சிரஞ்சீவிதம்!
அத்தியாயம் 7
I lie awake every night
Wishing of things I can change.
I try to console myself,
But it's all so strange and hard.
Is this the end
Or a new beginning?
But how could this be the beginning?
After I had lost everything.
That is what plays
Over in my head
As I try to close my eyes
And just go to bed.
But so much hurt
To want to stay.
Then this is the end!
நீண்டு கொண்டே போகும் இரவுகள் முடியவே முடியாதா என்று கூடச் சிலருக்கு சில நேரங்களில் தோன்றலாம்..
ஆயினும் விடியலும் ஒரு நாள் வந்து சேர்ந்து தானே ஆக வேண்டும்!
அது போல் நெல்லியம்பதி காட்டிற்குள் நிகழ்ந்த சம்பவங்களும், கொடூரமான நிகழ்ச்சிகளும் பெண்களின் மனதில் அனைத்து நேரமும் தோன்றிக் கொண்டே இருந்தாலும், வலுக்கட்டாயமாக அவற்றை எண்ணங்களிலிருந்து அகற்ற முயற்சித்துக் கொண்டிருந்த அப்பெண்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொணர்ந்தது, அந்தத் துக்கச் செய்தி.
இருபத்தியோரு வயது நிகித்தா ஜெயராமனின் தற்கொலை முடிவு.
அலைபேசியில் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் செய்தியைக் கண்ட மித்ரா பதறிப் போனவளாய் தமக்கையின் அறைக்குள் புக, அவளது பதற்றத்தில் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்த மீனாவிடம், "அக்கா நி...நி..நிகி அக்கா.." என்றவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
"என்ன மித்ரா? என்ன ஆச்சு? நிகி?"
"நிகி அக்கா.."
"ம்ப்ச்.. சொல்லுடி.. நிகிக்கு என்ன ஆச்சு? இப்பவே எனக்கு உதறுது.."
"அக்கா, நிகி அக்கா சூசைட் பண்ணிக்கிட்டாங்களாம்?"
அவ்வளவு தான் அண்ட சராசரமே நடுங்குவது போல் இருந்தது மினாவிற்கு.
"என்னடி சொல்ற?"
"ஆமாக்கா இங்க பாரு. இப்ப தான் நியூஸ்ல படிச்சேன்.."
"எந்த நியூஸ்ல டி? அது வேற நிகித்தாவா இருக்கப் போகுது.."
"ஐயோ அக்கா, நான் என்ன முட்டாளா? இது ப்ரீத்தி அக்காவோட காலேஜ் நியூஸுக்கான வெப் சைட்.. அப்பப்போ நான் ப்ரீத்தி அக்காவைப் பத்தி ஏதாவது போட்டுருக்காங்களான்னு பார்ப்பேன்னு சொல்லியிருக்கேன், இல்லையா? அது மாதிரி சும்மா பார்த்துட்டு இருக்கப்ப தான் இந்த நியூஸ் வந்தது.."
தாங்க முடியாத துக்கக்கரமான விஷயத்தைக் கேட்டதில் நெஞ்சுக் கூட்டிற்குள் வலியெடுக்க, தடுமாறியவளாய் நாற்காலியில் அமர்ந்த மீனாவின் அலைபேசியில் ஏதோ குறுந்தகவல் வந்ததற்கான சத்தம் ஒலித்தது.
அது அன்று நெல்லியம்பதிக் காட்டிற்குச் சென்றிருந்த கௌசி, நிஷாந்தி மற்றும் மீனா ஆகிய மூவரை மட்டுமே கொண்ட ஒரு வாட்ஸப் க்ரூப்பில் செய்தி வந்ததற்கான அறிவிப்பு.
நிகித்தாவைப் பற்றிப் பேசுவதற்குத் தான் தகவல் அனுப்பியிருக்கின்றார்கள் தோழிகள் என்ற எண்ணத்தில் மெல்ல அலைபேசியை உயிர்பித்த மீனாவிற்கு அடுத்தக்கட்ட அதிர்ச்சி ஆரம்பமானது.
"மீனா.. நிகியிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்துருக்குடி, பார்த்தியா?"
நிஷாந்தியின் கேள்விக்குப் பதிலைத் தேடி அலைபேசியில் துலாவிய மீனாவின் பார்வையில், நிகித்தா தானே பேசி அனுப்பியிருந்த தகவல் பட்டது.
படபடப்புடன் அதனைத் திறந்தவளுக்கு அழுகுரலுடன் நிகித்தாக் கூறிய செய்தி சிந்தனைக்கும் மீறிய அபாயமான நிலையில் தாங்கள் அனைவருமே சிக்கிக் கொண்டதை வெளிப்படுத்தியதில், பழுக்கக் காய்ச்சிய ஒரு லட்சம் ஊசி முனைகள் தேகமெல்லாம் துளைத்தது போல் துடித்துப் போயினர் சகோதரிகள் இருவருமே.
