மீனாக்ஷி - சக்திவேல்
அத்தியாயம் - 4
ஒரு முறை வீட்டின் அழைப்பு மணியை அழுத்திய சக்திவேல் ஒருவரும் வந்து கதவைத் திறக்காததைக் கண்டு வேகமாகக் கதவைத் தட்ட, பறித்திருந்த முல்லைப் பூக்களை, அணிந்திருந்த புடவையின் முந்தானையில் சுருட்டி வைத்தவாறே விடுவிடுவென்று நடந்து வந்தவளாய் கதவிற்கு அருகில் வந்து நின்ற மீனாக்ஷிக்கு ஏனோ அழுத்தமாய் விடாது தட்டப்பட்ட கதவின் சத்தத்தில் அச்சம் பிறந்தது.
'யாரா இருக்கும்? இப்படி நிறுத்தாம கதவத் தட்டிட்டே இருக்காங்க?'
தனக்குத்தானே கேட்டுக் கொண்டவள் பூக்களைத் தவறவிட்டுவிடாது இருக்க, ஒரு கையால் முந்தானையை இறுக்கப் பற்றியவாறே கதவைத் திறக்க, வீட்டின் வாயில்நிலையை இடித்துவிடுவது போல் நெடுநெடுவென்ற உயரத்தில், கல்லில் செதுக்கப்பட்ட சிலையைப் போலத் திடகாத்திரமான உடற்கட்டுடன் நின்றிருந்தவனின் கடுகடுத்த முகம் கதிகலங்கச் செய்தது.
வார்த்தைகளை விடப் பார்வையே எனது பலம் என்பதை உள்ளுக்குள் எரியும் தீயை ஒளிரச் செய்த அவனது இருண்ட கண்கள், பெண்ணவளை நிலைக்குலையச் செய்தது.
அவளையும் அறியாமல் அவள் பிடித்திருந்த முந்தானையின் நுனிப்பகுதி அவளின் கரத்தில் இருந்து நழுவ, கீழே விழுந்து பல பக்கங்களுக்கும் சிதறின அன்று மலர்ந்திருந்த முல்லைப் பூக்கள்.
அதே நேரம் கதவைத் திறக்க பல மணித்துளிகள் ஆனதில் முகத்தில் எரிச்சல் மண்டிக்கிடக்கச் சலிப்புடன் நின்றிருந்தவனின் பார்வை, எதிர்பாராவிதமாய்த் தன் எதிரே சித்தன்னவாசல் ஓவியம் போல் பேரழகுடன் நின்றிருந்தவளின் மீது படிய, சில விநாடிகள் ஆண்மகனின் கட்டுக்கோப்பான காளைமனமும் தடுமாறத் தான் செய்தது.
நல்ல சிவந்த நிறம். பிறை போல் நெற்றி. வசீகரிக்கும் கண்கள். சாயம் பூசாத செப்பு உதடுகள்.
கோவில்களில் செதுக்கப்பட்டிருக்கும் தெய்வீக சிலைகள் போல் அழகிய உடல்வாகு என்று கவிதைகளில் வர்ணிக்கப்படும் பெண்ணிற்கு ஏற்ற எழிலுடன் நின்றிருந்தவளின் கூர்மையான மூக்கில் பளபளத்த ஒற்றைக் கல் மூக்குத்தி, அவனது நெஞ்சத்தில் 'இவ்வளவு அழகும் ஒரே பெண்ணிடத்திலா!' என்ற வியப்பைப் பதியச் செய்தது.
ஆயினும் அவள் யாராக இருக்கக் கூடும் என்று சில கணங்களுக்குள் புரிபட்டு விட, மலைப்பு மறைந்து கடுப்புப் பிறக்க, முன்னையும் விட அவனது கண்கள் பளபளத்தது.
அதே நேரம் அவ்வீட்டின் முன்னறையில் இருக்கும் புகைப்படத்தைக் கலக்கத்தோடு பல நாட்களாய் விடாதுப் பார்த்திருந்ததில், நிழலாய் படத்தில் தோன்றியவன் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் இப்படித் திடுமென்று நிஜமாய்க் கண்ணெதிரே நிற்பதில், மீனாக்ஷயின் மேனி மிதமிஞ்சிய பயத்தால் மரத்துப் போனது.
அவளின் ஸ்தம்பித்த நிலை சக்திவேலின் நெற்றியை சுருங்கச் செய்தது.
'இவ என்ன பொண்ணா இல்லை கோவிலில் இருக்கும் சிற்பமா?'
அவன் விரும்பாவிடினும் அவனது புத்தி எண்ணியது!
ஆயினும் அவள் நகர்ந்து நிற்காததைக் கண்டு கை முஷ்டியைக் கொண்டு கதவைப் படீரென்று தட்ட, அதன் சத்தத்தில் அவளுக்குத் தூக்கிவாரிப் போட, "மீனாக்ஷி, ரைட்?" என்றான் அடிக்குரலில்.
அவனது கேள்விக்கு ஆம் என்பது போல் தலையசைத்தவள் அவனுக்கு வழிவிட்டு நகர, உள்ளே நுழைந்தும் நுழையாததுமாய், "ம்மா.." என்று அவன் காட்டுக்கத்தல் கத்தியதில், இப்பொழுது பேதையவளின் ஈரக்குலையே நடுங்கிவிடும் போல் இருந்தது.
"அத்த.."
அவள் எதுவோ முனகுவது போல் கூறுவது காதில் விழுந்ததும் விருட்டென அவளைத் திரும்பிப் பார்க்கவும், அவனது வேகத்தில் அவள் கீழே விழுந்துவிடாமல் இருந்ததுதான் அன்றையை நாளின் பெரிய அதிசயம்!
"என்னது?"
"அத்த பின்கட்டுல இருக்காங்க.. பூப்பந்தலுக்கிட்ட.."
"அத்தையா?"
ஆக இவனுக்கு நான் பேசியதைவிட இவனது அம்மாவை அத்தை என்று நான் அழைத்தது பிடிக்கவில்லையோ? அவள் அனுபவத்திற்கும் அறிவிற்கும் ஏற்ற வகையில் அவள் சிந்தித்தாள்.
அவளைக் கூர்ந்துப் பார்த்தவனின் தாடை இறுகுவதைக் கண்டவள் உதடுகள் துடிக்கப் பேசாமடந்தையாக நிற்க, கொண்டு வந்திருந்த சிறு ப்ரீஃப்கேஸை அருகில் இருந்த ஸோஃபாவில் தூக்கி எறிந்தவன் வேக நடை நடந்து பின்கட்டிற்குச் சென்றான்.
அங்கு மகன் வந்திருப்பதையே அறியாது பூக்களுக்கும் வலிக்குமோ என்பது போல் முல்லை மலர்களை மெதுவாய்க் கொய்து கொண்டிருந்த முத்தம்மாளுக்குக் கிடுகிடுத்தது, தன் அருகில் வந்து நின்றதுமே, "அப்போ என் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்கிறது இல்லைன்னு நீங்களும் அப்பாவும் முடிவு பண்ணிட்டீங்க, அப்படித்தானே?" என்ற மகனின் ஆங்காரக் குரலில்.
திடுக்கிட்டு திரும்பி பார்த்தவருக்கு அவன் வருவதைப் பற்றித் தெரிவிக்காமல் வந்து நிற்பது மட்டுமல்லாமல், வந்த உடனேயே அடித்தொண்டையில் கர்ஜிக்கும் மகனைக் கண்டதும் விழிப்பிதுங்க, அவர் பிடித்திருந்த பூக்கூடையும் கை நழுவி விழுந்தது.
தன் பாதங்களில் விழுந்து சிதறும் பூக்களைக் குனிந்துப் பார்த்தவன் மீண்டும் நிமிர்ந்து நோக்க, அவனது கோபத்தில் தட்டுத்தடுமாறி கூடையை எடுக்கக் குனிந்தவரை சலிப்புடன் தடுத்தவன் தான் அதனை எடுத்தான்.
"இப்படிப் பேசி வச்ச மாதிரி அது என்ன என்னைப் பார்த்ததும் எல்லாருமே பூவைத் தவறவிடுறீங்க?"
“என்ன வேலு சொல்ற? புரியலையேப்பா.."
"ம்ப்ச்.. அது இருக்கட்டும், நான் மொதல்ல கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்க."
"வேலு, அது வந்து அப்பா தான்.."
"தெரியும்மா.. நான் எதைச் செய்யச் சொல்றேனோ அதுக்கு எதிர்மறையா ஏதாவது செய்றதைத் தான் அவருடைய கடமையா நினைச்சிட்டு இருக்காரே, பிறகு எப்படி நான் சொல்றதைக் கேட்கப் போறாரு?"
"அதுக்கில்லப்பா. அது சின்னப் பொண்ணு, சின்ன வயசிலேயே அப்பன் ஆத்தாவைப் பறி கொடுத்துட்டு நிக்குது. நாமளும்.."
மீண்டும் அவரை முடிக்கவிடவில்லை அவன், "அப்பன் ஆத்தாவைப் பறிக்கொடுத்துட்டு நிக்குதுன்னா, அவ என்ன உங்களுக்குச் சொந்தமா பந்தமா? இதுல ஏதோ ஆசிரமம் நடத்துற மாதிரி வீதியில போனவளை வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து வச்சிருக்காரு.." என்றவனது ஆக்ரோஷக்கத்தலில் வீட்டிற்கு உள்ளே நின்று கொண்டிருந்த மீனாக்ஷியின் நெஞ்சம் பாரமானது.
இது எதிர்பார்த்தது தானே!
இன்னும் சொல்லப் போனால் ஒரு மாதத்திற்கு முன் தொலைபேசியில் பேசியவன் அவளை அன்றே அனுப்பி விடுமாறு கூறியதில், அவளும் மார்த்தாண்டத்திடம் ஏதாவது ஒரு வேலையில் தன்னைச் சேர்த்துவிடுமாறும், அதனைக் கொண்டு நான் பிழைத்துக்கொள்வேன் என்றும் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாளே.
ஆனால் அவர் தான் விடாப்பிடியாக மறுத்துவிட்டார். அதுவும் இல்லாது மார்த்தாண்ட நாடாரின் சொல்லுக்குச் சுற்றுப்பட்டில் இருந்த அனைத்து ஊர் மக்களும் கட்டுப்பட்டிருக்க, அவர் பெற்ற பிள்ளை அவரை எதிர்த்து நிற்பது அவருக்கு அறவே பிடிக்கவில்லை.
இன்று நேற்று அல்ல, சிறுபிள்ளையாக இருந்த பொழுதில் இருந்தே அவன் அப்படித்தான்.
ஆனால் காவல்துறையில் வேலைக்குச் சேர்ந்த பின் அவனது அடாவடித்தனமும் ஈகோவும் அதிகமாகிப் போனது.
இதில் எதற்கெடுத்தாலும் சந்தேகம், யாரைப் பார்த்தாலும் போலிஸ் பார்வையோடு பார்ப்பது.. அவன் விரும்பாத எவரையும் மதியாமல் துச்சமாக நடத்துவது என்று அவனது நடத்தை அவருக்கும் அவனுக்கும் இடையே பெரும் இடைவெளியையே உண்டாக்கி இருந்தது!
இதனில் இப்பொழுது மீனாக்ஷி வேறு!
"அப்படி எல்லாம் சொல்லாத வேலு. அந்தப் பொண்ணுக் காதுல விழுந்துடப் போகுது."
"விழுந்துட்டா மட்டும் அவ உடனே வீட்டை விட்டு போயிடப் போறாளா என்ன?"
"உனக்கு ஏன்ப்பா இம்பிட்டுக் கோபம் வருது? ஏன் அந்தப் பொண்ணை உடனேயே அனுப்புன்னு பிடிவாதம் பிடிக்கிற?"
அவர் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே அவரது இரண்டாவது மகன் பாலா அங்கு வந்து சேர்ந்தான்.
வீட்டின் அழைப்பு மணி அடிக்கவுமே தன் அறையில் மடிகணினியில் பார்த்துக்கொண்டிருந்த வேலையை முடிக்க எத்தனித்த பாலா, சக்திவேலின் சத்தத்தில் அரண்டு போய்க் கணினியை அறைந்து மூடிவிட்டு வெளியே வந்திருந்தான்.
இதனில் இப்பொழுது பின்கட்டினில் அவன் அன்னையிடம் கர்ஜித்துக் கொண்டிருக்க, விறுவிறுவென்று ஓடி வந்தவனுக்கு அங்கு நடந்து கொண்டிருப்பது என்னவென்று புரிந்துப்போனது.
"பாலா, அந்தப் பொண்ணைப் பத்தி அம்மா ஏதோ கேட்குறாங்க. உனக்குத் தான் தெரியுமே, நீயே பதில் சொல்.."
கூறிய சக்திவேல் வயிற்றின் குறுக்கே இரு கைகளையும் கட்டிக் கொண்டவனாய் நிமிர்ந்து நிற்க, 'ஐயோ தெரியாத்தனமா வந்து மாட்டிக்கிட்டோமா? இன்னைக்குன்னு பார்த்து ஆஃபிஸ் போகாமல் இருந்தது தப்பாகிடுச்சே?' என்று மனதிற்குள் புலம்பியவன் அண்ணனிடம் கூறிய அனைத்தையும் அம்மாவிடமும் ஒப்பிப்பதற்கு முன் வீட்டிற்குள் திரும்பி ஒரு முறைப் பார்த்துக்கொண்டான்.
ஆனால் அவனது கண்களில் மீனாக்ஷி படவில்லை.
“பாலா, உன்கிட்டத்தான் பேசிட்டு இருக்கேன். கமான், என்னிடம் என்ன சொன்னியோ, அதை அப்படியே அம்மாகிட்டவும் சொல்லு.”
அழுத்தம் திருத்தமாக சக்திவேல் கூற, சிறு வயதில் இருந்தே தமையனின் பேச்சை மீறாதப்பழக்கம் கொண்ட பாலா, ஆழ மூச்செடுத்தவனாக வேறு வழியின்றி அனைத்தையும் மறைக்காமல் கூறினான்.
"ம்மா, அண்ணா சொன்னதுமே நான் மீனாவை பத்தி விசாரிச்சேன். அவங்க அப்பா கடன் வாங்கிச் செலவழிச்சிட்டு, கடைசியில் யாருக்கும் பணம் திருப்பிக் கொடுக்காம செத்தும் போயிட்டாருன்னு அவங்க ஊருல பேசிக்கிறாங்க. இதுல மீனாவோட சித்தப்பன், ஏமாத்துப் பேர்வழி. மீனாவை வயசான கிழவருக்குக் கட்டிக்கொடுத்து அது மூலம் பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்சிருக்காரு. இந்தப் பொண்ணு எப்படி அதுக்குச் சம்மதிச்சதுன்னு தெரியலை, ஆனால் கடைசி நேரத்துல என்ன தோணுச்சோ பஞ்சாயத்தைக் கூட்டியிருந்துருக்கு. அந்த நேரம் பார்த்து அந்தப் பக்கமா போன அப்பா மீனா மேல இரக்கப்பட்டு இங்க கூட்டிட்டு வந்திருக்காரு."
இவை அனைத்தையும் சூசகமாக மார்த்தாண்டம் மனைவியிடம் விளக்கி இருந்தாலும், கணவரின் உத்தரவுப்படி கடந்த ஒரு மாதமாக மகளைப் போல் தான் பார்த்துக் கொண்ட மீனாக்ஷியிடம் எதையும் கேட்காமல் பெருமிதத்துடன் நடந்து கொண்டிருந்தார் முத்தம்மாள்.
ஆனால் இன்று அவளைப் பற்றி மொத்தமாய்த் தெரிந்து வைத்துக் கொண்டு பேசும் இரு பிள்ளைகளையும் எப்படிச் சமாளிப்பது என்று அவருக்கு அந்நேரம் புரிபடவில்லை.
"தெரியும்பா. அப்பா அம்புட்டையும் சொல்லிட்டாக.”
அன்னையின் கூற்றுக்கு, “என்னத்த சொல்லிட்டாக?” என்று படக்கென்று பேசினான் சக்திவேல்.
“அவங்க குடும்பம் நல்ல மாதிரி தான்னு அப்பா சொன்னாகப்பா."
முத்தம்மாளின் பார்வை, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க நின்று கொண்டிருக்கும் மூத்த மகனிடமும், அவ்வப்பொழுது எங்கு மீனாக்ஷி வந்துவிடப் போகின்றாளோ என்பது போல் வீட்டிற்குள்ளூம் இடம்மாறிக் கொண்டிருந்தது.
"என்ன நல்ல குடும்பம்? எதை வச்சு சொல்றீங்க?"
முத்தம்மாள் மட்டும் அவனைவிட இளையவராகவோ அல்லது அவனது அம்மாவாகவோ இல்லை என்றால் அடித்துவிடுவான் போல் இருந்தது சக்திவேலின் கோபத்தொனி.
"வேலு, அது வந்து அப்பா.."
"ம்மா, சும்மா அப்பா அப்பான்னு சொல்லிட்டே இருக்காதீங்க. பாலா, நீ மீதியையும் சொல்லு."
“அண்ணே..”
“ஏன் இழுக்குற பாலா? என்கிட்ட சொன்னதைத்தான இப்போ சொல்லச் சொல்றேன். இதுல தயக்கம் எங்க இருந்து வருது?”
அதற்கு மேல் மறைக்கப் பாலாவால் இயலவில்லை. அவன் மறைக்கப் பாறையாய் இறுகிப்போன முகத்துடன் நின்று கொண்டிருந்த அவனது தமையனும் விடுவதாய் இல்லை!
"ம்மா, மீனாவோட அப்பாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி ஒரு குழந்தையும் இருந்திருக்கு, ஆனால் அதே சமயம் வேற ஒரு பொண்ணுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டிருக்கு. அது தெரிஞ்சு அவருடைய மனைவி குழந்தையுடன் சேர்ந்து கிணத்துல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்களாம். ஆனால் மீனாவோட அப்பா மறுமாசமே அவரு தொடர்பு வச்சிருந்த பொண்ணையே கல்யாணம் செய்துக்கிட்டாருன்னு சொல்றாங்க. அந்தப் பொண்ணுக்கும் அவருக்கும் பிறந்தது தான் இந்த மீனா..."
பாலா முடிப்பது போல் நிறுத்த, "பாலா, முழுசையும் சொல்லு.." என்ற சக்திவேலின் ஆணித்தரமான கட்டளையில் ஆசுவாசப் பெருமூச்செடுத்தவனாய் மற்றதையும் சொல்லி முடித்தான் இளையவன்.
"அவங்கப்பா ரெண்டாவதா கல்யாணம் செஞ்சிக்கிட்டவங்க, அதாம்மா மீனாவுடைய அம்மாவும் ஏற்கனவே கல்யாணம் ஆனவங்களாம். ஆனால் கல்யாணம் நடந்து மறுநாளே மாப்பிள்ளைப் பிடிக்கலைன்னு அவங்க அம்மா வீட்டுக்கே திரும்பி வந்துட்டாங்களாம். அதற்குப் பிறகு தான் மீனாவுடைய அப்பாவுடன் தொடர்பு ஏற்பட்டு, அவருடைய முதல் மனைவி தற்கொலை செய்துக்கிட்டு இறந்ததும் அவரை ரெண்டாவது கல்யாணம் செய்திருக்காங்க.."
அவன் கூற கூற முத்தம்மாளிற்குத் தலையே சுற்றுவது போல் இருந்தது.
கடவுளே! இம்புட்டு இருக்கா?? அவுக சொன்னாகன்னு அந்தப் பொண்ண எதுவும் கேக்காம விட்டது தப்போ. ஆனால் அப்பன் ஆத்தா செஞ்ச தப்புக்குப் பாவம் இந்தச்சின்னப் பொண்ணு என்ன செய்யும்? ஆனால் அதைச் சொன்னா இவன் கேட்கமாட்டானே.
உள்ளுக்குள் புலம்பியவராய் திருதிருவென்று விழித்தவராக அவர் நிற்க, மேலும் அவரை நெருங்கிய சக்திவேல், "இப்பத் தெரியுதா அவ குடும்பத்தோட லட்சணமான பின்னணி.." என்றான் இகழ்ச்சியாய்.
பற்களைக் கடித்துக் கொண்டு வினவிய மூத்த மகனை செய்வதறியாது பார்த்த முத்தம்மாள் பெருத்த மூச்சுக்கள் விட்டு ஒரு சில விநாடிகளுக்குள் தன்னைச் சமன்படுத்தியவராய்,
"சரிப்பா. எதுவானாலும் பொறவு பேசிக்கலாம். நீ இப்பத்தான வந்திருக்க, அதுவும் எத்தனை மாசம் செண்டு வந்திருக்க. தூத்துக்குடிக்கு மாத்திட்டு வந்ததுமே எங்களைப் பாக்க வருவன்னு நினைச்சேன், ஆனால் நேரமே இல்லைன்னு சொல்லி வர மாட்டேனுட்ட. இப்ப அதிசயமா வந்திருக்க, முதல்ல வீட்டுக்குள்ள வா."
கூறியவர் மகனின் கைப்பற்ற எத்தனிக்க, அவரின் கையை உதறியவனாய் வீட்டிற்குள் விடுவிடுவென நடந்தவனின் வேகத்தில் அதிர்ந்தவர் 'கடவுளே! நீதாம்பா அந்தப் பொண்ணக் காப்பாத்தணும்.' என்ற அரற்றலுடன் அவனைப் பின் தொடர்ந்தார்.
"வேலு, தயவு செஞ்சு கொஞ்சம் பொறுமையா இருப்பா.."
“அண்ணே, அப்பா வந்ததும் எல்லாத்தையும் பேசிக்கலாம். ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இருங்க..”
அன்னை மற்றும் தம்பியின் பேச்சினைக் காதிலேயே வாங்காத சக்திவேல் வீட்டிற்குள் நுழைந்ததுமே, கீழே சிதறிக்கிடந்த பூக்களை எடுத்து மீண்டும் முந்தானையின் நுனியில் வைத்து சுருட்டியவளாய் நின்று கொண்டிருக்கும் மீனாக்ஷியை நெருங்கி நின்றான்.
அவனது ஸ்வாசக் காற்று அனலாய் முகத்தில் வீச, உதறும் தேகத்துடன் நின்றிருந்தவள் அவன் முகத்தை ஏறிட்டு நோக்க, அவனது உதடுகளில் மெல்லிய நகைத் தவழ்ந்தது.
சூழ்நிலைக்கும் அவனுக்குள் இருக்கும் கோபத்திற்கும் மாறான அவனது புன்னகை அவளுக்குக் குழப்பத்தை விளைவிக்க, அவனுக்குப் பின்னால் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்த முத்தம்மாளையும், அவருடன் வந்த பாலாவையும் பார்க்க, அதற்குள் அவளின் கைப்பற்றியவன் மின்னலென வீட்டின் வாயிலை நோக்கி அழைத்துச் சென்றான்.
"அண்ணே.." என்று பாலா கத்த, "என்ன வேலு பண்ற? அந்தப் பொண்ணுக் கைய விடு.." என்று முத்தம்மாள் கத்த, அவளது கரத்தை விட மறுத்தவனாய் வீட்டின் வாயிலை அடைய, சொல்லி வைத்தார் போன்று வீட்டின் பெரிய வளாகத்திற்குள் மார்த்தாண்ட நாடாரின் கார் புகுந்தது.
அப்பாடி என்பது போல் நீண்ட நெடுமூச்சு விட்ட பாலா அமைதியானான் என்றால், முத்தம்மாளிற்கோ அடுத்தப் போர் துவங்கியது போலவே இருந்தது.
அவர் பயந்தது போல் அது நடக்கவும் செய்தது.
காரை விட்டு இறங்கிய மார்த்தாண்டத்தின் கண்கள் சக்திவேலின் மீது படிந்து, பிறகு மீனாக்ஷியின் கையை இறுக்கப் பற்றியிருக்கும் அவனது கரத்தில் நிற்க, அவரது கண்கள் போகும் இடத்தைக் கண்டதில் சக்திவேலின் கைப்பிடி மேலும் இறுகியது.
அதனில் பெருவலி எடுக்க, சிவந்த முகத்துடையவளின் வதனம் மேலும் சிவக்க, கண்களில் நீர் கரைப்புரள, மார்த்தாண்டத்தைப் பார்த்தவளின் பரிதாபத் தோற்றம் அவரின் கோபத்தை அளவுக்கதிகமாய்த் தூண்டியது.
மகனை நெருங்கி வந்தவர், "வேலு, மீனா கையை விடு.." என்றார்.
அமைதியாய் ஆனால் கட்டளையாய் அவர் குரல் வெளிவர, வெறுப்புடன் அவளின் கையை உதறிவிட்டவன் ஒரே ஒரு நொடி அவரை உறுத்துப் பார்த்தான்.
பின்னர் அதே ஆக்ரோஷத்துடன் ஸோஃபாவில் விட்டெறிந்த தன் ப்ரீஃப்கேஸை எடுத்தவன் வீட்டின் மேல் பகுதியில் இருக்கும் தன் அறைக்குச் செல்ல மாடிப்படிகளில் இரண்டிரண்டு படிகளாகத் தாவி ஏறியவனாய் மேலே சென்றதும் நின்று ஒரு முறைக் கீழே பார்க்க, அவனது சீற்றமும் வெறுப்பும் மீனாக்ஷியின் சின்ன இருதயத்தை அறுத்துப் போட்டது.
வலியுடன் நிலத்தை நோக்கி அவள் தலைக்குனிய, விருட்டென்று தன் அறைக்குள் நுழைந்தவன் படீரென்று கதவை அறைந்து சாத்தியதில் முத்தம்மாளுக்கே நம்பிக்கை பறந்துப்போனது.
கணவரை நெருங்கியவர், "என்னங்க இப்படிச் செய்யுறான்?" என்று வினவ, "ம்ம்ம். அவனை மீறி நாம ஒண்ணு செய்யறோமுல்ல, அதான் இந்த ஆங்காரம். அவன் போலீஸ் ஆட்டத்தை இங்கேயும் காட்ட நினைக்கிறான், வேறு ஒண்ணும் இல்லை." என்றவர் தங்களுக்குப் பின்னால் இன்னமும் வாயிலின் அருகிலேயே நின்று கொண்டிருந்த மீனாக்ஷியின் புறம் நோக்கினார்.
"இதாம்மா என் பெரிய மகன். இந்த ஊரு மட்டுமில்லாமல் எல்லாப் பயலுகளும் சொல்லுறானுங்களே சின்ன ஐயான்னு, அவன் இவந்தான். இவனைப் பற்றி நான் சொல்ல வேண்டியதே இல்லை, அதான் எல்லாத்தையும் நீயே பார்த்துட்டியே. ஆனாலும் நீ எதுக்கும் பயப்படாத. என்னை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது.."
கூறியவர் மனைவியிடம் கண்ணசைவினாலேயே அவளைச் சமாதானப்படுத்த சொல்லிவிட்டு தன் அறைக்குள் நுழைய, மீனாக்ஷிதான் வீட்டினுள் செல்வதா இல்லை வெளியே போவதா என்று தடுமாறிப் போனாள்.
அவள் அருகில் வந்த முத்தம்மாள் அவளது முகத்தில் விழுந்து சிதறிக் கிடக்கும் முடிகளை ஒதுக்கியவர், சக்திவேல் இறுக்கப் பிடித்திருந்ததில் கன்றிப் போய் இருக்கும் அவளது மணிக்கட்டை மென்மையாக பற்றி நெருடியவராய், "வாம்மா. அதான் பெரிய ஐயாவே சொல்லிட்டாகளே. அவரை மீறி வேலுவால எதையும் செய்ய முடியாது. ஐயா எல்லாத்தையும் பார்த்துக்குவாக. நீ வா." என்று அழைத்துச் சென்றார்.
ஆனால் அவளது மனமோ, வாய்க்கு வந்தப்படி பேசிவிட்டுச் சென்றிருந்த சின்ன ஐயாவின் மீதே நிலைத்திருந்தது.
சிமெண்டிலான தரையின் குறுக்கே காலை நேரத்து வெளிச்சம் சோம்பேறித்தனமாக ஒளிர்ந்து கொண்டிருக்க, சுவர் கடிகாரத்தின் மெல்லிய சத்தம் திரைச்சீலைகள் வழியாக வீசும் தென்றலின் மென்மையான அமைதியுடன் கலந்து கொண்டிருக்க, சில நிமிடங்களுக்கு முன்வரை அழகாய் அமைதி உறைந்துக்கிடந்த வீட்டிற்குள் புயல் போல் நுழைந்தவன், எரிமலையை வெடிக்கச் செய்துவிட்டு போய்விட்டான்.
இனி நான் இங்கு இருக்கும் ஒவ்வொரு விநாடியும் எனக்கு நரகமா?
கன்னியவளின் உள்ளம் அதன் போக்கில் இறந்து போன பெற்றவர்களிடம் அழுது கொண்டே தஞ்சம் புகுந்தது.
*************************************************
BC Arts and Science College, Tuticorin
மிகப்பெரிய பெயர் பலகையுடன் கம்பீரமாய்க் காட்சியளித்துக் கொண்டிருந்தது, ஆண், பெண் இருபாலரும் பயிலும் அந்தக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு மேல் பழமையான அந்தக் கல்லூரி 550 ஏக்கர் பரப்பளவில், அந்தப் பிராந்தியத்திற்கே பெருமை சேர்க்கும் வகையில் அழகிய சூழலில் அமைக்கப்பட்டிருந்தது.
மாலை ஐந்து மணி.
செவ்வானம் சிரிக்க, இளந்தென்றல் மென்மையாய் வீச, கல்லூரியைச் சுற்றிலும் அடர்ந்தும் உயர்ந்தும் வளர்ந்திருக்கும் மலைவேம்பு, புங்கை, அரச மரங்களின் தழைகள் தென்றலின் இசைக்கு ஏற்ப நடனம் ஆட, புன்னகை சிந்த இளம்பெண்களும், இளைஞர்களும் கல்லூரியை விட்டு வெளிவரும் நேரம், கல்லூரியின் பெருவாயிலிற்கு அருகில் சர்ரென்ற சப்தத்துடன் கீறிச்சிட்டு வந்து நின்றன, அந்த மூன்று பைக்குகள் [Motorcycles].
Benelli Leoncino 500, Moto Morini X-Cape, BMW S 1000 RR.
பல லட்சங்களை விழுங்கியிருக்கும் அந்தப் பைக்குகளைக் கண்டதும் கல்லூரி மாணவர்கள் ஆசையுடனும் ரசனையுடனும் அவற்றைத் திரும்பிப் பார்க்க, ஏனோ அந்தப் பைக்கை செலுத்தி வந்த இளைஞர்கள் அவர்கள் அணிந்திருந்த ஹெல்மெட்டைக் கழட்டாது பெண்களின் பக்கமே முகத்தைத் திருப்பியிருந்ததில், அவர்களைக் கண்டதில் சில மாணவிகளின் முகம் மட்டும் அதிர்ச்சியைத் தழுவின.
பைக்கை செலுத்தி வந்திருந்த மூன்று இளைஞர்களும் பெண்கள் ஒவ்வொருவரையும் ரசித்துப் பார்த்தவாறே மிகவும் ஸ்டையிலாக இறங்க, அவர்களின் தோற்றமும் அணிந்திருந்த ஆடைகளும் அவர்களைப் பெரும் பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்று எடுத்துக் காட்டின.
அவர்களைக் கடந்து போன ஒவ்வொரு மாணவரும் அவர்களை ஒரு முறையாவது திரும்பிப் பார்த்துச் செல்லும் அளவிற்கு அம்சமான தோரணையுடன் நின்றிருந்த மூவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டவர்கள் சில நிமிடங்கள் கடந்ததும் அருகில் இருந்த வணிக வளாகத்திற்குள் நுழைந்தனர்.
அங்கு அவர்களுக்காகவே காத்திருந்த இரண்டு இளைஞர்கள் அவர்களுடன் இணைந்துக் கொண்டனர்.
ஆகாஷ், மிதுன், ஜவகர், நிதின், சஞ்சய் என்ற பெயர்களைக்கொண்ட அந்த ஐந்து இளைஞர்களும் உற்ற நண்பர்கள்.
"Day by day, இந்தக் காலேஜில் சேரும் பெண்களின் அளவு அதிகரிச்சிட்டே போகுதுல்ல?”
ஆகாஷ் என்ற பெயர் கொண்டவன் கூற, அவனுக்கு அருகில், ஐவரில் நடுநாயகமாய் நடந்து வந்து கொண்டிருந்த மிதுன் என்பவன் பதில் கொடுத்தான்.
"யெஸ், அண்ட் ஆல்ஸோ, அது என்னவோ மற்ற காலேஜில் படிக்கும் பெண்களைவிட இந்தக் காலேஜில் படிக்கும் பொண்ணுங்க ரொம்ப அழகா இருக்கிற மாதிரி தெரியுது, ரைட்? Or அழகா இருக்கும் பெண்கள் குறிப்பா இந்தக் காலேஜைத் தேர்ந்தெடுத்து சேருறாங்களோ, என்னவோ?"
மிதுனுக்கும் ஆகாஷுக்கும் அருகில் நடந்து வந்து கொண்டிருந்த மூன்றாமவன், ஜவகர் என்ற நாமம் கொண்டவன், நடுவில் இருக்கும் மிதுனைப் பார்த்தவாறே,
"இந்த ஒரு காலேஜில் மட்டும் தான் ஸ்ட்ரிக்டா ட்ரெஸ் கோட் [dress code] ஃபாலோ பண்றாங்க. ஸோ சுடிதார்ஸ், சல்வார்ஸ் மட்டும் தான் முக்கால்வாசிப் பெண்கள் போட்டுட்டு வர்றாங்க. அதுவும் இல்லைன்னா, நம்ம நாட்டின், குறிப்பா சௌத் இந்தியாவின் ட்ரெடிஷனல் ட்ரெஸஸ், ஐ மீன் சாரிஸ் அன்ட் ஹாஃப் சாரிஸ் இது தானே அவங்க உடுத்துறது. இங்க மற்ற ட்ரஸ்களை அலவ் பண்றதில்லைன்னு ஸ்டிரிக்ட் ரூல்ஸ் வேற. ஸோ, ட்ரெடிஷனல் லுக் உள்ள பொண்ணுங்க தான மிதுன் உன் டேஸ்டே. May be அதனால் கூட உனக்கு இந்தப் பொண்ணுங்க மட்டும் அழகா தெரியலாம்." என்றான் சிரிப்புடன்.
"Could be. Homely looking girls are always my choice and without doubt they are the pretty ones."
கூறிய மிதுன் தனது இரு பக்கமும் வரும் நண்பர்களின் தோள்களில் கைளைப் போட்டவனாய்,
"என்னுடைய லிஸ்டில் இருக்கும் பெண்களின் ஃபோட்டோஸைப் பார்த்தாலே தெரியுமே, எனக்கு என்ன மாதிரியான பொண்ணுங்களை ரொம்பப் பிடிக்கும்னு. ஃபைவ் ஃபீட் ஃபைவ் இன்ச்சஸ் ஹைட்.. தெர்ட்டி சிக்ஸ் பஸ்ட் ஸைஸ்.. ட்வெண்டி சிக்ஸ் வெய்ஸ்ட் ஸைஸ்.. தெர்ட்டி ஃபோர் ஹிப் ஸைஸ்.. அன்ட் ஃபுட்வேர் சைஸ் எய்ட் (5.5″ Height, 36 Bust, 26 Waist, 34 Hip and Footwear size 8" )என்றவாறே சிரிக்க, பெண்களை அவன் தேர்ந்தெடுக்கும் ஸ்டையிலும், அவர்களுடன் அவன் ஆடும் ஆட்டமும் தெரிந்த மற்ற நால்வரும் சத்தமாய்ச் சிரித்து வைத்தனர்.
“சேன்ஸே இல்லடா. இந்தளவுக்குப் பெர்ஃபெக்டா பொண்ணுங்களைத் தேடிப் பிடிக்கிறதில் எனக்குத் தெரிஞ்சு உன்னை மாதிரி கெட்டிக்காரன் வேற யாருமே இல்லை.”
சஞ்சய் கூற, “அடேய், அதே மாதிரி இவனுக்குப் பொண்ணுகளும் அமையுதுங்கடா. அதான் பெரிய விஷயமே. அந்தளவுக்கு லக்கிடா இவன்.” என்று மிதுனைப் புகழ்ந்தான் நிதின்.
நண்பர்களின் புகழாரத்தோடு வாங்க வேண்டியதை வாங்கியவனாய் வணிக வளாகத்தினை விட்டு வெளியே வந்த மிதுனின் பார்வை மீண்டும் கல்லூரியின் வாயில் அருகே நின்று கொண்டிருந்த இளம்பெண்களின் மீது படிந்தது.
அதனில் தனக்கான பாவையை அவனது கண்கள் தேடின.
அதே நேரம், மருதூர்குளத்தில் மார்த்தாண்ட நாடாரின் வீட்டில் முத்தம்மாளின் தனி அறைக்குள் கைகளைப் பிசைந்து கொண்டிருந்த மீனாக்ஷியின் முகம், 'இருக்கிற சூழ்நிலையில் இது தேவையா?' என்ற எண்ணத்தில் களையிழந்து கிடந்தது.
இன்னும் சில நாட்களில் அவர்களின் குடும்பத்தில் நடக்கவிருக்கும் பூஜைக்கு ஏற்ற விதத்தில் கட்டுவதற்கு மீனாக்ஷிக்கு பட்டுப்புடவை எடுத்திருந்தார் முத்தம்மாள்.
அணிந்திருந்த பழைய உடையோடு தங்களின் இல்லம் வந்திருந்தவளுக்கு அவருக்குத் தெரிந்த வகையில் ஆடைகளை அவர் வாங்கிக் கொடுத்திருக்க, ‘ஆனால் நல்ல நாள் அதுவுமா பட்டுப்புடவைக் கட்டினால் நன்றாக இருக்கும், நம்ம பொண்ணுக்கு எடுக்குற மாதிரி எடுத்துக்கொடு முத்து..’ என்று மார்த்தாண்டம் கூறவும், மகிழ்ச்சியுடன் தன் மகளுக்கு எடுப்பது போல் அத்தனை அழகுடன் விலையுயர்ந்த ஒரு புடவையையும் எடுத்துக் கொடுத்திருந்தார்.
அதற்கான ரவிக்கையைத் தைக்க அளவெடுக்க வந்திருந்த தையல்காரப் பெண் மீனாக்ஷியின் பேரழகில் இலயித்தவாறே அளவெடுத்தவள்,
" ‘இப்போ வெறும் ரவிக்கை மட்டும் தச்சுக்கொடு, வேற ஏதாவது ட்ரெஸ் எடுத்தால் அப்ப உன்னைக் கூப்பிடுறேன். அப்ப வந்த மத்ததுக்கு அளவெடுத்துக்க’-ன்னு பெரியம்மா சொன்னாங்க மீனாக்ஷி. ஆனால் நான் சுடிதார், லெஹங்கான்னு எல்லாத்துக்குமே அளவு எடுத்துட்டேன். சேன்ஸே இல்லை. உங்களைப் பார்த்ததுமே இது மாதிரி அழகான பொண்ணைப் பார்த்ததே இல்லையேன்னு நினைச்சேன். இப்போ அளவெடுக்கும் போது, இந்த அழகுக்கு ஏத்த வடிவான உடல் உங்களுக்குன்னு புரியுது. குறைஞ்சது அஞ்சு அடி அஞ்சு அங்குலமாவது வளர்த்தி இருப்பீங்க. அதே போல் 36, 26, 34-ன்னு செதுக்கி வைச்ச சிற்பம் மாதிரி வடிவம். பொண்ணுங்களே பார்த்துப் பொறாமைப்படும் அழகுங்க மீனாக்ஷி உங்களுக்கு.." என்றவள் முடிப்பதற்குள்,
"நீ கண்ணு வைக்காத தாயி.. போ, போய் ரவிக்கையை நல்லாத் தச்சுட்டு வா, அது போதும். நீ சொல்ற மத்ததை எல்லாம் பொறவு பார்த்துக்கலாம்." என்று அவளை வழியனுப்பி வைத்தார் முத்தம்மாள்.
அதே நேரம், தையல்காரப் பெண்ணின் அளவுகள் பல மைல்களுக்கு அப்பால் எனக்கும் கேட்டதோ என்பது போல், கல்லூரிக்கு அருகில் இருந்த வணிக வளாகத்திற்குள் இருந்து வெளியே வந்திருந்த மிதுன், தனது பைக்கில் ஏறும் நேரம் ஏதோ எதிரொலிப்பது போல் தோன்றியதில் சுற்றுமுற்றும் பார்த்தவன், குறிப்பாக ஒன்றும் அவனது கவனத்தைக் கவராததில் யோசனையுடன் தனது பைக்கை சீறவிட்டான்.
தொடரும்.
References/Translation:
(Could be. Homely looking girls are always my choice and without doubt they are the pretty ones. - இருக்கலாம். குடும்பப்பாங்கானத் தோற்றம் கொண்ட பெண்கள்தான் எப்போதும் என் விருப்பம், சந்தேகமே இல்லாமல் அவர்கள்தான் அழகானவர்கள்.)