JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

Episode 17 & 18

அத்தியாயம் 17 :
தமிழ் ஸ்டாஃப் ரூம் வந்த போது, செழியன் இரண்டாமாண்டு முதுகலை மாணவர்களின் வகுப்பிற்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தான்.
"டேய் மச்சி" என்ற கூவலுடன் உள் நுழைந்தவனை துறை தலைவர் என்ன என்பதை போல் பார்க்க, "சாரி சார்" என்றவன் தனது இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.
சிறு சிரிப்புடன் தமிழை பார்த்துக்கொண்டே செழியன் வெளியேற, தமிழ் ஏதோ வாயசைத்தான்.
"என்ன தமிழ் சரியாக கேட்கல." செழியன் வேண்டுமென்றே சத்தமாகக் கேட்க, துறை தலைவர் தமிழை நிமிர்ந்து பார்த்தார்.
அதில் தமிழ் செழியனை பார்த்து தலைக்கு மேல் கை உயர்த்தி பெரிய கும்பிடாகப் போட்டான்.
அவனின் செயலில் அதிகமாக சிரிப்பு வந்தபோதும் வகுப்பிற்கு தாமதமாவதை உணர்ந்த செழியன் "இந்த ஹவர் முடிஞ்சதும் பிரேக் தானே, கேன்டின் வா பேசிக்கலாம்" எனக்கூறிச் சென்றான்.
செழியன் அறையை கடக்கும் போது எதிரே மாலதி வந்தார். அவரும் வேதியியல் துறையைச் சார்ந்தவர் தான். இளங்கலை மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கின்றார்.
அவர் எதிரே வந்த செழியனை உரசுவதை போல் செல்ல, நொடியில் சுதாரித்த செழியன் தன் உடலை வளைத்து அவரை கண்டு கொள்ளாது சென்று விட்டான்.
அதில் சுணங்கிய மனதினை தேற்றிய மாலதி, செல்லும் செழியனையே ஏக்கமாக பார்த்தார்.
"அவர் தான் உன்னை கண்டுக்கவே மாட்டேன் என்கிறாரே...! பிறகும் வளிய ஏன் செல்கிறாய்?"
இந்நிகழ்வினை பார்த்துக்கொண்டே உள் நுழைந்த மற்றொரு பேராசிரியரான சாந்தி மாலதியிடம் கேட்க,
"அவரு இப்படி விலகி போவது தான் என்னை நெருங்கச் சொல்கிறது" என்றாள் மாலதி.
சாந்தி, "எனக்கென்னவோ அவருக்கு ஆளிருக்குமோன்னு தோணுது மாலதி. வீணாக கற்பனையில் வாழ்ந்து கஷ்டப்படாதே."
இந்த உரையாடல் சிறு தடுப்பிற்கு பின்னால், ஆண்கள் பகுதியிலிருந்த தமிழுக்கு நன்றாகவே கேட்டது.
சட்டென தலையை நீட்டி அவர்களை பார்த்தவன், "சாந்தி மேடம் சொல்லிய அட்வைஸை நல்லா கேட்டுக்கோங்க மாலதி மேடம்" என்ற தமிழ்... "செழியனுக்கு நீங்க செட்டாக மாட்டீங்க" என்றான்.
அதில் மாலதிக்கு கோபம் எட்டி பார்த்தது.
"தமிழ் சார் நீங்க உங்க வேலையை பாருங்க." வெடுக்கெனக் கூறினாள் மாலதி.
"நல்லது சொன்னால் யாரு கேட்கிறார், சிலர் பட்டால் தான் புரிந்துகொள்வார்கள்." தனக்கு சொல்லிக்கொள்வதை போல் மாலதிக்கு கொட்டு வைத்த தமிழ் தன் வேலையை பார்க்கலானான்.
முதலாமாண்டு வகுப்பினை செழியன் கடந்து செல்லும்போது "ஹேய் தீபா கியூட்டி பை டி... இன்னைக்கு அந்த பிஸ்தா க்ரீன் சர்டில் எக்ஸஸ் அழகா இருக்கிறார் டி" என்று ஜொள்ளுவிட,
"இவ(ள்) வித்தியாசமே இல்லாமல் பார்க்கிற எல்லாத்தையும் ரசிக்கிறங்கிற பேரில் சைட் அடிச்சிட்டு" என்று தீபா தலையில் தட்டிக்கொள்ள,
"யாரை இவள் வந்ததிலிருந்து கியூட்டின்னு சொல்லுகிறா(ள்) என்று சன்னல் வழியாக எட்டிப்பார்த்த நறு, அது செழியன் என்றதும் ஏனென்றே காரணமில்லாமல் ரம்யாவின் தலையில் கொட்டினாள்.
"என்னை இப்போ எதுக்குடி கொட்டுன?" வலித்த தலையை தேய்த்துக்கொண்டே ரம்யா கேட்க, என்ன சொல்வதென்று தடுமாறிய நறு... "அது... அது வந்து, ஒரு ப்ரொபஸரை போயிட்டு இப்படி பார்க்க அசிங்கமாயில்லையா" என்றாள்.
"அடிப்போடி இவளே, கியூட்டி பை கிளாஸுக்குள் வரட்டும் அப்புறம் சொல்லு. நம்ம கிளாஸ் பொண்ணுங்க விடுற ஜொள்ளுல, இங்க இருக்க பெஞ்ச், சேர் எல்லாம் நீச்சலடிக்கும்."
ரம்யா சொல்லியதற்கு தீபா ஆமென்பதை போன்று தலையாட்டினாள்.
