JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Siranjeevitham - Episode 13

JLine

Moderator
Staff member
சிரஞ்சீவிதம்

அத்தியாயம் 13

அணுக்களின் கதிர்வீச்சின் அதிர்வெண்ணைக் கண்காணித்து நேரத்தை அளவிட்டுக் கூறும் அணுக் கடிகாரம் மாலை மணி ஆறு என்று அறிவித்தது.

அந்த அறை முழுவதுமே மருத்துவமனைக்கான உபகரணங்களால் நிறைந்து இருக்க, தலையில் ஏற்பட்டிருக்கும் பலத்த அடியினால் மண்டையே வெடித்துவிடுவது போல் விண்விண்ணென்று வலித்துக் கொண்டிருந்ததில், அவனது முகம் வலிக் கொடுத்த வேதனையால் கசங்கிப் போயிருந்தது.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் டாக்டர் இவர் முழிக்கிறதுக்கு?”

அவனுக்கருகே பேச்சுக் குரல் கேட்க, கேள்விக் கேட்கும் பெண்ணிற்கு அருகில் நின்றிருந்த மருத்துவர் பேசத் துவங்கினார்.

அவருக்கும் அந்தப் பெண்ணிற்கும் இடையில் நடந்த உரையாடல்களை, குறிப்பாக ஏதோ புது மாணவனுக்கு விளக்கம் கொடுப்பது போல் பேசும் மருத்துவரின் வார்த்தைகளைக் கூர்ந்து கவனிக்கும்வண்ணம் அவனது செவிகள் விழித்துக் கொண்டன.

“இவருக்குத் தலையில் பலமா அடிபட்டிருக்குது. தலையில் அடிபடும் பொழுது ஏற்படும் [Traumatic Brain Injury] மூளைக்காயத்தினால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. இதயத்தில் இருந்து அனுப்பப்படும் ரத்தத்தில் கால் பகுதி மூளைக்கே செல்கின்றது, மீதமிருக்கும் ரத்தமே மற்ற உறுப்புக்களுக்குச் செல்கின்றது. தலையில் அடிபட்டால் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மூளைக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகலாம். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜன் தடைப்பட்டால் சில ரசாயன மாற்றங்களும் நிகழும்னு உங்களுக்குத் தெரியும் இல்லையா?”

“யெஸ் டாக்டர்..”

“அப்படித் தலையில் அடிபடும் பொழுது நரம்பிய கடத்திகளில் [Neurotransmitters] ஏற்படும் அதிர்ச்சிகரமான பாதிப்புகளில் ஒன்று தெரிந்த மொழியைக் கூடப் பேசவோ, புரிந்து கொள்ள முடியாமலோ போகலாம். அதே போல் பழகிய இடங்களையும், அந்நாள்வரை அவருக்குத் தெரிந்த மனிதர்களையும் கூட அடையாளம் காண முடியாமல் போவதும் நடக்கலாம். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சத்தத்தைக் கேட்டாலோ அல்லது வெளிச்சத்தைப் பார்த்தாலோ ஒருவிதமான அச்ச உணவு ஏற்படுவதும் உண்டு.”

“இதற்கான சிகிச்சைகளில் இப்போ என்ன விதமான சிகிச்சை இவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கு டாக்டர்?”

“இதற்குச் சிகிச்சை அளிக்கும் முறைகளில் ஒன்று மூளைத் திசுக்களில் இருக்கும் அதிகப்படியான திரவத்தை வெளியேற்றி, மூளைக்கு அதிகம் அழுத்தம் கொடுக்காது தடுப்பது. அதே போல் [induced coma] என்ற முறைப்படி அடிப்பட்டவரைத் தற்காலிகமாகக் கோமா நிலைக்குக் கொண்டு செல்லும் மருந்தினைச் செலுத்தி சிகிச்சை செய்வார்கள். இந்த மருந்துக்கள் மூளையின் ரத்தத் தேவையைக் குறைக்கும், மூளை மேலும் பாதிக்கப்படாமல் பாதுக்காக்கும்.”

“அப்படின்னா இவரை நீங்க இண்டியூஸ்ட் கோமாவில் வச்சிருக்கீங்களா?”

“யெஸ், மூளையில் இருந்து வெளிவரும் திரவத்தைக் கண்ட்ரோல் பண்ணிட்ட பிறகு, மூளைக்கு எந்தப் பாதிப்பும் இல்லைன்னு நூறு சதவிகிதம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.. அதற்குப் பிறகு இவரது உடல் நிலையில் முன்னேற்றங்கள் ஏற்பட ஆரம்பிக்கும், அப்புறம் தான் இவரைக் கோமாவில் இருந்து வெளிவர வைக்க வேண்டும்..”

மருத்துவர் கூற கூற அதிர்ச்சிக் கலந்த குழப்பங்களுடன் படுத்திருந்தான் அவன்.

‘கோமாவா? நான் கோமாவில் இருந்தேனா?’

அவன் உள்ளம் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்க, திறக்க முடியாது அழுத்திய கண்களை மெள்ள திறந்தவன் அங்கு ஒருவரும் இல்லாததைக் கண்டு திகைத்தான்.

கழுத்தோட தலையையும் சேர்த்து இறுக்கிப் பிடிப்பது போல் வலியெடுத்துக் கொண்டிருந்தாலும், உடலில் உள்ள சக்தி அனைத்தையும் திரட்டி தலையை லேசாகத் திருப்பிச் சுற்றும் முற்றும் பார்த்தவன், மருத்துவரோ அல்லது அவருடன் உரையாடிக் கொண்டிருந்த பெண்ணோ தன் அருகே இல்லாதது கண்டு பரிதவித்துப் போனான் என்றே சொல்லலாம்.

‘அப்ப பேசிட்டு இருந்தது யாரு? இல்லை நான் ஏற்கனவே எங்கேயோ கேட்டதை இங்க என் மூளை நினைச்சுப் பார்த்துட்டு இருந்ததா? அதான் நான் வெறும் மயக்கத்தில் இருக்கும் போதே கோமாவில் இருக்கிறேன்னு அந்த டாக்டர் சொன்னாரா?’

குழம்பிக் கொண்டிருந்த வேளையில் அவன் மேலும் அதிர்ந்துப் போகும் அளவுக்கு அவனுக்கு அருகில் திடுமென அந்த மூன்று உருவங்கள் தோன்றின.

அதே மருத்துவரும், இரு இளம் பெண்களும்.

ஆனால் இப்பொழுதும் நிஜத்தில் தன் அருகே நிற்பது போல் அவர்கள் தோன்றவில்லை.

