JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettail - Episode 33

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 33

"Is there any problem?"

தன் அருகே நின்றிருக்கும் ASP விஷால் பட்டேலின் குரலில் தலையை நிமிர்த்திப் பார்த்த ஷிவா, அலைபேசியை அவரிடம் காட்டினான்.

அதனில் ஷிவாவிற்குக் குறையாத அதிர்ச்சியை வெளிப்படுத்தியவர், "Sir, what is this?" என்றார் குரலிலும் பெரும் தாக்கத்தை வெளிப்படுத்தி.

"விஷால், இது வரைக்கும் ஒரு இளம்பெண் காணாமல் போயிட்டா அப்படின்னுதான் நீங்க எல்லாருமே துர்காவைத் தேடி இருப்பீங்க. ஆனால் இப்போ சூழ்நிலை அப்படி இல்லை. எனக்கும் அந்த வருணுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் மாதிரி இது ஆகிடுச்சு. ஸோ, இதுக்கு மேல நான் நம்ம போலிஸ் ஃபோர்ஸை யூஸ் பண்ணினால் அது தப்பு. நானே அவனைப் பார்த்துக்கிறேன்."

அவன் கூறியதன் சாராம்சம் ASP விஷால் பட்டேலுக்கும் புரிந்தது.

ஆயினும் ஒரு பெண் கடத்தப்பட்டிருப்பது தெரிந்தும் அவளைத் தேடாது இருப்பது காவல்துறைக்குச் சரியானது, அல்லவே!

"புரியுது சார். ஆனாலும் அந்தப் பொண்ணைக் கடத்திட்டுப் போய் வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணிருக்கான். It’s a marriage by abduction [கடத்தல் மூலம் திருமணம்] எப்படி அவனைச் சும்மா விடுறது?"

மனதிற்குள், 'அவன் கடத்தினானா இல்லை இவளே விரும்பி அவனுடன் போனாளான்னு தெரியலையே. ஆனாலும் அந்த ஃபோட்டோவில் ஏதோ ஒரு முரண்பாடு இருக்கு. துர்கா அழுதுட்டு இருக்க மாதிரியும் இருக்கு, அதே சமயம் வேறு ஏதோ இருக்கிற மாதிரியும் தோனுது.' என்று எண்ணிய ஷிவா இதற்கு மேலும் காவல்துறையினரை ஈடுபடுத்த விரும்பாமல் அவர்கள் அனைவரையும் சமாதானமான காரணம் ஒன்று சொல்லி திருப்பி அனுப்பினான்.

விஷால் பட்டேலும், "உங்க நிலைமை எனக்குப் புரியுது சார். இருந்தாலும் என்ன உதவி தேவைப்பட்டாலும் தயங்காமல் எனக்குக் கால் பண்ணுங்க. அவன் எவ்வளவு பெரிய பிஸ்னஸ் டைக்கூனா இருந்தாலும் பரவாயில்லை, அவனா இல்லை நாமளான்னு பார்த்துடுவோம்." என்றவராய் அரைகுறை மனதோடு அங்கு இருந்து விடைபெற்றார்.

'ஆக, துர்கா ஏதோ ஒரு காரணத்துக்காகத் தான் அவனுக்கு ஃபோன் பண்ணி இருக்கா. என்ன காரணமாக இருக்கும்? எங்க இருந்து இவ்வளவு தைரியம் வந்தது அவளுக்கு? வருண் கல்யாணம் வரைக்கும் போயிருக்கான் அப்படின்னா அவ சம்மதம் இல்லாமலா இது நடந்திருக்கும்? இல்லை, அவளுக்கு விருப்பம் இல்லாமல் ஃபோர்ஸ் பண்ணி தாலிக்கட்டிட்டானா அவன்?'

மனம் அதன் போக்கில் பல வினாக்களைத் தொடுத்தவாறே அசைப்போட, பந்தயக் குதிரையின் அசுர வேகத்தில் அவன் மூளை பலவற்றையும் அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது என்றால், தன் இல்லம் நோக்கி ஷிவாவின் ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீமும் அதே வேகத்தில் பறந்தது.

***************************************************

திரு மாங்கல்யத்தை அணிவித்து முடிந்ததும் வருணின் வலதுகைச் சுண்டு விரலையும் துர்காவின் இடதுகைச் சுண்டு விரலையும் இணைத்து, இருவர் கையையும் பட்டுத் துணியால் கட்டி மணவறையைச் சுற்றி வரச் சொன்னார் புரோகிதர்.

இப்போது இணையும் கைகள் வாழ்நாள் முழுவதும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதே அதன் பொருள்.

ஆனால் அது சாத்தியமா?

மனம் ஒன்றித்துத் திருமணம் புரிவோரே பாதி வழியில் பிரிந்து செல்கின்றனர். ஆனால் இங்கு நடந்தது இராக்கதம் முறைத் திருமணமாயிற்றே.

இவருடன் நான் வாழ்நாள் முழுவதும் இணைந்து வாழ முடியுமா?

வேதனையில் துவண்டவள் உதடு கடித்து அழுகையை அடக்கிக் கொண்டவளாய் அவன் விரல் பற்றி மணவறையைச் சுற்றி வர, ஆனால் அவளின் உள்ளத்திலோ, ஒரு பெண்ணின் மனதில் என்ன இருக்கின்றது, அவளின் நிலை என்ன, விருப்பம் என்ன என்று எதனையும் ஆராயாது இவ்வாறு அடாவடித்தனமாக என்னைத் தூக்கி வந்து திருமணம் புரியும் இவருடன் நான் எவ்வாறு மனமொத்து வாழ முடியும் என்ற கதறல் மௌனமாய் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

இதனில் ‘நான் கடத்தும் பெண்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை உனக்குத் தெரியாது’ என்று சவால் விட்டவனின் பேச்சு வேறு, நாதஸ்வர இசை கூட ஒலிக்காத அவ்விடத்தில் எதிரொலியாய் அவளின் செவிகளில் இரைந்து கொண்டிருந்தது.

அதே வேளையில், சுண்டு விரலில்தான் இதய நாடி ஓடுகிறது என்பதால் இரு இதயங்களும் ஒன்றுபட்டிருக்க வேண்டும் என்பதன் பொருள்படி, தன் விரலுடன் இணைந்து இருக்கும் மனைவியின் விரலை இறுக்கப் பற்றியிருந்த வருணின் மனதில் உரமிட்டுக் கொண்டிருந்த வார்த்தைகளோ, ‘இனி நீயே நினைச்சாலும் என்னை விட்டு உன்னைப் போக விடமாட்டேன். இனி உன் மாமன் என்ன, எவன் வந்தாலும் என்னிடம் இருந்து உன்னைப் பிரிக்க முடியாது’ என்பதே.

ஆனால் தொழிலில் ஏகாதிபதி! அரசியலில் சாணக்கியன்! இருள் உலகத்தில் எமகாதகன்! என்று பல பெயர் கொண்டவன் அறியவில்லை.

அவளாகவே ஒரு நாள் தன்னைத் தனித்துத் தவிக்கவிட்டு செல்வாள் என்று!

மணவறையைச் சுற்றி முடித்ததும் மணமக்கள் இருவரும் மாலைகளை மாற்றிக் கொள்ளுமாறு புரோகிதர் கூற, தனக்கு அருகில் இன்னமும் தலை கவிழ்ந்து நிற்பவளின் முகம் நோக்கி குனிந்தான்.

"துர்கா, என்னைப் பாரு.."

அமைதியாக உரைத்தாலும் அக்குரலில் ஒலித்த கட்டளையைக் கண்டு மெல்ல அவள் ஏறிட்டுப் பார்க்க, இன்னமும் கண்களில் நீர் மல்க நின்றிருந்தாலும், சற்று முன், தான் அவளின் உச்சந்தலையில் வைத்துவிட்ட குங்குமம் செக்கச்செவேலென மின்ன நின்றிருந்தவளின் தோற்றம் கணவனாய் அவனுக்குள் பரவசத்தை ஊற்றெடுக்கச் செய்தது.

"மாலையை மாற்றிக்கணும்னு சொல்றாரு.."

அவன் கூறியதும் நடுங்கும் விரல்களுடன் தன் கழுத்தில் இருந்த மாலையை எடுத்தவள் அவனது நெடுநெடு உயரம் எட்டாது முன்னங்கால்களை ஊன்றி எழும்ப, அவளின் உயரத்திற்கு ஏற்ப குனிந்தவனாய் அவளுக்குத் தலை கவிழ்ந்து மாலையை வாங்கிக் கொண்டவன் தன் கழுத்து மாலையை அவளுக்கு அணிவித்தான்.

