JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Epilogue-17

Janani Naveen

Well-known member
கதிரவன் ஒளி கண்களைக் கூசியும் கண் திறவாமல் படகில் மிதந்தபடி மன அலைகளை தடுக்கும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான் கட்டிளங்காளை ருத்ரன். அந்த வெண்மதியின் குளுமையும் கூட அவனுள் எரியும் வெம்மையை தனிக்க முடியவில்லை. மேகக்கூட்டங்கள் கலைந்து விட்டன ஆனால் இவனின் கடந்த காலங்களை யாராலும் கலைக்க முடியவில்லை.


வாலிப வயதில் துள்ளித்திரியும் தன் வயதை ஒற்றவர்களுடன் ஆட்டம் போடும் இந்த சிங்கம் தான் ஒவ்வொரு கார்த்திகை பவுர்ணமி அன்றும் கண்ணீர் சிந்த வந்துவிடுவான் கடல் அன்னையை நாடி. இவனுடைய குற்ற உணர்வை போக்க எவராலும் முடியவில்லை, இதோ புறப்பட்டு விட்டான் கரையை நோக்கி. ஆனால் அவன் எண்ணங்களோ பின்னோக்கி செல்கிறது.


தன் பாட்டியுடன் கோவிலுக்கு சென்ற மைந்தனை எண்ணி தவித்துக்கொண்டு இருந்தால் யசோ. வாசலுக்கும் வீட்டிற்கும் அலைந்து கொண்டிருந்த அவள் மனமோ படப்படப்பின் விளிம்பில். "ஆச்சு கோவிலுக்குப் போய் மூன்று மணி நேரம் ஆகியும் பிள்ளையுடன் வராமல் எங்கு தான் போயிருப்பார்கள். இந்த மனுஷன் வேற மீட்டிங் என்று சொல்லிவிட்டு தொந்தரவு பண்ணாதேன்னு சொல்லிட்டாரு. என் மனசு படுற பாடு யாருக்கு புரியுது. மலரக்கா நம்ம பிள்ளையை பத்திரமாக என் கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுங்க" என்று மனசுக்குள்ள பேசிட்டு இருக்க, வாசல் கதவை திறந்து ஆத்ரேயன் கார் உள்ளே வரவும் சரியாக இருக்க தன்னவிடம் விரைந்தாள் பாவையவள்


கதவைத் திறந்து இறங்கியவனின் கலைந்த தலையும் சிவந்த கண்களையும் கண்டவள் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு மொத்த உயிரையும் கண்களை நிறைத்து கேள்வியாக நோக்க, தாவி அணைத்துக் கொண்டவன் வாயில் படியினிலே அமரவைத்தான். உடன் வந்த கவின் அவன் மனைவியை பார்க்க உள்ளே விரைந்து சென்று வள்ளியம்மையிடம் கூறி பால் கொண்டு வந்து தர அதை மறுத்தாலும் அத்துவின் கெஞ்சும் விழியின் சேதியில் மௌனியாக பாலை அருந்திய பொழுதிலும் கேள்வியாகவே நோக்கினாள்.


"யது பொறுமையாக கேள். நம் பிள்ளையையும் அத்தையையும் இந்த காரில் சென்று கூட்டிவா. உன்னுடன் கவின் டிரைவராக வருவார். கவலைப்படாதே" எனவும் செவ்விதழ் திறந்து "ஏன் நான்" என்று கேட்டவளிடம் "அவர்கள் பத்திரமாக இருக்கிறார்கள். காரில் 20 கோடி பணமும் உள்ளது ஆனால் நீ வந்தால் தான் அவர்களை அனுப்புவார்கள்" எனவும் திடுக்கிட்டு நோக்கி "கடத்தலா ஐயோ என் மகன்" என்று அலறியவளை ஆறுதலாக அனைத்து "உன்னை மட்டும் தான் வரவேண்டும் என்று கூறி விட்டார்கள். ஆனால் நீ நிறைமாத கர்ப்பிணி என்பதால் உடன் ஓட்டுனர் வரலாம் என்று சொல்லிவிட்டான் இல்லை என்றால்" பற்களை நறநறத்தவன் தன் கையாலாகாத் தனத்தால் அருகிலுள்ள தூணை குற்றி தன் சினத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். ஆறுதலாக ஆதியின் தோளில் தட்டி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி அழைத்துக்கொண்டு காரில் கழுகு மலையில் உள்ள வெட்டுவன் முருகன் கோவில் நோக்கிப் பயணித்தான் கவின் சக்கரவர்த்தி.


