JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakkalin Vettai! - Episode 37

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் - 37

1717169065369.jpeg

'நான் இவரிடம் என்ன எதிர்பார்க்கிறேன்? இவரின் குணம் தெரியும். இவரைப் பற்றி இந்த நாடு முழுவதுமே பேசிக் கொண்டிருப்பதன் உண்மை தெரியும். தேஸாய் க்ரூப்ஸ் வருண் தேஸாயின் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றங்களைப் பற்றியும் தெரியும். இருந்தும் நான் இவரிடம் என்ன எதிர்பார்க்கிறேன்?'

சுழல்காற்றில் சிக்கி சுழன்று கொண்டிருக்கும் சிறு துணியானது திக்குத் தெரியாமல் பல திசைகளில் பறந்து தவிப்பது போல் உணர்ந்தாள்!

தேவேந்திரனின் புறம் திரும்பிப் பேசிக் கொண்டிருந்த வருண் தனக்கு அருகில் இரு கை விரல்களையும் ஒன்றாகக் கோர்த்து பிசைந்து கொண்டிருக்கும் மனைவியின் முகம் நோக்கி திரும்பியவன்,

"ஆனால் வேற ஒண்ணு நடந்துச்சு. நானே எதிர்பாராத ஒண்ணு. துர்கா மேல எனக்கு, இன்ஃபேக்ட், அதுக்கு என்ன பேருன்னு சொல்ல கூட அப்ப எனக்குத் தெரியலை. ஆனா ஒண்ணு மட்டும் உறுதி. துர்காவை இனி யாருக்காகவும் விட்டுக் கொடுக்கக் கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அது உங்க மகன் ஷிவ நந்தனுக்காகவும் கூட." என்றதில், கணவனின் பதிலில், வழியில் அகப்பட்ட மரக்கிளையைத் துணையாக இறுக்கிப் பிடித்துக் கொண்டு சுழலுவது போல் சுழன்றது அத்துணி.

"தம்பி.."

என்னவோ கேட்க வந்த தேவேந்திரன் கேட்க முடியாது அமைதியாகிவிட, அவர் கேட்காமலேயே அவரின் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவனாய்த் தொடர்ந்தான்.

"யெஸ்.. நீங்க என்ன கேட்க வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. உண்மையில் துர்கா என்னை விரும்புறாளா, அல்லது எனக்கு மட்டும் தான் அவள் மேல் ஒரு ஈர்ப்பு வந்திருக்கான்னுத் தெரியாமல் நான் குழம்பிட்டு இருந்த நேரம் தான், ஷிவா சிதாரா மேரேஜ் பற்றிய தகவல் எனக்கு வந்தது. ஆனாலும் என் குழப்பம் தீரவில்லை.

அதுக்குக் காரணம் நான் விரும்பினால் மட்டும் போதாது, துர்காவும் என்னை விரும்பணும். அப்பத்தான் அவளை என் மனைவியா நான் ஏத்துக்க முடியும்னு நான் முடிவு செஞ்சிருந்த நேரம் தான், துர்கா எனக்குக் கால் பண்ணியது. ஆனால் அப்போ கூட இவ மனசில் என்ன இருக்குன்னு இவளால் வெளிப்படையா சொல்ல முடியலை, பட், அதை நான் எப்படி உணராமல் இருக்க முடியும்?

அது தான், அதற்கு அடுத்த நாளே நான் மீண்டும் இவளைச் சந்திச்சேன். நான் அப்போ எடுத்த முடிவு தான் இவளைத் திரும்பவும் என் கூடச் சேர்த்தது. அந்தத் தருணத்தை நான் சரியா உபயோகப் படுத்தணும்னு நினைச்சேன். இவளுக்குப் பிடிச்சோ பிடிக்காமலேயோ இவ கழுத்தில தாலிக்கட்டினேன்.

இவள் இப்போ என்னுடைய மனைவி. இவளை இனி நான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இவளை என்கிட்ட இருந்து பிரிக்க நினைக்கிற யாரையும் நான் உயிரோடவும் விட மாட்டேன். I am very sorry to say this, but, அது உங்க மகனா இருந்தாலும் சரி, என்னால் அவனை விட்டு வைக்க முடியாது.."

அவனின் இந்தக் கூற்றில் துர்கா, ஸ்ரீமதி, தேவேந்திரன் உட்பட அனைவருக்குமே திக்கென்று இருந்தது.

இதற்கு மேல் தான் இங்கிருப்பது தேவையல்ல என்று உணர்ந்தவராக நாற்காலியில் இருந்து எழுந்த தேவேந்திரன்,

"துர்கா, எனக்குத் தங்கை மகள் மட்டும் அல்ல. என்னுடைய மகள் மாதிரி. இன்னும் சொல்லப் போனால், இவளை ஷிவாவிற்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு நான் நினைச்சதே, என் தங்கை மகள் சந்தோசமா எங்க கூடவே வாழ்நாள் முழுக்க இருக்கணுங்கிற பாசத்தினால் தான். ஆனால் எனக்கென்னவோ இவ எங்க கூட இருக்கிறதை விட, உங்கக்கூட இருக்கிறது இவளுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கும்னு தோணுது. ஆனால்.." என்றவர் சொல்ல வருவதும் வருணுக்குப் புரிந்தது.

"துர்காவிற்காக நான் எதுவும் செய்வேன். என் வைஃபிற்காக எதையும் இழக்க நான் தயார், என் உயிரையும் கூட.."

முடித்து வைத்தான் அவருடைய கலக்கத்தை மட்டுமல்ல, ஸ்ரீமதியின் சந்தேகத்தையும்.

அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழாமலேயே அவரை நிமிர்ந்து பார்த்தவாறே கூறிய வருணின் தோள் தொட்ட தேவேந்திரனின் உதடுகளிலும் உள்ளார்ந்த இளநகை ஓட, தன் தங்கையைத் திரும்பி பார்த்தவர் மனநிம்மதியுடன் குடும்பத்தார் சகிதம் ஸ்ரீமதியின் இல்லத்தை விட்டுச் சென்றார்.

**************************

தமையன் உட்பட அனைவருமே விடைபெற்றுவிட, ஸ்ரீமதியுடன் தனித்திருந்தது அவரது மகளும் மருகமகனுமே.

அந்நாள் வரை தேஸாய் க்ரூப்ஸின் தலைமை நிர்வாக அதிகாரி வருண் தேஸாய் என்ற பெயரைக் கேள்விப்பட்டாலே அரண்டு ஒடுங்கும் ஸ்ரீமதிக்கு, ஏனோ அவன் இன்று தங்கள் வீட்டின் நடுவறையில் அதிகாரமாய் வீற்றிருக்கும் தோரணையில் கம்பீரம் தான் தோன்றியதே ஒழிய, கலக்கம் வரவில்லை.

அதிலும் அவன் சிறிதும் ஒளிவு மறைவின்றித் தெள்ளத்தெளிவாக அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் இருக்கும் காதலை மிடுக்காய் கூறியதில், அதுவரை அலைக்கழிக்கப் பட்டுக்கொண்டிருந்த அவரது தாய் மனம் சற்று அமைதியடைந்தது.

அவனை நெருங்கியவர்,

"ஷிவா ஏதாவது தவறா பேசி இருந்தா தப்பா நினைச்சிக்காதீங்க மாப்பிள்ளை. சின்ன வயசில இருந்தே துர்காவோட ஒண்ணா வளர்ந்த புள்ள அது. பிடிவாதமா அவளை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்னு அவளுக்கு எந்நேரமும் பாதுகாப்பா சுத்திட்டு இருந்த பையன். இன்னைக்குத் திடீர்னு நீங்க வந்து துர்கா மேல உரிமை கொண்டாடியதும், அதால தாங்கிக்க முடியலை. அது தான் உரிமையில, பாசத்தில, அது ஏதேதோ பேசிடுச்சு.." என்றார்.

தனது பேச்சிற்குப் பதிலேதும் கூறாது தன்னையே பார்த்திருக்கும் மருமகனிடம் இதற்கு மேல் என்ன உரையாடுவது என்று தெரியாது மௌனமாகிப் போனார் ஸ்ரீமதி.

ஆனால் அந்தக் கணமான சூழ்நிலையைச் சுகமாக்கினாள், ஷிவாவின் தங்கை, தெய்வாம்பிகை.