"புதுசா வந்த பிள்ளையையும் கெடுக்காதீங்க" என்று அந்நேரம் ஆண்கள் பக்கமிருந்து குரல் கேட்க,
"உனக்கென்ன கடுப்பு ஹரிஷ்... நீ அழகா இருந்தால் சொல்லாமலே உன்னை பொண்ணுங்க பார்ப்பாங்க" என்ற தீபா அவனை ஒரு விரல் நீட்டி மிரட்டினாள்.
"இந்த செழியன் சார் வந்ததிலிருந்து ஒரு பொண்ணுங்க கூட நம்மள பார்க்க மாட்டேங்குதுங்க மச்சான்" என்று ஹரிஷ் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு தனக்கு அருகிலிருந்த நண்பனிடம் சத்தமாகக் கூற,
"யூஜி படிச்சப்போ கூட நம்மள யாரும் இங்க பார்க்கல மச்சான்" என்று ஹரிஷை பார்த்து அவன் நண்பன் காலினை வார, பெண்கள் பக்கமிருந்து கொள்ளென்று வந்த சிரிப்பு சத்தம் அவ்விடத்தையே அதிர வைத்தது.
நறுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.(செழியா உன் நிலைமை ரொம்ப கவலைக்கிடமாகிடும் போலிருக்கே...!)
வகுப்பு முடிந்தது பத்து நிமிட இடைவேளையில் நறு செல்வத்திற்கு அழைப்பு விடுத்தாள்.
"என்ன நறு மதியம் ஹாஸ்டல் வந்த அப்புறம் போன் வரும் எதிர்பார்த்தேன்." அழைப்பை ஏற்றதும் செல்வம் கூற,
"அப்போ எல்லாமே பிளான் பண்ணி பண்ணிருக்க" என்று நறு கோபத்தில் சொற்களை அழுந்தக் கூறினாள்.
"எஸ்." சற்றும் அசராது அவன் உண்மையை ஒப்புக்கொள்ள, செல்வத்தினை குனிய வைத்து குத்த வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
"என்ன நினைச்சு நீ இதெல்லாம் பண்ற?"
"நீ எனக்கு அண்ணியா வரணும் நினைச்சு தான்."
செல்வம் அவ்வாறு சொல்லியதும் அவளுக்கு கண்ணீர் கண்களில் முட்டி நின்றது.
"மாமா மனசுல நான் இல்லாதபோது இதெப்படி நடக்கும் செல்வா, இன்னொரு முறை என்னால் யாசித்து நிற்க முடியாது." தான் வகுப்பில் இருக்கிறோம் என்பதையும் மறந்து அழுதுவிட்டாள்.
திருமணத்திற்கு முதல்நாள் இரவு, பெண்ணழைப்பிற்கு முன் தனது அறையில் செழியனிடம் தான் காதலை சொல்லியதும், கண்ணீர் சிந்தியதும்... அப்போது கூட "உன்னை நான் அப்படி பார்த்ததில்லை" என்று சாதாரணமாக சொல்லிய செழியனின் குரலும் அந்நேரம் நினைவில் எழ, மேலும் அவளின் கண்ணீர் அதிகரித்தது.
இடைவேளை என்பதால் மாணவர்கள் யாரும் வகுப்பில் இல்லை. கேன்டின் சென்றிருந்த தீபாவும், ரம்யாவும் நறுவிற்கும் சேர்த்து பழச்சாறு வாங்கி ஒன்றாக குடிக்கலாம் என்று வகுப்பிற்கு வர, காதில் அலைபேசியை வைத்துக்கொண்டு அழும் நறுவியை கண்டு பதறி விட்டனர்.
தனது தோழிகளை கண்டதும் சுயம் மீண்ட நறு, அழும் விழிகளை துடைத்துக்கொண்டு, அவர்களை பார்த்திடாதது போல் பேச்சினை நீட்டித்தாள்.
"என்ன பண்ணாலும் நீ நினைப்பது நடக்காது" என அலைபேசியிலிருக்கும் செல்வத்திடம் மொழிந்தாள்.
"உனக்கு ஞாபகம் இருக்கா நறு...!" எனக்கேட்ட செல்வம் கொஞ்சம் இடைவெளி விட்டு தன்னுடைய பேச்சினை தொடர்ந்தான்.
"மாமாவும் என்னை விரும்புறாருன்னு நினைக்குறேன்னு, நீ அன்னைக்கு ஏன் சொன்ன... உன் உள்ளுணர்வு சொல்வது தப்பா இருக்காதுன்னு உனக்கு நம்பிக்கை இருக்கு இல்லையா, அதனால் கொஞ்சம் உனக்காக யோசி... இப்போவாவது உன்னுடைய காதலுக்காக கொஞ்சம் போராடி பாரு."
"அப்புறம் எதற்கு யாருக்கும் தெரியாமல் ஓடி போனாராம்?" செல்வம் சொல்லிய மாதிரி இருக்குமோ என நினைத்தவள் செழியன் சொல்லாது சென்ற காரணத்திற்கான விளக்கம் தனக்கு சாதகமாக இருந்திடாதா எனும் நோக்கத்தில் கேட்டாள்.
"அதை நீ தான் கண்டு பிடிக்கணும்" என்ற செல்வம் சொல்லிக்காமல் வைத்துவிட்டான்.