ஏதோ கானல் நீர் போன்ற தோற்றம் கொண்ட திரை ஒன்றில் அவர்கள் மிதந்து கொண்டிருப்பது போல் இருக்க, தான் காண்பது கனவல்ல நிஜம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்குச் சிரமப்பட்டுக் கையை உயர்த்தி அவர்களைத் தொட எத்தனித்தான்.

ஆனால் தொடும் உணர்வே இல்லாதது போல் அவன் விரல்கள் பட்ட அவர்களின் உடற்பாகங்கள் தோன்றவே, ‘அப்ப எல்லாமே கனவா?’ என்று அவன் வியந்த நேரம், பெண்களில் ஒருத்தி புன்னகைத்தவளாக அவனது உதடுகளை மெல்ல விலக்கியவள் அவனுக்கு மருந்துக்களைப் புகட்டினாள்.

'இது எப்படிச் சாத்தியம்? வெர்ட்சுவல் ரியாலிட்டியா? ஆனால் இவ்வாறு மனிதர்களோ அல்லது இடங்களோ தெரிவதற்கு virtual reality glasses, headsets இப்படின்னு உபகரணங்கள் எல்லாம் தேவைப்படுமே.. அப்பத்தானே இப்படி ஒரு அனுபவத்தை நான் உணர முடியும்... இல்லை ஆக்மெண்டட் ரியாலிட்டியா? அதுவும் இன்னும் மருத்துவ உலகில் எல்லாம் வரவே இல்லையே.. ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல் எனக்கு எப்படி இவர்களோட உருவங்கள் தெரியுது? அது போல் நிஜத்தில் இல்லாத ஒரு மனிதன் எப்படி எனக்கு மருந்துக்களைப் புகட்ட முடியும்? அந்த மருந்துக்களின் வாசனையை நான் எவ்வாறு உணர முடியும்? அதற்கும் olfactometers and electronic noses எல்லாம் தேவைப்படுமே. எதிர்காலத்தில் புதிய தொழில் நுட்பங்கள் வழியாக உணவுகளையும் வாசனைகளையும் கூட அனுப்பலாம்னு ஆராய்ச்சிப் பண்ணிட்டு இருக்காங்க, ஆனால் அது கூட உண்மையான உணவுகளாக இருக்குமா? அப்படி இருக்கும் போது மருந்துக்களை எப்படி எனக்குள் புகுத்த முடியும்? ஒரு வேளை இது தான் fully-immersive virtual realityன்னு சொல்வாங்களே அதுவா? அந்த அளவுக்கு இன்னும் டெக்னாலஜி சரியா வளரலையே? அப்படின்னா நான் எங்க இருக்கேன்?’

சடசடவெனப் பல நூறு கேள்விகள் அவன் புத்தியை அரித்துக் கொண்டிருக்க, “எப்படி இருக்கீங்க ஜீவன்?” என்ற விசாரிப்புடன் மீண்டும் மருத்துவரின் உருவம் அவனுக்கு வெகு அருகே வந்து நின்றது.

“ஜீ.. ஜீ.. ஜீவனா?”

“யெஸ், அப்படித்தான் நீங்க உங்க பெயரைச் சொன்னீங்க ஜீவன்?”

அவர் மீண்டும் ‘ஜீவன்’ என்று விளிக்கும் பொழுது எங்கிருந்தோ ஒரு பெண்ணின் குரல் அவனை 'ஜீவா' என்று அழைப்பது போல் தோன்றியது.

“இந்தப் பெயரை எங்கேயோ கேட்டிருக்கேன், ரொம்பப் பழக்கப்பட்ட குரல் என்னை ஜீவான்னு கூப்பிடுவது போல் தெரியுது, ஆனால் அது யாரோட குரலுன்னு தெரியலை.”

அவன் பேசப் பேச அவனை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்த மருத்துவர் அவனுக்கான தொடர் சிகிச்சைகளைப் பற்றி அறிவித்துக் கொண்டே செல்ல, அப்பொழுது தான் அவன் ஒன்றைக் கவனித்தான்.

இதுக்கு முன்னர்க் கண் விழித்த பொழுது இதே மருத்துவர்கள் பேசிய மொழி அவனுக்குப் புரியவில்லை..

ஏன் அந்த அறையில் ஆங்காங்கு எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளும் அவனுக்குப் புரியாத மொழியில் எழுதியிருந்தது போலவே தோன்றியிருந்தது.

ஆனால் இப்பொழுது எல்லாமே தெள்ளத்தெளிவாகப் புரிந்தது, அவர்கள் பேசிய மொழி உட்பட. இது எப்படிச் சாத்தியம்?

மிகப்பெரிய கேள்வி.. அவர்களிடம் நேரிடையாகக் கேட்டேவிட்டான்.

“யெஸ், அதற்கான தீர்வை நாங்கள் செய்துட்டோம்.. அதனால் தான் உங்களுக்கு நாங்க பேசுறது இப்போ புரியுது, ஐ மீன் எங்களுடைய மொழியை நாங்கள் உங்களுக்குப் புரிய வைச்சிருக்கோம்..”

அவர் கூறியதன் சாராம்சம் புரிந்ததும் அவனது தலை மேலும் சுற்றியது போல் தோன்றியது.

ஒருவருக்குப் புது மொழியைப் புரிய வைக்க முடியுமா? இல்ல, தலையில் அடிபட்டதினால மொழி மறந்துப் போயிடுச்சா, அதைச் சிகிச்சையினால் சரி பண்ணி புரிய வைச்சிருக்காங்களா? அதுவும் சாத்தியம் தானே!

ஓரளவிற்கு மனம் அமைதிப்பட அவர்களின் சிகிச்சைகளுக்கு ஒப்புவது போல் கண்களை மூடி அமைதியாகப் படுத்திருந்தவனின் மூளை மட்டும் ஜீவன், ஜீவா என்ற பெயர்களிலும், தான் யார், என்ன வேலை செய்து கொண்டிருந்தோம், எதனால் தனது தலையில் இந்த அளவிற்கு அடி பட்டிருக்கின்றது? எப்படி இந்த அசாதரணமாகத் தோன்றும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தோம் என்ற கேள்விகளிலேயே நிலைத்திருந்தது.

ஆனால் ஒன்று மட்டும் அவனுக்கு நிச்சயம், தன்னை ஜீவா என்று அழைத்துக் கொண்டே இருக்கும் பெண்ணின் குரல் மட்டும் நன்கு பரிச்சயமான குரல், ஆனால் யாருடையது?

பதில் தான் அவனுக்குத் தெரியவில்லை..

மருந்துக்களின் உபயத்தால் மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்தவன் விழிக்கும் பொழுது ஏறக்குறைய ஒரு நாள் முழுதுமே கடந்துவிட்டிருந்தது.

மீண்டும் விழித்துப் பார்த்தது அவனது கண்கள்.

ஆனால் நேற்று இருந்த மன நிலையில் அவன் இப்பொழுது இருக்கவில்லை.

தான் யார் என்று இன்னமும் தெரியாவிட்டாலும், தான் பார்த்த சில இடங்களும், அறிமுகமான சில முகங்களும் இக்கணம் சற்றுக் கலங்கலாக நினைவுகளில் படர, ஆனால் அவன் தற்போது இருக்கும் காலத்திற்கும், அவன் மனதினில் பதிந்திருந்த காலத்திற்கும் இடையில் பல வருடங்கள் கடந்திருப்பது போல் தோன்றியது.

ஆயினும் நிச்சயம் இது கனவல்ல.

தான் இதே அறைக்குள் முடக்கப்பட்டிருந்தால் தன்னைப் பற்றி ஒன்றுமே கண்டு பிடிக்க முடியாது போனாலும் போகலாம்..

பாஷையையே மறந்தது போல் படுத்துக் கிடந்தவனை என்ன செய்தார்களோ, துல்லியமாக அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் பொருள் புரியும்படி செய்து விட்டிக்கின்றார்கள்.

இப்பேற்பட்டவர்களின் கைகளில் மீண்டும் தன்னை ஒப்புவித்தால் என்னென்ன நடக்குமோ?

ஒரு முடிவிற்கு வந்தவாறே மொத்த திடத்தையும் ஒன்றாகச் சேர்த்தவன் படுக்கையை விட்டு எழுந்தவனாய் வெளியே வர, முடிவே இல்லாதது போல் இரு பக்கங்களும் தோன்றிய அந்த நீண்ட நடைபாதையில் [hospital corridor] ஒரு ஜீவன் கூட இல்லாதது அவனுக்கு வெகு ஆச்சரியத்தைக் கொணர்ந்தது.

'இந்த ஹாஸ்பிட்டலில் நான் இருப்பதே என்னவோ வெர்ட்சுவல் ரியாலிட்டி வழியா ஒரு ஹாஸ்பிட்டலை நான் பார்ப்பது போல் இருக்குதே..’ என்று எண்ணிய வேளையில் தூரத்தில் ஒரு விசும்பல் குரல் கேட்டது.

அது வரை தெரியாத உருவம் இப்ப எப்படித் தெரியுது என்று யோசித்தவாறே கண்கள் இரண்டையும் நன்றாகத் தேய்த்தவனாய் மீண்டும் பார்க்க, அவன் நின்றிருந்த இடத்தில் இருந்து பல அடிகள் தொலைவில் ஒரு பெண் அமர்ந்தவாறே அழுது கொண்டிருப்பது தெரிந்தது.

நிஜ மனிதர்களே இல்லாதது போல் தோன்றும் ஒரு வித்தியாசமான பிரபஞ்சத்தில் நிஜமாகவே ஒரு பெண்ணா?

வினோத எண்ணத்துடன் அவளை நோக்கி மெள்ள நடந்தவன் பல மணித்துளிகள் கடந்தே அவளை நெருங்கி இருந்தான்.

“என்ன ஆச்சு? ஏன் அழறீங்க?”

கேள்விக் கேட்டவன் வெகு நேரம் நடந்து வந்ததில் உடல் சோர்ந்துப் போனவனாய் அவள் அருகே அமர, மெல்ல அவனை நிமிர்ந்துப் பார்த்த அஹானாவின் முகம் அவனையும் அறியாமல் அவனது உள்ளத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது.

‘என்னை ஜீவன் என்று அழைத்த குரல் இவளுடையதா இருக்குமோ?’

சந்தேகம் தோன்ற, தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் நோக்குடன் அவளிடம்,

“நான் ஜீவன்.. நீங்க யாருன்னு எனக்குத் தெரியலை, ஆனால் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.. என்னை உங்களுக்குத் தெரியுமா?” எனவும், அவனை இமைக்காது சில விநாடிகள் பார்த்தவள் ‘இல்லை’ என்பது போல் தலையை மட்டும் அசைத்து மீண்டும் தலை கவிழ்ந்தாள்.

அடுத்தச் சில நிமிடங்கள் வெகு அமைதியாய் கடக்க, மீண்டும் அவளின் புறம் திரும்பியவன்,

“சாரி, உங்களைத் தொந்தரவு பண்றதா நினைக்காதீங்க.. என்னவோ மனித சாடையே இல்லாத மாதிரி இந்த ஹாஸ்பிட்டல் முழுசும் வெறிச்சோடிக் கிடக்குது.. கண்ணு முன்னாடி ஏதோ கானல் நீரில் தெரியற மாதிரி பிம்பங்கள் வந்து பிறகு மறைஞ்சு போயிடுது.. அதான் நிஜ ஜீவராசிகளே இல்லாத ஒரு உலகத்துக்குள்ள நாம எப்படியோ வந்துட்டோமோன்னு பயந்துப் போய் இருந்த சமயத்துல நீங்க ஒருத்தர் மட்டும் இங்க இருக்கீங்க. அதுவும் அழுதுட்டு இருக்கீங்க. அதான் என் உடல் நிலையை நினைச்சு அழறீங்கன்னு நினைச்சிட்டேன்.. என்னை உங்களுக்கு நிஜமாகவே தெரியலையா?” எனவும் மீண்டும் அதே சலனமற்ற பார்வை அவளிடம்.

பதில் கூறாது முன்னர்ச் செய்தது போல் 'இல்லை' என்பது போன்று மீண்டும் தலையசைக்க, “அப்ப ஏன் அழறீங்க? யாருக்காவது உடம்பு சரியில்லையா? உங்க ஃபேமிலி மெம்பர்ஸ் யாராவது இந்த ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகியிருக்காங்களா?” என்றான்.

விடாதுக் கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கும் அவனைப் பார்த்தவாறே கையை மட்டும் உயர்த்தியவள் ஒரு இடத்தை நோக்கி சைகை செய்ய, நிமிர்ந்துப் பார்த்தவனுக்கு விசித்திரமான மொழியில் எழுதப்பட்டிருந்த அந்தச் சொற்களின் அர்த்தம் நன்றாகவே புரிந்தது.

‘Morgue’

இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் இடம்.