அண்ணன் தந்தை உட்பட அனைவருமே சென்றிருக்க, தான் மட்டும் விருப்பப்பட்டு அவ்வீட்டிலேயே தங்கிவிட்டிருந்தவள், "மதியத்துக்குச் சைவமா அசைவமா அத்தை?” என்றவாறே திரும்பியவளாய்,

"அண்ணா, நீங்க வடநாட்டில் வளர்ந்தவங்க, அதனால் உங்களுக்கு என்ன பிடிக்குமுன்னு சொல்லிட்டீங்கன்னா அதுக்கு ஏத்த மாதிரியே செஞ்சிடுவோம். அதுவும் எங்க துர்கா கையால சாப்பிட்டவங்க யாருக்கும் வேற எங்கேயும் சாப்பிடப் பிடிக்காது தான், ஆனால் இங்க உங்க துர்காவோட சேர்ந்து இந்தத் தெய்வாவும் உங்களுக்குப் பிடிச்சதை சமைச்சுக் கொடுக்கிறதுக்கு ரெடி. சொல்லுங்க, உங்களுக்கு என்ன வேணும்?" என்றதில் ஸ்ரீமதியின் முகம் மலர்ச்சியில் விரிந்தது.

"தெய்வா.."

"என்ன அத்த?"

"ஷிவா.."

"ஆமாம், நீங்க நினைக்கிறது சரி தான். அதனால என்ன அத்தை? நீங்க எனக்கு ரொம்ப ரொம்ம்ம்ம்பப் பிடிச்ச அத்தை. என் ஆத்மார்த்தமான துர்காவோட அம்மா. உங்களை எல்லாம் விட்டுட்டு நானும் மற்றவங்களை மாதிரி போயிட முடியுமா? போயிட்டா அப்புறம் இவ்வளவு வருஷம் நாம பாசமா பழகியதுக்கு என்ன அத்த அர்த்தம்?"

"அப்பா எதுவும் சொல்லப் போறாருடா?"

"இல்ல அத்த. இப்போ அவர் போனதுக்கூடக் கோவிச்சிக்கிட்டு இல்லைன்னு உங்களுக்கே தெரியும். அவர் முகத்துலேயே தெரிஞ்சுதே ஒரு வித திருப்தி. அப்புறம் என்ன?"

அத்தையின் செவி ஓரம் குனிந்தவளாய் இரகசியமாய்ப் பேசியவளின் கூற்றில் ஸ்ரீமதிக்கு மட்டும் அல்ல, துர்காவுக்குமே விழிகளில் நீர் சுரந்தது.

பெண்கள் பேசிக் கொள்ளட்டும் என்று எழுந்த வருண் வீட்டிற்கு வெளியில் நின்று கொண்டிருக்கும் ஜாஃபரை சந்திக்கச் சென்றுவிட, அவன் முகம் மறைந்ததும் சட்டென்று தன் மாமன் மகளை நெருங்கிய துர்கா அவளின் கரம் பற்றிக் கொண்டாள்.

அவளின் விரல்கள் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பிடித்திருக்கும் கரத்தில் உணர்ந்த தெய்வாம்பிகை அவளை நட்புடன் அணைத்துக் கொண்டாள்.

“தெய்வா..”

"துர்கா, நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு.. எப்பவும் என் கூடப் பிறந்தவர் அப்படிங்கிற முறையில் ஷிவா என் அண்ணன். அப்படின்னா இப்போ உன் மூலமா புதுசா கிடைச்சிருக்கிற இந்த உறவும், அதாவது உன் ஹஸ்பண்ட் வருணும் என் அண்ணன் தான். நீ ஷிவ நந்தன் ஐ.பி.எஸ்ஸை கட்டிக்கிட்டாலும் சரி, மிஸ்டர் வருண் தேஸாயைக் கட்டிக்கிட்டாலும் சரி, நீ எனக்கு அண்ணி தான், போதுமா? என்னை விட வயசில சின்னவளானாலும் நீ எனக்கு எப்பவுமே அண்ணி தான். எனக்கு எப்படி ஷிவா அண்ணனைப் பிடிக்குமோ இப்போ வருண் அண்ணனையும் பிடிச்சிருக்கு. ஏன்னா, எனக்குப் பிடிச்ச துர்காவுக்காகத் தன் உயிரையும் கொடுப்பேன்னு அவர் சொல்லிட்டாரு இல்ல, பிறகு எனக்கு என்ன வேணும்? இதுக்கு மேல நான் சொல்ல வேண்டியது எதுவும் இல்லை, சரியா அண்ணி?" என்றதில், அதுவரை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த கண்ணீர் துர்காவின் கன்னங்கள் தாண்டி கழுத்தை நனைத்தது.

"தெய்வா.."

"அடியே, எவ்வளவு மரியாதையுடன் உன்ன அண்ணின்னு கூப்பிட ஆரம்பிச்சிருக்கேன்.. நீ என்னடான்னா தெய்வா தெய்வான்னு என் பேரை சொல்லிட்டே இருக்க.."

"ம்ப்ச். தெய்வா.."

"ஒகே.. ஒத்துக்குறேன். பொறந்ததில் இருந்தே நாம ரெண்டு பேரும் இப்படித்தான் கூப்பிட்டு பழகி இருக்கோம். ஆனா என்னவோ தெரியலை எனக்கு வருண் அண்ணனைப் பார்த்தோன்னே அவர் மேல பெரிய மரியாதை வந்துருச்சு.. அதான் அவருடைய வைஃபை பேர் சொல்லிக் கூப்பிடக் கூடாதேன்னு.."

"------”

பதில் கூறாது அமைதியாக நிற்கும் துர்காவின் தோள் பற்றியவள்,

“இனியாவது மனசுக்குள்ள எதையும் மறைச்சு வச்சுத் தன்னந்தனியா கஷ்டப்படறதை விட்டுட்டு வெளிப்படையா பேசு துர்கா. இவ்வளவு நாள் பழகியும் என் மேல கூட உனக்கு நம்பிக்கை வரலை, பார்த்தியா?” என்றாள் ஆதூரத்துடன்.

“அப்படி எல்லாம் இல்லை தெய்வா..”

“அப்படித்தான். இல்லைன்னா இந்த அளவுக்கு இவர் மேல பாசம் வச்சிருக்கவ என்கிட்டயாவது அதைச் சொல்லிருக்கலாம் இல்லையா?”

“அது..”

“இதோ, இந்தத் தயக்கம் தான் உன்கிட்ட இருக்கிற பெரிய குறையே. நீ இவரை விரும்பி இருக்க, ஆனால் என்கிட்ட கூட அதைச் சொல்லலை. ஒரு வேளை ஷிவா அண்ணன் பிடிவாதமா உன் கழுத்தில் தாலிக் கட்டியிருந்தா உன் நிலையை நினைச்சுப் பாரு? எதை மறைக்கணும், எதை மறைக்கக் கூடாதுங்கிற விதிவிலக்கு இருக்கு துர்கா, புரியுதா?”

“ம்ம்ம்”

“சரி, தெய்வா தெய்வான்னு சொல்லிட்டே இருந்தியே, இப்ப சொல்லு. என்ன சொல்ல வந்த?”

“எனக்கு ரொம்பப் பயமா இருக்கு தெய்வா.."

உறவு முறையில் தனக்கு அத்தை மகள், ஆனால் சிறு வயதில் இருந்தே நெருங்கிய தோழிகள் இருவரும்.

துர்காவின் முகத்தில் விழுந்து கண்ணீரோட ஒட்டிக் கொண்டிருக்கும் முடிக்கற்றைகளை ஒதுக்கியவளாய்,

"பலருக்கு சரின்னு தோணுறது நமக்குத் தப்பா தோணலாம். அதே போல நிறையப் பேருக்கு தப்புன்னு தோணுறது நமக்குச் சரின்னு படலாம் துர்கா. ஆனால் ஒவ்வொரு மனுசனும் பிறக்குற இடங்களும், சந்திக்கிற அனுபவங்களும், அவன் எதிர் கொள்கின்ற சூழ்நிலைகளும் வெவ்வேறு விதமா இருக்கும். அவனுடைய மன நிலைக்கும் அவன் இருக்கிற சந்தர்ப்பங்களுக்கும் ஏத்த மாதிரி அவனுடைய முடிவும் இருக்கலாம். உதாரணமாக.. " என்று நிறுத்தியவள் நெடு மூச்செடுத்துத் தொடர்ந்தாள்.

"நான் ஒரு கதைப் படிச்சிருக்கேன் துர்கா. அதுல ஒருத்தர் கார் ஓட்டிட்டு போறாரு. அந்தக் காருடைய பின்னாடி சீட்டுல ஒரு பொண்ணு நெருப்புக் காயத்தோட கிடக்கிறாள். அது அவருடைய மனைவி. எப்படியாவது நம்ம மனைவியைக் காப்பாற்றிடணும்னு துடிச்சிட்டே அவர் வேகமா கார் ஓட்டிட்டு போகும் போது எதிர்பாராதவிதமா ஒரு இளைஞன் மேல இடிச்சிடறார். அதுல பலமா அடிபட்டு கீழே விழுந்தவன் உயிருக்குப் போராடுறான். இப்ப அவர் என்ன செய்வார் சொல்லு?”