"நீங்க அன்னைக்குச் சொன்னப்பவே நான் கேட்டிருக்கணும். கேட்காமல் விட்டது எவ்வளவு பெரிய தப்புன்னு நான் ரொம்ப நாளுக்கு முன்னாடியே புரிஞ்சிக்கிட்டேன்.. உங்களுக்கு அந்தப் பசங்களைப் பற்றிச் சரியா அறிமுகம் இல்லாட்டிலும் கூடவே படிச்சிட்டு இருந்த எனக்கு அறிவு இருந்திருக்கணும்.. எங்களை அப்படிப் போட்டோஸ் எடுத்தவனுங்க அதை வெளியில் காட்டி எங்களுடைய எதிர்காலத்தை அழிச்சிருவானுங்களோன்னு பயந்துட்டு தான் நான் நடந்ததை மறைச்சிடலாம்னு சொன்னது, ஆனால் அதுவே என் வாழ்க்கையையே அழிச்சிடும்னு அப்ப நான் யோசிக்காம விட்டுட்டேன்.. வாழ்க்கையில் நிஜ தைரியம் வேற குருட்டுத் தைரியம் வேறன்னு எனக்கு நிருபிச்சிட்டானுங்க அந்தப் பசங்க.. என்னோட குருட்டுத் தைரியத்தில தான் நான் அன்னைக்கு என் பெஸ்ட் ஃப்ரெண்டை இழந்தேன், இப்போ என் நிலைமையும் அதே தான்? நாம் எல்லாரும் அங்க இருந்து போனதுக்குப் பிறகு ஏறக்குறைய ஒரு வருஷம் வரைக்கும் அவனுங்க என்னைத் தொந்தரவு பண்ணலை.. இன்னும் சொல்லப் போனால் அன்னைக்கு நடந்த அந்தக் கொடூரத்துக்கு முதல் காரணகர்த்தாவ இருந்தவன் திடீர்னு காணாமல் போயிட்டாங்கிறது தெரிஞ்சவுடனே நான் கொஞ்சம் எச்சரிக்கையா இருந்திருக்கணும்.. ஆனால் அவனும் என் பெஸ்ட் ஃப்ரெண்டும் லவ் பண்ணினாங்க, ரெண்டு பேரும் ஓடிப் போயிட்டாங்கன்னு அவனுங்க புரளியைக் கிளப்பிவிட்டதும், அவனுக்கும் அந்தப் பசங்களுக்கும் இடையில் ஏதோ பிரச்சனை நடந்திருக்கு, அதனால் அவன் தலைமறைவாகிட்டான்னு நானே ஏதோ கற்பனை பண்ணிக்கிட்டு அமைதியா இருந்துட்டேன்..
அதுக்கப்புறம் அவனும் திரும்பி வரலை, என் ஃப்ரெண்டைப் பற்றியும் யாரும் என்கிட்ட கேட்கலை. அதுவே எனக்கும் சாதகமாப் போனதால் ஏதோ நடந்தது நடந்து போச்சு, இனி நடக்கப் போறதை மட்டும் யோசிச்சுக்கணும் அப்படின்னு சுயநலத்தோட என் மனசாட்சிக்கு மீறி நான் பேசாமல் இருந்துட்டேன்..
அதுக்கான தண்டனை சரியா ஒரு வருஷத்துக்குப் பிறகு எனக்குக் கிடைச்சது. அன்னைக்கு எடுத்த போட்டோஸை யூஸ் பண்ணி அதுக்கப்புறம் பலமுறை அவங்க என் கிட்ட தப்பா நடந்துகிட்டாங்க.. ஒவ்வொரு தடவை என்னை அவங்க இடத்துக்குக் கூட்டிட்டு போகும் போதும் இதுதான் கடைசி, இனி அந்தப் போட்டோஸ் வீடியோஸ் எல்லாத்தையும் டெலிட் பண்ணி விடுவோம், அதுக்கப்புறம் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டோம் அப்படின்னு சொல்லி சொல்லியே பலமுறை அவனுங்க இடத்துக்கு என்னை வர வழைச்சாங்க.. ஒருகட்டத்தில் போலீஸுக்கு போய்விடலாமா அப்படின்னு கூட நினைச்சேன்.. ஆனாலும் அந்தப் போட்டோஸும் வீடியோஸும் வெளிவந்தால் என் குடும்பத்தோட நிலைமை என்ன ஆகும்?
என் பேரண்ட்ஸுக்கு நான் ஒரே பெண்.. நான் தான் அவங்க உயிர்.. நடந்த எல்லாத்தையும் அவங்களிடம் சொல்லிருக்கலாம் தான், கண்டிப்பா என் அப்பா என்னை அந்தக் கொடூர மிருகங்களிடம் இருந்து காப்பாற்றவும் செய்திருக்கலாம், ஆனால் அவங்க ஒரே பெண்ணான எனக்கு இப்படி ஒரு கொடூரம் நடந்திருக்குன்னு தெரிஞ்சால் அவங்க எப்படி வேதனைப்படுவாங்க, அவங்களால் இதைத் தாங்கிக்கவே முடியாது.. நிச்சயம் எங்க அம்மா ஏதாவது தப்பான முடிவுக்குப் போனாலும் போயிடுவாங்கன்னு நினைச்சு நினைச்சு ரொம்பப் பயந்து அவனுங்க சொல்ற எல்லா விஷயத்துக்கும் கட்டுப்பட்டேன்.. ஆனால் இனியும் அப்படி இருக்க என்னால முடியாது.. காரணம் இதுக்கும் மேல என் மனசுலயும் சக்தி இல்ல, என் உடம்புலயும் தெம்பு இல்ல..
இப்ப கூட நான் போலீஸுக்குப் போகலாம், ஆனால் அது எங்குப் போய் முடியும்னு எனக்குத் தெரியல.. அது மட்டும் இல்லை இதனால் பாதிக்கப்படப் போவது இன்னொரு உயிரும் தான்.. அவனுங்க க்ரூப்போட பேருக்கேத்த மாதிரி அவனுங்க எல்லாம் தங்கள் கைக்குச் சிக்கின இரையைக் கடித்துக் குதறும் மிருகங்கள்.. இதுவரைக்கும் எனக்கு நடந்தது போதும்.. சின்னப் பொண்ணு அவ, அவளுடைய போட்டேஸ் வெளி வந்தால் அவளுடைய எதிர்காலமும் பாதிக்கும்.. அதனால தான் இப்ப நான் இந்த முடிவுக்கு வந்திருக்கேன்.. இப்ப கூட என்னுடைய சாவுக்கு என்ன காரணம் என்று என்னால் வெளியே சொல்ல முடியாது... நான் சொன்ன மாதிரி அப்படி நான் சொன்னேன்னா சின்னவளின் உயிருக்குக் கூட ஆபத்து வரலாம்.. அதனால் இப்படியே நான் போறேன்..
ஒருவேளை என்னுடைய சாவுக்கு அப்புறம் யாராவது உங்க கிட்ட வந்து என்னைப் பத்தி கேட்டால், நடந்ததை யார்கிட்டேயும் சொல்லிடாதீங்க.. இப்படியே இந்த விஷயம் என்னுடனே முடிஞ்சு போயிடட்டும்.. இனி தொடர வேண்டாம்.. இந்த வாய்ஸ் மெசேஜ் நான் அனுப்பினதுக்குக் காரணமே ஒருவேளை என்னோட தற்கொலை விஷயத்தைக் கேள்விப்பட்டுப் பயந்து நீங்க போலீஸுக்கு போய் விடக்கூடாதுன்னு தான்.. நான் பண்ண தப்புக்கு தண்டனையை நிறையவே அனுபவித்து விட்டேன்.. இனி சின்னவளுடைய வாழ்க்கை ரொம்ப முக்கியம்.. அவளை நினைக்கும் போதெல்லாம் எனக்கு மனசு ரொம்ப ரொம்ப வலிச்சது..
அப்படியே அவனுங்களைக் கொன்னுட்டு ஜெயிலுக்குப் போயிடலாமான்னு கூடத் தோனுச்சு.. ஆனால் அது என்னால் முடியற காரியமா? அதுவும் இல்லாமல் அவனுங்களை எல்லாம் ஒன்னுமே பண்ண முடியாது.. என்ன தான் எங்க குடும்பம் வசதியா இருந்தாலும், அவனுங்கக் கால் தூசிக்குக் கூட நாங்க சமானம் இல்லை, அவனுங்களுடைய செல்வச் செழிப்பு அப்படி.. அதனால நான் சொல்ற மாதிரி இந்த மெசேஜை டெலிட் பண்ணிடுங்க… ஒரு வேளை ஏதாவது வழியில் இந்த மேசேஜை மற்றவர்கள் யாராவது கேட்க நேர்ந்தாலும் ஒருத்தருக்கும் ஒன்னும் புரியக் கூடாதுன்னு தான் நான் யாரோட பெயரையும் இப்போ இந்த மெசேஜ்ல சொல்லலை.. இதோட இந்த விஷயத்தை விட்டுடுங்க.. நீங்களாவது சந்தோஷமா இருங்க... நான் போறேன், கண்டிப்பாக நான் இறந்ததுக்கு அப்புறம் என் ஃப்ரெண்டைப் பார்ப்பேன், அப்ப அவகிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்.. குட் பை பிரண்ட்ஸ்.. டேக் கேர்.."
நிகித்தாவின் வாய்ஸ் மெசேஜை கேட்க கேட்க மீனாவின் உடல் முழுவதும் ஒரு உதறல் பரவியது.
கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் சொரிந்தது.
விரல்கள் நடுங்க அலைபேசியை அணைத்துக் கட்டிலில் வைத்தவள் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் மித்ராவின் புறம் நோக்கினாள்.
“இப்ப என்ன பண்றது மித்ரா? இந்த மெசேஜை அவ ஏற்கனவே ரெக்கார்ட் பண்ணி கரெக்ட்டா அவ இறந்ததுக்கு அப்புறம் நம்ம கைக்குச் சேர்வது மாதிரி டைம் செட் பண்ணி இருப்பா போல இருக்கு.. எக்காரணத்தைக் கொண்டும் நாம அவளைத் தடுத்திட கூடாது என்பதற்காக இப்படிப் பண்ணி இருக்கா.. நாம எல்லாம் பிரிஞ்சு கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆயிடுச்சு.. ஆனால் நாம் ரிசார்ட்டை விட்டு வந்ததுக்கு அப்புறம் சரியா ஒரு வருஷம் கழிச்சு அவனுங்க அவளைத் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சு இருக்காங்க. அப்படின்னா இந்தக் கஷ்டத்தை அவள் தனியா ஒரு வருஷம் அனுபவிச்சிருக்கா. அட்லீஸ்ட் நம்ம கிட்டயாவது சொல்லி இருக்கலாம்.. எனக்குத் தெரிஞ்சு இந்தக் கஷ்டத்தை அவள் அவளுக்காக மட்டும் அனுபவிக்கலை.. உனக்காகவும் தான் இதைச் செஞ்சிருக்கான்னு நினக்கிறேன். இப்ப நாம என்ன பண்றது? இதை இப்படியே விட முடியுமா? போலிஸுக்குப் போவோமா? அப்படிப் போனா உன் நிலைமை? எனக்குத் தலையே வெடிச்சிடும் போல இருக்கு, உடம்பெல்லாம் பதறுதுடி, என்ன செய்யணும்னு நீயே சொல்லு மித்ரா?"
முகம் வெளிரிப் போக, உதடுகள் துடிக்க, நடுக்கத்துடன் நின்றிருந்த தமக்கையின் தோள் பற்றி இருக்கையில் அமர வைத்த மித்ராவுக்குத் தனது நிலைத் தெள்ளத்தெளிவாகப் புரிந்து போனது.
ஆயினும் இதை இப்படியே விட்டுவிடுவதா?
ஒரு வேளை எக்காரணம் கொண்டோ எனது ஃபோட்டோஸ் வெளியே வந்தால் என் வாழ்க்கைப் பாதையும் நிலைக் குலைந்துப் போகும் தான், அதற்காகச் சும்மா இருந்துவிடுவதா?