சடங்குகள் போதும் என்பது போல் புரோகிதரைப் பார்த்துச் சைகை செய்தவன் மணமேடைக்கு அருகிலேயே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த மனிதர் ஒருவரை அழைத்தான்.

திருமணத்திற்கான அடையாளமாகத் திருமணத்தைப் பதிவு செய்வதற்கான ஏற்பாட்டையும் அவன் ஏற்கனவே செய்திருக்க, சில நிமிடங்களுக்குள் அவர்களது திருமணம் சட்டப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டது.

பல மாதங்களாக தனக்குள்ளே போட்டுப் புதைத்திருந்த அவனே முழுமையாக உணராத அவளுடனான காதல், திருமணப் பந்தத்தில் நிறைவேறியதில் மனதிற்குள் மகிழ்ச்சியா?

அல்லது, தன் பரம எதிரியை எழ முடியாதளவிற்கு மறைமுகமாக வீழ்த்தி வெற்றிக் கொண்ட பெருமிதமா?

எதுவென்று பிரித்தரிய முடியாத வகையான இன்பத்தில் வருணின் உள்ளம் ஆனந்தத்தில் மிதக்க, தன்னவளின் தோளில் கைப்போட்டு அவளைத் தனக்குள் அணைவாக நிறுத்திக் கொண்டான்.

அவனது வலிய தேகத்திற்குள் குருவிக்குஞ்சாய் அடங்கியவள் நீண்ட பெருமூச்சில் தனது பாரத்தைத் தெரிவிக்க, அவளின் முகம் நோக்கித் திரும்பியன்,

"கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு துர்கா. No, No.. உன்னால் அப்படி இருக்க முடியாது, அட்லீஸ்ட் அழற மாதிரியாவது இருக்காத. இப்போ நான் உன் கழுத்தில் தாலிக்கட்டியது உனக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் எப்பவும் நீ இதே மன நிலையில் இருக்க மாட்ட. ஸோ, கொஞ்சம் முகத்தை ப்ளெசெண்டா வச்சிக்க.." என்றவன் இரு விரல்கள் கொண்டு சமிக்ஞை செய்தான்.

மறு நிமிடமே ஒரு அலைபேசியில் மணமக்களைப் புகைப்படமாகச் சேமித்த ஜாஃபர் எஜமானனின் உத்தரவுப்படி அதனை ஷிவாவின் அலைபேசிக்கும் அனுப்பி வைத்தான்.

தக்காளிப்பழ நிறத்தில் முழம் அளவிற்கு இரு பக்கங்களும் தங்க சரிகை நெய்யப்பட்ட பட்டுப்புடவையில், தலையிலிருந்து தவழ்ந்து, நெற்றியில் அழகாகக் குவிந்து விழும் வைர நெற்றிச்சுட்டியையும் மீறி வகிட்டில் குங்குமம் பளபளக்க,

மல்லிகையையும் அடர் சிகப்பில் ரோஜாப் பூக்களின் இதழ்களையும் கொண்ட மாலை கழுத்தை அலங்கரிக்க,

அணிந்திருக்கும் அனைத்துமே வைரமும் மாணிக்கமும் அதனுடன் ஆங்காங்கு மரகதகற்களும் கொண்ட அணிகலன்களாக இருந்ததில் ஜொலித்துக் கொண்டிருந்தாள் என்றால்,

இவை அனைத்தையுமே தோற்கடித்தது போல் இருந்தது திரு மாங்கல்யத்தின் பளபளப்பு அப்புகைப்படத்தில்.

இரவு முழுவதும் அத்தை மகளைக் காணவில்லை என்று தவித்திருந்த ஷிவாவிற்கு அலைபேசியில் தகவல் வந்ததை அது ஒலியாய் தெரிவிக்க, என்னவோ என்று அலைபேசியை உயர்த்திப் பார்த்தவனுக்கு அதில் ஒளிர்ந்த புகைப்படத்தைக் கண்டதும், ஆங்காரமா, ஏமாற்றமா, ஆத்திரமா அல்லது அதிர்ச்சியா என்று பகுத்தறிய முடியாத உணர்வுகளின் வீச்சில் அவனது வலியத்தேகமே ஒரு முறை தடதடத்தது.


**********************************************


வீட்டிற்குள் நுழைந்த கணவனைக் கண்டு அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து படாரென்று எழுந்தாள் சிதாரா.

அவளின் வேகத்தில் எரிச்சல் அடைந்தவன் அவளை நோக்கி விடுவிடுவென்று நடந்தவனாய், "இப்ப எதுக்குடி இவ்வளவு வேகம்?" என்றான் சலிப்புக் குரலில்.

"என்னங்க, துர்கா.."

முடிக்காது விட்டவளின் தோள் பற்றி அவளை அமரச் செய்தவன் தன் முகத்தையே வைத்த கண் வாங்காது பார்த்திருக்கும் அத்தை ஸ்ரீமதியின் அருகில் சென்றான்.

"மாப்பிள்ளை. துர்கா எங்க இருக்கான்னு தெரிஞ்சுதா?"

தன் ஒரே மகளின் வாழ்க்கையில் நடக்கக்கூடாத அதே அசம்பாவிதம் மீண்டும் நடந்திருப்பதை எண்ணி ஒரு அன்னையாய் அவரின் மனம் தவியாய் தவித்துப் போயிருந்தது.

இதனில் அவள் எங்குச் சென்று இருப்பாள், அதுவும் மொழித் தெரியாத ஊரில்? ஒரு வேளை வேறு எவரும் அவளைத் தூக்கிச் சென்றுவிட்டனரோ என்று அரண்டுப் போய், வேதனை நெஞ்சத்தை அடைக்கத் தொண்டையில் தேங்கியிருக்கும் எச்சிலை கூட முழுங்க முடியாதவராய் கேட்பவரின் அழுது வீங்கிய முகம் ஷிவாவையும் வாட்டியது.

"நீங்களும் உட்காருங்க அத்த.."

"பரவாயில்லை மாப்பிள்ளைச் சொல்லுங்க.."

"ம்ப்ச்.. முதலில் நீங்க உட்காருங்க.."

கூறியவன் அவரின் கைப்பற்றி அழைத்துச் சென்று மனைவிக்கு அருகில் அமர வைத்தான்.

அதற்குள் குடும்பத்தினர் அனைவருமே அங்குக் கூடிவிட்டனர், துர்காவின் சின்ன அத்தை சுமதியையும் சேர்த்து.

"ஷிவா தம்பி, துர்கா எங்கன்னு சொல்லுங்க. எல்லாருமே ராத்திரி முழுக்கத் தூங்காம இப்படி அரண்டுப் போயிருக்கோமில்ல."

என்னவோ துர்காவின் மேல் மிகுந்த அக்கறை கொண்டவர் போல் கேட்ட சுமதியின் முகத்தை வேண்டா வெறுப்பாகத் திரும்பிப் பார்த்தவனின் ஒரே கூபார்வையில் அவர் வாயை இறுக்க மூடிக்கொண்டார்.

மீண்டும் ஸ்ரீமதியின் புறம் திரும்பியவன் தன் அலைபேசியில் வந்த புகைப்படத்தைக் காட்ட, அவ்வளவு தான் தலை கிறுகிறுவெனச் சுற்ற, அருகில் அமர்ந்திருக்கும் சிதாராவின் மீது சாய்ந்தார்.

இது நடக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்தவன் போல் தானும் அவர் அருகில் அமர்ந்த ஷிவா அவரின் கரத்தைப் பிடித்தவனாக,

"அத்த, இன்னைக்குக் காலையில் தான் கல்யாணம் பண்ணிருக்கான். சட்டப்படி ரிஜிஸ்தரும் செய்துட்டான். இது எல்லாம் துர்காவுடைய சம்மதத்தோடவா இல்லை வலுக்கட்டாயமா செய்தானான்னு தெரியலை. ஒரு வேளை துர்காவைக் கட்டாயப்படுத்தி இந்தக் கல்யாணத்தை அவன் பண்ணிருந்தான்னா, கண்டிப்பா அவளை நான் அவன்கிட்ட இருந்து மீட்டெடுத்துடுவேன் அத்த. நீங்க தைரியமா இருக்கு.." என்று ஆறுதல் படுத்தினான்.

