மீரா (மித்ரா)
The Eternal Echoes of Her Heart!
அத்தியாயம் - 6
They did not realize it then! What, then, will be the outcome of the disastrous consequences that unfold when everything becomes glaringly apparent later on?
**********************
இறுக பற்றிய கையை விட்டுவிடாது காருக்குள் மித்ரலட்சுமியை ஏற்றிய சந்தியா, "ஏர்போர்ட்டுக்கு போங்க.." என்றதும் மெல்ல அவரை நோக்கித் திரும்பினாள்.
"ஃபோன்ல பேசியது சத்யன் அத்தான் தானே?"
அவளது கேள்விக்குப் பதில் கூறாது அவளைச் சற்று நகர்ந்து அமரச் செய்த சந்தியா தானும் காரில் அமர்ந்தவராய் கதவை நிதானமாய்ச் சாத்த, "அத்த, அது சத்யன் அத்தான் தான்னு எனக்குத் தெரியும் அத்த. அதே போல் உங்களிடம் முதலில் பேசியது அம்மம்மான்னும் எனக்குத் தெரியும்." என்றாள் அழுகுரலில்.
அவளது முகத்தைப் பார்த்தவர், "யெஸ், அவங்கத்தான். ஆனால் அந்தச் சத்யனுடைய மிரட்டலுக்கு எல்லாம் பயப்படக் கூடாது மித்ரலட்சுமி.." என்றார் ஆழ்குரலில்.
"இல்லை அத்த, பயப்படணும். உங்களுக்குச் சத்யன் அத்தானைப் பற்றித் தெரியாது."
"என்ன தெரியாது?"
"இப்போ அம்மம்மாவுடைய உயிர் அவர்கிட்டத்தான் இருக்கு."
"ப்ச். அவனெல்லாம் ஒரு ஆளுன்னு.." என்றவரை மித்ரலட்சுமி முடிக்க விடவில்லை.
"அத்த, தயவு செஞ்சு நான் சொல்றதைக் கேளுங்க. உடனே நான் பூவசரம்பட்டிக்குப் போகணும். என்னால் அம்மம்மாவிற்கு எதுவும் ஆகக்கூடாது. அப்படி ஆச்சுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்."
"என்ன மித்ரலட்சுமி சின்னப் பொண்ணு மாதிரி பேசுற? பூவசரம்பட்டியைச் சுற்றிலும் நம்ம ஆட்கள் இருக்காங்க, அவங்கப் பார்த்துக்குவாங்க.."
கூறியவராய் சந்தியா மணிமாறனை நோக்கித் திரும்ப, அவர் மீண்டும் வாய் திறப்பதற்குள், "இந்த ரெண்டு நாளா பூவசரம்பட்டி முழுக்க உங்க ஆட்கள் கண்காணிச்சுட்டு தான் இருந்தாங்க. அவங்க பெயரில் இருந்த நம்பிக்கையில் தான் நானும் உங்களை எதிர்பார்த்து தைரியமா இருந்தேன். ஆனால் என்ன ஆச்சுன்னு பார்த்தீங்களா? அவங்களுக்குத் தெரியாமல் கல்யாண மண்டபம் வரையிலும் என்னைக் கூட்டிட்டு வந்துட்டாங்க. ஒருவேளை நீங்க வரலைன்னா இந்நேரம் என் கழுத்தில் அவர் தாலியும் கட்டியிருப்பார்." என்றாள் மெல்லிய சாரீரத்தில்.
அவள் கூறுவதும் ஒருவிதத்தில் உண்மை தானே!
எத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தும் என் ஆட்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தன் சாமர்த்தியத்தால் இவளை மணமேடை வரை அழைத்துப் போயிருக்கின்றானே அந்த ஆருஷ் ஆதித்யா!
ஓரிரு நிமிடங்கள் யோசித்தவர் ஆயினும் பதில் பேசாது அமைதியாக இருக்க, நெடுமூச்சுவிட்டவள், "அத்த, நீங்க அவ்வளவு சொல்லியும் நான் இந்தக் கல்யாணத்துக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கலைன்னு தெரியுமா?" என்றாள்.
அவளது கேள்விக்கான பதில் எனக்குத் தெரியும் என்பது போல் ஒரு கணம் அமைதியாக இருந்த சந்தியா பின் அவளது கண்களை ஊடுருவது போல் பார்த்துவிட்டு, "நீ கல்யாணத்துக்குச் சம்மதிக்கலைன்னா, உன் அம்மம்மாவின் உயிர் எங்க கையில தான் இருக்குன்னு இதே போல் மிரட்டி இருப்பாங்க, ரைட்?" என்றவர் ஓட்டுநரின் முகம் பார்த்து, "பூவசரம்பட்டிக்கு போகலாம்.." என்றார்.
அவர்களது கார் பூவசரம்பட்டியை அடைவதற்குள் பாட்டி சாவித்திரியின் நிலையை நினைத்து உள்ளங்கைகள் மட்டுமல்லாது முழுத்தேகமே பயத்தில் நடுங்க, வியர்த்துக் கொட்ட அமர்ந்திருந்தாள் மித்ரலட்சுமி.
'ஐயோ! அம்மம்மா! அந்தச் சத்யன் அத்தான் உங்களை என்னென்ன செஞ்சாரோ தெரியலையே? எல்லாம் என்னாலத்தானே! என் ஒருத்திக்காக மட்டும் தான் நீங்க உங்க உயிரை பிடிச்சு வச்சிக்கிட்டு இருக்கீங்கன்னு எனக்குத் தெரியும் அம்மம்மா, ஆனால் சந்தோஷமா சாகவும் விடாமல், நிம்மதியா வாழவும் விடாமல் நான் உங்களை எவ்வளவு சித்திரவதை செஞ்சுட்டு இருக்கேன்.'
சின்னவளின் மனம் அரற்ற, அருகில் அமர்ந்திருந்த சந்தியாவிற்கு அந்தப் பேதை உள்ளத்தின் குமுறலை தெளிவாய் புரிந்து கொள்ள முடிந்தது.
