மீரா (மித்ரா)
The Eternal Echoes of Her Heart!
அத்தியாயம் - 9
*****************************
பிரைவேட் ஜெட்டில் ஏறியவுடனேயே, விமானப் பணிப்பெண் அவளை ஆர்யாவின் பிரத்யேக அறைக்குத் அழைத்துச் செல்ல, அந்த அறைக்குள் அடியெடுத்து வைத்த மித்ரலட்சுமியின் கண்கள் மிரட்சியில் அகன்றன.
முதலிரவுக்கென வடிவமைக்கப்பட்டிருந்த அந்த அறை, எண்ணற்ற மலர்களின் நறுமணத்தில் மூழ்கி கனவுலகைப் போல் தோன்ற, இதனில் அடர்ந்த சிவப்பு நிற ரோஜாக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மேல் இதய வடிவங்கள் வேறு நயமுடன் வரையப்பட்டிருந்தது
விமானத்திற்குள் மெழுகுவர்த்திகளும் ஊதுபத்தியும் வைக்கக்கூடாது என்ற கட்டுப்பாடுகளால் உண்மையான மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக மெல்லிய ஒளிவிளக்குகள் நுணுக்கமாகப் பொருத்தப்பட்டு, அறை முழுவதும் மென்மையான ஒளியில் நனைந்திருந்தது.
படுக்கையைச் சுற்றிலும் பேட்டரியில் இயங்கும் மெழுகுவர்த்திகள் அழகாய் வரிசையாக வைக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஒரு மந்திரமயமான அழகை அளித்தன.
அதற்கு மேலாக, அறை முழுவதும் பரவியிருந்த விலையுயர்ந்த வாசனைத் திரவியத்தின் மணம், அவளது நாசியினுள் நுழைந்து, நேராக இதயத்தையே தொட்டதில் ஒரு கணம் அவள் எங்கே இருக்கின்றாள் என்பதையே அவளை மறக்கச் செய்தது!
கடவுளே! என்ன இது?
'திடுதிடுப்புன்னு இவங்க அம்மா வந்து கல்யாணத்தை நிறுத்தினாங்கன்னா, முன்னப்பின்ன என்னைப் பார்த்தே இராத இவர் வந்து என் கழுத்தில் தாலியே கட்டிட்டார். அதுவே பெரிய அதிர்ச்சின்னா, இதென்னா ரூம் முழுசும் பூக்களை வச்சி அலங்காரம் பண்ணிருக்காங்க?? இதுல இவங்க அம்மா இல்லாமல் இவர் என்னை மட்டும் தனியா அழைச்சிட்டு எதுக்குப் போகணும்? அவங்க எப்போ, எப்படி வருவாங்க? ரிஜிஸ்டர் ஆஃபிஸ் வரை வந்தவங்க அப்புறம் ஆளேயே காணோம். ஒருவேளை அம்மம்மாவுக்காகத் திரும்பி பூவசரம்பட்டிக்கே போயிருக்காங்களோ?'
மனம் கலங்க யோசித்தவளாய் அவள் அறைக்குள் நுழைய, அவளது மிரட்சியை வியப்பு என்று தவறாகப் புரிந்து கொண்டு அவளை இரசித்துப் பார்த்தவளாய் நின்றிருந்த பணிப்பெண், "Do you want anything to drink?" என்றாள்.
அதற்கு மறுப்பாய் தலையை மட்டும் மித்ரலட்சுமி அசைக்க, சிறு புன்னகையுடன் பணிப்பெண் அங்கிருந்த நகர்ந்தாள்.
அவள் செல்வதையே சில விநாடிகள் பார்த்திருந்துவிட்டுப் பின் அறைக்குள் இருந்த படுக்கையின் ஒரு ஓரத்தில் மெதுவாக அமர்ந்த மித்ரலட்சுமிக்கு, அவளைச் சுற்றி நடக்கும் அனைத்துமே அவளை எதிர்பாராத ஒரு சுழல்காற்றினுள் சிக்க வைத்துக் கொண்டிருப்பது போலவே தோன்றியது.
'இதுல மகாதேவன் மாமா இறந்து இவ்வளவு நாள் கழிச்சு திடுதிடுப்புன்னு வந்த சந்தியா அத்தையை நான் ஏன் இந்தளவுக்கு நம்பினேன்? ஒருவேளை ஏற்கனவே நான் குழப்பத்துல இருந்ததுனால அவங்க வந்து கல்யாணத்தை நிறுத்தினதும் அவங்க மேல எனக்கு நம்பிக்கை வந்துடுச்சோ? ஆனால் நான் நம்பியிருக்கக் கூடாதோ? ஆனா அவங்க ஏன் அவங்க மகன் வருவார், அவர் என் கழுத்துல தாலி கட்டுவாருன்னு என்கிட்ட சொல்லவே இல்லை? இதுல மகாதேவன் மாமா எங்க வீட்டுக்கு வந்ததை ஏன் அம்மம்மாவும், ரமா அத்தையும் பார்வதி அத்தையும் என்கிட்ட சொல்லவே இல்லை..'
