JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Siranjeevitham - Episode 6

JLine

Moderator
Staff member
சிரஞ்சீவிதம்

அத்தியாயம் - 6

"ப்ரீத்தி, செல்ஃபோன்ல ஃப்ளாஷ் லைட்டை ஆன் பண்ணிக்கோடி, சுத்தமா கண்ணே தெரியலை.."

நடுங்கும் தொனியுடன் மெல்லிய குரலில் கூறும் நிகித்தாவை ஒரு முறைத் திரும்பிப் பார்த்த ப்ரீத்தி தனது அலைபேசியில் ஒளிவிளக்கை உயிர்ப்பித்தவள் சுற்றும் முற்றும் அரண்டுப் போன விழிகளால் துலாவியவாறே நடக்க, மனிதர்கள் நடுமாடும் சூழலோ அறிகுறியோ அங்குத் தென்படாததில் கதிகலங்கிப் போனாள்.

"நிகி, என்னடி கண்ணுக்கு எட்டுன வரைக்கும் யாரையும் காணோம்.. மித்ராவை எங்க வச்சிருக்கான்? அவன் எங்க இருக்கான்? ஒன்னுமே புரியலை, ரொம்பப் பயமா இருக்குடி.."

"ப்ரீத்தி, இதே பாதையில தான் நம்மை அவன் நடந்து வரச் சொல்லிருக்கான்... இந்தப் பாதையும் பல கிலோ மீட்டர் போகுற மாதிரி நீண்டுக்கிட்டே போகுது.. ஆனால் நிச்சயமா இந்தப்பக்கட்டு தான் அவன் எங்கேயோ இருக்கணும், நாமத் திரும்பிப் போனால் அதையும் அவன் கண்டுப்பிடிச்சிடுவான்.. அப்புறம் மித்ராவுக்குத் தான் அது ஆபத்து, அதனால் இப்படியே போ, வேற வழியில்லை.."

நிகித்தாக் கூறி முடிக்கவும் மீண்டும் அவளது அலைபேசி சிணுங்கவும் நேரம் சரியாக இருந்தது.

பனிக் கொட்டும் இரவில் மெல்லிய காற்றில் அசையும் இலை தழைகளின் சத்தத்தையும், நீண்ட கொம்பு கொண்ட வெட்டுக்கிளியும், சிள் வண்டுகளும், சுவர்க்கோழிகளும் அவ்வப்பொழுது எழுப்பும் ஓசைகளையும் தவிர வேறு எதுவும் கேட்காத வேளையில், மெதுவாகவே இருந்தாலும் திடுமெனச் சத்தமிட்ட அலைபேசியின் சத்தத்தில் அலறியவளாய் அலைபேசியைத் தவறவிட்டாள் நிகித்தா.

"ப்ரீத்தி, ஃபோன் கீழ விழுந்துட்டுதுடி.. உன் செல்ஃபோன் லைட்டைக் காமி.. ஃபோனை எடுக்கலைன்னா நாம வரலைன்னு நினைச்சு அவன் மித்ராவை ஏதாவது செஞ்சுடப் போறான்.."

அலறியவளாய் அலைபேசியைத் தேடி தரையெங்கும் துலாவ, ப்ரீத்தி காட்டிய வெளிச்சத்தில் பேசியை எடுத்தவள் மறுவிநாடியே, "நாங்க வந்துட்டு இருக்கோம்.. நீங்க எங்க இருக்கீங்கன்னே தெரியலை.." என்று கூறிய நேரம் வெகுதூரத்தில் புள்ளியாய் சிறுவெளிச்சம் ஒன்று ஆடத் துவங்கியது.

சுற்றிலும் சூழ்ந்திருந்த அந்தகாரம் அடியோடு அமுக்கி மூச்சுத் திணரச் செய்து கொண்டிருந்ததில் ஏற்கனவே பீதியில் எச்சில் கூட விழுங்க மறந்தவர்களாய் நின்றிருந்தவர்களுக்கு, தூரத்தில் அசைந்தாடிய அந்த வெளிச்சம் மிச்சமிருந்த கொஞ்சம் நஞ்சத் தைரியத்தையும் துடைத்தெடுத்துப் போட்டது.

"அப்படியே நடந்து வாங்க, நான் இங்க தான் இருக்கேன்.."

தடித்த குரலில் கூறியவன் மீண்டும் வெளிச்சத்தை அவர்களை நோக்கிக் காட்ட விடுவிடுவென்று நடந்த பெண்களுக்கும் ஏனோ அவர்கள் நெருங்க நெருங்க அந்த வெளிச்சம் அவர்களை விட்டு தொலைவிற்குச் சென்றதுப் போலவே தெரிந்தது.

"ப்ரீத்தி, எனக்கு என்னவோ அவன் நிக்காமல் போயிட்டே இருக்கிற மாதிரி தெரியுது.. எங்கடி போறான்?"

"எனக்கும் அப்படித் தான் தெரியுது நிகி, ரொம்ப முட்டாள்தனம் பண்ணிட்டோமோ? எதுக்கும் ரிசார்ட்ல இருக்குற ரிஷப்ஷனிஸ்ட்கிட்ட சொல்லி போலீஸுக்கு இன்ஃபார்ம் பண்ண சொல்லிருக்கலாமோ?"

"என்ன ப்ரீத்தி அவன் நம்ம என்ன சொல்லி வார்ன் பண்ணினான்? நம்மளை அவன் எங்க இருந்தோ வாட்ச் பண்ணிட்டே தான பேசிட்டு இருந்தான், அப்ப நாம் ரிஷப்ஷன் நோக்கிப் போயிருந்தா அவன் நிச்சயம் மித்ராவை ஏதாவது செய்திருப்பான்.. எத்தனை தடவை இதையே நான் சொல்றதுடி? புரியாதது மாதிரி திரும்பத் திரும்ப அதேயே பேசிட்டு இருக்க.."

சலித்துக் கொண்டவளாய் கூறியவாறே அசட்டுத் துணிவுடன் வேக அடிகள் எடுத்து வைத்த நிகித்தாவை வேறு வழியற்று தொடர்ந்தாள் ப்ரீத்தி.

ஏறக்குறைய அரை மணி நேரம் கழித்து அவர்கள் அடைந்த பகுதியில் தென்பட்டக் காட்சியைக் கண்டதில், ப்ரித்தி கூறியது எவ்வளவு உண்மை என்பது தெளிவாக நிகித்தாவிற்குப் புலப்பட்டது.

ஏனெனில் அவர்களின் வருகைக்காக ஆவலுடன் மதுவை சுமந்த பாட்டிலுடன் கண்கள் பளபளக்க காத்திருந்தது, 'பிரான்னாஸ்' அணியைச் சார்ந்த பிரஷாந்தும் அவனது கூட்டாளிகளும் ஆயிற்றே.

'இவனுங்க எப்படி இங்க?'

இரு பெண்களுக்கும் தோன்றியக் கேள்வியே இது.

ஆனால் இப்போது அதை நினைத்து வருந்தி என்ன செய்வது?

“ஐயோ! என்ன முட்டாள்தனம் பண்ணிட்டோம் நிகி?”

நெஞ்சம் படபடக்க மூச்சுத் தடைப்பட்டது போல் தோன்றியதில் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டவாறே புலம்பிய ப்ரீத்தி நிகித்தாவைப் பார்க்க, அங்கு அவளது நிலைமையோ பார்க்கவே கொடுமையாக இருந்தது.

பிரஷாந்தையும் அவனுக்கருகில் ஏறக்குறைய ஆடையே அணியாத உருவத்தில் கைகளும் வாயும் இறுக்கக்கட்டப்பட்டுத் தன்னுணர்வற்றவளாகக் கீழே கிடத்தப்பட்டிருக்கும் மித்ராவையும் பார்த்ததில் மயக்கத்தைத் தழுவியது போல் தடுமாறி நின்றாள் நிகித்தா.

“இது என்னடிக் கொடுமை? இந்தச் சின்னப் பொண்ண என்ன செஞ்சு வச்சிருக்கானுங்க? இந்த அயோக்கியனுங்க இங்க எப்படி வந்தானுங்க? அதுவும் இவனுங்க கூட இந்தச் சந்தோஷ் எப்படி? கடவுளே, இப்படித் தனியா வந்து இவனுங்கக்கிட்ட மாட்டிக்கிட்டோமே”

செவிப்பறையே கிழிந்துவிடும் அளவிற்கு மனம் அலறிக் கூப்பாடுப் போட்டவளாய் மெல்ல கையை நீட்டியவள் ப்ரீத்தியின் கரத்தை இறுக்கப் பற்ற, கடந்த சில மாதங்களாகத் தன்னை அருவருக்கும் அசூசை நிறைந்த பார்வையைத் தன் மீது வீசிக் கொண்டிருந்த பிரஷாந்தின் முகமும், அதற்கு நேர் மாறாகக் காதலோ நேசமோ கலந்து தன்னை ஆசையுடன் அவ்வப்பொழுது தழுவிச் சென்ற சந்தோஷின் முகமும் நினைவுகளில் படர்ந்ததில் ஏதோ புரிவது போல் இருந்தது ப்ரீத்திக்கு.

இதயம் பல நூறு மடங்கு அதிகரித்துத் துடிக்கத் தன்னைப் பற்றியிருக்கும் நிகித்தாவின் கரத்தை இறுக்கப் பற்றியவளாக நடுங்கும் மேனியுடன் நிற்க, பெண்கள் அஞ்சியது போல் அங்கு ஒரு கொடூரம் நிலவத் துவங்கியது.

மையிருட்டையும் கிழித்துக் கொண்டு லேசாக எரிந்து கொண்டிருந்த விளக்கொளியில் தன்னை நோக்கி நடந்து வரும் சந்தோஷைக் கண்டு, மரணிக்கும் தருவாயில் உருவாகும் அச்சுறுத்தும் திகில் பெண்கள் இருவர் உள்ளத்திலும் தோன்றியது.

“ப்..ப்..ப்ரீத்தி..”

“நிகி, அவன் வராண்டி.. இப்ப என்ன செய்யறது?”

கீழே சொரனையற்று கிடக்கும் மித்ராவின் அவல நிலை பெண்கள் அங்கு இருந்து தப்பித்துச் செல்வதற்குப் பெரும் தடையாக இருந்தது.

அதே சமயம் இந்த அகோர மனிதர்களிடம் சிக்கினால் நம் நிலை என்ன ஆவது என்ற பயமுறுத்தும் கேள்வியும் எழும்ப, பெரும் திகிலில் பெண்கள் இருவரின் கண்களிலும் சடசடவென நீர் வழியத் துவங்கின.

“சந்தோஷ். ப்ளீஸ் எங்களைப் போக விடு..”

சத்தமே வராத அளவிற்குக் கெஞ்சும் ப்ரீத்தியை எவ்வித உணர்வினையும் முகத்தில் காட்டாது நெருங்கிய சந்தோஷ் அவளின் கைப்பற்றினான்.

மரணித்தது போன்று உடல் சில்லிட அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்த நிகித்தாவின் வாயும் அவள் திமிற திமிற இறுக்கக் கட்டப்பட, பிரஷாந்தின் வெறிப் பார்வையையும் அவனது கூட்டாளிகளின் வெற்றிப் பார்வையையும் சகித்துக் கொண்டவாறே அவர்களின் முன் ப்ரீத்தியை பலவந்தப் படுத்தினான் சந்தோஷ்.

"இப்ப என்னை நம்புறீங்களா?"

ப்ரீத்தியை சீரழித்து முடித்தவனாக நெற்றி வியர்வையைத் துடைத்தவாறே பிரஷாந்தின் கூட்டாளிகளைப் பார்த்து கேட்க, அவனைக் கண்டு புன்னகைத்தவர்களின் நாடி நரம்பு அனைத்திலும் கலந்திருந்த மதுவின் போதை, வழக்கம் போல் கழுதைப் புலிகளின் வேட்கையை அவர்களுக்குள்ளும் ஊடுருவச் செய்தது.

இவ்வனைத்தையும் அருகில் இருந்த ஒரு சிறு பாறையின் மீது அமர்ந்தவாறே உணர்ச்சிகளை உள்ளடக்கிய முகத்துடன் பார்த்திருந்த பிரஷாந்தைத் திரும்பிப் பார்த்தவர்கள் அனுமதி வேண்டி நிற்பது போல் நிற்க, இசைவாக மெல்லத் தலையை அசைத்தவன் ருசித்துப் பருகுவது போல் மதுவை அருந்த துவங்கியதுமே விநாடி நேரம் கூடத் தயங்காது தாங்களும் அந்தக் கொடூர வேட்டையில் பங்கெடுக்க ஆரம்பித்தனர், மனிதர்களின் ரூபத்தில் அரக்கர்களையும் தோற்கடித்துவிடும் இராட்சச செய்கைகளில் கைத்தேர்ந்தவர்களான அந்த இளைஞர்கள்.

மணித்துளிகள் கடக்க, காணக் கூடாத ஒரு குரூர சம்பவத்தைக் கண்டதில் பேச்சும் மூச்சும் மறந்துப் போனவளாகச் சவம் போல் நின்றிருந்த நிகித்தா அதுவரை நடந்தது, நடப்பது, நடக்கப் போவது எதுவுமே புரியாதது போல் மரக்கட்டையாகிப் போயிருந்தாள் அந்த அரை மணி நேரமும்.

ஒருவழியாகத் தங்களின் அகோர வேட்டையை முடித்த 'பிரான்னாஸ்' அணி வெற்றிக்களிப்பில் கூத்தாடிக் கொண்டிருக்க, உணர்வுகள் மரத்தது போல் கீழே கிடந்த ப்ரீத்தியை வெறித்த பார்வையுடன் நோக்கியவாறே பாறையில் இருந்து மெல்ல எழுந்த பிரஷாந்த், அவளுக்கருகில் அமர்ந்தவனாய் கண்களைச் சிமிட்டாது அவளின் உருவத்தை ரசித்துப் பார்த்ததில், அவனின் தோற்றம் சந்தோஷிற்கு அது வரை இல்லாத அளவிற்கான ஏதோ ஒரு பய உணர்வை அக்கணம் உருவாக்கியது.

"பிரஷாந்த், உனக்கு அவள் வேண்டாமா?"

மெல்லிய குரலில் கேட்ட சந்தோஷைத் திரும்பிப் பாராமலேயே இலேசாகத் தலையை 'இல்லை' என்பது போல் இடம் வலமாக அசைத்த பிரஷாந்த்,

"What? Do you think I am a Necrophiliac? சாரி சந்தோஷ், டெட் பாடிஸை எல்லாம் தொடறதுல எனக்கு விருப்பம் இல்லை.." என்று கூறியதைக் கேட்டதில் சந்தோஷின் ஈரக்குலை நடுங்கத் துவங்கியது என்றால், நிகித்தாவின் ஸ்வாசம் 'டெட்பாடி' என்ற வார்த்தையை கேட்ட அக்கணமே நின்றது போல் நெஞ்சை அடைக்கத் துவங்கியது.

"பி.. பி.. பிரஷாந்த், என்னடா சொல்ற? அவ.. செ...செத்துட்டாளா?"

திக்கித் திணறிக் கேட்டவனைச் சட்டை செய்யாதவனாய் இறந்துக் கிடக்கும் ப்ரீத்தியை அப்பொழுதும் ஏகத்திற்கு இரசித்துப் பார்த்திருந்த பிரஷாந்தின் தோற்றம் ஒரு சைக்கோவின் உச்சக்கட்டம் போலவே காட்சியளித்தது.

ரிஷியின் ‘ஹெல்ரைஸர்’ அணியில் இருக்கும் பொழுது பெண்களைப் பலவந்தப்படுத்தும் கொடுமையான காரியங்களில் ஈடுபட்டிருந்தாலும், அவ்வணியின் தலைவனான ரிஷி கூட இவ்வாறு குரூரமாய் நடந்து கொண்டிராததில், பிரஷாந்தின் நடவடிக்கை அவனை ஒரு வெறிப்பிடித்த மனநோயாளி என்று சந்தோஷின் புத்தியில் சம்மட்டியால் அடித்து உணர்த்தியது.

