JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Facts about flowers! மலர்களை பற்றி விளக்கம்...

JLine

Moderator
Staff member
58

Bleeding Heart Flower/Lamprocapnos spectabilis: The bleeding heart is a very rare flower mainly because it resembles the conventional heart shape, with a droplet beneath. It thrives in moist woodland gardens along with ferns and other shade-lovers.
Other common names include “lyre flower” and “lady-in-a-bath".
This eye catching flower symbolizes the relationship that goes beyond the death, and also these flowers are used to express the deep and passionate love between two people.

ஈரமான சோலைகளில் நிழலில் படரும் சிற்றிலை செடியினத்தைச் சார்ந்த, இதய வடிவத்தில் இருக்கும் இம்மலர் அரிதான வகையைச் சார்ந்தது.
சிகப்பு நிறத்தில் மட்டுமல்லாது மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலும் தோன்றும் இம்மலர்வகைகளில், மிகவும் அரிதானது வெள்ளை நிறத்தில் பூக்கும் மலரே..

இதன் மற்ற பெயர்கள் "குளிக்கும் பெண்", "யாழைப்போன்ற மலர் (இசைக்கருவி = யாழ்)
மரணத்தையும் வென்றுவிடும் உறவிற்கும், இரு உள்ளங்களுக்கு இடையேயான ஆழமான மற்றும் உணர்ச்சிகரமான காதலுக்கும், கண்களைக் கவரும் இம்மலர்களை அடையாளமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.



 

JLine

Moderator
Staff member
59


Carnation Flowers:One of the world’s oldest cultivated flowers, is appreciated for its ruffled appearance, clove-like scent, and extended blooming period.While all carnations symbolize love and affection, the color of the flower also carries meaning:• Red: Deep Love and Admiration• White: Pure Love and Good Luck• Pink: A Mother’s Love,given as a sign of gratitude.According to a Christian legend, carnations first appeared on Earth as Jesus carried the Cross. The Virgin Mary shed tears at Jesus’ plight, and carnations sprang up from where her tears fell. Thus, the pink carnation became the symbol of a mother’s undying love, and in 1907 was chosen by Ann Jarvis as the emblem of Mother’s Day, now observed in the United States and Canada on the second Sunday in May.

கார்னேஷன் மலர்கள்: உலகில் பயிரிடப்பட்ட மலர்களில் பழமையான மலர் வகையான கார்னேஷன், அதன் அடுக்கடுக்கான தோற்றத்திற்கும், கிராம்பைப் போன்ற வாசனைக்கும், நீண்ட காலங்களுக்குப் பூக்களைத் தரும் தாவரமாகவும் கருதப்படுவதால் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.. பொதுவாக மனிதர்கள் தங்களது அன்பையும் பற்றுதலையும் வெளிப்படுத்த கார்னேஷன் மலர்களைக் கொடுத்தாலும், அதன் சிகப்பு நிற மலர் ஆழமான காதலுக்கும், வெள்ளை நிற மலர்கள் உன்னதமான அன்பிற்கும், வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கும், பிங்க் நிற கார்னேஷன் மலர்கள் அன்னையின் அன்பிற்கும் அடையாளமாகவும் வழங்கப்படுகின்றன.

கிறிஸ்துவத்தின்படி, இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட பொழுது முதன்முறை இம்மலர்கள் இந்த பூமியில் பூத்ததாகக் கூறுப்படுகின்றது. இயேசு கிறிஸ்துவின் அன்னை மரியாளின் கண்ணீர் இப்பூமியில் விழுந்த இடத்தில் இக்கார்னேஷன் மலர்கள் மலர்ந்தன என்றும், ஆகையால் தான் அன்னையர்களின் ஈடில்லாத அன்பிற்கு ரோஜா நிற கார்னேஷன் மலர்களை 1907-ல் ஆன் ஜார்விஸ் என்பவர் அன்னையர் தினத்தின் அடையாளமாகத் தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப்படுகின்றது. அன்னையர் தினம் மே மாதம் இரண்டாம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகின்றது.