நறு அலைபேசியை பெஞ்சில் வைத்ததும் அவளின் இருபுறமும் வந்தமர்ந்த தோழிகள் இருவரும் என்னாச்சு என்று வினவ,
"வீட்டிலிருந்து போன், சோ வீட்டு ஞாபகம்" என்று சமாளிக்க, நறுவின் அலைபேசியில் தகவல் வந்ததற்கு அடையாளமாக திரை ஒளிர்ந்தது.
ஒளிர்ந்த அலைபேசியின் திரையை பார்த்து ரம்யா தனது முட்டைகண்ணை விரித்தாள். விட்டால் அவளின் கருவிழிகள் தெறித்து வெளியே உருண்டு விடும்.
"ஹேய் என்னாச்சு ரம்ஸ்."
தீபாவின் கேள்விக்கு ரம்யா நறுவின் அலைபேசியை எடுத்து அவளின் கண் முன் காட்ட, அதில் செல்வம் நடுவிலிருக்க அவனுக்கு இருபுறமும் செழியனும் நறுவும் நின்றிருக்கும் புகைப்படம் அழகாய் காட்சியளித்தது.
"நறு..." என விளித்த தீபாவும் தன் ஆச்சர்யத்தை வெளிப்படுத்த, 'இதனை எப்படி சமாளிப்பது' என்று நறு விழித்தாள்.
****
"சொல்லு மச்சான் என்கிட்ட என்ன பேசணும்."
இரண்டு தேநீர் வாங்கி வந்து தனக்கு முன்னால் அமர்ந்த தமிழிடம் செழியன் கேட்டான்.
"பர்ஸ்ட் இயர் கிளாசில்..."
"விழி இருந்தாளா?"
தமிழ் சொல்லி முடிப்பதற்குள் செழியன் அவன் சொல்ல வந்ததை சொல்லி முடித்திருந்தான்.
"அப்போ உனக்கு முன்னாடியே தெரியுமா?"
"காலையில் இங்கு வந்த பிறகுதான் தெரியும்" என்ற செழியன், இளங்கலை மாணவன் ஒருவன் முதுகலை மாணவியை ரேக் செய்ததையும் அவனை கண்டித்து விட்டு திரும்பும் போது தற்செயலாக நறுவை பார்த்து அதிர்ந்ததையும், அடுத்த நொடியே அவளை காணாதது போல் வேறு வழியில் திரும்பி வந்ததையும் கூறினான்.
நறு செழியனை பார்த்து அதிர்ந்து நின்றதால், செழியன் தன்னை பார்த்ததை அவள் அறியவில்லை.
"ஏன் மச்சான்... போய் பேசியிருக்கலாமே...! அவளை பார்க்கணும் நேற்று எப்படி துடிச்ச" என கேட்டான் தமிழ்.
"எதுக்கு உன்னை யாருன்னே தெரியாத மாதிரி நடந்து கொண்டாளே... அந்த மாதிரி என்னையும் பார்த்து வைக்கிறதுக்கா?
யாரோ மாதிரியான அவளுடைய பார்வையை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது தமிழ்.
இப்போ அவ(ள்) என் பக்கத்துல இருக்கா(ள்). எனக்கு அதுவே போதும்" என்றான் செழியன்.
"அதுக்காக அவளை பார்க்காமல் இப்படி ஒதுங்கியே போய்டுவியா?"
செழியன் என்ன நினைக்கிறான் என்று தமிழுக்கு புரியவில்லை.
"நான் ஒதுங்கிப் போக போக என் விழி என்னைத் தேடி வருவா(ள்) டா. இதுதான் காதலோடு தன்மை. ஒன்னு வேணான்னு ஒதுங்கிப்போனா அது நீ தான் வேணுன்னு கிட்ட வரும்" என்றவன் உதட்டில் உதிர்த்த சிறு புன்னகையோடு இருக்கையிலிருந்து எழுந்துக்கொள்ள,
"எங்கடா?" என்று வினவினான் தமிழ்.
"பிரேக் ஓவர் டா... விழி கிளாஸ்க்கு தான் போகிறேன் வறீயா?"
"காலையில் வாங்குனதே போதும்" என்ற தமிழ், நீ போ என்பது போல் சைகை செய்தான்.
****
"சொல்லு நறு செழியன் சார் உனக்கு சொந்தமா?"
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களாக தீபா நறுவிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றாள். ஆனால் நறுவியிடமிருந்து பதில் தான் கிடைக்கவில்லை.
"என்னடி நீ, பேயறைஞ்சவ மாதிரி உட்கார்ந்திருக்க கேளுடி அவகிட்ட." தீபா ரம்யாவை துணைக்கு அழைத்தாள்.
"அவள் முதலில் க்யூ... ச்ச, செழியன் சார் அவளுக்கு என்ன உறவுன்னு சொல்லட்டும். நான் அதுக்கு அப்புறம் பேசுறேன்" என சொல்லிய ரம்யா நறுவியை விட்டு கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள்.
பொருத்து பார்த்த தீபா நறு வாயினை திறக்க போவதில்லை என உணர்ந்து, தானே ஒரு உறவை யூகித்து வினவினாள்.
"உன்னோட அண்ணாவா அவர்?"
வேகமாக மறுத்த நறு, "என் மாமா" என சொல்ல, ரம்யா பெஞ்சின் மீதே மயங்கி விழுந்ததை போல் பாவனை செய்ய... நறுவும் தீபாவும் அவளை பிடிக்க முயலும் போது சரியாக வகுப்பிற்குள் நுழைந்தான் செழியன்.
மாணவர்கள் அனைவரும் எழுந்து நிற்க, அவர்களை உட்கார அனுமதித்தவன் உற்சாகமாக பாடம் எடுக்கத் துவங்கினான்.
புத்தகம், கரும்பலகைத் தாண்டி அவனின் கவனம் வேறெங்கும் இல்லை.
தன் விழியை பார்க்கத் துடித்த விழிகளை முயன்று கட்டுப்படுத்தியவன் மூன்றாவது பெஞ்சின் பக்கம் தன் முகத்தை கூட திருப்பவில்லை. கேள்வி நேரத்தின் போதும் ஆண்கள் பக்கமே நின்றிருந்தான்.
"இன்னைக்கு என்னடி செழியன் சார் நம்ம கேர்ள்ஸ் சைடு திரும்பவே இல்லை."
"அட அதானே...!"
"ஹேய் எவளாவது ஜொள்ளு விடுறேன்னு ஏதாவது ஓவரா வாலாட்டீட்டீங்களாடி?"
"ஹேய் ரம்யா... உன்னைத்தான், என்ன பண்ண?"
மாணவியர் தங்களுக்குள் ஆளாளுக்கு முணுமுணுத்துக்கொள்ள, இறுதியாக ஒரு மாணவி ரம்யாவை கேட்டிருந்தாள்.
வேகமாக இல்லையென தலையை ஆட்டிய ரம்யா, நறுவியின் பக்கம் திரும்பி "சத்தியமா நான் எதுவும் பண்ணல நறு, அவரு உன் மாமா தெரியாமல் ஏதேதோ பேசிட்டேன். அவருக்கிட்ட போட்டு கொடுத்துடாதடி" என படபடவென்று மொழிந்து மன்றாடினாள்.
செழியன் வந்தது முதல் அவனையே பார்த்திருந்த நறுவிழிக்கு அவனின் பாராமுகம் அவளின் காதல் மனதில் வலியை ஏற்படுத்தியது.
தமிழிடமிருந்து எளிதாக பார்வையை விலக்க முடிந்தவளால் தன்னவனிடம் முடியவில்லை.
செழியன் வகுப்பிற்கு வந்ததும் அவனை ஒரு கை பார்த்திட வேண்டுமென்று தயாராக இருந்தவள், இப்போது அவனின் ஒரு பார்வைக்கு ஏங்கினாள்.
ஏக்கம் வழிய செழியனையே நறு நோட்டமிட்டுக் கொண்டிருக்க, பெண்கள் பேசிய அனைத்தும் அவளின் காதில் விழ செழியனின் மீது கோபம் அதிகரித்தது. அதில் ரம்யாவும் ஏதேதோ உலற நறுவிற்கு எரிச்சலாக வந்தது.
'இவ(ள்) வேறு' என்று நினைத்த நறு ரம்யாவின் வாயினை பொத்தி, "கொஞ்சம் பேசாமல் இரு" என்று மிரட்டும் தோணியில் கூறினாள்.
"பார்த்தியா காலையில் வந்ததிலிருந்து நல்லா பேசிட்டு இப்போ மிரட்டுற, சாருகிட்ட மட்டும் எதுவும் சொல்லிடாத." விட்டால் ரம்யா அழுது விடுவாள் போலிருந்தாள்.
ரம்யாவை மாற்றும் பொருட்டு,
"அய்யய்யோ நீ அஞ்சலி பாப்பாவா... நீ பேசுறதை வச்சு நான் கூட உன்னை வாயடின்னு நினைச்சேன் நீ என்னவோ இதுக்கு போயி பயந்துட்டு இருக்க" என்று நறு அவளை சீண்டினாள்.
'கெத்தை அப்படியே மெயின்டெயின் பண்ணு ரம்ஸ்" என்று தனக்குள் கூறிக்கொண்ட ரம்யா, "ச்ச... ச்ச... நானெல்லாம்..." என்று ஆர்வத்தில் உரக்க பேசிட, ரம்யா தன் வாக்கியத்தை முடிப்பதற்குள்,
"நறுவிழி அண்ட் ரம்யா... கெட் அவுட் ஆஃப் மை கிளாஸ்" என்று அழுத்தமாகக் கூறினான்.
எழுந்து நின்ற ரம்யா "அது வந்து சார்" என ஏதோ சொல்ல முயல்கையில் கை நீட்டித் தடுத்தவன், "நோ நீட் எஸ்பிலநேஷன்" என்று வெளியே கை காட்டினான்.
ரம்யா வெளியே செல்ல அடி வைக்க, "உங்களோட பேசிட்டிருந்த உங்க பிரண்டையும் கூட்டிட்டு போங்க... கிளாஸ் கவனிக்க விருப்பமில்லைன்னா கிளாஸ்க்கே வராதீங்க" என்றான்.
இவ்வளவு நேரம் தன் மீது பார்வையை கூட திருப்பாது இருந்தவன், இப்போது இப்படி பேசவும் அவனை முறைத்துக்கொண்டே எழுந்து வந்தவள்,
செழியனைத் தாண்டி செல்லும்போது "ஐ லவ் யூ சார்" என்று அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறிச் சென்றாள்.
அவள் சொல்லியதில் அவன் தான், தான் படித்த தெர்மோடயணமிக்ஸினை மொத்தமாக மறந்தவனாக திருத்திருத்து நின்றான்.
தொடரும்...


*****


அத்தியாயம் 18 :
வகுப்பை விட்டு வெளியில் வந்த நறு சுவற்றில் சாய்ந்து கையினை கட்டிக்கொண்டு சுவாரஸ்யமாக வேடிக்கை பார்க்கத் துவங்க, அருகிலிருந்த ரம்யா முட்டை கண்ணை விரித்து நறுவையே பார்த்திருந்தாள்.
"இப்போ எதுக்கு என்னையே பார்த்திட்டு இருக்க?"
நறுவின் கேள்விக்கு "ஆங்... ஒன்னுமில்லை" என்ற ரம்யா "அப்படியிருக்காது"என சொல்லிக்கொண்டு தன் தலையில் தட்டிக் கொண்டாள். அடுத்த நொடி "எனக்கு கேட்டுச்சே" என்று மீண்டும் ஆராய்ச்சியில் இறங்கினாள்.
இரண்டு மூன்று முறை குறுக்கும் நெடுக்குமாக நடந்த ரம்யா அருகிலிருந்த தூணில் தன் தலையை தெரிந்தே முட்டிக்கொண்டாள்.
"எதுக்கு இப்படியெல்லாம் செய்யுற?"
பதில் சொல்லாது நறுவின் அருகில் வந்து அவளின் முகத்தினையே உற்று பார்த்தவள்,
"எனக்கு ஒரு உண்மை தெரியணும்...!"என்றாள்.
"என்ன உண்மை?"
"நீ மொறைக்க கூடாது, அடிக்க கூடாது."
நறு மாட்டேன் என்பதை போன்று இருபக்கமும் தலையசைத்து "கேளு" என்றாள்.
"நீ வெளியில் வரும்போது சாருகிட்ட என்ன சொன்ன?" என்று கேட்டவள் முன்னெச்சரிக்கையாக இரண்டு அடி தள்ளி நின்றாள்.
"உனக்கு என்ன கேட்டுச்சோ அதான் சொன்னேன்."
"எனக்கு என்ன கேட்டுச்சுன்னு உனக்கு எப்படித் தெரியும்?"
"ரெண்டு இஞ்ச் கேப்பில் அவருக்கே (செழியன்) கேட்கும்போது, என்னை ஒட்டிக்கிட்டே வந்த உனக்கு கேட்குமென்று எனக்குத் தெரியாதா...!"
"அப்போ நீ நிஜமாவே அதை சொன்னியாடி..." தன்னால் எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு ராகம் இழுத்தாள் ரம்யா.
"காலையில் என்ன என்னவோ சாரையே சைட் அடிக்குற அப்படி இப்படின்னு பேசுன, இப்போ நீ மட்டும் என்ன பண்ற?" இனி தன்னால் தனது கியூட்டி பையினை சைட் அடிக்க முடியாதே என்கிற ஆதங்கத்தில் ரம்யா வினவினாள்.
"அவரு இப்போ தான் எனக்கு சார். ஆனால் இருபத்தியோரு வருஷமா அவரு எனக்கு மாமா... சோ க்ளோஸ் யூர் டோர்" என்ற நறு தனது பதிலில் வாய் பிளந்து நின்ற ரம்யாவின் வாயினை தன் கை கொண்டு மூட, வகுப்பு முடிந்து வெளியில் வந்தான் செழியன்.
"பாவி... என்னையே ஒரு நிமிடம் திணற வச்சிட்டாளே" என்று புலம்பியவாறு வெளியில் வந்த செழியனின் காதில் இறுதியாக நறுவி பேசியது நன்றாக ஒலிக்க, அவனின் இதழ் மாந்தகாசமாய் புன்னகையை சிந்தியது. இருப்பினும் அதனை மறைத்தவனாக,
"வெளியில் வந்தும் அரட்டை தான்..." என்று கோப பாவனையில் மொழிந்து, "கிளாஸ்க்குள்ள போங்க, இனியாவது வகுப்பு நேரத்தில் அரட்டை அடிக்காமல் இருங்கள்" என்று அவன் சொல்லிக்கொண்டிருக்க, நறு அவனின் விழிகளை சந்தித்து பட்டென்று தனது ஒற்றை கண்ணை அடித்தாள். அதில் அருகிலிருந்த ரம்யாவுக்கு பயத்தில் உடல் நடுங்கியது.
அவளின் செயலில் "ராட்சசி அவளோட வேலையை ஆரம்பிச்சிட்டாள்" என்று மனதோடு பேசியவன் தன் முகத்தில் புதிதாய் தோன்றியிருக்கும் வெட்கத்தை மறைப்பதற்காக சட்டென்று திரும்பி நடக்கத் தொடங்கினான்.
"ஹலோ சார்." சற்று சத்தமாக அவள் அழைக்க, வெளியிலிருந்த ஒரு சில மாணவர்கள் இவர்களை திரும்பி பார்த்தனர்.
'அடங்கமாட்டாள் போலிருக்கே' என்று முணுமுணுத்தவாறு நடையை நிறுத்தி நறுவின் அருகில் திரும்பி வந்த செழியன், அங்கு நின்றிருந்த மாணவர்களை பார்க்க, அவர்கள் அனைவரும் தங்கள் வேலைகளை கவனிக்க நகர்ந்து விட்டனர்.
நறுவியிடம் என்ன என்பதை போல் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
"கிளாசில் போர்டு பக்கமே திரும்பி நின்னுட்டு இருந்தீங்க, அப்புறம் பாதியிலே வெளிய அனுப்பிட்டீங்க... அதான் உங்களை சரியா பார்க்க முடியல, இப்போ பார்த்துட்டேன் போங்க" என்றாள்.
எவ்வளவோ முயன்றும் செழியனால் அவளை முறைக்க முடியாது போக, அவளை கடிந்து கொள்ளவும் மனமில்லாமல் சிறு தலையசைப்புடன் சென்றுவிட்டான்.
அவன் தன்னை எதுவும் சொல்லாமல் சென்றதே நறுவிக்குள் 'அது உண்மையாக இருக்குமோ' எனும் எண்ணத்தை ஏற்படுத்தியது.
"சீக்கிரம் கண்டு பிடிப்போம்."
நடப்பதையெல்லாம் பார்த்திருந்த ரம்யாவுக்கு படப்படப்பாக வந்தது. வியர்த்து கொட்டியது. செழியன் சென்றதும் வேகமாக வகுப்பிற்குள் வந்தவள், தீபாவின் அருகில் அமர்ந்தாள். அப்போதுதான் தண்ணீர் குடிக்கலாமென்று தீபா தண்ணீர் பாட்டிலை வாயின் அருகில் கொண்டு சென்று பாட்டிலை சாய்க்க இருந்த சமயம், வெடுக்கென அவள் கையிலிருந்து பாட்டிலை பிடுங்கி தன் வாய்க்குள் சரித்தாள் ரம்யா. முழு பாட்டில் நீரையும் காலி செய்த பிறகே அவள் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள்.
"ஹேய் என்னடி ஆச்சு, உன் கியூட்டி பை வெளிய வந்து நிறையை திட்டிட்டாரா?" சிரித்துக்கொண்டே கேட்டாள் தீபா.
தன் வாயில் விரலை வைத்து அதைப்பற்றி எதுவும் பேசாதே எனும் விதமாக ரம்யா மௌனமொழி பேச, அவளின் அருகில் வந்து அமர்ந்தாள் நறு. அவ்வளவுதான் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கியதை போல் துள்ளி குதித்து எழுந்தவள் தீபாவை நறுவின் பக்கம் தள்ளிவிட்டு தீபாவிற்கு அந்தப்பக்கம் சென்று அமர்ந்து கொண்டாள் ரம்யா.
"என்னடி குரங்கு மாதிரி தாவிட்டே இருக்க?"
"இப்போவாவது உன் பிரண்ட் குரங்குன்னு ஒத்துக்கிட்டேயே" என்று ஹரிஷ் தீபாவின் கேள்விக்கு சத்தமாக பதிலளிக்க, மொத்த கூட்டமும் ரம்யாவை திரும்பி பார்த்தது.
"வாயை மூடிட்டு பேசாமல் போயிடு" என்று ரம்யா ஒரு விரல் நீட்டி ஹரிஷை சொல்ல...
"இப்போ அவங்(ன்)கிட்ட எதுக்கு ஏறுற" என்று ஹரிஷ்க்கு ஆதரவாக தீபா பேசினாள்.
"என்ன அவனை சொன்னா நீ வர" என்று அதற்கும் தீபாவிடம் காய்ந்தாள் ரம்யா.
"இப்போ உனக்கு என்ன தான் பிரச்சினை ரம்ஸ்?" நறு நேரடியாக ரம்யாவிடம் வினவ அவள் பதில் சொல்லுவதற்கு முன் அடுத்த வகுப்பிற்கான ஆசிரியர் வந்ததால் அவர்களின் பேச்சு தடைபட்டது.
அதற்கு அடுத்து வந்த வகுப்புகளும் அவர்களுக்குள் பேச்சின்றி அமைதியாக கழிய கல்லூரி முடிவுக்கான மணி ஒலித்தது.
ரம்யா எதுவும் பேசாது வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாக, "என்னிடம் பேசமாட்டியா ரம்ஸ்" என்று பாவமாக அவளின் கை பிடித்து வினவினாள் நறுவிழி.
"நீ பண்ண வேலை மட்டும் யாருக்காவது தெரிஞ்சுது, உன்னோட சுத்துற பாவத்துக்கு என்னையும் வச்சி நல்லா செஞ்சிடுவாங்க. அவரு ப்ரொபஸ்ஸர் டி."
ரம்யா சொல்லியது விளங்காமல் நறு மற்றும் ரம்யாவை குழப்பத்துடன் பார்த்திருந்தாள் தீபா.
"அப்போ சொன்னது தான் இப்பவும். அவர் முதலில் எனக்கு மாமா, அப்புறம் தான் சாரு மோரெல்லாம்." அலட்டிக் கொள்ளாமல் கூறினாள் நறு.
"கொஞ்சம் புரியுற மாதிரி பேசுறீங்களா...!" அவர்கள் பேசுவது சுத்தமாக புரியாமல் தீபா கத்தியே விட்டாள்.
"இவ(ள்) செழியன் சாருக்கு..."
"ஹேய் நிறுத்து நிறுத்து... செழியன் சாரா, இது எப்போல இருந்து. உன் கியூட்டி பை என்னாச்சு?" ரம்யா சொல்ல வந்ததை பாதியிலேயே நிறுத்தி தனது முக்கிய சந்தேகத்தை தீபா கேட்க,
"இப்போ இது ரொம்ப முக்கியம்" என ரம்யா, தீபா மீது எரிந்து விழுந்து,
"இவ(ள்) செழியன் சாருக்கு ஐ லவ் யூ சொல்றாடி... அதுமட்டுமில்லாமல் அவரை பார்த்து கண்ணடிக்குறா(ள்)" என்று கூறினாள்.
"என்னடி சொல்லுறா(ள்) இவ(ள்)..." என்று நறுவிடம் கேட்ட தீபா, ரம்யாவிடம் "அவளோட மாமா அவள் லவ் பண்றா(ள்) உனக்கென்ன" எனக் கேட்டாள்.
"அவரு இங்க வொர்க் பண்ற சார் டி" என்ற ரம்யாவை முறைத்த தீபா, "நீ சைட் அடிக்கலாம் அவள் லவ் பண்ண கூடாதா... உனக்கொரு நியாயம் அவளுக்கொரு நியாயமா" என்றாள் தீபா.
"அவர் இங்க மட்டும் தான் சார், மத்த இடத்தில் எல்லாம் எனக்கு மாமா தான். அவரே என் கிளாஸ்க்கு எனக்கு சாரா வருவார்ன்னு எனக்கே இங்கு வந்த பிறகு தான் தெரியும். அதுக்காக என் காதலை மாத்திக்க முடியாது" என்ற நறு தனது தோழி தன்னை புரிந்துகொள்ள மறுக்கிறாளே என்று வருத்தப்பட்டாள்.
ரம்யாவோ அவளின் முகத்தை கவனிக்காது தீபாவிடம் "இவளோட கூட்டு சேர்ந்தால் கண்டிப்பா டிசி கொடுத்து அனுப்பிடுவாங்க... அப்புறம் ஸ்கூல் வாத்தி, என்னை பெத்த பொண்ணுன்னு கூட பார்க்காமல் பிரம்பாலே அடிச்சி தொரத்திடும்" என சொல்லிக் கொண்டிருந்தாள்.
"எனக்காக யாரும் காலேஜ் விட்டு போகவும் வேண்டாம். பிரம்பால் அடியும் வாங்க வேண்டாம். உங்களுக்கு ஏன் கஷ்டம் நானே விலகி இருந்து கொள்கிறேன்" எனக்கூறிய நறு இருவரையும் பாராது விடுதியை நோக்கி சென்றாள்.
"எல்லாம் உன்னால் தான்." ரம்யாவை கடிந்து கொண்ட தீபா நறுவின் பின்னால் ஓட, நறுவின் வருத்தமான குரல் என்னவோ செய்ய ரம்யாவும் தீபாவின் பின் ஓடினாள்.
***
"என்னடா உன் முகத்தில் இன்னைக்கு ஒரு ஒளிவட்டம் தெரியுது?"
தன் இருக்கையில் புன்னகை முகமாக அமர்ந்திருந்த செழியனிடம் வகுப்பினை முடித்துவிட்டு அப்போதுதான் உள் நுழைந்த தமிழ் கேட்க, இன்னும் பிரகாசமாக ஒளிர்ந்தது செழியனின் முகம்.
"என்ன மச்சான் தேஜஸ் கூடிட்டே போகுது."
"என்னடா உலறிட்டு இருக்க?"
"நான் உண்மையை தான் சொல்லுறேன். நீ தான் ஏதோ மறைக்குற." தமிழ் செழியனிடம் குறைப்பட்டுக் கொண்டான்.
"விழி இன்னைக்கு எனக்கு புதுசா தெரியுறா(ள்) டா."
"காதலிக்குற எல்லாரும் சொல்லுற டயலாக் தான்டா இது."
"அதில்லை தமிழ். விழி ரொம்ப அமைதி. செல்வாக்கிட்ட மட்டும் தான் கொஞ்சம் அதிகமா பேசுவா(ள்). என்ன பார்த்தாலே அவளுக்கு பேச்சு வராது. ஆனால் இன்னைக்கு என்னையவே ஒரு நொடி தடுமாற வச்சிட்டாள் டா.
என்கிட்ட பேசவே தயங்குற விழி என்னிடம் அதிகமாக பேசியதே அவளுடைய காதலுக்காகத்தான். அவள் இப்பவும் என்னை காதலிக்குற விழியாக மட்டும் தான் இருக்கின்றாள் தமிழ். அந்த காதலுக்காகத்தான் இந்த மாற்றமுன்னு நினைக்குறேன்" என்ற செழியன் இன்று நறு தன்னிடம் செய்த சேட்டைகளை தமிழிடம் கூறினான்.
"அப்புறம் என்ன மச்சான் உன் காதலை சொல்லி, உடனே கல்யாணம் செய்துகொள்ள வேண்டியது தானே...!"
"நடந்தததில் விழி என் மேல் கோபமா இருக்கா(ள்)டா. அவள் காதலை சொன்னப்போ நான் மறுத்ததால் நான் அவளை காதலிக்குறேன்னா இல்லையாங்குற குழப்பத்தில் அவ இருக்காள் தமிழ்" என்ற செழியன்,
"பார்க்கலாம் மச்சான். நானும் கொஞ்ச நாள் அவளை லவ் பண்ணிக்குறேன். அப்புறம் தான் கல்யாணம் எல்லாம்" என்றான். தன் தந்தையிடம் பேச வேண்டுமென்று நினைத்துக் கொண்டான்.
****
நறு பேசுடி... அவ பண்ணதுக்கு என்கிட்டையும் ஏன் பேசாமல் இருக்க?"
மரத்தடியில் நின்றிருந்த நறுவியின் பின்னால் நின்றுகொண்டு தீபா கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
ரம்யா என்ன பேசுவதென்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டிருந்தாள்.
தீபா ரம்யாவிடம் கண் ஜாடை செய்ய, சிறு தயக்கத்துடன் நறுவின் முன்னால் சென்ற ரம்யா... அவளின் கலங்கியிருக்கும் கண்களை கண்டு பதறியவளாக,
"நறு சாரிடி ஏதோ பயத்தில் அப்படியெல்லாம் பேசிட்டேன்" என தனது மன்னிப்பை வேண்டினாள்.
"நீ மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை ரம்யா... என்னுடைய நிலை என்னவென்று உனக்கெப்படி தெரியும்" என்ற நறு அழும் தனது விழிகளை துடைத்துக் கொண்டாள்.
"இது வெறும் ஈர்ப்பினால் வந்த காதலில்லை ரம்யா. நீ அழகா இருக்குன்னு எல்லாத்தையும் ரசிக்கிறியே அந்த மாதிரி அழகு பார்த்து வந்ததும் இல்லை. இது எப்போ எப்படின்னு எனக்கேத் தெரியாது. என் உயிருக்குள்ள கலந்த ஒன்று இது. உனக்கு அவரு வெறும் சார். ஆனால், எனக்கு என் உயிரே அவர் தான்" என்ற நறு,
"நான் எந்த சூழலில் இங்கு படிக்க வந்தேன்னு உங்களுக்குத் தெரியுமா?" எனக் கேட்டு நடந்த எல்லாவற்றையும் தனது தோழிகளுடன் பகிர்ந்து கொண்டாள்.
தனக்கு விவரம் தெரியாத வயதில் தனக்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்யும் செழியனின் மீதான பிடித்தம், வளர வளர அவளுள் காதலாக மாற்றம் பெற்று அவன் தான் தனது ஒட்டு மொத்த வாழ்வுமென்று உணர்ந்த நிலையில் மாறனின் வருகை, அவனுடனான திருமண ஏற்பாடு, செழியனிடம் தன் காதலை சொல்ல அவன் நிர்தாட்சண்யமாக மறுத்தது, செழியனுக்கும் தன் மீது காதலிருக்குமோ என்று தனக்குள் எழுந்த சிறு சந்தேகம், நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்த தானும் செல்வமும் சேர்ந்து போட்ட திட்டம் அதற்கு நடுவில் மீனாட்சி பாட்டி நுழைந்தது, எதிர்பாராத விதமாக... ஏனென்றே தெரியாமல் மாறனே திருமணத்திலிருந்து வெளியேறியது, அதனால் மீனாட்சி உறவினர் சம்மந்தமே இல்லாத புகைப்படத்தை தவறாக காட்டி தன்னை தூற்றியது... செழியன் காணாமல் போனது, அதன் பிறகு முடங்கியிருந்த தன்னை தேற்றி தன் மனம் மாற்றத்திற்காக மேற்படிப்பு படிக்க செல்வம் தன்னை ஒத்துக்கொள்ள வைத்தது. செழியனை கண்டறிந்து அவனின் நிலையறிந்து தங்களை இணைப்பதற்காக தன்னை இங்கு சேர்த்தது. இங்கு வந்த பின்பு, தான் செழியனை மீண்டும் சந்தித்தது என அனைத்தையும் கூறி முடித்த தனது தோழியை தீபாவும், ரம்யாவும் இருபக்கமும் அணைத்துக் கொண்டனர்.
கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்ல ஆயத்தமான செழியன் தங்களது துறைக்கு முன்னால் இருக்கும் மரத்தில் நறு நிற்பதை கண்டு அவளை பார்த்துவிட்டு செல்லலாமென அருகில் வர, நறு தன் தோழிகளிடம்...
"இது வெறும் ஈர்ப்பினால் வந்த காதலில்லை ரம்யா. நீ அழகா இருக்குன்னு எல்லாத்தையும் ரசிக்கிறியே அந்த மாதிரி அழகு பார்த்து வந்ததும் இல்லை. இது எப்போ எப்படின்னு எனக்கேத் தெரியாது. என் உயிருக்குள்ள கலந்த ஒன்று இது. உனக்கு அவரு வெறும் சார். ஆனால், எனக்கு என் உயிரே அவர் தான்" என அவள் கூற கேட்டு... அவளின் வார்த்தைகளில் தெறித்த காதலிலும், மனதிலிருந்து வெளிவந்த உறுதியிலும் ஸ்தம்பித்து விட்டான்.
செல்வம் சொல்லியிருந்தாலும் நடந்தவற்றை மீண்டும் ஒருமுறை தன்னவளின் வாயினால் கேட்டதும், தன்னவளின் தற்போதைய வலி நிறைந்த மனதை உணர்ந்தவன் மொத்தமாக உறைந்து விட்டான்.
அவர்களுக்கு பின்பக்கம் செழியன் நின்றிருந்ததால் அவனின் வருகை அவர்களுக்கு தெரியவில்லை.
தன்னவளை எண்ணி அவனின் மனம் கலங்குவதை கண்கள் வெளிக்காட்ட, அதனை யாரும் கண்டுவிடாது இருக்க தான் வந்த சுவடே இல்லாமல் திரும்பிச் சென்றிருந்தான்.
செல்லும்போது, "நீ இந்தளவுக்கு என்னை காதலிக்கும் அளவிற்க்கு அப்படி என்னடி செய்துவிட்டேன் உனக்கு" என்று மானசீகமாக தனது விழியிடம் கேள்வி கேட்டான்.
சிறு தொலைவில் நின்றிருந்த நறுவிக்கு அவனின் மனக்குரல் கேட்டதோ...! தோழிகளை விலக்கி விட்டு திரும்பிய நறுவி பார்த்தது பார்க்கிங் ஏரியாவை நோக்கி தமிழுடன் சென்று கொண்டிருந்த செழியனைத் தான்.
தொடரும்...
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top