வெகுவாக அதிர்ந்தவன் இதற்கு மேல் இவளைக் குடைந்தெடுக்காது இருப்பது நல்லது என்று உணர்ந்து அமைதியாக அமர்ந்துவிட, கணங்கள் சில கழித்து எழுந்து நடந்த அஹானா அந்த நடைப்பாதையின் முடிவில் நின்றவள் என்ன தோன்றியதோ மெள்ளத் திரும்பிப் பார்த்தாள்.

அவள் எழுந்துச் சென்றதைக் கூட உணராதவனாய் இரு கரங்களாலும் தலையைத் தாங்கியவாறே குனிந்து அமர்ந்திருந்தவன் எதுவோ உணர்த்தவும் தலையை நிமிர்த்திப் பார்க்க, அவளும் அந்நேரம் அவனைப் பார்த்ததில் இரு ஜோடிக் கண்களும் ஒன்றாகச் சந்தித்தன..

‘இந்தப் பிரபஞ்சத்தின் விதி நம்மைச் சந்திக்க வைத்திருக்கின்றது.. ஆனால் ஒருவரும் உணராத வகையில், நீயோ நானோ எண்ணாத வடிவில்! நாம் இருவரும் கனவிலும் நினையாத விதத்தில்!!’ என்று விசித்திரமாய் ஒரே சேர இருவரின் மனதிற்குள்ளும் தோன்றவே, ஒரு நொடி விளங்காத பார்வையை ஒருவர் மீது ஒருவர் மீண்டும் அவர்களின் கண்கள் வீசின.

மறு நொடி திரும்பவும் இரு கரங்களாலும் தலையைப் பிடித்தவாறே அவன் தலைகவிழ, ஆழ இழுத்து மூச்சைவிட்டவளாக அஹானாவும் அந்த மருத்துவமனையை விட்டு வெளியேறினாள்.

*************************************

[வாசக நட்புக்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.. இதற்குப் பிறகு சில அறிவியல் சார்ந்த விஷயங்களும் விளக்கங்களும் வரும். சிலருக்குப் புரியலாம், சிலருக்குப் புரியாமல் போகலாம். ஆகையால் அடுத்து வரும் சில பத்திகளை நீங்கள் skip செய்வதனாலும் எனக்கு ok. :))

University of Millestoneberg, PacBio

“You’re just trying to dig into this final unknown of the human genome.. It’s just never been done before and the reason it hasn’t been done before is because it’s hard.”

சர்வதேச கூட்டமைப்புக்கு [international consortium] தலைமைத் தாங்கிய பேக்பையோ மாநிலத்தைச் சேர்ந்த மில்ஸ்டோன்பெர்க் பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர் ஹில்டன் எல்லிஸ் தங்களது அணியினர் உருவாக்கிய, ‘Scionical Genomic Sequence’ என்று அவர்கள் பெயர் வைத்திருக்கும் மரபணு வரிசையைப் பற்றிய அறிவிப்பே இது.

“A huge scientific breakthrough.. அதாவது அறிவியலின் திருப்புமுனை.." என்று அறிவித்த அவரின் வார்த்தைகளைக் கேட்ட அவ்விநாடியே அந்த அரங்கம் முழுவதுமே மூன்று விதங்களில் குழுமியிருந்த மக்களிடம் இருந்து கோஷங்கள் பறந்தன.

ஒன்று நிஜமான மனிதர்களின் கூட்டம்..

மற்றொன்று நிஜமல்லாத, தண்ணீரை ஒத்த திரையில் மிதப்பதை போன்று ஒளிர்ந்து கொண்டிருந்த மனிதர்களின் கூட்டம்.

அதற்கு அடுத்தது மனிதர்களின் உருவத்தில் படைக்கப்பட்டிருந்த இயந்திரங்களின் கூட்டம்.

அதே போல் பளிச் பளிச்சென்று ஒரு பக்கம் அந்த அரங்கமே மின்வெட்டொளிகளால் ஜொலித்துக் கொண்டிருக்க, மறு புறம் அமர்ந்திருந்த மனிதர்களின் கண்கள் ஒரு வித தாளத்தில் விநாடிக்கு பல முறை சிமிட்டிக் கொண்டிருந்தன.

கண்களின் கருவிழியைச் சுற்றிப் பொறுத்தப்பட்டிருந்த கேமராக்களின் [lens around the iris] மூலம், அதாவது தன்னார்வ மற்றும் தன்னிச்சையான சிமிட்டல்களுக்கு இடையிலான வேறுபாட்டைக் கண்டறியக் கூடிய பைசோ எலக்ட்ரிக் மூலம் கண்களின் அசைவினால் உருவாகும் சக்தியை கேமரா லென்ஸிற்குக் கொண்டு சென்று,

அதன் மூலம் காணொளிகளாகவும் புகைப்படங்களாகவும் அங்கு நடந்து கொண்டிருப்பதைப் படம் பிடித்துச் சேமித்துக் கொண்டிருந்த [Contact lens that can be controlled by the user's deliberate blinks, recording video on request] நிருபர்கள் மற்றும் அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் கண்கள் சிமிட்டிக் கொண்டிருந்தன.

“அறிவியலின் பாதையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனைன்னு சொல்றீங்க, அது என்னன்னு எங்களுக்கு விளக்கமா கூற முடியுமா?”

ஒரு நிருபரின் கேள்விக்குப் பதில் அளிக்கத் துவங்கினார், ஹில்டன் எல்லிஸ்.

“வெவ்வேறு மனிதர்களின் உயிரணுக்களிலிருந்து இரண்டு அல்லது மூன்று விந்தணுக்களை உருவாக்கி, அதாவது அது ஆணாக இருக்கலாம் அல்லது பெண்ணாக இருக்கலாம். ஆண் என்றால் அவனது உயிரணுக்களை எடுத்து அவற்றைக் கரு முட்டைகளாக மாற்றுவது அல்லது அது பெண் என்றால் அவளின் உயிரணுக்களை எடுத்து அவற்றை விந்தணுவாக மாற்றி, அந்த உயிரணுக்களை எங்களது புதிய 'Scionical genomic sequence’ என்ற அறிவியல் மரபணு வரிசை முறைப்படி மாற்றியமைத்தால் என்ன ஆகும்? அதே போல் இந்த மரபணு வரிசைப்படுத்தும் தொழில் நுட்பங்களை ஒரு மனிதனிடம் இருந்து உருவாக்காமல். வேறு ஒரு அணுவில் இருந்து உருவாக்கினால் என்ன என்று எங்களுக்குத் தோன்றியது..”