இதற்கு மேலும் அமைதிக் காத்தால் நாம் மனித ஜென்மங்களே கிடையாது என்று முடிவெடுத்தவளாய் தானும் மீனாவின் அருகில் அமர்ந்தவள், அவளது தாடையைப் பற்றியவாறே,
"அக்கா, அவனுங்க ப்ரீத்தி அக்காவையும் கொன்னு இருக்கானுங்க, நிகி அக்காவையும் இவ்வளவு கஷ்டப் படுத்திருக்கானுங்க.. நிச்சயமாக அவனுங்க மனிதர்களாகவே இருக்க முடியாது.. ஆனால் என்னுடைய பெரிய சந்தேகமே, இவ்வளவு நாள் அவனுங்க ஏன் என்னைத் தொந்தரவு பண்ணல? அன்னைக்கு எனக்குத் தெரிஞ்சு அவனுங்க என் மேல கையை வைக்கலை.. வெறும் ஆல்கஹால் கொடுத்து என்னை மயங்க வைத்தது மட்டும் தான் அவனுங்க செஞ்சிருக்கானுங்க.. நான் ஒன்னும் சின்னப் புள்ள இல்லக்கா, என்னை அவனுங்க அப்படி ஏதாவது செஞ்சு இருந்தால் நிச்சயம் எனக்குத் தெரிஞ்சிருக்கும்.. அப்படின்னா ஏன் என்னை எதுவும் செய்யாமல் விட்டுட்டானுங்க? அது மட்டும் இல்ல, அந்த ஒரு வருஷமும் நிகி அக்காவை மட்டும் கொடுமைப்படுத்தினவங்க ஏன் என் கிட்ட கூட நெருங்க முயற்சிக்கலை? என்னைப் பற்றியோ என் ஃபோன் நம்பரையோ கண்டு பிடிக்கிறது அவனுங்களுக்குக் கஷ்டமான காரியமா இருந்திருக்க முடியாது? அப்படி இருந்தும் அவனுங்க என்னை எந்த விதத்திலேயும் ஏன் காண்டாக்ட் பண்ண முயற்சிக்கலை? ஒருவேளை நாம் எல்லாம் பயந்தது மாதிரி அவனுங்க என்னைப் போட்டோஸ் அல்லது வீடியோஸோ எடுக்கலையோ? வெறும் நிகி அக்காவை மட்டும் அப்படி எடுத்து இருப்பாங்களோ? அது தான் என்னை மிரட்டறதுக்கு அவனுங்க கையில் ஆயுதம் ஏதும் இல்லைன்னு என்னை விட்டுட்டானுங்களோ? அப்படின்னு தான் எனக்குத் தோனுதுக்கா.. அதனால நாம போலீஸுக்கு போவோம்.. இதுக்கு மேல பயந்துட்டு சும்மா இருக்கக்கூடாது.. நமக்குத் தெரிஞ்சு அவனுங்களால ரெண்டு உயிர் போயிருச்சு, தெரியாமல் எவ்வளவு பேரோ? அதனால ரொம்ப யோசிக்காமல் வா அக்கா போலிஸுக்குப் போவோம்.. இந்த மெசேஜை அப்படியே கொண்டு போய்ப் போலீஸ் கிட்ட கொடுப்போம், அவங்க ஆக்ஷன் எடுக்கட்டும்..." என்றதுமே தலையை இரு கரங்களால் பற்றியவாறே குனிந்தாள் பெரியவள்.
"என்னக்கா யோசிக்கிற? நான் சொல்றது சரி தானே?"
நிமிடங்கள் கரைந்தாலும் பதிலுரைக்காமல் இருந்த மீனாவின் மனம் எவ்வளவு கலங்கி இருக்கின்றது என்பது புரியாமல் இல்லை சின்னவளுக்கு.
ஆயினும் அந்தச் சின்னப் பெண்ணால் நடந்து முடிந்திருக்கும் கொடூரங்களை ஜீரணிக்கவே முடியவில்லை.
ஏறக்குறைய இவை அனைத்துமே தன்னால் தான் நடந்தது என்ற ஒரு குற்ற உணர்வு வேறு அவளைத் தாக்கிக் கொண்டிருந்தது.
அந்த இரவில் தான் மட்டும் வெளியே தனித்துச் செல்லாமல் இருந்திருந்தால் என்று அவளின் வயதிற்கே உரிய அறியாமையில் நினைத்து கலங்கிப் போயிருந்தாள் அவள்.
"ம்ப்ச்.. என்னக்கா, கேட்குறேன், பதிலே சொல்ல மாட்டேங்குற? இப்படி அமைதியா இருந்தா என்ன? பதில் சொல்லு.. போலீஸுக்குப் போயிடுவோமா.."
"மித்ரா, நான் கொஞ்சம் யோசிக்கணும்.. ப்ளீஸ், நீ உன் ரூமுக்குப் போ.."
"ஏன்கா?"
"மித்ரா, இதுல நீயும் நானும் மட்டும் சம்பந்தப்படலை.. நிஷாவும் கௌசியும் இருக்காங்க.. நாம் இப்ப போலிஸுக்குப் போனால் அன்னைக்கு நடந்த எல்லாத்தையும் சொல்லணும்.. இதனால் நாம மட்டும் பாதிக்கப்படப் போறதில்லை.. அவங்க ரெண்டுப் பேரும் தான்.. அதனால் நீ கொஞ்சம் பொறுமையா இரு.. நான் யோசிச்சு முடிவு செய்யறேன்.."
கூறியவள் மித்ராவின் கைப் பற்றி எழுப்பி அவளை அறையை விட்டு வெளியேற்றியவளாகக் கதவை தாழிட்டுவிட்டு மீண்டும் இருக்கையில் அமர, நிகித்தாவின் குரலும் மித்ராவின் வார்த்தைகளும் மீண்டும் மீண்டும் செவிப்பறைகளை அறைவது போல் அந்த அறை முழுவதும் எதிரொளித்துக் கொன்டே இருந்தது.
'மித்ரா சொன்னது போல ஒரு வேளை அவனுங்க இவளை அசிங்கமா போட்டோஸ் எடுக்கலையோ? சும்மா மிரட்டுறதுக்காகச் சொல்லிருப்பானுங்களோ? அப்படின்னா போலிஸுக்குப் போயிடலாமா? அப்படிப் போனால் ஏன் ஒரு கொலையை மறைச்சீங்கன்னு நம்ம தான கேட்பாங்க? ‘An accessory to murder after the fact’ அப்படின்னு கண்டிப்பா ஆகிட வாய்ப்பிருக்கு? ஏன் நம்மளை அரெஸ்ட் பண்ணினாலும் பண்ணுவாங்க? அப்படின்னா இப்ப என்ன செய்யறது?'
மனம் அதன் போக்கில் பலவித எண்ணங்களில் புரள, இறுதியில் இதனில் சம்பந்தப்பட்ட மற்ற இருவரையும் கலந்து ஆலோசித்துவிட்டு முடிவெடுக்கலாம் என்ற எண்ணத்தில் கௌசியையும் நிஷாந்தியையும் அழைத்தாள்.
