JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Self Introduction - என்னை பற்றிய அறிமுகம் :)

Nuha

Member
கனவு.jpg

ஹலோ ஃபிரண்ட்ஸ்...

இறைவன் அருளால்...
இதோ நான் மறுபடி வந்துட்டேன். எல்லாரும் எப்படி இருக்கீங்க? இங்க நிறைய நண்பர்களுக்கு ஏற்கனவே நான் அறிமுகமானவள் தான். Thahseena Hajamydeen. பெயர் ல இங்க தான் சுத்திட்டு இருந்தேன். இப்போ நுஹா வாக உங்கள் முன். வாசகியா இருந்த எனக்கு போன வருடம் தான் திடீர்னு அந்த விபரீத ஆசை வந்துச்சி.. ஒரு கதை எழுதி பார்க்கலாம் னு "வானவில் சிறுகதை" மாதிரி இதுவும் jbs scribble society la விளையாட்டாக எழுதினது தான். சில காரணங்களால் பாதில எழுத முடியாம போய்டுச்சி... இப்போ முழுதா முடிச்சிடுவோம் னு ஒரு முடிவோட களத்தில் குதிச்சிருக்கேன். நம்ம ஜேபி மேம் தளத்தில் தான் பதிவிடுகிறேன்.. நான் கேட்டதுமே ஓகேனு எப்போ ready ஓ வாங்க னு சொல்லி திரியும் ஆரம்பித்து குடுத்துட்டீங்க.😍😍😍😘😘😘 Always love you lot Jenu maa😘😘❤❤ நன்றிகளை வார்த்தைகளில் சொல்லி முடிக்க முடியாது என்னால... ஏன்னா நான் ரொம்ம deserved type.. டக்னு யார்கிட்டயும் முன்னலாம் பேசியதோ பழகியதோ கிடையாது.. என்னோட comfort zone la இருந்து வெளி வந்து கடந்த மூன்று வருடங்களில் நந்தவனம் மூலமாக நல்ல நண்பர்கள சம்பாரிசிருக்கேன்னா அதுக்கு ஆனி வேர் ஜேபி மேம் தான். Silent reader ah இருந்த நான் இங்க தான் முதன் முதலில் கவிதை எழுத தொடங்கினேன் கத்துகிட்டேன். கருத்துக்கள பகிரவும் விமர்சணங்கள எழுதவும் முயற்சி செய்தேன். இங்க தான் இப்போ ஒரு முழு கதையும் எழுதவும் போறேன் நினைக்கவே மிகவும் மகிழ்ச்சியா இருக்கு Thank you so much JB mam and my all time supportive friends..sisters nd mommy.. 😍😍😘😘😘😘 இன்ஷால்லாஹ் நான் முழுவதுமாக முடிக்க வாசக நண்பர்களாகிய நீங்களும் துணையாக பயணித்து தங்கள் நிறை குறைகளை பகிர்ந்து ஆதரிக்குமாரு கேட்டுக்கொள்கிறேன் டியர்ஸ்..

தலைப்பு:: கனவுகளின் ராட்சத இராச்சியம்

நாயகன் : மித்ரன் ; ரகு
நாயகிகள்: ஜெஷிக்கா - தீக்ஷிக்கா வா னு கதை போக்கில் கண்டுபிடிங்க..; ரேகா

இது முழுக்க முழுக்க என் கற்பனையே! Time Travel concept எனக்கு பிடிக்கும் அதான் சின்னதாக முயற்சி செய்திருக்கிறேன். சில விறுவிறுப்பான சம்பவங்களுடன் இன்னொருவரின் கனவுக்குள் மிதந்து சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை பெற மொத்த கதையும் படித்து பாருங்கள். படித்துவிட்டு எப்படி உணர்கிறீர்கள் என்று உங்கள் கருத்துகளில் கூறுங்கள் நண்பர்களே :)

ஏற்கனவே பாதி படித்த நண்பர்கள் கண்டிப்பா flow மறந்திருப்பீங்க சோ நீங்களும் படித்துக்கிட்டே வாங்க அப்போ தான் மறு பாதி கதையும் புரியும்.

வாரம் இரண்டு அத்தியாயங்கள் பதிவிடப்படும் (வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில்) படிச்சிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்க.. டியர்ஸ்..☺
இப்படிக்கு பிரியமுடன்
நுஹா😍

👇கீழ இருக்கும் லிங்க் அ கிலிக் செய்து கதையை படிக்கலாம்.
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top