“மனிதர்களிடம் இருந்து இல்லை என்றால் வேறு உயிரினங்களிடம் இருந்து அணுக்களை எடுக்க வேண்டுமா?”

“அப்படி இல்லை.. இதற்கு நாங்கள் தேர்ந்தெடுத்தது ட்ரோபோபிளாஸ்டிக் செல் [Trophoblastic cell]. அதாவது ஒரு உயிரணுவில் இருந்து உருவாகி மெதுவாக வளரும் கட்டி போன்ற, கருவை கருப்பையுடன் இணைய வைத்து, விந்தணுவின் மூலம் கரு முட்டையைக் கருத்தரித்த பிறகு, நஞ்சுகொடியை உருவாக்கும் ஒரு அணுவின் மூலம் தொழில்நுட்பங்களைக் கண்டுப்பிடித்து இந்த அறிவியல் மரபணு வரிசையை மாற்றி அமைத்தால் என்ன நடக்கும் என்பதே எங்களது ஆராய்ச்சியின் இரு வித்துக்கள்..”

அவர் பேச பேச அங்குக் கூடியிருந்த இயற்கை மனிதர்கள் மட்டும் அல்லாது அங்குச் செயற்கையாய்க் குழுமியிருந்த அனைவரின் முகங்களும் ஆச்சரியத்தில் மலரத் துவங்கின.

“இவற்றைக் கருத்தரிப்பதற்குப் பயன்படுத்த முடியுமா?”

“அது தான் எங்களது ஆராய்ச்சியின் பலனே… இந்த இரண்டு வித்துக்களால் உருவானதே சையோனிக்கல் ஜெனொமிக் சீக்வென்ஸ்... புதிய டி.என்.எ வரிசைமுறை தொழில்நுட்பங்களைக் கொண்ட இந்தச் செயற்கை விந்தணு மருத்துவப் பயன்பாட்டிற்குக் கிடைத்தவுடன், அதைக் கருத்தரிப்பதற்குப் பயன்படுத்தலாம்.. பின்னர்த் தேவையான மரபணு தகவலை கரு முட்டைக்கு மாற்றலாம்... இந்த நுட்பம் மற்றும் ஹைடாடிடிஃபார்ம் மோல் [hydatidiform mole] ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட செயற்கை விந்தணுக்கள் மூலம், ஒரு மனிதன் இதைப் பயன்படுத்தித் தங்கள் சொந்த கருமுட்டைகளைக் கருவுறச் செய்யலாம் [வளரும் கரு முட்டை ஓசைட் என்று அழைக்கப்படுகிறது].. ஆண் விந்தணுக்கள் அல்லாத பிற உயிரணுக்களிலிருந்து பெறப்பட்ட செயற்கை விந்தணுக்கள் மூலம், ஒரு பெண் இந்த விந்தணுக்களைப் பயன்படுத்தித் தனது கருமுட்டைகளைக் கருவுறச் செய்யலாம்...மேலும் ஒரு பெண் தனது முட்டை மற்றும் ஒரு சோமாடிக் செல்லை, [சோமாடிக் செல் என்பது விந்து மற்றும் முட்டை அணுக்களைத் தவிர உடலின் எந்த உயிரணுவும் சோமாடிக் செல் எனப்படும்] கொண்டு ஒரு குழந்தையைப் பெறலாம், பின்னர் மரபணு தகவலை முட்டைக்கு மாற்றலாம்.. இதனை இலகுவாக விளக்குவதற்கு இந்தப் படங்களைப் பாருங்கள்."


(Images are attached with this thread)

திரையில் ஒளிர்ந்த படங்களைச் சுட்டிக் காட்டியவாறே அவர் தன் விளக்கத்தை முடிக்கும் பொழுது அவ்விடம் முழுவதுமே பற்பல குரல்களில் கிசுகிசுப்பான ஓசைகள் எழும்ப ஆரம்பித்தன.

வியப்பும் ஆர்வமும் எதிர்பார்ப்பும் என்று பல உணர்ச்சிகள் அவ்வரங்கத்தில் இருந்த ஒவ்வொருவரின் முகங்களில் தோன்றிக் கொண்டிருக்க, மேலும் கேள்வியைத் தொடுக்க எத்தனித்த ஏறக்குறைய மனித ரூபத்தில் உருவாக்கப்பட்டிருந்த இயந்திரத்தை சட்டெனத் தன் கையை உயர்த்தித் தடுத்தார் ஹில்டன்.

“உங்க எல்லாருக்குமே பல வித கேள்விகளும் சந்தேகங்களும் தோன்றி இருக்கும்னு எனக்குப் புரியுது. அதற்கான பதில்களையும் விளக்கங்களையும் நான் கொடுப்பதற்குத் தான் இந்தக் கூட்டத்தையே கூட்டியிருக்கேன். ஆனால் அதற்கு முன்னர் என்னுடைய ஆராய்ச்சியில் பங்கெடுத்தவர்களை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தியே ஆக வேண்டும்.. ஏனெனில் நான் கூறிய முதல் இரண்டு கேள்விகள் மட்டும் தான் எனக்குள் தோன்றியது. அதற்கான பதில்களையும், மேற்கொண்டு கண்டுப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் கண்டறிந்தது என்னுடைய டீம்..” என்றவர் ஒவ்வொருவராக அழைக்கத் துவங்கினார்.

“கெவின், ஒலிவியா, லோகன், யாதவ், மியா..” என்றழைத்தவர் அவர்கள் அனைவரும் அவரது அருகில் வந்து நின்றவுடன், தனக்குப் பின் திரும்பிப் பார்த்தார்.

அடுத்து அவர் அழைக்கப் போவது அதிநிச்சயமாக இந்த ஆராய்ச்சியின் முக்கியப்புள்ளியாக இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டது போல் மக்கள் கூட்டம் ஹில்டனின் பார்வை சென்ற இடத்தை நோக்கித் திரும்பியது.

“தி மோஸ்ட் இம்பார்ட்டண்ட் பேர்ஸன் இன் அவர் ரிசேர்ச்.. அஹானா மோசஸ்..”

கூறியவர் தன் அருகே வந்து நிற்கும் அஹானாவின் தோள் பற்றியவாறே, “இப்போ உங்கள் கேள்விகளை நீங்க கேட்கலாம்..” என்றவர் கூறி முடிக்கவில்லை, சடசடவென வில்லில் இருந்து பாயும் அம்புகள் போல் நிழல் மற்றும் நிஜ மனிதர்களிடம் இருந்தும், இயந்திர மனிதர்களிடம் இருந்தும் கேள்விகள் பாயத் துவங்கின.

