மீரா (மித்ரா)
The Eternal Echoes of Her Heart!
அத்தியாயம் - 15
*********************
தீச்சுடரைப் போலப் பிரகாசிக்கும் உன் மேனியின் ஒளி,
அணுகுவோரின் உயிரையும் சுடும் என்பர்.
ஆயினும் அந்தத் தீயைத் தேடியே நான் வந்தேன்.
மின்னலின் ஒளியும், மலரின் மென்மையும்
ஒருங்கே கொண்டவளே!
உன் அழகை வெல்ல இவ்வுலகில் எவரும் இல்லை.
ஆனால் அதை எனக்கு மட்டுமே சொந்தமாக்க வருபவன் நான்.
வாளின் முனையில் பகைவரை வென்ற என் கரங்கள்,
இன்று உன் கரம் பற்றவே விரைகின்றன.
நீ மலர்ந்தது இந்த உலகிற்காக அல்ல.
அக்னிமர்த்தனின் இதயத்தில் ஆட்சி செய்யவே.
இனி காலமும் பொழுதும் உன் விழிகள் தேடும்
ஒரே வரவு என் வரவாகும்.
காத்திரு என் மதுரா!
-நான் அக்னிமர்த்தன்
*************************************
கி.மு பதினாறாம் நூற்றாண்டு.
மித்ர தேசம்.
நட்பையும் ஒளியையும் குறிக்கும் ‘மித்ர’ என்பது சூர்ய பகவானின் மறுபெயர்.
கதிரவனின் ஒளி புல், பூண்டு, புதர், செடி, கொடி, மனிதன், மிருகம் என்று எல்லாவற்றின் மீதும் வீசி அரவணைப்பது போல், அண்டி வரும் மானிடரின் அலைப்புறுதல்களை அறிந்து, மனம்மாற உதவும் நற்குணங்களைப் பெற்ற மக்கள் குடியிருக்கும் தேசமாக அக்காலத்தில் விளங்கிய தேசமே, முத்துஞ்சல நாட்டின் ஒர் பகுதியான மித்ரதேசம்.
மித்ரதேசத்தில் வடகிழக்கு திசையை நோக்கிக் கட்டப்பட்டிருந்த அரண்மனையின் கம்பீரம், சொல்லில் வடிக்க இயலாத வகையைச் சார்ந்த பிரமிக்கத்தக்க அமைப்பைக் கொண்டிருந்தது என்றால் அது மிகையல்ல.
முத்துஞ்சல நாட்டின் வளமையெல்லாம் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருப்பது போல் இயற்கைச் செல்வங்கள் மித்ரதேசத்தில் குவிந்துக் கிடக்க, அத்தேசத்தின் அரசனான, மக்களுக்குப் பிரியமான நாயகனான நந்திகேசவனின் அரண்மனை காணக்கிடைக்காத ஒரு அரிய வகைக் கட்டிடம்.
வட்டவடிவமான அரணுக்கு மத்தியில் வெண்ணிற பளிங்குகற்கள் கொண்டு, பல அடுக்குகளைக் கொண்ட கட்டிடமாகக் கட்டப்பட்டிருந்த அவ்வரண்மனையின் நடுவில் அமைந்திருந்த பொற்கோபுரம் மேகத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது.
அரண்மனை மேற்கூரையின் நான்கு மூலைகளிலும் குவிந்த கூரை மண்டபங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
அம்மண்டபங்களின் மேற்பகுதிகளில் பதிக்கப்பட்டிருந்த கோமேதகமும் புஷ்பராகமும் அந்திவானத்தில் மிதந்து கொண்டிருந்த கதிரவனைக் கிழித்துப் பாய்ந்ததில், அதன் கதிர்வீச்சில் மித்ரதேசமே தகதகவென ஜொலித்ததில் அக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.
அரண்மனையைச் சுற்றிலும் கட்டப்பட்டிருந்த அரண் பற்பல நூற்றாண்டுகளின் அடக்கி வைத்த சக்தி நான் என்று முழங்கி எழுவது போல் நிமிர்ந்து நிற்க, அதன் இரும்புக் கதவுகளும் கூட, எதிரில் அணிவகுத்து நின்ற பேரரசின் படையைக் கண்டு, அரிமாவின் கர்ஜனையைப் போல அதிர்ந்து திறந்தன.