'இதுக்கு முன் இவனுக்கும் ப்ரித்திக்கும் ஏதாவது தொடர்பு இருந்திருக்குமா? ஒருவேளை இவன் அவளை விரும்பி அவள் மறுத்திருப்பாளா? இல்லை இறந்த மனிதர்களின் உடலை இப்படி ரசிப்பது இவன் வழக்கமா? அப்படின்னா என்ன மாதிரியான மனிதன் இவன்? கேட்டால் நான் என்ன நெக்ரோபீலியாக்கான்னு கேட்குறான்.. பிறகு இப்படி நடந்துக்கிறவனுக்கு என்ன பெயராம்?’

உள்ளத்திற்குள் எண்ணிய சந்தோஷிற்கு அந்நிமிடம் புரிந்தது, இறந்த பிணத்தைக் கூட ரசிக்கும் ஒரு கொடூரனிடம் [psychopathic maniac] தான் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்று.

என் மேல் இவன் கொண்டிருக்கும் நம்பிக்கையே எனக்கு ஆயுதம்.

எக்கணம் இவனது நம்பிக்கையை நான் இழக்கின்றேனோ அக்கணம் எனது கதி அதோகதி தான்.

எண்ணியவாறே அதிர்ச்சியில் மூழ்கிப் போனவனாய் அமைதியாகப் பிரஷாந்தையே பார்த்திருந்தவன் செயலற்று அமைதியாக நிற்க, அடுத்து பிரஷாந்த் செய்த செய்கையில் சந்தோஷின் நாடி நரம்பு அனைத்திலும் பயத்தின் உதிரம் அதிவேகமாய்ப் பாயத் துவங்கியது.

"பிரஷாந்த் என்ன பன்ற?"

கிசுகிசுப்பாய் வினவிய சந்தோஷின் வினாவிற்குப் பதிலேதும் கூறாதவனாய் நிகித்தாவை நோக்கி பிரஷாந்த் நடக்க, ப்ரீத்திக்கு அருகில் ஒரு காலை மடக்கி மண்டியிட்டவனாய் அமர்ந்திருந்த பிரஷாந் திடுமென எழுந்த அந்நொடியே சுயநினைவிற்கு வந்தவள் போல் வீறிட்டு அலறியவாறே ஓடத் துவங்கியிருந்த நிகித்தாவின் நிலை தெள்ளனெப் புரிந்து போனது சந்தோஷிற்கு.

"இவளையும் சாகடிச்சிடாதீங்கடா..”

சந்தோஷின் குரல் அவனுக்கே கேட்காத பொழுது மற்றவர்களுக்கு எங்குக் கேட்கப் போகிறது?

மறு நிமிடம் அந்தக் கழுதைப் புலிக் கூட்டத்தின் அடுத்தப் பலியாக நிகித்தா மாறிப் போயிருந்தாள்.

தனது வேட்கைத் தீர்ந்ததும் சுதிரின் பக்கம் திரும்பிய பிரஷாந்த், "சுதிர், இவளை நான் சொல்ற போஸுல நீ வீடியோ எடு, நமக்கு உதவியா இருக்கும்.." என்றவனாய் மீண்டும் அதே பாறையில் சென்று அமர, நிகித்தாவை அவலமான நிலைகளில் புகைப்படமாகவும் காணொளிக் காட்சிகளாகவும் எடுக்கத் துவங்கினான் சுதிர்.

ஒவ்வொரு முறை புகைப்படக் கருவி உமிழ்ந்த வெளிச்சத்தில் [flash] பிரஷாந்தின் முக மாறுதல்களைச் சந்தோஷ் கவனிக்க, வஞ்சகம் நிறைந்த அவன் பார்வை சொன்ன அர்த்தத்தில், உதடுகளில் நெளிந்த சைக்கோ புன்னகையில், இவர்களிடம் இருந்து நிகித்தா தப்புவாளோ இல்லையோ ஆனால் நான் கண்டிப்பாகத் தப்ப வேண்டும் என்று முதல் முறையாக ஒரு பெரும் எச்சரிக்கை உணர்வு உருவாகத் துவங்கியது.

ஒருவழியாகத் தங்களின் களியாட்டத்தை முடித்தவர்கள் கீழே கிடந்த மித்ராவைக் காண, அப்பொழுதும் அவளிடம் அசைவேதும் இல்லாததில், “ஓவரா அவளுக்கு ஊத்திக் கொடுத்திட்டீங்களா என்ன, செத்துப் போன மாதிரி கிடக்குறா.. அவள் மூச்சு விடறாளா இல்லையான்னு செக் பண்ணு வினய்.." என்றான் கடுகளவு கூடப் பச்சாத்தாபம் என்ற உணர்வே இல்லாது, பிசிரற்றத் தெளிவான குரலில் பிரஷாந்த்.

மித்ராவின் மூக்கில் விரல் வைத்து ஸ்வாசக் காற்றினைப் பரிசோதித்த வினய், அவள் உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்த, இறந்துக் கிடந்த ப்ரீத்தியை புதைத்துவிடும் நோக்கோடு அவளைத் தன் தோளில் தூக்கிப் போட்ட பிரஷாந்த் சட்டென நின்றவன், உடல் பொருள் ஆவி என்றனைத்துமே உரிஞ்சப்பட்டது போல் சக்தியற்றுக் கிடந்த நிகித்தாவின் அருகில் ப்ரீத்தியின் சவத்தைச் சுமந்தவாறே ஒரு காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்தான்.