பூவசரம்பட்டியில் நடந்து கொண்டிருப்பதும் அவருக்குத் தெரியும், நடக்கப் போவதும் தெரியும்.
ஆனால் அதை மாற்றியமைக்க என்னால் மட்டுமே முடியும். நேற்று என் கடமையில் இருந்து நான் சற்றுப் பிசகிவிட்டேன், அதற்குக் காரணம் என் மகன். இப்படியான ஒரு விஷயத்தில் அவன் மீது அதிசயமாய் நான் வைத்த நம்பிக்கையின் விளைவே நான் சிறிது அசந்ததற்குக் காரணம். அதனால் ஏற்பட்ட அசம்பாவிதமே இது. இனி கூடாது! நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்தச் சின்னப் பெண்ணின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் அரணாக அமைய வேண்டுமே ஒழிய அவளுக்குக் கேடு விளைவித்துவிடக் கூடாது.
ஆனால் அந்த அரணை அமைக்க வேண்டியது யார்?
சடச்சடவென அவரது ஆழ்மனம் திட்டங்களை ஆராய்ச்சி செய்ய, பல மணித்துளிகள் கடந்து ஏதோ ஒரு நம்பிக்கையான திட்டம் பிடிப்பட்டது போல் தோன்றியதில் அவரது உதடுகளில் சிறு புன்னகைத் தோன்றியது.
ஆக, முள்ளை முள்ளால் தான் எடுக்க முடியும்!
ஒரு கைத்தேர்ந்த தொழிலதிபனுக்கு வரவும் இலாபமும் தான் முக்கியம். அப்படி என்றால் அதை வைத்தே காரியத்தைச் சாதிக்க வேண்டும்.
முடிவெடுத்தவர் போல் அலைபேசியில் யாரிடமோ சில விவரங்களை இரகசியமாய் விசாரிக்க, தனக்கு வந்த பதில் தகவலில் அவரது புன்னகை விரிந்தது.
அதுவரை நிலைகொள்ளா தவித்த மனம் எதிர்பாராத வகையில் வந்த தகவலில் பெரும் திருப்தியில் அமைதியடைய, காரின் இருக்கையில் அவர் தலை சாய்க்க, அவர்களது கார் பூவசரம்பட்டியை அடைந்தது.
வீட்டை நெருங்கும் வேளையில் அருகில் அமர்ந்திருக்கும் மித்ரலட்சுமியின் கரத்தைப் பற்றினார். என்ன என்பது போல் அவள் திரும்பிப் பார்க்க மீண்டும் அவளது கண்களை ஆழ்ந்துப் பார்த்தவராய், "நான் எது செஞ்சாலும் உன் நண்மைக்கு மட்டும் தான் செய்வேன் மித்ரலட்சுமி.." என்றார்.
அதனில் அவளது உதடுகளிலும் சிறு முறுவல் தோன்ற கனிவுடன், "அது எனக்குத் தெரியும் அத்த. என் அம்மா கூடப் பிறந்தவர் மகாதேவன் மாமா. அவருடைய மனைவி நீங்க. மாமா இப்போ உயிரோட இல்லை. எனக்கும் உங்களுக்கும் ரத்த சம்பந்தமும் இல்லை. ஆனாலும், மாமாவுடைய இடத்துல இருந்து எனக்குப் பாதுகாப்பு தர இவ்வளவு மெனக்கடுறீங்க. நீங்க இவ்வளவு தூரம் வந்து போராடுறதே எனக்காத் தான!" என்றாள்.
"அப்படின்னா நான் ஒண்ணு சொல்றேன், கேட்பியா?"
"கண்டிப்பா அத்த.. அம்மம்மாவின் உயிருக்கு ஆபத்தில்லாத எந்த விசயத்தையும் நான் நிச்சயமா கேட்பேன்."
"சரி, அவங்களுடைய உயிருக்கு என்னால் எந்த ஆபத்தும் வராது. ஆனால் இனி பூவசரம்பட்டியில் நடக்கப் போகும் எந்த விஷயத்திலும் உனக்குக் கொஞ்சமேனும் சந்தேகம் வந்தால், நீ என் முகத்தைத் திரும்பிப் பாரு. அப்போ நான் என்ன சைகை செய்யறேனோ அதைக் கொஞ்சம் கூட யோசிக்காமல் பின்பற்று. நிச்சயமா அது உனக்கு நல்லதையே கொண்டு வரும். புரியுதா?"
ஆமோதிப்பது போல் அவள் தலையசைத்த நேரம் பூவசரம்பட்டியின் கிராமத்து வீட்டின் வாயிலில் அவர்களது கார் நின்றது.
அவர்களைத் தொடர்ந்து வந்த ஆருஷின் கருப்பு நிற பென்ட்லி பென்டைகா காரும் அவர்களது காருக்கு பின்னேயே நிற்க, காரில் இருந்து இறங்குபவனைப் பார்த்தவாறே சந்தியா வீட்டிற்குள் நுழைய, அவரைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய மித்ரலட்சுமியும் பதற்றத்துடன் வீட்டிற்குள் பாட்டி சாவித்திரியின் அறைக்குச் சென்றாள்.
அவளது வரவை எதிர்பார்த்து அங்குப் பாட்டியின் படுக்கைக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் இரு கைகளையும் பின்னுக்குக் கொடுத்து சாய்ந்தவாறே அமர்ந்திருந்த சத்யன் சிரிப்புடன் எழுந்து நின்றான்.
அவர்களைத் தொடர்ந்து உள் நுழைந்த ஆருஷைக் கண்டதும் ஏனோ அவனது சிரிப்பு அடங்கியது.
ஆனாலும் அவன் கண்கள் கோபத்தையும் பொறாமையும் ஒன்றாய் வெளிப்படுத்த, அவனது முகபாவனையைக் கண்ட சந்தியாவிற்கும் அவனது எண்ணப்போக்குப் புரிந்தது.
"என்ன சத்யன் திடீர்னு சிரிக்கிற, திடீர்னு கோபப்படுற. நொடிக்கு நொடி உன் முகபாவனை மாறுதே.."
சந்தியா கூறியதும் மீண்டும் அனைத்துப் பற்களும் தெரிய சத்யன் சிரிக்க, வெறும் ஐந்தடி இரண்டங்குலம் உயரமே இருந்த சத்யனின் கண்ணங்கறேன்ற அவனது நிறத்துக்கு அவனது வெள்ளை நிறப் பற்கள் பளிச்சென்று தெரிய, அதனில் அவனது சிரிப்பு சந்தியாவிற்குப் பெரும் எரிச்சலைக் கொணர்ந்தது.
இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இந்தப் பொண்ணு இப்படிப் பயப்படுதே
ஆனால் கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? என்ற பழமொழிக்கேற்ப அவனும் தன் வித்தையை ஒரு நாள் காட்டுவான், ஆனால் அந்த வித்தையால் விளையப்போவது என்ன என்று எவரும் அன்று அறியவில்லை.
அது பொறுக்க முடியாத தீமையோ அல்லது அவனே எதிர்பாராத வகையில் நன்மையோ? யார் அறிவர்??
************************************************
Thanjavur Air Force Station
தஞ்சாவூர் விமானப்படை நிலையம் என்பது தஞ்சாவூருக்குத் தென்மேற்கே 12 கி.மீ தொலைவில் உள்ள பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இந்திய விமானப்படை (IAF) தளமாகும்.
முதன்மையாக ஒரு இராணுவ தளமாக இருந்தாலும், தனியார் ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அங்குத் தரையிரங்க 'BLADE' அனுமதித்ததின் பெயரில் அந்த ஹெலிகாப்டர் அங்குத் தரையிரங்கியது.
அதனில் இருந்து இறங்கியவனின் பாதங்கள் தரையில் பட்ட அதே கணம் திடுக்கென்று தூக்கிவாரிப்போட்டது மித்ரலட்சுமிக்கு.
அதுக்கூட அவளுக்கு வித்தியாசமாக இல்லை ! ஆனால் அதே வேளை சொல்லி வைத்தார் போன்று அவளுக்கு அருகில் நின்றிருந்த ஆருஷிற்கும் திடுக்கிட்டதில் பெரும் வியப்பு உருவாக, கண்களில் நீர்ததும்ப நின்றிருந்தவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அதே போன்ற அதிர்வுடன் தன்னைத் திரும்பிப் பார்த்த ஆருஷைப் பார்த்தவளின் கண்கள் வியப்பில் விரிந்தன.
இருவரும் ஒருவரை ஒருவர் வித்தியாசமான உணர்வுடன் பார்த்துக்கொள்ள, அவர்களின் திடுக்கிடலும் ஒரே மாதிரியான பார்வை பரிமாற்றங்களும் எதிரில் ஸோஃபாவில் அமர்ந்திருந்த சந்தியாவிற்குக் குழப்பதைக் கொடுக்க, அதே கணம் அவரது அலைபேசிக்கு தகவல் வந்தது.
"He landed."
அசாதாரணமான தெம்பை அந்தத் தகவல் கொடுக்க, நிமிர்ந்து அமர்ந்தவராய் எதிரில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வை வேடிக்கைப் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருக்க, அவரது அலைபேசிக்கு வந்த தகவலையும், அதைப் படித்த பின் அவரது நிமிர்வையும் கண்ட ஆருஷின் நெற்றியில் யோசனைக்கோடுகள் விழுந்தன.
அதே நேரம் அவனை நெருங்கிய மனோஜ் அவனது செவிகளில் எதுவோ சொல்ல, அதிர்ந்தவனாய், "வாட்? How is that possible?" எனவும், "சார், உடனேயே நாம் போகணும். இல்லைன்னா ஏ.ஏ. க்ரூப் ஆஃப் கம்பெனிஸுக்கு பெரும் நஷ்டம்.. கம்பெனியையே இல்லாமல் பண்ணிடுவாங்க போலருக்குன்னு மேனேஜிங் டைரக்டர் பயத்துடன் மெசேஜ் அனுப்பி இருக்கார் சார்.." என்றான் பதைபதைப்புடன்.
அவர்களது உடற்மொழிகளையும், இரகசிய பேச்சுவார்த்தைகளையும் பார்த்தவாறே அமர்ந்திருந்த சந்தியா தன் வலதுகரத்தில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்க்க, அவரது செய்கைகளை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆருஷிற்கு எதுவோ புரிந்தது போல் இருந்தது.
"ஸோ, இது எல்லாத்துக்கும் காரணம் நீங்க தானா?"
அவனது கேள்வியில் நிமிர்ந்துப் பார்த்தவர் சிறிய புன்னகையுடன், "எந்த எல்லாத்துக்கும்?" என்றார்.
அவரது கிண்டலான பதிலில் புருவங்கள் மத்தியில் முடிச்சுவிழ அவரைப் பார்த்தவன் அருகில் நின்றிருக்கும் மித்ரலட்சுமியின் புறம் திரும்ப, அவளது தோற்றம் ஆருஷின் நம்பிக்கையை மீண்டும் தடம் புரளச் செய்தது.
கடந்த சில நாட்களாக ரோலர் கோஸ்டரில் [roller coaster] பயணித்தது போல் அவளது வாழ்க்கை பல இறுக்கமான திருப்பங்கள் மற்றும் செங்குத்தான சரிவுகளுடன் நகர்ந்துக் கொண்டிருந்ததில் அதிர்ச்சியில் நின்றிருந்த மித்ரலட்சுமியின் முகம் வெளுத்துப் போயிருந்தது.
ஒரே ஒரு நிகழ்ச்சி.. அல்லது ஒரே ஒரு அசம்பாவிதம் போதும் அவளை நிலைகுலையச் செய்ய. அது போன்றதொரு தடுமாற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்தாள் அவள்.
இவளை இப்படியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டால், இந்தச் சந்தியா என்னிடம் இருந்து இவளை நிரந்தரமாகப் பிரித்துக் கொண்டு சென்றுவிடுவார்.