“-----”

“காரில் நெருப்புக் காயத்தோட உயிருக்கு போராடிட்டு இருக்கிற தன் மனைவியைக் காப்பாற்றுவாரா, அல்லது தன்னால் அடிபட்டு ரோட்டில் கிடக்கிறவனைக் காப்பாற்றுவாரா? அவனையும் தூக்கிக் காரில் போட்டுட்டுப் போகலாம், ஆனால் அவர் வாழ்கையில், அந்த நேரத்தில், ஒவ்வொரு விநாடியும் அவருக்கு ரொம்ப முக்கியம். அப்போ அந்தச் சூழ்நிலையில் அந்த மனுஷனால் என்ன செய்ய முடியும்?

அதனால் ரோட்டில் கிடக்கிறவனை விட்டுட்டு தன் மனைவியோட உயிரைக் காப்பாத்தணும்னு போயிடறார். இப்ப சொல்லு. தப்பு யாரு மேல? அவருக்கு அவர் மனைவியைக் காப்பாத்தணும். அது இயற்கை தானே? அதாவது எவ்வளவு தான் நாம நல்லவங்களா இருந்தாலும், நாம் சந்திக்கிற சூழ்நிலைகள் நம்மை மாற்றிடுது.

அதே மாதிரி தான் இங்க ஷிவா அண்ணனுக்கு உன்னைப் பாதுகாக்கணும். அதே போல் வருண் அண்ணனுக்கு நீ அவர் மனைவி, நீ அவருக்கு மட்டும் தான் சொந்தம், உன்னை யாருக்கும் விட்டிக் கொடுக்கக் கூடாதுங்கிற பிடிவாதம் அவருக்கு. ஷிவா அண்ணனாகட்டும், வருண் அண்ணனாக இருக்கட்டும், இவங்க ரெண்டு பேருமே இப்போ இருக்கிற சூழல்கள் அப்படி, இதுல யார் மேல தப்பு சொல்றது?"

கேட்பதற்கு நன்றாகத் தான் இருக்கின்றது, ஆனால் அதுவே நிதர்சனத்தில் நடக்கும் பொழுது!

துர்காவிற்கு அந்நேரமும் ஷிவாவை நினைத்துப் படபடப்பாகத்தான் இருந்தது.

ஆனால் அதே சமயம் ஸ்ரீமதிக்கு தன் அண்ணன் மகளின் பேச்சில் மேலும் ஒரு தெளிவு பிறந்தது.

"தெய்வா.. நீங்க ரெண்டு பேரும் போய்ச் சாப்பாட்டுக்கு ரெடி பண்ணுங்க.."

கூறியவர் வீட்டுப் பணியாளர்களிடம் மதிய உணவிற்குத் தேவையான காய்கறிகளையும், பரிமாறுவதற்கு வாழை இலைகளையும் தோட்டத்தில் இருந்து கொண்டு வருமாறு பணிக்க, நீண்ட மூச்சுவிட்டுத் தன்னைச் சமன்படுத்திக் கொண்டவளாய் சமையற்கட்டுக்குச் சென்றாள் துர்கா.

************************************************

ஸ்ரீமதியின் இல்லத்தை விட்டு வெளியேறிய நிமிடத்தில் இருந்து ஷிவாவின் முகத்தைப் பார்த்துக் கொண்டு வந்த சிதாராவிற்கு மனம் பிசைந்தது.

அது வரை வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அந்த நிறைமாத கர்ப்பிணியின் உள்ளத்தில் காயங்கள் பட ஆரம்பித்தது.

மௌனமாகவே அப்பயணம் கழிய, எந்நேரமும் வாயை மூடாது பேசிக் கொண்டே இருக்கும் மனைவியின் அமைதியைக் கூட உணராது காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் ஒவ்வொரு அணுவும், வருணின் இகழ்ச்சி புன்னகையை நினைத்தே கொந்தளித்துக் கொண்டிருந்தது.

'அவன் நினைச்சதை சாதிச்சிட்டான், நான் தோற்றுப் போய்விட்டேன்!!!!'

உள்ளம் குமைந்ததில் பிடித்திருந்த ஸ்டியரிங்கில் அச்சு ஏறும் அளவிற்கு அவனது கரங்கள் இறுகின.

தன்னைக் கட்டுப்படுத்த இயலாதவனாய் காரை சட்டென்று சாலையின் ஓரத்தில் நிறுத்தியவன், கண்களை மூடி அணிந்திருக்கும் சட்டையின் காலரை லேசாக இழுத்துவிட்டவாறே கழுத்தை வலப்பக்கமாகச் சாய்த்துப் பின் நிமிரவும், அவனது செய்கை கொடுத்த விளக்கத்தில் சிதாராவின் நெஞ்சு துடித்தது.

தனக்கும் அவனுக்கும் திருமணம் முடிந்ததில் இருந்து அவன் இது போன்ற மன உளைச்சலுக்கு ஆளானது விரல் விட்டு எண்ணிவிடும் தருணங்களில் தான்!

சிந்தித்துப் பார்த்தால் அவை அனைத்துமே இந்த வருண் சம்பந்தப்பட்டிருக்கும் நேரம் தான்.

அப்படி என்ன இருவருக்கும் இடையில் பெரிய பகை??

காவல் துறையில் பெரிய பதவியில் வகிக்கும் ஒருவனுக்கும், அதர்தமத்தின் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கும் ஒரு பெரிய தொழிலதிபனுக்கும் இடையில் நிகழும் போராட்டம் தானே!

ஆனால் இவருடைய செய்கைகளும் நடவடிக்கைகளும் அப்படித் தோன்றவில்லையே!

ஆக, இது வேறு!

தனக்குப் பிடித்த ஒரு பெண்ணை, தனக்காக இவள் என்று மனதிற்குள் உருப்போட்டு வைத்திருந்த தன் அத்தை மகளை, தன் பரம எதிரி தன்னுடையவள் ஆக்கிக் கொண்டான் என்ற கொந்தளிப்போ?

அப்படி என்றால் நான்??

இதற்கு மேல் தாங்க இயலாது உடல் பொருள் ஆவி என்று அனைத்துமே துடிக்க, இன்னும் ஒரு வாரத்துக்குள்ள எப்ப வேணாலும் குழந்தைப் பிறக்கலாம் என்று மருத்துவர் கூறி இருந்ததை அசட்டை பண்ணி, கணவனின் வார்த்தைகளை மீறி, மல்லியக்குறிச்சி வரை வந்ததை நினைத்து தன்னைத்தானே ஏசிக் கொண்டவளுக்கு இடுப்பில் வலி வந்தது.

பிரசவ வலி!

மெல்ல கணவனின் கரத்தைப் பற்றியவள் இறுக்கிப் பிடிக்க, அது வரை வருணைப் பற்றிய சிந்தனைகளிலேயே உழன்று கொண்டிருந்த ஷிவாவை மனைவியின் அழுத்தமான தொடுகை நிகழ்விற்குக் கொண்டு வந்தது.

சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தியிருந்தவன், எதிரில் தெரியும் வாகனங்களின் மீதே வெறித்த பார்வையைப் பதித்திருக்க, அவளின் தொடுகையில் திரும்பி பார்த்தவனுக்குப் பக்கென்று இருந்தது.

"சித்து.."

"வ.. வலி தாங்க மு.. முடியலைங்க.."

அவ்வளவு தான், காரை கிளப்பிச் சாலையில் கலந்தவன் கியரை மாற்றியவனாய் அசுர வேகத்தில் பறக்க, சில நிமிட நேரங்களில் அருகில் இருந்த பெரிய மருத்துவமனை ஒன்றை அடைந்தான்.

என்னத்தான் படித்து மேற்பதவியில் இருந்தாலும், மனிதர்களின் மூளை சில சமயங்களில் உணர்ச்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் அடிமையாகி விடுகின்றதே என்று வருந்தியவனாய், ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்ட மனைவியின் கரம் பற்றினான்.

"ஷிவா, அத்தை மாமாவுக்குச் சொல்லிட்டீங்களா?"

"சொல்லிடறேன் சித்து.."

"அப்படியே அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.."

"ம்ம்.."

அவளை ஸ்ட்ரெச்சரில் கிடத்தியிருந்த செவிலியர்கள் ஓட்டமும் நடையுமாகப் பிரசவ அறைக்குள் அழைத்துச் செல்ல, எத்தனை கம்பீரமான ஆண்மகனாக இருந்தாலும், அவன் எவ்வளவு உயர்பதவியில் வகிப்பவனாக இருந்தாலும், பிரியமான மனைவி, குடும்பம் என்று வரும் பொழுது என்ன நிலையில் இருப்பார்களோ அதே நிலையிலேயே தவித்திருந்தான் ஷிவா.

நொடிகள் நிமிடங்களாகக் கடக்க, தன்னையே நொந்தவனாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தவன், இதற்கு மேலும் தாங்க முடியாது என்பது போல் பிரசவ அறைக்குள் நுழைந்தான்.

அங்கு அவன் கண்ட காட்சியில் அவனது உயிர் தடுமாறியது.

மனைவியின் வீறிட்டு அழும் சத்தம் நெஞ்சத்தின் அடி ஆழம் வரை தீண்ட, ஓடியவன் அவளின் கரம் பற்ற, அந்த உச்சக்கட்ட வலியிலும் அவனைத் திரும்பிப் பார்த்தவள், "எ.. எனக்கு ஒண்ணுத் தெரியணும். உ.. உ.. உண்மையைச் சொல்வீங்களா ஷிவா?” என்றாள்.

“சொல்லு சித்து.”

:உ.. உ.. உங்களுக்குத் து.. து.. துர்காவை அவ்வளவு பி.. பி.. பிடிக்குமா?"

திக்கித்திணறி பேசுபவளின் வியர்வை வழியும் நெற்றியைத் தடவியவன், அவளின் கண்ணீர் வழியும் கண்களை உற்று நோக்கியவாறே முகம் நோக்கி குனிந்தான்.

“பிடிக்கும். ரொம்பப் பிடிக்கும்.”

“அப்ப நான்?”

சிறிதாய் முறுவலித்தவன் அவளின் கன்னம் பற்றியவனாய்,

"ஸ்ரீமதி அத்த வீட்டுல நாம இருந்த அந்த ஒவ்வொரு நிமிஷமும், துர்காவுக்காக நான் பேசின ஒவ்வொரு நொடியும், உன் கண்ணுல ஒரு ஏக்கம் இருந்ததை நான் பார்த்தேன் சித்து. இப்போ கூடத் துர்காவை எனக்குப் பிடிக்குங்குற உண்மையை நான் மறைக்க விரும்பலை. ஆனால் நீ நினைக்கிற மாதிரி இல்லைடி. துர்கா மேல எனக்கு இருந்தது காதல் இல்லை. அது ஒரு விதமான possessiveness [தன்னுடைமைத்தனம்]. சின்ன வயசில் இருந்தே அவ எனக்குத்தான்னு நான் நினைச்சு வாழ்ந்ததை விட, அவளுக்கு யாராலும், எந்தக் கேடும் வரக் கூடாதுன்னு நான் நினைச்சிருந்தது தான் அதிகம். அது மாதிரியான ஒரு உறவு தான் எனக்கும் அவளுக்கும் இடையே இருந்தது.."

கணவனது பதிலில் அவனது சட்டைக் காலரைப் பற்றியவள் இன்னும் அவனைத் தனக்கருகில் இழுத்தவளாக மெல்லிய குரலில்,

"இ. இ.. இல்ல.. ஒருத்தருக்குப் பொஸஸ்விநெஸ் வரும்னு சொன்னால் அது அவர் மனைவி மேல மட்டும் தான் வரும். இல்லை, அவங்க காதலிக்கிற பொண்ணு மேல வரலாம். ஏன், அம்மா மேல கூட வரலாம். அம்மாவை அப்பா கட்டிப் பிடிச்சால் கூடச் சிலருக்கு பிடிக்காது, அதுவும் பொஸஸ்விநெஸ் தான். ஆனால்.." என்று முடிக்காமல் விட்டதில், மனைவியின் தன் மேலான காதல் ஷிவாவிற்குள் அந்த இக்கட்டான நேரத்திலும் உவகையைக் கொணர்ந்தது.

"சித்து. ஐ லவ் யுடி.."

"டேய்.. பேச்சை மாத்தாதடா."

"நான் மாத்தலை.."

"அப்ப சொல்லு.. இனி என் மேல மட்டும் தான் உனக்குப் பொஸஸ்விநெஸ் வரணும்.”

“சரி..”

“எனக்குச் சத்தியம் பண்ணிக் கொடு..”

விடாப்பிடியாய் கேட்கும் மனைவியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன், “சித்து..” எனவும், சத்தியம் செய்ய விருப்பம் இல்லாதவனின் கண்களை வலியுடன் பார்த்தவள், “ஒரு வேளை அடுத்த ஜென்மத்திலும் இதே மாதிரியான சூழ்நிலைகளில் நாம பிறந்தால் நீ என்ன பண்ணுவ?" என்றாள்.

முதன் முறை தன்னை ஒருமையில் அழைத்துக் கொண்டிருப்பவளைக் கண்டு புன்னகைத்தவன்,

"அடுத்த ஜென்மத்திலும் கண்டிப்பா." என்று நிறுத்தியவன், "இதே மாதிரி துர்காவிற்கு நான் பாதுகாப்பாளனா இருப்பேன். ஆனால் உன்னைத்தாண்டி கல்யாணம் பண்ணிப்பேன். ஐ ப்ராமிஸ்.." என்றதில் இதற்கு மேல் தாமதியாதே என்று பெண்ணவளின் இதயம் கூறியது.

தனக்கு வெகு அருகில் இருந்த கணவனின் முகத்தைத் தன்னை நோக்கி மேலும் இழுக்க, “சித்து..” என்றவன் முடிப்பதற்குள் சுற்றமும், வெட்கமும் பார்க்காது அவனது உதடுகளில் அழுந்த முத்தமிட்டவள், "இப்ப நான் ரெடி.." எனவும்,

"லேபர் பெயினில் இருக்கும் பொண்ணுக்கு ஹஸ்பண்ட் தான் கிஸ் பண்ணுவாங்கன்னு சினிமாவில் எல்லாம் காட்டுறாங்கப்பா. ஆனால் இங்க வேற மாதிரில்ல நடந்துட்டு இருக்கு.." என்று மருத்துவரே கூறியதில் செவிலியர்பெண்கள் கூடச் சிரித்துவிட்டனர்.

அதற்குப் பின் கடந்த நிமிடங்கள் ஷிவாவின் ஆணவம், அதிகாரம், திமிர், ஈகோ என்றனைத்தையும் தவிடு பொடியாக்கியது.

மனைவியின் அலறல் ஓலம் அவனை நிலைக்குலையச் செய்ய, அவனது கண்களில் முதன்முதலாய் துளிர்த்த கண்ணீர் துளிகள் கன்னம் எட்டும் முன் இப்பூமியை சந்தித்தான் அவனது மகன்.

'சித்தார்த் நந்தன்.'

Siddharth - One who has accomplished a goal.

Nandhan - Pleasing or Son or One who brings happiness.

****************************************

மதிய உணவிற்கான சமையல் வேலைகள் முடிந்துவிட, ஜாஃபர் அருகில் நிற்க, வீட்டிற்கு வெளியே தன் காரில் சாய்ந்தவாறே எவருடனோ அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த வருணை அழைக்க வந்த துர்காவிற்கு இன்னமும் அவனுடன் சுமூகமாகப் பேச இயலவில்லை.

தான் அவனைவிட்டு வந்த காரணமும், கணவன் செய்ததாக அவன் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொடூரமான குற்றங்களும் இன்றும் முடிந்தப்பாடில்லையே!

பிறகு எப்படி அவனுடன் சமாதானமாகுவது?

ஆயினும் தன்னை நாடி தன் வீட்டிற்கே வந்திருப்பவனை அவமதிப்பதும் தவறு என்று உணர்ந்தவளாய், வேறு வழியின்றி அவனை நெருங்கியவள் புடவை முந்தானை குஞ்சத்தை விரல்களால் சுழற்றியவாறே நின்றாள்.

அலைபேசியில் பேசிக் கொண்டே வருண் ஜாஃபரை பார்க்க, அவன் பார்வை நிலைத்த இடத்தை நோக்கித் திரும்பிப் பார்த்தவன் அங்கு நிற்கும் மனைவியைக் கண்டு என்ன என்பது போல் புருவங்களை உயர்த்தி வினவ, "சாப்பிட வாங்க.." என்று மட்டும் கூறியவள் ஜாஃபரையும் நோக்கி, "நீங்களும் வாங்கண்ணா.." என்றுவிட்டு உள்ளே சென்றாள்.

செல்லும் மனைவியின் முதுகையே சில நொடிகள் பார்த்த வருண், ‘வா’ என்பது போல் ஜாஃபரிடம் தலையசைத்துவிட்டு உள்ளே செல்ல, அங்கு டைனிங் டேபிளில் வைக்கப்பட்டிருந்த உண்டிகளைக் கண்டதும் அவனது உதடுகளில் புன்னகை அரும்பியது.

அனைத்துமே அவனுக்குப் பிரியமான உணவுப் பதார்த்தங்கள்.

கை அலம்பிவிட்டு வந்தவனை அமரச் சொன்னவள், அவனை நிமிர்ந்தும் பார்க்காது, ஒவ்வொரு பதார்த்தமாக வாழை இலையில் வைக்க, தன்னைப் பார்க்காது குனிந்தவாறே பரிமாறிக் கொண்டிருப்பவளின் செய்கையில் வருணுக்கு கோபமே வந்தது.

அனைத்தையும் வைத்து முடித்தும் அவன் சாப்பிடாது இருக்க, யோசனையுடன் அவனது முகத்தை ஏறிட்டு நோக்கியவளுக்கு அவன் பார்வையின் ஆழம் உள்ளுக்குள் கலவரத்தைக் கொண்டு வந்தது.

"சாப்பிடுங்க.."

பதில் பேசாது அமர்ந்திருந்தவன் என்ன நினைத்தானோ விருட்டென்று நாற்காலியில் இருந்து எழுந்தவனாய் நகர ஆரம்பிக்க, அவனது கரத்தை வேகமாகப் பற்றினாள்.

"என்ன ஆச்சு?"

"எனக்குப் பசியில்லை."

"ஏன்?"

"ஏன்னு கேட்டால்?"

"பசிக்கவும் தானே நான் கூப்பிட்டதும் வந்து உட்கார்ந்தீங்க?"

"அப்போ பசி இருந்துச்சு, இப்போ இல்லை.."

"அதான் ஏன்னு கேட்டேன்."

"என்னைக் கேட்குறதைவிட அந்தக் கேள்வியை நீயே உன்னைப் பார்த்துக் கேட்டுக்கோ.."

கூறியவனாய் அவ்விடத்தை விட்டு நகர முனைய, அவனது கையை மேலும் கெட்டியாய் பற்றியவள், "ப்ளீஸ், சாப்பிடுங்க.." என்று இறைஞ்சினாள்.

இருவருக்கும் நடக்கும் சம்பாஷணைகளைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், தலையைச் சற்றும் நிமிர்த்தாது உணவு அருந்துவதிலேயே ஜாஃபர் கவனமாய் இருக்க, அவனது தோள் பற்றிய வருண், "நான் உனக்குப் பாஸ், நியாபகம் இருக்கா?" என்றதில் ஜாஃபருக்கும் புன்சிரிப்பு வந்தது.

ஆனால் 'சிரித்தால் செத்தோம்' என்று எண்ணியவனாய்,

"நியாபகம் இருக்குப் பாஸ். ஆனால் உங்களுக்குப் பசிக்கலை, எனக்குப் பசிக்குது பாஸ். அதுவும் எப்பவுமே நான்-வெஜ்ஜே சாப்பிடுவோமா, இப்போ வெஜிட்டேரியன் ஃபுட்டில், அதுவும் இவ்வளவு வெரைட்டீஸ் பார்த்ததும் பசி ரொம்ப அதிகமாகிடுச்சுப் பாஸ். சாரி.." என்று பரிதாபமாகக் கூறியதில், அருகில் நின்ற தெய்வாவிற்குப் படக்கென்று சிரிப்பு வந்தது.

அவளைச் சட்டெனத் திரும்பிப் பார்த்த வருணின் பார்வையில் என்ன கண்டாளோ, 'ஆஹா, இவரு ஷிவா அண்ணனுக்கு மேல இருப்பார் போல இருக்கே.' என்று நினைத்தவளாய் தலையைக் கவிழ்ந்து கொள்ள, மீண்டும் ஜாஃபரின் புறம் திரும்பியவன்,

"சரி, அப்போ நல்லா சாப்பிட்டுட்டு வா. நான் வெளியில் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன்." என்றவனாய் தன் கரத்தைப் பற்றி இருக்கும் மனைவியின் கரத்தை அகற்ற, அதற்குள் அங்கு வந்த ஸ்ரீமதி,

"உங்களுக்குப் பிடிச்ச சாப்பாட்டைத் தான் செய்யணும்னு துர்கா தான் பார்த்து பார்த்து சமைச்சா மாப்பிள்ளை. தயவு செஞ்சு மனசுல எதுவும் வச்சிக்காம சாப்பிடுங்க.." என்றார் கனிவுடன்.

“அண்ணா, உங்களுக்காகத் தான் உங்க வைஃப் எல்லாத்தையும் செய்திருக்கா. ப்ளீஸ் சாப்பிடுங்க.”

சன்னமான குரலில் தெய்வாவும் கூற, இருவரின் வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுக்கும் வகையில் அமர்ந்தவன் ஒரே ஒரு நொடி மனைவியைத் தீர்க்கமாய்ப் பார்த்துவிட்டு உணவருந்த, துர்காவிற்குப் பெருமூச்சு வந்தது.

சுவையும் மணமும் மிக்கச் சைவ சாப்பாட்டை ரசித்து அருந்தியவன் கை அலம்பச் செல்ல, அவனுக்கு அருகில் டவலுடன் வந்து நின்றவளைப் பார்த்தவாறே டவலை வாங்கியவன் அதனில் கையைத் துடைத்துவிட்டு டவலை அவளின் தோளில் போட்டவனாய் வெளியேறினான்.

அதற்குள் ஜாஃபரும் உணவருந்தி முடித்துவிட்டு அவனுடன் செல்ல, துர்காவின் தோள் பற்றினார் ஸ்ரீமதி.

"துர்கா, உன் மனசுல என்ன இருக்குன்னு என்னால கூடப் புரிஞ்சுக்க முடியலை."

"ம்மா.."

"துர்கா. உனக்கே தெரியும், நானும் இவரை ரொம்ப நாள் தப்பாத்தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் எப்போ நீயே மனம் விரும்பி இவருடைய தாலியை ஏத்துக்கிட்டியோ, அப்பவே இவர் தப்பானவரா இருக்க முடியாதுன்னு எனக்குப் புரிஞ்சது. ஏன்னா, நான் வளர்த்த என் பொண்ணு தப்பான முடிவை எடுக்க மாட்டாங்கிற நம்பிக்கை எனக்கு எப்பவுமே உண்டு.."

அன்னையின் வார்த்தைகளில் துர்காவின் உள்ளமும் கூட ஆதங்கத்தில் துடித்தது.

"அந்த நம்பிக்கை தான் எனக்கு நிம்மதியையும் கொடுத்தது துர்கா. ஆனால் உங்க ரெண்டு பேருக்கும் இடையேயும் ஏதோ மனத்தாங்கல் வந்ததுனாலத் தான், நீ இங்க வந்திருக்கன்னு எனக்குத் தெரிஞ்சது. ஆனால் அதுக்கான காரணமும் நீயா சொல்லலை. ஷிவா சொன்னதுக்குப் பிறகு தான் எனக்கும் ஓரளவுக்குப் புரிஞ்சது. மாப்பிள்ளை மேல இப்படி ஒரு கொடுமையான பழி வந்திருப்பதைக் கேள்விப்பட்டதில் நானும் ரொம்பப் பயந்துட்டேன். நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிடுவீங்களோன்னு கூட நினைச்சுக் கலங்கிப் போனேன்.

ஆனால் இன்னைக்கு ஷிவாவுக்கு முன்னால் நீ மாப்பிள்ளையை விட்டுக் கொடுக்கலை. அதில் இருந்தே எனக்குப் புரிஞ்சது, இப்பவும் அவர் மேல் உனக்கு நம்பிக்கை இருக்குன்னு. அதே நம்பிக்கை தான் திரும்பவும் எனக்கு நிம்மதியை வரவழைச்சது. அதே மாதிரி தான், இன்னைக்கு நீ அவருக்காகப் பார்த்து பார்த்து சமைச்சதைப் பார்க்கும் போது எனக்குச் சந்தோஷமா இருந்துச்சு.

இவ்வளவு அன்பு அவர் மேல இருக்கும் போது, ஏன் துர்கா இப்படி நடந்துக்குற? நம்மளைப் போல அவர் சாதாரண மனுஷன் கிடையாது. இந்த நாடு முழுசும் பிரபலமா பேசப்படுகிற பெரிய தொழிலதிபர். இது மாதிரி புகழோட இருக்கிறவங்க மேல, இது போல அபாண்டமான பழிகள் எல்லாம் சிலரால் சில நேரங்களில் சுமத்தப்படுது. அதுக்கு அவங்க என்ன செய்வாங்க?"

கிராமத்திலேயே பிறந்து, கிராமத்திலேயே வாக்கப்பட்டு வாழ்ந்து வரும் அவருக்குப் புரிந்ததை அவர் மகளுக்கு எடுத்துரைக்க அவர் முனைந்தார்.

"இது மாதிரியான சூழ்நிலைகளில் குடும்பம் தான், அதுவும் மனைவி தான் பக்கபலமாக இருக்கணும். அதை விட்டுட்டு நீ அவரை விட்டு வந்ததும் தப்பு. இப்போ உன்னைத் தேடி தானாக வந்திருக்கிறவர் முகத்தில் அடிச்ச மாதிரி நடந்துக்குறதும் தப்பு துர்கா.."

"நான் முகத்தில் அடிக்கிற மாதிரி எல்லாம் நடந்துக்கலைம்மா.."

"பின்ன, நீ நடந்துக்கிட்ட விதம் என்ன? இப்படித்தான் ஒருத்தருக்கு சாப்பாடு பரிமாறும் போது அவர் முகத்தைக் கூடப் பார்க்காமல் மூஞ்சியை உம்முன்னு வச்சிக்கிட்டு பரிமாறுவாங்களா?"

"ம்மா.."

"உன் நிலைமை எனக்குப் புரியுது துர்கா. ஆனால் புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒரு புரிதல் இருக்கணும். ரெண்டு பேருக்கும் இடையில் பிரச்சனைகள் வந்தால், அதை அவங்களுக்கு உள்ளாகவே தீர்த்துக்கணும். முக்கியமா இப்படி மற்றவங்க முன்னாடி அவங்களை அவமானப்படுத்திற மாதிரி நடந்துக்கக் கூடாது. அது ரொம்பத் தப்பு..”

"சாரிம்மா.."

"அதை என்கிட்ட கேட்காத, மாப்பிள்ளைக்கிட்ட கேளு."

அன்னையின் முகம் நோக்கியவள் தயங்கியவாறே தெய்வாவைப் பார்க்க,

“கணவன் மனைவிக்குள்ள எதுக்கு இந்த ஈகோ துர்கா? அத்தை சொல்றது தான் சரி. போய் அவர்கிட்ட மன்னிப்புக் கேளு..” என்றதில் மெல்லிய நகையை உதிர்த்தவாறே வீட்டிற்கு வெளியே நிற்கும் கணவனிடம் செல்வதற்கு நடக்க, "துர்கா, மாப்பிள்ளைக்கு அப்படியே நம்ம நிலத்தையும் தோப்பையும் சுத்திக் காட்டு.." என்றார் ஸ்ரீமதி.

சரி என்று தலையசைத்துவிட்டு வெளியே செல்ல, ஜாஃபருடன் இணைந்து எங்கோ செல்வதற்குக் காரில் ஏறப் போனவனைக் கண்டு ஓட்டமும் நடையுமாகச் சென்றவள், "என்னங்க.." என்று சிறிது சத்தமாகவே அழைத்தாள்.

அவளின் விளிப்பில் காரில் ஏறப் போனவன் நின்று திரும்பிப் பார்க்க, "அம்மா உங்களுக்கு எங்க நெலத்தையும் தோப்பையும் சுத்திக் காட்டச் சொன்னாங்க.." என்றாள் சற்றுத் தயங்கியவாறே.

"வாட்?"

"எங்களுடைய தோப்பு ரொம்பப் பெரிசு எல்லாம் இல்லை, ஆனால் பார்க்கக் ரொம்ப அழகா இருக்கும். உங்களுக்கு விருப்பம் இருந்தால் போகலாம்."

அதற்குப் பிறகு காருக்குள் ஏறுவதற்கு வருண் என்ன முட்டாளா?

ஜாஃபரிடம் இரகசியமாய் ஏதோ கூறியவன் மனைவியின் முன் வந்து நின்றவாறே, "நீ சாப்பிட்டுட்டு வா.. நான் வெயிட் பண்றேன்.." என்றான்.

"இல்ல, பரவாயில்ல, நான் அப்புறமா சாப்பிட்டுக்குறேன்.."

"நான் வெயிட் பண்றேன்னு சொன்னேன்."

வெகு அழுத்தமாய் வந்த அவனது குரலிற்கு அடிபணிந்தவளாய் வீட்டிற்குள் சென்றவள் சில நிமிடங்களிலேயே உணவருந்திவிட்டு வந்து நின்றாள்.

அவளின் வேகம் மனத்திற்கு இனிமையைத் தந்தாலும், அதனை வெளியில் காட்டாது அவளுடன் இணைந்து நடக்க, இந்தக் கண்கொள்ளாக் காட்சியைக் காண்பதே எங்களுடைய கண்களுக்கு விருந்து என்பது போல், மல்லியக்குறிச்சி கிராம மக்களின் பார்வைகள் முழுவதுமே இருவர் மேல் தான் இருந்தன.

கணவனுக்கு வழிகாட்டும் நோக்கத்தோடு துர்கா நடந்தாள் என்றால், அவளின் வேகத்திற்கு ஈடாகத் தானும் மெதுவாக நடந்த வருணுக்கு அவ்வூர் மக்களின் பார்வையின் அர்த்தம் புரிந்தது.

மும்பை போன்ற பெரு நகரங்களுக்கும், மல்லியக்குறிச்சி போன்ற குக்கிராமங்களுக்கும் இடையில் இருக்கும் இடைவெளியானது, இமயமலையின் உச்சிக்கும், பெருங்கடலின் ஆழத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் போன்றது.

மும்பையின் மக்கள் தொகையில் ஒரு துளி கூட இல்லாத இந்த மல்லியக்குறிச்சிக் கிராமத்தில், துர்காவின் கடத்தல் எவ்வளவு பெரிய சலனத்தையும் அதிர்ச்சியையும் கொண்டு வந்திருக்கும் என்பதை இப்பொழுது தெள்ளன புரிந்து கொண்டான் வருண்.

தன்னைவிட்டு இரு அடிகள் தள்ளி நடந்து வருபவளின் கரத்தை எட்டிப் பற்றியவன் அவளின் விரல்களுக்குள் தன் விரல்களை நுழைத்தவாறே, "இப்படி வேகமா போனா நான் எப்படி வர்றது?" என்றதில் திருதிருவென விழித்தாள் அவன் மனையாள்.

அவளின் பார்வையுடன் தன் விழிகளையும் கலக்கவிட்டவன் மீண்டும் நடக்கத் துவங்க, "இன்னும் கொஞ்ச தூரம் தான்." என்றவளது அப்பாவியான பதிலில் அதுவரை வருணுக்கு இருந்து வந்த இறுக்கம் தளர்ந்தது போன்று இருந்தது.

ஸ்ரீமதியின் வீட்டில் இருந்து ஏறக்குறைய அரைமணி நேர பயணத்தில் இருந்தது அவர்களுடைய விளைநிலமும், அதனை அடுத்து இருந்த தோப்பும் தோட்டமும்.

பச்சைப்பசேல் எனக் காட்சியளிக்கும் நெல் வயலைக் கடந்து, தென்னந்தோப்பும், வாழைத்தோட்டமுமாய் இருந்த இடத்திற்கு வந்தவர்களைத் திடுமெனத் திரும்பிப் பார்க்கச் செய்தது, வெகு தொலைவில் துர்காவின் பெயரை அழைத்தவாறே ஓடி வந்து கொண்டிருந்த தெய்வாவின் குரல்.

"துர்கா."

"ஏய் தெய்வா, எதுக்கு இப்படி ஓடி வர்ற?"

"இதை அத்த உங்கக்கிட்ட கொடுத்துட்டு வரச் சொன்னாங்க."

"அடிப்பாவி, இதை எடுத்துக்கிட்டா இவ்வளவு தூரம் ஓடி வந்த?"

"வருண் அண்ணா வடநாட்டில இருந்து வந்திருக்காங்க. அங்க எப்படியான க்ளைமேட் இருக்கும்னு தெரியலை. அதுவும் இல்லாம அவர் இந்த மாதிரி வெயில்ல எல்லாம் வந்திருப்பாரான்னு தெரியலை, அதான் பானகத்தைச் செஞ்சுக் கொடுத்தனுப்பினாங்க."

துர்காவிடம் தான் கொண்டு வந்த பானகத்தைக் கொடுத்தவள் வீட்டிற்குச் செல்வதற்கு வந்த வழியே வேகமாய்த் திரும்ப, "நீங்க ஷிவாவுடைய தங்கை தானே?" என்ற கணீரென்ற குரலில் ப்ரேக்கிட்டது போல் நின்றாள்.

"I mean Shiva Nandhan's blood sister, right?"

மெல்லத் திரும்பிப் பார்த்தவள் தன்னையே பார்த்திருப்பவனின் கண்களில் தெரிந்த ஆழுமையில், இவன் அப்படியே என் உடன் பிறந்த அண்ணனை உரித்து வைத்துப் பிறந்திருக்கிறான் என்று புரிந்துக் கொண்டவளாய், "ஆமாண்ணா." என்றாள் சன்னமான குரலில்.

"நாங்க துர்காவுடைய தோட்டத்தைப் பார்க்கிறதுக்கு வந்தோம். நீங்களும் எங்க கூட வரலாமே.."

"நானுமா?"

"அப்படித்தான் இப்போ நான் சொன்னதா எனக்கு நியாபகம் இருக்கு."

வெடுக்கென்று வெளிவந்த அவனது பதிலில் புருவங்கள் உயர அவனைப் பார்த்தவள் சங்கோஜத்துடன்,

"ஸ்ரீமதி அத்தையோட கிராமம் சின்னது தான், ஆனால் பார்க்குறதுக்கு இங்க ரொம்ப அழகான இடங்கள் இருக்கு. அதுலயும் இங்க ஒரு நீர்வீழ்ச்சி இருக்கு, அதுக்குப் பக்கத்துல உட்கார்ந்து பார்த்தால் நேரம் போறதே தெரியாது." என்றவள் துர்காவை நோக்கியவளாய், "துர்கா, வருண் அண்ணாவை நீர்வீழ்ச்சிக்குக் கூட்டிட்டுப் போ.." என்றாள்.

ஆனால் அவன் விடாப்பிடியாய், "ஏன் உங்களுக்கு ஃபால்ஸ் [Falls] பார்க்கப் பிடிக்காதா?" என்றான்.

"என்னது? பிடிக்காதா? இது எங்க ஊர். இந்த ஊரில் இருப்பது எல்லாம் எங்களுக்கு மட்டும் தான் சொந்தமானது, அதுல இந்த நீர்வீழ்ச்சியும் ஒண்ணு. எங்க நீர்வீழ்ச்சி எங்களுக்குப் பிடிக்காமல் போகுமாண்ணா?"

தன்னைவிட இரு வருடங்கள் மூத்தவன் ஷிவ நந்தன். அவனுடைய தங்கை தெய்வாம்பிகை ஷிவ நந்தனை விடச் சில வருடங்கள் இளையவள்.

அப்படி இருக்க, இவள் எப்படியும் என்னைவிட இள வயதுடைவளாகவே இருக்க வேண்டும்.

ஆக, எனக்கும் இவள் தங்கை தான் என்று அவனையும் அறியாது அவனது மூளைக் கணக்கிட்டது.

அதனில் கிடைத்த விடையானது, உடன்பிறப்பில்லாது தனிமையை மட்டுமே சுகித்து வந்த வருணுக்குள் ஒரு புதிய பாசத்தை உருவாக்கியது.

அன்று முதல் தெய்வாம்பிகை அவனுக்கும் தங்கையானாள்!

இவள் அண்ணன் எனக்கு எப்பேற்பட்ட வில்லனாக இருந்தால் என்ன, இவள் என் தங்கை, அவ்வளவே!

"அதான, உங்க நீர்வீழ்ச்சி உங்களுக்குப் பிடிக்காமல் போகுமா? அந்த நீர்வீழ்ச்சியை நானும் பார்க்கணும்னு ஆசைப்படறேன். நீங்களும் எங்க கூட வாங்க.."

கூறியவாறே மனையாளின் கரத்தில் இருந்த கோப்பையை வாங்கியவன் அதில் இருந்த பானகத்தைப் பருக ஆரம்பித்தான்.

அதன் சுவையில் சூடாகிப் போயிருந்த அவனது மனம் இளைப்பாறியது!

"இது என்ன தெய்வா?"

அவனது வினாவில் தடதடக்க அவனை நோக்கித் திரும்பிய தெய்வா,

"இது பேர் பானகம்-ண்ணா. வெல்லம், இஞ்சி, பட்டை, எலுமிச்சை, கற்பூரம் எல்லாம் போட்டு செய்வாங்க. அதுலயும் இந்த வெல்லம் எல்லாம் எங்க ஊருக்கு பக்கத்துல இருக்கிற மண்டியில் இருந்து வாங்குற சுத்த வெல்லம். எங்க ஸ்ரீமதி அத்தைக்கு எப்பவுமே வீட்டுக்கு வரவங்களுக்கு வயிறார சாப்பாடு போடணும். அவங்க எங்க வீட்டை விட்டு கிளம்பிப் போறப்ப வயிறும் மனசும் நிறைஞ்சு இருக்கணும், இது தான் அவங்க விருப்பம். அதான் இந்தப் பானகத்தை உங்கக்கிட்ட கொடுக்கச் சொன்னாங்க.." என்றாள்.

அவளது வெகுளித்தனமான பேச்சில் தானும் சற்றே இறங்கி வந்தவனாகப் பானகத்தை முழுமையாக அருந்தி முடித்தவன், "It’s delicious.." என்றான்.

அவர்கள் இருவரின் சம்பாஷணைகளிலும், அந்நியோன்யமான நடத்தையிலும் அதிசயித்தவளாக அசையாது நின்றுப் போனாள் துர்கா.

"அந்த ஃபால்ஸ்க்கு போலமா, தெய்வா?"

"ஆகா, ஷ்யூர் அண்ணா.. வொய் நாட்?"

தெய்வாவின் குரலில் சட்டென்று திரும்பிப் பார்த்த துர்காவிற்குத் தலை சுற்றியது.

'அடியே! உன் அண்ணன் ஐ.பி.எஸ் பாசாகி எஸ்.எஸ்.பி-யாகப் பதவி வகிக்கிறார். அவர் கூட இந்த அளவுக்கு அளப்பறை விடலை. ஆனா நீ படிப்புன்னா கிலோ என்னன்னு கேக்குறவ, இது உனக்கே ஜாஸ்தியா இல்ல?'

மனதிற்குள் நினைத்தவளாய்,

"முதலில் தோப்பையும் தோட்டத்தையும் சுற்றிப் பார்த்துடுவோம், பிறகு அந்த நீர்வீழ்ச்சிக்குப் போகலாம்." என்றவாறே துர்கா நடக்க, அவளுக்கு இடது புறம் தெய்வா நடந்து வர, வலது புறம் நடந்து வந்த வருண் மீண்டும் மனைவியின் விரல்களைப் பற்றியதில் அவளுக்குத் திக்கென்று இருந்தது.

'இதென்ன பக்கத்துல தெய்வா இருக்கும் போதே.'

சிந்தித்தவளாய் தவிப்புடன் விரல்களை அவனிடம் இருந்து பிரித்தெடுக்க முயற்சிக்க, விரல்கள் உடைந்துவிடும் அளவிற்கு அவன் இறுக்கப் பற்றினானே ஒழிய, விட்டானில்லை.

மெல்ல அவனை ஏறிட்டு நோக்கியவள் அவனது தோளை நெருங்கி, "ப்ளீஸ்.." என்று முனக, அவளைத் திரும்பிப் பார்த்தவன் பதிலொன்றும் கூறாது ‘முடியாது’ என்பது போல் மறுப்பாய் தலையசைத்தான்.

"பொது இடத்துல என்ன இது?"

மீண்டும் வெகு இரகசியமாய்க் கூற, நடந்தவாறே அவளின் உயரத்திற்கு ஏற்றவாறு குனிந்து, "நாம ரெண்டு பேரும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃப். அதுவும் இல்லாமல் நான் ஜஸ்ட் உன் கையை மட்டும் தான் பிடிச்சிருக்கேன், வேற எங்கேயும் பிடிக்கலை.." என்றதில் மானசீகமாகத் துர்கா தலையில் அடித்துக் கொண்டாள் என்றால், கலுக்கென்று சிரித்து வைத்தாள் தெய்வா.

"இப்ப எதுக்குடி இந்தச் சிரிப்பு?"

பற்களைக் கடித்துக் கொண்டு கூற, "ம்ம்ம், என்னவோ தெரியலை, எனக்குச் சிரிப்பு சிரிப்பா வருது.." என்றதில் அவளை முறைக்க மட்டுமே துர்காவால் முடிந்தது.

பல மணித்துளிகள் தோப்பையும் தோட்டத்தையும் பார்த்தவர்கள் நீர்வீழ்ச்சி இருக்கும் பகுதியை நோக்கி செல்ல, தெய்வாம்பிகையின் அலைபேசி சிணுங்கியது.

'Shiva anna calling..'

‘ஆகா, காக்காக்கு மூக்கு வேர்த்தக் கதை மாதிரி இருக்கே' என்று முனகிக் கொண்டவளாய் அலைபேசியைக் காதில் வைக்க, தனக்கு மகன் பிறந்ததை ஷிவா தெரிவித்ததில் தெய்வாவின் முகம் மலர்ந்தது.

"வாழ்த்துக்கள் அண்ணா."

ஆரவாரத்துடன் குதித்தவாறே கத்தியவள் துர்காவிடம் விஷயத்தைப் பகிர, அடுத்து ஷிவா கேட்ட கேள்வியில் தெய்வாவின் முகம் மலர்ச்சியைத் தொலைத்து கூம்பியது.

"அவக்கூடச் சுத்திட்டு இருக்கப் போல இருக்கு?"

"அண்ணா, அது?"

"தெய்வா.. அவனுக்கும் எனக்கும் இடையில் இருக்கும் பகை உனக்குத் தெரியும். இதுல இன்னைக்குக் காலையில துர்காவுடைய பேச்சையும் போக்கையும் பார்த்ததற்கு அப்புறமும் அவக்கூடச் சுத்திட்டு இருந்தால், அப்புறம் எனக்கு என்ன மரியாதை?"

'இல்ல அண்ணா. அத்தை தான் பானகம் கொடுக்க.."என்றவள் முடிக்கவில்லை.

என்ன தோன்றியதோ, "தெய்வா, அவனும் உங்க கூட இருக்கானா?" என்றதில் பெண்கள் இருவரின் தேகங்களும் தந்தியடிக்க ஆரம்பித்தன.

"அண்ணா, அது வந்து.."

"இழுக்காத. உடனேயே கிளம்பி ஹாஸ்பிட்டலுக்கு வா.. வரும் போது நீ மட்டும் வா. அவள் வேணாம்."

கண்டிப்புடன் கூறியவன் அலைபேசியைத் துண்டித்தான்.

தெய்வாவிற்கு அருகில் நின்றிருந்த மற்ற இருவருக்குமே அவன் கூறிய வார்த்தைகளும், அவன் குரலில் தெறித்த கோபமும் தெளிவாய் கேட்டது.

இது நான் எதிர்பார்த்தது தான் என்பது போல் வருண் அசட்டையுடன் நிற்க, துர்காவின் மனம் தான் அடிபட்டுப் போனது.

அதற்குள்ளாகவே கலங்கிவிட்ட அவளின் கண்களைக் கண்டு தானும் தவித்த தெய்வா என்ன செய்வதென்று தெரியாதுப் பார்க்க, "நீங்க போங்க தெய்வா. துர்கா பிறகு குழந்தையை வந்து பார்ப்பா." என்றான் வருண்.

துர்காவின் தோளைப் பிடித்த தெய்வா,

"சீக்கிரம் எல்லாம் சரியாகிடும் துர்கா, கவலைப்படாத.. நம்ம குடும்பத்துக்குள்ள நடக்குற பிரச்சனைகள் எல்லாம் ரொம்ப நாள் நீடிக்காது, ஏன்னா நமக்குள்ள அப்படி ஒரு பாசமும் பந்தமும் இருக்கு. மனசை தளரவிடாத." என்று ஆறுதலாய் கூறிவிட்டு அங்கு இருந்து அகன்றாள்.

ஆயினும் துர்காவின் முகத்தில் தெளிவு பிறக்கவில்லை.

"இப்ப எதுக்கு இந்த அழுகை?"

"மாமாவுக்குக் குழந்தைப் பிறந்திருக்கு, அதைக் கூடப் பார்க்க நான் வரக் கூடாதுன்னு சொல்றாருன்னா, என் மேல அவருக்கு எவ்வளவு வெறுப்பு?"

"அதுக்காக அழணுமா?"

"அவரு என்னுடைய மாமா.."

"நான் என்ன அவன் என்னுடைய மாமான்னா சொன்னேன்?"

"ம்ப்ச்.." சலித்துக் கொண்டவளாய் நகர, அவளது கரத்தை எட்டிப் பற்றியவன், "எனக்கு ஃபால்ஸ் பார்க்கணும்.." என்றான் அதிகாரக் குரலில்.

"எனக்கு மனசு சரியில்லை."

"ஃபால்ஸைப் பார்த்தால் எல்லாம் சரியாகிடும்."

"நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?"

அவளின் வினாவில் தன்னைக் குனிந்துப் பார்த்துக் கொண்டவன், "ஏன் நல்லாத்தானே இருக்கேன்." எனவும், ஏற்கனவே தளர்ந்திருந்த மனம் மேலும் தொய்ந்து போனது.

"சரி, அதுக்காக இப்படி விரல்கள் உடையற அளவுக்கு இறுக்கிப் பிடிக்கணுமா? கையை விடுங்க.."

அவள் கெஞ்சியும் பதிலளிக்காது பிடியையும் தளர்த்தாதவன் அவளை வேகமாய் இழுக்க, பொத்தென்று அவன் மீது சாய்ந்தவளின் நழுவிய புடவைக்கு இடையில் வெளிப்போந்த வெற்று இடையைச் சுற்றி வளைத்துப் பிடித்தது அவனது வலிய கரம்.

இன்று மட்டும் அல்ல, இனி என்றுமே என் கைப்பிடியை மீறி உன்னால் செல்ல முடியாது என்பது போல் அவனது இறுக்கத்தில் அவளது மெல்லிய இடை கன்றிச் சிவந்து போனது.

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்.

 

Vidhushini

Member
உறவுகளுக்கிடையில் புரிதலும், ஆதரவும் இருப்பதை தேவேந்திரன் உணர்த்திவிட்டுச்செல்லும் இடம் அருமை @JB @JLine sis❤️
inbound6523290975669192608.jpg
தனது உரிமையின் அளவை நிலைநாட்டத்துடிக்கும் வருண், உரிமையை விட்டுக்கொடுக்க முடியாமல் கோபம் கொண்ட ஷிவா-இவர்களுக்கிடையில் தவிக்கும் துர்கா!

சித்தார்த் நந்தன், வருண்-துர்கா மகவின் வாழ்வில் அங்கமாவானோ?

Very interesting @JB @JLine sis🔥❤️
 
R

Russia

Guest
Shiva and Varun both justify their ego...let's wait and see...another wow episode mam
 
R

Russia

Guest
Shiva and Varun both justify their ego...let's wait and see...another wow episode mam
 

saru

Member
Lovely and super
Varun siva inaivu siddhu chellam nadatha porana
Future hero va jb
Varunu ku anbu pasam panbu vittukoduthal nu veroru ulagm irukunu inda malliyakurichi unara vsika poguthu
Deiva cute jelini
 
Aww Varun…❣️❣️❣️ you stole today’s epi men.. 😍😍😍
Durga please accept him… He is pawam noh…

And Shiv.. 😭😭😭 ennala avanai ipdi parkka mudiyala… He left alone in the hospital..

Any way congratulations man…
Welcome to this world
‘Siddarth Nandhan’

Deiva vs Jaffer track oduma??? Like Sathya vs Nandhana? 🙈🙈🙈
 

Mahalakshmy

New member
துர்கா அடுத்த முறை நீ திக்காமல் , சிவாவிடம் , என்னுடைய காதல் கை கூடுமாயென்று தெரியாமலே , எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்றும் பயம் இருந்தாலும், நீங்களும் சித்துவும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவள் நான். வருண் நிச்சயத்த பெண்ணை நீங்கள் திருமணம் செய்து குழந்தையே பெற்று விட்டீர்கள், நாங்கள் இன்னும் வாழ்க்கை ஆரம்பிக்கவில்லை. என் வாழ்க்கை மாறியதற்கு முழு காரணம் நீங்கள் தானே. இந்த பழி சொல் போக வருணை தவிர வேறு யாரையும் நான் திருமணம் செய்ய முடியாது. இந்த காதல் .....உங்களுக்கு என் மீது இருந்தால் சித்துவை கல்யாணம் செய்து இருக்க மாட்டீர்கள், என் பாதுகாப்பு குறித்து கவலை இருந்தால், நீங்களும் சித்தூவும் வாழ்வை ஆரம்பித்து இருக்கமாட்டீர்கள். சுழ்நிலை காரணமாக பந்தாடபடும் என் மீது ஏன் இந்த கோபம் என்று கேள்.

nice UD. waiting for next epi
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top