"யசோ, கவலைப்படாதீர்கள். இந்த துப்பாக்கியை வைத்துக் கொள்ளுங்கள். எதுவென்றாலும் பரவாயில்லை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று ஆறுதலாக கூறியும் அவள் கண்ணீர் நின்றபாடில்லை. மனதில் மலரிடம் வேண்டிக் கொண்டே வந்ததால் கார் நின்றது அறியவில்லை.


கதவைத் திறந்து இறங்கியவள் கவின் இறங்காமல் இருப்பது கண்டு பயத்துடன் பார்க்க "நான் இறங்கினால் கண்டுபிடித்துவிடுவார்கள். பின்னாலுள்ள பெட்டியை எடுத்துக்கொண்டு கிளம்புங்கள் நான் விரைவில் வந்து விடுவேன்" எனவும் அவ்வாறு செய்தால் யசோ.


நான்கு தடியர்கள் காரிடம் வந்து சோதனையிட தொப்பியை இழுத்து முகத்தை நன்றாக மரைத்துவிட்டான். பௌர்ணமி வெளிச்சத்திலும் அடையாளம் தெரியாமல் யசோவை அழைத்து சென்றார்கள் இருவர். மற்ற இருவர் அவ்விடமே நின்றதால் கவின் பொறுமை காத்தான்.


உள்ளே நுழைந்த யசோ, ருத்ரன் பேச்சியுடன் அமர்ந்திருப்பதைக் கண்ட உடன் விரைந்து செல்ல பார்த்தவளை ஒரு வயது முதிர்ந்த ஒருவன் சக்கர நாற்காலியில் அமர்ந்து மிக கம்பீரமாக "நில் அங்கே" என்று கூறியதைக் கேட்டு திடுக்கிட்டாள்.


"என்ன பார்க்கிற, உன்னையும் உன் அம்மாவையும் அழிக்க பார்த்தேன் முடியலை. எப்படியும் உன்னை கொல்ல முயற்சி செய்தும் தப்பிச்சுட்ட புள்ள, என் மகன்களை காவு கொடுத்திட்டது தான் மிச்சம். இன்னிக்கி உன்னையும் உன் மூலம் பிறந்த இவனையும் உன் வயிற்றில் உள்ள குழந்தைகளையும் அழிக்காமல் விடமாட்டேன்" எனவும் பேச்சி ஒரு பக்கம் குலம்பி தவித்தாள் என்றால் யசோ பிரம்மை பிடித்து நின்றாள்.


"உன்னை பற்றி அனைத்து விஷயமும் எனக்கு தெரியும். பவதியின் அண்ணன் நான். உன் அம்மாவால் தான் என் பெற்றோர்கள் நோய்வாய்ப்பட்டு இறந்தார்கள்.”


யசோவிற்கு மெல்ல புரிந்தது. நிமிர்ந்து சங்கரனை பார்க்க அவன் கூறிக் கொண்டிருப்பதை கவனிப்பதும் ருத்ரனை பார்ப்பதுமாக இருந்தாள்.