அப்படியெனில் நான் இங்கிருந்து நகரக் கூடாது.
ஆனால் அதே சமயம், பல ஆண்டுகள் உழைத்து நான் உருவாக்கிய என் தொழில் பேரரசு சிதைந்து போகும் நிலை உருவாகி இருக்கிறது. நான் அங்கே செல்லாமல் இருந்தால் என்ன ஆகும்? மீண்டும் அதனைப் பழைய உயரத்திற்குக் கொண்டு வர என்னால் முடியுமா?
பெற்றோரை இழந்து, உறவுகளற்ற தனிமையில் வாழ்ந்தவன். தனியாகப் போராடி வென்று எழுப்பிய உயர்ந்த கோபுரமே அவனது தொழில் சாம்ராஜ்யம்.. ஒரு பெண்ணிற்காக அதைச் சுக்குநூறாக்க விட்டுவிட முடியுமா??
சடச்சடவெனப் புத்தி சிந்திக்க, தன் திருமணமா அல்லது தனது நிறுவனங்களா என்று யோசித்தவனுக்கு நிச்சயமாய் மித்ரலட்சுமியை தன்னிடம் இருந்து அவ்வளவு சுலபமாய்ச் சந்தியா பிரித்துச் சென்றுவிட முடியாது என்ற நம்பிக்கைத் தோன்றியதில், மித்ரலட்சுமியின் மாமன்களைக் கண்டு தன்னுடன் வருமாறு தலையசைத்தான்.
நடேசனைத் தவிர, சிங்காரவேலனும் பிரபாகரனும் அவனைப் பின் தொடர, அருகில் இருந்த அறைக்குள் சென்றவன் அவர்களிடம் இரகசியமாய் எதனையோ பகிர்ந்துவிட்டு வெளியில் வந்தான்.
அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த மனோஜை நெருங்கியவன், "லெட்ஸ் கோ.." எனவும், அவர்கள் இருவரும் வெளியில் சென்றதும் அமர்ந்திருந்த இருக்கையில் இன்னமும் ஒய்யாரமாகச் சாய்ந்து அமர்ந்தார் சந்தியா.
*********************************
ஆருஷின் கார் விமானநிலையத்தை நோக்கி அசுரவேகத்தில் பறந்தது.
"எப்படி சார் ஒரே நாளில் இவ்வளவு அசம்பாவிதங்கள் நடக்க முடியும்? முதலில் உங்க கல்யாணம் நின்னுப் போனது. பிறகு ஷேர் மார்க்கெட்டில் நம்ம கம்பெனிஸோட எல்லா ஸ்டாக்கும் திடீர்னு அடுத்தடுத்து ஒரு மணி நேரத்துக்குள்ள சரிஞ்சிருக்கு. இதுல சொல்லி வச்ச மாதிரி அவ்வளவு பெரிய எலக்ட்ரானிக் சிட்டியில் நம்ம பில்டிங்கில் மட்டும் தீப்பற்றியிருக்கு. இதுல ஏறக்குறைய பத்துக்கும் மேற்பட்ட எம்ப்ளாயிஸ் தீக்காயத்தோட ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் பட்டிருக்காங்க. சார், எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு சார். இது யாரோ ரொம்பத் துல்லியமா திட்டமிட்டு செய்த மாதிரி இருக்கு."
அவனது குரல் கூடத் தடதடத்தது.
ஆனால் அதற்குப் பதில் எதுவும் கூறாது அமைதியாக அமர்ந்திருந்த ஆருஷின் எண்ணங்கள் அனைத்துமே ஒரே இடத்தில் நிலைத்தது.
அவன் இப்படி எல்லாம் செய்திருப்பானா? ஆனால் இதினால் அவனுக்கு என்ன இலாபம்? இந்தியாவில் பாதிச் சொத்து அவனுடையது தானே? அப்படி இருக்க மித்ரலட்சுமியினால் வரும் சொத்துகள் அவனுடைய காலடிக்குச் சமானம் தானே.
அப்படி என்றால் இந்தளவிற்கு மெனக்கெடுவது அவனது ஸ்டையில் அல்லவே!
யோசிக்க யோசிக்கத் தெளிவுப் பிறப்பதற்குப் பதிலாகத் தலைவலியே உருவாக, தன்னை எதிர்த்து இந்தளவிற்குக் காய்களை நகர்த்துவது யார் என்று புரியாமல் காரின் இருக்கையில் தலைசாய்த்த ஆருஷின் கேள்விகளுக்குப் பதில் மட்டும் கிடைக்கவே இல்லை.
மண், பொன், பெண் இவற்றில் எது ஒன்றிலும் ஆசை வைத்தாலும் மனிதன் அதை அடைவதற்கு எந்த நிலைக்கும் செல்வான். நாம் படித்த சரித்திரங்கள் இவற்றை நன்றாகவே தெளிவு படுத்துகின்றன.
எத்தனை எத்தனை சாம்ராஜ்யங்கள் மண்ணாலும் பொன்னாலும் பெண்ணாலும் சரிந்திருக்கின்றன!
ஆனால் இவை அனைத்துமே தன் காலடிகளில் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு மனிதன் அடுத்து அடைய நினைப்பது என்ன?
அவன் என்னை வீழ்த்துவதற்கு இந்தளவிற்கு இறங்கி வருவானா? நிச்சயமாக மாட்டான். ஆக இவை எல்லாவற்றிற்கும் காரணம் சந்தியா? ஆனால் அந்தப் பெண்மணியால் இது சாத்தியமா?
மூளை சூடாகும் வரையிலும் யோசிக்க, அவர்களது கார் விமான நிலையத்தை நெருங்கும் வேளை மறுபுறமாய் அந்த வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் [white range rover sv carmel edition] பூவசரம்பட்டியை நோக்கி பறந்தது.
அதனைத் தொடர்ந்து மேலும் இரு கார்கள் அதே வேகத்தில் பறக்க, பூவசரம்பட்டியை அவை அடையும் நேரத்தைக் கணக்கிட்டுக் காத்திருந்த சந்தியாவிற்கு அவர்கள் எதிர்பார்த்த நேரத்திற்கு வரவில்லை என்றதும் பெரும் குழப்பம் சூழ்ந்தது.
தனது வழக்கறிஞர்கள் வந்து கொண்டிருக்கின்றனர், அவர்கள் வந்ததற்குப் பிறகு தான் சொத்துகள் பற்றி விலாவரியாகப் பேச முடியும் என்று அவர் கூறியதன் பெயரில், இவ்வளவு நடந்தற்குப் பிறகும் ஒருவேளை மித்ரலட்சுமியின் சொத்துகள் தங்களுக்கு வந்துச்சேர வாய்ப்பிருக்காதா என்ற ஏக்கத்துடன் அவளது மாமன்கள் அமர்ந்திருந்தனர்.
ஆயினும் சந்தியா இவ்வீட்டிற்குள் நுழைந்து ஏறக்குறைய மூன்று மணி நேரங்கள் கடந்துவிட, நேரம் செல்ல செல்ல வீட்டினுள் இருப்பவர்களின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.
அவர்கள் ஒருவருக்கொருவர் அவ்வப்பொழுது திரும்பிப் பார்த்துக் கொள்வதும், பின் எழுந்து அருகில் இருக்கும் அறைக்குள் சென்று ஏதோ இரகசிய கூட்டம் போல் பேசிக் கொள்வதும், பின் திரும்பி வந்து அமர்வதும் பல முறை நடக்க, அவை சந்தியாவின் எரிச்சலை அதிகரிக்கச் செய்ய, என்ன நினைத்தாரோ சற்று யோசித்தவராய் திடீரென அந்த அஸ்திரத்தை வீசினார்.
"ஆருஷ் ஆதித்யா.. அந்தப் பையனை நம்பி உங்க பொண்ணைக் கொடுக்க இவ்வளவு திட்டம் போட்டீங்க, ஆனால் பார்த்தீங்களா அவனுக்கு ஒரு பிரச்சனைன்னு வரும் போது அப்படியே உங்களை எல்லாம் அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டான். அதான் சொல்றேன், உங்களுக்கு வேண்டியதை எல்லாம் நான் செய்றேன். என் கணவரோட அம்மா, அதாவது என் மாமியார் சாவித்திரி அம்மாவையும் கவனிக்கிறதுக்கான ஏற்பாடுகளை நான் செய்றேன். மித்ரலட்சுமியை என்னுடன் அனுப்பி வைங்க."
அது வரை ஆருஷிடம் இருந்து சொத்துகள் தங்களிடம் கைம்மாறும் என்று ஆசையுடன் இருந்த மித்ரலட்சுமியின் மாமன்களுக்கும், அவர்களது மகன்களுக்கும் திருமணம் திடுமென நின்றதே பெரிய அதிர்ச்சியாய் இருந்தது.
இதனில் அவன் இவ்வாறு சுயநலத்துடன் மித்ரலட்சுமியை அம்போவென விட்டுவிட்டுச் சென்றுவிட்டதில் அவர்கள் நிலைகுலைந்துப் போய் நின்றிருந்தார்கள்.
இப்படியான சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் வருவார்கள், நமக்குச் சாதகமாக ஏதாவது சொல்வார்கள், இல்லையெனில் மித்ரலட்சுமிக்கு ஈடாக நமக்கு எதுவும் கொடுப்பார்கள் என்று அவர்கள் நப்பாசையுடன் காத்திருக்க, இப்பொழுது திடுமென மித்ரலட்சுமியை மட்டுமல்ல பாட்டி சாவித்திரியையும் இங்கிருந்து அழைத்துக் கொண்டு போகின்றேன் என்று சந்தியா கூறியதில் பயந்துப் போனதில் வார்த்தைகள் அங்குத் தெறிக்க ஆரம்பித்தன.
"அதெல்லாம் முடியாதுங்க. நீங்க எங்க அண்ணன் மகாதேவனுடய மனைவியா இருக்கலாம். ஆனால் எங்களைப் பொறுத்தவரையும் எங்களை எல்லாம் வேண்டாம்னுட்டு போன அண்ணனையே நாங்க வெறுத்து ரொம்ப நாளாச்சு, அப்படி இருக்கும் போது அவருடைய மனைவியை நம்பி எங்க வீட்டுப் பொண்ணை நாங்க அனுப்ப முடியாது. அதுவும் இல்லாம நாங்க மூணு மகன்கள் கல்லு மாதிரி இருக்கும் போது எங்கேயோ இருக்கும் உங்களுடன் நாங்க எங்க அம்மாவை அனுப்பினா இந்த ஊர் எங்களை என்ன சொல்லும்? அதனால் இந்தப் பேச்சை இத்தோட விட்டுடுங்க."
பட்டென்று பேசும் சிங்காரவேலனை ஆராயும் பார்வையுடன் பார்த்த சந்தியா, சற்றுத் தள்ளி இருக்கையில் அமர்ந்திருக்கும் மூத்தவர் நடேசனைத் திரும்பி நோக்கினார்.
அவரது எண்ணம் புரிந்தவர் போல் நடேசனும், "ஆமாம்மா, என் தம்பி சொல்றது தான் சரி. திடீர்னு வந்து எங்க பொண்ணை என்னுடன் அனுப்பி வைங்கன்னு நீ சொல்றதை எங்களால் ஏத்துக்க முடியாது.." என்று திட்டவட்டமாய்க் கூற, பெரியவர்களின் வார்த்தைகள் திடம் கொடுத்ததில் அதியமான் அநியாயத்திற்கு எகிர ஆரம்பித்தான்.
"ஏதோ உங்க லாயர் வருவார், அவர் நிச்சயமாய் எங்களுக்கும் ஏத்த மாதிரி ஏதோ செய்வார்ன்னு சொன்னீங்க. இப்படித் திடீர்னு பல்டி அடிக்கிற மாதிரி பேசுறீங்க."
