JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

epilogue-4

Jovi

Member
எபிலாக்





சில வருடங்களுக்கு பின்,



ஓர் அழகிய பொன் காலை பொழுதில் தன் உயர் ரக சொகுசு காரில் தனது வயதிற்கே உரிய கம்பிரத்துடன் வந்து இறங்கினான் ஆர்.கே. குருப்ஸின் (R.K.Groups) செர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்(Chairman & Managing Director) என அழைக்கபடும் ஆத்ரேயன்.





அவனின் நடைக்கு ஈடாக ஓட்டமும் நடையுமாக ஓடிகொண்டே அன்றைய நாளின் பட்டியலை விளக்கியவாரே வந்து கொண்டிருந்தான் எப்பொழுதும் போல் அவன் பக்க பலமாகவும் வலது கையாகவும் விளங்கும் அவனின் தனிப்பட்ட செயலாளன் மாறன்.



அவனின் அன்றைய நாளின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வரை காத்திருந்துவன். அதன் பின்,



"மாறன் ருத்ரன் எப்ப கிளம்பி வரான் அவன் வரத்துக்கான அரேன்ஜ்மன்ட்ஸ்லாம் (arrangements) பன்னியாச்சுல…" என கேட்டவனிடம்,



"ஆம் பன்னியாச்சு சார்! ருத்ரன் சார் வந்தவுடன் அவர் கம்பெனி (company) டேக் ஓவர் (take over) பன்றது தான் பாக்கி என்றவனை சரி என்று அனுப்பியவன் தன் அறைக்குள் நுழையவும் அவனது அலைபேசி சினுங்கவும் நேரம் சரியாக இருந்தது."



"அலைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தவுடன், அவனின் யது தன் செல்ல மகனின் வருகையை பற்றியும் அவனை பற்றியும் சரமாரியாக கேள்வி கனைகளை தொடுக்க ஆரம்பித்தாள்… அவளின் கேள்வி கனைகளை கேட்டவாறே இருந்தவன் பதில் ஏதும் கூறாமல் இருக்கவும் அங்கு யதுவின் பி.பி எகிற ஆரம்பித்தது…."



"அத்து நான் எவ்வளவு கேள்வி கேட்குறேன் நீங்க ஒரு பதிலும் சொல்லாம இருக்கீங்க.. என கத்தவும்…. கொஞ்ச நேரம் அமைதியா இரு யசோதா என்ற கணவனின் அதட்டலில் கப்சிப் என்று அமைதியானாள் அவனின் யசோதா…"



அவளின் மௌனத்தை உணர்ந்த பிறகே…"ஏன் யதும்மா நான் சொல்லாம எங்கு போக போறேன் இப்படி மூச்சு கூட விடாம கேள்வி கேட்டுடே இருந்தா நான் எப்படி சொல்ல என கேட்டவன் பின் நிதானமாக அவளின் கேள்விக்கு பதில் கூறலானான் ஆத்ரேயன். தனது மகனின் வருகையும்; அவனின் நலனையும்… எல்லாம் கேட்ட பின் சரி…



என்று கூறிய யசோதா தன் அனைப்பை தூண்டிக்க போகும் நேரத்தில் அப்போழுது ஆத்ரேயன் தன் செல்ல ராட்சசியை சீண்டும் நோக்கில் "வர வர நீ உன் அத்துவ சரியா கவணிக்கிறதே இல்ல யதும்மா… எப்ப பார்த்தாலும் உன் பசங்களையே கவணிக்கிற உன் அத்து மேலே கொஞ்சம் கூட பாசமே இல்ல உனக்கு… இன்னிக்கு உன் மகன் வர நல்ல செய்தி சொன்ன எனக்கு கரிசனம் காட்டலாம் இல்ல…. என்ற கணவனிடம் என்ன கரிசனம் வேணும் அத்து!... என்று கேட்ட மனைவியிடம் இன்னிக்கு நாம கடலுக்குள்ள போகலாம் என்ற கூறிய கணவனின் பதிலில் இவ்வயதிலும் சிவந்த கண்ணங்களுடன் பேசற்று மௌனியானவள்… சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு மிடுக்கான குரலில்…. "யோவ்! என்ன இளமை திரும்புதாக்கும் காலையிலேயே ஆரம்பிச்சுட்ட…. கல்யாண வயதுல்ல பசங்கள வச்சிகிட்டு என்ன பேச்சு இது…." என்ற மனைவியை "அடி போடி நமக்கு எவ்வளவு வயசானாலும் நீ இன்னும் எனக்கு அதே யது தான் நானும் அதே அத்து தான் என்று விஷம குரலில் கூறியவன்…" இன்னும் சிறிது நேரம் பேசிவிட்டு தன்னவளை சிவக்க வைத்தவன் புன்சிரிப்புடன் தன் அனைப்பை துண்டித்து அன்றைய அலுவல்களை கவணிக்கலணான்.



ஆம். அவர்களின் தவ புதல்வன் வெளிநாட்டில் தொழிற்கல்வி படித்த கையுடன் தனது மற்றும் தன் தொழிற்ஸ்னாபத்தை பதித்தவன்.





அங்கு தன் தனியே தனது தொழிற் அடையாலத்தை படிக்கும் காலத்திலையே உருவாக்கி அதை வெற்றி பாதையில் கொண்டு சென்று கொண்டிருப்பவன் நேரமின்மையால் தன் தந்தையின் தொழிலில் பங்கு எடுத்து கொள்ள இயலாமல் இருந்தவன் இப்போழுது தான் சொந்த நாடு திரும்பி தந்தையின் தொழிலை கையில் எடுத்து அதை திறம்பட செய்ய நினைற்று தன் நாட்டிற்கு வந்து கொண்டு இருக்கிறான்….



அவனை வரவேற்கவே அவனிடம் தொழிலை கொடுக்கவே இங்கு அணைத்து ஏற்பாடுகளும் நடந்து கொண்டு இருக்கின்றன…..



தூத்துகுடி விமானநிலையம்….



விமானநிலைய வெளியில் தன்னை அழைக்க காருடன் காத்திருந்த தனது தந்தையின் செயலாளரை பார்த்து இளம் புன்முறுவல் சிந்தி காரினுள் அவரின் நலனை விசாரித்துவிட்டு காரினுள் ஏறி அமர்ந்தான் ருத்ரன்.



அமர்ந்தவுடனே மாறனிடம் "அன்கில்! நம்ம கம்பெனி போயிட்டு பொறுப்பேத்துக்கிட்டே வீட்டுக்கு போகலாம், அதே மாதிரி அப்பாவும் அங்க தான இருக்காரு… சோ! அதே மூடிச்சிட்டே போலாம். என்று கூறிய ருத்ரனை சிறிதே புன்னகையுடன் பார்த்து சரி என்ற மாறன் காரை அலுவலகத்தை நோக்கி செல்லுத்தும் படி ஒட்டுனரிடம் கூறினார்…"



அலுவலகம் வந்தவர்கள் ஆத்ரேயனை பார்க்க... தனது புதல்வனை பார்த்த ஆத்ரேயன் பெருமையின் உச்சிக்கு சென்றான் என்றால் மிகையில்லை.





அவனின் ஆறடி இரண்டு அங்குல தோற்றமும் கட்டுக்கோப்பான வனப்பும் கூர்மையான பார்வையும், இவன் இளம் தொழில் ஜாம்பவான் என பல பேரால் போற்ற படுபவனை நீண்ட நாட்கள் பின் தன் வெகு அருகில் பார்த்து மெய்சிலிர்த்து போனான் அந்த அன்பு தந்தை.





"ஹே டேட்! என்ன என்னைய அப்படி பார்கிறீங்க நான் உன் மகன் தான்ப்பா….

என கூறிய மகனை பார்த்த ஆத்ரேயன் "எஸ் மை சன் யூ ஆர் மை பாய் ஓன்லி" (Yes. My son your my boy only) என கூறிய தந்தையை சிறு சிரிப்புடன் பார்த்து பேசி பின் மீண்டும் நடப்புக்கு திருப்பினான் ருத்ரன்.





அவன் வந்ததன் நோக்கம் அறிந்து அதன் விளைவாக அன்றே அவனிடம் பொறுப்புகளை கொடுத்தான் ஆத்ரேயன் எப்பொழுதும் போல் இவன் என் மகன் என்ற கர்வமும் பெருமையுடன்.



பின் துரிது கதியில் அவர்வகள் தன் வேலைகளை முடித்து இருவரும் சேர்ந்தே தங்களின் வீட்டிற்கு பயனபட்டனர் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும்.





அங்கு வீட்டில்…





ருத்ரனின் வருகையை அறிந்து அவனை வரேவற்க அவனின் அன்னை, தங்கை, தமையன் என எல்லோரும் காத்திருந்த வேளையில் இவர்களின் கார் வீட்டின் முன் நின்றது.





இவர்களின் வருகையை அறிந்த யசோதா வள்ளியம்மையுடன் சேர்த்து கரைத்த ஆர்த்தியை எடுத்து கொண்டு வீட்டின் வாயிலுக்கு வர அங்கு புன்னகையுடன் நின்ற மகனை பாசம் பொங்கும் விழிகளினுடையே அவனை ஆலம் சுற்றி உள்ளே வரவேற்க…. உள்ளே வந்தவுடன் தன் அன்னையை இறுக அணைத்து கொண்டு தன் அன்பை வெளிபடுத்தினான் அவளது செல்வ மகன் ருத்து.





"ருத்து கண்ணா எப்படி இருக்கடா நல்லா இருக்கியா என்ற அன்னையின் கேள்விக்கு ஓர் சிறு புன்சிரிப்பு கூடிய தலையாட்டலுடன் பதில் கூறியவன்".



பின் தன் சகோதரன் அபிநவ் மற்றும் அவ்விட்டின் கடைக்குட்டி ருத்தரின் செல்ல தங்கை அபிநயாவையும் அணைத்து அவர்களின் அன்பையும் பெற்றான்.



என்று ஆத்ரேயன் அவர்களின் சகோதரர்களின் பொறுப்பை அவனிடம் வழங்கினானோ அன்றே தன் தாயிடம் சிறிது சிறிதாக ஒட்ட தொடங்கிவிட்டான் ருத்ரன். பின் கால போக்கில் யதுவின் அன்பை புரிந்து கொண்டு என்றும் இவள் தான் என் அன்னை வேறு எவரும் இல்லை என்று திட்டவட்டமாக நினைத்து தன் வாழ்க்கையை வாழ இனிமையாகவே துவங்கிவிட்டான்.



அவ்வபோழுது பானக துரும்பாக பேச்சியம்மாளின் பேச்சு இருந்தாலும் அதை விடுத்து விட்டு தன் அன்னையின் உண்மையான அன்பையும் பாசத்தையுமே புரிந்து கொண்டு தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான வாழ்வை மேற்கொள்கிறான் ருத்ரன்.



"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்



புன்கண்நீர் பூசல் தரும்."




என குறளின் கூற்றுக்கு ஏற்ப தன் அன்னையின் சிறு கண்ணீர் தூளிக்கூட தன்னை அதிகமாக வருந்த செய்யும் என்ற அளவிற்கு தன் தாய்யின் மேல் மிகுந்த பாசம் வைத்து இருக்கும் சேய் ஆவான்.





இவை அனைத்திருக்கும் நம் யசோதாவின் பொறுமையான அன்பே காரணம் என்றால் மிகையில்லை.



இவர்களின் இனிமையான சந்தோஷமிக்க குடும்பம் அழகிய வானவில் போல் பல வண்ணங்கள் கொண்டு அழகிய நதி போல் ஓடி கொண்டு இருக்கையில் மீண்டும் சரித்திரம் திரும்பிகிறதா என்று நினைக்கும் வகையில் காதலும் அல்லாத திருமணமும் அல்லாது ஓர் இனம் புரியாத வாழ்க்கை பந்தத்தில் இனைகிறான் நம் ருத்ரன்.



இவ்வாழ்க்கை பிற்காலத்தில் அவனுக்கு என்ன என்ன விசித்திரங்களையும், பரிசுகளையும், வலிகளையும், இன்பத்தையும் தரவிர்கிறது என்று அறிந்தும் அறியாமல் அவளின் கைகோர்த்தான் ருத்ரன் காளிங்கராயன் ஆர்.கே.(R.K.)



மீண்டும் ஓர் காதல் வேள்வியில் விழும் தெவிட்டா தீஞ்சுவை நீயின் ஆட்டம் ஆரம்பம் ஆயிற்று….
சூப்பர்
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top