நிமிடங்கள் சில கடக்க அவளையே வெறித்துப் பார்த்தவன்,

"நிகித்தா.. ப்ரீத்தியைக் கொல்றது எங்க நோக்கம் இல்லை, ஆனால் இவ செத்துட்டாள்.. இவளை நாங்கத் தான் கொலை செய்தோம் அப்படிங்கிறதுக்குச் சாட்சி நீயும், இதோ இங்க செத்துப் போன பிணம் மாதிரிக் கிடக்கிறாளே இந்தச் சின்னப் பொண்ணும் தான்.. தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு கொலை நடந்துடுச்சு, அதுல இருந்து நாங்க தப்பிக்கணும்னா உன்னையும் இவளையும் கூடக் கொன்னுடறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன், நீ என்ன நினைக்கிற?" என்று கொலை செய்வது சர்வ சாதாரணம் போல் வெகு நிதானமாய்க் கேட்க,

ஏற்கனவே சக்தி எல்லாம் வடிந்தவளாய் கிடந்த நிகித்தாவின் இதயம் இப்பொழுது ஏறக்குறைய நின்று போகும் நிலைக்கு வந்தது.

"என்ன நிகித்தா பதிலே சொல்ல மாட்டேங்குற, என்ன உன்னையும் இவளையும் கொன்னுடட்டுமா?"

மீண்டும் கேட்டவனின் சலனமற்ற கண்களைப் பார்த்த நிகித்தா எந்த மாபாதகத்துக்கும் அஞ்சாத மிருகமான இவனுக்குத் தன்னையும் மித்ராவையும் கொல்வது அத்தனை கடினமல்ல எனத் தோன்ற, "பிரஷாந்த், எங்களை விட்டுடு ப்ளீஸ்.." என்று பெரும் சிரமப்பட்டுக் குரலை இலேசாக வெளிக் கொணர்ந்து கெஞ்சத் துவங்கினாள்.

மெல்லிய சிரிப்பை மட்டும் உதிர்த்த பிரஷாந்த்,

"சரி விட்டுடுறேன், ஆனால் இங்க நடந்ததை இங்கேயே மறந்துட்டு போயிடணும்.. ஒரு வார்த்தைக் கூட வெளியில் வரக் கூடாது... அப்படி வந்ததுன்னா, நாங்க எடுத்திருக்கும் இந்த வீடியோவும், ஃபோட்டோஸும் வெளியில் வந்துடும்.." என்றவன் சற்று நிறுத்தி மித்ராவின் புறம் திரும்பினான்.

"உன்னை மட்டும் நாங்க வீடியோ எடுக்கலை, இதோ நாங்க கொடுத்த ஆல்கஹாலைக் குடிச்சிட்டு போதையில மயங்கிக் கிடக்கிறாளே இவளையும் நாங்க வீடியோ எடுத்து வைச்சிருக்கோம்.. ஸோ, நீயோ அல்ல இவளோ வாயைத் திறந்தீங்கன்னா, உங்க ரெண்டு பேரோட வீடியோஸும் இண்டெர்ணெட் முழுக்கவும் பரவ ஆரம்பிச்சிடும்.. நீ புத்திசாலியா இல்லையான்னு எனக்குத் தெரியாது, ஆனால் ரொம்பத் தைரியமானவளுன்னு மட்டும் எனக்குத் தெரியும்... இல்லைன்னா போலீஸுக்குப் போகாமல் நீ இப்படி இங்க காட்டுக்குள்ள வந்துருக்கமாட்ட... அதனால் ப்ரீத்தியைப் பற்றி யாராவது கேட்டால் அதை எப்படிச் சமாளிக்கறதுன்னு நான் உனக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன்.. தைரியமா எல்லாத்தையும் சமாளிக்க ஆரம்பி.. ஆல் தி பெஸ்ட்.."

சிறு புன்னகையுடன் அவன் கூறியதுமே, எவ்வளவோ முறை ப்ரீத்தி எடுத்துக் கூறியும் போலிஸிடமோ அல்லது ரிசார்ட்டில் வேலைப் பார்ப்பவர்களிடமோ தகவல் கொடுக்காது தான் வந்ததன் பலனே இது என்று புரிந்துக் கொண்டவளாய் மனம் வெந்துப் போனாள்.

"என்ன நான் சொல்றது புரியுதா நிகித்தா?"

வெகு அமைதியாய் தணிவாய் கேட்கும் பிரஷாந்தின் தோரணையில் தானாக ‘சரி’ என்பது போல் நிகித்தாவின் தலை அசைந்தது.

அதற்குள் சாட்சியங்களை மறைக்க வேண்டி நன்கு பழக்கப்பட்டது போல் மளமளவென்று மணலைப் போட்டு அவ்விடத்தைக் கிளறி மூடிய மற்றவர்கள், அருகில் கிடந்த இலை தழைகளையும் சிறிய பாறைகள் மற்றும் கற்களையும் போட்டு மறைத்ததில் ஒரு கொலை நடந்த சுவடே தெரியாத அளவிற்கு மாறியது அவ்விடம்.

"கிளம்பலாம்.."

பிரஷாந்த் கூறிய அந்நிமிடமே சந்தோஷுடன் இணைந்து மற்ற ஐவரும் கிளம்ப, சக்தி அனைத்தையும் கூட்டி பெரு முயற்சி செய்து எழுந்த நிகித்தா இன்னமும் தன்னுணர்வற்றுப் படுத்திருந்த மித்ராவை எழுப்ப ஆரம்பித்தாள்.

ஆனால் வெகு நேரத்திற்குப் பிறகே ஓரளவிற்குச் சுயநினைவிற்கு வந்து எழுந்தமர்ந்த மித்ராவிற்கு நிகித்தாவின் நிலை பேரதிர்ச்சியைக் கொணர்ந்தது.

"அக்கா, என்ன ஆச்சு உங்களுக்கு?”

“மி.. மி.. மித்ரா..”

திக்கித் திணறுபவளைக் கண்டு அரண்டுப் போனவளாய், “அக்கா, நான் வேண்டாம்னு சொல்ல சொல்ல அவனுங்க ஃபோர்ஸ் பண்ணி என் வாயில ஆல்கஹாலை ஊத்திட்டானுங்க, அதே மாதிரித் தான் உங்களுக்கும் செஞ்சானுங்களா? இப்ப அவனுங்க எங்க?” என்றாள்.

இன்னமும் சரியாகத் தெளிவடையாத நிலையில் வாய் குளற கேட்கும் சின்னவளைக் கண்டு அழுதுக் கதறத் துவங்கினாள் நிகித்தா.

ஆயினும் இது அழுது கொண்டிருக்கும் நேரம் அல்ல என்று மித்ராவின் நிலையையும் உணர்ந்து சுதாரித்தவளாக விநாடிகளுக்குள் தன்னை இழுத்துப் பிடித்தவள் தன்னையே கண்கள் சொருகப் பார்த்திருப்பவளைக் கண்டு, "மித்ரா முதல்ல நாம் இங்க இருந்து கிளம்பணும்.. வா.." என்று அவளை ஏறக்குறைய தூக்கியவளாய் அவளது ஆடைகளைச் சரி செய்தவாறே இழுத்துக் கொண்டு ஓடத் துவங்கியவள் அடுத்து நின்றது ரிசார்ட்டில் தான்.

மூச்சிறைக்க மீனாவின் அறைக்கதவைப் படபடவென்று தட்ட, திடீரென்று கதவுத் தட்டப்பட்டதும் அரண்டுப் போனவர்களாகக் கதவைத் திறந்தவர்கள் வெளியில் நின்றிருந்த பெண்களின் தோற்றத்தில் திகைத்துப் போனார்கள்.

"நிகி, என்ன ஆச்சு? ஏன் இப்படி இருக்கிற? மித்ராவுக்கு என்ன ஆச்சு?"

மீனாவின் வினாக்களுக்கு விடையளிக்கத் தெம்பில்லாதவளாக மீண்டும் ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு மித்ராவை மற்ற தோழிகளின் உதவியுடன் அறைக்குள் அழைத்துச் சென்று கட்டிலில் படுக்க வைத்த நிகித்தா, பேச்சற்றது போல் கதறியவாறே கீழே அமர்ந்ததில், கலங்கிப் போயினர் பெண்கள் மூவரும்.

"ஏண்டி கேக்குறோம்ல, என்ன ஆச்சு? ஆமா ப்ரீத்தி எங்க? உங்க ரூம்ல இருக்காளா?"

மீண்டும் வினவிய மீனாவின் முகத்தை மெல்ல நிமிர்ந்துப் பார்த்த நிகித்தா தனது தோள் பற்றி உலுக்கிக் கொண்டிருக்கும் நிஷாந்தியைக் கண்டு நடந்த அனைத்தையும் திக்கித் தடுமாறும் குரலில் விளக்க, நடந்து முடிந்திருந்த கொடூர சம்பவங்களைக் கேட்டதில் மூன்று பெண்களுக்குமே பூமியே ஒரு உலுக்கு உலுக்கி நின்றது போல் தோன்றியது.

"ப்ரீத்தியைக் கொன்னுட்டானுங்களா?"

“ம்ம்ம்..”

"என்னடி சொல்ற? யாருடி நிகித்தா அவனுங்க?"

“அவனுங்க எங்க காலேஜில் படிக்கிறானுங்க மீனா..”

"நிகி, இங்க தான பக்கத்து ரூமில் நாங்க இருக்கோம்? ஏன் நீங்க எங்களைக் கூப்பிடலை?"

“எல்லாம் என்னுடைய முட்டாள்தனம் தான் மீனா..”

இதற்கு மேலும் என்னிடம் விளக்கம் கேட்டாலும் என்னால் கூற இயலாது என்பது போல் தரையில் மடிந்து அமர்ந்தவளாய் மீண்டும் கேவத் துவங்க, தாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையின் விபரீதம் பெண்கள் அனைவருக்குமே தெள்ளத் தெளிவாகப் புரிய ஆரம்பித்தது.

நிமிடங்கள் நேரம் அமைதியாகக் கழிய, ஒரு வழியாகத் தன்னை மீட்டுக் கொண்ட நிகித்தா நடந்ததை ஆரம்பத்தில் இருந்து விவரமாகக் கூற ஆரம்பித்தாள்.

"மித்ராவையும் நிகித்தாவையும் அவனுங்க ஏதோ அசிங்கமா ஃபோட்டோஸும் வீடியோஸும் எடுத்துருக்கானுங்க போலருக்கு.. அப்படீன்னா நாம் போலிஸ்கிட்டேயும் போக முடியாதா?"

மெல்லிய குரலில் கேட்ட கௌசியின் முகத்தைத் தெம்பே இல்லாதது போல் பரிதாபமாக நிகித்தா பார்க்க, அவளின் ஒவ்வொரு அசைவும், கட்டிலில் இன்னமும் பாதித் தெளிந்தும் பாதித் தெளியாமலும் படுத்திருக்கும் தங்கையின் நிலைமையும் கண்ட மீனாவிற்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் இருந்தது.

ஆயினும் நடந்திருப்பது ஒரு கொலை, அத்துடன் பெண்களைப் பலவந்தப்படுத்தி இருக்கின்றார்கள் அந்த மிருகங்கள்.

"போலிஸுக்குப் போகாமல் எப்படிக் கௌசி விடறது? ப்ரீத்தி எங்கன்னு அவங்க பேரண்ட்ஸ் கேட்டா என்ன பதில் சொல்றது?"

"மீனா நீ சொல்றது புரியுது, ஆனால் இவங்க நிலையையும் கொஞ்சம் யோசிச்சு பாரு.. நான் பேசறது மித்ராவுக்காகவும் தான்.. இந்த அளவுக்கு மிருகத்தனமா நடந்துக்குறவனுங்க, நிச்சயமா வேற எந்த எல்லைக்கும் போகத் தயங்க மாட்டானுங்க. அதுவும் போலிஸிடம் இருந்து அவங்களைக் காப்பாத்திக்கணும்னா அவனுங்க மறுபடியும் நிகித்தாவையும் மித்ராவையும் தேடி வர மாட்டானுங்கன்னு என்ன நிச்சயம்? அதனால் கொஞ்சம் யோசிச்சு தான் நாம் இந்த விஷயத்தில் முடிவு எடுக்கணும் மீனா.."

நேரம் கடந்ததே ஒழிய அவர்களால் எந்த ஒரு முடிவையும் எடுக்க இயலவில்லை..

அவ்வளவு அதிர்ச்சியில் சிக்கியிருந்தனர் இளம் பெண்கள் ஐவரும்.

அதற்குள் விடிந்துவிட்டது.

மெல்ல நிதானத்திற்கு வந்த நிகித்தா குளியல் அறைக்குள் சென்று உடல் அழுக்குப் போகக் குளித்து முடித்தவளாய் வெளியே வந்தவள்,

"மீனா, கௌசி, நிஷா.. நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேளுங்க.. உங்களுக்கு ப்ரீத்தி எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு எனக்கும் அவள் முக்கியம்.. இன்னும் சொல்லப் போனால் அவள் என் உயிர் தோழி.. ஆனால் அதே சமயம் எனக்கு நடந்த இந்த அவலம் வெளியே தெரிஞ்சாலோ அல்லது என்னை அந்த நிலைமையில் அவனுங்க எடுத்த வீடியோஸ் வெளியே வந்தோலோ நான் மட்டும் இல்ல, என்னுடைய பேரண்ட்ஸும் நிச்சயம் உயிருடன் இருக்க மாட்டாங்க.. அதனால் நான் இந்த முடிவை எடுத்தே ஆகணும்.. அந்தப் பசங்களோட டீம் பேரே 'பிரான்னாஸ்'. தண்ணிக்குள்ள விழற மனுசனைக் கூடப் பிரான்னாஸ் மீன் கூட்டம் கடிச்சு குதறிடும்.. அது போலத் தான் அவனுங்களும்.. அவனுங்க நினைச்சால் என்ன வேணாலும் செய்வானுங்க, அந்த அளவுக்கு அவனுங்களுக்கு அரசியல் ஆதரவும், சமுதாயத்துல செல்வாக்கும் இருக்கு..

அதுவும் இல்லாமல் இன்னொரு டீமும் இருக்கு, அதுக்குப் பேர் 'ஹெல்ரைஸர்'.. ரெண்டு டீமுக்கும் ஆகவே ஆகாது, ஆனால் பிரான்னாஸோட சந்தோஷ் சேர்ந்திருக்கான்னு அப்ப அந்த ஹெல்ரைஸர் டீம் எங்க? ஒரு வேளை அவனுங்களும் இவனுங்களோட சேர்ந்திருந்தால் என்னுடைய நிலைமை இனி அதோகதிதான்.. அதனால் தான் சொல்றேன்.. நான் உயிருடன் இருக்கணும், அதே மாதிரி மித்ராவுடைய வாழ்க்கையும் கெட்டுப் போகக் கூடாதுன்னு நீங்க நினைச்சீங்கன்னா தயவு செய்து இங்க நடந்ததை இங்கேயே விட்டுடுங்க.. நிச்சயம் ப்ரீத்தி எங்கன்னு என்கிட்ட தான் அவ பேரண்ட்ஸோ போலீஸோ கேட்பாங்க.. ஏன்னா நாங்க இங்க நெல்லியம்பதி ஃபாரஸ்ட்டுக்கு வந்தது யாருக்கும் தெரியாது.. அதனால் அவங்க எல்லாம் நம்பற மாதிரி நான் ஏதாவது சொல்லிக்கிறேன்.. நீங்க கோயம்புத்தூர் கிளம்புங்க.. ஒருவேளை இதைப் பற்றி யாராவது விசாரித்தாலும் நீங்க எங்க ரெண்டு பேரையும் பார்த்ததையோ அல்லது இந்த ரிசார்ட்டில் தங்கியதையோ தப்பித்தவறியும் சொல்லிடாதீங்க.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்." என்று முடிக்கவும், நடந்ததை மறக்கவும் இயலாது, அதே சமயம் அதனை வெளியிலும் சொல்ல இயலாத நிலையில் தத்தளித்தவர்களாய் அனைவரும் அந்த ரிசார்ட்டினை விட்டு வெளியேறினார்கள்.

நாட்கள் அதன் போக்கில் நகர, பிரஷாந்தின் கைங்கரியத்தினாலும், அவனது செல்வச் செழிப்பினாலும் ப்ரீத்தி சந்தோஷ் என்ற அவளது கல்லூரித் தோழனுடன் (காதலனுடன்?) ஓடி விட்டாள் என்ற பொய் செய்தி ஒன்று பிரபலமாக்கப்பட்டதில், என்ன தான் தங்களின் மகள் அப்படிப்பட்டவள் இல்லை என்று அவளது பெற்றோர் கத்தி கதறிக் கூச்சலிட்டாலும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அந்தப் பெரியவர்களால் ஒன்றும் செய்ய இயலாது போனது.

இதற்குள் ஒரு சில முறைகள் நிகித்தாவையும் காவல் துறையினர் அழைத்து விசாரிக்க, மதிகேடான மனிதாபிமானமற்ற பதில் என்று தெரிந்தாலும் வேறு வழியின்றி ப்ரீத்தி தன்னைப் பார்க்க வருவதாகக் கூறிய அன்று அவள் தன் வீட்டிற்கே வரவில்லை என்றும், கல்லூரியில் உலா வருவது போல் அவளுக்கும் சந்தோஷ் என்ற மாணவனுக்கும் இடையில் காதல் இருந்ததாகவும் மனதிற்குள் எழுந்த வேதனையை மறைத்தவாறே தெரிவிக்க, அதற்கு மேலும் காவல் துறையினரால் அந்த வழக்கினை தொடர இயலவில்லை.

அதற்கு முக்கியக் காரணம் சந்தோஷ் என்ற கல்லூரி மாணவனும் காணாமல் போனான்..

அவனது இருப்பிடத்தை எவராலும் கண்டுப்பிடிக்க முடியாது போனது.

அத்துடன் ப்ரீத்தியின் அத்தியாயமும் மூடப்பட்டது.



What makes a heart black?


It is the choice to not feel.

To not feel the suffering that your actions create.

To not feel your own greed.

To not feel your lack of compassion.

To not feel that you got in bed with evil.


- Suzanne Wagner


சிரஞ்சீவிதம் தொடரும்.

References:

Necrophilia: What exactly is necrophilia?

Necrophilia is a term derived from the Greek words philios (attraction to/love) and nekros (dead body) and involves the sexual attraction to a dead body. Necrophilia is a perverted sexual behavior where the perpetrator gets pleasure having sex with the corpses.

What famous serial killer was a necrophiliac?

Ted Bundy (1946–1989) – Serial killer, kidnapper, and necrophiliac.

More commonly there are serial murderers such as Ed Gein, Ed Kemper, Jeffery Dahmer, and Garry Ridgeway who have taken sexual advantage of dead victims.
 
Last edited:

Srd. Rathi

New member
அடப்பாவிகளா....
சந்தோஷ் காணாம போய்ட்டானா..... எல்லாமே இவனால தான்
 

Seriously this is heart aching 😞😞😞💔💔💔
I was tensed to read that particular scene… fortunately, thank god you concised the matter…
I feel sorry for Preethi… 😓😓😓

Enekku Nikitha mela bayangara kowam varuthu… Preethi solla solla ketkama ava ishtathukku yarukkume inform pannama pona… ippo aniyayama oru uyir poittuthu… Nikitha thappitta… 🙄🙄🙄

Ippo avaloda uyirukkagavum ava kudumba manathukkagavum police la sollama maraichitta… parents kitta sollama oor suthi thiriyum podhu irukkira dhairiyam yean intha vishyathula illa… 😤😤😤

And, no comments about those macabre morons… 🤮🤮🤮🤮

May be Shanthosh than antha Kunal ah irukkanum…

Waiting for the gruesome death of Prashanth… 🤨🤨🤨
 

Wasee

New member
Santhosh um iranthutaana?

Avanukku nalla venum nu thonuthu..

But preethi and nikki yenna pavam panninaanga????
 

Lucky Chittu

New member
Preethi ya konnathum illama santhoshayum konnutaanunga intha paavinga. Santhosh onnum nallavan illai thaan but seratha idam sernthu than life ponathum illama adutha veetu ponnunga life aiyum serthu pazhadichittanunga.
 

Chitra Balaji

Active member
Very very emotional episode mam..... பாவிங்க அந்த பிரசாந்த் ku preethi mela appadi enna வன்மம்..... நிகிதா vuku vera வழி இல்ல..... இனிமேல் என்ன aaga pooguthoo....
 

Selvi

Member
Maam, I can't imagine how much pain the victim went thru'. When reading I can't take it. How do you feel when you were writing. OMG.
 

Thani

Member
ரொம்ப ரொம்ப கனமான பதிவு சிஸ்😢
ஆனால் நாட்டில் இதை விட பொண்ணுங்க பாதிக்கக்கபட்டிருக்காங்களே😪😪😪😪
சந்தோஷ் இப்படி பண்ணினத்துக்கு தண்டனை கிடைத்து விட்டதா????அல்லது மறைந்து வாழ்றானா????(ஆதாவது பிரசாந்த் குறூப் போட்டு தள்ளிட்டானுங்களா???)
 

Chellam

Member
சந்தோஷ் என்னவானான், அவனையும் கொன்று விட்டார்களா.
 

Members online

No members online now.

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top