நேரம் கடத்துவதற்காகத் தான் பொய்யாகக் கூறியதை பிடித்துக்கொண்டு தொங்குபவனைப் பார்த்து மானசீகமாய்த் தலையில் அடித்துக் கொண்டார் சந்தியா.
இந்தளவு பணத்தாசை மனிதர்களை முட்டாளாக்குமா?
அவர் புருவங்களை உயர்த்தி யோசிக்க, அனைத்தையும் அமைதியாய் கவனித்துக் கொண்டிருந்த சத்யன் நிதானமாய் மித்ரலட்சுமியை நெருங்கினான்.
"லட்சுமி, இவங்க ஏதோ திட்டம் போட்டு தான் பூவரசம்பட்டிக்கே வந்திருக்காங்க. அது நிச்சயமா இவங்க வீட்டுக்காரர் உன் அம்மா பேர்ல எழுதி வச்ச சொத்துக்காக இருக்காது. ஏன்னா இவங்களுக்கு இந்த நாடு முழுக்க மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலும் ஏகப்பட்ட சொத்துகள் இருக்கு. ஆனாலும் இவங்க இங்க வந்திருக்காங்கன்னா, இதுல ஏதோ ஒரு சூட்சமம் இருக்கு. ஆனாலும் ஒண்ணு சொல்றேன். உனக்கு உன் உயிரையும் விட முக்கியமானது எதுன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதனால் உனக்கு விருப்பம் இருந்தால் நீ தாராளமா இவங்க கூடப் போகலாம். ஆனால் அப்பத்தா இங்க தான் இருப்பாங்க. எங்க கண்காணிப்பில் தான் அவங்க இருக்கணும். நல்லதோ கெட்டதோ, எல்லாமே அவங்களுக்கு இங்க எங்க கையால தான் நடக்கணும்." என்றதில் ஆனானப்பட்ட சந்தியாவிற்கே சற்றுப் பயம் பிறக்கத்தான் செய்தது.
'கடவுளே! பெரியவர்களிடம் இருந்து கூட இந்தச் சின்னப் பெண்ணைக் காப்பாற்றி என்னால் கூட்டிட்டுப் போக முடியும், ஆனால் இவனிடம் இருந்து இவளைக் காப்பாற்ற என்னால் முடியாது போல இருக்கே.'
அவரது மனம் பரிதவிக்க, தன்னருகே நின்றிருக்கும் சத்யனை வெகு அச்சத்துடன் பார்த்திருந்த மித்ரலட்சுமியின் கையை அவன் பிடித்த நேரம், அவர்களது வீட்டு வாயிலில் வந்து நின்றது அந்த அந்த வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர்.
ஓட்டுநரின் இருக்கையில் இருந்து இறங்கிய அஸார் மறுபக்கம் வந்து கதவைத் திறந்தவன் "சார், எதுக்கும் கொஞ்சம் பொறுமையாவே டீல் பண்ணுங்க.." என்றான்.
தனது ஆஸ்தான ஓட்டுநன் மட்டுமில்லாது தனது மனதிற்கு மிகவும் நெருங்கிய நண்பன் மற்றும் பிஏ-வான அஸாரைப் பார்த்து தன் வழக்கமான மேனரிசமான அரைப்புன்னகையுடன் ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவனாய் ரேஞ்ச் ரோவரை விட்டுக் கீழ் இறங்கிய ஆர்யா தங்களுக்குப் பின்னால் வந்து நின்ற கார்களை நோக்கினான்.
அதற்குள் அக்கார்களுள் இருந்து இறங்கிய அவனது வழக்கறிஞர்களும் இன்னும் சில அதிகாரிகளும் அவனுக்காகக் காத்திருக்க, அவர்களை நோக்கி தலையசைத்தவனாய் வீட்டிற்குள் நுழைந்தவனைக் கண்டதில் தன்னையும் அறியாமல் எழுந்து நின்றார் வீட்டின் மூத்த தலைவர் நடேசன்.
அதே நேரம் மித்ரலட்சுமியின் கையைப்பிடித்த சத்யன் திடீரென வெளியே எழுந்த சத்தத்தைக் கேட்டவுடன் திரும்பிப் பார்த்தவன் வாயிலில் கண்ட காட்சியில் உறைந்து நின்றான்.
அங்குக் கீறிச்சென்ற சத்தத்துடன் நாலாப்புறமும் மணலைச் சிதறடித்தபடி வந்து நின்ற பல கோடிகள் விலைபெறுமான காரின் தோற்றம் சத்யனை அசரடித்தது என்றால், மித்ரலட்சுமியின் இதயம் பெருமளவு துடிக்க ஆரம்பித்தது.
அதன் காரணம் என்னவென்று அந்தக் காரிகைக்கு அக்கணம் தெரியவில்லை.
அவளும் வாசலின் புறம் திரும்பிப் பார்க்க, சத்யனும் வாயிலுக்கருகிலே பார்வையைப் பதித்திருக்க, இருவரின் முகங்களும் அவர்களது நெஞ்சின் அடி ஆழத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மாறின.
காருக்கு அருகில் மிடுக்கான தோற்றத்தில் நின்றிருந்தவனின் லைட் டீல் நிறத்துச் சட்டை (Light Teal Ultra Slim-Fit shirt and beige pant) காற்றில் சிறிது அசைந்து வீச, அணிந்திருந்த கருப்பு சன்கிளாஸ் அவனது அழகிற்கு மேலும் மெருகூட்ட, மீசையின் நுனியில் ஒரு சிறிய புன்னகை. முகத்தில் ஓர் அடங்காத நிமிர்வு. கருப்பு கண்ணாடியையும் மீறி வெளிச்சம் வீசும் அவனது கண்கள் வீட்டின் வாசலை நோக்கி நிமிர்ந்தபடி இருந்தன.
ஆறடி இரண்டங்குல உயரம் இருந்தவனின் உயரத்திற்குச் சற்று குறைவாக இருந்தது அந்தப் பழங்காலத்து வீட்டின் வாயிற்நிலை.
அதனில் சற்று குனிந்து உள்நுழைந்தவனது முகத்தின் மீது வீட்டின் முற்றத்தில் இருந்து சிதறிய ஒளி விழுந்ததில் வாழ்க்கையில் முதன்முறையாய அவனைப் பார்த்திருந்தாலும் ஒரு நொடியில் சுவாசமே இழந்தது போல் தவித்துப் போனாள் மித்ரலட்சுமி.
யார் இவன்?
அவளது உள்மனம் கேட்ட கேள்வி தன் செவிகளுக்குள் அசிரீரியாய் சென்றதைப் போல் உணர்ந்தவன் உரிமையுடன் மெதுவாக வீட்டின் உள்ளே அடியெடுத்து வைக்க, அணிந்திருந்த ஷூவைக் கழட்டாது உள்ளே நுழைந்தவனின் பாதடிகளின் சத்தம் அந்த வீட்டின் அமைதியை பிளந்தது போல அனைவருக்குமே கேட்டது.
வீட்டின் மூத்த தலைவர் நடேசன் அவனைப் பார்த்தவுடன் எழுந்து நின்றவர், "வாப்பா.."என்றார் குரல் நடுங்கியபடி.
அவன் மெதுவாகத் தான் தலையசைத்தான், ஆனால் அந்தச் சிறு அசைவிலேயே ஒரு அழுத்தமான ஆணவமும் அடங்காத திமிரும் இருக்க, அவன் நின்றிருந்த தோற்றத்தைக் கண்டதிலேயே மித்ரலட்சுமியின் கை சத்யனிடமிருந்து வழுக்கி நகர்ந்தது.
அப்பொழுதும் சாய்விருக்கையில் ஒய்யாரமாய் அமர்ந்திருந்த அன்னையை ஒரு கணம் திரும்பிப் பார்த்த ஆர்யா, பின்னர் மெதுவாகச் சன்கிளாஸை கழற்றியவாறே மித்ரலட்சுமி நின்ற திசையை நோக்கி திரும்பினான். அடுத்த நொடி அவனது பளபளக்கும் கண்கள் நேராக அவளது பார்வையைத் தொட, மித்ரலட்சுமியின் உலகமே அங்கேயே உறைந்தது.
ஒரு வார்த்தையும் அவன் பேசவில்லை. ஆனால் அவன் கண்கள் எத்தனை சொல்லாத கதைகளைப் பேசினவோ, அந்த மௌனத்தின் மொழி, சொற்களைக் கடந்த அர்த்தமாக அவளது உள்ளத்தில் பதிந்தது.
அவை ஒரு முறை ஒலித்துச் செல்லும் சப்தமல்ல, இதயத்தின் ஆழத்தில் என்றுமே ஒலித்துக் கொண்டிருக்கும் எதிரொலிகளாய் ரீங்காரமிட [Eternal echoes of her heart] அவளது இருதயத்தை அவை மௌனமாய்க் கிழித்தன.
'தெரிந்து கொள்வதற்காக மட்டுமல்ல.. எத்தனை பிறவி எடுத்தாலும் நான் உன்னை மணப்பேன் மித்ரா..'
எந்தக் குரலும் இல்லாமல் அந்த வார்த்தைகள் வீடு முழுவதும் ஒலித்ததுபோல் ஒரு அசிரீரி பரவியது. ஆனால் அது ஒருவரின் செவிகளையும் எட்டவில்லை!
ஆர்யாவைத் தொடர்ந்து உள்ளே வந்த வழக்கறிஞர்களும் அதிகாரிகளும் அவனை நோக்கிப் பார்க்க, அவன் ஒரு சிறிய தலையசைவால் பதில் அளித்தான், ஆனால் அவனது பார்வை ஒரு கணம் கூட மித்ரலட்சுமியைவிட்டு விலகவில்லை.
அந்தப் பார்வையை உணர்ந்தவளின் மேனி லேசாக அதிர, அடி வயிற்றில் விளக்கமில்லாத ஒரு உணர்வு சுரண்டியது.
ஏன் இவளைவிட்டு என் கண்களை நான் பிரித்தெடுக்க முடியவில்லை என்று ஆர்யாவுக்கே புரியாமல் போனது. அதே நேரத்தில், மித்ரலட்சுமியின் உள்ளத்தில் அர்த்தம் புரியா காட்சிகள் நினைவுகளின் சிதறல்களாய் ஒன்றோடு ஒன்று மோதி, அறியாத ஒரு புயலாய் எழுந்தது.
இது அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சாதாரணச் சந்திப்பு அல்ல. ஏற்கனவே தொடங்கியிருந்த ஒரு போரின் தொடர்ச்சி.
அதை அவர்கள் அப்பொழுது உணரவில்லை! பின்னாளில் அனைத்தும் அப்பட்டமாய்த் தெரிய வரும் போது நிகழும் விபரீதங்களுக்கும் விளைவுகளுக்கும் முடிவு?
*********************************************
மூன்று மணி நேரங்களுக்கு முன்னர்.
திருச்சி விமானநிலையத்தில் இருந்து கிளம்பிய பெங்களூர் விமானத்தில் அமர்ந்திருந்த ஆருஷின் மனம் உலைகளம் போல் கொதித்துக் கொண்டிருந்தது.
இது எப்படிச் சாத்தியம்? அதுவும் ஒரே நாளில் இவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே கிடுகிடுக்கச் செய்ய முடியுமா? அதுவும் ஒரு பெண்மணியால்!!
அதை நான் இன்றே கண்டுப்பிடிக்க வேண்டும். ஒருவேளை இவை அனைத்தும் அவரால் தான் என்றால் நான் இதை இப்படியே விட்டுவிடக் கூடாது! நான் யார் என்று அவருக்குக் காட்ட வேண்டும்.
முடிவெடுத்தவனாய் அருகில் அமர்ந்திருந்த மனோஜை நோக்கித் திரும்பியவன் அவனிடம் ஏதோ ஒரு விஷயத்தைச் சற்று இரகசியமாய்க் கிசுகிசுக்க, அதனில் மனோஜின் முகம் மாறியது.
"சார், வேண்டாம் சார். இதோட விட்டுடுவோம். அந்தப் பொண்ணை விட்டால் உங்களுக்குப் பொண்ணா கிடைக்காது. எவ்வளவோ பொண்ணுங்க உங்க காலடியில விழறதுக்குத் தவமா தவம் கிடக்குறாங்க. ப்ளீஸ், நான் சொல்றதை கொஞ்சம் தயவுபண்ணி கேளுங்க.. வேண்டாம் சார்.."
"ம்ப்ச்... மனோ, நான் என்ன சொல்லிட்டு இருக்கேன், நீ என்ன பேசிட்டு இருக்க?"
"புரியுது சார், ஆனாலும்.."
"ஆனாலும் என்ன?"
"அவங்க ரொம்பப் பெரிய இடம் சார். நம்மால் அவங்களை எதிர்த்து ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. அதுவும் இல்லாம எவ்வளவு நாள் அவங்க கம்பெனியோட பிஸ்னஸ் டீலிங் வச்சிக்கணும்னு நீங்க போராடினீங்க. கிடைச்ச ஒரே ஒரு சான்ஸையும் மிஸ் பண்ணிட்டீங்க, ஆனால் அது திரும்பவும் கிடைக்க வாய்ப்பு இருக்குங்கிற மாதிரி அவங்க சைடில் இருந்து கொஞ்ச நாள் முன்னாடி தான் ஒரு தகவல் வந்தது. அந்த டீலிங் மட்டும் சக்ஸஸ் ஆகிட்டால் நாம் இப்போ இருக்கிறதைவிடப் பல மடங்கு நம்ம பிஸினஸ் உயரும், ஆனால் இப்போ நீங்க சொல்ற மாதிரி செஞ்சா உங்களுடைய போராட்டம் எல்லாமே விரயமாகிடும் சார்."
"மனோ, இதற்கு மேல் எதுவும் பேச வேண்டாம், நான் சொல்றதை மட்டும் செய். மற்றதை நான் பார்த்துக்குறேன்."
கட்டளைப் போல் ஆழ்குரலில் கூறிய ஆருஷ் கண்களை மூடி இருக்கையில் தலை சாய்க்க, ஏனோ இது ஒரு யுத்தத்தின் ஆரம்பம் என்று மட்டுமே மனோஜிற்குத் தோன்றியது.
அதே நேரம் கண்களை இறுக்க மூடி படுத்திருந்த ஆருஷின் மனக்கண்களின் முன் ஒரு இராஜ்யத்தில் நிகழ்ந்த காட்சிகளும், அதனில் ஒரு அரண்மனைக்குள் நிகழ்ந்த நிகழ்வுகளும், அரியாசனத்தில் அமர்ந்திருப்பவனைப் பார்த்தவாறே மக்கள் பலர் கூடி நிற்கும் காட்சிகளுமாய்த் தோன்ற, இறுதியில் அவனது நினைவுகள் வந்து நின்றது ஒரு கோவிலில்.
அங்குத் தன் எதிரில் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்த அழகிய பெண்ணவளைப் பார்த்தவாறே தன் அருகில் நின்று கொண்டிருந்த, ஏறக்குறைய தன் உருவத்தை அச்சில் வார்த்தார் போலவே இருந்த ஒரு ஆடவன் ஏதோ கூற, அது மானசீகக் காட்சிகள் என்றாலும் ஆழமாய்க் கவனத்தை அதனில் செலுத்த, அவன் கேட்ட கூற்றில் அதிர்ந்து போனான்.
"சிவ கோத்திரம்.... அஷ்வினி நட்சத்திரம்.."
சட்டெனக் கண்களைத் திறந்தவன் நிமிர்ந்து அமர்ந்தான்.
"சார், என்னாச்சு சார்? திரும்பவும் ஏதாவது கனவு கண்டீங்களா?"
"யெஸ், ஆனால் இது வேற மாதிரி மனோ."
"என்ன மாதிரி சார்?"
அவனது கேள்விக்குப் பதிலளிக்காது சில வினாடிகள் அமைதியாக இருந்த ஆருஷ் ஒரு அதிர்ச்சி கலந்த பார்வையுடன் மனோஜை நோக்கியவன், "மனோ, அந்த ஆர்யாதித்யா.. அவனுடைய ஜாதகமே எனக்கு வேணும். ஐ மீன், அவனுடைய கோத்திரம், நட்சத்திரம் எல்லாம் எனக்கு வேணும் மனோ." என்றதில் மனோஜிற்குக் குழப்பமேற்பட்டது.
"சார், அவருடைய ஜாதகம் எதுக்கு சார் உங்களுக்கு?"
"ம்ப்ச்.. திரும்பவுமா? நான் கேட்டது எனக்கு வேணும் மனோ, புரியுதா?"
கூறிய ஆருஷ் மீண்டும் கண்களை மூடியவனாய் இருக்கையில் தலைசாய்க்க, விமானம் பெங்களூரில் தரையிறங்கிய வேளையில் மனோஜின் அலைபேசிக்கு வந்த தகவலில் அவனுமே அதிசயித்துப் போனான்.
'ஆர்யாதித்யா.. சிவ கோத்திரம்.... அஷ்வினி நட்சத்திரம்..'
ஆர்யாவின் ஜாதகத்தை விசாரித்து ஆருஷிடம் அதனை மனோஜ் சமர்ப்பித்துக் கொண்டிருந்த அதே நேரம், நீர் விழிகளில் நிரப்ப, படபடக்கும் நெஞ்சத்துடன் மௌனமாய்த் தலைகுனிந்து நின்று கொண்டிருந்த மித்ரலட்சுமியின் கழுத்தில் மஞ்சள் கயிறில் முடிச்சிடப்பட்டிருக்கும் தங்கத் தாலியை அணிந்து கொண்டிருந்தான் ஆர்யா.
தொடரும்...

Last edited: