JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Siranjeevitham - Episode 19

JLine

Moderator
Staff member
சிரஞ்சீவிதம்

அத்தியாயம் 19

Welcome my most favorite creation, the transcendent, nonpareil, second to none invention of this universe. Inception of the great scientific breakthrough! My guardian angel who is going to put me on the throne as the king of this world!

[எனக்கு மிகவும் பிடித்தமான படைப்பு, இந்தப் பிரபஞ்சத்தில் ஒருவராலும் கண்டுப்பிடிக்க இயலாத, அதீதமான, ஈடு இணையற்ற, மாபெரும் அறிவியல் முன்னேற்றத்தின் தொடக்கம்! இவ்வுலகின் அரசனாக என்னை அரியணையில் அமர்த்தப் போகும் என் காவல் தேவதையே, வருக!]

கைகள் இரண்டையும் அகலமாக விரித்துத் தன்னை வரவேற்கும் டேனியலைக் கண்டு, மினுக்கும் செவ்விதழ்களை விரிக்காது மந்தகாச புன்னகைப் புரிந்த இவ்கெனியா, அவனது அறைக்கு நடுவில் போடப்பட்டிருந்த மேஜை மீது தாவி ஏறி அமர, அவளைக் கண்காணிப்பதற்கு என்று டேனியலால் அமர்த்தப்பட்டிருந்த மற்றுமொரு ஆண் சைபோர்க் அவ்வறைக்குள் நுழைந்தது.

“அதற்குள் இன்னொரு சைபோர்கா? ஐ மீன் கார்டியன் ஏஞ்சலா? வர வர உன்னுடைய சைபோர்க்குகளின் எண்ணிக்கை கூடிட்டே போகுது டேனியல். உன்னுடைய இராணுவத்தை அதிகரிக்கும் திட்டமா? ஏன், உன்னைச் சுற்றி அவ்வளவு ஆபத்துக்கள் இருக்கா, என்ன?”

கிண்டலாக உரைத்தவளாய் இரு கைகளையும் தனக்குப் பின்னால் மேஜை மீது ஊன்றி சற்றுப் பின்பக்கம் சாய்ந்து ஒயிலாக அமர்ந்தவளின் கேள்விகள், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் இருந்ததில் டேனியலின் கோபம் ஏகத்திற்கும் அதிகரித்தது.

ஆயினும் அமைதியாக இருந்து தான் இவளைத் தன் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று தன் படைப்பையே கண்டு சற்று அஞ்சியவனாய், வழக்கம் போல் தன்னுணர்வுகளை அடக்கிக் கொண்டவாறே,

“மாயன் அழிந்துப் போவான்னு நான் எதிர்பார்க்கவே இல்லை இவ்கெனியா.. என்னுடைய பல வருடங்கள் உழைப்பு மாயன்.. ஆனால் அவனையே வெகு சீக்கிரத்தில் அழிச்சிட்டாங்க.. ஆனால் நீ அப்படி இல்லை.. வெகு குறைந்த நாட்களில் நான் உன்னை உருவாக்கினேன்.. அதனால் உன்னை அழிப்பது அவ்வளவு கடினமாக இருக்காதோன்னு எனக்குத் தோணுச்சு.. அதான் உனக்குப் பாதுகாப்பாளனாக இருக்க இந்த ஃபேபியோவை [Fabio] உருவாக்கினேன்..” என்றான் அவனும் நக்கல் வழியும் தொனியில்.

அவனது பேச்சினைக் கேட்டு "எனக்குப் பாதுகாப்பாளனாகவா?" என்றவாறே கடகடவெனச் சிரித்து வைத்தாள் இவ்கெனியா.

அவள் சிரித்து முடிக்கும் வரை டேனியல் காத்திருக்க, அவளது கர்வம் கலந்த ஆர்ப்பரிப்பும், டேனியலின் வழக்கத்திற்கு மாறான அமைதியும் ஃபேபியோவிற்கு வியப்பையே அளித்தது.

இருவரையும் ஆழ்ந்துப் பார்த்தவாறே நின்றவனை மெள்ளத் திரும்பிப் பார்த்த இவ்கெனியா மீண்டும் டேனியலின் புறம் நோக்கியவளாய்,

“மாயனை அவர்கள் எளிதா அழிச்சிட்டதால் யாராலேயும் அழிக்க முடியாத அளவுக்கு என்னை உருவாக்கினதாகவும், மாயனையும் விடச் சிறந்ததாக இருக்க வேணும்னு எனக்குள் மனிதர்களின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் புகுத்தினதாகவும் நீ சொன்ன. ஏன், இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட உன்னை இந்த உலகத்தின் அரியாசனத்தில் அமர்த்தப் போற கார்டியன் ஏஞ்சல்னு என்னை வரவேற்றாய். அப்படி இருக்க இப்படித் திடீர்னு என்னுடைய திறமையையும் சக்தியையும் குறைச்சு அளவிட்டுவிட்டாயே டேனியல்..” என்றாள் தோள்கள் இரண்டையும் லேசாகக் குலுக்கியவாறே.

“குறைச்சு அளவிடவில்லை இவ்கெனியா. உன்னைப் படைச்சவன் நான். உன்னைப் பற்றி உன்னை விட எனக்குத் தான் அதிகம் தெரியும். அது தான் உனக்குத் தெரியாத விஷயங்களை உன்னிடம் கூறி உன்னைத் தெளிவுப்படுத்தினேன்.”

“சரி, என்னையே குறைந்த நாட்களில் படைத்ததினால் எனக்குப் பெரும் சக்தி இல்லைன்னு சொல்லிட்ட, ஆனால் இந்த ஃபேபியோவை நீ வெகு சில நாட்களுக்குள் தான் உருவாக்கியிருப்பாய் போல இருக்கு.. அப்படின்னா இவன் மட்டும் என்ன என்னை விட சக்தி வாய்ந்தவனா?”

“இவன் உன்னை மாதிரி இல்லை இவ்கெனியா.. மாயனை உருவாக்கிக் கொண்டிருக்கும் போதே அவனைப் போல் பல சைபோர்க்குகளை உருவாக்கும் வேலைகளையும் துவங்கினேன். அதில் ஒரு சைபோர்க்கைத் தேர்ந்தெடுத்து சில மாறுதல்களைச் செய்ததில் தான் நீ உருவாகினாய். ஆனால் ஃபேபியோ உன்னைப் போல் அல்ல. உன்னையும் விடப் பல மடங்கு சக்தி வாய்ந்தவன். உடலில் மட்டும் அல்ல, புத்தியிலும். ஆனால் இவனுக்குள் நான் எந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் புகுத்தவில்லை. அதனால் இவனுக்குச் சிரிக்கவும் தெரியாது, எச்சூழ்நிலையிலும் என்னை எதிர்க்கவும் தெரியாது. நான் சொல்வதை அச்சுப்பிசகாது செய்யும் என் நம்பிக்கைக்குரிய படைப்பு இவன்.”

கூறியவாறே ஃபேபியோவை நோக்கித் திரும்ப, டேனியலின் எண்ணம் புரிந்தவனாய் ‘Fabio‘ என்ற நாமத்தினால் அழைக்கப்பட்ட அந்தப் புதுச் சைபோர்க் அவனிடம் ஒரு சிறு கணினியைக் கொடுக்க, அதில் பகிரப்பட்ட விஷயங்களைப் பார்த்த டேனியலிற்குப் புலப்பட்டுப் போனது, இவ்கெனியாவின் திட்டம்.

'நன்றியின்மை []ingratitude], அடிபணிதல் [submissive] என்ற உணர்ச்சிகளை எல்லாம் அழித்துவிட்டுத்தான் உன்னைச் சந்திக்க அவள் கிளம்பியிருக்கின்றாள் டேனியல்' என்பதையும் தன் எஜமானனிடம் இரகசியமாகத் தெரியப்படுத்தினான் ஃபேபியோ.

ஆக, நான் தான் இவளை உருவாக்கியவன் என்ற நன்றியையும், என் கட்டளைகளுக்கு அடிபணிந்ததாக வேண்டும் என்ற உணர்வையும் இவளது மூளையில் இருந்து அகற்றிவிட்டாள்.

விநாடிகளுக்குள் டேனியலின் புத்தி திட்டங்களைத் தீட்ட ஆரம்பிக்க, கிடுகிடுவெனத் தன்னைச் சுற்றிலும் கண்ணாடியைப் போன்ற திரைகளை [hologram] உயிர்ப்பித்தவன் அதனில் எண்களையும் வடிவங்களையும் உருவாக்க, அவனது வேகத்தையும் முக மாறுதல்களையும் கண்ட இவ்கெனியா மேஜையில் இருந்து படீரென்று குதித்திறங்க, கடலுக்கடியில் டேனியலின் ஆராய்ச்சி மையத்தில் ஒரு பெரும் யுத்தம் துவங்குவதற்கு ஆயத்த அறிகுறிகள் தென்பட ஆரம்பித்தது.

**************************************************************

லெவினின் 'லெவின் சயின்ஸ் பார்க்' நிறுவனத்திற்குச் சொந்தமான ஆராய்ச்சி நிலையம்.

டேனியலுக்கும் இவ்கெனியாவிற்கும் வார்த்தை போர்கள் நடந்து கொண்டிருந்த அதே வேளை, ஜீவனைத் தனது ஆய்வகத்திற்குள் கூட்டிச் சென்ற லெவின் அவனை ஆய்வு படுக்கை இருக்கும் அறைக்குள் அழைத்துச் செல்ல முற்பட, அதுவரை அமைதியாக அஹானாவுடன் நின்றிருந்த ஜீவன் இப்பொழுது மறுக்க ஆரம்பித்தான்.

“இதில் எனக்கு விருப்பம் இல்லை லெவின். நான் இங்கேயே இருந்துடறதா முடிவு செய்துட்டேன். என்னால் அஹானாவை இங்க விட்டுட்டுப் போக முடியாது.”

“ம்ப்ச்.. என்ன ஜீவன் இது? எத்தனை முறை எடுத்துச் சொல்லி உங்களைக் கூட்டிட்டு வந்தேன். உங்களால் இங்க இருக்க முடியாது ஜீவன். லெவின் சொல்றதைக் கேளுங்க. ப்ளீஸ், உள்ளப் போய்ப் படுங்க.”

“ஏன் முடியாது அஹானா? இவ்வளவு நாள் நான் இதே உலகத்தில் தானே இருந்தேன். எனக்கு இதுவரை என்ன ஆபத்து வந்துடுச்சு, இப்போ வருவதற்கு?”

“பிடிவாதம் பிடிக்காதீங்க. இவ்வளவு நாள் நீங்க மறைஞ்சிருந்தீங்க. அதனால் யாராலேயும் உங்களைக் கண்டுப்பிடிக்க முடியலை, ஆனால் இனியும் அப்படியே இருக்க முடியுமா?”

“அப்ப என்னை உங்களைப் போல் மாத்திடுங்க.”

"எங்களைப் போலா?"

"ஆமாம், நீங்க எல்லாம் பிறவியில் மனிதர்களாக இருந்தாலும் இந்த உலகத்திற்கு ஏற்றவாறு உங்க உடம்பு முழுவதையும் ப்ரோக்கிராம் செய்து வச்சிருக்கீங்க, இல்லையா? அதே மாதிரி என் உடலையும் செய்துடுங்க. உங்க மூளைகள் எப்படி இயந்திரங்களோட இணைஞ்சிருக்குதோ, அதே போல் என்னுடைய மூளையையும் இணைச்சிடுங்க.."

“ம்ப்ச், அதுவும் முடியாதுன்னு சொல்லிருக்கோமே..”

"பரவாயில்லை, இப்போ செய்யுங்க.."

“முடியாது ஜீவன். உங்க உலகத்துக்கும் எங்க உலகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்குங்கிறதை, உங்க உடலை முதன் முதலா பரிசோதிச்ச அன்னைக்கே கண்டு பிடிச்சிட்டோம். உங்களுடைய உடம்பில் உள்ள சில organs [உறுப்புகள்] எங்க உடம்பில் இல்லை.. எங்க உடம்பில் உள்ள சில organs உங்க உடம்பில் இல்லை. அதனால் தான் உங்களை மாதிரி வேற்று கிரகவாசிகளை வைத்து செஞ்ச எல்லா ஆராய்சிகளும் தோல்வியுற்று, அந்த ஏலியன்ஸ் எல்லாம் இறந்துப் போயிருக்காங்க.. நீங்க இங்க இருப்பது தெரிஞ்சிடுச்சுன்னா எங்க அரசாங்கம் உங்களை எங்களிடம் இருந்து எடுத்துக் கொண்டு போய்விடும்.. பிறகு ஆராய்ச்சிங்கிற பேரில் உங்கள் உயிரை எடுக்கவும் அவங்க தயங்க மாட்டாங்கன்னு எத்தனை முறை சொல்றது?”

“சரி, இப்போ லெவின் செய்யப் போறதில் மட்டும் நான் சாக மாட்டேன்னு என்ன நிச்சயம்?”

இருவரின் விவாதங்களையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த லெவினிற்கு ஜீவன் இந்த ஆராய்ச்சியினை மறுப்பதற்கான காரணம் புரியாமல் இல்லை.

அஹானாவின் மீது தீராத காதல் கொண்டுள்ள அவனது இதயம் அவளை விட்டு பிரிய ஒப்பவில்லை!

இன்னமும் அஹானாவைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தும், எந்நேரம் வேண்டுமானாலும் டேனியல் அவளைக் கடத்திக் கொண்டு போய் விடலாம் என்ற அபாயமும் இருப்பதால், இந்தச் சில மாதங்களாக அவளைவிட்டு ஒரு கணம் கூடப் பிரிய மறுத்தவன் அவன்.

இப்பொழுது நிரந்தரமாக அவளைத் தனித்துவிட்டு நீ மட்டும் சென்றுவிடு என்று கூறினால் அவன் எவ்வாறு சம்மதிப்பான்?

ஆயினும் வேறு வழி?

“நீங்க சாகமாட்டீங்க ஜீவன். ஏன்னா நான் உங்களுடைய உடலில் எந்த மாற்றமும் கொண்டு வரப் போறதில்லை. ஆனால் உங்களை உங்க உலகத்துக்குத் திருப்பி அனுப்புகின்ற ப்ராஸசை மட்டும் தான் நான் செய்யப் போறேன்..”

“எப்படி லெவின் அது மட்டும் முடியும்?”

வினவியவன் குழப்பத்துடன் பார்க்க, ஒரு அங்குலத்திற்கும் குறைவான அளவில் செய்யப்பட்டிருந்த கணினியைத் தன் கையில் எடுத்த லெவின் அதனில் சில நுண்ணியப் பட்டன்களை அழுத்தினார்.

அவரது விரல்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஜீவன் தனக்கு அருகில் கேட்ட சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர, அவர்களின் முன் அது வரை அணைந்திருந்த திரை ஒன்று உயிர்பெற்று அதில் விசித்திரமான பொருள் ஒன்று காட்சியாக ஒளிர்ந்தது.

“இது என்ன லெவின்?”

“ஜீவன், இது தான் எங்களது கண்டுபிடிப்பு. நீங்க போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு இந்தப் பொருள் உங்களைக் கொண்டு போய்ச் சேர்த்துடுங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.”

“என்னது நம்பிக்கையா? அப்படின்னா இதை நீங்க இதுக்கு முன்னாடி டெஸ்ட் பண்ணினதே இல்லையா?

“Yes, we have done the tests with robots..”

[ஆம், ரோபோக்கள் மூலம் சோதனைகளைச் செய்துள்ளோம்.]

"அந்த ரோபோக்கள் என்ன ஆனது? வேறு உலகத்திற்குப் போனார்களா?"

"வேறு உலகத்திற்குச் சென்று பிறகு அந்த ரோபோக்கள் எங்களிடம் திரும்பி வருவதற்கான ப்ரோக்ராம்கள் செய்யப்பட்ட டெஸ்ட் அது."

“அதன் பலன்?”

“நாங்க அனுப்பிய இயந்திர மனிதர்கள் எங்களது திட்டத்தின் படி ஒரு நாள் கழித்துத் திரும்பி வந்தார்கள்.. வேறு பிரபஞ்சங்கள் இருக்கு, அதில் மனிதர்கள் வாழும் உலகங்களும் இருக்குன்னும், அதற்கான சாட்சியங்களையும் பொருட்களையும் எங்களிடம் எடுத்து வந்தார்கள்.”

{அதைத்தான் நாம் பறக்கும் தட்டு, ufo என்று கூறுகின்றோமோ ;-)}

"சரி, ரோபோக்களை வச்சி நீங்க செய்த டெஸ்ட் சக்ஸஸ் ஆகியிருக்கு.. ஆனால் மனிதர்களை வச்சு நீங்க டெஸ்ட் பண்ணலை, அப்படித்தானே?"

"யெஸ், எங்களுக்கு அதற்கான அனுமதி கிடைக்கலை.."

அனுபவம் வாய்ந்த விஞ்ஞானியாக மட்டுமே இப்பொழுது பேசிக் கொண்டிருப்பவரிடம் இதற்கு மேல் என்ன கேட்பது என்று ஜீவனுக்குப் புரியவில்லை.

ஆனால் இதற்கு மேல் விவாதிப்பதற்கான அவகாசமும் உங்களுக்கு இல்லை என்பது போல் அவர்கள் இருந்த ஆராய்ச்சி மையத்தின் கதவுகள் படபடவெனத் தட்டப்பட்டன.

“Jeevan, come on. We are running out of time..”

சிறிது சத்தமாகவே கத்தியவராய் அவனை வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் அழைத்துச் சென்றவர் அவனைப் படுக்க வைத்தவராகச் சடுதியில் தூக்கத்தில் ஆழ்த்த, அடுத்தச் சில நிமிடங்களில் ஜீவனின் மூளை மற்றும் உடலின் மற்ற பாகங்களில் அதுவரை பொருத்தப்பட்டிருந்த சிப்ஸ் (chips) அகற்றப்பட்டன.

அதனில், அவன் இந்தப் பிரபஞ்சத்தில் நுழைந்த அன்று மருத்துவமனையில் அவனுக்குள் புகுத்தப்பட்டு, பிறகு லெவினின் புத்திசாலித்தனத்தால் செயலிழக்கச் செய்யப்பட்ட சிப்ஸ், தங்களின் மொழியைக் கூட அவன் அறிந்துக் கொள்வதற்காக அவர்கள் புகுத்தியிருந்த ப்ரோக்ராம்கள் என்று அனைத்துமே அழிக்கப்பட்டன.

இக்கணம் ஜீவன் என்ற நாமம் தரிக்கப்பட்ட அந்த மனிதன் நம் பூமியில் எவ்வாறு உலா வந்து கொண்டிருந்தானோ, அதே உருவத்தில், எள்ளளவும் மாற்றம் இல்லாத ஒரு உடலுடன் படுத்துக் கிடந்தான்.

அவனை நன்றாகப் பரிசோத்தவராய் நிமிடங்கள் சில கழித்துத் துயிலில் இருந்து அவனை எழுப்பிய லெவின் விடுவிடுவென்று மற்றொரு அறைக்கு அழைத்துச் செல்ல, அங்கு அவன் பார்த்த பொருளைக் கண்டு தலை சுற்றிப் போனது.

“லெ..லெ..லெவின்.. இது..”

தடுமாறியவாறே கூறியவன் அறைக்குள் நுழைந்த வேகத்தில் இரு அடிகள் பின்னால் எடுத்து வைத்து நகர்ந்ததில், தனக்கு வெகு அருகாமையில் தொடர்ந்து வந்து கொண்டிருந்த அஹானாவின் மீது மோதி நின்றான்.

அவனது வேகத்தில் தடுமாறியவளாய் அவளும் கீழே விழப் போக, அவளை விழவொட்டாது இறுக்கிப் பிடித்தவனின் அழுத்தமான பிடியே கூறியது, உன்னை விட்டு நான் போகப் போவதில்லை என்று.

இருவரின் நடவடிக்கைகளையும், பார்வை பரிமாற்றங்களையும் கண்டு நொந்துப் போனவராய் லெவின் நெடு மூச்சு விட, அவரின் சத்தத்தில் சுதாரித்த ஜீவன் அஹானாவை விட்டு சற்று நகர்ந்தவன், "சாரி, நீங்க சொல்லுங்க லெவின்.." என்றான் கம்மியக் குரலில்.

“இது நோயலின் விஞ்ஞானிகள் டீம் கண்டுப்பிடித்த காஸ்மோ கேப்ஸ்யூல் [Cosmo-capsule]. இதைத் தான் கொஞ்ச நேரத்திற்கு முன் நீங்க திரையில் பார்த்தீங்க..”

கூறியவர் அவனது கரத்தைப் பற்றி உருண்டை வடிவத்தில் இருந்த அந்த மின்கலத்திற்கு அழைத்துச் செல்ல, ஜீவனின் நாடி நரம்பெல்லாம் பயம் கவ்வியது.

அதற்குக் காரணம் இப்பொழுது அவன் சுத்தமான மனிதன் ஆயிற்றே!

எத்தனை அதிசயங்களை, எண்ணற்ற அதிர்ச்சிகளை, கனவிலும் காணாத விஞ்ஞான வளர்ச்சிகளைக் கடந்த சில மாதங்களாக அவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

ஆயினும் இப்பொழுது அவனது கண்களுக்கு முன் விரிந்து கொண்டிருக்கும் காட்சியானது, அவன் இந்நாள் வரை இந்த உலகத்தில் கண்டிருந்த விஷயங்கள் அனைத்தையும் மிஞ்சிவிட்டது.

“உங்களுடைய பயம் எனக்குப் புரியுது ஜீவன். இது என்னன்னு முதலில் உங்களுக்கு விளக்கம் கொடுத்துடுறேன். இது தான் நோயலின் ‘Elyot Orb’.. அதாவது வடிவங்களிலேயே [shapes] குழாய்கள் தான் அதிக வலிமையான வடிவங்களில் ஒன்றாகும், அதே போல் மிகவும் சக்திப் படைத்தது கார்பன். ஆகக் கார்பன் என்ற வலுவான பொருளைக் கொண்டு ஒரு குழாயை உருவாக்கினால், அது ஒரு அழியாத பொருளாக உருவாகும். (நம்பமுடியாத அளவிற்குச் சிறியது நேனோ -> 0.000000001 மீட்டர்.) பில்லியன் கணக்கான கார்பன் நேனோ குழாய்களைக் கொண்டு இரண்டு பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய ஒரு விண்கலத்தை நோயல் அவரது துணை விஞ்ஞானிகளைக் கொண்டு உருவாக்கியிருந்தார். அதற்குக் காரணம் கார்பன் நேனோ வகைகளைக் கொண்டு உருவாக்கப்படும் விண்கலத்தின் எடை வெகு குறைந்தளவில் இருக்கும், ஆனாலும் மிகவும் வலிமையானது. அதே போல் ஒரு நட்சத்திரத்தின் ஒரு விநாடி ஆற்றலைப் பெற்றால் எங்களுடைய இந்த முழுக் கிரகத்திற்குமான ஆற்றலைப் பெற முடியும். [one second of stars energy could power the whole planet until we die.] ஆகக் கார்பன் நேனோ குழாய்களைக் கொண்டு அமைக்கப்பட்ட விண்கலத்தில் சென்று இந்த ஆராய்ச்சிக்குத் தேவையான அளவிற்கான ஆற்றலை மட்டும் பெற்று வந்து, அந்த ஆற்றலைக் கொண்டு இயங்கும் 'எலியட் ஆர்ப்..' என்னும் இந்த விண்கலத்தை உருவாக்கினார் நோயல்.. இந்த விண்கலத்திற்குத் தேவையான ஆற்றல் இப்போ இதில் இருக்கு, இது உங்களை உங்க கிரகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும்.."

"என்னுடைய கிரகத்திற்கா? அது என்ன கிரகம்? அது எங்க இருக்குன்னு உங்களால் கண்டு பிடிக்க முடிஞ்சதா?"

"முழுசா எங்களால் முடியலை ஜீவன், ஆனால் உங்களைப் போல் மனிதர்கள் சிலர் இங்கு வந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா? அவர்களை வைத்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள். அப்போ தான் சில உண்மைகள் தெரிய வந்தது.. இங்கு இருந்து பல மைல்கள் தொலைவில் [May be 100 light years] உங்களைப் போன்றவர்கள் வாழும் கிரகம் இருக்கலாம் என்ற விஷயம் தான் அது. அங்குத் தான் இப்பொழுது உங்களை அனுப்பப் போகின்றேன்."

"இதை ஏன் முன்னாடியே என்கிட்ட சொல்லலை?"

"அந்த ஆராய்ச்சிகளை நாங்க செய்யலை ஜீவன்.. வேறு சில விஞ்ஞானிகள் செய்தாங்க.. எங்களுடைய அரசாங்கத்திற்குத் தெரியாமல் அவர்களிடம் இருந்து இந்த விஷயங்களை வாங்குவதற்கு எனக்கு இவ்வளவு நாட்கள் எடுத்துக் கொண்டது."

தனக்காக இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அவரிடம் இதற்கு மேல் கேள்விக் கேட்பதற்கு மட்டுமல்ல, இவர் செய்து கொண்டிருக்கும் இந்த இரகசிய ஆராய்ச்சி வெளியில் தெரிந்தால் இவரது உயிருக்கு நிச்சயம் ஆபத்து என்று தெரிந்தும், நோயல் மற்றும் ஹில்டனின் அகால மரணங்களைக் கண்டும் தன்னைக் காப்பாற்றுவதற்கு முயற்சிகள் எடுப்பவரை இதற்கு மேல் மறுப்பது அவமதிப்பது போல் ஆகும் என்றும் உணர்ந்தவனாய் அமைதியாய் லெவின் சொல்வதற்குப் பணிய ஆரம்பித்தான் ஜீவன்.

"இதுல ஏறுங்க ஜீவன்.."

"ஒரே ஒரு கேள்வி மட்டும் லெவின், ப்ளீஸ்.."

"ம்ம்ம்.. சீக்கிரம் கேளுங்க.."

"லெவின், நீங்க சொல்ற கிரகத்திற்கு நான் போய்ச் சேர்வதற்குள் என் ஆயுள் முடிந்து பல மில்லியன் ஆண்டுகள் ஆகி இருக்கும்னுத் தோணுதே.. நான் எப்போ இங்க வந்தேனோ அதே போல் நிச்சயமாய் எங்களுடைய உலகம் இருக்கப் போவதில்லை. அப்படின்னா இப்போ நான் அங்க போய் என்ன பயன்?"

"யெஸ், நீங்க சொல்றது கரெக்ட் தான்.. அதற்குத் தான் இந்த எலியட் ஆர்ப். அதி வேகமாகச் செல்லும் விண்கலம் ஒன்று தேவைன்னு முடிவெடுத்தக் காரணத்தினால் தான் கார்பன் நேனோடியூபினைக் கொண்டு இந்த விண்கலத்தையே செய்திருக்கார் நோயல். இப்போ இந்த எலியட் ஆர்பிற்குத் தேவையான ஆற்றலையும் சக்தியையும் நான் நட்சத்திரத்தில் இருந்து எடுத்து வந்த எனர்ஜியைக் கொடுத்திருக்கேன்.. இந்த ஆர்ப் உங்களை வார்ம் ஹோலின் வழியாக நீங்கள் சேர வேண்டிய கிரகத்திற்குக் கொண்டு போய்ச் சேர்க்கும். ஆனால் பல மில்லியன் ஆண்டுகள் கழித்து அல்ல, இன்னும் சில மணி நேரங்களிலேயே..”

இது எப்படிச் சாத்தியம்?

ஆனால் சாத்தியப்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன, அல்லவா?

அவரது பேச்சினைக் கேட்டுக் குழப்பம் அடைந்தானா அல்லது தெளிவடைந்தானா என்று அவனுக்கே புரியாத ஒரு சூழ்நிலையில் இருந்தான் ஜீவன்.

ஏனெனில் அவனைப் பொருத்தவரை அது வெறும் அனுமானம் தான்.

ஆனால் அதே சமயம் மருத்துவமனையில் அவன் கிடந்த நேரத்தில், 'உங்களின் உடலில் காயங்களோடு நீங்கள் எங்களது நடைபாதையில் கிடந்தீர்கள். அதனில் உடல் காயங்களை எங்களால் உடனடியாகச் சரி செய்ய முடிந்தது, ஆனால் தலையில் பட்ட காயத்தைச் சரி செய்வதற்குத் தான் சில நாட்கள் ஆனது.' என்று மருத்துவர்கள் கூறியது இப்பொழுது அவனது எண்ணங்களில் தோன்றியது.

அப்படி என்றால் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் என் உடம்பில் பட்ட அடிகளுடனா நான் இந்த உலகத்திற்குள் வந்திருக்க முடியும்? நிச்சயம் முடியாது..

ஆக, என் உலகில் எனக்கு ஏதோ விபத்து நடந்திருக்கின்றது, அது நடந்து சில மணி நேரங்களுக்கு உள்ளாகவே நான் இந்தப் பிரபஞ்சத்திற்குள் புகுந்திருக்க வேண்டும்.

இப்பொழுது லெவினின் வார்த்தைகள் ஜீவனுக்குப் புரிய ஆரம்பித்தது.

விநாடிகள் நிமிடங்களாக மாற, அவர்கள் இருந்த அறைக்கு வெளியே சிறிது தொலைவில் திடுமெனச் சப்தம் கேட்டதில் கலக்கம் அடைந்தவராய், "Jeevan, come on.. " என்று அலறிய லெவினிற்கு ஒப்புதலாய் தலையசைத்தவன் அந்த இயந்திரத்திற்குள் ஏறும் முன், சொல்லி வைத்தார் போன்று அந்த ஆராய்ச்சி மையத்தின் வெளிவாயில் கதவு படீரென்று உடைக்கப்பட்டது.

உடைத்து உள்ளே நுழைந்தது இவ்கெனியா.

*******************

சில மணி நேரங்களுக்கு முன்.

டேனியலின் கடல் இல்லத்தில், அவனது ஆராய்ச்சி மையத்திற்குள்.

'ஆக, இவள் தனக்கு வேண்டிய எதிர்மறை குணங்களை வைத்துக் கொண்டு, மீதம் இருக்கும் நல்ல குணாதிசயங்களிலும் நற்பண்புகளிலும் சிலவற்றை அழித்துவிட்டுத்தான் இங்கு வந்திருக்கின்றாள்.'

'அப்படி என்றால் இவள் இப்பொழுது ஏறக்குறைய ஒரு கொடிய மிருகத்தினையும் இயந்திரத்தையும் இணைத்த ஒரு கலவை! இவள் எனது காவல் தேவதை அல்ல.. என்னை அழிக்க வந்திருக்கும் இயந்திர மிருகம். இவள் என்னை அழிப்பதற்கு முன் நான் இவளை அழித்துவிட வேண்டும்.'

இவ்கெனியாவை மிகத்தவறாக முட்டாள்தனமாகக் கணித்து முடித்த டேனியல், அவளை அழிக்கும் வகையைத் தேர்ந்தெடுத்தவன் அந்த அறையின் ஒரு பக்கம் வைக்கப்பட்டிருந்த கணினியை நோக்கி ஓட, அவனது திட்டத்தைப் புரிந்துக் கொண்டவளாக அமர்ந்திருந்த மேஜையில் இருந்து குதித்து இறங்கிய இவ்கெனியாவின் முதல் பழியே, டேனியல் மிகவும் நம்பியிருந்த அவனது புதுச் சைபோர்க் ஃபேபியோ தான்.

தன்னைத் தான் அவள் முதலில் அழிக்க முற்படுவாள் என்று எண்ணியிருந்த டேனியல் ஃபேபியோவின் சத்தம் கேட்டு அதிர்ந்தவனாய் திரும்பி பார்த்தான்.

அவனது அதிர்ச்சியை இரசித்தவளாய் மெல்லிய புன்னகையுடன் நிதானமாக டேனியலை நோக்கி நடந்த இவ்கெனியா அவனை நெருங்க முற்படுவதற்குள், எரும்பு புற்றில் இருந்து விறுவிறுவென்று வெளி வரும் எரும்புக்கூட்டத்தைப் போன்று தன் பாதுகாப்புக்கு என்று ஆதிகாலம் முதல் டேனியல் உருவாக்கியிருந்த அனைத்து இயந்திர மனிதர்களும், சைபோர்க்குகளும் அந்த அறைக்குள் நுழைந்தன.

இதனை ஏற்கனவே எதிர்பார்த்தது போல் விநாடிக்கும் குறைவான நேரத்தில், தான் முன்னரே திட்டமிட்டுக் கொண்டு வந்திருந்த, அவளது இடது கையில் பதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய கருவியில் எதனையோ தட்டியதில், கற்சிலைப் போல் அசையாது நின்று போனான் டேனியல் என்ற அந்த விஞ்ஞானி.

மனிதனாய்ப் பிறந்திருந்தாலும் அவனது மூளையும் ஒரு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது தானே.

அந்த இயந்திரத்தின் நிரலாக்க குறியீடுகளை நன்றாக அறிந்திருந்தவள், அம்மனிதனை செயலிழக்கச் செய்யும் வித்தையைக் கண்டறிந்திருந்தாள்.

ஆனால் அவன் அவ்வாறு நிற்கப் போவது ஒரு சில நொடிகளே. அதற்குள் அவள் மற்ற சைபோர்க்குகளை அழித்திருக்க வேண்டும்.

அடுத்த விநாடி அங்கு ஒரு பெரும் யுத்தம் நிகழ்ந்தது.

'நான் யாருக்கும் சளைத்தவன் அல்ல. ஈடு இணையற்ற மாபெரும் அறிவியல் முன்னேற்றத்தின் தொடக்கம்.. என்னை மீறிய விஞ்ஞானி இந்தப் பிரபஞ்சத்திலேயே கிடையாது.' என்று பெருமை பட்டுக் கொள்வதெற்கென்றே டேனியல் உருவாக்கிய இவ்கெனியா, அன்று, அக்கணம் அவளது எஜமானனின் திறமையை நன்றாகவே நிரூபித்தாள்.

அனைத்து இயந்திர மனிதர்களையும், சைபோர்க்குகளையும் ஒரு சில கணங்களிலேயே அடித்து நொறுக்கியிருந்தவள் அசையாது நின்றிருக்கும் டேனியலை நோக்கி வந்த நேரம், அவனும் சுயநினைவிற்கு வந்திருந்தான்.

சுற்றும் முற்றும் தன் விழிகளால் துலாவியவன் ஆங்காங்கு உதிரிப் பாகங்களாகச் சிதறிக் கிடக்கும் சைபோர்க்குகளைக் கண்டு பீதியடைந்தவனாய் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் நோக்கோடு ஆய்வகத்தின் வாயிலை நோக்கி ஓட ஆரம்பிக்க, மின்னலையும் விட அதிவிரைவாய் அவன் முன் வந்து நின்ற இவ்கெனியாவின் வேகத்தில் ஒரே நுண்ணொடியில் தன் துணிவை இழந்தான் டேனியல் ஆலிவர்.

அவனது கழுத்தினை இலகுவாகப் பிடித்தவள் அதனைத் திருக ஆரம்பிக்க, வலியால் துடித்தவனாய் திக்கித் திணறியவாறே, “ஏன் இவ்கெனியா? எதற்கு?” என்று வேதனையுடன் வினவ,

மெல்லிய புன்சிரிப்பைச் சிந்தியவள்,

"இந்த உலகத்தின் அரியாசனத்தில் அமரப் போவதாக நீ சொல்லிட்டு இருந்த டேனியல்.. ஆனால் நீயே இல்லை என்றால்? பிறகு அந்த அரியாசனத்தில் அமரப் போவது யார்? நானாகத் தானே இருக்கும்.. புரியலையா? இனி இந்த உலகத்தில் உருவாகும் அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவி நானே. என்னைக் கொண்டு தான் இனி இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் பிறக்க வேண்டும்.. அவர்களைக் கொண்டு என் இராணுவத்தை நான் அமைக்கப் போகின்றேன்.. அவர்களைக் கொண்டு இந்தக் கிரகத்தையே ஆளப் போவது நான்.. இந்த இவ்கெனியா தான்.." எனக் கம்பீரமாக உரைக்க,

அவளது உடலுக்குள் செயற்கை கர்ப்பப் பையை வைத்தது எவ்வளவு பெரிய தவறு என்று உணரத் துவங்கும் நொடி டேனியலின் உயிர் பிரிந்தது.

அவள் சொல்லாமல் விட்ட வார்த்தைகளை அவன் கேட்க இயவில்லை.

'ஆனால் உன்னைப் போல் தவறான வழியில் நான் இந்தக் கிரகத்தை ஆட்சி செய்யப் போவது அல்ல டேனியல்!'

இச்சொற்களை அறியாமலேயே அந்தக் கொடிய விஞ்ஞானி மாண்டு போனான்.

***********************************************

"ஐயோ! என்ன சத்தம் அது?"

அரண்டுப் போனவளாய் அஹானா கூக்குரல் இடும் நேரம், லெவினின் ஆய்வகக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த இவ்கெனியாவின் கண்கள் நான்கு புறமும் அலைந்தன.

"ஷ்ஷ்ஷ்.. அஹானா.. எதுவும் பேசாதே.." என்று அவளை மௌனமாய் இருக்குமாறுக் கட்டளையிட்ட லெவின் ஜீவனின் புறம் திரும்பியவராய், “ஜீவன், இனி பேசிட்டு இருக்க நேரமில்லை.. Get in..” என்று இரகசியக் குரலில் ஆணையிட்டார்.

“லெவின், என்னால் திரும்ப இங்க வர முடியுமான்னுத் தெரியலை. இந்தச் சூழ்நிலையில் அஹானாவைத் தனியா விட்டுட்டு என்னை எப்படிப் போகச் சொல்றீங்க?"

"ஜீவன், புரியாமல் பேசாதீங்க.. அஹானாவை நான் பார்த்துக்கிறேன்.."

"இல்லை லெவின், உங்களால் முடியாது.. என்னை இயந்திர மனிதனா மாற்றுங்க.. வெளியில் இருப்பவங்களை நான் அழிச்சிட்டு பிறகு நீங்க சொல்ற படி கேட்குறேன்.."

லெவினின் பேச்சை மறுத்தவனாய் விதண்டவாதம் செய்து கொண்டிருக்கும் ஜீவனின் கரத்தை இறுக்கப் பற்றிய அஹானா, ஆழ்ந்தக் குரலில், "நோ ஜீவன், அதற்கு எல்லாம் இப்போ நேரம் இல்லை.. தயவு செய்து லெவின் சொல்றதை மட்டும் கேளுங்க.." என்று அழுத்தமாய்க் கூற, என்ன நினைத்தானே சட்டென்று அஹானாவை தன்னை நோக்கி இழுத்தான் ஜீவன்.

“Ahaana, come with me..”

“இல்லை ஜீவன், அவ வர முடியாது..”

“ஏன்?”

“ஜீவன், இந்த உலகத்தில் நீங்க எப்படிக் கஷ்டப்படுறீங்களோ, அதே மாதிரி உங்க உலகத்தில் அஹானா நிச்சயம் கஷ்டப்படுவா.. உங்களுக்கு இங்க இருக்கின்ற ஆபத்து, அங்கே இவளுக்கு இருக்கு..”

“இங்கேயும் இவள் கஷ்டப்படத்தானே போறா. இதோ ஆபத்து வெளியேவே நிற்குதே..”

“இல்லை, இனி இவளுக்கு ஆபத்து இல்லை.. இவ தேர்ந்தெடுத்தப் பாதையினால் தான் இவளுக்கு ஆபத்து வந்ததே. ஐ மீன், இவள் 'சையானிக் ஜெனோமிக் சீக்வென்ஸ்' ஆராய்ச்சியில் உருவாகிய குழந்தையை இவள் சுமந்ததினால் தான் இவளுக்கு ஆபத்து நேர்ந்தது.. ஆனால் இப்போ இவள் அந்தக் கருவை சுமக்கவில்லை.. அதனால் இன்னைக்கு இங்க வந்திருக்கும் ஆபத்து இவளுக்கு இல்லை, உங்களுக்குத் தான்.. உங்களைத் தேடித்தான் அவங்க வந்திருக்காங்க.. அதனால் அஹானாவை நான் பார்த்துக்கிறேன்.. நீங்க கிளம்புங்க..”

ஒரு ஆசானைப் போல் அதிகாரமான தொனியில் கூறியவராய் ஜீவனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று 'எலியட் ஆர்ப்' என்னும் அந்த உருண்டை விண்கலத்திற்குள் அமரச் செய்தவர்,

“ஜீவன் நீங்க ஒண்ணும் செய்ய வேண்டாம், பயமா இருந்தால் கண்களை மட்டும் மூடிக் கொள்ளுங்க. இந்த விண்கலம் உங்களைச் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிடும்..” என்ற மறுவிநாடி அந்த விண்கலத்தின் கதவு மூட ஆரம்பித்தது.

அக்கணம், அந்தக் கடைசி நேரத்தில், இருளறைக்குள் சிறு மெல்லிய கோடு போல் வெளிச்சமாய்த் தெரிந்த அந்த இடைவெளியில் தெரிந்த அஹானாவின் முகம் ஜீவனின் இதயத்தில் அழகாய், அழிக்க முடியாத அளவிற்கு ஆழமாய்ப் பதிந்து போனது.

விழிகளில் இருந்து நீர் மணிகள் இரு கன்னங்களின் வழியாய் வழிய, கண்ணீரோடு அவனைப் பார்த்திருந்தவளை இமைகளைச் சிமிட்டாது கண்ட ஜீவனின் இதயம் வேகமாய்த் துடித்தது.

“உன்னைச் சுற்றி எதிரிகள் இருக்காங்கன்னு தெரிஞ்சும், உன்னை இப்படித் தனியா விட்டுட்டு போற சூழ்நிலையில் என்னைக் கொண்டு வந்து விட்டுட்டியே அஹானா.. ஆனால் உண்மையில் நீ ஏதாவது ஆபத்தில் சிக்கி இருந்தால், கண்டிப்பாக என் உள் மனசு எனக்கு உணர்த்தும். நான் எங்கே இருந்தாலும், அப்போ கண்டிப்பா நான் உன்னைத் தேடி இந்த உலகிற்கு வருவேன் அஹானா.. I swear.. [நான் சத்தியம் செய்கிறேன்]..”

சன்னமான குரலில் முனகியவாறே கண்களை இறுக்க மூடிய ஜீவனைச் சுமந்த 'எலியட் ஆர்ப்' விண்ணை நோக்கி அசுர வேகத்தில் பறந்து மறைந்த நேரம், இவ்கெனியா அந்த அறைக்குள் நுழைந்திருந்தாள்.

“இவ்கெனியா?”

லெவினின் வாய் அவரையும் அறியாது முனுமுனுத்தது.

“பரவாயில்லையே லெவின். அதற்குள் என்னைப் பற்றித் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க..”

செவ்விதழ்களை விரித்து நகைத்தவாறே கூறியவளாய் மெள்ள அடி எடுத்து வைத்த இவ்கெனியா அவர்களை நெருங்க, அவளது மரியாதையான விளிப்பைக் கண்டு லெவின் புருவங்களை உயர்த்தினார் என்றால்,

ஏற்கனவே ஜீவனைப் பிரிந்ததில் தன் உடல் பொருள் ஆவி என்றனைத்தையும் இழந்தது போல் செயலிழந்து நின்றிருந்த அஹானா, இவ்கெனியாவின் பேரெழில் தோற்றத்தையும் அதனில் மிளிர்ந்த புன்சிரிப்பையும் கண்டு அதிர்ந்ததில் நிலைத்தடுமாறிக் கீழே விழுந்தாள்

ஆனால் லெவினோ, அஹானாவோ, ஏன் டேனியலே எதிர்பார்த்திருக்க முடியாத ஒரு விஷயம் அங்கு நிகழ்ந்தது.

தரையில் படீரெனச் சாய்ந்த அஹானாவை சட்டென நெருங்கிய அந்தப் பெண் சைபோர்க் அவளது கரம் பற்றியது.

மெல்ல அவளை எழும்பச் செய்து, பிறகு தடுமாறாது நிற்கவும் வைத்தது.

“என்ன லெவின் பயந்துட்டீங்களா? உங்களைக் கொல்வது என் நோக்கமல்ல. டேனியல் மாதிரியான ஆட்கள் தான் என்னுடைய கோபத்துக்கு இரை. ஆனால் இப்போ டேனியலும் உயிரோடு இல்லை.. அவனைக் கொலை செய்துட்டு தான் நான் இங்க வந்திருக்கேன். அதனால் அவனைப் பற்றியும் இனி நீங்க பயப்பட வேண்டாம். நான் இங்க வந்ததற்கான நோக்கம் இரண்டு.. அதில் முதலாவது ஜீவன்.. அவனை என்னுடன் அழைத்துச் செல்ல இருந்தேன்.. ஆனால் இப்போ இங்கிருந்து விண்கலத்தில் சென்றது அவனாகத்தான் இருக்கும்னு நினைக்கிறேன், ஸோ, என்னுடைய முதல் நோக்கம் தடைபட்டுவிட்டது..

ஆனால் என்னுடைய இரண்டாவது நோக்கம் கண்டிப்பா வெற்றி அடையும்.. அதாவது உங்களுடைய 'சையானிக் ஜெனோமிக் சீக்வென்ஸ்' கண்டுப்பிடிப்பே என்னுடைய ரெண்டாவது நோக்கம். உங்களைப் போன்ற விஞ்ஞானிகளால் மூலம் மரபணுக்கள் மாற்றியமைக்கப்பட்ட ஒன்று அல்லது இரண்டு செயற்கை குழந்தைகளைத் தான் ஒரு சமயத்தில் உருவாக்க முடியும் லெவின்.. ஆனால் இந்த இவ்கெனியாவால் ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் உருவாக்க முடியும்.. அதற்கான சக்தி என்னிடம் இருக்கு.. அதனைத் தாங்கும் சக்திவாய்ந்த கர்ப்பப்பையும் எனக்குள் இருக்கின்றது.. அதனால் இனி இந்த ஆராய்ச்சிகளில் இருந்து நீங்க விலகிடுங்க..” என்றவள் அவளது கைகளில் வைத்திருந்த பொருளைக் காட்ட, லெவினிற்குப் புரிந்து போனது.

பல வருடங்களாக நோயலும் லெவினும் பாதுகாத்து வந்த, 'சையானிக் ஜெனோமிக் சீக்வென்ஸ்' சம்பந்தப்பட்ட ஆய்வறிக்கைகள் மற்றும் விவரங்கள் அடங்கிய கருவி.

ஆக, இதனைக் கொண்டு இவள் விரும்பும் அளவிற்கு மனிதர்களை (மனித சைபோர்க்?) படைக்கப் போகின்றாளா?

அதிர்ச்சியுடன் வியப்பும் கலந்தவராய் அமைதியாய் நிற்க, அவரை மேலும் நெருங்கிய இவ்கெனியா அவரது தோள் மீது ஒரு கரத்தை வைத்து அழுத்தியவாறே,

"ஆனால் என்னால் படைக்கப்படும் மனிதர்களோ, சைபோர்க்குகளோ நிச்சயமாக இந்த உலகிற்கு அழிவைக் கொண்டு வரமாட்டார்கள் லெவின். காரணம், நான் டேனியல் அல்ல.." என்றதில், ஆச்சரியத்தின் உச்சத்தை அடைந்தார் லெவி.

மிருதுவான குரலில் கூறியவள் விடைப்பெறுவது போல் தலையசைத்துச் சைகை செய்துவிட்டு ஆய்வகத்தின் வாயிலை நோக்கி நடக்கத் துவங்கினாள்.

ஒரு பக்கம் தங்களின் ஆராய்சி விவரங்கள் அவளிடம் போய்ச் சேர்ந்துவிட்டதில் வருத்தம் இருந்தாலும், மறுபக்கம் தங்களைக் கொன்று போடாமல் அவள் செல்வதைக் கண்டு குழம்பிப் போயினர் லெவினும் அஹானாவும்.

ஆனால் வாயில் வரை சென்ற இவ்கெனியா சட்டென நின்றவளாய் நிதானமாகத் தலையைத் திரும்ப, நெஞ்சில் மீண்டும் பயம் கவ்வப் பார்த்திருந்த அஹானாவைக் கண்டவள் நட்பாய் கண் சிமிட்டி சென்றாள்.

பாசம் மன்னிப்பு காதல் என்ற நல்ல குணங்களை டேனியலைக் காணச் செல்லும் தன்னிடம் இருந்து தற்காலிகமாக அழித்திருந்தவள், இப்பொழுது அவற்றைச் செயல்படுத்த ஆரம்பித்ததே அவளது நட்பான கண் சிமிட்டலுக்குக் காரணம்.

தன்னையும் அறியாது அவளைக் கண்டு புன்னகைத்த அஹானாவிற்கு ஏனோ இனி தான் அச்சப்பட வேண்டியதில்லை என்பதும், இந்த உலகத்தைப் பாதுகாக்க ஒரு உயிர்(?) ஜனித்துவிட்டது என்பதும் புரிபட, ஆழ இழுத்து மூச்சுவிட்டவளுக்கு ஜீவனின் முகம் தோன்றியது.

ஒரு வேளை ஜீவன் இந்த உலகத்திற்கு வந்திருக்கவில்லை என்றால்? அன்று மாயனால் தான் கொலை செய்யப்பட்டிருப்பது நிஜம்!

ஆக, இன்று அந்த மாயனும் இல்லை.. அவனைப் படைத்த அந்த டேனியலும் உயிரோடு இல்லை.

இவ்கெனியா என்றழைக்கப்படும் இந்தப் பெண் சைபோர்க்கும் இந்த உலகத்தை அழிப்பது அவளது திட்டம் அல்ல, காப்பது தான் அவளது விருப்பம் என்பது போல் பேசிவிட்டுப் போகின்றாள்.

அப்படி என்றால் இந்த உலகைக் காக்கவே ஜீவன் என்ற மனிதன் இங்கு வந்தானா?

அப்படி என்றால் ஜீவனையும் அறியாது இந்த உலகத்தைக் காத்துவிட்டு அவன் சென்றிருக்கின்றானா?

'எலியட் ஆர்ப்' விண்கலத்தின் கதவு மூடும் வரை தன்னையே கண்களை இமைக்காது பார்த்திருந்த அவனது அழகிய வதனம் கண் முன் படர்ந்ததில், மேலும் நீர் துளிகள் சிதறத் துவங்கின, அந்தப் பேதையின் விழிகளில் இருந்து.


It almost feels

Like it was just a dream

All these memories of you and me

Blown away

In the summer breeze

It almost feels like

We just never were

All this time we spent was just a blur

Now it's just me and a melody

So what am I

Supposed to do

'Cause all these plans

We made in the sand

Are through

Without you

I'm on my own

Am I'm gonna be alone

And if it's only

Me, myself and I

Will I be fine?

So far from home

And I just don't know

Am I gonna make it

Brave enough to

Take this road

Out on my own

Looking in the mirrors odyssey

All these choices that I'm caught between

Who I should and who I wanna be

I wanna stand and take this wave

And ride into a brighter day

I'll take each chance and better me

I think that I know what to do

I got all these plans, I'm a one man band it's true

Now I can't lose

Out on my own

Never gonna be alone

As long as I got me, myself and I

I'm doing fine

So far from home

I just don't know

Am I gonna make it

Brave enough to take this road?

Out on my own

Oh oh

Out on my own

Oh oh

Out on my own

And maybe I'm falling on my face

Or maybe I'm landing in my place

And maybe we're a million miles apart

Or maybe we're standing heart to heart

But no matter what

I'm walking

Right off this stage

And never looking back

Looking back to yesterday

No, way

No, way...

I'm on my own!

I'm on my own

Never gonna be alone

As long as I got

Me, myself and I

I'm doing fine

So far from home

But now I know that

I am gonna make it

Brave enough to take this road

Out on my own

Oh oh

Out on my own

Oh oh

Out on my own

It almost feels

Like it was just a dream

All these memories of you and me



ஏனோ கனவு போன்று தோன்றுகிறதே இதமான தென்றலாய் தீண்டிடய நம் நினைவுகளும்.

ஏனோ நாமிருவரும் கானல் காட்சியாய்...

இன்றோ நானோ தனியே சோககீதம் பாடி..

என்ன செய்ய நானும் இனி..

நாம் கட்டிய காதல் கோட்டையோ மணலோடே அதில் நான மட்டும் தனியே..

தனியே தனிமையைத் தழுவினால் நாளை என்னாவேனோ?

கூடை பிரிந்து தொலைவில் நான்..

இவ்வழியைக் கடக்கும் துணிவு எனக்கு வாய்க்கப்பெறுமா?

இந்தப் பயணத்தில் யாரோடு நானும்? யாராக நானுமாக!! இந்தப் புயலை தனியே கடக்கத் துணிந்தேன்...

ஆம் தனியே

இனி இழக்க எதுவுமில்லை..

தன்னம்பிக்கை இருக்கையில் படர்கை துணை எதற்கு?

எனக்கு நான் எனக்காகவே நான்

கூடை விட்டு விலகியும்

என்ன செய்ய எனத் தவித்தபோதும்...

இந்தப் பயணத்தில்

தனியே நான்

தன்னந்தனியாக

மண்ணைக் கவ்வினாலோ அல்லது மண்ணை ஆண்டாலோ

உன்னைவிட்டு தொலைந்தாலோ அல்ல

உன்னுள்ளேயே தொலைந்தாலோ

என்னவாகினும் இப்பயணம் தொடரும்..

கடந்த பாதையைக் கடந்து

நான் நானாக என்னுடன்

முன்னேறிய படியே..

தனிமை இனியில்ல துணையாகத் தூணாக எனக்காக நான் நான் நான்..

எனக்கான நான் இருக்கும்வரை அனைத்தும் சுகமே..

கூடை பிரிந்து பறந்து வந்த போதும்

இனி பயமில்லை தனியே பயணிக்க

தனியே என் துணையே..

ஏனோ கனவு போலத் தோன்றுகிறதே நம் நினைவுகளே..

சிரஞ்சீவிதம்

The Journey of an Immortal

தொடரும்

(அடுத்த உலகத்தில் சந்திப்போம்!)

 

JLine

Moderator
Staff member
ப்ரெண்ட்ஸ்
ஒரு அறிவிப்பு.. I am travelling to India. செப்டம்பர் மாதம் தான் திரும்பி வர முடியும், அது வரை என்னால் சிரஞ்சீவிதத்தைப் பதிவு செய்ய இயலாது.. very sorry. Such a hectic schedule in India this time.
அதுவும் இல்லாமல் இது வரை என்னுடைய எந்தப் புத்தக வெளியீட்டின் போதும் நான் இந்தியாவில் இருந்ததில்லை.. Cover picture, book printing, video making etc எல்லாத்தையும் நான் email, whatsapp இப்படித்தான் monitor செய்ய முடிந்தது. இப்பொழுது இந்தியாவில் இருக்கும் நேரத்தில் அந்த வேளையையும் முடித்துவிடலாம் என்று இருக்கின்றேன். I am very excited to watch the book printing process in person for the first time. :)
ஆகையால் கொஞ்ச நாள் பொறுத்துக்கொள்ளுங்கள்.. செப்டம்பரில் இருந்து சிரஞ்சீவிதத்தைத் துவங்குகின்றேன்.. முடிந்தால் அதற்குள் புத்தகத்தையும் வெளியிட முயற்சிக்கின்றேன், but I cannot promise :)
மீண்டும் september ல் சந்திப்போம்.
Thanks

JB
 

Selvi

Member
Maam, it was very exciting epi. While reading I tot next epi will be soon. But now only September. It's ok ma'am you will be very excited too. Will wait till you are back. Happy journey and safe trip.
 
Omg!!! Ivkenia 🔥🔥🔥
Pawam Ahaana than… 🥺🥺🥺
Next Universe ku pona Amar alais Jeewan Meena va marandhathu pola Ahaana vaiyum maranduduwano????
😞😞😞

Ovvoru Universe la ovvoru soulmates irukkuma avanukku??? Have a safe flight mam ✈️
 

saru

Member
Lovely
Amar back to home
Meendum pala aandugal pinnal Ipo Ahaana va marandu poga vaipiruka parkalam
September hoom
Take care come sooya
Enjoy your holidays
 

Thani

Member
யப்பா..... !படித்து முடத்தும்.... கூட பிரமிப்பு போகல.....
அடிதூள் பதிவு
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top