எண்ணற்ற கேள்விகள் மனதை முற்றுகையிட, அவற்றுக்கான விடைகளைத் தேடியபடியே ஆழ்ந்த யோசனையில் மித்ரலட்சுமி அமர்ந்திருக்க, ஆனால் நேரம் மட்டும் மெதுவாகக் கடந்ததே தவிர, அந்த அறையின் பக்கம் ஆர்யா திரும்பி கூடப் பார்க்கவில்லை..
திருச்சியில் இருந்து தில்லிக்கு மூன்றரை மணி நேரத்திற்குள் விமானப்பயணம் முடிந்துவிடும். ஆனால் பல மணித்துளிகள் கடந்தும் ஆர்யா வராததால், எதற்கு இந்த அலங்காரம் என்ற கேள்வி அவள் மனதில் எழுந்த அடுத்தக் கணமே, அறை வாசலில் ஒரு நிழல் வந்து நின்றது.
திறந்திருந்த அறை வாயிலின் வழியே அவளைப் பார்த்தவாறே சுவரில் சற்று சாய்ந்தவனாய் இரு கரங்களையும் பேன்ட் பாக்கெட்டினுள் விட்டிருந்த ஆர்யா, எதிரில் நிற்கும் அஸாரிடம் பேசத் துவங்கினான்.
அவனைப் பார்த்ததுமே படக்கென எழுந்து நின்றவளின் பரபரத்த மேனியையும், மிரட்சியுடன் தன்னைப் பார்த்திருந்த கண்களையும் பார்த்ததில் வித்தியாசமாய்த் தோன்றினாலும் எதனையும் சட்டை செய்யாதவனாய் அஸாரிடம் பேசிக் கொண்டிருக்க, சிறிது நேரம் கழித்து மெள்ள மீண்டும் கட்டிலில் அமர்ந்தவளாய் விமானத்தின் ஜன்னலில் தலைசாய்த்த பெண்ணவளின் தோற்றம் அதிசயமாய் அவனது கவனத்தை ஈர்த்தது.
பிறந்த நொடியிலிருந்தே இரும்பாய் வடிவெடுத்தவன் அவன்.. அவனது இரும்பு மனம் புத்தம்புதிதாய் தோன்றும் அந்த இரக்க உணர்வின் முன் அவ்வளவு எளிதில் இளக மறுத்தது.
'எல்லாம் கொஞ்ச நாள் தான். அந்தப் பூவசரம்பட்டியில் இருக்கும் எல்லாரையும் கூண்டோட அழிச்சு முடிச்சிடுறேன். அப்புறம் உன் இஷ்டப்படி நீ அந்த ஆருஷையோ இல்லை வேற எவனை வேணாலும் கல்யாணம் பண்ணிக்கோ.'
உள்ளுக்குள் நினைத்தவனாய் அஸாருடனான பேச்சினைத் தொடர, என்ன நேர்ந்ததோ ஜன்னல் கண்ணாடியில் தலை சாய்த்து அமர்ந்திருந்த மித்ரலட்சுமி திடுமென நிமிர்ந்தவள் தன்னையும் அறியாது சுற்றும் முற்றும் பார்த்தாள்.
அவளது அரவத்தில் அவளைத் திரும்பிப் பார்த்தவன் கண்கள் சுருங்க ஒரே ஒரு விநாடி அவளைப் பார்த்துவிட்டுப் பின் அறைக்கதவை மூடிவிட்டு நகர்ந்துவிட, அவனது செய்கைகளில் குழப்பம் அதிகரித்ததே ஒழிய குறையவில்லை ஆதலால் மீண்டும் ஜன்னலில் தலை சாய்த்தாள்.
'நிச்சயமா அவர் இந்த ரூமுக்குள்ள வரப் போறதில்லை. அப்புறம் எதுக்கு இந்த அலங்காரம்?'
யோசித்தவளுக்கு அவன் உள்ளே வராமல் சென்றுவிட்டதே பெரிய நிம்மதியைக் கொணர, கண்களை மெல்ல மூடியவளுக்கு ஒரு வழியாக மூன்று மணி நேரங்களுக்குப் பிறகு விமானம் தரையிரங்கியதும் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் அவர்களது பிரத்யேக விமானம் தரையிரங்கியதும், அவளது அறைக்கதவைத் திறந்த பணிப்பெண் கூடச் சிறு வியப்புடன் தன்னைப் பார்ப்பது போலவே இருந்தது மித்ரலட்சுமிக்கு.
எதற்கு இந்தத் தேவையற்ற அலங்காரம் என்று என்னைப் போல்தான் இவளும் நினைத்திருப்பாள் போல் இருக்கு என்று எண்ணியவளாய் அறையைவிட்டு வெளிவர, அவள் கீழே இறங்குவதற்கு உதவி செய்தனர் மற்ற பணியாளர்கள்.