அவள் நினைத்தது போலவே அவர்களும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்திருக்க, இறுதியாக இந்த விஷயத்தைச் சிறிதுக் காலம் ஆறப் போடுவது என்றும், ஒரு வேளை நிகித்தாவின் மரணத்தைப் பற்றி யாராவது விசாரித்தால் பிறகு உண்மையை ஒப்புக்கொள்ளலாம் என்று ஓர் மனதாக முடிவெடுத்தார்கள்.
அதற்குக் காரணமும் மித்ராவே.
மித்ராவை அக்கோலத்தில், அதாவது ஏறக்குறைய ஆடையே இல்லாத அகோர கோலத்தில் கிடத்தி இருந்தவர்கள் அவளைப் புகைப்படம் எடுக்காது இருந்திருப்பார்களா?
அந்தத் திட்டம் இல்லையெனில் ஏன் அவளை அக்கோலத்தில் வைத்திருக்க வேண்டும்?
எதற்கு அவளுக்கு மதுவை புகட்டி இருக்க வேண்டும்?
பல வினாக்கள் அவர்களின் உள்ளங்களை அரித்துக் கொண்டிருந்ததில் முழுதாக ஒரு முடிவிற்கு வர முடியாமல் தடுமாறியவர்கள், பிறகு மித்ராவின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்தாக நினைத்துக் கொண்டார்கள்.
ஆனால் அந்த முடிவிற்குப் பின்னால் இருந்தது 'பிரான்னாஸ்' அணியை நினைத்து அச்சம் மட்டும் அல்ல, இரு வருடங்களுக்கு முன்னர்க் கொலை செய்யப்பட்ட ப்ரீத்தியின் பிரேதம் எங்கு இருக்கின்றதோ, இனி அவளது மரணத்தைப் பற்றி வெளியில் கூறினாலும் அவளைக் கொலை செய்தது 'பிரான்னாஸ்' அணியும் சந்தோஷும் தான் என்று நிரூபணம் செய்ய முடியுமா என்ற பெருஞ்சந்தேகத்தினாலேயே..
ஏனெனில் அந்தக் கொலை நடந்த பொழுது அவ்விடத்தில் இருந்தவர்கள் இருவர் மட்டுமே.
அதில் நிகித்தா இப்பொழுது உயிருடன் இல்லை.. மித்ராவும் 'பிரான்னாஸ்' அணியினரால் மது ஊட்டப்பட்டு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.
ஆக அவர்களே கொலையாளிகள் என்பதற்குச் சாட்சி யார்? (eye witness)
அப்படி இருக்கப் 'பிரான்னாஸ்' அணியினரே கொலையாளிகள் என்று பெண்கள் காவல்துறையினரிடம் தெரிவித்து, ஒரு வேளை அவர்களைச் சட்டத்தில் தண்டிக்க வேண்டிய அளவிலான சாட்சியங்கள் கிடைக்காது போய் அவர்கள் வெளியில் வந்துவிட்டால், நமது நிலை?
குறிப்பாக மித்ராவின் நிலைமை?
இதுவே மீனா, நிஷாந்தி, மித்ரா மற்றும் கௌசியின் உதடுகளைப் பசைப்போட்டது போல் ஒட்டச் செய்தது.
ஆனால் அவ்வாறு சகோதரிகள் இருவரும் அமைதியாக இருந்தது சில நாட்களே.
அவர்களைத் தைரியமாக முன் வரச் செய்தது அமர் என்ற இளம் தடயவியல் நிபுணனே.
அவனது புத்திசாலித்தனமும், அவன் அடைந்திருக்கும் புகழும், அவன் கையில் எடுத்த கொலை வழக்குகளுக்குத் தீர்வு காணாமல் அவன் விட்டதில்லை என்ற பெயருமே அனைத்துக்கான காரணம்.
எத்தனை வருடங்கள் ஆனாலும் கொலை செய்யப்பட்ட ஒரு மனிதனின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டுப்பிடித்துவிடலாம்.. அக்கொலையைத் துப்பறிபவன் மிகச்சிறந்த அறிவாளியாகவும், துப்புக்களை அறிவதில் தனித்தன்மைக் கொண்டவனாகவும் இருந்தால்.
இதனை உள்ளூர உணர்ந்ததினால் மட்டுமே மீனாவும் மித்ராவும் அந்நாள் வரை அச்சம், கலக்கம், அவமானம் என்று அவர்கள் அடைந்திருந்த கூட்டிற்குள் இருந்து மெல்ல வெளி வந்திருந்தனர்.
********************************************************************************************************
காலை மணி பத்து..
மித்ரா மற்றும் மீனாவின் இல்லம்..
"ஏண்டி அவ இப்படிப் பயந்துட்டு ஓடுறா? அப்படி யாரு ஃபோன்ல கூப்பிட்டது? நாலைஞ்சு நாளா அவ சரியா சாப்பிடறதுக் கூட இல்லை.. காலேஜுக்குக் கூட நீ மட்டும் தான் போயிட்டு வந்துட்டு இருக்க, கேட்டால் ஏதேதோ காரணம் சொல்லிட்டு வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்குறா.. என்னடி நடக்குது இங்க?"
அமரை சந்தித்துச் சரியாக ஒருவாரத்திற்குப் பிறகு அன்னை மற்றும் தங்கையுடன் உணவருந்திக் கொண்டிருந்த மீனா அலைபேசியில் அழைத்த அமர் ப்ரீத்தியின் சவம் கிடைத்து விட்டது என்று கூறியதைக் கேட்டு பதறியவளாக அறைக்கு ஓட,
சிறிது நேரத்தில் கீழ் இறங்கி வந்தவர்களில் மீனா முன்னறைக்குச் சென்றுவிட, மித்ராவைப் பார்த்து அவர்கள் அன்னைக் கேட்டக் கேள்விகள் தான் இவை.
"ஒன்னும் இல்லைம்மா, ஏதோ ப்ரான்க் கால் [prank call].. அதுக்குப் போயி அக்கா பயந்துடுச்சு.."
"ப்ரான்க் காலா? நாலைஞ்சு நாளாவே அவ சரியில்லைன்னு சொல்லிட்டு இருக்கேன், நீ என்னடான்னா ப்ரான்க் காலு அது இதுன்னுட்டு இருக்க? சரி இப்ப மணி பத்தாகுது, இன்னைக்கும் லீவா? அவ தான் ஏதோ பேயறைஞ்ச மாதிரி இருக்கான்னா உனக்கு என்ன வந்தது? நீ ஏன் வீட்டுல இருக்கிற?"
"அக்கா இன்னைக்கும் லீவு எடுத்துக்குறேன்னு சொல்லிடுச்சும்மா.. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பணும்.."
கூறிக் கொண்டிருக்கும் போதே வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது.
முன்னறையில் அமர்ந்து தொலைக்காட்சியில் பார்வையைப் பதித்தவாறே அம்மா, தங்கை பேச்சினைக் கேட்டுக் கொண்டிருந்த மீனாவின் உடல் அவளையும் அறியாது அழைப்பு மணியின் ஓசையில் தூக்கிவாரிப் போட்டது.
அவளது பயம் மித்ராவும் அறிந்ததே என்பதால் அவளை நோக்கி ஓடியவள்,
"அக்கா, நிச்சயம் அமர் சார் போலிஸுக்கு தகவல் சொல்லிருப்பாரு, அதனால் இப்ப போலிஸ் கூட என்கொயரிக்கு வந்துருக்கலாம்.. தைரியமா இருக்கா.. நீ தைரியமா இருந்தால் தான் என்னாலேயும் எதையும் ஃபேஸ் பண்ண முடியும்.." என்று கூறியவளாய் அன்னையை ஒரு முறைத் திரும்பிப் பார்த்துவிட்டு கதவைத் திறக்க, அவர்கள் எதிர்பார்த்தது போல் வாயிலில் நின்றிருந்தவர்கள் காவல் துறை அதிகாரிகளே.
அன்றைய நாளில் இருந்து பெண்கள் நால்வரின் பெயர்களும் தொலைக்காட்சிகள், பத்திரிக்கைகள், நாளிதழ்கள், இணையத் தளங்கள், சமூக ஊடகங்கள் என்று அனைத்து பக்கங்களிலும் அல்லோல கல்லோல பட்டுப் போனது.
ஒரு பக்கம் ப்ரீத்தி மற்றும் நிகித்தாவின் ஆதரவாளர்கள் என்று பலர் இருந்தாலும், மறுபக்கம் சுயநலத்தோடு ஒரு கொலையை மறைத்த கல்லூரி மற்றும் பள்ளி பெண்கள் நால்வர் என்று மீனாலோச்சினி, மித்ரலோச்சினி, கௌசி, நிஷாந்தியின் பெயரை சமூக ஊடகங்களிலும், தொலைக்காட்சி செய்திகளிலும் மற்றும் பத்திரிக்கைகளிலும் கிழிகிழியென்று கிழித்தனர்.
இது ஒரு நிலை என்றால், இப்படி ஒரு அகோரமான சம்பவங்களில் சிக்கிய இளம்பெண்கள் அந்நேரத்தில் அவர்களைக் காப்பாற்றிக் கொள்ள எடுத்த முடிவு சரியானதே என்று அவர்களுக்காக வாதாடவும் ஒரு கூட்டம் இருந்தது.
'It is a split-second decision. You cannot justify or condemn them for their decisions or actions, because you weren't there.'
அதாவது அன்று அப்பெண்களின் நிலை எப்படி இருந்தது என்று நமக்குத் தெரியுமா? அன்றைய இரவில் அந்தப் பெண்கள் இருந்த இடத்தில் நாம் இருக்கவில்லை.. அப்படியெனில் அவர்கள் எடுத்த முடிவை நாம் விமர்சிப்பதோ, கண்டனம் செய்வதோ தவறு.
இதுவே அந்தக் கூட்டத்தின் விளக்கமாகவும் இருந்தது.
‘நீங்க கொலையை நேரில் பார்த்தீங்களா? யார் கொலை செய்தது? ப்ரீத்திக் கற்பழிக்கப்பட்டாரா? யார் அந்தப் பாதகத்தைச் செய்தது? அந்த இடத்துக்கு நீங்க எப்படிப் போனீங்க? ஏன் இத்தனை நாள் இந்த விஷயத்தை வெளியில் சொல்லாமல் இப்ப மட்டும் வந்து சொல்றீங்க? ப்ரீத்தியை மட்டும் தான் அவர்கள் கற்பழித்தனரா அல்லது உங்களில் எவரையாவதுமா? அதனால் தான் நீங்களும் கொலை நடந்ததைப் பற்றி வெளியில் சொல்லாமல் மறைத்துவிட்டீர்களா?’
இது போன்ற பல நூறு கேள்விக் கணைகளாலும் சாடப்பட்டனர் பெண்கள்.
இவற்றில் இருந்து தப்பிக்க வழித் தெரியாது தடுமாறி நிற்க, இதனில் நான்கு பெண்களில் கொடூர சம்பவ நாளில் மித்ரா மட்டுமே பள்ளிப்படிப்புப் படித்துக் கொண்டிருந்ததினால், பல ஊடகங்களில் எழுந்த அவலமான கேள்விகளால் அவளது பெற்றோர் தாங்க முடியாத இன்னல்களுக்கு ஆளாயினர்.
இதில் அவர்களது கல்லூரி முதல்வரின் பேச்சினைக் கேட்டவர்கள் செய்யும் வகையறியாத தவித்துப் போயினர்.
