JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Epilogue-5

Jovi

Member
சில வருடங்களுக்கு பிறகு...
“யதூஊஊஊ..”
“யசோ மாஆஆ ஆ..”
என்று இரு வேறு கோப குரல்கள்..
சோஃபாவில் பேச்சியம்மாள் முத்துக்கருப்பன் இருவரும் யாருக்காக பேசுவது என்ற பாவத்தில் உட்கார்ந்து இருக்க, இவர்கள் மடியில் சித்து (சித்தார்த்தன் காலிங்கராயன்) பாவமாக வாயில் விரலை வைத்து கொண்டு தன் அண்ணன் ருத்ரனின் முகத்தை பார்த்து கொண்டு இருந்தான்.

இது எப்போதும் நடக்கும் நிகழ்வு என்ற பாவத்தில் யசோ தன் மகளுக்கு வேறு ஆடை மாற்றி கொண்டு இருந்தாள்...

"யது எனக்கு ஒரு பதில் சொல்லு"
"யசோ மா முதலில் எனக்கு பதில் சொல்லுங்க " என்று யசோவின் அத்துவும் ருத்துவும் அவளிடம் பஞ்சாயத்திற்கு வர,
இது எல்லாவற்றிக்கும் காரணமான மலர்விழி தன் தாத்தா பாட்டி வாங்கி கொடுத்த பொம்மையை வைத்து விளையாடி கொண்டு இருந்தாள்.
"மாப்பிள்ளை நீங்களும் என்ன சின்ன புள்ளையாட்டம் சண்டை போட்டுக்கிட்டு" என்று முத்துக்கருப்பன் ஆத்ரேயனிடம் கேட்க, அவன் "இதுல நீங்க தலையிடாதீங்க மாமா" என்றான்.
"யது இப்போ நீ சொல்ல போறியா இல்லையா? " என்று கேட்க,
"அது எப்படி யசோ மா அப்படி சொல்லுவாங்க?" என்று ருத்து சொல்ல,
"ராசா கடைக்கு போய் தம்பி தங்கச்சி பிறந்தநாளுக்கு பரிசு வாங்கணும்னு சொல்லிப்போட்டு இன்னும் இங்கனயே நின்னுகிட்டு இருக்கீங்களே தங்கம் " என்று கேட்டுக்கொண்டே வந்தார் வள்ளியம்மை..
ஆம் அன்று சித்தார்த்தன் - மலர்விழியின் இரண்டாவது பிறந்தநாள்.
அதற்காக தான் முத்துக்கருப்பனும் பேச்சியம்மாளும் ஆத்ரேயன் வீட்டிற்கு வந்து இருந்தனர்..
தன் தம்பி தங்கையை விட்டு ருத்ரன் அவர்களோடு ஊருக்கு வர மறுத்ததால் குழந்தை பிறந்த இந்த இரண்டு வருடங்களில் அவர்கள் மட்டுமே இங்கு வந்து செல்கின்றனர்.. அதில் இருவருக்குமே வருத்தம் தான் என்றாலும் சித்துவும் மலரும் தாத்தா-அம்மாச்சி என்று இவர்களை சுற்றி சுற்றி வர அந்த வருத்தமும் சற்று பின்தங்கி போயிற்று..
என்ன தான் இரு குழந்தைகளிடமும் பாசமாக இருந்தாலும் பேச்சிக்கு தன் மலரின் மகன் ருத்ரனிடம் மட்டும் கூடுதல் பாசம் தான். முத்துக்கருப்பன் மட்டும் மூன்று குழந்தைகளிடமும் சரிசமாக பாசத்தை காட்டுவார்.
வள்ளியம்மை வந்து சொன்ன பிறகு பஞ்சாயத்தை தற்காலிகமாக கை விட்ட ருத்ரன் தன் தந்தையிடம் "அப்பா வாங்க வாங்க கெஸ்ட்ஸ் லாம் வரதுக்குள்ள நாம போய் குட்டிஸ்க்கு கிபிட் வாங்கிட்டு வந்துரலாம்" என்று கூற அவனும் "ஓகே ருத்து கண்ணா "என்று சொல்லி அவனை தூக்கி கொண்டு காருக்கு விரைந்து சென்றான்.
இவ்வளவு நேரம் வரை இருவரும் சிலிர்த்து கொண்டு சண்டை போட்டனர் என்று சத்தியம் செய்தாலும் எவரும் நம்ப மாட்டார்கள்..
மாலை விழா ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தது..தூத்துகுடியே திரண்டு வந்து இருந்தது ..யசோவின் வளைகாப்பை ஊர் அறிய சிறப்பாக செய்ய முடியவில்லை என்ற மனசுணக்கம் ஆத்ரேயனுக்கு இன்னமும் உண்டு, அதனாலேயே பிள்ளைகள் மூவரின் பிறந்தநாளையும் வெகு சிறப்பாக கொண்டாடி தீர்த்துவிடுவான்.
யசோ எவ்வளவோ சொல்லியும் இதை மட்டும் அவன் கேட்டு கொள்வது இல்லை. விழா கொண்டாட்டங்கள் இனிதே முடிவுற, வள்ளியம்மை அனைவரையும் ஒன்றாக அமர செய்து திருஷ்டி கழித்தார்.
ஆத்ரேயன், முத்துக்கருப்பனிடம், "அப்புறம் மாமா எப்போ இங்க வரீங்க?" என்றான்.
முத்துக்கருப்பன், "ஊரில் உள்ள நிலம் நீச்சு சொத்துக்கள் எல்லாவற்றையும் விற்க ஏற்பாடு செய்தாச்சு மாப்பிள்ளை. இன்னும் சில சில்லறை வேலைகள் மட்டுமே பாக்கி இருக்கு. அதுவும் இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசத்துல முடிஞ்சுரும். அப்புறம் இங்கே வந்துருவோம்" என்றார்..
"இரண்டு பேரும் ருத்ரனோட குட்டி பாப்பாஸ். இனி ருத்ரன் தான் இவங்களை பார்த்துக்க போறான்" என்று ஆத்ரேயன் சொன்ன நாளில் இருந்து ருத்ரன் தன் தம்பி தங்கையை விட்டு எங்கும் நகருவதில்லை..
அதனால் பேச்சி முத்துக்கருப்பனுடன் ஊருக்கு வர முடியாது என்று சொல்லி விட அவர்கள் மட்டுமே இங்கு வந்து போய் கொண்டு இருக்கின்றனர்.
முத்துக்கருப்பனின் உடல் நிலையும் முன் போல் இல்லை என்பதால் பேரனுடனேயே தங்கிவிட முடிவெடுத்துள்ளனர். இதில் பேச்சிக்கு மட்டும் சிறு வருத்தம்..
சித்து மலரை விட ருத்ரனை வெகுவாய் தாங்கும் யசோவை பார்த்த பிறகு பேச்சியம்மாளுக்கும் அவளின் மேல் இருந்த வெறுப்பு மெல்ல மெல்ல குறைய தொடங்கியது.
ஆரம்பத்தில் ருத்ரன் தங்களோடு ஊருக்கு வர மறுத்ததில் கோபம் தான் பேச்சிக்கு..பேரனுக்காக இங்கு தங்கி போக வர சித்து மலர் இருவரும் தங்கள் அண்ணனைப் பார்த்து அம்மாச்சி என்று அழைக்க சற்று மனம் நெகிழ்ந்து தான் போனது அவருக்கு.

ஆத்ரேயனுடன் காதலில் கலந்து திளைத்து இரட்டை குழந்தைகள் பெற்றாலும் தன் முதல் குழந்தை ருத்ரனின் மேல் அளவு கடந்த பாசம் தான் யசோவிற்கு.. பின் அவனால் தானே அவளின் அத்துவை மீண்டும் பார்க்க முடிந்தது.
குழந்தைகள் பிறந்த பிறகு தன்னுடன் ஒட்டிக் கொண்ட ருத்ரனை பிறகு அவள் பிரியவே விடவில்லை.. அவ்வப்போது விலகி நின்றாலும் யசோவின் தாய் பாசம் ருத்ரனை அவளிடத்தில் மீண்டும் கொண்டு வந்து சேர்த்தது..
இதில் வள்ளியம்மைக்கு தான் மிகுந்த மகிழ்ச்சி..
ருத்ரன் யசோவை விட்டு விலகி இருந்த பொழுது அவள் துடித்த துடிப்பையும் அழுகையையும் பார்த்து மணம் நொந்தவர் ஆயிற்றே..

பேச்சியும் யசோ ருத்ரனை கவனித்துக் கொள்ளும் பாங்கினை கண்டு சிறிது இறங்கி வந்துள்ளார்..ஆனாலும் அவ்வப்போது குத்தல் பேச்சுக்கள் வரும்.. யசோ எப்பொழுதும் போல கண்டு கொள்வதில்லை..
பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் அனைவரும் களைத்து போனதால் அன்று இரவு சீக்கிரமே உறங்க சென்று விட்டனர்..
அழகாக விடிந்த காலை பொழுதில்
"யதூஊஊஊ..."
"யசோமாஆஆஆ..."
மீண்டும் அதே கோபக்குரல்கள்.
"யது நீ சொல்லு இவ என்னோட பூக்குட்டி தானே?" என்று ஆத்ரேயனும், "யசோ மா இவ என்னோட பூக்குட்டி தானே? அப்பா கிட்ட சொல்லுங்க" என்று ருத்துவும் இனிதே காலை பஞ்சாயத்தை ஆரம்பிக்க..
யசோ எப்பொழுதும் சொல்லும் அதே பதிலான, "
நீங்களும் சித்துவும் யாரோட செல்லக்குட்டிங்க?" என்று கேட்டாள்.
"நானும் தம்பியும் யசோமாவோட செல்லக்குட்டிங்க" என்றான் துள்ளலாக..
நான் யாரோட யசோ?
நீங்க உங்க அத்துவோட யது என்றான் சிறு சிரிப்புடன்..

அப்பா? என்று கேள்வியாக நிறுத்த..
பட்டென்று பதில் வந்தது பிள்ளைகள் மூவரிடமும் இருந்து அப்பா மலர் அம்மாவோட மாமூ என்று..
அப்போ பாப்பா யாரோட பூக்குட்டி? என்று கேட்டாள்..
மூன்று பிள்ளைகளும் ஒரே குரலாக பாப்பா மலர் அம்மாவோட பூக்குட்டி என்றனர்.
இதை கேட்டு கண் கலங்கி நின்றனர் பேச்சியும் முத்துகருப்பனும்..
தான் பெற்ற குழந்தைகளுக்கும் மலரை அம்மா என்று அடையாளப்படுத்திய யசோவை வாஞ்சை வழிய பார்த்தனர்.
பேச்சிக்கு தாங்கள் இங்கு வந்து தங்குவதில் இருந்த சிறு சுணக்கமும் முழுவதுமாக விலகியது.

"தெனுமும் இதே கேள்வி தான் ராசாவும் கேக்குறது நீயும் அதே பதிலைத் தான் சொல்லுற தாயி" என்று வள்ளியம்மை யசோவிடம் செல்லமாக நொடித்துக் கொள்ள, "அது நேத்தைக்கு இது இன்னைக்கு" என்று டீவியில் பார்த்த வடிவேல் காமெடி காட்சி போலவே ருத்ரன் பதில் கூற எல்லோருமே பொங்கி சிரித்தனர்.

ஒரு குழந்தையை கூட பெற முடியாத மலரை அம்மா என்று அழைக்கும் மூன்று முத்துக்கள்.. அரூபமாக இருந்து மலர் இதனை கண்டு கண்டிப்பாக மகிழ்வாள் . இந்த குடும்பத்தின் மகிழ்ச்சி என்றும் இதே போல் நிலைக்கும் என்ற நம்பிக்கை உடன் விடைபெறுவோம்..
சூப்பர்
 
Suji

New member

Nice ending.....
 
Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top