JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 31 & 32

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 31

இன்னும் இரண்டு நாட்களில் தேவேந்திரன் குடும்பத்துடன் ஸ்ரீமதியும், துர்காவும் இணைந்து தங்களின் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதென்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்ததால் அதற்கான வேலைகளில் பெண்கள் அனைவரும் ஈடுப்பட்டிருந்தனர்.

"நல்லப்படியா விசேஷம் முடிஞ்சிருச்சு. இன்னும் ரெண்டு நாளுல ஊரைப் பார்க்க கிளம்பணும்."

கூறிய சாவித்திரியைத் திரும்பிப் பார்த்த ஸ்ரீமதிக்கு தன் அண்ணியின் முகத்தில் தெரிந்த நிம்மதிக்கான காரணம் நன்றாகவே புரிந்தது.

இரு வம்சாவளியினரும் இணைந்து ஒன்றாகக் கூடி நடத்திய சீமந்தம் அல்லவா?

அதுவும் மாமனார் வீட்டு வாயில்படியில் கூடக் கால் பதிக்கமாட்டேன் என்று பிடிவாதமாய் மறுத்த மகன், ஒரு வழியாய் மனைவிக்காக விட்டுக்கொடுத்து மன நிறைவுடன் பங்கேற்று நடந்து முடிந்த வளைகாப்பு அல்லவா?

ஆயினும் நூறு நல்லவர்கள் மத்தியில் ஓரிரு துஷ்டர்களாவது இருப்பார்களே.

"ஆமா, என்ன நல்லப்படியா விசேஷம் முடிஞ்சிருச்சு? அதான் வந்தானே அவன்? ஹப்பா! அவன் வந்த வேகம் என்ன? அவன் மொகத்துல தெரிஞ்ச ரௌத்திரம் என்ன? அதுவும் நம்ம தம்பி ஷிவாவோட சட்டைக்காலரைப் பிடிச்சப்போ அவனுக்கு இருந்த ஆக்ரோஷம் என்ன? போச்சுடா, இந்த வளைகாப்பு நடந்த மாதிரிதான்னு நான் நினைச்சேன்."

கூறியது அதே ஸ்ரீமதியின் இளைய அண்ணன் மனைவி சுமதி தான்.

"நான் என்னவோ அந்த வருண் தேஸாங்கிறவன் பெரிய ஆளு, அரசியல்வட்டாரத்திலேயும் செல்வாக்கு இருக்குறவன். பார்க்கிறதுக்கு ஏடாகூடமா இருப்பான்னுல்ல நினைச்சேன். ஆனால் என்னவோ பெரிய சினிமாக்காரன் மாதிரி இளவயசா கட்டுமஸ்தான உடம்போட இல்ல இருக்கான். இவன் எல்லாம் ஒரு பொண்ண கடத்திட்டுப் போய் அதுவும் மாசக்கணக்கா அடைச்சு வச்சிருந்து அவள ஒண்ணுமே செய்யலன்னா நம்புற மாதிரியா இருக்கு."

ஒன்றாய் கூட்டுக்குடும்பமாக ஒற்றைக் கூறைக்குக் கீழ் வாழ்ந்தவர்களாய், பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தது போல், விறகு அடுப்புகளில் சமைத்து, வட்டமாய் அமர்ந்து உணவு உண்டு களித்த குடும்பம் தேவேந்திரனின் பெற்றோர் குடும்பம்.

அதே போல் தன் உடன்பிறந்தோரின் குடும்பத்துடன் இணைந்து வாழ வேண்டும் என்று பேராவல் கொண்ட தேவேந்திரன், இளம் தலைமுறையினரின் அன்பான வேண்டுகோளிற்கு இணங்க சென்னைக்கு இடமாறியது உட்படப் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து போக, ஆனால் இன்று தன் தம்பி மனைவியின் கூறுபோடும் வார்த்தைகளில் மேலும் சோர்ந்து போயிருந்தார்.

ஆயினும் தங்கையைத் தேற்றும் பொறுப்பும் அவருக்கு இருந்ததினால், "சுமதியைப் பத்தி தான் நமக்கு ஏற்கானவே நல்லாவே தெரியுமே. இன்னும் ஏன் சுமதியை எல்லாம் ஒரு பெரிய மனுசியா நினைச்சு முடிவு எடுக்கிற ஸ்ரீமதி." என்றார்.

"அண்ணா, அவங்களை வச்சு நா முடிவு எடுக்கலைண்ணா. ஆனாலும் அந்தப் பையன்.."

"யாரு?"

"அந்த வ.. வ.. வருண் தேஸாய்.."

"அவன் பேரைக் கேட்டாலே நீ உன் மவ மாதிரி திக்கு. சரி சொல்லு, அவனுக்கென்ன?"

"ஏற்கனவே அவனையும் துர்காவையும் சேர்த்து வச்சு நம்ம ஊருல்ல ஏகப்பட்ட பேச்சு.." என்றவரை முடிக்கவிடாது, "ஏன் ஸ்ரீமதி உனக்கு உன் பொண்ணு மேல நம்பிக்கை இல்லையா?" என்றார் ஒரு மூத்த அண்ணனின் உரிமையான கடுமையுடன்.

சில கணங்கள் அண்ணனுக்கு அடங்கி அமைதிக் காத்த ஸ்ரீமதியின் உள்ளத்தில் என்னவிதமான எண்ணங்கள் தோன்றியதோ அவரது மூச்சுகள் நெடுமூச்சாய் வெளிவர, அவரின் அமைதியின்மையும் கவலையும் மூத்தவராய் தேவேந்திரனுக்கும் புரிந்தது.

தங்கையை நெருங்கியவர் அவரின் தோள் பற்றியவராய்,

"உன்னுடைய பயம் எனக்குப் புரியுது ஸ்ரீமதி. ஆனால் நீ பயப்படற மாதிரி எல்லாம் நடக்காது. துர்கா நம்ம வீட்டுப் பொண்ணு. நம்ம பேச்சை மீறி அவ எதுவும் செய்ய மாட்டாள். ஒரு வேளை நம்ம பேச்சை அவ கேட்கலைன்னாலும் அவ மாமன் பேச்சை கண்டிப்பா அவ தட்டவே மாட்டாள். ஷிவா இருக்குற வரைக்கும் அந்த வருண் தேஸாயாலும் எதுவும் பண்ண முடியாது. பயப்படாமல் மேற்கொண்டு ஆகுற வேலையைப் பாரு. நாளை மறுநாள் காலையே ஊருக்கு கிளம்பணும்." என்றார், கட்டளையும் ஆறுதலும் கலந்த தொனியில்.

ஆனால் அவரது மகன் மட்டுமல்ல, அந்தத் துர்காவே தடுத்தாலும் நிறுத்த முடியாத திட்டத்தைத் தன் மனதில் ஏற்கனவே வகுத்து முடித்திருந்தான், இவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாய் அதிர்ச்சியில் உறையச் செய்திருந்த அந்த இளம் தொழிலதிபன்.

***********************

"துர்கா, என்ன கிளம்பிட்டியா?"

"இன்னும் ரெண்டு நிமிஷம் சிதாரா."

"நாம வரோம்னு அப்பா ஏற்கனவே கடை ஓனருக்குத் தெரியப்படுத்திட்டாங்க துர்கா. அவங்க நமக்காக வெயிட் பண்ணிட்டுருப்பாங்க, சீக்கிரம் வா.."

வளைக்காப்பிற்கு மறுநாள் தோழியுடன் இணைந்து மும்பையின் பாந்த்ராவில் உள்ள அந்த மிகப்பெரிய வணிக வளாகத்தில் [mall] அமைந்துள்ள பிரபலமான துணிக்கடை ஒன்றுக்குச் செல்வது என்று தீர்மானித்திருந்தாள் சிதாரா.

அவளுடன் இணைந்து அவள் அன்னையும், ஷிவாவின் தங்கை தெய்வாம்பிகையும், சாவித்திரியும் ஸ்ரீமதியும் செல்வது என்று திட்டமிடப்பட்டிருக்க, ஆனால் ஏனோ பெரியவர்களால் இளம்பெண்களுடன் இணைந்துச் செல்ல முடியவில்லை.

"எனக்குக் கொஞ்சம் அசதியா இருக்கு ஸ்ரீமதி. நீ பொண்ணுங்களோட போய்ட்டு வா."

"இல்ல அண்ணி, எனக்கும் என்னவோ மாதிரி தான் இருக்கு. நாளைக்குக் காலையில சீக்கிரமே ஊருக்கு வேற கிளம்பணும். அதான் சிதாராவோட அம்மா போறாங்கல்ல. அவங்க எல்லாரும் போயிட்டு வரட்டும்."

அன்று நடக்கவிருக்கும் அசம்பாவிதத்தைப் பற்றி அறியாது ஸ்ரீமதியும் சாவித்திரியுடன் இணைந்து வீட்டிலேயே தங்கிவிட, சிதாரா தன் அன்னையுடனும் துர்கா மற்றும் தெய்வாம்பிகையுடனும் சேர்ந்து வீட்டில் இருந்து கிளம்பிய நேரம், வருணின் ஜீப் அதே வணிக வளாகத்தை நோக்கிப் பயணிக்கத் துவங்கியது.

நேரம்: மாலை 6 மணி.

மல்லியக்குறிச்சி கிராமத்தினை ஒட்டி இருக்கும் சில துணிக்கடைகளுக்கும், சென்னையில் அவ்வப்பொழுது அமையும் சந்தர்ப்பங்களில் தேவேந்திரன் குடும்பத்துடன் இணைந்து சென்றிருக்கும் சில கடைகளையும் தவிர, அவ்வளவாக வணிக வளாகங்களை எல்லாம் பார்த்திராதவள் துர்கா.

அதுவும் நேற்று வருணைச் சந்தித்ததில் இருந்து அவனுடன் அலைபேசியில் பேசியது வரை எல்லாவற்றையும் நினைத்தவளாய், காற்றில் சுழற்றியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காகிதமாக மனதிற்குள் வேதனையுடன் உழன்றுக் கொண்டிருந்தவளுக்கு 'ஷாப்பிங்'-கில் ஈடுபட விருப்பமில்லை.

ஆயினும் கர்ப்பிணியான தோழியின் அன்புக் கட்டளையையும் மீற மனம் இடம் கொடுக்கவில்லை.

அவளுடன் இணைந்துக் கிளம்பியவள் அந்த வணிக வளாகத்திற்குள் நுழையவும், அதன் அலங்கரிக்கைகளிலும், ஆடம்பரத்திலும், கண்களைக் கூசச் செய்யும் அலங்கார மின் விளக்குகளின் நவீன வடிவமைப்புகளிலும் சொக்கித்தான் போனாள்.

"ரொம்ப அழகா இருக்கு சிதாரா இந்த இடம்."

தோழியின் கைப்பிடித்துச் சொன்னவள் அவளுக்கும் தெய்வாம்பிகைக்கும் இடையில் சேர்ந்து நடக்க, அவர்களின் வரவை எதிர்நோக்கியது போல் நின்று கொண்டிருந்த வடநாட்டவர்கள் சிலர் அவர்களை நோக்கி நடந்து வந்தனர்.

பெண்களை நெருங்கியதும், "மிஸஸ். சிதாரா நந்தன்.." எனவும் அவர்கள் யாரென்று புரிந்து கொண்ட சிதாரா அவர்களுடன் இணைந்து தானும் நடந்தாள்.

"உங்களுக்காகக் காத்துட்டு இருந்தோம். நீங்க கேட்ட மாதிரியே லேட்டஸ்ட் டிஸைன்ஸ் டிஸைனர் சேரிஸ் எல்லாம் எடுத்து வச்சிருக்கோம்."

கூறியவர்களாய் பெண்களை அவர்கள் அழைத்துச் சென்றது, அந்த வனிக வளாகத்தில் அமைந்துள்ள பிரபலமான துணிக்கடை ஒன்றுக்கு.

கடைக்குள் நுழைந்த சிதாரா, ஒவ்வொரு இடத்தையும் அகல விரிந்த கண்களுடன் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் தோழியின் கைப்பற்றியவள், மனிஷ் மல்ஹோத்ரா, நீத்தா லுல்லா, ரீத்துக்குமார் ஆகிய பிரபல டிசைனர்களின் புடவைகள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.

அவள் கூற கூற ஒவ்வொரு புடவையாக அவர்களுக்கு முன் விற்பனையாளர்கள் விரித்து வைக்க, சிதாராவை நெருங்கி வந்து நின்றார் கிட்டத்தட்ட அறுபது வயதான அந்த மிகப்பெரிய கடையின் உரிமையாளர்.

"சாரி அங்கிள். கொஞ்சம் லேட்டாகிடுச்சு."

"இது என்ன புதுசா சாரி எல்லாம் சொல்லிட்டு இருக்க, கமான் சிதாரா. நீ கேட்ட மாதிரியே தான் எல்லாத்தையும் எடுத்து வச்சிருக்கச் சொன்னேன். உனக்குப் பிடிச்சிருக்கா?"

கூறியவராய் சிதாராவின் தலையைக் கோதினார் அந்தப் பெரியவர்.

அவருக்கு உரிமையானது அந்தக் கடை மட்டுமல்ல, ஏறக்குறைய அந்த வணிக வளாகமே அவருக்குச் சொந்தமானது என்பதைக் கேள்விப்பட்டிருந்ததில், சிதாராவின் வசதி இன்னும் அதிகளவில் துர்காவிற்குப் புரிந்து போனது.

இவ்வளவு பெரிய கோடீஸ்வர பரம்பரையைச் சேர்ந்த தன் ஒரே மகளை ஒருவனுக்குத் திருமணம் செய்விக்கும் அவளின் தந்தை, எவ்வளவு பெரிய ஆளை தங்களின் மருமகனாகத் தேர்ந்தெடுப்பார்??

அந்த வருணை நேற்று அழைத்து, என்னவோ தான் மட்டும் தான் அவன் சந்தித்த ஒரே பெண் போல் உரிமையுடன் பேசியது எவ்வளவு முட்டாள்தனம் என்று மீண்டும் மீண்டும் நொந்து கொண்டிருக்க, அதே நேரம் அவளின் அலைபேசி தகவல் வந்ததற்கான அறிவிப்பாய் ஓசை எழுப்பியது.

எடுத்துப் பார்த்தவளின் நெஞ்சம் தாறுமாறாய் எகிறித் துடிக்கத் துவங்கியது.

"I am waiting outside. Come soon."

பெரிதாக ஆங்கில அறிவு இல்லை என்றாலும் வந்திருக்கும் இந்தத் தகவலைக் கூடப் புரிந்து கொள்ள இயலாத பேதை அல்ல அவள்.

ஆனாலும் தகவலை முழுமையாக உணர்ந்து கொள்ளும் நிலையிலும் அவள் இல்லை.

'என்னது இது? இவர் எப்படி? நேத்து நான் ஃபோன் பண்ணினப்போ அவ்வளவு வேண்டா வெறுப்பாய் பேசினார். ஆனால் இப்போ என் ஃபோனுக்கே தகவல் அனுப்பியிருக்கார். அதுவும் உடனே வான்னு.'

மனம் புலம்ப, அவளின் அந்தச் சில நிமிடங்களின் தாமதத்தைக் கூடப் பொறுக்கும் அளவிற்கான பொறுமை எனக்கில்லை என்பது போல் மீண்டும் அவனிடம் இருந்து தகவல் இருந்தது.

"இங்கிலிஷ் உனக்குத் தெரியலையா, இல்லை நான் அனுப்பின தகவல் உனக்குப் புரியலையா? நான் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இன்னும் ரெண்டு நிமிஷத்துல நீ வெளியில் இருக்கணும். இல்லைன்னா நீ இருக்குற இடத்துக்கு நான் வருவேன்."

என்ன அதிகாரமான தகவல்! இல்லையில்லை உத்தரவு!!

ஆனால் எப்படி வெளியில் செல்வது? அதுவும் சிதாராவின் அம்மாவும் கூட இருக்கும் போது?

யோசித்தவளாய் சிதாராவின் விரல் நுனியைப் பற்றியவள் அவளின் காதோரம் சாய்ந்து, "சிதாரா எனக்குப் பாத்ரூம் போகணும். நீ சேலையை எடுத்துட்டு இரு, நான் உடனே வந்துடுறேன்.." என்றாள் மெல்லிய குரலில்.

"பாத்ரூம் எங்க இருக்குன்னு தெரியுமா துர்கா?"

"ம்ம்ம், வர வழியில் போர்ட் பார்த்தேன். நான் போயிட்டு வந்துடுறேன்.."

“இரு நானும் வரேன்.”

“ஹேய், நான் என்ன சின்னக் குழந்தையா? இங்க கடைக்குள்ள தான் லேடிஸ் ரெஸ்ட் ரூமுன்னு போடு போட்டு இருந்தது. நான் போயிட்டு உடனே வந்துடுறேன்.”

"நான் வேணா உன் கூட வரட்டுமா துர்கா."

தெய்வாம்பிகையின் கூற்றில் அவள் புறம் திரும்பியவள்,

"எனக்குத் துணையா வரதுக்கு இப்படி ரெண்டு பேரும் போட்டிப் போடுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லைப்பா." என்று மென்மையாய் சிரித்தவளாய், "அஞ்சே நிமிஷத்துல வந்துடுறேன். நீயும் சிதாராவும் சேர்ந்துமா புடவைங்களைப் பார்த்துட்டு இருங்க.." என்று கூறிச் சென்றவள் ஐந்து நிமிடங்கள் அல்ல பத்து, பதினைந்து, இருபது, ஏன் ஏறக்குறைய அரைமணி நேரம் கடந்தும் வரவில்லை.

***************************

"என்ன முகம் இப்படி ரெட் கலர்ல மாறி இருக்கு. எதிர்பாராதவிதமா திடீர்னு என்னைப் பார்த்ததில் வெட்கமா, இல்லை பார்க்கக் கூடாத எதையோ பார்த்துட்ட மாதிரி திகிலா."

தன் அருகில், அதாவது தன்னை உரசிக் கொண்டு வெகு அருகில் அமர்ந்து கிண்டலாக உரைப்பவனின் கூற்று பெண்ணவளைச் சென்று சேரவே இல்லை.

வெளியில் காத்திருக்கின்றேன் என்று கூறியவனின் தகவலை நம்பி வணிக வளாகத்தின் வாயிலை நோக்கி விடுவிடுவென்று நடந்து வந்து கொண்டிருந்தவளின் அலைபேசியில் மீண்டும் ஒரு தகவல் வந்தது.

“Where are you?”

கடவுளே! இதென்ன ஒரு நிமிஷத்துக்குள்ள இத்தனை மெசேஜ்.

உள்ளம் அரற்ற நடந்தவாறே அவனுக்குப் பதில் தகவல் அனுப்ப எண்ணியவள், “நீங்க..” என்று டைப் செய்வதற்குள், "உனக்கும் நிறைய வருணைத் தெரியுமான்னு கண்டிப்பா நான் கேட்க மாட்டேன்.. நான் யாருன்னு உனக்குத் தெரியும். சீக்கிரம் வா.." என்ற பதிலில் ப்ரேக் இட்டது போல் அவள் கால்கள் ஒரு விநாடி நின்றன.

‘என்ன இவரு? ஏன் இப்படி எல்லாம் சொல்றாரு? என்னை யாராவது பார்த்துட்டால் என்ன செய்றது? இதெல்லாம் அவருக்குப் புரியாதா?’

நினைத்தவளாய் ஆழ பெருமூச்செடுத்து ஒருவழியாய் தன்னை இழுத்துப் பிடித்தவாறே வேக அடிகள் எடுத்து வைத்து வந்தவளாய் வணிக வளாகத்தின் பிரதான வாயிலில் வந்து நிற்க, அவளை இடித்துவிடுவது போல் வந்து நின்றான் ஒருவன்.

"சார் உங்களுக்காகப் பார்கிங் லாட்டில் வெயிட் பண்ணிட்டு இருக்கார்."

"பார்க்கிங் லாட்டிலா?"

"யெஸ், இப்படியே லெஃப்டில் திரும்பினா பார்க்கிங் பில்டிங்கோட எண்ட்ரன்ஸ் இருக்கு. அதில் நுழைஞ்சீங்கன்னா ரைட்டில் எலிவேட்டர் (lift) இருக்கு. அதுல மூன்றாவது மாடிக்கு போங்க, அங்க சார் உங்களுக்காக வேயிட் பண்ணிட்டு இருக்காரு, கருப்பு கலர் ஜீப்.. மெர்சிடிஸ் ஜி63-யில். [mercedes g63 amg]"

‘என்ன சொல்கின்றான் இவன்? மெர்சிடிஸ் ஜி63 எப்படி இருக்கும்?’ என்று அவள் கிரகிக்கத் துவங்கு முன்னரேயே மாயமாய் மறைந்துவிட்டான் அவன்.

யார் இவன் என்று யோசித்தவாறே நடந்தவளின் கால்கள் ஏற்கனவே பயில்வித்திருந்தது போல் சரியாக மின்தூக்கியினுள் செல்ல, அவளது கைகள் தானாக மூன்று என்ற எண்ணை அழுத்தியது.

'பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன், இவன் என்னடான்னா எங்கெங்கெயோ போகச் சொல்றானே, சீக்கிரம் திரும்பிப் போகலைன்னா சிதாரா என்னைக் கொல்லப் போறா.'

எண்ணங்கள் அலைமோத, மின்தூக்கியினில் இருந்து வெளியே வந்து நின்றவளாய் சுற்றுமுற்றும் பார்ப்பவளின் தோற்றம்,

சில அடிகள் தொலைவே தன் வாகனத்தில் அமர்ந்தவாறே அவளைப் பார்த்திருந்த வருணுக்குள் மெல்லிய தென்றலைச் சுகமாய் இறக்க, அக்கணம் அவனது ஜீப்பில் பாடிக்கொண்டிருந்த அந்தப் பாடலின் வரிகளும் அவனது இதயத்தில் ஒரு பரவசத்தைப் பதித்தது.

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே..

உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே..

நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனதருகே நேரம் போதவில்லையே..

எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே... இது எதுவோ...

இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே... பூந்தளிரே...

வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை பாவை பார்வை மொழி பேசுமே!

நேற்று தேவை இல்லை, நாளை தேவை இல்லை, இன்று இந்த நொடி போதுமே!

வேறின்றி, விதையின்றி, வின் தூவும் மழையின்றி

இது என்ன இவன் தோட்டம் பூ பூக்குதே!

வாளின்றி, போரின்றி, வலிக்கின்ற யுத்தமின்றி

இது என்ன இவன் அன்பு எனை வெல்லுதே!

இதயம் முழுக்க இருக்கும் இந்தத் தயக்கம், எங்குக் கொண்டு நிறுத்தும்..

இதை அறிய எங்குக் கிடைக்கும் விளக்கம்..

அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்..

பூந்தளிரே…பாடலைக் கேட்டுக் கொண்டிருந்தவனின் தலையோ அவனையும் அறியாதவகையில் சற்று இடப்புறமாய்ச் சாய, அவனது விழிகளோ பெண்ணவளின் உச்சி வகிட்டில் துவங்கி பாதம் வரை படர ஆரம்பித்தது.

எந்த மேகம் இது, எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே..

எந்த உறவு இது, எதுவும் புரியவில்லை என்ற போதும் இது நீளுதே..

யாரென்று அறியாமல் பேர் கூடத் தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானதே..

ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல்

இவள் போகும் வழியெங்கும் மனம் போகுதே..

பாதை முடிந்த பிறகும், இந்த உலகில், பயணம் முடிவதில்லையே..

காற்றில் பறந்தே பறவை மறைந்த பிறகும்

இல்லை தொடங்கும் நடனம் முடிவதில்லையே, இது எதுவோ!

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே பார்ததாரும் இல்லையே

உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே

நிமிடங்கள் கடக்க, அமைதியாய் அமர்ந்திருந்தவனின் கருப்பு ஜீப்பை சில அடிகள் தொலைவில் இருந்தவாறே கண்டுப்பிடித்தவள் மெல்ல அதனை நோக்கி நடந்துவர, அவள் ஜீப்பை நெருங்கிய நேரம், "ஜாஃபர்.." என்றவனின் கட்டளைக்கு இணங்க அவள் சுதாரிக்கும் முன் இழுத்து அடைக்கப்பட்டாள், அந்தக் கருப்பு நிற மெர்சிடிஸ் வாகனத்தில்.

"ஐயோ! யார் நீங்க? என்னை விடுங்க.."

உச்சஸ்தாயியில் அலறத் துவங்கியவளின் வார்த்தைகள் அவளது தொண்டைக்குள்ளேயே மௌனமாய் மூழ்கத் துவங்கின, தனக்கு அருகில் கம்பீரமாய்த் தனது இடையை இறுக்கப் பற்றி அமர்ந்திருந்தவனைக் கண்டதில்.

"நீ.. நீ.. நீங்க.."

அவளின் அதிர்ச்சியும் கலக்கமும் பீதியும் புரிந்திருந்தாலும் சட்டை செய்யாதவனாய் அவளை நன்றாகவே உரசியவாறே மேலும் நெருங்கி அமர்ந்தவன், "என்ன முகம் இப்படி ரெட் கலர்ல மாறி இருக்கு.. எதிர்பாராதவிதமா திடீர்னு என்னைப் பார்த்ததில் வந்த வெட்கமா? இல்லை பார்க்கக் கூடாத எதையோ பார்த்துட்ட மாதிரியான அதிர்ச்சியால் வந்த திகிலா?" என்றான் சிறு கிண்டலுடன்.

அவனது கேள்விக்குப் பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை.

காரணம் அந்த மெர்சிடிஸ் ஜி 63, சூறாவளியையும் தோற்கடிக்கும் வேகத்தில் அந்தப் பார்க்கிங் லாட்டைக் கடந்து வணிக வளாகத்தை விட்டு வெளியேறிய வேகத்தில் அவளின் மூளையை மழுங்கடிக்கச் செய்யும் அளவிற்குத் தோன்றிய கேள்விக்கான பதில் அவளை உறையச் செய்திருந்ததே!

'திரும்பவுமா? ஏன்? நேத்து ஷிவா மாமாவிடம் ஏதோ கோபமா பேசினாரே? அப்படின்னா மாமாவை பழிவாங்க திரும்பவும் என்னைத் தூக்கிட்டுப் போறாரா? ஒரு வேளை நான் நேத்து இவரைக் கூப்பிட்டது ரொம்பத் தப்போ.'

'கடவுளே! மாமாவைப் பழிவாங்குற பகடையக்காயா தான் இவர் எப்பவும் என்னை நினைச்சிட்டிருக்காரா? ஆம்பளைங்குள்ள நடக்குற யுத்தத்துல பொம்பளைங்களைப் பணையக் கைதியா வைக்கிறது இது முதல் இல்லை. ஆனா இதுக்கு முடிவும் இல்லையா??'

பேதையவளின் உள்ளம் உதிரத்தை வடித்த அதே வேளையில், அவளை இறுக்கப் பற்றியிருந்தவனின் இராட்ஷச பலத்தில் இரத்தத்தையும் விடச் செக்கச்செவேலன கன்றிப் போனது புடவைக்கு இடையில் வெளிப்போந்த அவளின் மெல்லிடை.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 32

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;

அகநானூறு 86

பொருள்:

உழுந்த வடையுடன் விருந்துணவு படைக்கப்பட்டது.

பந்தற்கால் நட்டுப் பந்தல் போடப்பட்டது.

அந்தப் பந்தலில் புதுமணல் பரப்பப்பட்டது.

மனையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டது.

மாலைகள் தொங்கவிடப்பட்டன.

இருள் நீக்கப்பட்டிருந்தது.

அது வைகறைப் பொழுது. (கவின்பெறு காலை)

வட்டத்தைக் கொல்லும் பிறை இல்லாமல் முழு வளைவுடன் காணப்பட்ட வெள்ளை-நிலா தோன்றிய காலம் அது.

அது கெடுதி இல்லாத விழுமிய புகழைக் கொண்ட தலைமையான நாள்.

*************************************************

"ஏய்! என்னடி சொல்ற?'

"ஆமாங்க, பாத்ரூம் போறேன்னு சொல்லிட்டு தான் போனா. ஆனால் இவ்வளவு நேரமாகியும் திரும்பி வரலை."

"நீயும் கூடப் போயிருக்க வேண்டியது தானே.."

"இந்தக் கடைக்குள்ளேயே தான ரெஸ்ட் ரூம் இருக்கு, நானே போய்க்கிறேன்னு சொன்னா. ஆனால் கடைசியில அவ அங்க போகலை. கடைக்கு வெளியப் போனதா தான் சொல்றாங்க."

"கடைக்கு வெளியேவா? ஏன்?

"எனக்கு எப்படித் தெரியும்?"

"ம்ப்ச், சரி தெய்வா எங்க?

"அவங்களும் எங்கக்கூடத் தான் இருக்காங்க."

"அப்போ தனியாவா அவளைப் போகவிட்ட?"

"****"

"என்னடி பதில் பேச மாட்டேங்குற? இதென்ன தமிழ்நாடா? அவளுக்குத் தமிழ் தவிர வேற என்ன தெரியும்? இதுல மும்பையில இருக்கிற ஒரு ஸ்டோரில் இருந்து தனியா வெளியப் போறவளுக்குத் துணையாப் போகணும்னு உனக்குத் தெரியாதா?"

கணவனின் கேள்வியில் அதுவரை தோழியைக் காணவில்லை என்று பரிதவித்து அமைதிக் காத்திருந்தவளின் பொறுமை ஏகத்துக்கு பறந்து போனது.

"எந்த ஸ்டேட்டா இருந்தாலும் இப்ப எல்லாரும் ரெஸ்ட் ரூம் வாசலில் படம் வரைஞ்சிருக்காங்க. உங்க அத்தை மகளுக்கு அதுக்கூடப் புரியாதா என்ன?"

"ம்ப்ச்.."

"என்ன சலிச்சிக்கிறீங்க? அவ உங்களுக்கு அத்த பொண்ணுன்னா எனக்கு க்ளோஸ் ஃப்ரெண்ட். அவளுக்கு எதுவும் ஒண்ணுன்னா எனக்கும் படபடப்பா தான் இருக்கும், ஆனால் அதுக்காக என்னை blame [பழி] பண்ணாதீங்க..”

படபடவென்று பேசியவளுக்கு மூச்சு வாங்கியதில் அவளின் நெடுமூச்சுச் சத்தத்தை மறுமுனையில் கேட்ட ஷிவாவும் கர்ப்பிணியாய் இருக்கும் மனைவியின் நிலையை நினைத்து சற்று இறங்கி வந்தான்.

"இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற?”

“பின்ன, நீங்க பேசுற பேச்சுக்கு நான் டென்ஷன் ஆகாமல் இருந்தா தான் அதிசயம்.”

“சரி சரி, நீ தெய்வாக்கிட்ட ஃபோன கொடு."

பதிலேதும் கூறாது தன் நார்த்தனாரிடம் அலைபேசியைக் கொடுக்க, அவளும் அதே பதிலைக் கூறியதில் அலுத்துப் போனான் ஷிவா.

ஆனாலும் அபாய ஒலி ஒன்று அவனது உள்மனதிற்குள் திரும்பத் திரும்ப அவனை எச்சரிப்பது போல் ஒலித்துக் கொண்டே இருக்க, நிமிடங்கள் சில யோசனையில் ஆழ்ந்தவனுக்குப் பொறித்தட்டியது போல் இருந்தது.

தான் அறிந்த துர்கா பயந்த சுபாவம் உள்ளவள்.

சென்னையில் இருக்கும் கோவில்களுக்குச் செல்வதற்குக் கூடத் தனித்துச் செல்ல அச்சப்பட்டுத் துணை தேடுபவள்.

அவள், அதுவும் மும்பையில்?

எதுவோ சரியில்லை என்று தோன்ற, சட்டெனத் தனது காவல்துறை நண்பர்களுக்கு, குறிப்பாக அஷோக்கிற்கு அழைத்தவன் விவரத்தைப் பகிர, ஆனால் அதற்குள் துர்காவை சுமந்த மெர்சிடிஸ் ஜி63 பல மைல்களைக் கடந்திருந்தது.

**************************************************************************************

நேரம்: இரவு 8 மணி

"என்னை எங்கக் கூட்டிட்டுப் போறீங்க? என்னை எல்லாரும் தேடுவாங்க, தயவு செஞ்சு விடுங்க.."

அவள் எவ்வளவோ கத்தியும் கதறியும் பிடித்த பிடியை விடுவதாய் இல்லை என்பது போல் அவளது வெற்றிடையை இறுக்கப் பற்றியிருந்த வருணின் கரம் மென்மேலும் இறுகியது.

ஜீப்பும் அளவுக்கதிகமான வேகத்தில் சாலையில் பறந்து கொண்டிருந்தது.

நேரம் கடக்கக் கடக்க மனம் அச்சத்திலும் அதிர்ச்சியிலும் சதிராட்டம் ஆடத் துவங்க,

"சரி, என் ஃபோனையாவது கொடுங்க. சிதாரா எனக்காகக் காத்துட்டு இருப்பா. மாசமா வேற இருக்கா. பாவம்.. ரொம்பப் பதட்டப்பட்டால் அவளுக்கு நல்லது இல்லை. நான் எங்கேயும் போகலை உடனே வந்துடுறேன்னு அவகிட்ட சொல்லிடுறேன்." என்றவளுக்கே புரிந்தது, தான் பேசுவது எவ்வளவு அபத்தமாக இருக்கின்றது என்று.

அவளை ஜீப்பிற்குள் இழுத்து போட்ட மறுவிநாடியே அவளிடம் இருந்த அலைபேசியைப் பறித்திருந்த வருண் அதனை அணைத்துவிட்டிருந்தான்.

இதனில் அந்த வணிக வளாகத்தை விட்டு அவர்கள் வெளிவந்து ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் ஆகி இருந்தது.

இப்பொழுது சிதாராவை அழைத்து அவள் என்ன சொல்லப் போகின்றாள்?

அதுவரை மற்றொரு கரத்தில் பிடித்திருந்த டேப்லெட்டில் [Tablet/கணிப்பலகை] பார்வையைப் பதித்திருந்த வருண் அவளது பேச்சில் ஒரு முறைத் திரும்பிப் பார்த்தவன் பதில் எதுவும் கூறாது மீண்டும் டேப்லெட்டை நோக்க, அவனது அமைதி வேறு அவளுக்கு என்னவோ பெரிதாக நடக்கப் போகின்றது என்பதை வலியுறுத்தியதில் நெஞ்சத்தின் அடி ஆழத்தில் கிலிப் பரவத் துவங்கியது.

"என்னைக் காணோம்னு சிதாரா துடிச்சிட்டு இருப்பா. நான் எங்க இருக்கேன்னாவது அவகிட்ட சொல்லிட்டு உங்கக்கிட்டேயே என் ஃபோனைத் திருப்பிக் கொடுத்துடுறேன். அவளுக்கு ஏதாவது ஆகிடுமோன்னுப் பயமா இருக்கு."

ம்ஹூம்.. அவள் எவ்வளவோ இறைஞ்சியும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

அவளை அவன் திரும்பிப் பார்க்கவும் இல்லை.

ஒரு கையால் அவளது இடையை வளைத்துப் பிடித்திருந்தவன் மறு கையால் டேப்லெட்டை இன்னமும் ஆராய்ந்து கொண்டிருந்தான்.

விநாடிகள் நிமிடங்களாகவும் மாறி இப்பொழுது அவர்களுக்கும் அந்த வணிக வளாகத்திற்கும் இடையில் ஏறக்குறைய இருநூற்றி ஐம்பது கிலோமீட்டர் தொலைவு இருந்தது.

நிற்காது தொண்டைக்கிழிய கதறியவாறே அழுது கொண்டு வந்ததில் பெண்ணவளின் நாவும் வரண்டு போனது.

ஐயோ! திரும்பவுமா என்று அலைபோல் அடித்து மோதிய அச்சத்தில் துடித்ததில், அவளின் தேகமும் வலுவை இழந்து தொய்வடைய ஆரம்பித்தது.

*******************************************

நேரம்: இரவு 9

ஹட்காட் கிராமம்.

மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்திலிருந்து 71 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு கிராமம், ஹட்காட்.

அழகிய மலைப்பிரதேசத்திற்குள் அமைந்திருக்கும் அக்கிராமத்தின் தெற்கு பகுதியில் கட்டப்பட்டிருந்தது அந்த வீடு.

இரு தளங்களே இருந்தாலும் பார்ப்பதற்கு ஏதோ உல்லாச மாளிகையைப் போன்று [resort] கட்டப்பட்டிருந்த அவ்வீட்டினைச் சுற்றிலும் ஏறக்குறைய பத்து அடிக்கும் மேல் உயரமாகச் சுற்றுச்சுவரும், அதனை அடுத்து இரு அடிகள் விட்டு இரும்பு வேலியும் அமைக்கப்பட்டிருந்தது.

உள்ளே நடக்கும் எதனையும் ஒருவரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவே சுற்றுசுவரும், அதனையும் மீறி எவரும் நுழைந்துவிடக் கூடாது என்பதற்காக அவ்வேலியும் கட்டப்பட்டிருக்குமோ என்ற எண்ணம் வருமளவிற்கு ஒரு நூலிழை இடைவெளி கூட இல்லாத அந்த உயரமான பாதுகாப்பு சுவர்களுக்கு மத்தியில் அமைந்திருந்தது இரும்புக் கதவு ஒன்று.

அதன் அருகில் அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த மெர்சிடிஸ் ஜி 63 ஜீப் அதிரடியாய் நிறுத்தப்பட்டது.

ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குள்ளாகவே ஹட்காட் கிராமத்தை அடைந்திருந்தது அந்த வாகனம்.

நெருப்புப் பொறியெனச் சீறிப்பாய்ந்த அதன் வேகமும், வழி நெடுக்கச் சென்று கொண்டிருந்த வாகனங்களை மோதிவிடுவது போல் சென்று பின் நகர்ந்து முன்னேறிய அதன் ஆக்ரோஷமும் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த ஜாஃபரின் திறமையை எடுத்துக் காட்டியது என்றால்,

மூன்று மணி நேரமும் விடாது தன்னைக் கண்டு கெஞ்சிக் கொண்டு வந்திருந்தவளை அசட்டை செய்தவனாய் டேப்லெட்டில் மூழ்கிப் போய் அமர்ந்திருந்தவனின் ஆர்ப்பாட்டமில்லா ஆளுமையில் விக்கித்துப் போயிருந்தாள் பெண்ணவள்.

இதனில் திடுமென நின்ற ஜீப்பின் வேகத்தில் தூக்கிவாரிப் போட்டது என்றால், எங்கு இருக்கின்றோம் என்பது போல் ஜன்னல் வழியே வெளியே பார்த்தவளுக்கு அந்த இருளில் படுபயங்கரமாகத் தோற்றம் தரும் பாதுகாப்புச் சுவர் ஏஸிக் காருக்குள்ளும் வியர்க்கச் செய்தது.

"நாம எங்க இருக்கோம்? ப்ளீஸ் சொல்லுங்களேன்.."

அவன் என்னவோ பதில் கூறிவிடப் போகின்றான் என்ற நப்பாசையில் மீண்டும் கெஞ்சிக்கேட்க, ஜாஃபரிடம் இந்தியில் பேசிய வருண் அலைபேசியில் யாருக்கோ தகவல் அனுப்பினான்.

அவனது முகத்தையே பார்த்திருந்தவள் அவன் பதில் கூறப் போவதில்லை என்பது புரிந்து மெல்ல கையை நீட்டி நடுங்கும் விரல்களுடன் அவனது புஜத்தைப் பிடித்தவளாய், அதிர்ச்சியில் வெளிரிப்போன முகத்துடன்,

"எ.. எ.. என்னை அங்க காட்டுக்குள்ள அடைச்சு வச்ச மாதிரி இங்கேயும் அ.. அ.. அடைச்சி வைக்கப் போறீங்களா? அப்படின்னா எப்போ எ.. எ.. என்னைத் திருப்பி அ.. அனுப்பப் போறீங்க?" என்றாள் தட்டுத்தடுமாறும் குரலில்.

ஜீப்பில் அவள் ஏறியதில் இருந்து அவளது இடையை வளைத்துப் பிடித்திருந்தவன் கடந்த சில மணித்துளிகளுக்கு முன் தான் அவளை விட்டு தள்ளி நகர்ந்து அமர்ந்திருந்தான்.

இப்பொழுது அவனைச் சற்று எட்டியவளாய் அவனது புஜத்தின் மீது கை வைத்திருக்க, அலைபேசியில் இருந்து நிமிர்ந்தவன் தன்னை முதன் முறை அவளாகத் தொட்டதை நினைத்து மானசீகமாகப் புன்னகைத்தாலும் வெளியே காட்டாது மெல்லக்குனிந்து அவளின் விரல்களைப் பார்த்தான்.

அவனைத் தான் பிடித்திருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லையோ என்று அஞ்சியவளாகக் கையை விலக்க எத்தனித்தவளின் கரத்தை அவன் விடவில்லை.

அவளது விரல்களுக்கு மேல் தனது கையை வைத்தவன் அழுத்தி அவள் விரல்களைப் பிடித்தவாறே,

"இங்க உன்னை அடைச்சு வைக்கப் போறதில்லை. ஆனால் உன்னை இனி விடவும் போறதில்லை துர்கா." என்றதில் அதுவரை அரண்டு போய்த் துடித்துக் கொண்டிருந்த இதயம் சட்டென நின்று போனது போல் இருந்தது.

"ஐயோ! என்ன சொல்றீங்க?"

"ஐ மீன், இனி உன்னைத் திருப்பி அனுப்பப் போறதில்லைன்னு சொல்றேன்.."

"ஏற்கனவே நீங்க என்னைத் தூக்கிட்டுப் போனதுல எங்க குடும்பமே ரொம்பக் கஷ்டப்பட்டுடுச்சு. அம்மாவும் ரொம்ப உடம்பு முடியாமல் படுத்த படுக்கையா இருந்திருக்காங்க. இப்ப திரும்பவும் இப்படிச் செஞ்சிங்கன்னா அம்மா துடிச்சுப் போயிடுவாங்க."

"I can’t help it.."

பட்டென்று கடினமாய்க் கூறியவன் இரும்புக் கதவு திறந்ததும் ஜீப்பினை உள்ளே செலுத்த சொல்ல, தன் விரல்களின் மேல் இருக்கும் அவனது கரத்தின் மேல் தன் மறு கையை வைத்தவள்,

"மாமாவைப் பழிவாங்கத்தான் நீங்க அன்னைக்கு என் கல்யாண மேடையில் இருந்து என்னைத் தூக்கிட்டு போனீங்கன்னு எல்லாருக்கும் தெரியும். ஆனால் இப்ப அப்படி இல்லை. நானே நேத்து உங்களுக்கு ஃபோன் செஞ்சிருக்கேன். இந்நேரம் சிதாரா அதை மாமாக்கிட்ட சொல்லிருப்பா. அப்படின்னா நானே உங்க கூட வந்துட்டேன்னு அவங்க எல்லாரும் நினைக்க மாட்டாங்களா? என்னைக் கண்டிப்பா தப்பாத்தானே நினைப்பாங்க. தயவு செஞ்சு என்னைத் திருப்பி அனுப்பிடுங்க.." என்று கெஞ்சி முடிக்கும் நேரம், வளாகத்திற்குள் நுழைந்து அந்த இரு மாடிக் கட்டிடத்தின் முன் மெர்சிடிஸ் நின்றது.

தன் மேல் இருக்கும் அவளின் கரங்களை அகற்றியவனாய் அவள் விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்தவாறே, "நோ துர்கா.." என்று மட்டும் கூற,

முடிந்தது, இனி இவனிடம் இருந்து தப்பிப்பது என்பது கனவிலும் நடக்காத காரியம் என்று தோன்றியதில் உடல் பொருள் ஆவி என்றனைத்தையும் கிலி மூழ்கடித்தது.

வெறுப்பாய் அவனது கையில் இருந்து தன் கையைப் பிடுங்கிக் கொண்டவள் வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கியவாறே அனைத்து திக்குகளையும் பார்த்தாள்.

சுற்றிலும் மலைப்பிரதேசமாக இருந்ததில் அந்த இரவு நேரத்தில் அவ்விடம் முழுவதுமே கருங்கும்மென்று பார்வையை மறைக்கும் அளவிற்கான இருள் சூழ்ந்திருந்தது.

ஆங்காங்கு கண் சிமிட்டும் விண்மீன்களின் மெல்லிய வெளிச்சத்தைத் தவிர மனித நடமாட்டமே இல்லாத அவ்விடத்தைக் கண்டு அச்சத்தில் மனம் திடும் திடுமென அதிர, விழிகளிலிருந்து வழியும் நீரைத் துடைக்கவும் மறந்தவளாய் நின்றிருந்தவளின் நடுங்கும் விரல்களுக்குள் மீண்டும் தன் விரல்களை நுழைத்தான்.

அவனது செய்கையில் அவனைத் திரும்பிப் பார்த்தவள்,

"எதுக்கு இப்படிப் பண்றீங்க? நான் என்ன தப்பு செஞ்சேன்? திரும்பத் திரும்ப என்னை இப்படித் துடிக்க வச்சிட்டே இருக்கீங்களே. உங்களுக்கு என் மாமா மேலே கோபமுன்னா அவருக்கிட்ட நேரடியா மோதுங்க. அதைவிட்டுட்டு ஏன் என்னை இப்படிக் கடத்திட்டு வந்து அடைச்சு வைக்கிறீங்க?" என்று வெடித்துக் கதற ஆரம்பிக்க, அவளின் வார்த்தைகளில் வருண் என்ற அந்த இரும்பு மனிதனின் இதயம் மென்மேலும் எஃகாய் மாறியது.

எதிர்க்கும் திறனின்றி சக்தியற்றவளாய் அரற்றுபவளை பதிலேதும் கூறாது பார்த்தவனாய் அவளை இழுத்தவாறே விடுவிடுவென்று வீட்டிற்குள் நுழைந்தவன் நடு முற்றத்திற்கு அழைத்துச் செல்ல, அங்கு அவள் கண்ட காட்சியில் அவனது திட்டம் புரிந்ததில் ஈரக்குலையே நடுங்கிப் போனது.

வீட்டின் நடுவில் பசுமையான தென்னங்கீற்றாலும், மாவிலைத் தோரணங்களாலும், மலர்களாலும், கிழக்கு நோக்கி சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து மணமக்கள் அமரும் வண்ணம் மணவறை அலங்காரம் வெகுசிரத்தையுடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒரு ஓரத்தில் பானைகள் இரண்டும், அதில் ஒன்றில் தண்ணீரும், மற்றொன்றில் நெல்லும் நிரப்பப்பட்டிருக்க, அதன் மேல் மாவிலை, வெற்றிலை, தேங்காய் வைக்கப்பட்டிருந்தது.

அதற்கு அருகில் குத்துவிளக்கும், பன்னீர் தட்டும், குங்குமம், சந்தனம் என்று திருமணச் சடங்கிற்கு ஏற்றவிதமாகப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஏற்கனவே நடுங்கிக் கொண்டிருந்த மேனியுடன் நின்றிருந்தவளின் விழிகள் ஒவ்வொரு பொருளாகப் பயணித்ததில் அவனது நோக்கம் புரிய, தன் அருகில் தன் கைப்பற்றி நின்றிருந்தவனை விழிகளில் இருந்து நீர் மணிகள் சிதற ஏறிட்டு நோக்கினாள்.

'கல்யாணமா?'

மனம் அரள இறுக்கப் பற்றியிருக்கும் அவன் கையை விடுவிக்கப் போராடியவளாக, "உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்குறேன், என்னை விட்டுடுங்க.. நான் போகணும்.." என்று தொண்டை அடைக்க யாசிக்க, ஆனால் அவளின் இறைஞ்சலுக்கு எல்லாம் அவன் செவிசாய்ப்பதாகவே தெரியவில்லை.

"எங்க பக்கத்துல நைட் கல்யாணம் சகஜம். ஆனால் உங்க வழக்கப்படி காலையில் தான் கல்யாணம் செய்வீங்கன்னு கேள்விப்பட்டேன். நாளைக்குக் காலையில் ஆறரை மணிக்கு முகூர்த்தம். காலையில் சீக்கிரமே உன்னை அலங்காரம் பண்றதுக்கு வந்துடுவாங்க. இப்போ நைட் கொஞ்சம் ரெஸ்ட் எடு. அப்பத்தான் முகம் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்."

வெகு சாதாரணமாகக் கூறியவன் அவளின் விரல்களை அழுந்தப்பற்றி ஏறக்குறைய தன்னுடன் இழுத்தவாறே மேல்தளத்தில் உள்ள அறைக்குச் செல்ல, அழுகையுடன் அவனுடன் சென்றவளை அறைக்குள் தள்ளியவன் கதவை மூட எத்தனித்தான்.

"வேண்டாம், சொன்னா கேளுங்க. மாமாவுக்குத் தெரிஞ்சா ரொம்பப் பிரச்சனையாகிடும். ஏற்கனவே அவங்க உங்க மேல ரொம்பக் கோபத்துல இருக்காங்க. இப்ப இப்படி நடந்ததுன்னு தெரிஞ்சா உங்களை நிச்சயமா சும்மா விடமாட்டாங்க. நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க."

அது வரை அமைதியாய் இருந்தவனுக்கு இப்பொழுது அவள் பேசிய பேச்சில் மிளகாய் பூசியது போல் காந்தத் துவங்க, கண்களும் ஆத்திரத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பாய்த் தகிக்கத் துவங்கியது.

"ஏன், உன் மாமன் என்னைக் கொன்னுடுவானா, என்ன?"

"நா.. நான் அப்படிச் சொல்ல வரலை. நீ.. நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க.."

"எல்லாம் சரியா புரிஞ்சு தான் செய்யறேன். உனக்கு உன் மாமன் மேல் இருக்கிற லவ் இன்னும் போகலை போலருக்கு."

"என்ன பேசுறீங்க?"

"பின்ன, மாமன் மாமன்னு உசுர விடுற."

"ஐயோ! நான் அந்த அர்த்தத்துல பேசலை."

"வேற எந்த அர்த்தத்துல பேசுன?"

"நான் எந்த அர்த்தத்துலேயும் பேசலை. என்னைப் பற்றி மட்டும் தான் பேசுறேன். எனக்கு இதுல இஷ்டம் இல்லை. என்னை விட்டுடுங்க."

அவளது இந்தப் பதிலில் இப்பொழுது அவனது மனம் தறிகெட்டு அலையும் குதிரையாய்த் தடதடத்தது.

அதன் அறிகுறியாகக் கசந்த புன்னகையுடன் நெஞ்சே கிழிந்துவிடுமளவிற்கு நெடுமூச்சு விட்டவன், "இஷ்டம் இல்லாம எதுக்குடி நேத்து நைட் எனக்கு ஃபோன் பண்ணின?" என்றான் வலி அத்தனையையும் தேக்கி வைத்த குரலில்.

"அ.. அ.. அது.. நா.. நா.. நான்."

வார்த்தைகளைத் தேடியவளாய் கண்கள் அலைபாய அவனையே பார்க்க, "அது நீ தான்.." என்று மட்டும் கூறியவனாய் “ஜாஃபர்..” என்று உரக்கக் கத்தியதில் அவளுக்கு மீண்டும் தூக்கிவாரிப் போட்டது.

"சார்.."

"இவளைத் தனியா விட முடியாது ஜாஃபர். யாரையாவது இவளுடன் இன்னைக்கு நைட் தங்க வை..."

கூறியவன் தன்னை மருண்ட விழிகளுடன் பார்த்தவாறே நின்றிருந்தவளை அசட்டை செய்தவனாய் சட்டென்று வெளியேறியவன் கதவை அறைந்து சாத்திவிட்டு விடுவிடுவென்று கீழே இறங்கினான்.

*********************************************

"இவ்வளவு பெரிய மாலில் எப்படிச் சி.சி.டிவி கேமராக்கள் வேலை செய்யாமல் போகும்?"

"எல்லா இடமும் இல்லை சார். சில இடங்களில் இருக்கும் கேமராஸ் மட்டும் தான் வேலை செய்யலை. குறிப்பா அந்த டெக்ஸ்டைல் ஷோரூமை ஃபேஸ் பண்ணி இருக்கிற இடங்கள், எண்ட்ரன்ஸின் ஒரு பகுதி, எலிவேட்டர்ஸை சுற்றி, பிறகு பார்க்கிங் லாட்.."

"அதாவது நமக்குத் தேவைப்படுற இடங்கள் மட்டும் கேமராக்கள் வேலை செய்யலைன்னு சொல்றீங்க."

"யெஸ் சார்."

கூறிய காவல் அதிகாரியை ஒரு முறை எரிச்சலுடன் பார்த்த ஷிவா அந்த வணிக வளாகத்தின் பாதுகாப்பு பகுதியான CCTV கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அறைக்குள் நுழைய, அவனின் அரவத்தில் அமர்ந்திருந்த இருக்கைகளில் இருந்து வெடுக்கென்று எழுந்தனர் பணியாளர்கள்.

விறைப்பாக மொடமொடப்புக் குறையாமல், 'ஐபிஎஸ்' என்ற எழுத்துக்களுடன், நட்சத்திரம் மற்றும் அசோகா சின்னத்தை [epaulette] கொண்ட 'காக்கி' நிற சீருடை அணிந்து, அகன்ற மார்பின் வலதுப் புறத்தில் 'ஷிவ நந்தன்' என்ற பேட்ஜுடன் மிடுக்கான தோற்றத்துடனும், வலிமையான உடல்வாகுடனும் உள்ளே நுழைபவனின் தீட்சண்யமான பார்வையில் அவர்களுக்குச் சர்வமும் ஆடியது.

"சொல்லுங்க.."

"சார்"

"அது எப்படித் திடீர்னு இவ்வளவு இடங்களில் சி.சி.டிவி கேமராக்கள் வேலை செய்யாமல் போகும்? அதுவும் சரியா சொல்லி வச்ச மாதிரி அந்தப் பொண்ணு கடையைவிட்டு வெளியேறிய நேரம்."

"சார்.."

"சார் சார்-ன்னு மட்டும் சொல்லிட்டே இருக்காதீங்க. சரி, ஏதோ ஃபால்ட்டினால கேமராக்கள் வேலை செய்யலை. பட், அதை என்னன்னுப் பார்க்க மாட்டீங்களா?"

"இங்க கண்ட்ரோல் ரூமில் ரெண்டு பேர் தான் சார் எப்பவும் இருப்போம். அவங்களும் சரியா ஆறு மணிக்கு ஷிஃப்ட் முடிஞ்சுப் போயிடுவாங்க. அப்ப அடுத்த ஷிஃப்ட் உள்ளவங்க வேலைக்கு வருவாங்க."

"இது என் கேள்விக்குப் பதில் இல்லையே."

"ஷிஃப்ட் மாறும் போது அவங்க ரெண்டு பேரும் சொல்லிட்டு தான் போனாங்க சார். நாங்களும் டெக்னிஷியன்ஸுக்கு கால் பண்ணிருக்கோம்."

என்ன சாவதானமான பதில்!

அதுவும் இவ்வளவு பிரபலமான வணிக வளாகத்தின் முக்கியப் பகுதியில் வேலை செய்பவர்களிடம் இருந்து!

இதற்கு மேல் இவர்களிடம் பேசிப் பயனில்லை என்பது போல் அவ்வறையில் இருந்து வெளியே வந்தவனின் பார்வை சற்றுத் தொலைவில் பயத்துடன் கைகளைப் பிசைந்தவாறே நின்றிருக்கும் மனைவியின் மீது பதிந்தது.

ஒரு பக்கம் கர்ப்பவதியான அவளின் நிலையில் பரிதாபம் ஏற்பட்டாலும், அத்தை மகளைத் தனியாகப் போகவிட்டவளின் மீது கோபமும் எழுந்தது.

அது அநியாயம் என்று தெரியும்.

இருந்தும் கோபத்தைத் தணிக்க இயலாதவனாய் அவளை நோக்கி வந்தவன் அவளுக்கு வெகு அருகில் நெருங்கி நிற்க, அவனது கண்களில் பரவியிருந்த சினத்தில் பெண்ணவளின் வதனம் சிவக்க ஆரம்பித்தது.

காவல்துறையின் அனுபவப்பாடம் கற்றுக் கொடுத்திருந்ததில் அவளின் முக மாற்றத்தை சடுதியில் கண்டு கொண்டவன் அவளின் கைப்பற்றி அழைத்துச் சென்றான், சற்று மறைவானப் பகுதிக்கு.

இவ்வளவு பேர் பார்க்க தன்னை அழைத்துச் செல்பவனின் அகோர கோபத்தில் அதிர்ந்தவளாய் அவனுடன் இணைந்துச் செல்ல, சுவற்றின் மறுபக்கமாய் அவளைக் கொண்டு சென்று நிறுத்தியவன், "சொல்லு சித்து.." என்றான்.

அவனது அதட்டலில் காதல் கணவனின் பாசம் போய்க் காவலதிகாரியின் கண்டிப்பு பரவலாய் தோன்றியதில் உதடுகள் நடுங்க, விழிகளில் கண்ணீர் திரள, "சாரிங்க.. இதை நேத்தே நான் உங்கக்கிட்ட சொல்லிருக்கணும்.." என்றாள் மெல்லிய சாரீரத்தில்.

அமைதியாக அவள் முகத்தையே கூர்ந்துப் பார்த்தவன் தன் தோள் உயரமே இருந்தவளின் முகம் நோக்கி குனிந்தவனாய். "எதை?" என்றான்.

ஒரே வார்த்தையில் அத்தனை ஆங்காரம் தொனித்ததில் தொண்டை குழி ஏறி இறங்க, "துர்கா அவருக்கு ஃபோன் பண்ணினா.." என்றாள்.

"எவருக்கு?"

அவளையே ஆழ்ந்துப் பார்த்தவாறே கேட்டவனின் இரத்த நாளங்கள் வெடித்துச் சிதறியது போல் இருந்தது அவள் கூறிய பதிலில்.

"வருணுக்கு."

"எப்போ?"

"நேத்து நைட்.."

"நேத்து நைட்டா?”

“ம்ம்ம்”

“அதை ஏன் என்கிட்ட சொல்லலை?"

"உங்கக்கிட்ட சொல்ல வேணாம்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்டாங்க.."

"ஸோ, நீயும் அதனால மறைச்சிட்ட.."

"எனக்கு வேற வழித் தெரியலைங்க."

"எதுக்கு அவனுக்கு ஃபோன் பண்ணினா?"

"அது தெரியலைங்க.. நானும் கேட்டேன், ஆனால் சொல்ல மறுத்துட்டா."

"அப்போ இது எல்லாத்துக்கும் நீயும் உடந்தையா?"

கணவனது கேள்வி அவளைச் சல்லடைக் கண்களாகத் துளைத்தெடுக்க, தவித்துப் போனவள் தன் மேனியை உரசிக் கொண்டு நிற்பவனின் பரந்த மார்பில் கைகளைப் பதித்தாள்.

"சத்தியமா அவ ஏன் அவருக்கு ஃபோன் பண்ணினான்னு எனக்குத் தெரியாதுங்க."

"அவரு.. அவன் மேல இருக்கிற மரியாதை இன்னும் உனக்குக் குறையலை..”

“கடவுளே! அப்படி எல்லாம் இல்லைங்க..”

“அதே போல அவனுக்கு ஃபோன் பண்ணி பேசுற அளவுக்கு அவளுக்கும் தைரியம் வந்துடுச்சு.. ரெண்டு பொண்ணுகளும் சேர்ந்து திட்டம் போட்டு கவிழ்த்திட்டீங்கடி..”

வெடுக்கென்று தனது மார்பில் பதிந்திருக்கும் அவளது கரங்களை உதறித் தள்ளியவன் அவளை விட்டு சற்று விலகி நின்றவாறே அலைபேசியை எடுத்தான்.

**********************************

நேரம்: காலை மணி 5:30.

அறைக்கதவு மெல்லமாகத் தட்டப்படும் ஓசைக் கேட்டது.

வந்திருப்பது யார் என்பதைப் புரிந்துக் கொண்டாலும் எழுந்து சென்று கதவைத் திறக்கும் சக்தி, இரவு முழுவதும் அழுது கரைந்து ஓய்ந்துப் போனதில் உடலிலும் இல்லாது, நடக்கவிருக்கும் அசம்பாவிதங்களை நினைத்து பதைபதைத்துப் போயிருப்பதில் மனதிலும் இல்லாது அமர்ந்திருந்தாள் அந்தப் பேதை.

"துர்கா."

"***"

பதிலேதும் இல்லாது இருந்தாலும் அவளின் மெல்லிய அரவத்தில் மீண்டும் கதவைத் தட்டிய வருண் அவள் விழித்திருப்பதை உணர்ந்து, "கதவைத் திற.." என்றான்.

ஆனாலும் அவள் கதவைத் திறந்தப்பாடில்லை.

அதனில் எரிச்சல் மூள, வேகமாகத் தட்டியவன், "சின்னக் குழந்தை மாதிரி பிஹேவ் பண்ணாதடி.. சீக்கிரம் திற. நேரமாச்சு.." என்றான் சலித்தவாறே.

அப்பொழுதும் அவள் திறக்கவில்லை.

கழுத்தை அழுந்தத்தடவி தன்னைச் சமன்படுத்தியவன் தனக்கு அருகில் நின்றிருக்கும் ஜாஃபரிடம், "அவக்கூட இருக்கிறது யாரு?" என்றான்.

"ஃபாத்திமா சார்."

"ஃபாத்திமா, கதவைத் திற.."

கூறியவனின் கடுமையான கட்டளைத் தொனியில் மறு விநாடியே கதவு திறக்கப்பட்டது.

ஜாஃபரின் தங்கையான ஃபாத்திமா கதவைத் திறந்ததும், உள்ளே கட்டிலை ஒட்டியவாறே வெடவெடத்துப் போய் நிற்கும் துர்காவை ஆழ்ந்துப் பார்த்தவன், எதனையோ இரகசியமாய் ஜாஃபரிடம் கூறிவிட்டுத் தன் அறையை நோக்கி விடுவிடுவென நடந்தான்.

அவனது உருவம் மறையும் வரை அவனையே இமைக்காது அச்சத்தில் விரிந்த விழிகளுடன் பார்த்திருந்தவளை நெருங்கினான் ஜாஃபர்.

"உங்களுக்காக அந்த ஷிவ நந்தனை விட்டு வைக்கலாம்னு நினைச்சார் போல இருக்கு துர்கா. ஆனால் நீங்களே அவருடைய கோபத்தை அதிகரிக்க வைக்கிறீங்க. இந்த முகூர்த்தம் இல்லைன்னா என்ன, அடுத்த முகூர்த்தத்துல இவளுக்கு நான் தாலிக் கட்டிடுவேன், ஆனால் அது வரைக்கும் அந்த ஷிவ நந்தனை விட்டு வைக்கிறது நல்லதில்லைன்னு சொல்லிட்டுப் போறார். அவருடைய கோபம் உங்களுக்குப் புதுசு இல்லை. ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளுங்க. கொஞ்சம் ஒத்துழைங்க."

துர்காவைப் பார்த்து முதன் முறையாக மரியாதையுடன் பணிவாகப் பேசிய ஜாஃபர் அவளைத் திருமணத்திற்குத் தயாராக்குமாறு தங்கையிடம் கூறியவன் கீழே செல்ல, திருதிருவென்று விழித்தவாறே நிற்கும் பெண்ணவளைப் பார்த்ததில் ஃபாத்திமாவிற்கும் இரக்கம் சுரந்தது.

ஆனால் கட்டளைகளைப் பிறப்பிப்பவன் யார்? அந்த வருண் தேஸாய் ஆயிற்றே!!

வேறு வழியின்றித் துர்காவை சிரத்தை எடுத்து சமாதானப்படுத்தியவள் திருமணத்திற்கு என்று வாங்கி வைத்திருக்கும் புடவையையும் நகைகளையும் அடுக்கி வைத்தவாறே அவளை நீராடிவிட்டு வருமாறு பணித்தாள்.

ஆனால் அசைய மறுக்கும் உடலுடன், கைகள் இரண்டையும் கட்டிப்போடாமலேயே கட்டுக்குள் அடைப்பட்டது போன்றான நிலையில் கைதிப் போன்று நின்றிருந்தவளைப் பார்த்த ஃபாத்திமா அவளின் தோள் தொட்டாள்.

“எனக்கு உங்க நிலைமை புரியுது துர்கா. ஆனால் சொல்லிட்டுப் போறது வருண் சார். அவரை மீறி என்னால் ஒண்ணும் செய்ய முடியாது. ப்ளீஸ் புரிஞ்சுக்கங்க.”

ஃபாத்திமாவை மெல்ல ஏறிட்ட துர்கா வேறு வழியின்றிக் குளியல் அறைக்குள் நுழைய, மனம் அதன் போக்கில் கலங்கித் தவித்தாலும் கரங்கள் தன் போக்கில் வேலைகளைச் செய்ய, குளித்து முடித்தவள் வெளியே வரவும் மளமளவென அவளை அலங்கரிக்கும் வேலையில் ஈடுபட ஆரம்பித்தாள் ஃபாத்திமா.

சுபமுகூர்த்த வேளை!

"பொண்ணு ரெடியாகிட்டா வரச் சொல்லுங்க."

புரோகிதரின் அழைப்பில் அவளை வெளியில் அழைத்து வர, தட்டில் தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழங்கள் வைக்கப்பட்டு அதன் மீது மஞ்சள்கயிறில் கோர்த்திருந்த திரு மாங்கல்யம் கம்பீரமாய்க் காட்சியளிக்க, மணவறையில் வருண் அமர்ந்திருக்க, அவனுக்கு வலபுறமாக அமர வைக்கப்பட்டாள் துர்கா.

எங்கு அவள் முரண்டுப் பிடிப்பாளோ என்று எண்ணியிருந்தவனுக்கு அவளின் இந்தப் பெருத்த அமைதி சந்தேகத்தை வரவழைத்தது.

இருப்பினும் எதனையும் கிளறாது அவளை ஒரு முறைத் திரும்பிப் பார்த்துவிட்டுப் புரோகிதரிடம் சடங்குங்களைத் துவங்குமாறு தலையசைத்து அனுமதி வழங்க, பெண் வீட்டினரோ மணமகன் வீட்டினரோ என்று ஒருவருமற்ற அச்சூழலில், வழிவழி வந்த சாங்கியங்கள் ஆரம்பித்ததில் ஆரவாரம் இல்லாத ஒரு திருமணப் பந்தம் அங்குத் துவங்கியது.

உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை

பெருஞ் சோற்று அமலை நிற்ப, நிரை கால்

தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி

மனை விளக்குறுத்து, மாலை தொடரி,

கனை இருள் அகன்ற கவின்பெறுகாலை;

உழுந்து சேர்த்துக் குழைவாகச் சமைத்த உழுத்தம் பருப்புப் பொங்கலின் பெரிய உருண்டைகளைப் புசிக்க ஒருவரும் அங்கு இல்லை.

வரிசைக் கால்கள் நாட்டிப் பந்தலிடாது, தரையில் வெண்மணல் பரப்பாது, நல்ல வேளை வந்ததும் தலையில் நீர்க்குடமும், கைகளில் புதிய மண் கலயங்களும் தாங்கி வரும் மகளிரும் அங்கு இல்லை.

‘கற்பில் வழுவாது, நல்லவை உதவி, உன்னை மனைவியாகப் பெற்ற கணவனைக் காக்கும் துணைவியாவாயாக!’ எனக் கூறி வாழ்த்த பெண்களும் அவ்விடத்தில் இல்லை.

ஆயினும், தலைமகன் தன்னினும், தமரினும் பெறாது, வலுக்கட்டாயமாகப் பெண்ணை அடைதல் என்ற எண்வகைத் திருமணங்களில் ஒன்றான இராக்கதம் திருமணம் அங்கு அரங்கேறத் தயாராக இருந்தது!

மேள தாள ஓசையின்றி 'மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா' என்ற மந்திரத்தைப் புரோகிதர் ஓதிய சத்தத்தைத் தவிர வேறு ஓசை அங்கு எழவில்லை.

தன் முன் நீட்டப்படும் தட்டில் இருக்கும் மாங்கல்யத்தைக் கையில் எடுத்தவன், குனிந்திருந்த தலையை நிமிர்த்தாது விழிகள் கலங்கிய நிலையில் அமர்ந்திருந்தவளை விநாடிகள் சில ஆழமாகப் பார்த்துவிட்டு அவளது சங்குக் கழுத்தில் அணிவித்தான்!

சில கணங்கள் கடந்து, அங்கு, இருநூற்றி ஐம்பது கிலோ மீட்டர்கள் தொலைவில், கையில் இருக்கும் அலைபேசி தகவலொலி எழுப்பியதில் அதனை எடுத்துப் பார்த்த ஷிவாவின் இதயம் அதிர்ந்து துடித்தது.

இரவு முழுவதிலுமாகத் தான் தேடி அலைந்த அத்தை மகளும், அவளின் தோளைப் பற்றியவாறே இதழ்கோடியில் புன்னகை இருந்தாலும் பார்வையில் வீரியம் தெறிக்க நின்றிருந்த அவனது பரம எதிரியும் மணக்கோலத்தில் இருந்த அந்தப் புகைப்படம், ஆனானப்பட்ட ஷிவ நந்தனையே அசைத்துப் போட்டது.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.

References: 

Zaira

New member

Most awaited episode 🔥🔥🔥
That thatti thookittan moment…

Durga mall ku pora matter eppadi Varun ku theriya vandhuthu??? Adhuvum avan wedding prep ellam set panni avan vanthu cctv footage ah crack panni… so someone might have helped him from Chauhans… Enekku ennamo Mukesh mele than doubt ah irukku… coz, Varun is needed for him. So avalukkaga ivar enna vena pannuwar… Durga ellam matter eh illa avar ku…

One doubt enekku… Thali South Indian custom la irukku.. Usual ah Groom side thane thali design poduwanga… Varun is North Indian noh??? So antha black beads chain thane poduwanga??? Varunoda aasaiya yellow thali kattanum nu??? Or any specific reason behind this???
 
saru

Member
Lovely update dear
Epudi durga mal pora visayam trinjathu
Siva karupu aadu ungala duthi eh irukum pola
Varun apaum rhappu ipa vum thappu
Enna seiya un cheractore apdi ya pochu
Kalyanam seidachu
Durga ku mattum en inda nizhai
 
Wasee

New member
"Ayyoo meendum meendum aa." Durga mind voice in car.

Aanal varun kalyanamae pannitaan.

But avaloda kadhal aa konnutaan.paavam durga.
 
B

Buvans

Guest

Sis, awesome,I have been reading your novels from kadhala karvama.wonderful writing and ground work . eagerly waiting for next epi
 
sivakami

New member
Hello sis....you are amazing to write a story sis.. the way to write Tamil meaning and English. Super sis...l already read your previous novels...i don't know how many times I read but each and every time..iam excited... keep rocking sis...
 
sakthi1998

New member
eagerly waiting for next episode. Durga should realize the deep love of varun for her.

Is there any update today?
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top