"சம்பவம் நடந்தப்ப உங்க இளைய மகள் ஸ்கூலில் தான் படிச்சிட்டு இருந்திருக்கா.. அந்த வயசிலேயே உங்க பொண்ணு இது மாதிரிப் பிரச்சனைகளில் சிக்கி இருக்கா.. இதுல பொண்ணுங்க மட்டும் தனியா போனாங்களா இல்லை பசங்களும் சேர்ந்து ஒண்ணா போனாங்களா, போன இடத்தில் இது மாதிரி அசம்பாவிதம் நடந்துடுச்சான்னு என்னைப் பல இடங்களில் இருந்து கேள்விக் கேட்குறாங்க.. அப்ப இவள் இந்தக் காலேஜிலேயே படிக்கலையே, வெறும் ஸ்கூல் ஸ்டூடண்ட் தானே, இந்தக் கேள்வி எல்லாம் இவ ஸ்கூல் பிரின்ஸ்பலைத் தானே கேட்கணும்.. என்னை எதுக்குக் கேள்விக் கேட்குறாங்கன்னு எனக்குத் தெரியலை.. பதினைஞ்சு வயசில பேரண்டுஸுக்கு தெரியாம இங்க இருந்து நெல்லியம்பதி ஃபாரஸ்டு வரைக்கும் பசங்களோட சேர்ந்து உங்க பொண்ணு போயிருக்கான்னா, அங்க என்னவெல்லாம் நடந்ததோ.. இதுல ஒரு பொண்ணு மட்டும் அல்ல, உங்க ரெண்டு பொண்ணுங்களும் இந்த வேலையைச் செய்திருக்காங்க.. ஒரு கொலையைக் கண்களால் பார்த்தும் அவங்க இது வரை வெளியில் சொல்லலைன்னு மீடியாஸ் முழுசும் செய்திகள் பரவிக் கிடக்குது.. ஸோ, உங்க பெண்களை நீங்க வேற காலேஜில் சேர்த்துக்கோங்க, ப்ளீஸ்.."
தலைமை ஆசிரியரின் ஒவ்வொரு வார்த்தைகளும் சாட்டையடியாக இருக்க, வீட்டிற்கு வந்த அவர்களின் தந்தை மகள்கள் இருவரிடமும் அது முதல் பேசுவதையே நிறுத்திவிட்டார்.
தாயாரோ ஏதோ அழுகையும் கதறலுமாகப் பொழுதுகளைக் கழிக்க, "ஒரு வேளை நாம் போலிஸிற்கே போயிருக்கக் கூடாதோ, அப்படியே விட்டுருக்கணுமோ?" என்ற தமக்கையின் கூற்றினைக் கேட்டுத் தானும் கலங்கிப் போனாள் மித்ரா.
"இல்லக்கா.. இதெல்லாம் எதிர்பார்த்து தான அக்கா போலிஸுக்குப் போனோம்.. இப்ப நீயே இப்படிச் சொன்னா எப்படி? எப்படியும் அந்தப் பசங்களைப் போலீஸ் பிடிச்சிடுவாங்க.. கண்டிப்பா அமர் சார் நம்மளை கைவிட மாட்டார்... கொஞ்சம் பொறுத்துக்கலாம்கா.."
கூறிய தங்கையைத் தன் தோளில் ஆறுதலாகச் சாய்த்துக் கொள்ளும் நேரம் மீனாவின் அலைபேசி சிணுங்கியது.
அழைத்தது அமர்..
"மீனா நான் இப்பவே உன்னைப் பார்க்கணும்.. எங்க இருக்க?"
“வீட்டுல தான் இருக்கேன் அமர் சார்.."
"சரி, நான் உன் வீட்டுக்கே வரேன்.."
"இ.. இல்ல சார்.. ஏற்கனவே அம்மாவும் அப்பாவும் ரொம்ப அப்ஸெட் ஆகி இருக்காங்க.. இதுல தமிழ் நாடு போலீஸ், கேரளா போலீஸ்னு வேற நாள் தவறாமல் டெய்லி வந்துட்டே இருக்காங்க.. இப்ப நீங்களும் வந்தீங்கன்னா அவங்க ரொம்பக் கஷ்டப்படுவாங்க.."
"ஐ அண்டர்ஸ்டாண்ட் மீனா.. ஆனால் எனக்கு உங்க வீட்டுக்கு வரணும்.. சில இன்வெஸ்டிகேஷன்ஸை நான் அங்க பண்ணணும்.."
"இங்கேயா? எங்க வீட்டுலையே?"
"யெஸ், அங்க தான்.. அதான் வீட்டுக்கு வரேன்னு சொன்னேன்.."
வேறு வழியின்றிச் சம்மதித்தவள் கீழறையில் இருந்த பெற்றோரிடம் விஷயத்தைக் கூறினாள்.
அவளை ஒரு சலனமற்ற பார்வைப் பார்த்த அவளது தந்தை பதிலேதும் கூறாது வீட்டை விட்டு வெளியேறிவராய் தனது காரைக் கிளப்பியவர் அங்கு இருந்து அகல, வேதனையுடன் நீண்ட நெடிய மூச்சினை இழுத்துவிட்ட அவளது அன்னையும் தங்களது படுக்கை அறைக்குச் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.
நிமிடங்கள் கழிய அமருக்காகக் காத்திருந்த சகோதரிகளில் குறுக்கும் நெடுக்குமாக அறையை அளப்பது போல் நடந்து கொண்டிருந்த மீனாவின் தோற்றம் மித்ராவிற்கு அலுப்பாயிருந்தது.
"அக்கா, ஏற்கனவே எனக்குத் தலையைச் சுத்துற மாதிரி இருக்கு, இதுல நீ வேற ஏன் இந்த ரூமையே அளக்கிற மாதிரி இங்குட்டும் அங்குட்டுமா நடந்துட்டு இருக்க? கொஞ்ச நேரம் சும்மா வந்து இப்படி உட்கார்.."
"மித்ரா.. நாம் அமர் சாரைப் பார்த்து அல்மோஸ்ட் 2 வீக்ஸ் ஆச்சு.. விஷயம் வெளி வந்ததுக்குப் பிறகு ரிப்போர்ட்டர்ஸும் மற்ற மீடியாஸை சேர்ந்தவங்களும் தான் நம்ம சுத்திட்டு இருக்காங்க, இவர் வரவே இல்லை.. இப்ப திடீர்னு இன்வெஸ்டிகேட் பண்ணணும் அதுவும் வீட்டுக்கே வரேன்னு சொல்றாரே, அதான் கொஞ்சம் டென்ஷனா இருக்கு.. வேறு ஏதாவது எவிடன்ஸ் கிடைச்சிருக்குமோ?.."