ஆனால் இதற்கெல்லாம் அடங்குமா பெற்றவளின் கலங்கிய உள்ளம்.

இதயம் வெடித்துச் சுக்குநூறாக, பதட்டமான மனநிலையில் நடுங்கும் கரத்துடன் ஷிவாவிடம் இருந்து அலைபேசியை வாங்கிய ஸ்ரீமதி அதனை விழிகளில் மல்கி நிற்கும் கண்ணீரோடு உற்றுப் பார்த்தார்.

புகைப்படத்தைப் பார்த்தவரின் நெற்றிச் சுருங்கியது.

"எனக்கென்னவோ இது கட்டாயக் கல்யாணம் மாதிரி தெரியலை மாப்பிள்ளை."

இது வரை துர்கா வருணை அழைத்ததையோ, அவனுடன் அவள் வளைகாப்பு அன்றிரவு அலைபேசியில் பேசியதையோ ஒருவருக்கும் சொல்லாமல் மறைத்திருந்தனர் ஷிவா தம்பதியினர்.

இருந்தும் எப்படி இவர் கூறுகின்றார் என்ற யோசனையில் புருவங்கள் இடுங்க, அவரிடம், "ஏன் அப்படிச் சொல்றீங்க அத்த?" என்றான்.

"அவ அழுதிருக்கா. முகம் எல்லாம் சிவந்து வீங்கியிருக்க மாதிரி தான் தெரியுது. ஆனாலும் ஏனோ அவ கண்ணுல ஒரு நிம்மதி தெரியற மாதிரி இருக்கு மாப்பிள்ளை."

"ஒரு ஃபோட்டாவை வச்சு எப்படி அத்த அப்படிச் சொல்ல முடியும்?"

"நான் அவளுக்கு அம்மா மாப்பிள்ளை."

"ஆனால் அந்த வருண் ஒரு எமகாதகன் அத்த. அவனால் எதுவும் செய்ய முடியும்னு நிரூபிச்சிக் காட்டவே இந்தக் கல்யாணம். அப்படி இருக்கிறவன் பக்கத்துல நிற்கும் போது அவளால் எப்படி நிம்மதியா இருக்க முடியும்?"

“ஆனா அவ கண்ணு சொல்லுதே..”

“இல்லை அத்த. நிச்சயம் எனக்குத் தெரிஞ்சு துர்கா இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சு இருக்க மாட்டாள். எப்படி இருந்தாலும் நான் அவனிடம் இருந்து துர்காவை பிரிச்சுக் கொண்டு வருவேன்.”

“கண்கெட்டதற்குப் பிறகு சூரிய நமஸ்காரமா மாப்பிள்ளை?”

“அத்த, ப்ளீஸ். நீங்க மனச தளரவிட்டுடாதீங்க.”

கூறியவனுக்குமே தெரிந்திருந்தது, துர்கா இடம் கொடுக்காது இந்தத் திருமணம் நடந்திருக்க வாய்ப்பில்லை என்று.

ஏனெனில் எத்தனையோ முறை தங்களின் திருமணப் பேச்சை வீட்டில் உள்ள பெரியவர்கள் எடுத்த பொழுது, வேண்டாம் என்று தட்டிக்கழித்தவள், தான் சிதாராவை விரும்புவது தெரிந்ததும் கடலளவு மகிழ்ச்சியை அவளையும் அறியாது வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள்.

அப்பொழுதே துவங்கிய சந்தேகம் அவளை ஒவ்வொரு நாளும் கண்காணிக்கச் செய்ய, ஆயினும் இத்தனை காலமாக வருண் துர்காவை எவ்விதத்திலும் தொடர்பு கொள்ள முயற்சிக்காது இருந்ததில், ஓரளவிற்கு ஷிவாவின் சந்தேகம் தீர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அதுவும் இல்லாது, வேண்டுமென்றால் நான் கன்னிக்கழியவில்லை என்று மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்துவிடுங்கள் என்று ஸ்ரீமதியிடம் அவள் கதறிய அன்றில் இருந்து அவளைத் தனிப்பட்ட முறையில் சந்தேகிப்பதையும் அவன் விட்டுவிட்டான்.

கடத்தப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஏற்பட்டிருக்கும் மன அதிர்ச்சியும் உளைச்சலும் தான் காரணமோ என்று சற்று விலகி நின்றது இப்பொழுது சறுக்கிவிட்டது.

அன்றைய சந்தேகத்திற்கான விடை இப்பொழுது தான் கிடைத்தது. ஆயினும் அவனால் சும்மா இருக்க இயலவில்லை.

அப்படி இருந்துவிட்டால் அவன் ஷிவ நந்தன் ஐ.பி.எஸ் அல்லவே!

அவன் அடுத்து அழைத்தது அவனது நண்பன் அஷோக்கை.

"அவன் என்ன துர்காவை முன்ன மாதிரி கடத்தியா வச்சிருக்கான்? கல்யாணம் பண்ணிருக்கான் ஷிவா. அப்படின்னா துர்காவையும் கூட்டிட்டு எப்படியும் அவன் வீட்டுக்கு வந்து தான ஆகணும்? இனி அவன் அந்த ஆள்மாறட்ட வேலை [doppelganger] எல்லாம் செய்ய முடியாது. அதனால் பார்த்துக்கலாம். நான் இன்னும் ஒரு மணி நேரத்துல அங்க இருப்பேன் ஷிவா."

கூறியவன் ஷிவாவை சந்திக்கத் தனது வாகனத்தில் ஏற, அதற்குள் தங்களின் அடுத்தக் கட்ட நடவடிக்கையைச் செயல்படுத்த ஆரம்பித்த ஷிவாவின் உத்தரவுப் படி வருணின் வீட்டைச் சுற்றி அவனது ஆட்கள் கண்காணிப்பில் இறங்கினர்.

**************************************

எட்டு வகைத் திருமணங்களில் எந்த வகையோ ஆனால் விவாகம் என்பது ஒன்று தானே.

மார்பையும் தாண்டி நீண்டுத் தொங்கிய தாலியைக் குனிந்துப் பார்த்தவாறே நின்றிருப்பவளின் அருகில் வந்த வருண், "துர்கா.." என்று எதனையோ சொல்ல வந்தவன் சற்று நிறுத்தி, "நாம் இங்கேயே இன்னைக்கு இருந்துட்டு நாளைக்குக் காலையில் போவோம்.." என்று மட்டும் கூறி முடித்தான்.

அவன் எதனையோ மறைக்கின்றான் என்பது புரிந்தது.

ஆயினும் நடக்கக் கூடாதது எல்லாம் நடந்து முடிந்துவிட்டது, இனி நடப்பதற்கு வேறு என்ன இருக்கின்றது என்பது போல் அவனை ஒரு வெற்றுப் பார்வைப் பார்த்தவள் மீண்டும் தலை குனிய, ஃபாத்திமாவை அழைத்தான்.

முதலாளியின் அழைப்பில் ஓடி வந்தவள் அவனுக்கு அருகில் நிற்க, அவளின் உயரத்திற்கு ஏற்றவாறு குனிந்தவன் அவளின் செவிகளில் கிசுகிசுப்பாய் ஏதோ சொல்ல, ஃபாத்திமாவின் அகன்ற கண்கள் மேலும் அகன்று விரிந்தன.

“சார்..”

“என்ன?”

“அது..”

“நான் சொல்றதை மட்டும் செய் ஃபாத்திமா. வேற எதுவும் பேசாத.”

‘மட்டும்’ என்ற வார்த்தையில் அழுத்தத்தைக் கூட்டி படீரென்று முகத்தில் அடித்தார் போல் கூறுபவனை அண்ணாந்து நோக்கிய ஃபாத்திமாவின் மனதில், 'ஐயோ! அந்தப் பொண்ணைப் பார்த்தால் பாவமா இருக்கு. இதுல இது வேறயா?' என்ற வருந்தம் மேலோங்கியது.

பெண்ணைக் கண்டு பெண்ணே இரங்கவில்லை என்றால் யார் தான் இரங்குவர் என்பது போல் கவலையுடன் துர்காவை நெருங்கியவள் அவளின் கைப்பற்றினாள்.

"நீங்க மேல வாங்க.."

"எதுக்கு?"

"நீங்க வாங்க, சொல்றேன்."

வேறு வழியின்றி ஃபாத்திமாவைத் தொடர்ந்து சென்றவளுக்குச் சிறிது நேரத்தில் மதிய உணவு பரிமாறப்பட்டது.

"இல்ல, எனக்கு வேண்டாம்.."

"உங்க நிலைமை எனக்குப் புரியுது துர்கா. ஆனால் அதுக்காக வயித்தைக் காயப்போட்டு என்ன பலன்?"

"எனக்குப் பசிக்கலை."

"நீங்க நேற்று ராத்திரியும் சாப்பிடலை. காலையிலும் சாப்பிட மறுத்திட்டீங்க. இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருப்பீங்க?"

"தயவு செஞ்சு என்னை வற்புறுத்தாதீங்க.."

துர்கா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஃபாத்திமா கேட்கவில்லை.

“முதலில் ஒண்ணுத் தெரிஞ்சுக்கோங்க துர்கா. நம்ம எதிர்ப்பைக் காட்டவும் நம்ம உடலில் தெம்பு வேணும்.”

ஃபாத்திமாவின் கூற்று துர்காவிற்குப் பழைய நிகழ்ச்சிகளை நியாபகப்படுத்தியது.

அதன் உண்மை புரிந்து சம்மதித்தவள் வேறு வழியின்றி வாயில் உணவை வைக்க, அது தொண்டைக்கு மேல் இறங்குவேனா என்றது.

ஆனால் தன்னையே பார்த்தவாறு தன் அருகில் அமர்ந்திருக்கும் ஃபாத்திமாவின் கனிவான முகம் சற்றுத் தெம்பளிக்க, ஒவ்வொரு கவளமாக மெதுவாக விழுங்கத் துவங்கினாள்.

அப்படியும் தட்டில் இருந்த உணவில் கால் பகுதிக்கு மேல் காலியாகவில்லை.

பரிதாபமாகத் தன்னை நிமிர்ந்து நோக்கும் துர்காவின் இயலாமையைப் புரிந்துக் கொண்டவளாக, "சரி, நீங்க ரெஸ்ட் எடுத்துக்கங்க.. நான் பிறகு வந்து பார்க்குறேன்.." என்றவளின் கரத்தை எட்டிப் பற்றினாள் துர்கா.

"நீங்க, அவருக்கு என்ன வேணும்?"

"யாருக்கு?"

"அவருக்கு.. வ.. வருணுக்கு."

"ஓ சாருக்கா? ஜாஃபர் அண்ணா என்னுடைய கூடப் பிறந்தவர்."

"உங்களை நான் இதுக்கு முன்னாடிப் பார்த்ததில்லையே."

"இதுக்கு முன்னாடியா? இப்ப தான் சார் உங்களை முதல் தடவையா கூட்டிட்டு வந்தாருன்னு நான் நினைச்சேன்."

ஆக, இவளுக்கு என்னைப் பற்றி எதுவும் தெரியாது.

“இல்ல..” என்று எதுவோ கூற வந்த துர்கா அதற்கு மேல் பேச்சினை வளர்க்காது அமைதியாகிவிட, அவளின் மௌனம் ஃபாத்திமாவிற்கு எதனையோ புரியச் செய்தது.

ஆயினும் அதனைப் பற்றிக் கேட்கும் தைரியமும் உரிமையும் இன்றி, அதற்கு மேல் எதுவும் பேசாது தட்டினை வெளியே எடுத்துச் சென்ற ஃபாத்திமா கதவை மூடிவிட்டு செல்ல, அதற்குப் பிறகு தன்னந்தனியாக அவ்வீட்டில் கழிந்த ஒவ்வொரு விநாடியும் துர்காவிற்கு நெருப்புத் தடாகத்தில் மிதப்பது போல் காந்தியது.


******************************************

"சித்து. நீ அத்தையைப் பார்த்துக்க. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு."

கூறிய ஷிவா வெளியேற எத்தனிக்க, "எங்க மாப்பிள்ளைப் போறீங்க? துர்காவைத் தேடியா?" என்றார் ஸ்ரீமதி.

"ம்ம்ம்.."

"வேண்டாம் மாப்பிள்ளை. அவளை விட்டுடுங்க.."

"என்ன பேசுறீங்க? எப்படி அவளை, அதுவும் அவன்கிட்ட விட முடியும்."

"மாப்பிள்ளை, நான் ஏற்கனவே சொன்னது மாதிரி துர்காவுக்கு நான் அம்மா, அவளைப் பத்தி எனக்குத் தான் நல்லாத் தெரியும்."

"எதுவா இருந்தாலும் நான் அவளைச் சந்திக்கணும், அதற்கப்புறம் தான் நான் எந்த முடிவும் எடுக்க முடியும்."

ஸ்ரீமதி மறுப்பதற்குக் கூட இடம் கொடுக்காமல் மனைவியைக் கண்டு அவரைப் பார்த்துக் கொள்ளுமாறு தலையசைத்துச் சைகை செய்தவன் வெளியேற, இப்பொழுது ஸ்ரீமதிக்கும் சில விஷயங்கள் புரிவது போல் இருந்தது.

வருண் மேல் ஷிவாவிற்கு தீராத பகை இருக்கின்றது.

தொழிலில் யுத்தம் என்றால் பெண்களை இழுப்பதில் தர்மம் இல்லை. ஆனால் இருவருமே மாற்றி மாற்றி இந்த இரு பெண்களையும் பகடைக்காய்களாக உருட்டி விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு வழியாகச் சிதாரா இதனில் இருந்து வெளிவந்துவிட்டாள், ஆனால் துர்கா?

ஆக, ஆண்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் யுத்தத்தில் இப்பொழுது மீண்டும் சிக்கியிருப்பது என் மகளா?

மனம் கலங்கியவர் சில நிமிடங்கள் யோசித்துவிட்டு சிதாராவின் கரத்தை அழுந்த பற்ற, திடுக்கிட்டவள் அவரின் உடல்நிலை மோசமாகிவிட்டதோ என்று பதறிப்போனாள்.

"ஹாஸ்பிடலுக்குப் பேசிட்டேன் ஆண்டி. போலாம், வாங்க.."

"இல்ல சிதாரா. எனக்கு ஒண்ணும் இல்லை. கொஞ்சம் தலை சுத்துற மாதிரி இருந்துச்சு, அதான்.. வேற ஒண்ணும் இல்லை."

"பரவாயில்லை ஆண்டி, எதுக்கும் செக் பண்ணிக்கலாம்.."

"வேண்டாம்மா, ஆனால் உன் கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும், வர்றியா.."

கூறியவாறே மெல்ல எழுந்தவர் சிதாராவின் கரம் பற்றித் தங்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் செல்ல, அவர்களுக்குப் பின் இரகசியமாய்ப் பேசுவதைப் போல் நடித்தவாறே ஸ்ரீமதியின் காதுகளுக்கு நன்றாகவே கேட்கும் விதமாய்த் துர்காவைக் கீழ்தரமாகப் பேசிய சுமதியின் பேச்சுக்கள், துல்லியமாய் அவரைச் சென்று சேர்ந்ததில் அந்த அன்னையின் வேதனை பன்மடங்கு அதிகரித்தது.

மனதிற்குள், 'நீங்க எப்படின்னு எனக்குத் தெரியாது வருண்.. ஆனால் ஏனோ என் பொண்ணு மனசுல நீங்க இடம் பிடிச்சிட்டீங்கன்னு நினைக்கிறேன்.. இல்லைன்னா அவ அவளுடைய மாமனையே வேண்டாம்னு சொல்லிருக்க மாட்டா.. எல்லாரும் என்னவோ அவளை நீங்க தூக்கிட்டுப் போய் வச்சிருந்த ரெண்டு மாசத்தில் அவளுக்கு ஏதோ கெடுதல் செய்துட்ட மாதிரிப் பேசுறாங்க.. ஆனால் நீங்க அப்படி நடந்திருந்தால், என் துர்கா இப்படி அமைதியா இருந்திருக்க மாட்டாள். ஆக, இந்தக் கல்யாணம் நடந்த விதம் அவளுக்குப் பிடிக்காம இருக்கலாம், ஆனால் நீங்க அவள் மனசுல இருக்கீங்க. அதற்கான அத்தாட்சி தான் நான் அவ கண்ணுல பார்த்த சாந்தம்..' என்று யோசித்தவாறே அறைக்குள் நுழைந்தவருக்குச் சிதாரா கூறிய விஷயம் அதிர்ச்சியை வழங்கவில்லை.

“ம்ம், சொல்லு சிதாரா.”

“என்ன ஆண்டி?”

“நான் என்ன கேட்க வருகிறேன்னு உனக்குத் தெரியும்மா. எதையும் மறைக்காமல் சொல்லு.”

“ஆண்டி.”

“துர்கா மேல் உனக்கு எவ்வளவு அன்பு இருக்குன்னு எனக்குத் தெரியும் சிதாரா. ஷிவாவை உனக்குத் தெரியும் முன்பே துர்காவை உனக்குத் தெரியும். அவளுடைய பத்து வயசுல அவ மனசுக்கு நெருக்கமான தோழியா நீ மாறின. உன்னைப் பற்றி அவ பேசாத நாளே இல்லை. அதே போல் உன்கிட்ட அவ மறைக்கிற விஷயமும் எதுவும் இல்லைன்னு எனக்குத் தெரியும். இப்போ என் மகளைக் காணோம்னு நான் அல்லாடிட்டு இருக்கேன். இதுக்கும் மேல என்னிடம் இருந்து மறைக்காத, சொல்லும்மா..”

இதற்கு மேல் அவள் எப்படி உண்மையைக் கூறாது இருக்க முடியும்?

"சாரி ஆண்டி.. ஷிவா தான் யார்கிட்டேயும் இந்த விஷயத்தைச் சொல்லிடாதன்னு என்கிட்ட கண்டிஷன் போட்டு இருந்தார். ஆனால் துர்கா உங்க பொண்ணு. அவளைப் பத்தி எல்லா விஷயமும் உங்களுக்குத்தான் தெரியணும்.” என்றவள் துர்கா வருணை அழைத்ததை மட்டும் கூறினாள்.

மற்றபடி அவளுக்கும் துர்காவின் ஆசைகள் சரிவர புரிய வாய்ப்பில்லை. அந்தளவிற்கு அவளது தோழி அவளின் காதலை மூடி மறைத்திருந்தாளே!!

“அப்போ, என் பொண்ணு கூப்பிட்ட பிறகு தான் அந்தப் பையன் வந்து அவளைக் கூட்டிட்டுப் போயிருக்கணும்.”

“இருக்கலாம் ஆண்டி. எனக்கென்னவோ துர்காவுக்கும் வருண் மேல ஒரு ஈடுபாடு வந்திருக்கணும்னு தான் தோனுது. அதான் வளைகாப்பு நேரத்தில் பிரச்சனை செய்ய வந்த வருண் துர்காவைப் பார்த்ததும் அமைதியாகிட்டார். அவ்வளவு கோபத்தோட வந்து ஷிவாவோட சட்டைக்காலரைப் பிடிச்சுச் சண்டைப் போட வந்தவர் ஏன் துர்காவைப் பார்த்ததும் அமைதியாகிடணும்? அப்பவே எனக்குச் சந்தேகம் இருந்துச்சு, ஆனால் அதுக்காக அவர் துர்காவைக் கூட்டிட்டுப் போய்க் கல்யாணம் வரைக்கும் போவாருன்னு சத்தியமா நான் எதிர்பார்க்கலை ஆண்டி."

புரிந்தது! அனைத்துமே ஒரு அன்னையாய், அதற்கு மேலும் ஒரு பெண்ணாய், ஸ்ரீமதிக்குப் புரிந்தது!

*********************************

ஹட்காட் கிராமம்.

நேரம்: இரவு 7 மணி.

கதவைத் திறந்து கொண்டு உள் நுழைந்த ஃபாத்திமாவின் கைகளில் அழகாய் வீற்றிருந்த அந்த ரோஸ் கோல்ட் நிற பட்டுப் புடவையைக் கண்டதில் துர்காவிற்கு அடுத்தக்கட்ட திகில் ஆரம்பித்தது.

'ஐயோ! கடவுளே! இப்போ எதுக்குப் புதுப்புடவை??'

புரிந்தும் புரியாமலுமாய் அதிர்ந்த முகத்துடன் ஃபாத்திமாவின் கைகளில் இருந்த தட்டினையே பார்த்திருக்க,

"துர்கா. குளிச்சிட்டு வர்றீங்களா? இந்தப் புடவையை நீங்க உடுத்திக்கணும்னு சார் சொல்லிருக்கார்." என்றாள், அந்தப் புடவை எதற்கு என்று அவளுக்கும் புரிந்திருந்ததில் துர்காவின் மீதான கரிசனத்துடன்.

“ஏன்? இப்போ எதுக்குப் புதுப்புடவை? நான் இப்படியே இருக்கிறேனே.”

ஆழ பெருமுச்சுவிட்ட ஃபாத்திமா, “என்னை தர்ம சங்கடத்தில் ஆழ்த்துறீங்க துர்கா. ப்ளீஸ்..” என்றாள்.

நேற்று இரவு இங்கு அழைத்து (தூக்கி!) வரப்பட்டதில் இருந்து, இன்று காலை திருமண அலங்காரம் துவங்கி மதிய உணவு உண்டது வரை ஃபாத்திமாவின் பணிவான கட்டளைகள் எதையும் தான் மறுக்க இயலவில்லை.

காரணம், அவளது எஜமானனின் கண்டிப்பு அப்படி!!!

இப்பொழுது மட்டும் மறுத்து என்ன பயன்? அதற்கு மனதிலும் தெம்பு இல்லை!

வேண்டா வெறுப்பாய் புடவையை வாங்கியவள் ஃபாத்திமா சென்றவுடன் குளித்து முடித்து அதனை உடுத்தியவளாய் தன் அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே சென்று பார்க்க, அவ்வீடு வெறிச்சோடிக் கிடந்தது.காலையில் இந்த வீட்டில் தான் ஒரு திருமணம் நடைபெற்றதா என்ற பெருத்த சந்தேகம் எழுமளவிற்கு, துளிக்கூட அதற்கான சாட்சியங்களே இல்லாதது போல் சுத்தமாகத் துடைத்து விடப்பட்ட வீடு காலியாகக் கிடந்தது.

‘எல்லாரும் எங்க?’

யோசனையுடன் மெல்ல கீழே இறங்கி வந்தாள்.

மருந்துக்குக் கூட மனித வாடையே அவ்வீட்டில் இல்லை.

அச்சம் கிலி திகில் என்றணைத்தையும் உணர்ந்தாள் அவ்விட்டின் மயான அமைதியில்.

"ஃபாத்திமா.. ஃபாத்திமா.."

அவளது குரல் தான் எதிரொலித்தது.

"ஜாஃபர் அண்ணா.. எல்லாரும் எங்க போயிட்டீங்க?"

மீண்டும் எதிரொலி!

நிமிடங்கள் சில அங்குமிங்கும் சுற்றியவள் வேறு வழியின்றி மெல்லிய குரலில், "என்னங்க.." என்றாள்.

ஆனால் அப்பொழுதும் வெறும் எதிரொலி மட்டும் தான்.

'என்னாச்சு? எங்கப் போயிட்டாங்க எல்லாரும். இவரும் இல்லை போலருக்கே..'

நடுக்காட்டில் இரவு நேரத்தில் தனித்துவிடப்பட்ட குழந்தையின் மன நிலையில் இருந்தவளுக்கு அச்சம் தலைக்கேற, இருந்தும் வலுக்கட்டாயமாய்த் துணிவை வரவழைத்துக் கொண்டவளாய் அவ்வீட்டில் இருந்த ஒவ்வொரு அறையையும் திறந்துப் பார்த்தாள்.

ம்ஹூம்.. ஒருத்தரையும் காணவில்லை.

ஐயோ! என்னைத் தனியா விட்டுட்டுப் போயிட்டாங்களா என்று பதற, எந்த அறையிலும் ஒருவரும் இல்லை என்பதை அறிந்துக் கொண்டவளின் கண்கள் அவ்வீட்டின் முகப்பு வாயிலில் படிந்தது.

ஆயினும் அதன் கதவைத் திறந்துப் பார்க்க மட்டும் தைரியம் வரவில்லை.

பல நிமிடங்கள் இருண்டுக் கிடந்த வெளியிடத்தை ஜன்னல்கள் வழியே பார்த்தவள் அங்குக் கிடந்த ஒரு இருக்கையில் அமர, திடுமென வெளியே காற்று வீசியதில் கேட்ட சத்தத்தில் அரண்டு எழுந்தவள், ஓட்டமும் நடையுமாக ஓடி மாடியில் இருக்கும் தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.

'அந்தக் காட்டுக்குள்ள அவருடைய ஆளுங்க காவலுக்கு இருந்தாங்க. ஆனால் அவ்வளவு பேரு இருந்தும் அந்தச் சசிதரன் என்னைத் தூக்கிட்டுப் போனான். இங்க ஒருத்தருமே இல்லையே.'

மனம் கன்னாபின்னாவென்று எதிர்மறையான கற்பனைகளைத் தூண்ட, அரண்டுப் போனவளாய் கட்டிலில் அமர்ந்திருந்தவளுக்கு யாரோ மாடிப்படிகளில் ஏறி வரும் சத்தம் கேட்டதில் நெற்றியில் வியர்வைத் துளிகள் பூக்க ஆரம்பித்தன.

பலத்த அமைதியைக் கிழித்துக் கொண்டு வந்தது அந்தச் சத்தம்.

ஆனால் நிச்சயமாக அவர்கள் வேகமாய் ஏறி வரவில்லை, வெகு நிதானமாய் நடந்து வரும் ஓசை.

யாராக இருக்கும்? அன்று சசிதரன்.. இன்று?

பீதியில் நெஞ்சில் குளிரெடுக்க, சப்தமிடுவதற்கும் சக்தியில்லாமல் உறைந்துப் போனவள் மெல்ல அடியெடுத்து வைத்துப் பின்னால் நகர, அறைக்கதவை தட்டும் சத்தத்தில் தூக்கிவாரிப்போட கட்டிலில் தடுமாறி விழுந்தாள்.

'கடவுளே! நீதான்பா என்னைக் காப்பாத்தணும். அவர் இல்லாத நேரமா பார்த்து திரும்பவும் வந்துட்டான் போல இருக்கே.'

வேண்டியவாறே தட்டப்படும் அறைக் கதவு மேலேயே பார்வையைப் பதித்திருக்க, விநாடிகள் சில தட்டியவன் சலிப்புடன் தான் வைத்திருந்த சாவியைக் கொண்டு கதவை திறந்ததில் பெண்ணவளின் சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.

ஆனால் வந்தது வருண்.

அவளின் நிலையில் அவள் பயந்திருந்தாள் என்றால், அவள் கட்டிலில் விழுந்திருந்த நிலையில் அவன் கலைந்து போனான்.

படுக்கையில் விழுந்த வேகத்தில் அவன் கொடுத்து அனுப்பியிருந்த, அவள் கட்டியிருந்த ரோஸ் கோல்ட் நிற பட்டுப்புடவை பல இடங்களில் நழுவியிருந்தது.

குறிப்பாக அவளின் கால்கள் முழுமையிலும் வெளியே தெரியும் அளவில்.

தன்னால் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாகத் தாலியும் கட்டப்பட்டு, மாபெரும் இக்கட்டினில் சிக்க வைக்கப்பட்டிருப்பவளை சிரமப்படுத்தக் கூடாது. அவள் விரும்பினால் மட்டுமே இன்று அவளைத் தன்னவளாக எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவளை விட்டுவிட வேண்டும்.

இனி அவள் விருப்பம் தான் என் விருப்பம் என்று உரமேற்றிக் கொண்டு வந்திருந்தவனின் நிலையோ, அவளையும் விடக் கவலைக்கிடமாகிப் போனது.

நுதலில் துவங்கி, முகம் முழுவதிலும் புரண்டு, பின் கழுத்தில் ஊர்ந்து, மார்பில் இறங்கி, கொடி இடையைத் தழுவி, பாத நுணிகள் வரை அசராது நிதானமாகப் பயணித்த அவன் பார்வையின் வீரியத்தில், பாவையவளின் இதயம் நின்றுவிடாது இருந்தது தான் அதிசயமே.

இதனில் மெல்ல அவளை நோக்கி வந்தவன் கட்டிலில் விழுந்திருந்தவளின் வெகு அருகில் அமர்ந்து அவளது பாதங்கள் இரண்டினையும் ஒரு கரத்தால் பற்ற, இதற்கு மேல் என்னால் முடியாது என்பது போல் வெகு இறுக்கமாய் அவள் ஸ்வாசம் வெளி வந்தது.

தன்னை மறைக்க எண்ணியவளாய் பட்டென மேலே தூக்கியிருந்த புடவையை அவள் கீழே இறக்க, அவளின் செய்கையைத் தடுக்கும் விதமாய் மறு கையால் புடவையை இறுக்கப் பற்றி மேலேயே நிறுத்தியவனாய், "காயம்?" என்று கரகரப்பான குரலில் கூறியவனால் முடிக்க இயலவில்லை.

எப்போ பட்ட காயத்தைப் பத்தி இப்போ வந்து கேட்குறார், ஏன் இன்னும் ஒரு வருஷம் கழிச்சு வந்து கேட்க வேண்டியது தானே என்று மனம் குமுறினாலும், புத்தியோ இறங்கி வந்துடாதடி என்று சூளுரைத்துக் கொள்ள, "அது.. ரொம்ப நாளுக்கு முன்னாடியே ஆறிடுச்சு.." என்றவளாய் அவன் கைகளைத் தன் மேல் இருந்து அகற்ற போராடினாள்.

ஏற்கனவே தறிகெட்டு அலையும் தன் நிலையை அடக்கப் போராடியவனாக அமர்ந்திருப்பவனுக்கு, அவளின் போராட்டம் இப்பொழுது கோபத்தைக் கொண்டு வந்தது.

"இப்ப எதுக்குடி இந்தப் போராட்டம்?"

"தயவு செஞ்சு விடுங்க.."

"விட்டுடுறதுக்கா இவ்வளவு கஷ்டப்பட்டுக் கல்யாணம் செஞ்சேன்."

“கல்யாணமா?”

“காலையில் எனக்கும் உனக்கும் நடந்ததற்குப் பேர் என்ன?”

"அது கல்யாணம் இல்ல?"

"பின்ன?"

"பலவந்தம்.."

"பலவந்தமுன்னா என்னன்னு தெரியுமா?"

இதென்ன கேள்வி என்பது போல் அது வரை தலை குனிந்து அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து அவனைப் பார்க்க, சிரித்தானா இல்லையா என்பது போல் அவன் முகத்தில் சட்டென வந்து போன முகமாற்றம் குழப்பத்தைத்தான் கொணர்ந்தது.

"நான் ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்லை.."

"அதான் ஏற்கனவே சொல்லிட்டியே.”

“சொல்லிட்டேனா? எப்போ?”

அவளின் கண்களை ஊடுறுவுவது போல் பார்த்தவன், “அன்னைக்குக் காயத்துக்கு நான் மருந்துப் போடும் போது?” என்றான்.

அவள் திருதிருவென்று விழிக்க,

“எனிவேய்ஸ், நீ சின்னப் பொண்ணு இல்லைன்னு எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். அதனால் இனி அதைச் சொல்லிட்டே இருக்கணும்னு அவசியம் இல்லை..” என்றவனின் பார்வையோ, எதை வைத்து தான் தெரிந்துக் கொண்டோம் என்பதைக் கூட அக்கணம் பறைசாற்றியதில் வெட்கத்தில் சுருண்டு போனாள்.

அவளின் நாணம் ஆண்மகனின் வேட்கையில் விரசத்தையும் கலந்ததில், கட்டுப்படுத்த முடியாதளவிற்கு அவனது நாடி நரம்பெல்லாம் வெட்பம் படர்ந்தது.

ஏற்கனவே அவளது தேகத்தையும் பொசுக்கிக் கொண்டிருக்கும் அளவிற்கான சூடான மூச்சுக்காற்றுப் படும் அளவிற்கு அமர்ந்திருந்தவன், இப்பொழுது இருவருக்கும் இடையில் அங்குலம் அளவுக்குக் கூட இடைவெளி இல்லை என்பது போல் வெகு நெருக்கமாய் நெருங்கி அமர்ந்தான்.

அவனது செய்கையில் அதிர்ந்தவள் பின்னால் நகர்ந்து அமர எத்தனிக்க, சட்டெனத் தன் இடது கையைக் கொண்டு அவளது மெல்லிடையை வளைத்துப் பிடித்தவன் மற்றொரு கையால் அவளின் மாங்கல்யத்தைத் தூக்கிப் பிடித்தவனாய், “இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியும் தானே?” என்றான் கணத்திருக்கும் குரலில்.

காட்டிற்குள் அடைப்பட்டுக் கிடந்த பொழுதே அவன் பால் சாயத் துவங்கியிருந்தவளின் மனதைத் தடுக்க இயலாதுத் தத்தளித்தவள் அவள்.

இப்பொழுது கணவனாய் தன்னருகில் அமர்ந்திருப்பவனின் அருகாமையில் தளிருடல் தகிக்க ஆரம்பித்ததில் தவித்துப் போனாள்.

இவன் மேல் கோபப்படுவதா அல்லது ஏற்கனவே தனக்குள் காதலை வார்த்திருக்கும் இவன் மேல் தாபம் கொள்வதா?

வயதும் சூழ்நிலையும் போட்டிப் போட, திரிசங்கு சொர்க்கமாய் அப்படியும் இல்லாமல் இப்படியும் இல்லாமல் அந்தரத்தில் நிற்கும் இரண்டுங்கெட்டான் நிலையில் சிக்கியிருந்தவளை மென்மேலும் திகைக்கச் செய்தது, இடையில் கிடந்த அவனது கரத்தின் அதிக அழுத்தம்.

தெளிந்தும் தெளியாததுமான பார்வையுடன் அவனையே பார்த்திருந்தவளின் கலைந்துக் கிடந்த முடிக்கற்றைகளை வலது கை விரல்களால் செவிகளின் ஓரம் ஒதுக்கியவனாய், கிசுகிசுப்பான குரலில்,

"துர்கா, இப்ப நீ என்னுடைய எதிரியோட அத்தைப் பொண்ணு இல்லை. என்னுடைய மனைவி, மறந்துடாதே.. எனக்கு நீ வேணும். இன்னைக்கே, இப்பவே. முழுசா. எனக்கே எனக்குன்னு நீ வேணும்." என்றதில் கன்னியவளின் இதயம் சுருண்டு போனது

எப்பேற்பட்ட வணிக விவாதங்களிலும் அளவாய் பேசி காரியத்தைக் கட்சிதமாக முடிப்பவன் என்று பெயரெடுத்து இருந்தவன் அவனே உணராது வார்த்தைகளை விட்டதில், மனையாளின் தாபத்தை ஒரே நொடியில் முறித்துப் போட்டான்.

விரும்பியதுமே எடுத்துக் கொள்வதற்கு நான் என்ன யாருக்கும் சொந்தமில்லாத, கீழே கிடக்கும் பொருளா? இதில் இனி நான் இவருடைய எதிரியின் அத்தைப் பெண் இல்லையாம். அப்படி என்றால் இவர் கடத்திய பெண்ணுங்களுக்கு இவர் கொடுக்கும் தண்டனை இது தானோ?

இதயம் வீறிட்டு அழ, அதற்கேற்றார் போலக் கண்களும் நீர் வார்க்க, "இது தான் நீங்க கொடுக்கிற தண்டனையா?” என்றாள்.

“வாட்?”

“நீங்க தானச் சொன்னீங்க?”

“என்னன்னு?”

“நீங்க கடத்துற பொண்ணுங்களுக்கு நீங்க கொடுக்கிற தண்டனை வேற மாதிரி இருக்கும்னு. மறந்துட்டீங்களா?”

“ஆனால் நீ அதில் விதிவிலக்குன்னு சொன்னேன். அதை நீ மறந்துட்டியா?”

இரு இரவுகளுக்கு முன் அவளைச் சீண்டுவதற்கு என்று அவன் கூறிய பொய்யான வார்த்தைகள் இப்பொழுது அவனையே தாக்குகிறது [backfire] என்பதை அவன் புரிந்துக்கொள்ளாமல் இல்லை.

ஆயினும் அவன் கீழிறங்கி வருவதற்கு அவனுடன் கூட பிறந்த வலுவான ஆளுமைக் குணமும் விடவில்லை.

“நான் மறக்கலை..”

“அப்புறம் எதுக்கு அந்தக் கேள்வி?”

“வலுக்கட்டாயமா ஒரு பொண்ணைத் தூக்கிட்டு வந்ததும் இல்லாம அவளுக்கு விருப்பம் இருக்கா இல்லையாங்கிறது கூட தெரிஞ்சிக்காமல் தாலிக்கட்டி இருக்கீங்க. இதுல இன்னைக்கே, அதுவும் இப்பவே நீ வேணும்னு சொல்றீங்க. ஆனால் உங்களுக்கு வேணுங்கிறது எல்லாமே உடனேயே கிடைச்சிடுமா?"

ஏனோ இவள் என்னுடையவள் என்று அன்றே பறைசாற்றி விடுமான வேகம், அவனது தேடல், அவளின் கண்ணீரை அளவெடுக்க விடவில்லை.

"எனக்கு வேணுங்கிறது எப்பவும் எனக்குக் கிடைச்சிடும். கிடைக்கலைன்னா அதை எப்படியாவது அடைஞ்சே தீருவேன்னு உனக்கே தெரியும்."

"அதாவது என்னை மாதிரி.."

"யெஸ்.."

கொஞ்சமும் தயக்கமோ பரிதாபமோ அன்றி வெடுக்கெனக் கூறுபவனின் பதிலில் துர்காவின் தாபம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

அதே நேரம் சொல்லி வைத்தார் போல் வருணின் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசியும் அலற, எடுத்துப் பார்த்தவனின் உதடுகளில் குறும்புன்னகை அரும்பியது.

இவன் சிரிப்பது வெகு அபூர்வம் என்று சொந்த அனுபவத்தினாலே உணர்ந்திருந்தவளுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏன் சிரிக்கின்றான் என்ற சந்தேகம் எழ, மெல்ல எட்டி அந்த அலைபேசியின் திரையைப் பார்த்தவளுக்குத் திக்கென்றது.

'S.S.P Shiva Nandhan is monitoring your house.."

மாமனின் பெயரைப் பார்த்ததும் அவனது கரங்களில் இருந்து அலைபேசியைப் பற்ற நினைக்க, அதனைச் சட்டெனத் தனக்கு அருகில் மறைத்தவன், "உன் மாமா என் வீட்டைக் காவல் காத்துட்டு இருக்கானாம்.." என்றவன் அலைபேசியை அணைத்தான்.

"மாமா ஏன் உங்க வீட்டைக் காவல் காக்கணும்?"

"பின்ன, நான் உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டது தெரிஞ்சதும் அவன் வேற என்ன செய்வான்? எப்படியும் நான் என் வீட்டுக்கு உன்னைக் கூட்டிட்டுப் போவேன்னு தெரியும். அதான் உன்னை என்கிட்ட இருந்து காப்பாத்த என் வீட்டையே சுத்திட்டு இருக்கான் போல.. Hatchet man மாதிரி.."

அவனது நக்கல் பேச்சு ஒரு பக்கம் குத்திக் கிழித்தது என்றால், அவன் கூறிய hatchet man என்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் புரியாது அவள் விழித்தது ஒரே ஒரு விநாடி தான்.

மறு நொடியே அவளது மாமாவிற்குத் தங்களின் திருமணம் தெரிந்துவிட்டது என்று அறிந்ததில் பேரச்சம் ஜிவ்வென்று உடலில் பரவியது.

"மா.. மா.. மாமாவுக்கு எப்படித் தெரியும்?"

"எது?"

"ந.. ந.. நம்ம க.. க.. கல்யாணம்?"

"உன் மாமனைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இப்படித்தான் திக்குவியா?"

"***"

"ஐ மீன், உன் மாமன் அவன் வாயாலேயே சொல்லி நானே கேட்டுருக்கேன், அவனைப் பார்த்தால் உன் வாயெல்லாம் குழறும்னு. இன் ஃபேக்ட், சொல்லப் போனால் உனக்கு வெட்டிங் சாரி என்ன கலர்ல எடுக்குறதுன்னு அவன் உன்னிடம் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தப்போ, நான் எனக்குப் பிடிச்ச கலரை சொன்னேன். பட், எனக்குப் பிடிச்ச அதே ரெட் கலர்ல தான் நீ வெட்டிங் சாரி கட்டுவ, அதுவும் நானே உனக்கு எடுப்பேன்னு நான் நினைக்கவே இல்லைடி. எனிவேய்ஸ், அதைவிடு. அவன்கிட்ட பேசும் போது மட்டும் தான் நீ இப்படித் திக்குவேன்னு தெரியும். ஆனால் இப்போ அவனைப் பத்தி பேசுனாலே திக்குறியே, அதான் கேட்டேன். அவன் மேல் உனக்கு இவ்வளவு பயமா?"

"தயவு செஞ்சு சொல்லுங்க, எப்படி அவருக்குத் தெரியும்?"

மீண்டும் அலைபேசியை எடுத்தவன் அவளுக்கு அதன் திரையினை உயிர்ப்பித்து ஒரு புகைப்படத்தைக் காட்ட, தலை கிர்ரென்று சுற்றியது.

"அப்படின்னா என் அம்மாவிடமும் மாமா இதைக் காட்டியிருப்பார்."

"Maybe.. Maybe not?"

"என்ன சொல்ல வர்றீங்க?"

"தெரிஞ்சிருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம்னு சொன்னேன்.."

அவனது சவடாலான பேச்சு சினத்தையும் வருத்தத்தையும் ஒருங்கே கொணர்ந்தது.

'பெற்றவளின் கவலையும் வேதனையும் இவருக்குப் புரியாதா? ஏன்?'

மனம் வெதும்ப, "அம்மா ஏற்கனவே உடல் நிலை சரியில்லாதவங்க, இப்போ இதைக் காட்டினால் என்ன நினைப்பாங்க?" என்றாள் தழுதழுக்கும் குரலில்.

"அவங்க பொண்ணு அவ விரும்பினவனையே கல்யாணம் செய்துகிட்டு சந்தோஷமா இருப்பான்னு நினைப்பாங்க."

அவனது பதிலில் அவளுக்கு விலுக்கென்று இருந்தது.

கண்கள் விரிய தன்னைப் பார்த்திருக்கும் மனையாளை தீர்க்கமாக நோக்கியவன், "என்ன துர்கா, எனக்கு எப்படித் தெரியும்னு பார்க்குறியா? இட்ஸ் ஒகே, பட், அது உண்மையா இல்லையான்னு நியே சொல்லு." என்றான்.

"இல்லை.."

"இல்லையா?”

“ம்ம்ம்”

“அப்படின்னா ஏன் நீ அந்த ஷிவாவைக் கல்யாணம் செய்துக்கலை?"

இதற்கு என்ன பதில் சொல்வாள்? சரியாகக் குறிபார்த்து அடித்துப் பெண்ணவளின் மறைவான ஆட்டத்துக் காய்களைச் சிதறடித்தான்.

“அது என்னுடைய சொந்த விஷயம்?”

“ரியலி?”

“ம்ம்ம்”

“துர்கா, இனி நீ எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.”

"ம்ப்ச்.. நான் எதையும் மறைக்கலை. நீங்க என்னைக் கடத்திட்டுப் போய் வச்சிருந்ததுல எல்லாரும் என்னைத் தப்பா பேசினாங்க. உங்களால் எனக்கு ஏதோ ஆகிடுச்சுன்னு. அதான் என் மாமா வாழ்க்கை என்னால் வீணாகிடக் கூடாதுன்னு தா.."

அவள் முடிக்கவில்லை.

"ஏன் உன் மாமனுக்கு உன் மேல் நம்பிக்கை இல்லையா?"

அவனது கேள்வியில் வெகுண்டெழுந்தவள், "என் மாமாவுக்கு என் மேல் நம்பிக்கை நிறையவே இருக்கு.." என்றாள்.

"அப்புறம் ஏன் அவனைக் கல்யாணம் பண்ணிக்கலை?"

"அதான் சொன்னேன்ல.."

"ஸோ, நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்காததற்குக் காரணம் நானில்லை. ஐ மீன், என் மேல் உனக்கு வந்த ஈர்ப்பு இல்லை."

"நிச்சயமாய் இல்லை.."

“அப்போ எப்பவுமே நீ என்னை விரும்பினது இல்லை.”

“அதான் சொல்லிட்டேனே..”

“அப்புறம் எதுக்குடி அன்னைக்குக் காட்டில் இருந்து ஹெலிகாப்டரில் கிளம்பும் போது என்னை அப்படித் தேடின?”

“அதுக்குக் காரணம் எனக்கு உங்க மேல வந்த விருப்பமுன்னு நீங்க நினைச்சிருந்தால் அது உங்களுடைய தப்பு.”

அவளது பதிலில் ஏற்கனவே அவளது இடையை இரும்பாய் வளைத்துப் பிடித்துத் தனக்குள் இறுத்தியிருந்தவன் இப்பொழுது இன்னமும் தன் உடலுக்குள்ளேயே அவளைப் புகுத்திவிடுவது போல் நெருக்கியவாறே, “ஸ்டாப் இட் துர்கா..” என்று கத்தியதில் அந்த அறையே கிடுகிடுத்தது போல் இருந்தது.

"துர்கா. நீ என்ன வேணாலும் சொல்லு, பட் எனக்கு உன் மனசுல இருக்கிறது தெரியும். அதே போல் என் மனசுல என்ன இருக்குங்கிறதையும் நீ தெரிஞ்சுக்கணும். எனக்கு வேணுங்கிறதை நான் எப்பவும் அடைஞ்சே தீருவேன்னு சொல்லிருக்கேன். அது அஹிம்சை முறையிலோ அல்லது ஹிம்சை முறையிலோ, எந்த முறையாக இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை. அது தான் இந்த வருண் தேஸாய். அதை நான் சொல்லித் தெரியணுங்கிற அவசியம் உனக்கு இல்லை. உன் கழுத்துல தொங்குற, நான் கட்டிய தாலியே அதை உனக்கு நிபாகப்படுத்தும். அதனால் இதை மட்டும் மறந்துடாத. எப்ப வேணாலும் நான் உன்னை எடுத்துக்குவேன். இன்னைக்கு இல்லைனாலும், எப்ப வேணாலும்."

'எப்ப வேணாலும்' என்ற வார்த்தையை அழுத்தமாய்க் கூறிவிட்டு பட்டென்று அவளை விட்டு எழுந்தான்.

அவனது திடீர் செய்கையில் தடுமாறியவளாய் கட்டிலில் சாய்ந்து விழ, இப்பொழுதும் புடவை நழுவி வெளிப்போந்து கொண்டிருக்கும் மனைவியின் மதர்த்த அழகில் மயங்கினாலும், அவள் அழகின் பரிணாமங்களை உணர்ந்துவிடத் துடித்த மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் கை முஷ்டியை இறுக்கியவனாய்,

"உன்னை நீயே ஏமாத்திக்காத துர்கா." என்றுவிட்டு மறு விநாடியே அறையைவிட்டு வெளியேறினான்.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..

References:

"Hatchet man" is an idiom that refers someone who is employed to perform unpleasant tasks, such as destroying a political opponent, ruining someone's reputation, or one hired for murder, coercion, or attack. "ஹட்செட் மேன்" என்பது ஒரு அரசியல் எதிரியை அழிப்பது, ஒருவரின் நற்பெயரைக் கெடுப்பது அல்லது கொலை மற்றும் தாக்குதலுக்காக பணியமர்த்தப்பட்டவர் போன்ற விரும்பத்தகாத பணிகளைச் செய்யப் பயன்படுத்தப்படும் ஒருவரைக் குறிக்கிறது.
 
Last edited:

Thamizh kabilan

New member
Superbbbb ud jb...I want to know ur qualification bcos.தமிழ்ல நீங்க போட்ர இலக்கியப் பாடல்கள் எல்லாமே அவ்வளவு அருமையா இருக்கு.எப்படி இதை எல்லாம் தேடி எடுக்குறீங்க????? Plsss.sollunga
 
Varun konjam irangi vandhu avanoda love ah Durga ku puriya vechirkalam. Ana avanoda azhumai irangi Vara vidala. Ithula pavama kashta paduradhu Durga thaan. Eppo oruvarai oruvar purinchuppaanganu waiting mam.
 
Omg… Sri Mathi… romba pawam… she got the point…
Shiv ah parkka mattom pawama irukku… Aaanalum Varun ku ithai vitta chance illa Durga va kalyanam panna… intha murai urimaiya kooda vechikka plan pannittam… Durga vum avanai love pannura endra ore reason kaaga avanai nan mannichi viduren… Be ready to face Durga Varun…
 

saru

Member
Nice update
Varun un irumapu anavdn thimir ellathaum durgavudaipa nu thonuthu
Romba late agum recover
Ava manasula neethan dna nee panna vela unake ethura
Eduko arambichu engayo poi nikkudu
Kandupidika vandathu onnu
Inga nadakrathu vera
Siva romba keela erakramathiri eh nadakukuthu
Ha ha main villdna vittu pottu ivanunga adichikranuga hoom
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top