"தேடி அலைந்து கொண்டே இருந்தோம் அப்போது தான் ஒரு நாள் திருச்சியில் தீனா உங்களைப் பார்த்தான். உன் நேரம் நீ தப்பி விட்டாய். உன் அம்மாவை கொன்ற எங்களால் உன்னிடம் நெருங்க முடியவில்லை. உன்னை கவனித்துக்கொண்டே இருக்க மட்டும்தான் முடிந்தது. ஆனால் இன்றுடன் உன் அத்தியாயம் முடிய போகுது புரியவில்லையா" என்று கேட்கவும் அங்கு ஒருவன் 3 பால் டம்ளருடன் வந்தான் "இதை 3 பேரும் குடிச்சுட்டு போய் சேருங்க, போய் சேருங்க" என்று கூறி இடி இடிப்பது போல நகைத்தான். ஆம், அது விஷம் கலந்த பால்!


யசோ முடியாது என்று தலையாட்ட. அப்போ சரி "டேய் அந்த பொடியன் கழுத்தை அறுத்துருங்கடா. அவன் துடிதுடித்து சாகட்டும்" எனவும் யசோ பாய்ந்து தம்ளரை எடுத்துக் கொண்டு "அவர்களை விட்டு விடுங்கள் நான் செத்துப் போறேன்" எனவும் பேச்சி கதிரியே விட்டார்.


வெளியே, அந்த இருவரின் கவனம் சிதறும் வேலையில் கவின் காரிலிருந்து இறங்கி அவர்களை தாக்கி உள்ளே வரவும் அங்கு பத்துக்கும் மேல் இருப்பவர்களை கண்டு நிதானித்து ஒவ்வொருவரையும் சத்தமின்றி தாக்கிக் கொண்டு முன்னேறி வந்து கொண்டிருந்தான்.



பேச்சியோ "வேண்டாம் யசோ, நீ குடிச்சாலும் இவனுங்க நம்ம ருத்ரனை கொல்லாம விட மாட்டார்கள்" எனவும் ஒரு தடியன் பேச்சியிடம் வந்து ருத்ரனைப் பிடுங்க "வேண்டாம்" என்று கூறி யசோ தடுக்க பேச்சியும் சேர்ந்து கொண்டார். அந்த சமயம் அவள் மடியிலிருந்து துப்பாக்கி கீழே விழ அதை கண்டு அதிர்ந்த சங்கரன் "போட்டுத்தள்ளுட இதுகளை" எனவும் அதற்காகவே காத்திருந்த அந்த தடியன் பேச்சியை தள்ளிவிட்டு துப்பாக்கியை கைப்பற்ற போக, யசோ ருத்தனை துப்பாக்கி எடுக்க சொல்ல "முடியாது உன் பேச்சை கேட்க மாட்டேன்" என்று ருத்ரன் கூற அதிர்ந்து போனாள்.

தடியன் கொடுத்த துப்பாக்கியை சங்கரன் ருத்திரனை நோக்கி குறி வைக்க, கவின் உள்ளே வரவும் சங்கரன் சுடவும் சரியாக இருக்க "அம்மா" என்று அன்று போல் இன்றும் கதறினான் ருத்ரன்.


கண்ணீரைத் துடைத்துவிட்டு கரையில் இறங்கி கம்பீரமாக நடந்து தனது வெண்ணிற ஆடி காரை எடுத்து சீறிப்பாய்ந்தான். மாளிகை போல் படர்ந்திருக்கும் வீட்டினுள் தாவி ஏறி நேராக பூஜை அறைக்குள் சென்றான்.


சென்றவன் கண்டதோ என்றும் போல் இன்றும் யசோ பாசத்தால் கண்ணீர் மழை பொழிய அவள் மடியில் படுத்து ஆறுதல் தேடினான் நமது ருத்ரன்.


பேச்சி வந்து இருவரையும் கண்ணீர் சிந்த பார்த்து "போதும் போதும் கொஞ்சியது. இன்று தேன்மலர் பிறந்தநாள் விழாவிற்கு அனைத்தும் தயாரா என்று பார்க்காமல் இது என்ன ம்ம்? ருத்ரா, நீ என்ன பரிசு தர போறேன்னு எங்களை நச்சிட்டு இருந்தா போய் பாரு" ருத்ரனை அனுப்பிவிட்டு யசோவை பார்க்க "அம்மா இன்னும் என் பையன் கலங்கி தவிக்கிறது போக்க முடியலை. எவ்வளவு சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேங்குறான்"

" உன் மகன் உன்னை போல தானே. நீ எல்லோருக்காகவும் கஷ்டத்தை மறைச்ச, அவன் உனக்கு தெரிய கூடாதுன்னு கடலுக்கு போறான். விடு அவனுக்குன்னு ஒருத்தி வந்து பெற்றுக் கொடுக்கும் போது சரியாகிடும் போய் மாப்பிள்ளையை கவனி. ராத்திரி பூரா பூஜை அறையில் மலர் கிட்ட பேசிக் கொண்டிருந்த. பாவம் உங்களுக்கு நடுவில் மாப்பிள்ளை பாடுதான் திண்டாட்டம்" என்று கூறிக்கொண்டு சமையல் கட்டுக்குள் மேற்பார்வை பார்க்கப் போனார்.


மாலை விழாவில் தேன்மலர் அழகாக கரும்பச்சை தாவணி பாவாடை அணிந்து ருத்ரன் பரிசளித்த வைர செட்டு நகை அணிந்து வந்து கூடத்தில் நின்றாள். அதை என்றும் போல் இன்றும் மெய்மறந்து பார்த்தான் ஆத்ரேயன். தேன்மலரை உச்சிமுகர்ந்து கண் கலங்கினான்.


தன் தேவதை பெண்ணிற்காக தங்கத்தால் நெய்த புடவையை பரிசளித்து திரும்பி யசோவை பார்த்து கண்ணடிக்க, யசோ முறைக்க அதை தன் தாத்தா பாட்டியுடன் தேன்மலர் மகிழ்ச்சி பொங்க கண்டு ரசித்தாள்.


கேக் வெட்டப் போகும் சமயம் அனைவரும் ருத்ரனை தேட அவன் மலரின் படத்திற்கு கீழே தண்ணீர் குவளையில் வைத்திருந்த தூங்கா விளக்கிடம் "அண்ணனை மன்னித்துவிடு, மலர் அம்மாவிடம் பத்திரமாக இரு" என்று கூறிக்கொண்டு இருக்க அந்த சமயத்தில் ஆத்ரேயன் பார்த்து "என்னடா கண்ணா இன்னும்" என்று கேட்க "என்னால் தான் அன்று அம்மாவிற்கு தோட்டா நெஞ்சில் பாய்ந்தது அதனால் அவர்களுக்கு அங்கே பிரசவமாக தேன்மலரை காப்பாற்றிய நம்மால் சின்ன கண்ணனை காக்க முடியவில்லை. நான் மட்டும் அம்மா கூறியதை கேட்டு துப்பாக்கி எடுத்து இருக்கலாம்" என்று கூறி தன்தந்தையை தழுவி கண்ணீர் சிந்த ஆத்ரேயனும் கண் கலங்கினார். பின் "அனைத்தும் நல்லதுக்காகத்தான், தீனாவின் தந்தையை கவின் சுட்டதால் நம் குடும்பம் இன்று வரை நிம்மதியாக இருக்கிறோம்" என்று கூற அங்கு வந்த யசோ "உன் பாட்டியும் என்னை மகளாக ஏற்றுக் கொண்டார். நீயும் என்னை புரிந்து கொண்டாய். எது நடந்தாலும் அது நன்மைக்கே கண்ணா" என்று கூறி மகிழ்வுடன் விழா நடக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றால். நிம்மதியாக மலர் தேன்மலராக சிரித்துக் கொண்டு இருந்தால் தன் தாத்தா பாட்டியுடன்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top