கூறியவளின் உள்ளமோ ஒரு வேளை மித்ராவைப் பற்றிய விஷயங்கள் எதுவும் கிடைத்திருக்குமோ? அந்தப் பசங்க நான் பயந்த மாதிரி அவளையும் போட்டோஸ் வீடியோஸ் எடுத்து அது அமர் சார் கையில் கிடைத்திருக்குமோ? என்று எண்ணியதில் அவளது நடையின் வேகம் அதிகரித்ததே ஒழிய அவள் அமரவில்லை.
அதற்குள் அழைப்பொலி ஒலித்தது.
"அமர் சார் தான் வந்துட்டார் போல், இரு நானே திறக்கிறேன்.."
கூறியவளாக ஓடிய மித்ரா கதவைத் திறக்க, மருந்துக்கும் புன்னகை என்பதே இல்லாதவனாக வாயிலில் ஆழ்ந்து ஆராயும் விழிகளுடன் நின்றிருந்த அமரின் முகம் சின்னவளுக்குப் பெருந்திகிலைக் கொணர்ந்தது.
"வாங்க அமர் சார்.."
சன்னமான குரலில் அழைத்தவளாக அவன் உள் நுழைவதற்கு வழிவிட்டு நகர, வீட்டிற்குள் நுழைந்தவனின் கண்கள் அவனையும் அறியாது பெரியவளைத் தேடியது.
அங்கு முன்னறையில் இரு கைகளையும் பிசைந்தவாறே நீர் திரையிட்ட விழிகளுடன் மெல்லிய உதடுகள் துடிக்க நின்றிருந்தவளைப் பார்த்தவனுக்கு, அவளை முதல் நாள் பார்த்த அன்று ஏற்பட்ட சொல்லொண்ணா சிலிர்ப்பையும், முதல்முறையாக அன்று இதயத்தில் உணர்ந்த பனிப்பூஞ்சாரலையும் மீண்டும் உணர்ந்தவனுக்கு அக்கணமே அவளை அணைத்து ஆறுதல் அளிக்க வேண்டும் போல் இருந்தது.
ஆனால் அன்றைய சூழ்நிலை வேறு, இன்றைய சூழ்நிலை வேறாயிற்றே.
மெல்லிய பெருமூச்சினை விட்டவன் அவளை நோக்கி நடந்தவாறே, "நான் உன்கூடக் கொஞ்சம் தனியா பேசணும்.." எனவும் சட்டென்று திரும்பி மித்ராவைப் பார்த்தாள்.
"நீ போ அக்கா.. நான் அம்மாக்கிட்ட சொல்லிக்கிறேன்.."
கூறிய தங்கையிடம் ‘சரி’ என்பது போல் தலையசைத்து தன் அறைக்குள் சென்ற மீனாவின் முதல் கேள்வியே, "மி.. மி.. மித்ரா பற்றி ஏதாவது வெ..வெ.. வெளியில் வந்ததா?" என்பது தான்.
திக்கித் திணறிக் கேட்டவளின் முகத்தையே கூர்ந்துப் பார்த்தவன் மெல்லக் கதவை சாத்தவும் திக்கென்று ஆனது மீனாவிற்கு.
"கதவை ஏன் சாத்துறீங்க சார்? என்கிட்ட மித்ராவைப் பத்தி தனியா ஏதும் பேசணுமா? அப்படின்னா அந்தப் பசங்க மித்ராவையும் அசிங்கமா ஃபோட்டோஸ் எடுத்திருந்தானுங்களா?"
கேள்வியைக் கேட்டவள் அவன் பதில் கூறும் முன்பே முகத்தை இரு கரங்களாலும் மூடியவாறே அழுதுக் கரைய, "ம்ப்ச், என்ன மீனா, நீயா ஏன் என்னென்னவோ கற்பனை பண்ணிக்கிற?" என்று அதட்டுவது போல் சிறிது சத்தமாகக் கேட்டவனின் கம்பீரக் குரலில் பெண்ணவளின் தேகம் தூக்கிப் போட்டது.
"எல்லாத்துக்கும் இப்படிப் பயந்தா எப்படி? கமான், முதல்ல இப்படி வந்து உட்காரு.."
"இ.. இ.. இல்ல, நான் கேட்டதுக்கு நீங்க பதில் சொல்லுங்க, ப்ளீஸ் சார்.."
"First you come and sit here, then I will explain.."
“நான் இப்படியே நிக்குறேன், நீங்க சொல்லுங்க..”
“ஏன் உட்கார்ந்தா நான் பேசுறதுக் கேட்காதா?”
சிறிதுக் கோபம் துளிர்க்கவே சற்றுக் கடுமையாக அவன் கேட்டதும் தான் தாமதம், படக்கென்று கண்ணீர் கன்னங்கள் தாண்டி வழியத் துவங்கியது.
"நான் என்ன நிலைமையில் இருக்கேன்னு உங்களுக்குத் தெரியும், இருந்தும் ஏன் இப்படிக் கோபப்படுறீங்க? அதான் தெரியுதுல்ல நான் பயந்த சுபாவம் தான்னு, அப்புறம் ஏன் இப்படிச் சத்தம் போடுறீங்க? ஏற்கனவே ஒருத்தி செத்துட்டா, இப்ப இன்னொருத்தியும் சூசைட் பண்ணிக்கிட்டு போயிட்டா.. இதுல மித்ரா இந்த வயசுல இவ்வளவு அவமானங்களைச் சுமந்துட்டு இருக்கா.. தப்பு எல்லாம் என் மேல தான்.. அந்த நெல்லியம்பதி ஃபாரஸ்ட் ட்ரிப்பை பற்றி ஐடியா கொடுத்ததே நான் தான்.. இதுல சின்னப் பொண்ணு இவளையும் கூட்டிட்டு நான் போயிருக்கக் கூடாது.."
உட்காராது நின்றவாறே கேவத் துவங்கியவளின் வாடி வதங்கிய முகமும், தன்னிடம் உரிமையாய் அவள் பேசிய விதமும், அன்று நெஞ்சிற்குள் சிறகாய் வருடிய தென்றல் காற்றின் இன்பத்தை அந்நேரத்திலும் வழங்கியதில் அந்த ஆண்மகன் தடுமாறித்தான் போனான்.
ஆனால் தடுமாறும் நேரமா இது?
சிரஞ்சீவிதம் தொடரும்..

Last edited: