JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Epilogue-16

seethavelu

New member
ஜல்.... ஜல்... என்று மெல்லிய கொலுசொலி சங்கீதமாய் சிணுங்க கைகளில் காஃபி கோப்பையோடு, "அத்து..." என்று அழைத்துக்கொண்டே தங்கள் அறைக்குள் வந்தாள் யசோதா.

காலம் மேலும் ஆறு வருடங்களை அவள் வயதில் ஏற்றியிருக்க பெண்ணவளின் அழகோ இன்னும் மெருகேறியிருந்தது.

இந்த ஆறு வருடங்களில் தொழில் துறையில் இன்னும் பல உயரங்களைத் தொட்டிருந்தான் ஆத்ரேயன் காளிங்கராயன்.

ட்ரெஸிங் டேபிளில் முன் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து கண்ணாடியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த அவளின் நாயகன் திரும்பிப் பார்த்து புன்னகைத்தபடியே "வா யசோ.." என்றபடி, மறுபடியும் கனகாரியமாக திரும்பி கண்ணாடியில் தன் முகத்தை மேலும் கீழும் உயர்த்தி ஆராய

டீ கோப்பையை அங்கிருந்த டேபிளில் வைத்து மூடியவள், தன் கணவன் அருகில் வந்து குனிந்து அவன் முகத்தை பற்றி," அப்படி என்ன தான் தேடுறீங்க இந்த அழகு முகத்தில" என்று கொஞ்சினாள்.

தன் இடக்கரத்தால் அவள் இடைவளைத்து தன் மடியில் அமரவைத்தவன்,"என்னோட முகத்தில ஒரு சின்ன சேன்ஜ் இருக்கு. அது முகத்துக்கு
சூட் ஆகுதா? இல்லையான்னு பார்த்துட்டு இருக்குறேன் அம்மணி" என்றான் மெல்லிய சிரிப்போடு.

" என்னது...? என் அத்து முகத்தில் சேன்ஜ்ஜா...? அதுவும் இந்த யசோவுக்கு தெரியாமலா? வெட்கம்...வெட்கம்" என்றவள், தன்னவன் முகம் பற்றித் திருப்பி தன் விரல்களால் அவன் முகத்தில் கோலமிட்டபடியே

"கண்ணு, காது, மூக்கு, வாய் எல்லாம் அதே இடத்தில முன்ன எப்படியிருந்ததோ அப்படியே தானே இருக்கு அத்து" என்று அவன் நாடியைப் பற்றி செல்லம் கொஞ்சியவளின் பார்வை அவன் மீசையின் மீது பட்டுத் தெறிக்க

" அத்து...!" என்று அலறினாள் மெல்லிய குரலில்...

"என்னடி? அலறுறவ! கண்டுபிடிச்சிட்டியா?" என்று கண்சிமிட்டியபடியே தன் முகத்துக்கருகே இருந்த தன் பூவையின் முகம் பற்றி அந்த பட்டு இதழில் தன் இதழ் பதித்தான் கணவன்.

"ச்ச்ச்...அத்து!" என்று சுகமாக அலுத்துக்கொண்டவள்,"ஹவ் ஈஸ் இட் பாஸிபிள் அத்து!" என்றாள் அவனின் அடர்ந்த மீசை முடியை தன் மெல்லிய விரல்களால் தடவிவிட்டபடியே.

வேறொன்றுமில்லை, ஆத்ரேயனின் கறுத்தடர்ந்திருந்த மீசை முடியில் ஒரே ஒரு முடி மட்டும் வெள்ளி முலாம் பூசி எட்டப்பனாய் எட்டிப்பார்த்தது.

அதைத்தான் ஆத்ரேயன் ஆராய்ச்சி பார்வை பார்த்துக்கொண்டிருந்தான். பெண்ணவளோ ஏதோ காணக்கூடாததைக் கண்டமாதிரி அலறுகிறாள்.

"ஏன் லட்டுகுட்டி! அந்த முடி மாமனுக்கு கெத்தா இருக்குல்ல? அப்படியே விட்டுடலாம் தானே?" மீசையை முறுக்கி விட்டபடியே தன் இல்லத்தரசியிடம் கணவன் சந்தேகம் கேட்க..

"நோ..." என்று நீட்டி முழக்கியபடி "வெள்ளை முடி கெத்தா இல்லை அத்து, அது நீங்க கிழவன்னு சொல்லுது" கிண்டலாகச் சொன்னவள், "முதல்ல அதை புடுங்கணும்" உதட்டைச் சுழித்துக்கொண்டு அதை பிடுங்க முற்பட

அவள் கிண்டலை ரசித்தவன் சிரித்துக்கொண்டே தலையை பின்புறம் சாய்த்து அவள் முயற்சியைத் தடுக்க, அவள் அவன் மீது சாய்ந்து மீண்டும் முயல என்று சின்ன யுத்தமே நடந்தது அவர்களுக்குள்.

மனைவியின் சிறுபிள்ளைத்தனமான செயலைக் கண்டு கலகலத்து சிரித்த ஆத்ரேயன் பெண்ணவளின் கைகளிரண்டையும் பிடித்து அவள் பின்புறமாக கொண்டு சென்று லாக் செய்தவாறே," இப்போ என்ன செய்வ?" என்று சிரிக்க

அவன் மேல் முழுவதும் சாய்ந்திருந்த பெண்ணவளோ சற்றும் யோசிக்காமல் தன் பற்கள் கொண்டு அந்த ஒற்றை முடியைக் கொய்து , ஈஈஈ... என்று பற்களைக் காண்பித்தாள். பற்களுக்கிடையே அந்த ஒற்றை மீசை முடி ஒய்யாரமாக வீற்றிருந்தது.

இந்த முயற்சியில் அந்த மெல்லினத்தின் இதழ்களும், வல்லினத்தின் உதடுகளும் என்னபாடு பட்டனவோ! அது அந்த இருவர் மட்டுமே அறிந்த ரகசியம்.

காரியம் முடிந்ததும் சூழ்நிலை வெட்கத்தைத் தர வேகமாய் தன் கணவனின் மடியிலிருந்நு எழுந்தவள் சிட்டென பறந்துவிட...

ஆத்ரேயனின் வசீகரச் சிரிப்பு அவளைப் பின் தொடர்ந்தது...

மெல்லிய வெட்கச் சிரிப்போடு கடகடவென்று மாடிப்படிகளில் இறங்கிக் கொண்டிருந்தவளின் காதில்," சீசீ...இத்தனை வயசுக்குப் பிறகும் இந்த அலுக்கலுக்கும், குலுக்கலுக்கும் மட்டும் இன்னும் குறைச்சலில்லை" என்ற பேச்சி யின் நக்கல் பேச்சு நாராசுரமாக வந்து விழுந்தது.

விக்கித்து போனாள் பெண். 'இதென்ன பேச்சு?' சுறுசுறுவென்று கோபம் தலைதூக்க தன் கண்களை ஹாலை சுற்றி ஒருமுறை சுழற்றினாள்.

முத்துக்கருப்பன் ஹாலின் ஒரு பக்கத்தில் அமர்ந்து கொண்டு பேப்பரில் மூழ்கி போயிருந்தார். இன்னொரு பக்கம் இரட்டையர்களான ஆதித்தன், அமுதினியின் விளையாட்டு போய்க்கொண்டு இருந்தது. ருத்ரனோ பேச்சியின் பக்கத்திலிருந்து படுமும்முரமாக ஏதோ வரைந்து கொண்டிருந்தான்.

'இந்த அம்மா பேசியதை ருத்ரன் கேட்டு இருப்பானா?' உடம்பெல்லாம் கூசியது பெண்ணிற்கு.

இப்போதெல்லாம் இப்படித்தான். பேச்சியின் நாக்கு சாட்டையாய் மாறி யசோவை அடிக்கடி சுழன்றடிக்கிறது.

ருத்ரன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு அவர்களுடன் அவன் ஊருக்கு செல்லும் நாட்கள் குறையத் தொடங்கியது.

அதைத் தாங்க முடியாத பேச்சி கணவரை நச்சரித்து சொத்துக்களை எல்லாம் குத்தகைக்கு கொடுத்து விட்டு பேரனோடு இங்கேயே வந்து உட்கார்ந்து கொண்டார்.

ஆத்ரேயன் வீட்டில் இருக்கும் சமயம் மட்டும் அவர் ஆட்டம் கம்மியாக இருக்கும். மற்ற நேரங்களில் தன் பேச்சாலேயே யசோவை தினம் தீக்குளிக்க வைப்பார் இந்த பெண்மணி.