கீழே தன்னை எதிர்நோக்கி காத்து நின்ற ஆர்யாவைப் பார்த்தவாறே இறங்கியவள் அவன் நடக்கத் துவங்கியதும் ஒரு சொல்லும் பேசாமல் அவனது பின்னால் மௌனமாக நடந்து சென்றாள்.
விமான நிலையத்தின் வெளியே அவர்களுக்காகக் காத்திருந்த அவனது வெள்ளை நிற ரோல்ஸ் ராய்ஸ் ஆர்கேடியா காரில், அஸார் கதவைத் திறக்க ஏறி அமர்ந்த ஆர்யா, அவள் பின் இருக்கையில் அமர்ந்ததும் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தவனாய் ஏறக்குறைய இரவு எட்டு மணியை நெருங்கியிருந்தாலும் பரவாயில்லை என்ற எண்னத்தில், "வீட்டுக்கு போய் இவளை இறக்கிவிட்டுட்டு தென் ஆஃபிஸுக்கு போகணும் அஸார்." என்றான்.
அவனும் சரி என்பது போல் தலையசைத்துவிட்டு காரை கிளப்ப, அந்நகரத்தின் ஆடம்பரமான பகுதிகளில் ஒன்றான பிருத்விராஜ் சாலைக்குள் கார் நுழைந்ததுமே அதன் இரு பக்கங்களிலும் கட்டப்பட்டிருக்கும் அழகிய பங்களாக்களைப் பார்த்ததில் மித்ரலட்சுமியின் மனம் கவலை மறந்து இலயிக்க ஆரம்பித்தது.
தேவலோகம் போல் காட்சியளிக்கும் வகையில் சுற்றிலும் எரிந்து கொண்டிருக்கும் பல வகை விளக்கொளியின் மத்தியில், பிரமிக்க வைக்கும் ஆடம்பரத்துடன், சுற்றிலும் அடர்ந்த குல்மொஹர் மரங்களின் நடுவே எழுந்து நின்ற அந்த மூன்றடுக்கு பிரம்மாண்ட மாளிகையின் பெருவாயிலுக்குள் கார் நுழைந்த நொடியே, அவளது இதயம் தடதடவென வேகமெடுத்துத் துடிக்கத் தொடங்கியது.
'இதென்ன வீடா அல்லது அரண்மனையா? இது தான் மாமா மகாதேவனுடைய வீ..'
அவள் எண்ணத்தை முடிக்கக் கூட நேரமளிக்காமல், “மாம்-மை பிக்கப் பண்ண ஏர்போர்ட்டுக்குக் கார் அனுப்பிடு அஸார்.” என்ற ஆர்யாவின் கம்பீரமான குரல் ஒலித்தது.
'ஒரே இடத்துக்கு வருவதற்கு இரண்டு விமானங்களா? எங்கக் கூடவே அவங்களும் வந்திருக்கலாமே' என்று மித்ரலட்சுமியால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
"ஷூயர் சார்."
கூறிய அஸார் வீட்டின் வாயிலில் காரை நிறுத்த, ஆயினும் இறங்காமல் அமர்ந்திருந்த மித்ரலட்சுமியை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தவனாய் சலிப்போடு, "உன்னைப் பற்றி என் சிஸ்டரிடம் சொல்லிருக்கேன். நீ போ.. அவங்க உன்னைப் பார்த்துக்குவாங்க.." என்ற ஆர்யாவின் அதட்டலான குரல் கேட்ட நொடியே, அவளுக்கு ஒரு கணம் திக்கென்று ஆனது.
'என்னது? நான் மட்டும் தனியா பொறதா?'
உள்ளம் பதறியது!! அது அவளது கூற்றிலும் அப்பட்டமாக வெளிப்பட்டது.
"நா.. நான் எப்படித் த..தனியா?"
"ஏன், நீ இதுவரை தனியா எங்கேயும் போனதே இல்லையா?"
"அது.. எங்க ஊரில் போயிருக்கேன், ஆனா இங்க.."
"இது என்ன காடா? இதுவும் ஊர் தான்."
வெடுக்கென ஆர்யா கூறியதில் அதிர்ந்துப் போனாள் என்றால், அவளின் தயக்கத்தைக் கண்டு எரிச்சல் கலந்த பார்வையுடன் காரை விட்டு இறங்கியவன் அவள் புறம் வந்து கதவை வேகமாய்த் திறக்க, அவனது அந்தத் திடீர் செயலால் அவளது சப்தநாடியே ஒடுங்கிப் போனது..
"சீக்கிரம் வா. உனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க எல்லாம் இங்க யாரும் இல்லை, அதுக்கு எனக்கு நேரமும் இல்லை. Come on!"
முகத்தில் அடித்தார் போல் எரிச்சலும் அவசரமும் கலந்த குரலில் அவன் கூறியதைக் கேட்டதும் விறுவிறுவென்று காரைவிட்டு இறங்கியவள் அவன் படீரென்று கதவை சாத்தியதும் ஓர் அடிவிட்டுப் பின்னால் நகர்ந்து நின்றாள்.
என்னை இவருடைய மனைவியாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் நான் இவருடைய சொந்த அத்தை மகள். அந்த உறவிற்காகவாவது மதிப்பு கொடுக்கலாமே என்று ஆர்யாவின் உண்மையான சுயரூபத்தை அறியாத பேதையாய் அவள் பாவமாய் யோசித்துக் கொண்டிருக்க, அவளின் தயக்கம் இன்னமும் கடுப்பைக் கொண்டு வந்ததோ என்னவோ அவளது கைப்பற்றி விடுவிடுவென்று அழைத்துச் சென்றவன் வீட்டிற்குள் வேகமாய் நுழைந்தான்.
அவனையும் அறியாது அவளுடன் இணைந்து அவன் வீட்டிற்குள் நுழைய, அவளையும் அறியாது அவளும் அவனுடன் இணைந்து வலது காலை வைத்து அவனது வீட்டிற்குள் அடி எடுத்து வைத்தாள்.
முன்னறையில் அவர்களது செல்லப்பிராணியான ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சார்ந்த நாய் சிம்பாவுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவன் அபிலாஷ், இருவரையும் கண்டதும் ஒரு கணம் தயங்கி பின் மாமனிடம் ஓடி வந்தான்.
அவனது தலையை இலேசாகத் தடவிய ஆர்யா, அம்மா எங்கே என்று ஆங்கிலத்தில் கேட்க, "மாம்.." என்று கத்திய அந்தச் சிறுவனின் சத்தத்தைக் கேட்டதில் அத்தனை திகிலிலும் மித்ரலட்சுமியின் உதடுகளில் புன்னகை பூத்தது.
இத்தனூண்டு பையனுக்கு இவ்வளவு சத்தமான குரலா?
அவள் எண்ணி முடிப்பதற்குள் முன்னறைக்கு வந்த, மகாதேவனின் மூத்த வாரிசு, ஆர்யாவின் தமக்கை அதிதி, மனைவியுடன் உள்ளே நுழைந்த தம்பியைக் கண்டு மென்மையாக முறுவலித்தாள்.
ஆனால் அவளின் அமைதிக்கு நேர்மாறாகக் கொதிப்பவன் போல், "நான் தான் வரேன்னு சொல்லிருக்கேன் இல்ல, வாசலில் வந்து நிற்க வேண்டாமா?" என்றான் ஆர்யா அழுத்தமான குரலில்.
"ஆரத்தி எடுக்கறதுக்கான ஏற்பாட்டைத் தான் உள்ள செஞ்சிட்டு இருந்தேன், ஆனால் அதுக்குள்ள நீ வந்துட்ட, சாரி ஆர்யா... "
அவளது பணிவு மித்ரலட்சுமிக்கு வியப்பைத்தான் கொணர்ந்தது. சந்தியாக் கூற அவள் கேட்டிருக்கின்றாள். அவர்களுக்குப் பிறந்தது மூன்று பிள்ளைகள் என்றும், அவர்களில் முதல் வாரிசு அதிதி தேவன் என்றும். அப்படி என்றால் இவர் தான் என் கணவருக்கு அக்காவாக இருக்க வேண்டும், ஆனால் அவர் கூட இவரிடம் மன்னிப்புக் கேட்கின்றார், அதுவும் ஒரு சாதாரண விஷயத்திற்கு.
அவள் வியக்க, ஆனால் அவளுக்கு எதிர்மறையான உணர்வுகளுடன் ஆர்யா நின்றிருந்தான்.
மித்ரலட்சுமியை வெறுப்பேற்ற வேண்டும் என்று இகழ்ச்சியாய் அவன் கூறிய உனக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க எல்லாம் இங்க யாரும் இல்லை என்று வார்த்தைகளுக்கு மாறாக அவனது தமக்கை அதே ஆரத்தியை தயார் செய்து கொண்டிருப்பதைப் பற்றிப் பேச, அதனில் அவனுக்கு அவமானமாய்ப் போனது.
ஏற்கனவே எரிச்சலில் சுழன்றுக் கொண்டிருந்தவனை அது இன்னும் எரிமலையாக வெடிக்கச் செய்தது!
"வாட்?"
"ஏன் இவ்வளவு கோபம் ஆர்யா? நீ உன் மனைவியை, இந்த வீட்டு மருமகளை முதன்முதலாக வீட்டுக்கு அழைச்சிட்டு வர்றியா, அது தான் ஆரத்தி எடுக்கலாம்னு.."
"இப்போ அது தான் முக்கியமா?"
அவன் ஏன் கோபப்படுகின்றான் என்று அதிதிக்கும் தெரியும்.
"சரி ஆர்யா.. அதைவிடு, உள்ள வா.."
கூறியவளாய் மித்ரலட்சுமியின் கரத்தை இறுக்கப் பிடித்திருக்கும் தம்பியின் கையை ஒரு கணம் ஆழ்ந்துப் பார்த்த அதிதி, "நீயும் வாம்மா.." என, அக்காவின் விழிகள் போகும் இடங்களைப் பார்த்த ஆர்யா சட்டென மித்ரலட்சுமியின் கரத்தை உதறி விட்டான்.
ஆனால் அவனது செய்கை ஏற்கனவே நடந்தது, நடப்பது என்று எதுவும் புரியாமல் பெருங்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த மித்ரலட்சுமியின் கவனத்தைச் சென்றடையவே இல்லை!
இருவரின் நிலையையும் நன்கு உணர்ந்தவளாய் தம்பியின் மனைவியை அதிதி உள்ளே அழைத்துச் செல்ல, “ஷூட்.." என்று மெதுவாக ஒரு பெருமூச்சு விட்ட ஆர்யா, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த தன் காரை நோக்கி நடக்கத் தொடங்கினான்.
வீட்டை விட்டு வெளியேறும் தம்பியை ஒரு நொடி திரும்பிப் பார்த்த அதிதி, சின்னப் புன்னகையுடன் தம்பியின் மனைவியின் பக்கம் திரும்ப, அரண்மனையைப் போன்ற அந்தப் பிரம்மாண்டமான வீட்டை அகல விரித்த கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்த சின்னவளைக் கண்டதும், அதிதியின் மனம் உருக ஆரம்பித்தது.
மகாதேவனின் மூன்று வாரிசுகளில் பெற்றோரின் அன்பான குணங்களைப் பெற்ற ஒரே ஒரு வாரிசு அதிதி தேவன் மட்டுமே.
அவளுக்கு அடுத்துப் பிறந்த அகல்யா தேவனோ, அதிதி தேவனுக்கு நேர்மாறானவள்.
'Born with silver spoon' என்ற சொல்லுக்கு ஏற்ப, அவளது ஒவ்வொரு நடத்தையிலும் செய்கைகளிலும் ஒரு திமிர் தெரியும். ஆயினும் ஆர்யா அளவிற்கு அவள் மோசம் இல்லை. தந்தை என்று வந்துவிட்டால் அவளது மனம் இளகிவிடும். அந்தளவிற்கு மகாதேவனின் மீது உயிரையே வைத்திருந்தவள் அவள். ஆனாலும் அவளது நடவடிக்கையில் தெரியும் அகம்பாவம் பெற்றோரை வருத்தப்படுத்தியதுண்டு.
ஆக, சில சமயங்களில் மகாதேவனும் சந்தியாவுமே தங்களது பிள்ளைகளின் குணாதியசங்களைப் பற்றிப் பேசிக் கொள்வதுண்டு.
அதனில் அகல்யாவைப் பற்றியும் ஆர்யாவை பற்றியும் அவர்கள் விவாதித்துக் கொள்ளும் பொழுது, ஒருவருக்கொருவர் கோபம் கொண்டதுண்டு.
மகள் அகல்யா மேல் தந்தை கொண்ட பாசமே அவளைக் கெடுத்தது என்றால், ஒரே மகன் என்ற செல்லத்தினால் ஆர்யா மேல் பெற்றோர் இருவருமே கொண்ட அளவிற்கு மீறிய அன்பே, அவன் மனதில் இருந்து ஈவு, இரக்கம், பாசம், மென்மை என்று அனைத்து நல்ல குணங்களையும் அகற்றிப் போட்டிருக்கின்றது என்று அவர்கள் இருவரும் விவாதிக்காத நேரம் இல்லை.
அதைக் கடந்த சில காலமாக, குறிப்பாகத் தன் உடல்நிலையில் சரிவு ஏற்பட்டதுமே ஆர்யாவிடம் டேவ் டெக்னாலஜிஸின் முழு உரிமையும் மகாதேவன் கொடுத்தற்குப் பிறகு நன்றாகவே புரிந்து கொண்டார் சந்தியா.
தங்களது தவறை பற்றி அவர்கள் இருவருமே மனம்மாற வருந்தினாலும், காலம் கடந்து போன மனம்மாறுதல் என்று அவர்கள் வேதனைக் கொள்ளாத நாளில்லை.
இதனில் கணவரின் உடல் நிலையில் சில மாதங்களாகத் திடுமென மாற்றம் ஏற்பட, மரணத்தின் நிழலை அவர் நெருங்கிக் கொண்டிருக்கின்றார் என்பதைச் சந்தியாவின் உள்மனது உறுத்தியது.
ஆக வெளியில் சொல்லாது தீராத கவலையில் சந்தியா தத்தளித்துக் கொண்டிருக்க, அதனில் மரணிப்பதற்கு முன் மகாதேவன் இன்னமும் பெருங்கவலையில் ஆழ்ந்திருக்கின்றார் என்பதைச் சந்தியா புரிந்து கொண்டார்.