ஏனெனில், எதிரில் நின்றது சாதாரணப் படை அல்ல!!
முத்துஞ்சல நாட்டின் பேரரசன் மதுரேசனும், அவனது ஆருயிர் மகன் அக்னிமர்த்தனும் தங்களது படையுடன் மித்ரதேசத்தின் கோட்டை வாயிலை அடைந்திருந்தனர்.
அவர்கள் இருவரும் மித்ரதேசத்திற்கு அன்று விஜயம் செய்தது, அச்சிற்றரசின் அரசனான நந்திகேசவனுக்குப் பெரும் வியப்பையும் திகைப்பையும் ஏற்படுத்தியது.
காரணம், முத்துஞ்சல நாட்டின் பேரரசனான மதுரேசனின் ஒரே மகன், பட்டத்து இளவரசனான அக்னிமர்த்தன், சிறிய அரசான மித்ரதேசத்தின் இளவரசி மதுரமித்ராவின் பேரழகைப் பற்றிக் கேள்விப்பட்ட மாத்திரத்திலேயே, அவளையே தன் துணைவியாக்க வேண்டும் என்று தீர்மானித்திருந்தான்.
ஆயினும் முடிவெடுப்பதற்கு முன் அவளை ஒருமுறையேனும் நேரில் காண வேண்டும் என்ற எண்ணத்தில், தன் அரச அடையாளங்களை மறைத்து மாறுவேடம் பூண்டு மித்ரதேசத்திற்குள் இரகசியமாக நுழைந்தான்.
அவன் கால் பதித்த நிமிடத்தில் இருந்தே, மதுரமித்ராவின் தெய்வீக அழகைப்பற்றிப் பாடல்கள் புணைந்தவர்களாய் அச்சிற்றரசை புலவர்கள் படையெடுத்திருப்பதைக் கண்டதில் ஆச்சரியம் அடைந்தவன் அவளைப் பார்த்துவிடும் நோக்கில் தீவிரமாய் அலைந்தான்.
அவனுக்கான நேரமும் வந்தது.
ஒரு நாள் ஐந்தாம் சாமம் புலரும் வேளையில், பனித்துளிகள் இன்னும் மங்கலாய் மிதந்துகொண்டிருந்த நேரத்தில், அரண்மனையின் வாயிலிலிருந்து ஓர் அழகிய பல்லக்கு வெளிவந்தது.
அதன் பின்னால் இளம்வயது பெண்கள் கலகலப்பான சிரிப்புடனும், இனிய உரையாடல்களுடனும் தொடர்ந்து நடந்து வர, அந்தப் பல்லக்கில் இருப்பது யார் என்பதை அக்னிமர்த்தன் கணநேரத்தில் உணர்ந்தான்.
வேகமாகத் தன் புரவியில் ஏறியவன், எவருக்கும் தெரியாமல் அந்தப் பல்லக்கைத் தொடர்ந்து செல்ல, பொன்னேரி நகரின் ஓரத்தில் அமைந்திருந்த புனிதமண்டபம் ஒன்றின் வாயிலில் பல்லக்கு நின்றதும், சற்று மறைவாக ஒதுங்கி நின்ற அக்னிமர்த்தனின் கண்கள், அதிலிருந்து இறங்கிய தேவதையைப் போன்ற உருவத்தைக் கண்ட கணமே மெய்மறந்துப் போனதில் அவளை விட்டு விலக மறுத்தன.
ஒரு கணம் அவன் தன்னையே மறந்தான்!!
அந்நாள்வரை அவனது செவிகளில் எட்டியிருந்த தகவல்களையும், மித்ரதேசத்து இளவரசியின் அழகைப் பாடல்களாகப் பாடியிருந்த புலவர்களையும் அத்தருணத்தில் அவன் அறவே வெறுத்துப் போனான்.
அவன் கேட்ட செய்திகளும், புலவர்கள் பாடிய புகழ்மொழிகளும் கூட அவளது பேரழகின் முழுமையை உரைக்கத் தவறியிருந்தனவோ என அவன் எண்ணினான்.
ஏனெனில், கவிஞர்களின் கற்பனையையும் வென்று நின்ற அந்த அழகை, எந்தப் பாடலும் முழுமையாகச் சிறைபிடிக்கவில்லை.
வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட அழகு இந்த மதுரமித்ராவின் அழகு.
இவளது எழிலை வர்ணிக்கச் சொற்களே இல்லை என்ற காரணத்தினால் தான் புலவர்கள் அவர்களுக்குத் தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு பாடல்களைப் புணைந்திருப்பார்களோ என்ற முடிவிற்கு வந்த கணமே, அவளை மானசீகமாகத் தன் மனைவியாக மணமுடித்துக் கொண்டான் அக்னிமர்த்தன்.
ஆனால் அவனது கனவு அவனே எதிர்பாராதவண்ணம் அதற்குப் பிறகு வந்த சில நாட்களிலேயே கலைந்து போனது.
அவனது ஆணவத்திற்கும் திமிருக்கும் முற்றுப்புள்ளி வைத்த நாளும் வந்தது.
தனது காதலையும் வாஞ்சையையும் தந்தையிடம் எடுத்துச் சொல்ல, பெண்பித்தனாக வலம் வந்த தனது ஒரே வாரிசு வீணாகப் போய்விடுவானோ என்று அஞ்சிய பேரரசனுக்கு, நல்லதொரு வம்சத்தில் பிறந்த தாரகையை மகன் விரும்பியிருந்ததில் பேருவகை உருவானது.
மறுநாளே மதுரமித்ராவின் தந்தை நந்திகேசவனைத் தன்னை வந்து பார்க்குமாறு தூது அனுப்பினான் மதுரேசன்.
நாட்டின் பேரரசனே தனக்குத் தூது அனுப்பியிருப்பதை அறிந்து கலங்கிப் போன சிற்றரசனான நந்திகேசவன் உடனடியாக அவனைச் சந்திக்கச் செல்ல, ஆனால் மதுரேசன் கூறிய செய்திகளில் ஆடிப்போனான்.
'என்னது, அக்னிமர்த்தனுக்கு எனது மகளை மணையாட்டியாகக் கொடுப்பதா?'
நந்திகேசவனின் இடத்தில் வேறு யாராக இருந்தாலும் பேரரசனின் விண்ணப்பத்தைக் கேட்டதுமே மெய்சிலிர்த்துப் போயிருப்பார்கள். ஆனால் நந்திகேசவன் அப்படி அல்ல.
அவனுக்கு அக்னிமர்த்தனின் பெயரும் தெரியும், புகழும் தெரியும்.. அவனது புகழுக்குப் பின் இருக்கும் காரணமும் நன்றாகவே தெரியும்.
கண்ணில் படும் அழகிகளை எல்லாம், அவர்கள் திருமணம் ஆனவர்கள் என்றாலும், அவர்களை அன்றே ருசிப்பார்த்துவிடும் ஒழுக்கம் கெட்டவன் அவன். அவனை எதிர்க்கும் பெண்களைக் கடத்திச் சென்று சிறை வைத்து அவனது ஆசை தீரும்வரை அவர்களை ருசிப்பார்த்துப் பின் ஈவு இரக்கம் இல்லாது அவர்களைக் கொன்றுபோடும் கொடூரன் அவன்.
இதனில் அவன் பட்டத்து இளவரசன் வேறு! அதாவது அந்நாட்டின் வருங்கால அரசன்!!
அப்படிப் பல நூறு பெண்களுடன் கூடிக்களித்த பெண்பித்தனான அக்னிமர்த்தனுக்கு என் அழகு தேவதையை மனைவியாகக் கொடுப்பதா?
ஒற்றை வார்த்தையில் முடியாது என்று பேரரசனுக்கே மறுப்புத் தெரிவித்தான் நந்திகேசவன்.
ஆயினும், அக்னிமர்த்தனின் கொடூரங்களையும் அராஜகங்களையும் ஏற்கனவே அறிந்திருந்த நந்திகேசவன், ஒரு தந்தைக்கே உரிய பாதுகாப்பு உணர்வுடனும், கவலையுடனும், அடுத்தச் சில நாட்களிலேயே ஒரு முடிவை எடுத்தான்.
தன் மகளின் வாழ்வை காக்கும் எண்ணத்தில், மித்ரதேசத்தின் அருகிலிருந்த சிற்றரசின் இளம் அரசனான வீரபாலனுக்கு மதுரமித்ராவின் திருமணத்தைப் பேசி முடித்தான்.
மதுரமித்ரா–வீரபாலனின் திருமணம் நாளை மறுநாள் நடைபெறவிருந்த நிலையில், அவளது பேரழகைப் பற்றி அறிந்திருந்த மித்ரதேசம் மட்டுமல்லாது, முத்துஞ்சல நாடு முழுவதும் அந்த மங்கள நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்த்து விழாக்கோலம் பூண்டிருக்க, அத்தகைய வேளையில்தான், அனைவரும் எதிர்பாராத விதமாக மித்ரதேசத்திற்கு வருகையளித்தனர் பேரரசன் மதுரேசனும், இளவரசன் அக்னிமர்த்தனும்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத நந்திகேசவன் ஒரு கணம் தடுமாறினாலும் மறு கணமே தன்னைச் சமாளித்துக் கொண்டவனாய் அவர்களை வரவேற்க ஓட்டோடி வந்தான்.
"பேரரசரே! பட்டத்து இளவரசரே! என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் எனது மகளின் திருமணத்திற்கு வருகைத் தருவீர்கள் என்று நான் நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை. நடந்ததை மறந்து நீங்கள் வந்திருப்பது என் மனதிற்குப் பெரும் ஆனந்தத்தை அளிக்கின்றது. உங்கள் இருவரையும் வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சிக் கொள்கின்றேன். வாருங்கள்!"
தாள்பணிந்து இருவரையும் வரவேற்றாலும் நந்திகேசவனின் உள்ளம் மட்டும் ஒரு தந்தையாய் அச்சத்தில் அலைப்பாய்ந்து கொண்டிருந்தது.
அவனது பணிவைக் கண்டு ஒருவருக்கொருவர் திரும்பிப் பார்த்து புன்னகைத்துக் கொண்டவர்களாய், "உன் மகள் திருமணத்திற்கு வருமாறு எங்களுக்கு அழைப்பு விடுத்தது நீ தானே நந்திகேசவா? பின் திருமணத்திற்கு நாங்கள் வருகைத் தருவோம் என்று நிச்சயமாய் எதிர்பார்க்கவில்லை என்று ஏன் கூறுகின்றாய்?" என்றான் நக்கலாய் மதுரேசன்.
உண்மை தான்... முத்துஞ்சல நாடு முழுவதையும் ஆட்சி செய்யும் பேரரசனுக்கு, அந்நாட்டிற்குள் இருக்கும் சிற்றரசர்கள் அனைவரும் அவர்களது இல்லத்து விழாக்களுக்கு அழைப்பு விடுப்பது என்பது முறைதான். ஆனால் எனது சூழ்நிலை வேறாயிற்றே!
வேறு வழியின்றி இருவரையும் வரவேற்க, புரவிகளில் இருந்து இறங்கிய மதுரேசனும் அக்னிமர்த்தனும் நந்திகேசவனைப் பின் தொடர, சற்றுத்தொலைவில் தெரிந்த அரண்மனைத் தோட்டத்திற்கு மறுபுறம் அமைக்கப்பட்டிருந்த அந்தப்புரத்தை நோக்கி அக்னிமர்த்தனின் முகம் திரும்பியது.
கண்னுக்கெட்டிய தூரமெல்லாம் பச்சைப்பசேலென ஆகாயத்தை ஒட்டி வளார்ந்திருந்த மரங்கள், சில்லென வீசிய தென்றல்காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தன.
மனதை கொள்ளைக்கொள்ளும் வகையில் பளீரெனப் பூத்திருந்த சிகப்பு நிறத்து செவ்வரளி மலர்களும், அவைகளின் ஊடே நட்புக்கொள்ளும் நோக்கில் கலக்க துடித்த மஞ்சள் நிறத்து ஆவாரம்பூக்களும் வசீகரமாய்ப் பூத்துக்குலுங்க, அவர்களின் போட்டியை ரசித்தவர்களாய் கோலமயில்கள் அழகாய் நடனமாடிக் கொண்டிருந்தன.
கவிதையாய் கண்முன்னே விரிந்தாடும் இயற்கை வசீகரத்திற்குப் பின்னே அழகிய கட்டிடம் கைவண்ணத்துடன் எழுந்திருந்தது.
அதுவே அரசமகளிர் தங்கியிருக்கும் அந்தப்புரம்.
அக்னிமர்த்தன் நின்றிருந்த இடத்திற்கும் அந்தப்புரத்திற்கும் இடையில் கூப்பிடு தொலைவே இருந்ததினால், ஏனோ மெல்லியதாய் துவங்கி பின் திடுமென அதிகரித்த பெண்களின் சிரிப்பொலிகள் அக்னிமர்த்தனின் உதடுகளின் கடைக்கோடியில் புன்னகையை வரவழைத்தது.
அக்கணம் அந்தப்புரத்தினுள் இருக்கும் மதுரமித்ராவை நினைத்து அவனது உள்ளம் காதலிலும் காமத்திலும் உருகி வழிந்தது.
‘நீ மலர்ந்தது இந்த உலகிற்காக அல்ல.

இனி காலமும் பொழுதும் உன் விழிகள் தேடும் ஒரே வரவு என் வரவாகும்.
காத்திரு என் மதுரா!
***********************************************************
இரவின் அமைதியான வேளையில், உச்சிவானத்தில் வைரங்களை வாரி இறைத்தது போல் நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன
இயற்கையுடன் போட்டிப்போட்டு வென்றுவிடத் துடிப்பது போல், அந்நாட்டு இளவரசியின் திருமணம் என்ற நிலையில் பொன்னேரி நகரமே அலங்கார விளக்குகளின் வெளிச்சத்தில் மிளிர்ந்து கொண்டிருந்தது.
அக்கணம் நகரத்தினுள் நுழைந்தனர் இரட்டையர்.
முத்துஞ்சல நாட்டின் போர்வீரர்கள் போல் மாறுவேடம் புனைந்திருந்தவர்கள் நகரத்திற்குள் அடி எடுத்து வைக்க, அந்நேரத்திலும் பரபரப்பாய் இருந்த நகரத்தைப் பார்த்து வியந்துப் போயினர் இரு இளைஞர்களும்.
ஏதோ தங்களது இல்லத்திருமணம் போல் ஒவ்வொரு தெருக்களின் இரு பக்கங்களிலும் இருந்த வீடுகளில் வசிக்கும் பெண்டீர், அவர்களது வீட்டின் முன் பலவர்ண கோலப்பொடிகளில் அவர்களின் திறமைகளை வர்ணஜாலங்களாய் வரைந்துக் கொண்டிருந்தனர்.
வீட்டுத் திண்ணைகளிலும் வாயிலிற்கருகிலும் அமர்ந்தவாக்கில் இளம் பெண்கள் தங்களது கரங்களில் மருதாணியை இட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கு அருகில் அமர்ந்து கதைப்பேசிக் கொண்டிருந்தனர் வயதில் முதிர்ந்த பெரியவர்கள்.
பந்தங்களில் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு அணையாதவகையில் அவற்றுக்கு எண்ணெய் வார்த்தவாறே ஆண்கள் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இளம் வயதினராகட்டும் பெண்களாகட்டும் பெரியவர்களாகட்டும், அவர்களின் படாடோபங்களும் அணிந்திருக்கும் நகைகளில் பதிக்கப்பட்டிருக்கும் வைரம் வைடூரியங்களாகட்டும், அனைத்துமே அம்மக்களின் வசதிவாய்ப்பை மட்டும் காட்டவில்லை.
அந்த இரவு நேரத்திலும் விலையுயர்ந்த அணிகலன்களை அணிந்து பயமின்றி நடமாடிக் கொண்டிருப்பவர்களைக் கண்டதில், அறம் என்ற சொல்லிற்கு அடையாளமே மித்ரதேசமாக இருக்குமோ என்று வியந்துப் போயினர் இருவரும்.
அதனை வார்த்தைகளாலும் அவர்கள் வெளிப்படுத்த தவறவில்லை.
"இந்தளவிற்கு இவர்கள் அனைவரும் தைரியமாக உலாவிக் கொண்டிருக்கின்றனர் என்றால் பாதுகாப்பிற்குப் பஞ்சமே இல்லாத நகரம் பொன்னேரி நகரம் என்று தானே தோன்றுகிறது விஜயா?"
"எனக்கு அப்படித் தோன்றவில்லை ஜெயா.."
"என்ன? உனக்கு அப்படித் தோன்றவில்லையா?"
"ம்ம்.."
"ஏன்?”
"பாதுகாப்பிற்குப் பஞ்சமே இல்லாத நகரம் என்று நீ சொல்கின்றாய். ஆனால் பாதுகாப்பே தேவையில்லாத நகரம் என்று நான் நினைக்கிறேன்."
"புரியவில்லை விஜயா."
"கயவர்களும் திருடர்களும் இருந்தால் தானே பாதுகாப்பு தேவைப்படும்?"
"ஆம்.."
"ஆனால் எனக்குத் தெரிந்தவரை இந்த நகரத்தில் மட்டும் அல்ல, நந்திகேசவனின் ஆளுமைக்கு உட்பட்டிருக்கும் மித்ரதேசம் முழுவதிலுமே கயவர்களும் இல்லை, திருடர்களும் இல்லை."
"அது எப்படி இவ்வளவு வளம் மிகுந்த முத்துஞ்சல நாட்டில் சாத்தியம்?"
"நான் கூறியது முத்துஞ்சல நாட்டில் அல்ல, இந்த மித்ரதேசத்தில் மட்டுமே!"
"சரி, நீ சொல்வது போல் வளம் மிகுந்த சிற்றரசான மித்ரதேசத்தை மட்டும் எடுத்துக் கொண்டாலும், இங்கும் நிச்சயம் கயவர்களும் திருடர்களும் இருக்கத்தானே செய்வார்கள்?"
"உனது கேள்வியிலேயே பதிலும் இருக்கின்றது ஜெயா."
தனது இரட்டைச்சகோதரனின் கூற்றில் சில நொடிகள் சிந்தித்த ஜெயேந்திரனின் உதடுகளில் முறுவல் அரும்பியது.
"அதாவது அள்ளஅள்ள குறையாது பொங்கி வழியும் இயற்கை வளம் சூழ்ந்திருக்கின்ற இத்தேசத்தில் வாழும் ஒவ்வொரு மனிதனும், செல்வச்செழிப்புடன்தான் தனது ஒவ்வொரு நாளையும் கடக்கின்றான். அப்படி இருக்கத் திருடர்கள் உருவாகும் வாய்ப்பே இல்லையே? அத்தகைய சிற்றரசுக்கு பாதுகாப்பும் தேவையற்றது. இதைத்தானே நீ கூற வருகின்றாய் விஜயா?"
ஆம் என்பது போல் தலையசைத்தான் விஜயேந்திரன்.
"அது மட்டும் அல்ல ஜெயா. இவ்வளவு வளம் மிகுந்த அரசில் வசிக்கும் மக்களிடம் குறையொன்றும் இருக்க வாய்ப்பில்லை. ஆயினும், கோடியில் ஒருவராய் குறையுடன் வந்தாலும், அவர்களை மனநிறைவுடன் திரும்பச் செய்யும் நந்திகேசவனின் ஆட்சியில், பயம் என்பதே மக்கள் அறியாத சொல் அல்லவா? நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று உனக்குப் புரிகின்றதா ஜெயா?" என்றான் ஒரு கண்ணைச் சிமிட்டியவனாய்.
அவனது பேச்சின் அர்த்தம் ஒரு தாயின் வயிற்றில் ஒரே திங்கள் பிறந்திருந்தாலும், இரு நிமிடங்கள் கடந்து இளையவனாய்ப் பிறந்திருந்த ஜெயேந்திரனுக்குப் புரிந்தது.
"ஆக, அதனால் தான் மித்ரதேசத்து எல்லை பாதுகாப்பை நம்மால் எளிதில் கடந்து வர முடிந்தது என்று கூறுகின்றாயா?"
அதற்குள் சுற்றும் முற்றும் பார்த்தவாறே "இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.." என்று பூடகமாய்ப் பதிலளித்தான் விஜயேந்திரன்.
"ம்ப்ச். கொஞ்சம் தெளிவாய் பதில் கூறுகின்றாயா?"
"மித்ரதேசத்து எல்லையில் பாதுகாப்பிற்காக நின்றிருந்த வீரர்களைக் கவனித்தாயா?"
"ஆம்."
"அவர்கள் அனைவருமே இந்தச் சிற்றரசை சேர்ந்த படைவீரர்கள் அல்ல."
"ஆம், அதையும் கவனித்தேன். அவர்களில் சிலர் இந்த முத்துஞ்சல நாட்டின் படை வீரர்கள்."
"அப்படி என்றால் பேரரசர் மதுரேசன் இங்குத் தான் இருக்கின்றார், புரிகின்றதா?"
"புரிகின்றது... புரிகின்றது.."
அண்ணனுக்குப் பதிலளித்த ஜெயேந்திரன் சட்டெனப் புன்னகைத்த விதத்தில் அன்னையில் வயிற்றுக்குள்ளேயே அவனைப் புரிந்து வைத்திருந்தவன் போல் விஜயேந்திரனின் கண்கள் சுருங்கின.
"ஜெயா.. நீ என்ன நினைக்கின்றாய் என்று எனக்கு தெரிகின்றது. நாம் இங்கு வந்திருப்பதன் காரணத்தை மறந்துவிடாதே. முத்துஞ்சலநாடு நம் நாட்டின் கீழ் வரவேண்டும், ஆனால் அது முறையான போர் மூலமே. அதற்காகத் தான் இந்நாட்டைப் பற்றி அறிந்துக் கொள்ளவே நாம் இங்கு வந்திருக்கின்றோம். அதற்காக நாம் முதலில் தேர்ந்தெடுத்த இடமே இந்த மித்ரதேசம். அதைத்தவிர இந்தச் சிற்றரசுக்கும் நமக்கும் எந்தச் சம்பந்தமும், தொடர்பும் இருக்கக் கூடாது. ஆகையால் உன் மனதில் ஏதாவது தந்திரமான திட்டம் இருந்தால் அதை இக்கணமே அழித்துவிடு."
அண்ணனின் பேச்சில் சற்று சத்தமாகவே சிரித்தான் ஜெயேந்திரன்.
"என் மனதில் நான் அவ்வாறு ஒரு அபாயமான திட்டத்தைத் தீட்டிருப்பேன் என்று நீ நினைக்கின்றாயா?"
"உன் பதிலிலேயே தெரிகின்றதல்லவா, அது எவ்வளவு அபாயம் என்று?"
"அதைத்தான் நானும் சொல்கின்றேன் விஜயா."
அவனது வார்த்தைகளில் ஆழப் பெருமூச்செறிந்தவனாகத் தலையை அசைத்த விஜயேந்திரன்,
"நாளை கழித்து மறுநாள் மித்ரதேசத்து இளவரசியின் திருமணம் என்று கேள்விப்பட்டோமே. அதற்குள் நாம் வந்த வேலையைச் செய்து முடித்துவிட வேண்டும். பிறகு மற்ற சிற்றரசுகளுக்குப் பயணம் செய்வோம். நாம் பயணிப்பதற்கு இப்பொழுது நாம் அணிந்திருக்கும் இந்நாட்டின் போர் உடை நமக்கு வசதியாகவே இருக்கும். நாட்டைப் பற்றியும் இவர்களது படைகளின் போர்முறைகளைப் பற்றியும் அறிந்ததற்குப் பிறகு நம் நாடு செல்வோம். பிறகு நேரம் கனிந்ததும் இந்நாட்டின் மீது போர் தொடுப்போம். அதுவரை நாம் யார் என்று ஒருவரும் அறியாவண்ணம் நடந்துக்கொள்ள வேண்டும். அதனில் முக்கியமானதொரு விஷயம், நாம் இருவரும் இனி ஒன்றாக ஒருவர் கண்களிலும் தென்படக்கூடாது. அப்படி நடந்தால் நாம் இரட்டைச்சகோதரர்கள் என்று தெரிந்துவிடும்." என்று கூறியவனாய் பொன்னேரி நகரத்தினுள் அடி எடுத்து வைக்க, அவனது திட்டம் முதல்படியிலேயே பொய்யாகிப்போனது.
அவர்களை விசித்திரமாய்ப் பார்த்தவராய் முதியவர் ஒருவர் அவர்களை நெருங்கியவர், "நீங்கள் யார்? ஒத்ததைப் போல் இருவரும் இருக்கின்றீர்களே!" என்றதில் ஜெயேந்திரனுக்குச் சிரிப்பு வந்தது.
அவனது சிரிப்பில் கோபம் வர, இருந்தும் தன்னைச் சமாளித்துக் கொண்டு புரவியிலிருந்து ஒரே தாவலில் இறங்கியவனாய், முதியவரின் தோளை வளைத்துக் கைப்போட்டவாறே அவரைச் சற்று தள்ளி அழைத்துச் சென்ற விஜயேந்திரன், "ஒத்ததைப் போல் இருவரும் இருக்கின்றோமா? என்ன சொல்கின்றீர் தாத்தா? நான் ஒருவன் தானே இங்கு இருக்கின்றேன்?" என்றான்.
அக்கணம் ஜெயேந்திரன் அமர்ந்திருந்த கருப்புப் புரவி இருளோடு இருளாகக் கலந்து மறைந்தது.
விஜயேந்திரனின் உயரத்தில் பாதியளவே இருந்த முதியவர் அவனை அண்ணாந்து நோக்கியவராய், "என் பார்வையில் கோளாறு என்று எண்ணிவிட்டாயா? இங்கு இரு புரவிகள் நின்றிருந்தன. அவற்றின் மீது நீங்கள் இருவரும் அமர்ந்திருந்தீர்கள். இருவரின் உருவமும் ஒன்றைப் போலவும், முகச்சாயலும் ஒரே மாதிரியாகவும் இருந்தது. பார்ப்பதற்கு இரட்டையர்களைப் போலவே தோன்றினீர்கள். முதுமை வந்தது என் வயதிற்கு மட்டுமே, என் கண்களின் கூர்மைக்கு அல்ல." என்றவாறே பின்னால் திரும்பினார்.
ஆனால் அங்கு ஜெயேந்திரன் இல்லை! அதாவது அவர் எண்ணியது போல் அங்கு வேறு எவருமே இல்லை!!
"என்ன தாத்தா? அங்கு யாரும் இல்லையே.. யாரைத் தேடுகிறீர்?"
"சற்று நேரத்திற்கு முன்..." என்று அவர் தலையைச் சொரிந்தார்.
அவரது கையைப் பிடித்து மெதுவாக அகற்றிய விஜயேந்திரன், "இந்த இரவு வேளையில் வீட்டிற்குச் செல்லாமல் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறீர்? அதிகம் யோசித்து மனதை வருத்திக் கொள்ளாதீர்கள். முதலில் சென்று உறங்குங்கள்." என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.
அவர் சென்றதும், மறைந்திருந்த இடத்திலிருந்து மெலிதாய் சிரித்தவாறே வெளிவந்தான் ஜெயேந்திரன்.
அவனது சிரிப்பைக் கொண்டு ஆத்திரம் வர, "ஜெயா, இந்த முத்துஞ்சல நாட்டில் நம் இருவரையும் ஒன்றாகக் கண்ட முதல் மனிதர் இவராக இருக்கட்டும். அதேபோல் கடைசி மனிதரும் இவராகவே இருக்க வேண்டும். இனி நாம் இந்த நாட்டை விட்டு வெளியேறும் வரை, நம் இருப்பையும் நோக்கத்தையும் எவரும் அறியாதபடி செயல்பட வேண்டும். ஒரே இடத்தில் நாம் இருவரும் மீண்டும் யார் கண்களிலும் படக்கூடாது. அப்படி ஏதேனும் நடந்தால், இத்தனை நாட்களாக நாம் தீட்டிய திட்டங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும், புரிகிறதா?" என்று சற்றுக் கடுமையான குரலில் எச்சரித்தான்.
அவனது கடுமையான எச்சரிக்கைக்குக் கூடச் சிறிதும் அசராதவன் போல, ஒரு கேலிப்புன்னகையுடன், அவனை வணங்குவது போல் தலையைத் தாழ்த்தி, "அப்படியே ஆகட்டும்..." என்று இழுத்துக் கூறினான் ஜெயேந்திரன்.
ஆனால் அவன் கண்களில் தெரிந்த அந்த மெல்லிய விஷமப் பார்வை, அவனது மனதில் ஓடிக் கொண்டிருந்த வேறு எண்ணங்களை மறைக்கவில்லை.
ஜெயேந்திரனின் கிண்டல் நிறைந்த பேச்சை வழக்கம்போல் அலட்சியப்படுத்திய விஜயேந்திரன், தங்களது அடுத்த நடவடிக்கையைப் பற்றி அவனிடம் சற்று விவாதித்துவிட்டு, "நாளை சந்திப்போம்," என்று கூறியபடி அங்கிருந்து மறைந்தான்.
ஆனால், இருளின் மறைவில் நின்று அவர்களின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனித்துக் கொண்டிருந்த அந்த முதியவரின் விழிகள் மட்டும், ஏதோ ஒன்றை உணர்ந்தது போல் மெதுவாக இடுங்கின.
தொடரும்..

Last edited: