JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

epilogue-3

Jovi

Member
5 வருடங்களுக்கு பின்

மிகப்பெரிய மாளிகை போலிருந்த வீட்டிலிருந்து "சஷ்டியை நோக்க" என்று சூலமங்களம் சகோதரிகளின் கணீர் குரலில் கந்தசஷ்டி கவசம் ஒலித்துக்கொண்டிருந்தது.வீட்டின் நடுஹாலில் முழு ஆளுயுரப் படமாக வீற்றிருந்தாள் மலரினி நாச்சியார். அதன் அருகிலேயே முத்துக்கருப்பன் , பேச்சியம்மாள் மற்றும் வேதநாயகி ஆகியோரின் படங்களும் வரிசையாக மாலைகள் இடப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு இருந்தது (எப்புடி one ball all wicket out. சரி சரி சந்தோஷத்துல வாயடச்சுப்போயி நிக்காம சீரியஸ்ஸா கதைக்குள் போலாம் வாங்க.) அவர்களின் முன்பு கை கூப்பி வணங்கி நின்றனர் யசோதாவும், ருத்ரனும். ஆம் இன்று ருத்ரனின் பிறந்தநாள். அதிகாலையில் எழுந்ததில் இருந்தே யசோ ருத்ரனுடனே சுற்றிக் கொண்டிருந்தாள்.
"அம்மா, நீங்க போய் அகிலனையும் , மலரினியையும் ரெடி பண்ணுங்க, கோயிலுக்குப் போக நேரம் ஆச்சு" என தன் தாயை விரட்டிக் கொண்டிருந்தான் ருத்ரன். ஆனால் யசோ அதை கண்டுகொள்ளாமல் அவனுக்கு சாப்பாடு எடுத்து வைப்பதிலேயே குறியாக இருந்தாள். "ப்ச்" என்று சலித்துக் கொண்டு அவர்களை தானே அழைத்து வரலாம் என்று நினைத்து திரும்பினால், வாசல் அருகே அகில் மற்றும் மலர் இருவரையும் தன் இருகைகளிலும் வைத்துக்கொண்டு கலைந்து போன தலையுடன், களைத்துப் போன முகத்துடன் முறைத்துக் கொண்டிருந்தான் ஆத்ரேயன். அதைப் பார்த்து பக்கென்று சிரித்துவிட்டான் ருத்ரன். என்னடா கண்ணு தனியா சிரிக்கற என்று திரும்பிய யசோதாவோ அவன் பார்வை சென்ற திசையைப் பார்க்க , அங்கு கண்கள் கனலை கக்க நின்றவனைப் பார்த்தவாறே ,"ஏன் ருத்து கண்ணா உங்க அப்பா இப்படி பாசமா பார்க்கறாரு" என்று கேட்க மீண்டும் அடக்கமுடியாமல் குபீரென சிரித்துவிட்டான்.

அதற்குள் யசோ அருகில் வந்த ஆதி, "ஏன்டி, இந்த ரெண்டுபேர்கிட்டையும் என்னைக் கோர்த்துவிட்டுட்டு இங்க வந்து இவனக் கொஞ்சீட்டு இருக்கையா?" என கோபமாகக் கேட்டான். அவன் கோபத்தை தூசிப் போல தட்டி விட்டு அவன் அருகில் சென்று, "ஸ்ஸப்பா எதுக்கு இப்படி கத்தரீங்க அத்து" என்றாள். அவளது அத்து என்ற அழைப்பில் வழக்கம்போல இப்போதும் அவன் வாயில் வாட்டர்பால்ஸை திறந்துவிட்டிருந்தான். அவன் சொக்கி நிற்கும் வேளையில் ருத்ரன் தன் உடன்பிறப்புகளுடன் எஸ்ஸாகி இருந்தான். (இனித்தான் பயங்கரமான ரொமான்ஸ் வரப்போகுது , சோ எல்லாரும் கதவையும் , கண்ணையும் மூடிக்கொண்டு படிக்கவும்)
அங்கிருந்து பிள்ளைகள் சென்றதைப் பார்த்த ஆதி யசோ அருகில் (ம் கம்மான் அப்படித்தான் )நெருங்கி, "ஏன்டி காலையிலிருந்து கண்ணுலையே படாம இப்படிதா என்னை அலையவிட்ரதா, இது உனக்கே நியாயமா இருக்கா? யது" என்று அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவனது இதழ்களால் அவளின் காதோரம் வருடிக் கொடுத்தான். அதில் அவள் மெய் மறந்து இருக்கும் போது தன் பக்கமாக அவளை முழுவதுமாக திருப்பி அதிரடியாக அவள் இதழில் கவிபாட ஆரம்பித்தான். அவனது ஒரு பார்வைக்கே உருகி குழைபவள் , அவனது இந்த அதிரடியில் தன்னை முற்றிலுமாக மறந்திருந்தாள். (இங்கு கரடியை எதிர்பார்க்காதீர் , அந்த வல்லமை எல்லாம் ஒரு ஜாம்பவானால் மட்டுமே முடியும். நான் கரடிக்கு சிலீப்பிங் tablets கொஞ்சம் ஹெவியா கொடுத்திருக்கிறேன், சோ நோ ப்ராப்ளம் )

இருவரும் மூச்சுக் காற்றுக்காக தன் இணையைப் பிரிந்த போதுதான் யசோ தன் சுற்றுப்புறத்தை உணர்ந்தாள் ( ஆஹான்). "உங்ககிட்ட எவ்வளவு டைம் சொல்லீருக்கேன் அத்து, இப்படி கண்ட நேரத்துல கிஸ் பண்ணாதீங்கனு " என்று தனக்கும் அங்கு நடந்த நிகழ்விற்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி சிணுங்கினாள்( இது உலகமகா நடிப்புடா சாமி ). அதற்கு அவன் பார்த்த அர்த்த பார்வையில் வெக்கி , "சரி சரி போய் சீக்கிரமா ரெடியாகி வாங்க " என்று ஆதியை விரட்டினாள். அவனும் இதற்கு மேல் இங்கிருந்தாள் எல்லையை தாண்டி விடுவோம் என நினைத்து அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டான்.

( சரி சரி அங்கையே பார்த்து ஜொள்ளு விடாம அடுத்தகட்டத்திற்கு போகலாம் வாங்க. ஹலோ எல்லாரும் எங்கையா போறீங்க நான் கதையோட அடுத்தகட்டத்தை சொன்னேன் லகுடபாண்டிகளா )

[லெட்ஸ் start சீரியஸ் வெர்ஷன் ]
அவனிடமிருந்து பார்வையை திருப்பிய மங்கையின் கண் அங்கிருந்த புகைப்படங்களில் பதிந்தது. என்ன முயன்றும் தன் கடந்தகால நிகழ்வுகள் எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை. அகிலும் , மலரும் பிறந்ததிற்குக்கூட பேச்சி வந்து பார்க்கவில்லை. தன் கணவனின் உடல்நிலையை காரணம் காட்டி அங்கு செல்வதை தவிர்த்து வந்தார். மூன்று மாதம் கழித்து முத்துக்கருப்பனின் உடல்நிலை மோசம் அடைந்து , ஒருநாள் இந்த பூலோகத்தை விட்டு தன் மகளை காண புறப்பட்டு விட்டார் மலரின் அன்புத் தந்தை. ஒரு மகனாக அவருக்கு செய்யவேண்டிய காரியங்களை மருமகனாக ஆதி எந்த குறையுமில்லாமல் செய்தான். அதன்பின் பேச்சியை ருத்ரனை காரணம் காட்டி தன்னுடனே அழைத்து சென்றனர் ஆதியும், யசோவும். என்னதான் தான் யசோவை மனது நோகும்படி பேசியிருந்தாலும், இங்கு தான் வந்ததிலிருந்து தன் மகள் மலரைப் போலவே அன்பாக பார்த்துக் கொண்டிருக்கும் யசோவை பார்க்கும் போது குற்றவுணர்ச்சியாக இருந்தது பேச்சிக்கு. ஏற்கனவே மகள் மற்றும் கணவர் இருவரையும் இழந்து துக்கத்தில் இருந்தவர் ,யசோவை தவறாக புரிந்து கொண்டோமோ என்ற குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்ள, தன் சொத்துக்கள் அனைத்தையும் ருத்ரனின் பெயருக்கு மாற்றி வைத்துவிட்டு தன் உயிர்மூச்சை நிறுத்தியிருந்தார். அவர் இறந்த இரு வருடங்களுக்குப்பின் வயோதிகத்தின் காரணமாக வேதநாயகியும் மாண்டிருந்தார் (என்னா ஆட்டம் போட்டே கிழவி நீஇஇஇஇஇ ). அவர்கள் இவ்வுலகில் இல்லை என்றாலும் யசோவின் மனதில் அவர்களால் உண்டான வடு அப்படியே இருந்தது. அவளுக்கு இன்றளவும் உள்ள ஒரே ஆறுதல் சாகும் தருவாயில் ஒரு ஜீவனுக்கு தான் அளித்த வாக்கை காப்பாற்றும் வல்லமையை அந்த கடவுள் இவளுக்கு அளித்திருக்கிறார்.

தங்களது அறைக்கு சென்றிருந்த ஆதியும் கடந்து வந்த பாதையைத்தான் அசை போட்டுக்கொண்டு இருந்தான். தன் பூக்குட்டியே தன் மகளாக மீண்டும் பிறந்திருக்கிறாள் என்று நினைத்து கண்ணீர்விட்டான். மீண்டுமொரு மகளதிகாரம் படைத்து கொண்டிருக்கிறான்(பிளீச் நோ கெக்கபெக்கே ). நேரம் செல்வதை கண்டு, தன் நிலையிலிருந்து மீண்டு குளியறைக்குள் சென்றான்.

குழந்தைகளின் குரலில் தன்னை மீட்டவள், அங்கு மஹாராஜன் தோரணையுடன் மாடியிலிருந்து இறங்கி வந்த தன் கணவனையும் , தன் உதிரத்தில் பிறந்த தன் மழலை செல்வங்களையும் ஆனந்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இப்படி ஒரு அழகான வாழ்க்கைகாகத்தான் ஒரு காலத்தில் ஆண்டவன் தனக்கு பல சோதனைகளை வைத்தாரோ என்று நினைத்துக் கொண்டாள். பின்பு அனைவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக அருசுவை உணவை உண்டனர். உணவை உண்டபின் அனைவரும் கோவிலுக்கு செல்ல காரை நோக்கி சென்றனர். ஏதேச்சையாக திரும்பிய யசோவின் கண்ணில்பட்டது மலரின் புகைப்படத்திலிருந்து விழுந்த பூ. அதை மலரின் ஆசீர்வாதமாக ஏற்று தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இணைந்து கொண்டாள் அத்துவின் யது. இனி அவர்களது வாழ்வில் என்றும் வசந்தமே ( ரைட்டரம்மா பார்ட் 2 எடுக்காத வரை அவங்க எந்த கரடியும், கஷ்டமும் இல்லாம சந்தோஷாமா இருப்பாங்க ).


சுபம்
Ha ha super
Athilum 3 peraium serthu podduthu high light ha ha
 

Janani Naveen

Well-known member
கரடியையும் என்னையும்(ஜாம்பவான்னு சொல்லி) கோர்த்து விட்டிங்க பார் அங்க நிக்கறிங்க நீங்க 🤣🤣
 
மூணு விக்கெட்டையும் தூக்கி இதுக்காகவே உங்களுக்கு அவார்ட் கொடுக்கலாம்
 
Last edited:

seethavelu

New member
அருமை:love:
அந்த ஒரே பால்ல மூணு விக்கெட் சூப்பர் :LOL::LOL::LOL:
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top