 

JLine

Moderator
Staff member
60

Orchid : The number of officially documented orchid species is more than 25,000 and there are approximately 800 genuses.
An orchid has bilateral symmetry, similar to human faces.So if a line is drawn vertically down the middle of the flower, the two halves are mirror images of each other.
Vanilla is one of the best known and widely used flavors. It is extracted from the pod of Vanilla planifolia, which is a species of orchid.Vanilla is the second most expensive spice in the world after saffron.
Orchids are very old plants. According to the fossil evidences, orchids have existed on the planet around 100 million years. Depending on the species, these flowers can survive for a period ranging from a few hours to six months.
These plants can live to be up to 100 years old.


மந்தாரை/ ஆர்க்கிட்: இருபத்தி ஐந்தாயிரம் இனங்களும், தோராயமாக எட்டு நூறு மரபணுக்களும் உள்ள மலர்கள் இந்த ஆர்க்கிட் மலர்கள்.
மனித முகங்களைப் போல் ஒத்த சமச்சீர்நிலையை இருப்பக்கங்களிலும் கொண்டுள்ள மலர்கள் இவை ஆகையால் மலரின் நடுவில் செங்குத்தாகக் கோடு ஒன்று இழுக்கப்பட்டால், மலரின் இரு பகுதிகளும் ஒன்றை ஒன்று பிரதிபலிப்பது போன்று தோன்றும்.
உலகிலேயே குங்குமப்பூவிற்குப் பின்னர் மிக அதிக விலையுள்ள, உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் சுவைகளில் ஒன்றான வெண்ணிலா இந்த ஆர்க்கிட் மலர்களில் இருந்து தான் எடுக்கப்படுகின்றது.
மிகவும் பழைய தாவரங்களான ஆர்க்கிடுகள் படிம ஆதாரங்கள் படி, 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னராகவே பூமியில் தோன்றியிருக்க வேண்டும்.
இனங்களைப் பொறுத்து, இந்த மலர்கள் சில மணி நேரம் முதல் ஆறு மாதங்கள் வரை காலம் வாழ முடியும். ஒரு ஆர்க்கிட் தாவரம் நூறு வயது வரை கூட உயிர்வாழும்.





 

JLine

Moderator
Staff member
61

Ylang Ylang/Artabotrys hexapetalus:
The flowers of the Ylang Ylang are pollinated by night moths; therefore the most intensive smell is released from dusk until dawn. These flowers are gathered in the dark or at dawn to conserve the scent which rapidly dissipates in heat after sunrise. Its really amazing indeed to know that plants let out the aroma only when required.
Some more information for girls ;-):
The Artabotrys odaratissimus also known as ylang–ylang is the key ingredient of Chanel No. 5 a popular perfume due to its intoxicating fragrance. In addition to Chanel #5, Ylang Ylang is used in other perfumes such as “Aqua De Gio” by Giorgio Armani, “Poison” by Christian Dior, and “Elise Fields” (“Champs Elysee”) by Guerlain.

மனோரஞ்சித மலர்கள் :
விட்டில் பூச்சிகளினாலேயே மகரந்த சேர்கை நடைப்பெறும் காரணத்தால் இம்மனோரஞ்சிதப் பூக்களும் இரவு வேளையில் துவங்கி பொழுது புலரும் வரை மலர்ந்து, மிகுந்த நறுமணத்தைப் பரப்புகின்றன. சூரியனின் வெப்பத்தில் இம்மலர்களின் நறுமணம் விரைவாக மறைந்துப் போகும் காரணத்தினால், இப்பூக்களில் இருந்து உருவாக்கப்படும் வாசனைத் திரவியத்திற்காக இம்மலர்களை இரவிலோ அல்லது கதிரவன் வெளிவரும் முன்போ பறித்துவிடுகின்றனர். அதுமட்டுமல்லாது, இம்மலர்கள் அவை விரும்பும் வேளைகளிலேயே நறுமணத்தை வெளியிடுகின்றன..

 

JLine

Moderator
Staff member
62


Myositis/Forget-me-not : The forget me not flower got its name after a Greek word Myositis, known in the people as Forget me not Flower, have unforgettable memories of the old times. Interesting symbolism is attached to the Myositis flower. Thus King Henry IV of England took this tree as his symbol during his exile in 1398, and kept it as a symbol when he returned to England the following year. In Germany in the 15th century it was believed that those who wear this flower will not forget their lovers. In the Victorian language the flower was a symbol of veritable and true love, and therefore it was often worn by ladies as a sign of veneration and enduring love.

மையோஸைட்டிஸ் என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து தோன்றிய பெயரைக் கொண்ட, " ஃபர்கட் மீ நாட்.. என்னை மறவாதே..' என்று அழைக்கபடும் இந்தப் பூ மறக்கமுடியாத பழங்கால நினைவுகளைத் தனக்குள் கொண்டுள்ளது.. சுவாரஸ்யமான அடையாளங்கள் மையோஸைட்டிஸ் மலருடன் இணைக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் அரசர் ஹென்றி IV, 1398 ஆம் ஆண்டில் தனது சிறைவாசத்தின் போது தனது அடையாளமாக இந்த மரத்தை எடுத்துச் சென்றவர், அடுத்த வருடம் இங்கிலாந்திற்குத் திரும்பிய போது அதனை ஒரு சின்னமாக வைத்திருந்தார். 15 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் இந்த மலர்களை அணிந்து கொள்பவர்கள், தங்கள் காதலர்களை மறக்க மாட்டார்கள் என்று நம்பப்பட்டது. விக்டோரிய மொழியில், மையோஸைட்டிஸ் மலர் உண்மையான மற்றும் உன்னதமான அன்பிற்கு அடையாளமாகக் கொள்ளப்பட்டது, எனவே அவை பெரும்பாலும் பெண்களால் பூஜிக்கப்படுவதற்கும், நீடித்த அன்பிற்கும் அடையாளமாக அணியப்பட்டிருந்தன.

_________________________
 

JLine

Moderator
Staff member
63

Frangipanni/Red Champa/Plumeria:

These flowers are most fragrant at night in order to lure sphinx moths to pollinate them. The flowers yield no nectar, however, and simply trick their pollinators. The moths inadvertently pollinate them by transferring pollen from flower to flower in their fruitless search for nectar. Plumerias come in all colors of the rainbow – from pure white to deep red, from pale pink to butter lemon to the vibrant shades of yellows, golds, oranges, peach, mango, lilac, blood red and so on.

ப்ளுமேரியா/ஈழத்தலரி/சம்பா:

தேனை [nector] உற்பத்தி செய்ய இயலாத இம்மலர்கள், தங்களிடம் உள்ள மகரந்தங்களை பிற மலர்களிடம் சேர்ப்பிப்பதற்கென்றே, விட்டிற்பூச்சிகளையும் அந்துப்பூச்சிகளையும் கவர்ந்திழுக்க இரவில் அளாதியான நறுமணத்தை பரப்புகின்றன. இவை வெண்மை நிறத்தில் துவங்கி அடர் சிகப்பிலும், இளஞ்சிவப்பு நிறத்திலிருந்து எழுமிச்சை வண்ணத்திலும், பொன்னிறம், ஆரங்சு, மஞ்சள், இரத்தச்சிகப்பு என்று வானவில்லின் அனைத்து நிறங்களிலும் பூக்கும்..



 

JLine

Moderator
Staff member
64

One interesting fact about the Dahlia flower :
Dahlias can be found in nearly every color except blue! In 1846 the Caledonia Horticultural Society of Edinburgh offered a prize of 2,000 pounds to the first person succeeding in producing a blue dahlia. This has to date not been accomplished..

While dahlias produce anthocyanin, an element necessary for the production of the blue, to achieve a true blue color in a plant, the anthocyanin delphinidin needs six hydroxyl groups. To date dahlias have only developed five, so the closest that breeders have come to achieving a "blue" specimen are variations of mauve, purples and lilac hues.


டேலியா மலர் பற்றி ஒரு சுவாரஸ்யமான உண்மை:

டேலியா மலர் ஏறக்குறைய அனைத்து நிறங்களிலும் பூக்கும், நீல நிறத்தை தவிர.. 1846 ஆம் ஆண்டில் எடின்பர்க் நகரத்தின் கால்டோனியா தோட்டக்கலை சங்கம், ஒரு நீல டேலியாவை உற்பத்தி செய்யும் முதல் நபருக்கு 2,000 பவுண்டுகள் பரிசை வழங்குவதாக அறிவித்தது, ஆனால் அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

காரணம்: நீல நிறத்தை உருவாக்கும் அன்தோஸியனின் என்ற தனிமத்தை டேலியா மலர்கள் உற்பத்தி செய்யும் பொழுது, நீல நிறத்தை கொணறும் ஆறு ஹைட்ராக்ஸைல் குழுக்கள் தேவைப்படுகின்றன, ஆனால் அவற்றில் ஐந்து ஹைட்ராக்ஸைல் குழுக்கலையே அவற்றால் உருவாக்க முடிகின்றது.. ஆகையால் நீல நிற மலரை உருவாக்க முயற்சித்தவர்களால், வயலட், இளஞ்சிவப்பு, மாவ் நிற மலர்களையே உருவாக்க முடிகின்றது, நீல நிறத்தை அல்ல..

 

JLine

Moderator
Staff member
65

Rose:

The rose is not just the most loved flower in the world, it is also the flower that is regarded as the best representation of love.
After a fossil of a rose was discovered in Colorado, archaeologists determined roses have existed for more than 35 million years.
Roses are one of only three flowers mentioned in the bible. The other two are lilies and camphire.
The tallest rose bush ever recorded stood at an incredible 23 feet tall.
For years, breeders tried to genetically manipulate different species and colors of roses to create a blue one. In 2004, the world got its first blue rose.
Named after a heroine of Shakespeare's romantic love story, Rome and Juliet, the heavenly "Juliet rose" can be purchased for $5 million price tag listed above, although it is known as the “£3 million rose” because that's how much it cost famed rose breeder David Austin to create the apricot-hued hybrid over the course of 15 years.

"Overnight Scentsation": This miniature rose was grown in space, on NASA’s Space Shuttle Discovery Flight STS-95, in an ASTROCULTURE commercial plant growth chamber. Scientists wanted to see whether a rose grown in space really would smell as sweet as its terrestrial counterpart.Turns out, its scent was different to what it would have been on Earth. Volatile compounds are what make a flower smell the way it does, and they act differently in micro gravity. NASA stated: 'In low gravity the rose actually produced fewer volatile than it did on Earth. But the fragrance that it did generate was critically altered. The flower in space had a more "floral rose aroma," which is aesthetically pleasing.'
Roses can survive for extremely long periods of time.The Thousand-year Rose grows on a wall of the Hildesheim Cathedral, a Catholic cathedral in Hildesheim, Germany, that is dedicated to the Assumption of Mary. It is believed to be the oldest living rose in the world.
On November 20, 1986, President Ronald Reagan officially made the rose the national flower emblem of the United States. He even did this while standing in the famous White House Rose Garden.

ரோஜா என்பது உலகில் அதிகம் நேசிக்கப்படும் மலர் மட்டுமல்ல, காதலின் பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தும் மலராகவும் இது கருதப்படுகின்றது.

அமெரிக்காவின் கொலராடோவில் மாகாணத்தில் கண்டுப்பிடிக்கப்பட்ட ரோஜா மலரின் புதைவடிவப் படிவத்தில் இருந்து, இம்மலர் 35,000,000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றியிருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கின்றனர்.

பைபிளில் மூன்று மலர்களே குறிப்பிடப்பட்டிருக்கின்றன, அவற்றில் ஒன்று ரோஜா..

மிக உயரமான ரோஜா புதராகப் பதிவு செய்யப்பட்டிருக்கும் ரோஜா புதரின் உயரம் 23 அடிகள்.

பற்பல வண்ணங்களில் மலரும் இந்த ரோஜா மலரில் நீல நிறத்தை உருவாக்குவதற்குப் பல ஆண்டுகளாகப் பலர் முயற்சி செய்து கொண்டிருக்க, 2004 ஆம் ஆண்டு இவ்வுலகம் முதன் முறை ஊதா நிறத்து ரோஜாவைக் கண்டது.

ஷேக்ஸ்பியரின் காதல் காவியமான ரோமியோ ஜூலியட்டின் கதாநாயகி ஜூலியட்டின் பெயர் கொண்ட "ஜூலியட் ரோஜா"வை கண்டு பிடிப்பதற்கு டேவிட் ஆஸ்டின் என்பவர், மூன்று மில்லியன் டாலர்களைச் செலவழிக்க, அவர் உற்பத்தி செய்த இந்த ரோஜா ஐந்து மில்லியன் டாலர்களுக்கு விலைப் போனது.. [https://www.parfumflowercompany.com/assortment/david-austin-wedding-rose-juliet/]

தனது விண்வெளி விமானமான டிஸ்கவர் ஃப்ளைட்டினுள் அமைக்கப்பட்டிருந்த வானுரி ஆலையில், சிறிய அளவிலான ரோஜாவைப் பயிரிட்டு, அதற்கு "ஓவர்நைட் சென்ஸ்டேஷன்" என்று பெயரிட்டது நாசா..

விண்வெளியில் மலர்ந்துள்ள இந்த ரோஜாவின் நறுமணம் பூமியில் முளைக்கும் ரோஜாவின் வாசனையை ஒத்திருக்குமா என்பதைக் கண்டுப்பிடிக்கவே இந்த ஆராய்ச்சி..

விரைவில் ஆவியாகக் கூடிய சேர்மானங்களே ஒரு மலரின் நறுமணம் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை தீர்மாணிக்க, அவை நுண்ணீர்ப்பு சக்தியில் வெவ்வேறாகச் செயல்படும் என்பதை நிரூபித்தது இந்த மாறுபட்ட வாசனைகள்.

குறைந்த புவி ஈர்ப்பு சக்தியில் விரைவில் ஆவியாகக்கூடிய சேர்மானங்களைக் குறைந்த அளவிலேயே இந்த ரோஜா மலர்கள் உருவாக்கியதாலேயே, இவை பூமியில் பூக்கும் ரோஜா மலர்களை விட அதிக நறுமணமிக்கதாக உருவானது..

 

Praveen

Member
பூக்களை பற்றி மிகவும் அருமை யான தகவல்கள் விவரங்கள் தந்துவுள்ளிர்கள் மிகவும் பயன்உள்ளதாக இருந்தது.
 

Shri Aki

New member
View attachment 58

Bleeding Heart Flower/Lamprocapnos spectabilis: The bleeding heart is a very rare flower mainly because it resembles the conventional heart shape, with a droplet beneath. It thrives in moist woodland gardens along with ferns and other shade-lovers.
Other common names include “lyre flower” and “lady-in-a-bath".
This eye catching flower symbolizes the relationship that goes beyond the death, and also these flowers are used to express the deep and passionate love between two people.

ஈரமான சோலைகளில் நிழலில் படரும் சிற்றிலை செடியினத்தைச் சார்ந்த, இதய வடிவத்தில் இருக்கும் இம்மலர் அரிதான வகையைச் சார்ந்தது.
சிகப்பு நிறத்தில் மட்டுமல்லாது மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலும் தோன்றும் இம்மலர்வகைகளில், மிகவும் அரிதானது வெள்ளை நிறத்தில் பூக்கும் மலரே..

இதன் மற்ற பெயர்கள் "குளிக்கும் பெண்", "யாழைப்போன்ற மலர் (இசைக்கருவி = யாழ்)
மரணத்தையும் வென்றுவிடும் உறவிற்கும், இரு உள்ளங்களுக்கு இடையேயான ஆழமான மற்றும் உணர்ச்சிகரமான காதலுக்கும், கண்களைக் கவரும் இம்மலர்களை அடையாளமாகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
???
 

JLine

Moderator
Staff member
பூக்களை பற்றி மிகவும் அருமை யான தகவல்கள் விவரங்கள் தந்துவுள்ளிர்கள் மிகவும் பயன்உள்ளதாக இருந்தது.
நன்றி மா.. உங்களுக்குத் தெரிஞ்ச பூவைப் பற்றியும் இங்க தாராளமா பகிரலாம்.. விருப்பமிருந்தால்.. :)
 

Praveen

Member
மேலே உள்ள மலரின் பெயர் வாகை மலர் இம்மலர் பழய தமிழ் நாட்டு அரசர்கள் பாேரில் வெற்றி பெற்றால் இம்மலரை சுடிக் காெள்ளவர்கள்
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top