அதுவும் இப்போதெல்லாம் இவரின் கண்மூடித்தனமான அன்பால் ருத்ரனிடம் பிடிவாதம் அளவுக்கதிகமாக வளர்ந்து நிற்கிறது.

'தன் மகன் ஒரு ஸ்பாயில்ட் சைல்ட் ஆகிப்போவானோ?' என்று தினம் தவிக்கிறது அந்த தாயின் மனது.

'இதற்கு விடிவுகாலமே கிடையாதா?' என்று கலங்கியபடியே கிட்சனுக்குள் சென்றவளை வள்ளியம்மையின் பார்வை குற்றம் சாட்டியது.

அவரும் எத்தனையோ தடவை ருத்ரனின் நன்மைக்காக உண்மையை சொல்லிவிடச் சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார். ஆனால் யசோ தான் மௌனமாகவே இருக்கிறாள்.

ஹாலில் விளையாடிக் கொண்டிருந்த இளையவர்கள் மீது ஒரு கண்ணை வைத்துக் கொண்டே வள்ளியம்மையுடன் சமையலில் ஈடுபட்டாள் பவானி. மனம் ஏனோ கனத்துக்கிடந்தது.

இன்று விடுமுறை, ஆதலால் பிள்ளைகள் வீட்டில் நிற்கிறார்கள்.

எப்போதுமே விடுமுறை நாட்களில் முதலில் இரட்டையர்களுக்கு உணவு ஊட்டி விட்டு விடுவாள் பவானி. அதே பழக்கத்தில் இன்றும் உணவு தட்டோடு பிள்ளைகளை நெருங்க சாப்பாட்டுக்கு எப்போதுமே ஓட்டம் காட்டும் அவளது பெண்ணரசி தாயிடமிருந்து தப்பிக்கிறேன் பேர்வழி என்று ருத்ரனின் பின்னே வேகமாக சென்று மறைய முற்பட

சின்னவளின் செயலால் படுமும்முரமாக வரைந்து கொண்டிருந்தவனின் கை தட்டுப் பட்டு படம் தப்பிப்போனது. அவ்வளவுதான் ருத்ரன் குழந்தையைத் கோபத்தில் தள்ளிவிட்டு விட, பக்கத்தில் இருந்த நாற்காலியில் குழந்தையின் இளம் நெற்றி பட்டு கீறியதோடல்லாமல் லேசாக செங்குருதியும் எட்டிப்பார்த்தது.

குழந்தையின் நெற்றியில் இரத்தத்தை கண்ட யசோ கோபத்தில், அமர்ந்திருந்த ருத்ரனைக் கையைப்பிடித்து எழுப்பி நச்சென்று அவன் முதுகில் ஒரு அடிவைக்க

அதிர்ச்சியில் "அம்மா!" என்ற சிறுவன், தன் கையை அன்னையிடமிருந்து விடுவிக்க முயற்சி செய்து கொண்டே "கையை விடுங்க ம்மா... பாப்பாவுக்கு ப்ளட் வருது பாருங்க... ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்ஸை எடுத்துட்டு வரேன்...கையை விடுங்க மா" என்றவாறே தன் கையை அன்னையின் கைகளிலிருந்து விடுவித்துக் கொண்டான்.

'ஒரு தடவை தன் மகன் அம்மா என்று அழைத்து விடமாட்டானா' என்று தவமிருந்த யசோதைக்கு இன்று அவன் பலதடவை அம்மா என்று அழைத்தும் கூட அதை புரிந்து கொள்ள முடியாத நிலையில் நின்றாள்.

ருத்ரனுக்கு முன்னால் வள்ளியம்மை மருந்தோடு வர, வள்ளியம்மையின் உதவியோடு சிறுமிக்கு மருந்திட்டவன்,"சாரி...பட்டு குட்டி. அண்ணா வேணும் னு செய்யலை டா" என்ற வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி, தங்கையின் கண்ணீர் வழிந்த கன்னம் துடைத்து முத்தமிட்டான்.

ஆனால் அந்த சின்னஞ்சிறு சிட்டு தன் அண்ணன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு, "அம்மா அடிச்சிட்டாங்களா? அப்பா கிட்ட சொல்லிக் குடுக்கலாம்...அழாதண்ணா" என்று அவனை சமாதானப்படுத்தியது.

பேச்சியம்மாளோ யசோதாவை வார்த்தைகளால் குதறி விடும் வேகத்தில்,"நீ சுமந்து பெத்திருந்தியானா இப்படி பட்டுன்னு கைநீட்டுவியா? பாவி...பாவி... அடுத்தவ பெத்ததுன்ன உடனே எவ்வளவு ஈஸியா கைநீட்டிட்ட? நாங்க பக்கத்தில இருக்கும் போதே எம்பேரனுக்கு இந்த பாடு. இதுல நாங்க இல்லைன்னா..." என்று மூச்சு விடாமல் பேசிக்கொண்டே

"எங்க அந்த மனுஷன்? ஏதோ எம்புள்ளைய எனக்கு பார்த்துக்க தெரியும் னு பெரிசா பீத்திக்கிட்டாரே, இதுதான் பாத்துக்குற லட்சணமா?" என்று அந்த இடத்தில் இல்லாத ஆத்ரேயனையும் வாயில் போட்டு மென்று துப்பி ஆங்கார ரூபியாய் நின்றார்.

சத்தம் கேட்டு வேகமாக வந்த ஆத்ரேயனுக்கு மனைவி நின்ற கோலம் மனதைப் பிசைய அவளை தன் தோளோடு அணைத்துக் கொள்ள, பெண்ணவளோ தன் கணவனிடம்

" என்னை பாவின்னு இந்த அம்மா சொல்லுறாங்க அத்து. ஆமாம் நான் பாவி தான். பத்து மாசம் அவனை இந்த வயித்தில் சுமந்து பெத்தும் நன்றி கடனுக்காக பத்து வருஷமா அப்படியே தூக்கி உங்ககிட்ட குடுத்துட்டு நிக்குறனே, நான் பாவி தான்" என்று கணவனிடம் பேச்சைத் தொடங்கி பேச்சியிடம் முடித்தபடி கதறியழுத யசோவின் வார்த்தைகளில் திடுக்கிட்ட பேச்சி

"ஏய்! என்ன சொல்லுற? எம்பேரனை நீ சுமந்தியா இது என்ன புதுக்கதை? எம் பொண்ணு உயிரோடு இல்லை ன்னதும் புதுசா பூ சுத்துறீங்ளா எங்காதுல? ஹும்...கொன்னேபோடுவேன் மரியாதையா பேசலைன்னா" என்றவரை முத்துக்கருப்பன்," பேச்சி! செத்த பாத்து பேசு த்தா"
என்று இடைவெட்ட

"என்னத்த பாத்து பேசணுங்க? ஆட்டை கடிச்சி, மாட்டக்கடிச்சி கடைசியில மனுஷனக் கடிச்ச கதையா நம்ம பேரப்புள்ளயை உன் மகளோட புள்ளையே இல்லன்னு சொல்லுறா இந்த ராங்கி அதை நான் கேட்டுட்டு சும்மா போகணுமா? ஹாங்...இந்தக் கதையெல்லாம் எங்கிட்ட வேண்டாம் ஆத்தா" என்றவரின் குரலில் உன் வார்த்தையை நான் நம்பவில்லை என்ற செய்தி இருந்தது.

"ஆனால் அது தான் உண்மை ம்மா" குரல் வந்த திசையை எல்லோரும் பார்க்க டாக்டர் சுஜி தன் கணவன் டாக்டர் கீர்த்திவாசனுடன் வந்து கொண்டிருந்தார்.

இவ்வளவு நேரமும் யசோவின் வார்த்தைகளை தூசியென தட்டிவிட்டு அவளையே மிரட்டிய பேச்சிக்கு, இப்போது சுஜியின் வார்த்தைகளை அவ்வாறு புறம் தள்ள முடியவில்லை.

"எ...என்ன... சொ..சொல்லுற சுஜி!" வார்த்தைகள் தடுமாறின.

"உண்மையைத்தான் சொல்லுறேன் ம்மா" என்று ஆதியோடு அந்தமாய் எல்லாம் சொல்லி முடிக்க நொறுங்கிப்போனது அந்த பெற்றோர்களின் மனது.

செய்தியின் கனம் தாளாமல் முத்துக்கருப்பன் தொப்பென்று சோஃபாவில் அமர்ந்து தாரைதாரையாகக் கண்ணீர் சிந்த, பேச்சியோ நின்ற இடத்திலேயே மடிந்து உட்கார்ந்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.

தன் மகள் வயதுக்கு வந்த நிகழ்வு, வளைகாப்பு, பிரசவம் என எல்லாவற்றையும் ஒன்றோடொன்று தொடர்பு படுத்திப் பார்க்க இவர்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் என்பதை இப்போது உணரமுடிந்தது. அழுது கரைந்தவர், பின் கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு முடிவோடு எழுந்தார்.

"எந்த பிறவியில் நான் செய்த பாவமோ, என்வயித்துல பிறந்த ஒரே பாவத்துக்காக என் பொண்ணு பூக்காமலே, காய்க்காமலே போய் சேர்ந்துட்டா. இன்னும் இன்னும் பாவத்தை நான் ஏன் சேர்க்கணும்?" என்று தழுதழுத்த குரலில் முணுமுணுத்தபடி

வள்ளியம்மை அருகில் பாதி புரிந்தும் புரியாமலும் குழப்பத்தில் நின்ற ருத்ரனின் கைபற்றி யசோதா அருகில் கொண்டு வந்து நிறுத்தி,"எஞ்சாமி! இதுதான் உன்னோட அம்மா. இந்த பாவி அது தெரியாமல் தப்பு தப்பா ஏதேதோ உங்கிட்ட சொல்லி தந்திருக்கிறேன். என்னை நீ மன்னிப்பியா? என்று கேட்டவாறே அவன் உயரத்திற்கு குனிந்து அவன் கைகளை எடுத்து தன் முகத்தில் பட்பட்டென்று அடித்துக் கொண்டாள்.

இந்த செய்கையில் சிலையென நின்ற யசோதாவிற்கு உயிர்வர," ஐயோ ம்மா! என்ன பண்ணுறீங்க?" என்று அவர் கைப்பற்றி தடுக்க

அந்த கைகளைப் பற்றி தன் கண்களில் ஒற்றியெடுத்தவர்," இதோ இப்ப, இந்த நிமிஷம் உன்னோட மனநிலைமை எனக்கு புரியுது ஆத்தா. இதை உங்கிட்ட கேட்க கூட எனக்கு தகுதி இல்லைன்னு தெரியும். இருந்தும் கேட்குறேன், தயவுசெய்து என்னை மன்னிச்சிடு" என்றார் குரல் கரகரக்க.

பின் ஏதோ முடிவெடுத்தவர் போல சாய்ந்த கோபுரமாய் நிலைகுலைந்து போயிருந்த தன் கணவர் அருகில் சென்று தன் தளர்ந்த கைகளால் ஆதூரமாய் அவர் தலைவருடி "வாங்க நாம போகலாம்" என்று அவர் கைபிடித்து எழுப்பினார்.

இதுவரை இரு பெண்களுக்கிடையே நடந்த உணர்ச்சி போராட்டத்தில் எதுவுமே செய்ய இயலாது கையறு நிலையில் வெறும் பார்வையாளனாக மட்டுமே நின்ற ஆத்ரேயன், மலரினியின் பெற்றோரைப் பார்த்து இப்போது ஏதோ சொல்ல முயல,

அதற்கிடையில் அவன் தவப்புதல்வன் ருத்ரன்," அம்மச்சி! இங்கயே எங்கூடவே இருங்க" என்று பேச்சியின் கையைப் பற்றியிருந்தான் உரிமையாக.

இத்தனை நாளும் தன் மகளின் ஒற்றை வாரிசு, தங்களுக்கு வாழ்நாளில் இருக்கும் ஒரே துணை என்று அன்பை வாரிவாரி வழங்கி வளர்த்த சிறுவன்.

இப்போது அவன் தங்கள் மகளின் பிள்ளை இல்லை என்ற உண்மை தெரிந்தாலும் அவர்கள் அவன் மீது வைத்த பாசம் பொய் இல்லையே.

"இல்ல ராசா நாங்க போறோம். எங்களை மறந்துடாத அப்பு" என்று சிறு கேவலோடு அவன் உச்சிமுகர்ந்தவரின் கைபற்றி," அப்போ என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க அம்மச்சி" என்றான்.

அவனின் 'அம்மச்சி' என்ற வார்த்தையில் அடியோடு வசமிழந்தவர், "இதுவரைக்கும் நான் தெரியாமல் செஞ்ச பாவமே போதும் ராசா. தெரிந்தே தாயையும் பிள்ளையையும் பிரிக்கிற பாவத்தை இனி செய்யமாட்டேன்" என்று சொல்லியவாறே தன் கணவனையும் அழைத்துக்கொண்டு எப்போதும் போல் தங்கள் அறைக்குள் நுழைந்து கொண்டார்.

பார்த்துக் கொண்டிருந்தவர்களின் விழிகள் கண்ணீரால் நிறைந்திருந்தாலும் உதடுகளில் சிறுபுன்னகை ஒன்று உதயமாகியிருக்கத்தான் செய்தது.

அன்று இரவு ஒருவழியாக பெரியவர்களையும் பிள்ளைகளோடு அமர வைத்து உணவு உண்ண
வைத்திருந்தார்கள் யசோதாவும் வள்ளியம்மையும்.

வீடே ஒருவித அமைதியில் மூழ்கி இருந்தது.
தரைதளத்திலிருந்த படுக்கையறையிலிருந்து வந்த பிள்ளைகளின் சிரிப்பொலி அந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு அவ்வப்போது கிண்கிணியாக சிணுங்கியது.

எப்போதும் போல ருத்ரன் பாட்டி தாத்தா கூட துயில் கொள்ள சென்றிருக்க இன்று புதிதாக ஆதித்தனும், அமுதினி யும் அவன் வால்பிடித்து கூடவே சென்றிருந்தார்கள்.

இந்த பிள்ளைகளின் அருகாமை வயதான அந்த தம்பதியினரின் மனக்காயத்தை சீக்கிரம் மாற்றவேண்டும் என்ற பிரார்தனையோடு தங்கள் ரூமிற்கு செல்லத்தொடங்கினாள் யசோதா.

ஹாலை கடக்கும் போது அங்கு மாலையிட்டு சுவரில் மாட்டியிருந்த புகைப்படத்திலிருந்த மலரினி நாச்சியாரின் இதழ்களில் இன்று கூடுதலான புன்னகை தவழ்ந்தது போல ஒரு மாயத் தோற்றம் உண்டாயிற்று யசோதாவிற்கு.

ஒரு நிமிடம் அந்த புகைப்படம் முன் நின்றவள்,' என்னை மன்னிச்சிடுங்க க்கா, எனக்கு வேற வழித்தெரியல' மனதுக்குள் சொல்லிக் கொண்டவள் படியேறினாள் தங்கள் அறைக்கு செல்வதற்காக.

அறையில் கணவன் படுக்கையில் காலை நீட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டு ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான் தன் மனைவியின் வருகைக்காக.

அறைக்குள் சென்றவள் கதவடைத்து நேரே கணவனிடம் சென்று அவன் அருகில் அமர்ந்து தோள்களில் சாய்ந்துகொண்டாள் ஏதோ ஆறுதலை வேண்டுபவளைப் போல.

பின் மெதுவாக தலையுயர்த்தி," அத்து! இன்னைக்கு நான் செய்தது தப்பா?" என்று கேட்டாள் தன் கண்களில் உயிரைத் தேக்கி

அவள் மனதின் அலைப்புறுதல் நன்றாகவேப் புரிந்தது அந்த காதல் கணவனுக்கு. "இல்லடா" என்றவன் அந்த கலங்கித் தவித்த முகத்தைப் பற்றி அங்கும் இங்கும் தவிப்போடு உருண்ட அந்த கரிய மீன்விழிகளில் முத்தம் வைத்தான்.

"இல்ல..." என்று மீண்டும் அவள் ஏதோச் சொல்லத் தொடங்க, அவள் மெல்லுதடுகளை தன் ஒன்றை விரல் கொண்டு மூடியவன்

"ஷ்ஷ்ஷ்... இதற்கு மேல் இங்கு வேறு எதையும் பற்றி பேச அனுமதி இல்லை தேவியாரே" என்றான் சரசமாக.

அவனின் அந்த சரசக் குரல் அவளின் உற்சாகத்தை மீட்டெடுக்க ,"அப்போ வேறு எதைப்பற்றி பேசலாம் பிரபு!" என்றாள் அவனைப் பின்பற்றி கேலியாக

அவள் காதுகளில் தன் இதழுரச மன்னனவன் சொன்ன பதிலில் செங்கொழுந்தாய் ஆகிப்போனாள் பெண்ணவள்.

மனைவியின் நிலை கண்டு வெடித்துச் சிரித்தான் அந்த காதல் கணவன்.

இந்த சிரிப்பு இனி இவர்கள் வாழ்வில் நிரந்தரமாகட்டும் என்று வேண்டிக் கொண்டு விடைபெறுவோம் நாமும்...

Superb 🤩🤩🤩
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top