New member
Awesome shiv fan agiten .. waiting for April 28 th .. but abi ,aadhi,abhisek romba miss pannuven.. guruchetram na ivanga than mind la varanga
 
Subageetha

Well-known member
ஃப்ரெண்ட்ஸ்,

எல்லாரும் எப்படி இருக்கீங்க. First of all I would like to wish you all A Very Happy Thanksgiving. Next a small announcement.
நான் குருக்ஷேத்திரம் -2 எழுதப் போவதாக ஏற்கனவே அறிவிச்சிருக்கேன். ஆனால் அதை எழுதி முடிப்பதற்குக் கொஞ்ச நாள் ஆகும் போல் தெரியுது. இதற்கு இடையில் நிறையப் பேர் எனக்குத்தனிப்பட்ட முறையில் அதைப்பற்றி மெசேஜ் அனுப்பிட்டு இருக்கீங்க. அதற்கான பதில் தான் இது.
குருக்ஷேத்திரம் - 2 -ல் ஆதித்யாவோ, அல்லது அபிமன்யூவோ அல்லது அபிஷேக்கோ வரப்போவது இல்லை. அவர்களது வாரிசுகளும் இந்தக் கதையில் இல்லை. ஆனால் இதுவும் குருக்ஷேத்திரம் தான்.
என்னால் சில காரணங்களால் டீஸர் எல்லாம் போட முடியலை. அதனால் உங்களுக்காகக் குருக்ஷேத்திரம் - 2 அரிமாக்களின் வேட்டையோட முதல் அத்தியாயத்தைக் கொடுத்திருக்கேன்.
ஏனோ இந்த Thanksgiving நாளில் இதனைப் போடணும்னு தோனுச்சு. உங்களுக்கு என்னுடைய நன்றிகளைச் சொல்வதற்காகவும் என்று எடுத்துக்கலாம். ஆனால் மீதிக் கதை அடுத்த வருடம் தான்.
ஸோ, இப்போதைக்கு இந்த முதல் அத்தியாயத்தைப் படித்து, இந்தக் கதையில் யாருக்கு இடையில் குருக்ஷேத்திரப் போர் நடக்கப் போகுதுன்னு தெரிஞ்சுக்கங்க. Thank you for everything dearies!

(PS : இடையிடையில் ஆங்கில வாக்கியங்கள் வரும். தயவு செய்து Google translator use பண்ணித்தெரிஞ்சுக்கங்க. தமிழும் ஆங்கிலமும் கலந்து எழுதினால் சரியா வர மாட்டேங்குது, அந்த ஸ்டையிலை மாற்றலாம்னுதான் இப்படி எழுதியிருக்கேன். Please adjust.)

உங்கள்

ஜேபி.
வைட்டிங்...
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top