"உங்களின் ஆராய்ச்சியின் முதல் படி எது?"

"சில கேள்விகளின் விளைவாகப் பிறந்தது தான் எங்களது ஆராய்ச்சியும் அதன் முடிவுகளும்.."

"என்ன கேள்விகள்?"

"மரபணு ரீதியாகத் தங்களது குழந்தையைப் பெற விரும்பும் ஒரு பெற்றோர், அதாவது ஒரு ஆணும் பெண்ணும், குழந்தையை உருவாக்கும் விந்தணுக்களோ முட்டையோ இல்லாது இருந்தால் என்ன செய்வர்?

அதே போல் ஒரு வேளை இந்தப் பிரபஞ்சத்தில் பெண்களின் பற்றாக்குறையோ அல்லது ஆண்களின் பற்றாக்குறையோ ஏற்பட்டால் என்ன செய்வது?

ஆண்களே இல்லாது ஒரு பெண் மட்டும் ஒரு உயிரை உருவாக்க முடியுமா?

அதே போல் பெண்களே இல்லாது ஒரு ஆண் மட்டும் ஒரு உயிரை உருவாக்க முடியுமா?

உயிர்களை உருவாக்கும் பொழுது நமக்கு விருப்பமான மரபணுத் தகவல்களை அந்த உயிர்களுக்குள் புகுத்த முடியுமா?

மரபணு நோய்களை, அதாவது டவுன் சிண்ட்ரோம், அல்சைமர், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் புற்றுநோய், பிறக்கும் போது இருக்கும் காது கேளாமை, நீரழிவு நோய், ஒற்றைத் தலைவலி போன்ற இன்னும் பிற நோய்களை ஒரு மனிதன் பிறக்கும் முன்னரே அவனிடம் இருந்து அழிக்க இயலுமா?

இப்படியான கேள்விகளே எங்களின் ஆராய்ச்சிக்கு வித்திட்டன.."

கூறியவரிடம் இருந்து தங்களின் பார்வையைச் சற்றே நகர்த்திய ஒரு நிருபர் ஒலிவியாவின் புறம் திரும்பியவர், “அது எவ்வாறு சாத்தியம்னு உங்களால் விளக்க முடியுமா?" என்றார்.

"ஒவ்வொரு கேள்விக்கும் நான் பதில் சொல்றேன்.. இந்த ஆராய்ச்சியின் முதல் கேள்வியா நாங்க நினைத்தது, உயிரணுக்கள் மனிதர்களின் விந்தணுக்களிடம் இருந்து மட்டும் தான் பெற முடியுமா? உடலில் இருக்கும் வேறு அணுக்களை இதற்காகப் பயன்படுத்திக் கொள்ள முடியாதான்னு தோன்றியக் கேள்விக்கான பதிலே, ‘A woman can have a baby with her egg and a somatic cell which is unibaby..’ அதாவது ஒரு பெண் தன் உடலில் உள்ள ஏதோ ஒரு அணுவைக் கொண்டு [somatic cell] அவளது கரு முட்டையுடன் இணைத்து ஆண் என்பதையே அறியாது ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும்? மரபியல் மற்றும் வளர்ச்சி உயிரியலின் படி சோமாடிக் செல் நியூக்ளியர் டிரான்ஸ்ஃபர் (SCNT) அதாவது, அணுப் பரிமாற்றம் என்பது ஒருவரின் உடலில் உள்ள ஒரு அணுவை, முட்டை அணுவோட இணைத்து அதில் இருந்து கருவை உருவாக்க முடியும்.. A bizarre reproductive biology advance, researchers have fertilized mouse eggs with cells from another mouse's body--instead of sperm. மனிதர்களை இவ்விதமான ஆராய்ச்சிக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக இதற்கெல்லாம் முன்னோடியாக இனப்பெருக்கம் ஒன்று நடபெற்றது. ஒரு எலியின் உடல் அணுவைக் கொண்டு மற்றொரு எலியின் கரு முட்டையுடன் இணைத்து ஒரு புது உயிரை (எலி), அதாவது ஒரு விநோதமான இனப்பெருக்கத்தை உருவாக்கினர் விஞ்ஞானிகள்.. இதுவே மனிதர்களிடம் சொமாட்டிக் செல் ட்ரான்ஸ்ஃபரை நிகழ்த்துவதற்கு முன்னோடி.. இது ஆண் என்பவனேயே அறியாது ஒரு பெண் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்குறிய விதமாகும்."

"அப்படி என்றால் ஆண் இனமே தேவை இல்லை என்றாகிவிடாதா?"

ஒரு ஆண் நிருபரின் கேள்விக்குப் பதில் அளிக்கத் துவங்கினான் யாதவ்.

“அப்படி இல்லை.. எவ்வாறு பெண் தன் உயிரணுவைக் கொண்டு ஓரு உயிரை உருவாக்குகின்றாளோ, அதே போல் ஒரு ஆணும் பெண் என்பவளேயே அறியாது ஒரு குழந்தையை உருவாக்க முடியும்..”

“எப்படி?”

“அவனது விந்தணுவை சினை முட்டையாக [Ovum] மாற்றுவதன் மூலம்?”

“எப்படி மாற்றுவது?”

“ஒரு செயற்கையான பாலணு அல்லது புணரியை உருவாக்க முடியும், பிறகு இந்தப் பாலணுவை கரு முட்டையாக அணு மறுநிரலாக்கம் [nuclear reprogramming] மூலம் மாற்ற முடியும்... பிறகு உங்களுக்கு எது தேவையோ அதாவது விந்தணுவும் கிடைத்துவிடும், கரு முட்டையும் கிடைத்துவிடும்..”

"அப்படி உருவாக்கப்படும் உயிர் எந்த மரபணுவை சுமந்துப் பிறக்கும்?"

“அதுவும் எங்கள் ஆராய்ச்சியின் ஒரு பகுதி.. தான் விரும்பும் மரபணுவை தன் குழந்தைக்குச் செலுத்துவதற்கு ஒரு மனிதனுக்கு உரிமை இருக்க வேண்டும்.. அது சாத்தியப்பட்டால் அனைத்துமே சாத்தியம். ஆக இவ்வாறு விந்தணுக்களைக் கலக்கி உருவாகும் குழந்தைக்கு நாங்கள் ஏற்கனவே கூறியது போல் ஜெனட்டிக் ட்ரான்ஸ்ஃபர் மூலம் மரபணுவை புகுத்திவிடுவோம்.”

“இன்னும் சிறிது விளக்கமாகக் கூற முடியுமா?”

"கண்டிப்பாக.. இதே போன்று ஒரு ஆராய்ச்சிப் பல காலங்களுக்கு முன் மனிதர்கள் அல்லாத சில உயிரினங்களிடம் செய்து பார்க்கப்பட்டிருக்கின்றது.. அதற்கு spindle transfer என்று பெயர்.. அதாவது மரபணுத் தகவல்களின் பெரும்பகுதிக்குக் காரணமான அணுக்கரு டி.என்.வை, மைட்டோகாண்ட்ரியாவைக் கொண்டு செல்லும் கருவுறாத முட்டையில் இருந்து பிரித்தெடுத்துவிடுவது.. பிறகு டி.என்.வை [nuclear DNA] இதே போன்று அணுக்கரு டி.என். அப்புறப்படுத்தப்பட்ட முட்டைக்குள் செலுத்துவது.. எப்பொழுது நியுக்கிளியர் டி.என்.எ-வை முட்டையில் இருந்து பிரித்தெடுக்கின்றமோ அப்பொழுதே அந்த முட்டை மரபணுக்கள் தகவல்களை இழக்கின்றன.. அதாவது When the nucleus is removed, the cell loses its genetic information. பிறகு நமக்குத் தேவையான மரபணுக்களை நாம் உள்ளே புகுத்தலாம்..”

“ஆண் மட்டுமோ அல்லது பெண் மட்டுமோ ஒரு குழந்தையை உருவாக்க முடியும் என்று கூறுவது புரிகின்றது.. ஆனால் ஏன் இவ்வாறு இரண்டு அல்லது மூன்று ஆண்களின் விந்தணுக்களைக் கலக்கின்றீர்கள்? அப்படிக் கலந்தால் ஒன்றுக்கு பதிலாக இரண்டு மூன்று என்று குழந்தைகள் பிறக்காதா? அவ்வாறு பிறக்கும் குழந்தைகள் எந்த ஆணிடம் இருந்து மரபணுவைப் பெறுகின்றார்கள்? ஒரு மனிதனிடம் இருந்து பெறப்படும் விந்தணு மற்றும் கருமுட்டையிடம் இருந்து உருவாகும் குழந்தைகளிடமே நிறையக் குறைகள் இருக்கலாம், அப்படி இருக்கும் பொழுது செயற்கை விந்தணுக்கள், சொமாட்டிக் செல், கரு முட்டைகள் மூலமாகப் பிறக்கும் குழந்தைகளிடம் எத்தனை குறைகள் உருவாகுமோ?”

அவரது கேள்விக்கு இப்பொழுது பதில் கூறியது மியா.

“ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறக்கவும் வாய்ப்பிருக்கின்றது, ஆனால் இந்தச் செயற்கை முறை கருத்தரிப்பில் ஈடுபடும் பெண் அல்லது ஆணின் விருப்பத்தை ஒத்து, எத்தனை குழந்தைகள் அவர்களுக்குத் தேவை என்று இந்தச் செயல்பாட்டினைத் துவங்கும் முன்னரே முடிவெடுக்கப்படும்.. அதாவது ஒரு குழந்தை மட்டுமே போதும் என்று விரும்புபவர்கள் ஒரு கருவை மட்டும் உருவாக்குவதற்கு உடன்படலாம், மீதம் இருக்கும் கருவை அழித்துவிடலாம். அதே போல் எங்களது ஆராய்ச்சியின் துவக்கத்தில் செயற்கை விந்தணுக்கள் மற்றும் சினை முட்டைகளினால் உருவாகிய கருவில் சிக்கல்களைக் கண்டோம்.. அவற்றில் ஒன்று அத்தகைய விந்தணுக்களில் இயல்பான விந்தணு செயல்பாட்டில் குறுக்கிடக்கூடிய ஆண்டிப்பாடிகளைக் [Antibodies] கண்டோம். அது முதல் துவங்கி ஏற்பட்ட அனைத்து சிக்கல்களையும் சரியாகத் தீர்த்துவிட்டோம்..”

“உங்களது ஆராய்ச்சியின் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்குத் தான் இந்தக் கூட்டத்தை நீங்கள் கூட்டியிருக்கின்றீர்கள், ஆனால் அவ்வாறு பிறக்கும் குழந்தைக்கு எந்த வித கோளாரும் இருக்காது என்றும், அதே போல் அந்தக் குழந்தைக்கு நீங்கள் செய்த மரபணுத் தகவல் பரிமாற்றம்/ புகுத்துதல் [Genetic Transformation] மூலமும், வழித்தோன்றலாய் வரும் வியாதிகளின் சுவடே இருக்காது என்பதனையும் எவ்வாறு நிரூபணம் செய்யப் போகின்றீர்கள்?”

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து அங்குப் பெருத்த அமைதித் துலங்க, அங்குக் குழுமியிருந்த அனைவரின் கண்களும் ஒரு சேர ஹில்டனிடம் நிலைத்தது.

அவரது பார்வையோ அவரை நெருங்கி நின்றிருந்த அஹானாவிடம் சென்றது.

அதே சமயம் அமர்ந்திருந்த இருக்கையிலேயே அவனையும் அறியாது மயக்கத்தைத் தழுவியதில் மீண்டும் தன் அறையில், மருத்துவமனையில் தன் படுக்கையில் படுத்திருந்த ஜீவன் என்ற நாமம் கொண்ட அந்த மனிதனின் கண்களும், தன்னெதிரில் தோன்றிக் கொண்டிருக்கும் நீர்திரையில் அதிர்ச்சியுடன் அஹானாவையே வெறித்துப் பார்த்திருந்தன.

'இவள்? இந்தப் பெண்?'

"அஹானா மோஸஸ்.. இவளே எங்களது ஆராய்ச்சி! ஆண் என்பதையே அறியாது இவளது வயிற்றில் உருவாகிக் கொண்டிருக்கும் கருவே எங்களது நீண்ட நாளைய கனவு.. இவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையே உங்கள் அனைவரின் கேள்விகளுக்கும் பதில்.. முழுமையிலும் செயற்கையாக எங்களைப் போன்ற விஞ்ஞானிகளால் மட்டுமே உருவாக்கப்பட்ட ஒரு குழந்தை முதன்முதலாக இந்தப் பிரபஞ்சத்தில் அடியெடுத்து வைப்பதற்குப் படிக்கல்லாக இருக்கப் போகின்றவள்.. இவள் வயிற்றில் வளரும் குழந்தையே எங்களது Scionical genomic sequence- ன் பலன்.. A scientific breakthrough.."

ஹில்டன் பேச பேச,

'இது அதி நிச்சயமாக நான் வாழ்ந்து வந்த உலகமாக இருக்க முடியாது.. அப்படி என்றால் நான் எங்கு இருக்கின்றேன்? இல்லை, ஒரு வேளை நான் இந்த உலகத்திலேயே பிறந்து வளர்ந்து பின் ஏதோ ஒரு விபத்தில் அடிபட்டு, என் நினைவுகள் கலைந்துப் போய்விட்டவனவா? அப்படி என்றால் ஏன் எனக்குச் சிறிதளவும் கூட இந்த உலகம் பரிச்சயமானதாயில்லை..' என்ற விடையறியாத கேள்விகள் அந்த ஆண்மகனது புத்திக்குள் போர்த்தொடுக்கத் துவங்கின.

சிரஞ்சீவிதம்..

The Journey of an Immortal!

தொடரும்..References

Contact lens that records what you see: -


Augmented Reality:


Send lemonade through internet [olfactometers and electronic noses]


As most VR solutions for the food and drink industry are still under development we cannot predict to what extent it will alter how people consume and interact with food and drinks. In their present form, the technologies offer a lot of promise for the industry in the form of futuristic solutions which will change how people interact with food. However, we will probably have to wait some time to see where VR will truly take us.


Trophoblastic cell - A thin layer of cells that helps a developing embryo attach to the wall of the uterus, protects the embryo, and forms a part of the placenta.

What is the function of the trophoblast cell?

Trophoblasts are cells that form the outer layer of a blastocyst, which provides nutrients to the embryo, and then develop into a large part of the placenta. Trophoblast invasion is a critical process in the establishment of a successful pregnancy.

One technique that has worked in monkeys is called spindle transfer. Researchers remove the nuclear DNA—which accounts for the vast majority of the genetic information—from an unfertilized egg cell that carries mutant mitochondria. Then, they transfer the DNA into an egg from a healthy donor, from which the nuclear DNA has also been removed. The result is an egg carrying the nuclear DNA from the patient and the healthy mitochondria of the donor egg. In 2009, Shoukhrat Mitalipov, a reproductive biologist at Oregon Health & Science University, West Campus, in Beaverton, and colleagues showed that the technique could produce healthy baby macaques. Today, they report online in Nature that they have used the technique with human oocytes, showing that it can produce normal-looking embryos.

Chromosomal disorders

Down syndrome (Trisomy 21).

FragileX syndrome.

Klinefelter syndrome.

Triple-X syndrome.

Turner syndrome.

Trisomy 18.

Trisomy 13.

Multifactorial disorders

Late-onset Alzheimer’s disease.

Arthritis.

Autism spectrum disorder, in most cases.

Cancer, in most cases.

Coronary artery disease.

Diabetes.

Migraine headaches.

Spina bifida.

Isolated congenital heart defects.

Monogenic disorders

Cystic fibrosis.

Deafness that’s present at birth (congenital).

Duchenne muscular dystrophy.

Familial hypercholesterolemia, a type of high cholesterol disease.

Hemochromatosis (iron overload).

Neurofibromatosis type 1 (NF1).

Sickle cell disease.
 

Attachments

 • 1.png
  1.png
  42.6 KB · Views: 3
 • 1A.png
  1A.png
  26.3 KB · Views: 4
 • 2.png
  2.png
  64.5 KB · Views: 3
 • 3.png
  3.png
  70.4 KB · Views: 4
Last edited:

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,

ஒரு சின்ன அறிவிப்பு.. இந்த அத்தியாயத்தில் இருந்து கதை எந்தப் பாதையில் பயணிக்கிறது என்பதை வாசகர்கள் ஓரளவுக்குப் புரிந்துக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன்... நான் ஏற்கனவே கூறியது போது இது முற்றிலும் இதுவரை (சிரஞ்சீவிதத்திற்கு முன் வரை) நான் தொட்டிராத ஒரு Genre.

இன்னும் சொல்லப் போனால் எனக்கு sci-fi/fantasy/horror type movies or series பார்க்க பிடிக்காது. அதிலும் sci-fi/fantasy genre-ல வர எந்தத் திரைப்படங்களையும் பார்த்ததும் இல்லை.. ஆகையால் இந்தக் கதையில் வரும் கதாப்பாத்திரங்கள், இடங்கள், நிகழ்ச்சிகள் அனைத்துமே கற்பனை தான்.. Source - Google & from my friends in research department:)

And also, வாசக நட்புக்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்.. வரும் இரு அத்தியாங்களில் சில அறிவியல் சார்ந்த விஷயங்களும் விளக்கங்களும் இருக்கும். சிலருக்குப் புரியலாம், சிலருக்குப் புரியாமல் போகலாம்... சிலருக்கு பிடிக்காமலே கூட போகலாம்.. ஆகையால் உங்கள் விருப்பப்படி if you would like to skip any paragraphs or even the entire episode, please do so.. I can understand. :)

If you have any questions, feel free to google.. Just kidding, please send me a message. Again this is just an imaginary story. எனக்கும் அறிவியலுக்கும் ரொம்பத் தூரம். ஆகையால் இது சாத்தியமா, சாத்தியம் இல்லையா என்று என்னைக் கேட்காதீங்க.. :) Pretty please.

Thanks
JB
 

saru

Member
Vaipiruku pala aandugal kadandu vandachu ila ah edunalum sathiyam enaa ariviyal valarchi apadi enna venalum nadakum hoom
Anga poium inda paya palasaye yosikuran
Anga nikura rasa nee
 

Selvi

Member
Is Amar's birth also this Sci-fi way. Cos I remember he told that his mum said he has no father.
 

Chitra Balaji

Active member
Woooooooooooooow wooooooooow super Super mam.... Semma semma episode..... Theriyaatha விஷயம் neriya therinjikalaam.......super Super mam
 

Lucky Chittu

New member
Very nice. What I felt is after reading the story expect the unexpected in sci fi. Really super mam. Waiting for the next episode. I am waiting for meenalochani and amar's rememberance
 

Chellam

Member
பின் வரும் காலங்களில் இதுவும் சாத்தியமாகலாம்.
 
Omg… I am totally perplexed… my head is rotating 🙄🙄🙄🙄
It is very interested to read… but I don’t know whether it will work out or not…
Researchers are going beyond the god in the name of science…


Ahana is pregnant with her own research baby…. Which gender does the baby contain????

Jeewan is Amar
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top