அடங்காத காதலை கணவர் மேல் வைத்திருந்தவர் எப்படியும் கணவனின் முகத்தில் மீண்டும் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்று தவம் கிடக்க, அக்கணத்தில் தான் மகாதேவன் முதன்முறையாய் பல காலமாய் அவரது அடி மனத்தில் பெருஞ்சுமையாய் அவரை அழுத்திக் கொண்டிருந்த கனவை, ஆசையை மனைவியிடம் இரகசியமாய் வெளியிட்டார்.
அது ஆர்யா அவரது தங்கை மகளான மித்ரலட்சுமியை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான்.
ஆனால் அது நடக்கக்கூடிய காரியமா?
இதனில் இந்தியாவின் பணக்கார வரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமித் மேத்தாவின் பெண்ணோடு நிச்சயதார்த்தம் செய்திருக்கும் ஆர்யா தந்தைக்காக முன்பின் அறியாத மித்ரலட்சுமியை மணமுடிப்பானா?
தன் அன்னைக்கு அளித்த வாக்கை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என்ற ஏக்கத்துடன், நிறைவேறாத ஆசையைக் கொண்டபடியே உயிர் நீத்த தனது காதல் கணவன் மகாதேவனின் நினைவால் உள்ளம் கணத்திருந்த சந்தியாவின் பெரும் சுமை, அவரே எதிர்பாராதவிதமாக அவரது மகன் மித்ரலட்சுமியின் கழுத்தில் தாலி கட்டிய அந்த நொடியிலே மெதுவாக இறங்கி வைக்கப்பட்டது போலத் தோன்றியது.
ஆயினும் அவரது மகனைப் பற்றி நன்கு அறிந்திருந்தவர் ஆகையால், அடுத்து அவன் நிகழ்த்த இருக்கும் ஆட்டங்களைக் காண எண்ணி அவரும் பயத்துடன் காத்திருக்க, அதே நேரம், தில்லியின் விமான நிலையத்தில் தரையிறங்கியது சந்தியா பயணம் செய்த விமானம்.
"அதிதி.."
"சொல்லுங்க மாம்.."
"ஆர்யா?"
"வந்துட்டான் மாம். மித்ரலட்சுமி இங்க தான் இருக்கா.."
"அதிதி, அவன் மித்ரலட்சுமியை உன்னிடம் இன்ட்ரொடியூஸ் பண்ணினானா?"
"மாம், நம்ம ஆர்யாவை பற்றி உங்களுக்குத் தெரியாதா? அவளை விட்டுட்டு உடனே அவன் ஆபிஸுக்கு போயிட்டான் மாம்."
"ப்ச்.. நான் நினைச்சேன் அதிதி. அவன் இப்படித்தான் பண்ணுவான்னு. பாவம் அவ, சின்னப் பொண்ணு வேற.."
"இருந்தும் எப்படி மாம் இதை நடக்க விட்டீங்க? அவனைப் பத்தி உங்களுக்குத் தெரிஞ்சதை விட வேற யாருக்கு மாம் தெரியும்?"
"நான் ஏற்கனவே சொன்னது மாதிரி எல்லாமே ஒரு சில நிமிடங்களில் என் கை மீறிப் போயிடுச்சு அதிதி. நானே அவன் இப்படிச் செய்வான்னு எதிர்பார்க்கலை. அட்டர்னியை வச்சு அவங்களை எல்லாம் மிரட்டி மித்ரலட்சுமியை அங்க இருந்து எப்படியாவது விடிவிக்கணும்னு தான் நான் பூவரசம்பட்டிக்கே போனேன்....
தனியா போனால் ஒருவேளை என்னால் அவளை அவளுடைய மாமன்களிடம் இருந்து மீட்க முடியாதுங்குற தயக்கத்துல தான் ஆர்யாவை கூட வரச்சொன்னேன். ஆனால் அவன் முடியாதுன்னு சொன்னதும் நாம முயற்சி செய்வோம்னு அட்டர்னியோடவும், மணியோடவும் போனேன்...
நான் எதிர்பார்த்தப்படி அவளுடைய கல்யாணத்தையும் நிறுத்திட்டேன். ஆனாலும் என்னால் அவளுடைய மாமன்களிடமும், அவங்க மகன்கள் அந்த அதியமான், சத்யன் இவங்களோட போராட முடியலை. வேற வழியில்லாம அவளை அங்கேயே விட்டுட்டு வர மாதிரியான சூழ்நிலை உருவாகுமோன்னு நான் பயந்துட்டு இருக்குற சமயத்தில் தான் ஆர்யா உள்ளே வந்தான்...
சரி சட்டப்படி ஏதாவது செய்து அவளை அங்க இருந்து விடுவிப்பான்னு மட்டும் தான் நினைச்சேன், ஆனால் இப்படித் திடீர்னு அவ கழுத்துல தாலியே கட்டுவான்னு நான் எதிர்பார்க்கலை அதிதி. இதுல ரிஜிஸ்டர் மேரேஜ் வேற.."
அவர் அச்சமும் வருத்தமும் கலந்துப் பேச, பெற்றவளின் உள்ளத்துக் குமுறல்களை வீட்டின் மூத்தவளாகப் புரிந்துக் கொண்டாள் அதிதி.
"மாம், ஆனா நான் ஒண்ணு கவனிச்சேன் மாம்."
"என்ன?"
“அங்கிள் வந்திருக்காங்கன்னு அபிலாஷ் தான் முதலில் கத்தினான். அந்தச் சத்தத்தைக் கேட்டு நான் ஹாலுக்குப் போனேன். ஆனா அங்கே பார்த்தது உண்மையிலேயே நான் எதிர்பாராத காட்சி மாம். உங்க மகன், மித்ரலட்சுமியுடன் நின்னுட்டு இருந்தான். அது எனக்குச் சாதாரணச் சர்ப்ரைஸ் இல்ல மாம்… ஒரு இனிமையான அதிர்ச்சி.”
“எனக்குச் சரியாப் புரியல, அதிதி… கொஞ்சம் தெளிவா சொல்லு.”
“அவன் அவளுடன் சும்மா நிக்கலை மாம், அவளோட கையை அவ்வளவு இறுக்கமாப் பிடிச்சபடியே நின்னுட்டு இருந்தான். ஆரத்தி வேண்டாம்னு சொன்ன அவனே, அவள் கையை விடாமல், அவளைத் தன்னருகில் வச்சிக்கணுங்கிற மாதிரி நின்னுட்டு இருந்தது எனக்கு வேற மாதிரி ஒரு அர்த்தம் கொடுத்தது மாம்.”
"வாட்?"
"யெஸ் மாம். அவன் எனக்குத் தஞ்சாவூரில் இருந்து கால் பண்ணும் போது என்ன சொன்னான் தெரியுமா? சுஜாதா ஆன்ட்டியின் மகளைக் கூட்டிட்டு வரேன், சூழ்நிலை சரியில்லாததால் அவளை மனைவி மாதிரி காட்ட வேண்டியிருக்கு. கொஞ்ச நாள் மட்டும் அவள் நம் வீட்டில் இருப்பா, பிறகு அவள் விருப்பப்படி எங்க வேணாலும் போகட்டும். ஆனால் அதுவரை அவளை நீ பார்த்துக்கோ, தப்பித்தவறி கூட அவள் பூவரசம்பட்டிக்கு போயிடக் கூடாதுன்னு சொன்னான். ஆனா நான் இங்க பார்த்ததுக்கும், அந்த வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லை மாம்."
அவள் என்ன சொல்ல வருகின்றாள் என்று சந்தியாவிற்கு ஓரளவிற்குப் புரிந்தது. இருந்தும் அவளே கூறட்டும் என்று அவர் அமைதியாக இருந்தார்.
“அபிலாஷ் கத்தினதும் நான் ஓடிப் போய் பார்த்தேன். ஆனா அங்க அவங்க ரெண்டு பேரும் நின்ற காட்சி அப்படியே சும்மா என் கால்களுக்கு ப்ரேக் போட்டது மாதிரி இருந்துச்சு தெரியுமா? மஞ்சள் கயிறு மிணுமிணுக்கத் தாலியுடன் நின்னுட்டு இருந்த மித்ரலட்சுமியை உரசிய மாதிரி உங்க மகன். இதுல எங்க அவ தன்னைவிட்டு ஓடிப் போயிடுவாளோன்னு பயப்படுற மாதிரி உங்க மகன் அவன் மனைவி கையை இறுக்கப் பிடிச்சுட்டு நின்னான். அவன் முகத்துல நான்தான் வரேன்னு சொன்னேன் இல்லை, ஏன் எங்களை வரவேற்க யாரும் காத்துட்டு நிற்கலைங்கிற மாதிரி ஒரு கோபம் தெரிஞ்சுது. மாம், நான் திரும்பவும் கேட்குறேன். இது திடீர்னு நடந்த கல்யாணமா? அல்லது ஜென்மம் ஜென்மமா காத்து கிடந்த காதலோட முற்றுப்புள்ளியா?"
"என்ன அதிதி சொல்ற? ஏன் உனக்கு அப்படித் தோணுச்சு?"
"தெரியலை மாம். ஆனால் ஆர்யாவையும் மித்ரலட்சுமியையும் பார்த்தக் கணம் எனக்கு ஏனோ இது திடீர்னு சந்தர்ப்ப சூழ்நிலையால் நடந்த கல்யாணம் மாதிரியே தெரியலை. அதுலேயும் ஆர்யாவின் முகத்தில் கோபம் தெறிச்சிருந்தாலும், அவனுடைய ஆழ்மனசுல ஏதோ ஒருவிதமான அமைதி இருந்தது மாதிரித்தான் எனக்குத் தெரிஞ்சது மாம். ஐ மீன் அவன் கண்ணுல சத்தியமா கோபம் இல்லை, அதுக்குப் பதிலா ஏதோ ஒரு நிம்மதி தெரிஞ்சது. ஒரு வேளை எனக்குத் தப்பா தோணிருக்கலாம். எனிவேய்ஸ் உங்க மகன் அவனுடைய வாழ்க்கை துணையை சரியா கண்டுப்பிடிச்சிட்டான்னு நினைக்கிறேன், ரைட்?"
மகளது பேச்சில் சிந்தனையில் ஆழ்ந்த சந்தியா சில விநாடிகள் கழித்து அலைபேசியை அணைக்க, சில மாதங்களுக்கு முன்னர்க் கணவர் மகாதேவனை மருத்துவமனையில் அனுமதித்திருந்த வேளையில் அவரது இறுதி நேரத்தில் நடந்தவை சந்தியாவின் மனக்கண்களின் முன் படர்ந்தது.
'மேஸிவ் அட்டாக்' என்று கூறிய மருத்துவர்கள் இனி அவரைக் காப்பாற்றுவது இயலாது என்று கூறியிருக்க, ஆயினும் மகாதேவனின் உயிர் பிரியவில்லை.
நெடுநேரம் சென்று மகன் ஆர்யா அவரைக் காண வந்ததும், கண்களை விழித்தவரின் பார்வையில் தோன்றிய பளபளப்பும், அச்சூழ்நிலையிலும் திடுமெனத் தோன்றிய அவரது புன்னகையும், அவர் இறப்பதற்குச் சில வாரங்களுக்கு முன் அவர் தன்னிடம் ஆத்மார்த்தமாகக் கூறிய ஒரு விஷயத்தைச் சந்தியாவிற்கு இப்பொழுது நினைவுப்படுத்தியது.
"எனக்குச் சுஜாதாவின் மகளைப் பார்க்கணும் சந்தியா. ஏனோ என் பொண்ணை நீ தான் பத்திரமா பார்த்துக்கணும் அண்ணா. உன்னிடம் அவளை ஒப்படைக்கிற வரையிலும் என் ஆத்மா சாந்தியடையாதுன்னு சுஜாதா என்னிடம் சொல்லிட்டு இருக்க மாதிரியே எனக்குத் தோணுது.."
மனைவியிடம் கூறிய மகாதேவன் சற்று நிறுத்தி என்ன நினைத்தாரோ சிறு மகிழ்வுடன், "அந்தப் பொண்ணோட வயசை கணிக்கும் போது அவ நம்ம ஆர்யாவிற்குப் பொறுத்தமான வயதுடையவளா தான் இருக்கணும். ஒரு வேளை ஏதாவது ஒரு சூழ்நிலையில் ஆர்யாவே மனம் மாறி அந்தப் பொண்ணைக் கல்யாணம் செய்துக்கிட்டா நல்லா இருக்கும்.." என்று கூறியதும் இப்பொழுது நியாபகத்தில் படர்ந்தது.
ஆக இறப்பதற்கு முன் மகாதேவனின் புன்னகைக்கும், இப்பொழுது எதிர்பாராத விதத்தில் ஆர்யா மித்ரலட்சுமியின் கழுத்தில் தாலிக்கட்டியதற்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ? ஒருவேளை அவர் இறக்கும் முன் அவர்களது திருமணக்காட்சியை அவர் மானசீகமாகக் கண்டாரோ? நீயே நினைச்சாலும் மித்ரலட்சுமியின் கழுத்தில் தாலிக் கட்டுவதை உன்னால் மீற முடியாது ஆர்யா என்று மகனிடம் மானசீகமாக அவர் பேசினாரோ? அதனால் தான் அவரது உதடுகளில் அந்தப் புன்னகையோ?
இவை அனைத்துமே தோன்றியதுமே முடிவாய், அப்படி என்றால் கடவுளாய் இருக்கும் என் கணவர் எந்த வித இக்கட்டுகள் நேர்ந்தாலும் எச்சூழ்நிலையிலும் நிச்சயம் இவர்களைப் பிரிய விடமாட்டார் என்று தோன்ற, சிறு நிம்மதியுடன் கண்களை மூடி காரின் இருக்கையில் தலை சாய்த்தார் சந்தியா.
அதே நேரம் வெகு இரகசியமாய் இருக்க வேண்டும் என்று ஆர்யா கட்டளையிட்டு இருந்தாலும், அவனது உத்தரவையும் மீறி அவனது திருமண விஷயம் பரவ ஆரம்பித்ததில் அரண்மனையைப் போன்ற வீடே இரண்டாகப் பிளக்கும்படி, வீட்டிற்குள் இருந்த பல லட்சங்களை விழுங்கிய பொருட்களை எல்லாம் தூக்கி தரையில் விசிறி அடித்துக் கொண்டிருந்தாள் இஷானி மேத்தா!
தொடரும்.

Last edited: