மீரா (மித்ரா)
The Eternal Echoes of Her Heart!
அத்தியாயம் - 10
*****************************
செக்கச்செவேலென்ற நிறம் கொண்ட இஷானி மேத்தா இப்பொழுது கோபத்திலும் ஆங்காரத்திலும் விஸ்வரூபம் எடுத்திருந்ததில், அவளது தேகம் சிகப்பு கங்காய் ஜொலிப்பது போல் இருந்தது அவளது தந்தைக்கு.
அவரது மகள் தன்னிடம் வந்து ஆர்யாதித்யாவை நான் திருமணம் புரிந்தே ஆகவேண்டும் என்று சொன்ன நாள் அவரது நினைவிற்கு வந்தது.
'அந்தத் திமிர், கர்வம், ஆணவம் இதெல்லாம் தான் டாட் எனக்கு அவர்கிட்ட பிடிச்சிருக்கு. அவருக்கு முன்னாடி நிற்கிறதுக்குக் கூடப் பயப்படற மக்கள் தான் இந்த உலகத்தில் இருக்காங்க. அவரை எதிர்த்து பேசற ஒருத்தன் கூட இன்னமும் பிறக்கவே இல்லை. அந்த ஆர்யாதித்யா எனக்கு வேணும். அவர் எனக்கு மட்டுமே!'
ஆக, ஒருவருக்கும் அடங்காதவன் அந்த ஆர்யாதித்யா என்று நீயே அன்று கூறினாய். உன் காதலின் பின் இருந்த possessiveness-ம் எனக்குத் தெரியும். அதே போல் அவனை உனக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவன் தந்தையிடம் நான் கேட்டதுமே, அவன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டது ஏன் என்றும் எனக்குத் தெரியும்.
இந்தியாவின் கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருப்பவன் நான். எனது ஒரே செல்ல மகள் நீ. உன்னை வைத்து முதலிடத்தைத் தான் பெற்றுக்கொள்ளலாம் என்பது மட்டுமல்ல, அவனது சொத்துகளையும் இணைத்தால் அவனை மிஞ்ச இனி இந்தியாவில் பல தசாப்தங்களுக்கு ஒருவருமே இல்லை என்ற பெருந்திட்டத்தால் தான் அவன் உன்னைத் திருமணம் புரிய சம்மதித்ததே.
ஆனால் அதை எல்லாம் மறந்து அவன் ஒரு சாதாரணப் பெண்ணை மணந்திருக்கின்றான் என்றால், அவனது மனதில் இவ்வளவு பெரிய வேட்கைகளையும் கனவுகளையும் மீறி ஏதோ ஒரு வைராக்கியம் இருக்கின்றது. அதற்காக மட்டுமே அவன் தன் லட்சியங்களைக் கூடப் பணயம் வைத்திருக்கின்றான்.
அப்படி என்றால் அந்தத் திருமணம் எதற்காக? அந்தத் திருமணப் பந்தத்தில் இருந்து இனி அவன் வெளிவருவானா? அப்படிப்பட்ட அந்த ஆர்யாதித்யா இனி உன்னை ஏற்றுக்கொள்வானா?
இதுவே இஷானி மேத்தாவின் தந்தை அமித் மேத்தாவின் மனதில் ஓடிக் கொண்டிருந்த எண்ணங்கள். ஆனால் அந்த நொடியில், அவரால் செய்ய இயன்றது ஒன்றும் இல்லை.
தாயில்லாத குழந்தையாகவும், தனது அத்தனை சொத்துகளுக்கும் ஒரே வாரிசாகவும் அளவுகடந்த செல்லத்தில் வளர்த்த மகளின் நெஞ்சை நொறுக்கும் கதறல் எதற்குமே அசராத அவரின் மனதையே அந்தக் கணத்தில் பதறச் செய்தது.
இதன் விளைவு நிச்சயமாகப் பெரும் அபாயத்தைக் கொண்டுவரும். முதலாவது அவளது ஆங்காரம் அவளையே விழுங்கிவிடும்.
இரண்டு, இளம் வயதிலேயே திமிரும் ஆக்ரோஷமும் கொண்டிருக்கும் அந்த ஆர்யாதித்யாவின் பகையைச் சம்பாதித்துவிட்டால், இத்தனை ஆண்டுகள் நான் இரத்தமும் வியர்வையும் சிந்தி கட்டியெழுப்பிய இந்தத் தொழில் சாம்ராஜ்யம் சுக்குநூறாகச் சிதறிப் போகும் அபாயமும் உள்ளது.
எல்லாவற்றையும் தெளிவாக அறிந்திருந்தும், அமைதியாக அமர்ந்து கணக்கிட்டுக் கொண்டிருந்தவர், இறுதியில் தனது புத்தியின் எச்சரிக்கையைத் தள்ளி வைத்து ஆபத்தான முடிவுகளை எடுக்கத் தீர்மானித்தார். அதன் முதற்கட்ட காயை நகர்த்தும் விதமாக, மித்ரலட்சுமியின் மீது ஆர்யாவுக்கு உள்ள காதலை சோதிக்க மட்டும் அல்ல, அதை உடைத்துப் பார்க்கவே முடிவு செய்தார்.
அந்தத் திருமணம் கட்டாயத்தின் விளைவா, அரசியல் நலன்களுக்காகச் செய்யப்பட்ட ஒப்பந்தமா, அல்லது வெறும் முகமூடி நாடகமா என்ற சந்தேகம் அவரை விடாமல் துரத்தியது.
உண்மை எதுவாக இருந்தாலும், அதை வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்ற உறுதி அவருள் தீவிரமடைய, அதற்காக எவ்வளவு பெரிய விலையையும் செலுத்த தயார் என முடிவெடுத்த அவர், ஒரு ஆபத்தான திட்டத்தை அமைதியாக வடிவமைத்தார்.
அதாவது ஆர்யாதித்யாவின் மனைவியான மித்ரலட்சுமிக்கே ஆபத்தை உருவாக்குவது, அதுவும் யாரும் சந்தேகிக்காதபடி சாதாரண விபத்தாகத் தோன்றும் வகையில். அந்தக் கணத்தில் ஆர்யா எப்படிச் செயல்படுகிறான் என்பதைக் கவனிப்பது.
அதிலேயே அவனது உண்மையான முகம் வெளிப்படும். அதை வைத்து அடுத்தக் காயை நகர்த்துவது.
ஆனால் அந்த முடிவின் பின்விளைவுகள் கொடூரமாக வெடிக்கப்போகிறது என்பதை அவர் முன்னரே கணித்திருந்தால்??
அவரது சாம்ராஜ்யத்தைச் சுக்குநூறாகச் சிதைக்க வரப்போவது ஒரு ஆர்யாதித்யா மட்டும் அல்ல, இன்னும் இரு இளைஞர்களும் என்பதை அவர் உணர்ந்திருந்தால் அந்த ஒரு கணத் தீர்மானத்தை எடுக்க அவர் இதயம் ஒருபோதும் சம்மதித்திருக்குமா!
**************************************
ஆர்யாவின் இல்லம்..
அத்தகைய பிரம்மாண்டமான மூன்றடுக்கு வீட்டிற்குள் தன் கையை இறுக்கமாகப் பிடித்தபடி அழைத்து வந்த கணவன், அடுத்த நொடியே தமக்கையிடம் அவளை ஒப்படைத்து விட்டு திரும்பிச் செல்ல, அவன் விலகிச் செல்லும் அந்தப் பாதையை இமைகளைக் கூடச் சிமிட்டாது பார்த்தபடியே நின்ற மித்ரலட்சுமியின் கையை அதிதி மெதுவாக பற்றிக் கொண்டாள்.
"மித்ரலட்சுமி, அது வந்து..." என்றவள் சட்டென நிறுத்தி, "உன்னை உன் வீட்டில் எல்லாரும் எப்படிக் கூப்பிடுவாங்க?" என்றாள் சின்ன முறுவலுடன்.
அவள் கேட்டதும் சட்டென அவளைத் திரும்பிப் பார்த்த மித்ரலட்சுமி, "லட்சுமின்னு கூப்பிடுவாங்க.. ஆனா.." என்று எதுவோ சொல்ல வந்தவள் முடிக்காது நிறுத்தினாள்.
"ஆனா? ஏன் நிறுத்திட்ட, சொல்லு."
கணவன் தன்னை மித்ரா என்றழைப்பதை கூற வந்த மித்ரலட்சுமிக்கு அதே சமயம் ஆருஷும் தன்னை அவ்வாறே அழைத்தது நியாபகத்திற்கு வந்தது.
எதற்குத் தேவையில்லாமல் இதைப் பற்றிப் பேசி பிரச்சனையை வரவழைக்க வேண்டும்? என்று எண்ணியவள், சொல்ல வந்த வார்த்தைகளை அப்படியே விழுங்கிக் கொண்டாள்.
அவளது அமைதியை கவனித்த அதிதியின் புன்னகை இன்னும் விரிந்தது.
“சரி... நானும் உன்னை லட்சுமின்னே கூப்பிடுறேன். இங்க இருக்கிற எல்லார்கிட்டயும் உன்னை அப்படியே கூப்பிடச் சொல்றேன். அப்போ இந்த வீடும் உனக்கு உன்னோட வீடு மாதிரி தோணும்...”
கூறியவளை விழிகள் அகல விரியப் பார்த்தாள் சின்னவள்.
'எல்லாரையுமா?' என்று கேட்கத் தோன்றியது. ஏனெனில் நிச்சயமாக உங்களது தம்பியை அப்படி அழைக்க வைக்க முடியாது என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டவளாய் அமைதியாக இருக்க, அவளது அழகிய விழிகளில் மறைந்திருந்த எண்ணங்களை ஆராய்வது போல் ஆழமாகப் பார்த்துக் கொண்டிருந்த அதிதி, அவளாகவே மீண்டும் தொடர்ந்தாள்.
"ஆர்யா எப்பவுமே இப்படித்தான் லட்சுமி. அதுவும் குறிப்பா சொல்லணும்னா, எங்க டாட் எங்களோட எல்லாப் பிஸ்னஸ்களையும் அவன் கையில ஒப்படைச்ச அந்த நிமிஷத்திலிருந்து இப்போ வரைக்கும், அவனுக்குத் தெரிஞ்ச ஒரே விஷயம் பிஸ்னஸ் தான். அவனோட முழு வாழ்க்கையையும் அதுக்குள்ளேயே புதைச்சுட்டான். சரியான நேரத்துக்குச் சாப்பிட மாட்டான், சரியான நேரத்துக்குத் தூங்க மாட்டான். அவனுக்கு ஓய்வுன்னு ஒரு விஷயமே கிடையாது. சில நேரம் பார்த்தா, அவன் மனுஷனா இல்லாம ஒரு இயந்திரமா மாறிட்டானோன்னு கூடத் தோணும். ஆனா அதுதான் என் தம்பி ஆர்யா. அதாவது, இப்போ உலகம் முழுக்கத் தெரிஞ்சிருக்கிற டேவ் டெக்னாலஜிஸின் சி.இ.ஓ ஆர்யாதித்யா தேவன். எல்லாருக்கும் அவன் ஒரு வெற்றிகரமான தொழிலதிபர், ஆனால் அவனுடைய தற்போதைய வாழ்க்கை இது தான்."
மித்ரலட்சுமியும் சிறிதே புன்னகைத்தவளாய், "அத்த எங்க வீட்டுக்கு ஒரு தடவை வந்தாங்க. அப்பவே சொன்னாங்க, எனக்கு மூணு பிள்ளைங்கம்மா, அதுல மூத்த பெண் அதிதி தேவன். அப்படியே அவங்க அப்பா மாதிரியே தங்கமான குணத்தை உரிச்சு வச்சிட்டு பிறந்திருக்குற பொண்ணுன்னு. நீங்க பேசுறதையும் பழகுறதையும் வச்சுப் பார்த்தால், நீங்கதான் மகாதேவன் மாமாவுக்கு ரொம்பப் பிடிச்ச அதிதி தேவனா இருக்கணும், சரியா?" என்றதில் ஏதோ ஒரு இனம்புரியாத நெகிழ்ச்சி அதிதியின் மனதை மெதுவாகத் தொட்டதில் அக்கணமே அவள் பக்கம் சாய்ந்து போனது அவளது மென்மையான இதயம்.
"ம்ம். அதே மாதிரி எங்க டாட் இன்னொன்னும் சொல்வாங்க. அவங்க கூடப் பிறந்தவங்களில் மூணு பேர் ஆம்பளைப்பசங்க. கடைசியா பிறந்தது ஒரு பொண்ணு, அவங்க பெயர் சுஜாதா. சுஜாதாவுக்கு மற்ற அண்ணன்கள் மேல பாசம் இருந்ததுன்னாலும், என்னவோ தெரியலை என் மேல மட்டும் அவளுக்கு உயிர். இப்போ கொஞ்ச நாளா கேள்விப்படுறேன் சுஜாதாவுக்குப் பொறந்த மகள் அப்படியே அச்சுவார்த்தார் போல அவளை மாதிரியே பிறந்திருக்கான்னு. அப்படிப் பார்த்தா அவ மகளும் சுஜாதா மாதிரியே பாசத்துக்கு அகராதி நான்தான்னு பிறந்திருக்கவும் வாய்ப்புண்டுன்னு. So, எங்க டாடியே உன்னை இவ்வளவு பெருமையோட பாராட்டி இருக்கறதைப் பார்க்கும் போது, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவள் நீதான்னு எனக்குத் தெரியுது லட்சுமி. அதனால் ஆத்மார்த்தமான அன்போடவும் பாசத்தோடவும், என் அப்பாவுடைய இடத்தில் இருந்து, அவருடைய அன்பான தங்கை, அதாவது என் அத்தை சுஜாதாவின் மகளை நான் இந்த வீட்டின் மருமகளாக வரவேற்கின்றேன்.. Welcome my dear Lakshmi!"
பிறந்ததில் இருந்து இந்த இருபத்திரண்டு வருடங்களாய் தாய்க்குப் பிறகு, பாட்டி சாவித்திரியைத் தவிரத் தன்னை யாருமே இந்தளவிற்குப் பாசத்துடன் அணுகியதில்லை என்று அந்நிமிடம் மித்ரலட்சுமிக்குத் தோன்றியது.
இனி வரும் காலம் எப்படி இருக்கப் போகின்றது என்று அவளுக்குத் தெரியாது!!!!
ஆயினும், பல வருடங்கள் தன் அன்னையும் மாமனும் ஒருவரையொருவர் நேரில் பார்த்துக் கொள்ளாமல், வெவ்வேறு திசைகளில் வாழ்ந்திருந்தாலும், அவர்களுக்குள் இருந்த அந்தப் பாசப்பிணைப்பு மட்டும் ஒருபோதும் குறையவில்லை என்பதை உணர்ந்தாள் மித்ரலட்சுமி.
தூரம் என்பது உடல்களுக்கு மட்டுமே, உண்மையான உறவுகளுக்கு அல்ல என்பதை அந்த நொடி அவள் புரிந்து கொண்டாள்.
'இத்தனை ஆண்டுகள் பிரிந்திருந்தும், ஒருவருக்காக ஒருவர் இவ்வளவு அன்பை சுமந்து வாழ்ந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு ஈடாக என்னால் முடிந்ததை நான் செய்ய வேண்டும். தேவையானால், என் வாழ்க்கையையே தியாகமாகக் கொடுக்க வேண்டியிருந்தாலும் மகாதேவன் மாமாவின் குடும்பத்திற்காக அதைச் செய்வேன்.'
முடிவெடுத்தவளாய் கணவனின் மூத்த தமக்கையான அதிதியைப் பின் தொடர்ந்தாள்.
முதலில் அவர்கள் நுழைந்தது பூஜை அறை.
அங்கு மும்மூர்த்திகளில் ஒருவரான, பிறப்பும் இறப்பும் இல்லாத பரம்பொருளான பரமசிவனின் கருணைமிக்க வடிவம் மிகப்பெரிய படமாக வைக்கப்பட்டிருந்தது.
சிவபெருமானின் அருகில் முருகன், விநாயகர், இலட்சுமி, சரஸ்வதி என மற்ற தெய்வங்களின் திருவுருவப் படங்களும் இடம் பெற்றிருந்தன. மலர்களின் நறுமணமும், அகர்பத்தியின் மெல்லிய வாசனையும் நிறைந்திருந்த அந்தப் பூஜை அறை, ஒரு சிறிய கோவிலின் புனித உணர்வை அளித்தது.
தெய்வங்களின் படங்களின் முன் பணிவுடன் நமஸ்காரம் செய்தவள் மெதுவாக எழுந்தவுடன் சுற்றும் முற்றும் ஒரு பார்வை செலுத்தி, "மாமாவோட படம் எதுவும் வீட்டில் இல்லையா?" என்றாள்.
"இல்லை லட்சுமி... ஏனோ டாடியோட படத்தை வீட்டில் எங்கேயும் வைக்கக் கூடாதுன்னு ஆர்யா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டான்..."
"ஏன்?"
"ப்ச்... அது எனக்குத் தெரியலை லட்சுமி. மாம், டாட் ரெண்டு பேரும் சேர்ந்து எடுத்துக்கிட்ட போட்டோஸும், நாங்க எல்லாரும் இருக்கிற ஃபேமிலி போட்டோஸும் வீட்டில் இருக்கு. ஆனால் டாட் மட்டும் தனியா இருக்கிற போட்டோ எதுவும் வீட்டில் இருக்கக் கூடாதுன்னு அவர் இறந்ததுக்குப் பிறகு ஆர்யா ஸ்ட்ரிக்டா சொல்லிட்டான்."
மித்ரலட்சுமி கேள்விக்குறியோட இன்னமும் தன்னைப் பார்த்திருப்பதைக் கண்டு அவளது கரம் பற்றிப் பூஜை அறையைவிட்டு வெளியில் அழைத்து வந்த அதிதி, "சின்ன வயசுல இருந்தே இந்த உலகத்துல ஒரே ஒருத்தரோட பேச்சை மட்டும் ஆர்யா கேட்பான்னா, அது எங்க டாட் சொல்றதை மட்டும் தான் லட்சுமி. எங்க மாம்-ஐ விடவும் அவனுக்கு டாட் மேல தான் அதிகப் பாசம். சொல்லப் போனா அவனுக்கு டாட் தான் உலகமே. எங்க மாம் கூட அவனுக்கு ரெண்டாம்பட்சம் தான்." என்று சிறு புன்னகையுடன் கூறியவளின் முகத்தில் அடுத்தக் கணம் ஒரு மெல்லிய வருத்தம் படர்ந்தது.
"ஆனா அவன் வளர வளர எல்லாமே மாறிடுச்சு, லட்சுமி.. ஒரு காலத்துல அட்லீஸ்ட் முக்கியமான விஷயத்துல மட்டுமாவது டாட் சொன்னா கேட்கிறவனா இருந்தவன், இப்போ யார் சொன்னாலும் கேட்காதவனா மாறிட்டான். அவன் வாழ்ற உலகத்துல அவன் எடுக்குற முடிவு தான் சரி, அவன் சொல்றது தான் சட்டம்னு நினைக்கிற அளவுக்கு அவனுக்குள்ள நிறைய மாற்றங்கள் வந்துடுச்சு. இன்னும் சொல்லப் போனால் யாருக்குமே அடங்காதவனா மாறிட்டான்..
ஆனா ஒரே ஒரு விஷயத்துல மட்டும் அவன் எப்பவும் மாறவே இல்லை. அது எங்க டாட் மேல அவன் வைச்சிருந்த பாசம். அதுக்காக அவர் சொல்ற எல்லாத்தையும் அவன் கேட்டான்னு சொல்ல முடியாது. ஆனால் அவர் மேல அவன் எவ்வளவு பாசம் வைச்சிருந்தான்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். அவரோட திடீர் மரணம் அவனை ரொம்பவே உடைச்சுப் போட்டுடுச்சு. அதனால் தானோ என்னவோ அவன் அவர் இறந்ததற்குப் பிறகு அவர் தனியா இருக்கும் ஃபோட்டோஸ் எல்லாத்தையும் கழற்ற சொல்லிட்டான். அது மட்டும் இல்லை லட்சுமி, அதிசயத்திலும் அதிசயமே எங்க டாட் பிறந்த ஊரான பூவசரம்பட்டிக்கு அவன் போனது தான்...
அவன் அங்க போறான்னு டாடியோட அட்டர்னி ராகவ் அங்கிள் சொன்னப்போ, எனக்கும் மாம்க்கும் எவ்வளவு ஆச்சரியமா இருந்துச்சு தெரியுமா? அதுவும் மாம் எத்தனையோ முறை கூப்பிட்டும் போகாதவன், திடீர்னு தானாகவே அங்க போறான்னு சொன்னதும் மாம் முதல்ல அதை நம்பவே இல்லை. அதுவே பெரிய அதிசயம்னு நினைச்சோம். ஆனால் அங்க போனவன், வந்ததும் வராததுமா உன் கழுத்துல தாலி கட்டிட்டான்னு மாம் சொன்னப்போ, எனக்கு நிஜமாவே மயக்கம் வராத குறைதான்." என்றவள் சட்டென நிறுத்தினாள்.
பின் தொண்டையை மெதுவாகச் செருமியவள், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, "ஆனால் எங்க எல்லாருக்கும் ஒரு விஷயத்துல ரொம்பச் சந்தோஷம் லட்சுமி. எங்க டாட்க்கு ரொம்பப் பிடிச்ச, அவரோட தங்கையோட மகள், இப்போ என் தம்பியோட மனைவியா எங்க வீட்டுக்கே வந்திருக்க. இதைவிட வேற என்ன சந்தோஷம் எங்களுக்கு வேணும்? மத்த எல்லாத்தையும் எங்க டாட் மேல இருந்து பார்த்துப்பார். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கு." என்று கூறியபோது, அதிதியின் விழிகளில் தேங்கி நின்ற கண்ணீர் அவள் வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த அன்பையும் ஏக்கத்தையும் வெளிப்படுத்தியது.
பதில் எதுவும் பேசாமல் மித்ரலட்சுமி அமைதியாக நிற்க, அவளது கரத்தைப் பற்றியபடியே மூன்று தளங்களைக் கொண்ட அரண்மனையைப் போன்ற அந்தப் பிரம்மாண்டமான வீட்டைச் சுற்றிக் காட்டினாள் அதிதி.
இறுதியாக ஆர்யாவின் படுக்கை அறையை நோக்கி அழைத்துச் சென்றவள், உள்ளே நுழையப் போன அந்த நொடியில் சட்டென நின்றாள்.
அவள் நின்றதைக் கண்டு யோசனையுடன் மித்ரலட்சுமி அவளது முகத்தைப் பார்க்க, "இது ஆர்யாவோட ரூம். இதுக்குள்ள தான் இருக்கு அவனுடைய பெட்ரூம். அதாவது இனிமேல் உங்க ரெண்டு பேருக்குமான பெட்ரூம். ஸோ, அவனே வந்து உன்னை அவன் ரூமுக்குள் கூட்டிட்டுப் போறது தான் நல்லா இருக்கும்." என்று அதிதி மெதுவாகக் கூறியதும், சிரிப்பதா, அழுவதா என்று கூடத் தெரியாமல் ஒரு கணம் திகைத்து நின்றாள் மித்ரலட்சுமி.
அதன் பின்னர் வீட்டுப் பணியாளர்களையும் வேலையாட்களையும் அழைத்த அதிதி, அவர்களுக்கு மித்ரலட்சுமியை அறிமுகப்படுத்த, வீட்டினராலேயே அன்று நடந்த சம்பவங்களை இன்னும் நம்ப முடியவில்லை என்றால், ஆர்யாவின் பிடிவாதமான குணத்தையும், யாருக்கும் வளைந்து கொடுக்காத அவனது இயல்பையும் அறிந்திருந்த வேலையாட்களின் அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
விழிகள் வெளியே பிதுங்கும் அளவுக்கு மிரட்சியில் உறைந்திருந்த அவர்களைப் பார்த்த அந்த நொடியிலேயே, ஆர்யா எப்படிப்பட்டவன் என்பதை மித்ரலட்சுமி மீண்டும் மீண்டும் உணர்ந்து கொண்டாள். அவன் இப்படி நடந்து கொண்டது அவர்களுக்கு ஆச்சரியம் அல்ல, நம்ப முடியாத அதிசயம் என்பதை அவளது மனம் புரிந்து கொண்டது!
மானசீகமாகக் கடவுளிடமும், அன்னையிடமும், மாமா மகாதேவனிடமும் வேண்டிக் கொண்டவள் அதிதி சென்றதும் அவ்வீட்டின் மற்ற இடங்களையும் சமையற்கட்டையும் சுற்றிப் பார்த்தவாறே எப்படியோ நேரத்தைக் கடத்திக் கொண்டிருக்க, ஒருவழியாகச் சந்தியாவும் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.
வந்தவர் மித்ரலட்சுமியிடம் ஒரு கேள்வி கூடக் கேட்கவில்லை. மாறாக மகள் அதிதியிடம் நடந்த அனைத்தையும் விசாரித்தவர், அதன் பிறகு எதுவும் பேசாமல் அமைதியாகிவிட்டார்.
அந்த அமைதியிலேயே நேரமும் மெதுவாக நகர்ந்தது.
ஏறக்குறைய இரவு பத்து மணியை நெருங்கிய பொழுது, ஸோஃபாவில் அமைதியாக அமர்ந்திருந்த அன்னையை நெருங்கி அமர்ந்தாள் அதிதி.
"மாம்.."
மகளின் அழைப்பில் சந்தியா திரும்பிப் பார்க்க, சுற்றிலும் ஒரு முறை பார்வையைச் செலுத்திய அதிதி மீண்டும் அன்னையின் புறம் திரும்பியவள், சிறிது தயக்கத்துடன், "மாம்... ஃபர்ஸ்ட் நைட்?" என்று வினவினாள்.
அவள் கேட்க வருவது சந்தியாவிற்குப் புரிந்தது. ஆனால், அதற்குச் சந்தியா எந்தப் பதிலும் கூறவில்லை.
அமைதியாக இருந்த அன்னையின் போக்கில் ஏதோ ஒரு வித்தியாசத்தைக் கண்ட அதிதி அவரது மடி மீது மெதுவாகக் கை வைத்தவளாய் தயக்கத்துடன், "மாம்... இது ப்ராப்பரா பெரியவங்க பார்த்து, தேதிகள் குறிச்சு, நிச்சயம் பண்ணி நடந்த கல்யாணம் இல்லைன்னு எனக்கும் புரியுது. ஆனால் நீங்களே சொன்னீங்க, ஆர்யா லட்சுமி கழுத்துல வெறும் தாலி மட்டும் கட்டலை, ரிஜிஸ்டர் ஆபீஸ் போய் இந்தக் கல்யாணத்தைச் சட்டப்படி பதிவு வேற செய்திருக்கான்னு. ஏதோ ஒரு காரணத்துக்காக அவன் இந்தக் கல்யாணத்தைச் செய்திருந்தாலும், அதை ரிஜிஸ்டர் வரைக்கும் கொண்டு போயிருக்கான்னா, அதுக்குப் பிறகு ஃபர்ஸ்ட் நைட்டுக்கும் அவன் சம்மதிக்க வாய்ப்பு இருக்கும்தானே?" என்றாள்.
ஆர்வமுடன் வெள்ளை மனம் கொண்டவளாக அன்னையின் பதிலை அதிதி எதிர்பார்த்திருக்க, ஆனால் அதற்குச் சந்தியா கூறிய பதில் அவளை எதிர்பாராத பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
"வாட்? மாம், என்ன சொல்றீங்க?"
"அங்க தான் உன் தம்பி என்னையே ஏமாத்திட்டான் அதிதி.. மித்ரலட்சுமி, I mean, லட்சுமி கழுத்துல தாலி கட்டியதும், அவள் கையைப் பிடிச்சு கார்ல ஏற்றினான். அவன் நேரா ஏர்போர்ட்டுக்குத் தான் கூட்டிட்டுப் போகப் போறான்னு நினைச்சேன். ஆனால் யாரும் எதிர்பார்க்காத மாதிரி நேரா ரிஜிஸ்டர் ஆஃபிஸ்க்கு போய், கல்யாணத்தைச் சட்டப்படி பதிவு பண்ணிட்டான். அது ஆர்யாவோட இயல்பு இல்லையே. அதனாலதான் ஏன் திடீர்னு இந்த அளவுக்கு இறங்கி வந்திருக்கான்னு எனக்குள்ள ஒரு கேள்வி இருந்துகிட்டே இருந்தது. ஆனா, ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சதும், 'நீங்க தனியா வாங்க, நான் இவளை என்னோட ப்ளேன்ல கூட்டிட்டு போறேன்..'ன்னு சொல்லிட்டு அவன் மட்டும் கிளம்பிட்டான். அதுக்குப் பிறகுதான் எனக்குப் பெரிய சந்தேகமே வந்தது. அதனால அந்த ரிஜிஸ்டர் ஆஃபிஸ் பத்தி விசாரிச்சுப் பார்த்தேன். அப்போ தான் தெரிஞ்சது அவன் ஆடிய ஆட்டமே."
"அப்படின்னா இந்தக் கல்யாணம்?"
முடிக்க முடியாமல் திணறலுடன் இழுத்த அதிதி சந்தியாவை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"Yes, நீ நினைக்கிறது கரெக்ட். அது உண்மையான ரிஜிஸ்டர் ஆஃபிஸ் இல்லை அதிதி. அவன் தான் அப்படிச் செட் செய்திருக்கணும். எப்போ லட்சுமியை அவன் கல்யாணம் பண்ணிக்கிட்டானோ, அப்பவே அவளுடைய கார்டியனா, அவளுடைய சொத்துகளுக்கு உரிமை உள்ளவனா அவன் மாறிட்டான். ஒருவேளை அவளுடைய மற்ற மாமன்களோ, அவர்களுடைய பசங்களோ அந்தச் சொத்துகளுக்கு உரிமை கேட்டு கோர்ட்டுக்குப் போனா அந்த ரிஜிஸ்டர் ஆஃபிஸ்ல நடந்த கல்யாணத்தோட போட்டோக்களையே ஆதாரமா ஆர்யாவால் பயன்படுத்த முடியும். அப்படி ஒரு ஸீன் அவன் க்ரியேட் பண்ணிருக்கான். அதை வச்சு பார்க்கும் போது அவன் வெறும் கல்யாணம் பண்ணிக்கல, ஆனால் அதுக்குப் பின்னாடி வேற ஏதோ கணக்கு இருக்கு."
"ஆனா நீங்க சொல்ற மாதிரி அது உண்மையான ரிஜிஸ்டர் ஆஃபிஸே இல்லையே? ஸோ, எப்படி அவன் அந்த டாக்குமென்ட்ஸை கோர்ட்டுல சமர்ப்பிக்க முடியும்?"
"அவன் உன் தம்பி ஆர்யாதித்யா தேவன் அதிதி. இதைப் பற்றி அவன் யோசிச்சிருக்க மாட்டான்னு நினைக்கிறியா?"
"அப்படின்னா அந்தப் பொய்யான ரிஜிஸ்டர் ஆஃபிஸ் ஸீன், ஐ மீன், அந்தக் கண் துடைப்பு யாருக்கு?"
"தெரியலை... ஒருவேளை லட்சுமியை கல்யாணம் பண்ணிக்கவிருந்த அந்த ஆருஷுக்காக இருக்கலாம்."
"மாம்... இதெல்லாம் ட்ராமான்னு நீங்க கண்டுபிடிச்சிருக்கீங்கன்னா, அந்த ஏ.ஏ. குரூப் ஆஃப் கம்பெனிஸோட சி.இ.ஓ ஆருஷ் ஆதித்யா கண்டுபிடிச்சிருக்க மாட்டாரா?"
"யெஸ், அதை நானும் யோசிச்சேன். ஆனால் அப்படி ஈஸியா எல்லாரையும் ஏமாற்ற முடியாதுன்னு ஆர்யாவுக்குத் தெரியாதா என்ன? ஒரு வேளை நிஜ ரிஜிஸ்டர் ஆஃபிஸில் இப்படி ஒரு கல்யாணம் நடந்துட்டு இருக்குங்கிற மாதிரி அவன் செட் பண்ணிருந்தான்னா? அவன் நினைச்சால் அவனால் எதுவும் செய்ய முடியும் அதிதி, அது உனக்கும் தெரியும்."
"அப்படின்னா இதெல்லாம் செம்ம ட்ராமா? But why?"
அதிதியின் அந்தக் கேள்வியை, விமானப் பயணத்தின் மொத்த நேரமும் தன் மனதிற்குள் திரும்பத் திரும்ப அலசி ஆராய்ந்திருந்தார் சந்தியா.
ஆனால் அவரால் கூடத் தன் மகன் போட்டிருந்த திட்டங்களையும், ஒரு அப்பாவிப் பெண்ணின் கழுத்தில் அவன் கட்டிய தாலிக்குப் பின்னால் ஒளிந்திருந்த உண்மையான காரணங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை.
"அதிதி... உன் தம்பி என் மூளையையே குழப்பிட்டான்."
"மாம் எனக்குப் புரியுது மாம்... ஆனாலும் இதை அப்படியே விட்டுட முடியாதுல்ல? ஏன் ஆர்யா இவ்வளவு மெனக்கெடணும்? அவன் நினைச்சிருந்தா, அவன் அங்கே போகாமலேயே ஒரு மேரேஜ் சர்ட்டிஃபிகேட்டைக் கூட ரெடி பண்ணியிருக்கலாமே. அவனுக்கு இல்லாத பவரா?"
தாங்கள் பேசிக் கொண்டிருக்கும் விஷயங்கள் எங்கே மித்ரலட்சுமியின் காதுகளுக்குச் சென்று விடுமோ என்ற பதற்றத்தில், அவளைத் தேடிய விழிகளுடன் சுற்றிலும் பார்த்தார் சந்தியா.
அவள் அங்கு இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே, "அதிதி, இன்னும் கொஞ்ச நேரம் அதைப் பற்றி நான் பேசிட்டு இருந்தேன் என் தலை வெடிச்சாலும் வெடிச்சிடும்" என்றார் வருத்தத்துடன்.
"புரியுது மாம். ஆனால் என் மனசே ஆறலை மாம். லட்சுமியைப் பார்த்தால் ரொம்பப் பாவமா இருக்கு. அவளைப் போய் ஏமாற்ற எப்படி ஆர்யாவுக்கு மனசு வந்தது. சத்தியமா என்னால அவனைப் புரிஞ்சிக்கவே முடியலை மாம். இப்ப மட்டும் இல்லை, எப்பவுமே. ஆனால், அதெல்லாம் இருக்கட்டும். அவன் ஏன் உங்களை அவனோட ப்ளேன்ல கூட வர வேண்டாம்னு சொல்லிட்டான்?"
"அவனுடைய ஃபர்ஸ்ட் நைட்டையே ப்ளேன்ல அரேஞ்ச் பண்ணத்தான்..." என்று சந்தியா அமைதியாகக் கூறியதும், அதிதியின் விழிகள் அனைத்தையும் மறந்து ஒரு நொடி வியப்பில் விரிந்தன.
"வாட்? ப்ளேனிலா?"
அவளது அதிர்ச்சியைக் கண்டு சந்தியா வெகு சாதாரணமாக,"ஏன், ஃபர்ஸ்ட் நைட் ப்ளேனில் நடக்கக்கூடாதா?" என்றார்.
அதைக் கேட்ட அதிதி நம்ப முடியாத பார்வையுடன் அன்னையைப் பார்த்தவளாய், "மாம், நீங்க என்ன சின்னப்புள்ளையா? என்னுடைய ஷாக் எதுக்குன்னு உங்களுக்குத் தெரியாதா?" என்றாள்.
"தெரியும் அதிதி... ஆனால், என் காதுக்கு வந்த விஷயத்தைத்தான் நான் உனக்குச் சொன்னேன். திருச்சியிலிருந்து கிளம்பினா, ஃப்ளைட் டெல்லி வந்து சேர குறைந்தது மூன்றரை மணி நேரத்திலிருந்து நான்கு மணி நேரம் வரை ஆகும். அந்த நேரத்தை மனதில் வைத்துத்தான், 'என்னுடைய ப்ரைவேட் ரூமை வெட்டிங் நைட் ரூம் மாதிரி டெக்கரேட் பண்ணுங்க. நான் என் வைஃப்போட அங்க தான் ஸ்டே பண்ணப் போறேன்'ன்னு ஆர்யா சொல்லியிருக்கான். அதுக்கேற்ற மாதிரி அவனுடைய ப்ரைவேட் ரூமும் டெக்கரேட் செய்யப்பட்டதாகத்தான் எனக்குத் தகவல் வந்தது."
அதிர்ச்சியும் ஆவலும் கலந்த குரலில், "அப்படின்னா... அவனுடைய ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சிடுச்சா?" என்றாள் அதிதி.
ஏற்கனவே செந்நிறமாய்ப் பிறந்திருந்த அதிதியின் கன்னங்கள் மேலும் செக்கச்சிவந்து போக, ஆச்சரியத்தில் திளைத்தவள், இருந்தும் மித்ரலட்சுமியிடம் கேட்டு தெளிவடைந்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னறையில் ஸோஃபாவில் அமர்ந்தவாறே அவளை அழைத்தாள்.
அதே நேரத்தில், இரவின் அமைதியைக் கிழித்தபடி ஆர்யாவின் வெண்மை நிற ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா, அந்த அரண்மனையைப் போன்ற வீட்டின் பிரதான வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தது.
எப்போதும் ஏறக்குறைய நள்ளிரவுக் கடந்த பிறகே வீடு திரும்பும் ஆர்யா, அன்று மட்டும் ஏனோ வழக்கத்திற்கு மாறாகச் சீக்கிரமே வந்து சேர்ந்தான்.
அவன் வருகையை அறியாத அதிதி தனது எண்ணங்களில் மூழ்கியபடி, அவனது மனைவியைச் சற்று சத்தமாகவே அழைத்தாள், அந்த அழைப்பு யாருடைய காதில் விழப்போகிறது என்பதை அறியாமல்!
நார்த்தனாரின் குரலில் வீட்டின் பின்னறையில் தன்னுடைய கலக்கத்தையும் பயத்தையும் சிறுவன் அபிலாஷுடன் விளையாடியவாறே மூழ்கடித்துக் கொண்டிருந்த மித்ரலட்சுமிக்கு கேட்காதது அவளது நேரமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
திடுமென மாமன் மகனுடன் திருமணம் நடந்ததையே நம்ப முடியவில்லை என்றால், புதுத் தில்லியில், அதுவும் இவ்வளவு பெரிய வீட்டில் மருமகளாக அடி எடுத்து வைத்திருப்பது மித்ரலட்சுமிக்கு தான் காண்பது கனவா என்றே தோன்றியதில் அவளால் வீட்டிற்குள் சகஜமாக நடமாட இயலவில்லை.
அதுவும் இரு முறையே பார்த்திருந்த சந்தியாவும் பார்ப்பதற்கு ஒரு பெரிய பெண் தொழிலதிபர் போலவே தோற்றம் கொண்டிருப்பதால் அவருடனும் அவளால் சகஜமாகப் பழக இயலவில்லை.
அதிதியும் அவளது அன்னை சந்தியா வந்த பிறகு தன் கண்ணில் தென்படாததால், மித்ரலட்சுமி தனக்குப் பழக்கமான சமையலறைக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டாள். மீதமிருந்த நேரத்தைச் சிறுவன் அபிலாஷுடன் விளையாடிக் கழித்தவள், அதற்குப் பிறகு வெளியே வரவே இல்லை.
ஆகையால் முன்னறையில் இருந்து அழைத்த அதிதியின் குரல் பின்னறையில் அபிலாஷுடன் இருந்த மித்ரலட்சுமிக்கு கேட்கவில்லை.
ஆதலால் எழுந்து தானே அபிலாஷின் அறைக்குச் சென்ற அதிதி அவளின் கைப்பிடித்து அழைத்து வந்தவளாய் முன்னறைக்குக் கூட்டிவர, அதற்குள் காரைவிட்டு இறங்கி இருந்த ஆர்யா அதன் சாவியை வேலட்டிடம் [personal valet] கொடுத்தவன் வீட்டிற்குள் நுழைந்தான்.
அதே நேரம் ஸோஃபாவில் மித்ரலட்சுமியை அமரச் செய்து, அவளுக்கு எதிரில், அன்னையின் அருகில் தான் அமர்ந்தாள் அதிதி.
மாமியார் நார்த்தனாருக்கு எதிரில் அவர்களின் முகம் பார்க்க அமர்ந்திருந்த மித்ரலட்சுமி சற்று கலக்கத்துடன் இருவரையும் நோக்க, "லட்சுமி, மாம் ஒண்ணு சொன்னாங்க, ஆனால் அதை நம்புறதா நம்பக்கூடாதான்னு எனக்கே தெரியலை." என்று பீடிகைப் போட்டாள்.
"என்னது?"
மெல்லிய குரலில் அவள் கேட்க, முன்னறையை நெருங்கியிருந்த தம்பியின் வருகையை அறியாது, "லட்சுமி, மாம் சொன்னாங்க, ஆர்யா அவனுடைய ஜெட்டில் அவனுக்குன்னு இருக்கும் ப்ரைவேட் ரூமை ஒரு ஃபர்ஸ்ட் நைட் ரூம் மாதிரி ஃப்ளவர்ஸ் எல்லாம் வச்சு டெக்கரேட் பண்ணச் சொன்னான்னு. அப்படின்னா.." என்றவள் சிறிது தயக்கத்துடன், "உங்களுடைய ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சிடுச்சா?" என்றாள்.
அதற்குப் பதில் கொடுக்க வெகு தயக்கத்துடன் எத்தனித்த மித்ரலட்சுமியின் கண்கள் சத்தமே இல்லாது முன்னறைக்குள் அடிஎடுத்து வைத்த ஆர்யாவின் மீது பதிந்ததில் அதிர்ச்சியில் விரிந்தன.
அதற்குள் தமக்கையின் கேள்வி ஆர்யாவின் செவிகளிலும் தெள்ளத்தெளிவாய் எட்டிவிட்டிருந்ததில், மித்ரலட்சுமியை ஊடுருவும் பார்வையோடு அவன் பார்க்க, அதனில் எது இருந்ததோ இல்லையோ ஆனால் அநியாயத்திற்கு 'உண்மையைச் சொல்லாதே' என்ற கட்டளை மட்டும் தெளிவாய் தெரிந்ததில் அவளையும் அறியாது மித்ரலட்சுமியின் தலை 'ஆம்' என்பது போல் அசைந்தது.
"வாட்?"
அதிதி சற்று சத்தமாவே அலறிவிட, ஆனால் அதற்குள் மித்ரலட்சுமியின் பார்வைப் போகும் இடத்தைத் திரும்பிப் பார்த்த சந்தியாவிற்குக் குழப்பம் தான் ஏற்பட்டது.
ஏனெனில் அவரது உடல் சற்று அசைந்ததுமே அமைதியாய் வந்தவழியே திரும்பி சென்றுவிட்ட ஆர்யாவை அவர் உணரவே இல்லை.
"அப்புறம் எப்படிப் பூஜை ரூம்.. " என்று எதையோ கேட்க வந்தது போல் ஆரம்பித்துவிட்டு, பிறகு இதற்குமேல் சிறு பெண்ணிடம் என்ன விசாரிப்பது என்று யோசித்த அதிதி அமைதியாகிவிட, ஏற்கனவே இவர்களது திருமணத்தை நம்புவதே பெரிய சிரமமாக இருக்க, இதனில் இன்றே, அதுவும் விமானத்திலேயே தனது முதலிரவை முடித்துவிட்ட மகனை நினைத்து ஏறக்குறைய திகைப்பின் எல்லையைத் தொட்டிருந்தார் சந்தியா.
'ஏன் ஆர்யா இந்த நாடகம்? உன் மனதில் இருக்கும் திட்டம் தான் என்ன? இஷானி மேத்தாவைத் திருமணம் செய்ய நீ சம்மதித்ததே, அவளை வைத்து கோடீஸ்வரர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெறுவதற்காகத் தான் என்று எனக்குத் தெரியாதா? அப்படி இருக்க ஒரு சாதாரணப் பெண்ணை ஏன் நீ திருமணம் செய்து கொண்டாய்? ஏன் ஒரு அப்பாவிப் பெண்ணின் வாழ்க்கையில் இப்படி ஒரு விளையாட்டை அனாயசமாக விளையாடிக் கொண்டிருக்கின்றாய்! இன்னும் சில நாட்களில் இவளுக்கும் எனக்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று நீ சொல்லிவிடலாம். அதற்காகத் தானே அந்தப் பொய்யான சட்டப்படி ரிஜிஸ்டர் என்ற நாடகம், அப்படி என்றால் இந்தச் சின்னப்பெண்ணின் எதிர்காலம்?'
சந்தியாவின் மனதில் இக்கேள்விகளே மிகவும் வேதனையுடன் அலைப்பாய, ஆனால் அவரால் விடைகளை மட்டும் அறிய முடியவில்லை.
அனைத்துக்கும் விடை அறிந்தவன் அவரது ஒரே மகன்! ஆனால் அந்த விடாக்கண்டன் விடையளிப்பானா?
தொடரும்....