JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Siranjeevitham - Episode 8

JLine

Moderator
Staff member
சிரஞ்சீவிதம்

அத்தியாயம் - 8

நிலத்தில் கால்கள் புதைந்தது போல் அசையாது நின்றிருந்தவளின் தோள்கள் மட்டும் அழுகையில் குழுங்கின.

“மீனா, ப்ளீஸ், நான் சொல்றதைக் கேளு.. இப்படியே அழுதுட்டு இருந்தால் எல்லாம் சரியாகிடுமா?”

அமர் என்ன கெஞ்சியும் அவளது அழுகை மட்டும் நின்றபாடில்லை.

“சரி, நான் கோபப்படலை.. சத்தமாவும் பேசலை, சரியா? கொஞ்சம் அழறதை நிறுத்து..”

ஏற்கனவே கடந்த சில நாட்களாகத் தங்களுக்கு நேர்ந்து கொண்டிருக்கும் அவமானங்களையும், தங்கையின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கும் ஊடகங்களையும் நினைத்து உறக்கத்தில் கூடப் பிதற்றிக் கொண்டிருந்தவள் அவள்.

இப்பொழுது தன் ஒரே ஆதரவாகத் தான் நினைத்திருந்தவனும் கோபத்தை வெளிக்காட்ட, நிராதரவாக விடப்பட்டவள் போல் மனம் கலங்கிப் போனாள் அவள்.

இவளை என்ன செய்வது? தொட்டு ஆறுதல் கூறவும் உரிமையற்ற நிலை.

இதில் இவளது கதறலை நிறுத்தவும் வழித் தெரியவில்லை.. என்ன தான் செய்வது? திகைத்துப் போனான் அமர்.

“மீனா.. முதல்ல இப்படி வந்து உட்காரு மீனா.. நான் ரொம்ப நேரம் இப்படி உன் ரூமுக்குள்ள இருக்க முடியாது.. உங்க அம்மா கீழ தான் இருக்காங்கன்னு மித்ரா சொன்னா.. அவங்க வீட்டுல இருக்கும் போதே இப்படி உன்கூட, அதுவும் உன் ரூமுக்குள்ள நான் தனியா இருக்கிறது நல்லதா? சொல்லு… கோபப்படாமல் பேசணும்னு நினைச்சாலும் நீ விடமாட்ட போல இருக்கே..”

வேறு வழியின்றி மீண்டும் அதட்டுவது போல் சிறிது உரத்த குரலில் உரைத்தவனின் கூற்று அங்கு வேலை செய்தது.

சட்டென்று அமைதியானவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காது கட்டிலில் ஒரு ஓரமாய் அமர்ந்தாள்.

அறையின் ஒரு மூலையில் இருந்த நாற்காலியை லேசாக இழுத்தவன் அதனை அவளது முன் அவளுக்கு வெகு அருகாமையில் போட்டவனாகத் தானும் அமர, திடுமென இவ்வளவு நெருக்கமாக அவன் உட்கார்ந்ததும் விநாடிகள் சில தடுமாறிப் போனாள் அந்தப் பேதை.

விழிகளில் கண்ணீர் திரையிட பேரழகிய முகத்தில் ஒளியென்பதே இல்லாது பதைபதைப்புடன் அமர்ந்திருந்தவளை அழுத்தமாக நோக்கியவன் நிதானமான ஆராய்ச்சியை அவளின் வதனம் மீது செலுத்தினான்.

அவனது கண்களின் கூர்மையைத் தாங்க இயலாதவளாய் கீழுதட்டை பற்களால் அழுந்த கடித்துத் தன்னைச் சமன்படுத்தியவாறே,

“நீங்க சொன்ன மாதிரி நான் உட்கார்ந்துட்டேன்.. சொல்லுங்க, என்ன விஷயமா என்கிட்ட பேசணும்னு வந்தீங்க? மித்ரா..” என்று இழுத்தாள்.

“மித்ரா விஷயத்துக்கு அப்புறம் வருவோம் மீனா.. முதல்ல நான் கேட்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு..”

“ம்ம்ம்..”

“ஏறக்குறைய அன்னைக்கு நடந்த எல்லா விஷயத்தையும் நீயும் உன் ஃப்ரெண்ட்ஸும் போலிஸ்கிட்ட சொல்லிட்டீங்க.. அவங்களும் இன்வெஸ்டிகேட் பண்ணிட்டு தான் இருக்காங்க, அதுல சில உண்மைகளும் அவங்களுக்கு வெளியாகிருக்கு.. ஆனால் இன்னமும் இவங்க தான் கொலைக்காரங்கன்னு ப்ரூவ் பண்ண முடியாமல் அவங்க தடுமாறிட்டு இருக்காங்க.. அண்ட் ஆல்ஸோ நிகித்தா சூசைட் பண்ணிக்கிறதுக்கு முன்னாடி உங்களுக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜிலும் எந்த இடத்திலேயும் அவ ப்ரீத்தியோட பெயரையோ இல்லை சந்தோஷுடைய பெயரையோ குறிப்பிடலை.. அதே மாதிரி ப்ரீத்தியின் கொலைக்கும், நிகித்தாவின் தற்கொலைக்கும் காரணம் யாருன்னு தெளிவா சொல்லலை.. அதனால் இப்போ போலிஸ் எப்படி இவங்க தான் கொலைகாரர்கள்னு நிரூபணம் செய்யறதுன்னு குழம்பிப் போய்த் திரும்பவும் என்னிடம் தான் வந்திருக்காங்க.. அதுக்காகத் தான் நானும் இங்க வந்திருக்கேன்..”

“நிகி வேணும்னே தான் அவங்க யாருடைய பெயரையும் குறிப்பிடலைன்னு நாங்க தான் ஏற்கனவே சொன்னோமே அமர் சார்.. அதுக்கும் காரணம் மித்ரா தானே.. ஆனால் அவ ஃப்ரெண்ட் ப்ரீத்தின்னு எல்லாருக்கும் தெரியும், அதே மாதிரி ப்ரீத்தியும் சந்தோஷும் லவ்வர்ஸ் அப்படின்னும் அவங்க காலேஜ் முழுக்கப் புரளி இருக்கே.. அப்படின்னா போலிஸினால் இதை ஒண்ணு சேர்த்துப் பார்க்க முடியாதா?”

“நோ மீனா.. அப்படி எல்லாம் செய்ய முடியாது.. நிகித்தாவிற்கு ஃப்ரெண்ட்ஸ் நிறையப் பேர் இருக்காங்க.. அண்ட் ஆல்ஸோ ஒரு கொலையில் எந்த ஆதாரமும் இல்லாமல் திடீர்னு ஒருத்தரை சம்பந்தப்படுத்த முடியாது.."

"ஆனால் அன்னைக்கு நைட் அங்க இருந்தது 'பிரான்னாஸ்' அப்படிங்கிற ஒரு டீமைச் சேர்ந்த பசங்கன்னு நிகி சொன்னான்னு உங்கக்கிட்ட சொன்னோமே.. அதுவும் இல்லாமல் 'ஹெல்ரைஸர்' ன்னு இன்னொரு டீமும் இருக்கு, அதைச் சேர்ந்தவன் தான் இந்தச் சந்தோஷ்.. திடீர்னு அவன் 'பிரான்னாஸ்' டீமோடு சேர்ந்திருக்கான், இல்லை 'ஹெல்ரைஸர்' டீமும் இவனுங்களோட ஒண்ணா சேர்ந்திருச்சான்னு எனக்குத் தெரியலை, ஆனால் அப்படிச் சேர்ந்திருந்தா எனக்கு இன்னும் ஆபத்து தான் நிகி சொன்னாளே.. அப்படின்னா போலீஸ் அந்தப் பிரான்னாஸ் க்ரூப் பசங்களை அரெஸ்ட் பண்ணி விசாரிக்கலாமே?"

"அரெஸ்ட் பண்ணலை மீனா, பட் விசாரிச்சிருக்காங்க.. ஆனால் சந்தோஷ் பிரான்னாஸ் க்ரூப்போட சேர்ந்திருக்காங்கிறதுக்கு எந்த ஆதாரமும் இல்லை.. காலேஜ் முழுக்க விசாரிச்சிருக்காங்க, ஆனா அவன் 'ஹெல்ரைஸர்' டீமைச் சார்ந்தவன் தான், அவன் நிச்சயமா 'பிரான்னாஸ்' டீமுக்குள் போய்ச் சேருவதற்கு வழியே இல்லை, அந்த அளவுக்கு அந்த ரெண்டு டீமுக்குள்ளும் பிரச்சனைகளும் சண்டைகளும் நடந்திருக்குன்னு ஸ்டூடண்ட்ஸ் துவங்கி அங்க வேலை பார்க்கும் ஃப்ரொஃபஸர்ஸ் வரைக்கும் அடிச்சுச் சத்தியம் செய்யாத குறையா சொல்றாங்க.. ஸோ, இதுல 'பிரான்னாஸ்' சம்பந்தப்பட வாய்ப்பு இல்லைங்கிற ஆங்கிலில் தான் போலீஸும் இந்தக் கேசை என்கொயரி பண்ணிட்டு இருக்காங்க.."

"அது எனக்குத் தெரியலை சார்.. அந்தப் பசங்களை நான் பார்க்கலை.. இதுக்குச் சாட்சியா இப்ப நிகியும் இல்லை.." என்றவள் சற்று நிறுத்தி, "ஆனால் நிகியோட அட்டாப்ஸியில் [autopsy] அவளுக்கு நடந்த அக்கிரமங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இருக்கு இல்லையா? ஏன் அதை வைச்சு அவளை ரேப் செய்த பசங்களைக் கண்டு பிடிக்க முடியாது?" என்றாள் சற்று தயக்கத்துடன்..

'ரேப்' என்ற வார்த்தையைக் கூறும் பொழுது மனம் வேதனையுற்றது.. அதே போல் தன்னுடன் தனித்து இவ்வளவு நெருக்கமாக அமர்ந்திருக்கும் ஒரு ஆண்மகனிடம் இதைப் பற்றிப் பேசுகிறோமே என்ற கூச்சமும் அடைந்தது பெண்ணுள்ளம்.

அவளின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டவனாக விநாடிகள் சில அமைதியாக இருந்தவன், மெல்ல இழுத்து மூச்சினை விட்டவனாகத் தொடர்ந்தான்.

"அட்டாப்ஸி பண்ணிருக்காங்க மீனா, ஆனால் கடந்த மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் அவளுக்கு அப்படி எதுவும் நடக்கலைன்னு அட்டாப்ஸி ரிஸல்ட் சொல்லுது.. ஐ மீன், செக்ஸுவல் அசால்ட் நடந்து முடிந்த 92 மணி நேரங்கள் வரைக்கும் கூட அதற்கான எவிடன்ஸ் ஒரு பெண்ணின் உடம்பில் நிறையவே இருக்கு வாய்ப்பு இருக்கு.. ஆனால் அப்படி எதுவும் நிகித்தா உடம்பில் இல்லைன்னு மெடிக்கல் எக்ஸாமினர்ஸ் சொல்லிருக்காங்க.. அதுவும் இல்லாமல் அவள் உடம்பில் ப்ரூஸஸ் [bruises] ஐ மீன் காயங்களும் இல்லை.. ஸோ, இது ரேப் கேஸ் இல்லைன்னு முடிச்சிட்டாங்க.."

"என்ன சொல்றீங்க, ரேப்.." என்றவள் இதற்கு மேல் அவனிடம் எப்படி விளக்குவது என்று தெரியாமல் கூச்சத்தில் பேச்சினை நிறுத்திவிட, அவள் என்ன சொல்ல வருகின்றாள் என்பதைப் புரிந்துக் கொண்டவனாக,

"An autopsy cannot determine if sexual activity was rape or consensual. The problem is that even if there are other evidences, they are likely to be considered to have had consensual but rough sex, and it cannot proved that rape has taken place.. அதுவும் இல்லாமல் ஒரு பெண்ணின் கருப்பை வாயிலில் 110 மணி நேரம் முதல் 7 நாட்கள் வரையிலும் ஒரு ஆணின் விந்தணுக்கள் இருக்க வாய்ப்பு இருக்கு.. இயங்கும் திரன் இல்லாது விந்தணுக்கள் 12 நாட்கள் வரையிலும் கருப்பை வாயிலிலும், யோனியில் 14 மணிநேரம் முதல் 17 நாட்கள் வரையிலும் இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வறிக்கைகள் சொல்லுது மீனா.. 'A rape-murder victims' ன் உடலில் 70 நாட்களில் இருந்து 4 மாதங்கள் கூட வரை விந்தணுக்கள் இருக்கலாம், ஆனால் எவ்வளவோ பரிசோதனைகள் செய்தும் அவள் உடலில் விந்தணுக்கள் எதுவுமே இப்ப இல்லைன்னு சொல்றாங்க..

ஒரு வேளை அவனுங்க தற்காப்புச் சாதனங்கள் எதுவும் உபயோகப்படுத்தி இருந்தாலும் இருக்கலாம், ஆனால் கற்பழிப்பு வழக்குகளில் வெறும் 15% ஆண்கள் தான் அப்படிப் பாதுகாப்போடு இருப்பாங்கன்னும் ஆய்வறிக்கைகள் சொல்லுது.. ஸோ, மெடிக்கல் எக்ஸாமினர்ஸைப் பொறுத்தவரை குறைஞ்சது நிகித்தாவுக்கும் அந்தப் பசங்களுக்கும் தொடர்பு, ஐ மீன் ஃபிசிக்கல் ரிலேஷன்ஷிப் இருந்து நான்கு மாதங்கள் வரை ஆகி இருக்க வாய்ப்பு இருக்குன்னு சொல்றாங்க.. எனக்கும் போலீஸுக்கும் இருக்கிற ஒரே சந்தேகம், கடைசியா அவளை அவனுங்க உடல் ரீதியா காயப்படுத்தினதுமே அவள் இந்த முடிவிற்கு வராது, ஏன் நாலு மாசம் வரை வெயிட் பண்ணினா? ஒரு வேளை அவனுங்க வேற வழியில் அவளை டார்ச்சர் செய்தாங்களா? இது எதுவுமே புரியாத நிலையில் நாங்க இப்ப இருக்கோம்.." என்று அவளுக்குப் புரியும் வகையில் ஒரு தடயவியல் நிபுணனாக விளக்கமாகக் கூறி முடிக்கவும், அனைத்துக் கதவுகளும் அடைபட்டது போல் சோர்ந்துப் போனாள் பெண்ணவள்.

"அப்படின்னா அந்தப் பசங்களைப் பிடிக்க வேற வழியே இல்லையா?"

"இருக்கு.. அதுக்கு நீ தான் எனக்கு உதவி செய்யணும்.. அதான் உன்னைத் தேடி வந்திருக்கேன்..”

“சரி என்ன வேணுமோ கேளுங்க..”

“அன்னைக்கு மித்ராவை ரேப் செய்தாங்களா?”

அவனது கேள்வி அமிலத்தால் தன்னைக் குளிப்பாட்டியது போல் இருந்ததில் படீரென்று கட்டிலில் இருந்து எழுந்தவள் தடுமாறி அமரின் மீதே விழப் போக, அவளை விழவொட்டாது அவளது மெல்லிடைப் பற்றிப் பிடித்தவனோ மீண்டும் சூழ்நிலை மறந்து நிலைகுலைந்து போனான்.

தனது இடையை இறுக்கிப் பிடித்திருக்கும் அவனது இரு கரங்களையும் பற்றி விலக்கியவள்,

“இதே கேள்வியை எத்தனை முறை மீடியாஸும் போலீஸும் கேட்டாங்க.. இப்ப நீங்களும் இதே கேட்டால் நான் என்ன சொல்றது சார்?” என்ற கசந்த குரலில் கூற, அவளை மீண்டும் கட்டிலில் அவள் முன்னர் அமர்ந்திருந்த அதே இடத்தில் அமரச் செய்தான்.

“மீடியாஸ் வேற நான் வேறன்னு உனக்குத் தெரியும் மீனா.. நீ சொல்ற உண்மையில் தான் என்னால் ப்ரீத்திக்கும் நிகித்தாவுக்கும் நியாயத்தைக் கொண்டு வர முடியும்.. So you have to tell me the truth, Meena..”

“உண்மையைத் தான் சொல்றேன் சார்.. மித்ராவுக்கு அப்படி எதுவும் நடக்கலை.. “

“எப்படிச் சொல்ற? நீ அந்த இடத்துல இல்லைன்னு சொல்ற, She was also drugged [அவளும் போதையில் இருந்திருக்கா] பிறகு எப்படி இவ்வளவு தெளிவா சொல்ற?”

“என்ன அமர் சார்.. ஒரு பொண்ணுக்குத் தன்னை யாரோ பலவந்தப்படுத்தி இருக்காங்களா, இல்லையான்னுக் கூடவா தெரியாது? அதுவும் அங்க இருந்தது ஒருத்தன் இல்லை, நிறையப் பேர்.”

“அது தான் கேட்கிறேன்.. யெஸ் ஆர் நோ மட்டும் சொல்லு, பட் ஐ வாண்ட் தி ட்ரூத்..”

“இல்லை அமர் சார்.. அவளுக்கு அப்படி எதுவும் நடக்கலை..”

“சரி, எனக்கு ப்ரீத்தியோட டெட்பாடிக் கிடைச்ச இடத்தில் இருந்து சில எவிடன்ஸ் கிடைச்சது.. அதோட கனெக்ட் பண்ணி நான் இன்னும் சில ஆராய்ச்சிகள் பண்ணனும்.. அன்னைக்கு மித்ரா போட்டிருந்த ட்ரெஸ் இருக்கா?”

“இல்ல சார்.. அதைத் தூக்கிப் போட்டுட்டோம்..”

“நினைச்சேன்.. சரி, உன்னுடையது..”

“இருக்கு..”

“ஒகே, அதை எடுத்துட்டு வா..”

“எதுக்கு அமர் சார்?”

"மீனா, என்னுடைய ப்ரொஃபஷன் பத்தி உனக்குத் தெரியும் தானே?”

தெரியும்..”

“அப்ப என் மேல நம்பிக்கை வச்சு உன் ட்ரெஸ்ஸை எடுத்துட்டு வா.. அதுவும் இல்லாமல் நான் உங்க வீட்டை சுற்றிலும் கொஞ்சம் ரிசேர்ச் பண்ணணும்.. உங்க அம்மாக்கிட்ட பெர்மிஷன் வாங்கிட்டு சொல்லு, நான் பார்க்கிறேன்..”

“சரி..” என்றவாறே எழுந்தவள் தன்னை நெருங்கி அமர்ந்திருக்கும் அவனது முழங்கால்களில் இடித்துக் கொண்டு நிற்க, மெல்ல நாற்காலியோடு பின்னால் நகர்ந்தவன் தன்னை விட்டு நகர்பவளின் கரத்தைச் சட்டென்று பற்றினான்.

“மீனா..”

பெயரை விளிம்பியவனை ஏறிட்டுப் பார்த்தவளின் விழிகள் என்ன கூறியதோ அவளது மேனி உரசும் அளவிற்கு எழுந்து நின்றவனின் உள்ளத்தையோ, ஒரு கணம் பார்த்தாலும் வாழ்நாள் முழுவதுமாய் மனதை விட்டு அகற்றமுடியாத பேரழகுச் சிற்பம் போல் இருப்பவளின் தற்போதையை நிலையின் விபரீதம் தவிப்பாய் அவனைப் படுத்தியதில் அவனது பிடியும் இறுகியது.

“சொல்லுங்க அமர் சார்..”

கூறியவளுக்கு அவன் கைப்பற்றி இருக்கின்றான் என்ற உணர்வே இல்லையோ என்னவோ ஆனால் அமருக்கு ஒரு வித மனநிறைவையும், உரிமை உணர்வையுமே அது கொடுத்தது.

“ம்ப்ச்.. உன் கையை இப்படிப் பிடிச்சிருக்கேன்.. திரும்பவும் அமர் சார், அமர் சார்னு, சார் போட்டே கூப்பிட்டால் எப்படி மீனா?”

அதுவரை சிந்திக்கும் சக்தியையே சித்தம் இழந்தது போல் நின்றிருந்தவள் அப்பொழுது தான் கவனித்தாள், தன் இடது கரத்தை அவனது வலதுக் கரம் இறுக்கப் பிடித்திருப்பதை.

ஆயினும் ஏனோ அவனை விட்டு விலகவும் மனம் இல்லை, அவனது கையை அகற்றி விடவும் இதயம் இடம் கொடுக்கவில்லை.

மெல்லிய ஸ்வாசம் மட்டும் வெளிவர வார்த்தைகளற்று, ஏறக்குறைய உணர்வுகள் வெடவெடக்க, நீர்த்துளிகள் கண்களில் இருந்து உருண்டோட மருண்டப் பார்வையால் தன்னையே உறுத்துப் பார்த்திருப்பவளின் கன்னம் பற்றியது அமரின் மற்றொரு கரம்.

“போதும் மீனா நீ அழுதது.. வரகனாம்பட்டியில் நான் உன்னைப் பார்த்ததில் இருந்து கிட்டத்தட்ட இந்த மூணு மாசமா நீ எவ்வளவு பயந்துப் போய் இருக்கன்னு எனக்குப் புரியுது.. ஏன், இந்த ரெண்டு வருஷமா நீ மனசுக்குள்ள எவ்வளவு புழுங்கியிருப்பன்னும் என்னால உணர்ந்துக்கொள்ள முடியுது.. அதே போல் அசம்பாவிதம் நடந்த அன்னைக்கு நீ இருந்த சூழ்நிலையும் வேற.. ஒரு அக்காவா, ஒரு ஃப்ரெண்டா நீ அந்தத் தருணத்துக்கு ஏற்ற முடிவு எடுத்திருக்க.. அது தப்பா சரியான்னு இப்ப நான் உன்னை ஜட்ஜ் பண்ண இங்க வரலை.. ஆனால் இதுக்கு மேலேயும் நீ கஷ்டப்படாமல் இருக்க வைக்கிறது என்னவோ என் பொறுப்பு போல எனக்குத் தோனுது.. I swear I do not know why, but I can’t see you crying..[சத்தியமா ஏன் என்று எனக்குத் தெரியலை, ஆனால் நீ அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை] நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா மீனா?”

அவன் என்ன கூற வருகின்றான் என்பது பெண்ணவளுக்கு நன்றாகவே புரிந்தது.

இப்படியான ஒரு இக்கட்டான தருணத்தில் இது என்ன ஒரு உணர்ச்சிப் போராட்டம் இருவருக்கும் இடையில்.

இப்பொழுது காதல் தேவையா? ஆயினும் அமரின் கண்களில் தெரிந்த தெளிவும், உறுதியும் அவளைப் பேசாமடைந்தாக்கியது.

அவளது மௌனத்தைச் சம்மதமாக எடுத்துக் கொண்டவன் அவளது தோள்பற்றித் தன் மார்பில் சாய்த்துக் கொள்ள, அமைதியாக அவனது நெஞ்சில் தலை சாய்த்தவளின் செய்கையோ உணர்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போட தயாராகியவனின் வேகத்தைத் தடை செய்ததில் தடுமாறிப் போனான் அந்த இளைஞன்.

மெல்ல கரத்தை உயர்த்தியவன் அவளது கேசத்தை வருட, சத்தமின்றி அவனை ஏறெடுத்து நோக்கியவளின் ரோஜாப்பூ போல் சிவந்த நுனி மூக்கும், ஆறுதல் வேண்டி தன்னை விழுங்கிவிடுவது போல் பார்க்கும் நீளக் கண்களும் ஏற்கனவே பெரும் தடுமாற்றத்தில் சிக்கி இருந்தவனின் நிலையைப் பெரும் அவஸ்தைக்குள்ளாக்கியது.

“சார்..”

உதடுகள் முணுமுணுக்க மெல்லிய குரலில் கூறியவளைக் கண்டு சிறு புன்னகைப் பூத்தவன், “திரும்பவும் சாரா? அமருன்னே கூப்பிடு மீனா..?" என்றான்.

தன்னை விட வயதில் மூத்தவன், எவ்வாறு பெயர் சொல்லி அழைப்பது?

ஆனால் இப்பொழுது அவனது பரந்த மார்பில் உரிமையாய்ச் சாய்ந்திருக்கும் வேளையில் அவனுக்கும் தனக்கும் இடையேயான உறவும் அப்பட்டமாய் வெளிப்படுகின்றதே, கன்னி அவளுக்குத் தன் மனம் புரியாமல் போகுமா?

ஆழ பெருமூச்செடுத்துத் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவாறே,

“அமர், ப்ரீத்திக்கும் நிகிக்கும் நடந்த கொடுமைக்குக் கண்டிப்பா நீதிக் கிடைக்கணும்.. அதே போல் மித்ராவும் என் பிரண்ட்ஸும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வெளி வரணும், அதுக்கு நீங்க மட்டும் தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ண முடியும்னு எனக்குத் தோணுது.. செய்வீங்களா?” என்று யாசித்தவளின் துடிக்கும் அதரங்கள் காதல் என்னும் சுழற்காற்றில் அவனை மேலும் மேலும் மெல்லமாய்ச் சிக்க வைத்தது.

தனது உடமையாய் அவளை எண்ணியவனாய் அவளது பிறை நெற்றியில் மென் முத்தம் பதித்தவன், “நிச்சயமா மீனா.. என்னை நீ நம்பலாம்..” என்றவாறே அவளை இறுக்க அணைக்க, அவனை விட்டு நகர இயலாதவளாக அவளும் அவனது விருப்பத்திற்கு இணங்கினாள்.

நிமிடங்கள் கடக்க, கீழே அவளது அன்னை இருக்கின்றார் என்பது நினைவில் வரவும், முதலில் தன்னை மீட்டுக் கொண்டது அமர் தான்.

தன்னை அவளின் பூப்போன்ற தேகத்தின் ஸ்பரிசத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள முடியாது தடுமாறியவாறே அவளைச் சற்று தள்ளி நிறுத்தினான்.

“தேங்க்ஸ் அமர்..”

“முதல்ல எல்லாப் பிரச்சனைகளையும் சால்வ் பண்ணிட்டு வரேன், அப்புறமா தேங்க்ஸ் சொல்லு.. அதுக்கு முன்னாடி உங்க அம்மாவைப் பார்க்கணும், வா.. இல்லைன்னா நம்மளை எதுவும் தப்பா நினைக்கப் போறாங்க..”

சிறிதாய் புன்னகைத்தவள் இரு வருடங்களுக்கு முன் அசம்பாவிதம் நடந்த அன்றைய இரவில் அணிந்திருந்த உடையை எடுத்து ஒரு பாக்கெட்டில் போட்டவளாய் அவனிடம் கொடுத்துவிட்டு வெளியில் வர, கீழே விரல் நகங்களைக் கடித்தவாறே அமர்ந்திருந்த மித்ரா வெடுக்கென எழுந்தாள்.

“அமர் சார்.. என்னிடம் எதுவும் சொல்லக் கூடாதது இருக்கா? அதான் அக்காவை மட்டும் கூட்டிட்டுப் போய் விசாரிக்கிறீங்களா?”

பரிதாபமாய்க் கேட்கும் சின்னவளின் தலையை வருடியவன், “அப்படி எல்லாம் இல்லை மித்ரா, எனக்கு உங்க வீட்டைச் சுற்றியும் கொஞ்சம் பார்க்க வேண்டியிருக்கு.. உங்க அம்மாக்கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டுவா..” எனவும், விடுவிடுவென்று அன்னையின் அறையை நோக்கி ஓடியவள் அவரிடம் அனுமதி பெற, வீட்டை விட்டு வெளியே வந்த அமரின் ஆராய்ச்சி துவங்கியது.

***************************************

கேரளா மாநிலத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர்களுக்கு ஊடாக அமைந்திருக்கும் மாவட்டம் பாலக்காடு.

பண்டைய தமிழகத்தில் ஒரு பகுதியாக விளங்கிய இந்தப் பாலக்காட்டு மாநிலத்தில் சமணமும் பௌத்தமும் பரவியிருந்த காலத்தில் பாலி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்ததினால், இம்மாவட்டத்திற்குப் பாலக்காடு (பாலிக்காடு) என்று பெயர் வந்தது என்றும் ஒரு சாரார் கூறுவர்.

அதே போல் பாலக்காட்டைச் சுற்றிலும் நிறையப் பாலை மரங்கள் நிறைந்திருந்ததால் இம்மாவட்டம் ‘பாலைக்காடு’ என்று அழைக்கப்பட்டதாகவும் கூறுப்படுவது உண்டு.

அப்பேற்பட்ட, பரந்து விரிந்து கிடக்கும் பசுமையான நெல் வயல்களுக்கும், உயர்ந்து நிற்கும் பனை மரங்களுக்கும் புகழ்பெற்று விளங்கும், கேரளாவின் தலைவாசல் என்று பாராட்டப்படும் பாலக்காடு மாவட்டத்தின் ‘K.R.S Institute of Arts and Science’ என்ற பெயர் கொண்ட கல்லூரி, கடந்த மூன்று வாரங்களாகவே காவல் துறை மற்றும் ஊடகங்களின் படையெடுப்பில் பரபரப்பில் மூழ்கியிருந்தது.

இரு வருடங்களுக்கு முன் ப்ரீத்தி தன் காதலனுடன் ஓடிப் போய் விட்டாள் என்றே அவளது வழக்கு மூடப்பட்டது.

ஆனால் இன்றைய நிலையோ வேறு.

ப்ரீத்தி மற்றும் நிகித்தாவின் மரண வழக்கில் தொடர்புடைய நபர்களைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் பல்வேறு கோணங்களில் இவ்வழக்கை விசாரிக்க, ப்ரீத்தியின் காதலனாக வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டிருந்த சந்தோஷின் மறைவு (disappearance) கல்லூரி மாணவர்களுக்கு இடையில் இப்பொழுது பெரும் சலசலப்பை உருவாக்கி இருந்தது.

'அப்படின்னா ப்ரீத்தியும் சந்தோஷும் லவ்வர்ஸ் இல்லையா?'

'அவங்க ரெண்டு பேரும் ஓடிப் போகலையா?'

'அப்படின்னா சந்தோஷ் எங்கே?'

'கடந்த இரண்டு வருஷமா அவன் இந்தக் காலேஜ் பக்கமே வரலையே? அப்போ எங்கப் போயிட்டான் அவன்?'

'அவன் ஃபேமிலி கூட அவனைத் தேடிட்டு இருந்ததா கேள்விப்பட்டோமே, அப்போ அவங்களுக்கும் அவன் எங்க இருக்கான்னுத் தெரியாதா?'

பல்வேறு கேள்விகள் மாணவர்களின் மத்தியில் உலாவின.

'ஹெல்ரைஸர்' என்ற அணியில் இருந்து கொண்டு சந்தோஷ் கல்லூரிக்குள்ளும் வெளியிலும் செய்து கொண்டிருந்த அக்கிரமங்களையும் அட்டூழியங்களையும் பற்றி அனைவரும் அறிந்திருந்ததினால்,

‘நிச்சயமா ப்ரீத்தி அவனை லவ் பண்ணியிருக்கவே முடியாது.. அவன் தான் அவளை எதுவோ பண்ணிருக்கணும்.. அதுக்குப் பயந்துட்டு தான் அவன் டிஸப்பியர் ஆகியிருக்கணும்.. இதைப் பத்தி யோசிக்காமல் அவங்க ரெண்டு பேரும் ஓடிப் போயிட்டதா நினைச்ச நாம் தான் முட்டாள்..’ என்று இன்று சலசலத்துக் கொண்டிருந்தனர் அக்கல்லூரி மாணவர்களும், அங்குப் பணி புரிபவர்களும்.

இப்படியான சூழ்நிலையில் சந்தோஷின் இருப்பிடத்தை அறிய இயலாமலும், உண்மையான குற்றவாளிகளைக் கண்டு பிடிக்க முடியாமலும் தடுமாறிய காவல் துறையினரின் ஒரே வடிகால் 'ஹெல்ரைஸர்' அணியைச் சேர்ந்த ஆனந்தே.

ரிஷி, ஆனந்த், சேகர் மற்றும் பிரசன்னாவைக் கைது செய்து விசாரித்த தனிப்படை காவல் அதிகாரிகள் இந்நால்வரில் ஆனந்தைத் தவிர மற்ற அனைவரையும் வேறு வழியின்றி ஒரு சில மணி நேரங்களுக்குள்ளாகவே விடுதலை செய்ய வேண்டியதாகிவிட்டது.

காரணம் அவர்களது செல்வச் செழிப்பு.

ஆனால் ஆனந்த் அப்படி அல்லவே. வெகு சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருந்தவன் அவன்.

பெரும் அரசியல்வாதியான ரிஷியின் தந்தை அவர்கள் ஐவரும் சேர்ந்து செய்திருந்த கொடும் பாதகங்களின் சாட்சியாக இருக்கும் காணொளிகளையும் புகைப்படங்களையும் முற்றிலுமாக அழிக்கச் சொன்னவர், ஆனந்த் இருக்கும் இடம் பக்கமே தலை வைக்கக் கூடாது என்று உறுதியாகக் கூறிவிட, அந்நாள் வரை ரிஷியின் ஆதரவால் கொழித்துக் கொண்டிருந்தவனின் நிலை இப்பொழுது படு மோசமாகிப் போனது.

ஆக நண்பர்களின் ஆதரவும் கிடைக்காதுப் போக, காவல் துறையினர் கொடுத்த சித்திரவதையில் சந்தோஷ் ப்ரீத்தியின் மீது கொண்ட காதலையும், தங்கள் அணியின் முதல் நிபந்தனையே காதலிக்கக் கூடாது என்பதால் அவன் 'ஹெல்ரைஸர்' அணியில் இருந்து விலக்கப்பட்டதையும் கூறினான்.

ஆயினும் காவல் துறையினருக்கு அது போதவில்லை

மேலும் மேலும் அவனைக் குடைய, முழு உண்மை தெரியாவிட்டாலும், 'பிரான்னாஸ்' அணியில் சந்தோஷ் சேர்ந்துவிட்டதைத் தான் எவ்வாறு ரகசியமாக அறிந்து கொண்டான் என்பதைப் பற்றிக் கூறியவன்,

"எங்கள் அணியில் இருந்து விலகிய அன்றில் இருந்து சந்தோஷைப் பற்றிய எந்த ஒரு விஷயமும் எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் பிரான்னாஸ் அணிக்குத் தெரிய வாய்ப்பிருக்கு.." என்று கூறியதில், காவல்துறையினர் தலைமயிரைப் பிய்த்துக் கொண்டனர்.

ஏனெனில் ரிஷி, சேகர், பிரசன்னாவை விட இந்தியா முழுவதுமே பெரும் செல்வாக்குப் படைத்த, தன் ஒற்றை விரலால் மத்திய அரசியலையே ஆட்டிப் படைக்கும் பெரும் அரசியல்வாதி பிரஷாந்தின் தந்தை.

அப்பேற்பட்ட மத்திய அமைச்சரின் ஒரே மகனை இப்படியான ஒரு வழக்கில் விசாரிக்கக் காவல் துறையினர் வருகின்றனர் என்று தெரிந்தால், என்னவாகும்?

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நேர்மையான காவலர்களின் வேலைக் காலியாகுமோ அல்லது வேறு இடங்களுக்கு (தண்ணீர் இல்லாத காட்டிற்கு?) அவர்கள் மாற்றப்படுவார்களோ?

என்ன செய்வது என்று குழம்பிப் போய் வழியற்று அவர்கள் நின்று கொண்டிருக்கும் அந்த நாள் தான், அமரின் ஹோண்டா பைக் காவல் நிலையத்திற்குள் நுழைந்தது.

“வாங்க அமர் சார்.. உங்களைத் தான் எதிர்பார்த்துட்டு இருந்தோம்.. பைக்கிலேயே கோயம்புத்தூரில் இருந்து வந்திட்டீங்களா என்ன?”

நட்புடன் விசாரித்த காவலரைக் கண்டு புன்னகைத்தவனாக ஹெல்மெட்டை பைக்கில் வைத்தவன் காவல் நிலையத்திற்குள் நுழைய, ப்ரீத்தியின் வழக்கை விசாரிக்க அமைக்கப்பட்டிருக்கும் தனிப்படையினரின் தலைவர் ஜான்சன் பெரும் சிந்தனை துலங்கும் முகத்துடன் அவனை வரவேற்க வெளியில் வந்தார்.

“என்ன ஜான்சன்.. ரொம்பக் குழப்பத்தில் இருக்கிற மாதிரி இருக்கீங்க?”

“கம்மின் அமர்..” என்றவர் அது வரை நடந்திருந்த விசாரணைகளை விளக்கத் துவங்கினார்.

“ஆஹ, இப்ப அந்த ஆனந்தை அவனுங்க அம்போன்னு விட்டுட்டானுங்க..”

“யெஸ் அமர்..”

“அவனுங்களும் நல்லவனுங்க இல்லையின்னு கேள்விப்பட்டோமே ஜான்சன்.. அவனுங்க டீமோட பெயரே சொல்லுதே, 'ஹெல்ரைஸர்..' என்னமோ நரகத்துல இருந்து எழுந்து வந்த பேய்ங்கிற மாதிரி என்ன பெயர் இது? கண்டிப்பா அவனுங்க ஒவ்வொருத்தனுக்குப் பின்னாடியும் நிறையத் தோண்டப்பட வேண்டிய இரகசியங்கள் இருக்கலாம்.. இந்நேரம் சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அவனுங்க அழிச்சிருக்கலாம், ஆனாலும் நாம் தோண்டினால் நிறைய இரகசியம் கிடைக்க வாய்ப்பு இருக்கு.. திடீர்னு அவன் 'பிரான்னாஸ்' அணிக்கூடச் சேர்ந்தது பிடிக்காமல் கூட அவனுங்க சந்தோஷை ஏதாவது பண்ணிருக்கலாம்..”

“இருக்கலாம் அமர், அந்தச் சந்தேகத்தின் அடிப்படையிலும் ஆனந்திடம் நாங்க விசாரணை மேற்கொண்டோமே.. ஆனால் அப்படி எதுவும் நடக்கலைன்னு அவன் அடிச்சுச் சத்தியம் பண்ணி சொல்றான்.."

“அவன் சொல்றது உண்மைன்னு நம்புறீங்களா?”

“கண்டிப்பா இல்லை அமர்.. என்னைப் பொறுத்தவரை அவன் சொல்ற விஷயங்களில் பாதிப் பொய் தான் இருக்கு..”

“அதனால் தான் சொல்றேன்.. இவனுங்களுக்கு இடையில் பிரச்சனை ஸ்டார்ட் ஆனதே ப்ரீத்தியினால் தான்.. சந்தோஷ் அவளை லவ் பண்றான்னுத் தெரிஞ்சதினால் தான் அவனுங்க ஃப்ரெண்ட்ஷிப்புக்குள்ள பிரச்சனைகள் வந்திருக்கு.. அதுக்காக அவனைத் தண்டிக்கணும்னு நினைச்சிருக்கலாம்.. அல்லது சந்தோஷையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு ரிஷியும் அவன் ஃப்ரெண்ட்ஸுமா சேர்ந்து ப்ரீத்தியை ஏதாவது செய்திருக்கலாம்.. மித்ரா பார்த்தவரை அன்னைக்கு நைட் குறைஞ்சது ஐந்தில் இருந்து ஆறு பசங்க அங்க இருந்துருக்கானுங்க.. அதுல ‘சந்தோஷ் என்னை விட்டுடுன்னு’ ப்ரீத்தி கத்துன மாதிரி தான் கேட்டுச்சுன்னு வேறு சொல்லிருக்கா, ஆனால் அவள் அப்ப இருந்த நிலையில் என்னால் தெளிவா எதுவும் சொல்ல முடியலைன்னும் சொல்றா.. என்னை அவனுங்க இடத்துக்குக் கூட்டிட்டுப் போனதுமே எனக்கு ஆல்கஹால் கொடுத்து மயங்க வச்சிட்டாங்க, அதனால் அங்க இருந்த வேற பசங்களோட பேரும் எனக்குத் தெரியலைன்னு சொல்லிருக்கா.."

"யெஸ் அமர், ட்ரூ [true].. அதனால் தான் நெல்லியம்பதி ஃபாரஸ்டில் அன்றைய நாளில் இருந்தது ஹெல்ரைஸர் டீமா அல்லது பிரான்னாஸோட டீமான்னு எங்களால் கண்டு பிடிக்க முடியலை..."

"But alibi?"

"இந்தக் காலத்துப் பசங்களுக்கு, அதுவும் இவ்வளவு பெரிய இடத்துப் பசங்களுக்கு அதெல்லாம் சொல்லித் தரணுமா என்ன அமர்? நாங்க அந்த இடம் பக்கமே போகலைங்கிற மாதிரி ஈஸியா ஆலுபை செட் பண்ணி வச்சிருக்கானுங்க.."

"எதிர்பார்த்தேன், எனிவேய்ஸ் இப்ப இருக்கச் சூழ்நிலையில் அன்னைக்கு நடந்த க்ரைமில் சந்தோஷின் பங்கும் இருக்கு, அவன் கூடச் சிலர் இருந்திருக்காங்க.. அந்த ஆங்கிலில் எப்படியாவது 'ஹெல்ரைஸர்' அணியைச் சேர்ந்தவங்களைப் பிடிச்சி மீண்டும் விசாரிக்க ஆரம்பிங்க.. இதுல யாராவது தலையிட்டால் அல்லது எந்த அரசியல் கட்சியின் குறுக்கீடும் இருந்தால் மேலிடத்துக்குக் கொண்டு போங்க.. இதுக்குள்ள நான் மீண்டும் க்ரைம் சீனில் கண்டுப்பிடிச்ச எவிடன்ஸை வச்சு க்ரிமினல்ஸைக் கண்டு பிடிக்க முடியுமான்னு பார்க்க ஆரம்பிக்கிறேன்..”

மேலும் சில விஷயங்களை அவரிடம் பேசிவிட்டு தனது பைக்கினைக் கிளப்பினான் அமர், ப்ரீத்தி, நிகித்தா மற்றும் ஹெல்ரைஸர், பிரான்னாஸ் அணியினைச் சேர்ந்த அனைவரும் படித்த, படித்துக் கொண்டிருக்கும் கல்லூரிக்கு.

************************************************

K.R.S Institute of Arts and Science

பாலக்காட்டின் மையப்பகுதியில் அமைந்திருக்கும், ஆண் பெண் என்று இருபாலரும் படிக்கும் மிகப்பெரிய பிரம்மாண்ட கட்டிடங்களைக் கொண்ட, பிரபலமான கல்லூரி அது.

கல்லூரியின் உள்ளே இந்திய நாட்டின் பாரம்பரியமான உடைகளையே மறந்துவிட்டது போல் இளம்பெண்கள் குர்த்தாவுடனும், டைட்ஸ், சில்க் சிகரெட் பேண்ட்ஸ், எத்னிக் க்ராப் டாப்ஸ், ஆங்காங்கு கிழிந்த ஜீன்ஸ், பலாட்ஸோ என்று நாகரிக உடைகளில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

பசைப்போட்டது போல் அவர்களை ஒட்டியே நடந்து கொண்டிருந்தனர் விதவிதமான ஹேர் ஸ்டையிலோடு, நாகரிகம் என்ற பெயரில் க்ரஷ்ட் ஜீன்ஸ், பூக்கள் மற்றும் படங்கள் போட்ட ஜீன்ஸ், எம்பிராய்டரி டிசைன் ஷேர்ட்ஸ், வெளுத்துப்போன ஆடைகள் என்று அணிந்திருந்த இளம் வாலிபர்கள்.

தானும் இருபத்தி ஏழு வயது இளைஞன் தான் என்றாலும், இந்த வாலிப கூட்டம் அணிந்திருக்கும் உடைகளைக் கண்டு சற்று வியப்புடன் அவர்களின் மீதே பார்வையைப் பதித்தவாறே கல்லூரியின் வளாகத்திற்குள் நுழைந்தான் அமர்.

ஆக்ரோஷமான, அதிநவீன மற்றும் சுற்றிலும் இருப்பவர்களுக்கு ஒரு வித அதிர்வைக் கொணரும் பைக் அது.

ரேஸ்டிராக்கில் நழுவி கொண்டு ஓடக் கூடிய பைக் என்றும், பள்ளத்தாக்குகளிலும் சமதளம் அல்லாத மேடும் பள்ளமுமாக இருக்கும் நிலத்திலும் எவ்வளவு வேகத்தில் சென்றாலும் நிதானம் தவறாத பைக் என்றும் பெயர் பெற்றிருக்கும், ஏறக்குறைய முப்பது இலட்சத்தை விழுங்கியிருக்கும், ‘Fireblade’ வாகனமான Honda CBR1000RR-R பைக்.

அதனை அதிவேகத்துடன் மிரட்டலாக ஓட்டியவாறே வளாகத்திற்குள் நுழைந்தவனைக் கண்டதில், தனது பைக்கில் அமர்ந்து இடது கரத்தால் சிகரெட்டைப் பிடித்தவாறே சுற்றிலும் நடந்து கொண்டிருக்கும் பெண்களின் மீது பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த பிரஷாந்தின் இடது கரத்தில் இருந்த சிகரெட் அவனையும் அறியாது தடுமாற ஆரம்பித்தது.

“இவன் எதுக்குடா இங்க வந்துருக்கான்?”

“அவன் யாரு பிரஷாந்த்?”

கேள்விக் கேட்ட சுதிரை மெதுவாகத் திரும்பிப் பார்த்த பிரஷாந்த் மீண்டும் அமரின் புறம் திரும்பியவன், “இந்த இலட்சணத்துல இருந்தீங்கன்னா நமக்குத் தூக்குத் தண்டனை கன்ஃபெர்ம்..” என்றதில் சுதிர் திகைத்துப் போய்ப் பிரஷாந்தின் புறம் நோக்கினான்.

“என்ன பிரஷாந்த் சொல்ற?”

“பின்ன, ப்ரீத்தியோட கேஸ் வெளியில் வந்ததுக்குக் காரணமே இவன் தானடா? எவ்வளவு மீடியாஸ்ல பார்த்திருப்பீங்க? டிவி முழுக்க இவன் தானேடா இருக்கான்? இந்த இலட்சணத்துல இவன் யாருன்னு வேறக் கேட்குற?”

“அ.. அ.. அந்த அமரா? ஏதோ ஃபாரன்ஸிக்கில இருக்கான்னு சொன்னாங்களே? அவனா?”

“ஏதோ ஃபாரன்ஸிக்லயா? அடேய், ஃபாரன்ஸிக் பாட்டனிஸ்டுடா அவன்..”

“என்ன பிரஷாந்த் ஃபாரன்ஸிக் பாட்டனிஸ்டுங்கிற, ஆனால் அவன் வைச்சிருக்கிற பைக்கைப் பார்த்தால் கோடீஸ்வரன் மாதிரித் தெரியுது?”

“அவன் கோடீஸ்வரன் தான், ஏதோ விரும்பி இந்தத் தொழிலைப் பார்க்குறான்னு ஒரு இண்டெர்வியுவில் இவன் சொல்லி நான் பார்த்தேன்.. ஆனால் இவனுடைய ஆதியும் தெரியலை அந்தமும் தெரியலை.. அந்த அளவுக்கு இவனுடைய பேரண்ட்ஸைப் பற்றியோ, வேற ஃபேமிலி மெம்பர்ஸைப் பற்றியோ ஒருத்தருக்கும் தெரியாமல் ரகசியமா வச்சிருக்கான்.. ஏறக்குறைய ஒரு ஷேடோ [shadow/நிழல்] மாதிரிடா இவன்.. ஆனால் அது இப்போ நமக்குத் தேவையா? நம்ம கெட்ட நேரம் இவன் ப்ரீத்திக் கேசுல இறங்கி இருக்கான்.. இவன் கையில் எடுத்து இருக்கிற கேஸஸ் எதுலேயும் தோற்றுவிட்டதா சரித்திரமே இல்லைன்னு வேற சொல்றாங்க..”

சுதிரின் கேள்விக்கு இப்பொழுது விடையளித்தது வினய்.

அவனது கூற்றில் எண்ணெயில் விட்ட கடுகாய் கோபத்தில் பொரியத் துவங்கியது பிரஷாந்தின் முகம்.

“அப்படின்னா இந்தக் கேசிலும் இவன் ஜெயிச்சுடுவான்னு சொல்றியா? அப்ப ஜெயிலுக்குப் போறதுக்கு நீயே ரெடியாகிட்டன்னு சொல்லு..”

கடுகடுத்த முகத்துடன் அடிக்குரலில் சீறியவனைக் கண்டு வழக்கம் போல் நாடி நரம்பெல்லாம் திகில் பரவியதில் திக்கித் திணறியவாறே,

“நா..நா.. நான் அப்படிச் சொல்ல வரலை பிரஷாந்த்.. ஏற்கனவே அந்த ஆனந்தைப் பிடிச்சு என்கொயரி பண்ணிட்டு இருக்காங்க.. திரும்பவும் ரிஷியையும் அவன் ஃப்ரெண்ட்ஸையும் என்கொயரிக்காகக் கூட்டிட்டு போறதுக்கும் வாய்ப்பு இருக்குன்னு கேள்விப்பட்டோம், அப்படி இருக்க இவன் ஏன் திடீர்னு இங்க வந்திருக்கான்னுத் தெரியலை, அதான்..” என்று வினய் இழுக்க, அவன் மேல் இருந்து வெறுப்பான பார்வையை மீண்டும் அமர் நின்றிருந்த புறம் திருப்பியப் பிராஷாந்திற்கும் அதே கேள்வி தான்.

‘ப்ரீத்தியின் டெட் பாடி கிடைத்த நாளில் இருந்தே ரிஷியோ அவனது டீமோ காலேஜ் பக்கமே வருவதில்லையே, அப்படி இருக்க ரிஷியையும் அவனது ஃப்ரெண்ட்ஸையும் விசாரிப்பதை விட்டுவிட்டு எதற்குக் காலேஜின் பக்கம் இவன் வந்திருக்கின்றான்?’ என்ற வினா பிரஷாந்தின் உள்ளத்தில் ஓட, ஆனால் அதற்கான விடை மட்டும் அவனுக்குத் தெரியவில்லை.

அவனது அடி வயிற்றில் வாழ்நாளில் முதன்முறையாக இலேசாக ஒரு அச்சம் புரள ஆரம்பித்தது.

மறைமுகமான கலக்கத்துடன் அமர் இருந்த திசையை நோக்கி பிரஷாந் திரும்பிய அதே நேரம் சொல்லி வைத்தார் போல் அமரும் பிரஷாந்த் நின்றிருந்த புறம் திரும்பினான்.

சில அடிகள் தொலைவில் நின்றிருந்தாலும் பிரஷாந்தின் உடல் மொழி அமரின் ஈட்டிக் கண்களைச் சரியாகவே சென்று அடைந்தது.

வெளிப்புறத்திற்கு அமைதியாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும், தன்னைக் கண்டதும் இறுக மூடிய வலது கையும், சிகரெட் பிடிப்பதையே மறந்துவிட்டதைப் போல் முகத்திற்கு அருகில் நின்று போயிருக்கும் இடது கையும், கோடாய் அழுந்த மூடிய உதடுகளுமாய், இறும்பு போல் உடல் விறைத்து நின்றிருந்தவனின் மனத்திற்குள் எழுந்த ஆங்காரம் பொங்கிக் கொண்டிருந்தது தெளிவாய் அமருக்குத் தெரிந்தது.

ஆயினும் அதே சமயம் அவன் கண்கள் அவனே அறியாது அச்சத்தையும் அப்பட்டமாய் வெளிப்படுத்தியது.

அக்கணம் அமருக்கு நிரூபணமானது!

நடந்து முடிந்திருக்கும் அக்கிரமங்களுக்கும் இவனுக்கும் கண்டிப்பாகச் சம்பந்தம் இருக்க வேண்டும்..

ஹெல்மெட்டை பைக்கின் மீது வைத்த அமர் கலைந்திருந்த முன்னுச்சி முடியை கோதியவாறே பிரஷாந்த் நின்றிருந்த இடத்தை நோக்கி நடந்து வர, சல்லடைக் கண்களாகத் தன்னைத் துளைத்தெடுத்தவாறே அழுத்தமான நடையுடன் நடந்து வருபவனின் பார்வைக் கூறிய அர்த்தத்தில், பிராஷாந்தின் முகத்தில் மட்டும் அல்ல அவனை நெருங்கி நின்றிருந்த அவனது நண்பர்களின் முகத்திலும் நிழல் படிந்தது.

“நம்மக்கிட்ட தான் வரான் பிரஷாந்த்..”

ஒரு சேர மனிஷும் தீபக்கும் கூற, “அது எனக்குத் தெரியாதா? எனக்குக் கண்ணு இல்..” என்று பிரஷாந்த் முடிப்பதற்குள், அவர்களை நெருங்கிவிட்டிருந்த அமர், “ஐ ஆம் அமர், நீங்க தானே வினய்..” என்று வினய்யை நோக்கி கை நீட்டினான்.

விநாடி நேரம் அமைதியாக இருந்த வினய்,

“பரவாயில்லையே, என்னை இப்ப தான் நேரில் பார்க்குறீங்கன்னு நினைக்கிறேன், அதற்குள் என்னைச் சரியா அடையாளம் கண்டுப்பிடிச்சு அசத்துறீங்க.. யெஸ், ஐ ஆம் வினய்..I am very delighted to invite the most intelligent forensic botanist to our college [மிகவும் புத்திசாலித்தனமான தடயவியல் தாவரவியலாளரை எங்கள் கல்லூரிக்கு அழைப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்]" என்றவாறே அமரின் கைப்பற்றிக் குலுக்கினான்.

ஒரு சில நொடிகள் நேரம் வினய்யின் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்த அமர்,

“இந்தக் காலேஜிலேயே ரொம்பப் பிரபலமாக இருக்கிற ஸ்டூடண்ட்ஸில் நீங்க ஆறு பேரும் உள்ளடக்கம்னு கேள்விப்பட்டேன், அதனால் உங்களைப் பற்றித் தேடிய பொழுது உங்களுடைய ஃபோட்டோஸைப் பார்க்க நேர்ந்தது. ஸோ, உங்களைப் பார்த்தவுடன் இன்று என்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடிஞ்சது. ஆனால் என்னுடைய பெயர் மட்டும் தான் நான் சொன்னேன், நான் ஒரு ஃபாரன்ஸிக் பாட்டனிஸ்ட்டுன்னு சொல்லி இப்போ நீங்க என்னை அசத்திட்டீங்க..” என்றதில் ஒரு முறை அமரின் கரத்தை இறுக்கப்பற்றிப் பிறகு சட்டெனத் தன் கையை விட்டான் வினய்.

அந்த ஒரு செய்கையில் வினய்யின் திகைப்பினை, குற்றவாளிகளைக் கண நேரத்தில் அடையாளம் கண்டு கொள்வதில் கைத்தேர்ந்த நிபுணனான அமர் கண்டு கொண்டான்.

இவர்கள் இருவரின் பாவனைகளைச் சுதிரும் கவனிக்கத் தவறவில்லை.

“இந்தக் காலேஜில் படிச்ச ஒரு பொண்ணுக் கொலை செய்யப்பட்டிருக்கா:.. இன்னொருத்தி சூசைட் பண்ணிருக்காள்.. ஒருத்தன் காணாமல் போயிட்டான்.. இது எல்லாத்தையும் வெளியில் கொண்டு வந்தது ஃபாரன்ஸிக் பாட்டனிஸ்ட்டான அமர் சார் தான்னு இந்தியா முழுக்கப் பிரபலமா பேசிக்கிறாங்க.. எங்களைப் பற்றி நீங்க விசாரிச்சுத் தெரிஞ்சிக்கிட்டீங்க.. ஆனால் உங்களைப் பற்றி நாங்க விசாரிக்கணும்னு கூட அவசியமில்லையே.. எந்த மீடியாவை ஓபன் பண்ணினாலும் நீங்க தான் இருக்கீங்க.. அப்படி இருக்கும் போது உங்களை அடையாளம் கண்டுப்பிடிக்கிறது கஷ்டமா என்ன அமர் சார்?"

சுதிரைத் தொடர்ந்து,

"போலிஸிடம் நீங்க கேசை ஹேண்ட் ஓவர் பண்ணிட்டதாகக் கேள்விப்பட்டோம், ஆனால் இப்போ நீங்க எதுக்கு இங்க வந்திருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கிறதுக்குக் கொஞ்சம் ஆர்வமாகத் தான் இருக்கு.. ஒரு வேளை நீங்க கண்டுப்பிடிச்ச டெட் பாடி ப்ரீத்தீயோடதே இல்லையோ? அப்ப அது யாருடையதா இருக்கும்?” என்று கிண்டலாகக் கூறிய அருணின் பேச்சில் நண்பர்கள் அனைவரின் உதடுகளும் இகழ்ச்சியான புன்னகையைப் பூசிக்கொண்டன.

பெயருக்குக் கூட மனிதாபிமானம் என்பதே அற்று நக்கல் வழியும் குரலில் பேசிய அருணின் பேச்சில் அந்த ஆறு இளைஞர்களையும் ஒரு முறை ஆராய்வது போல் அமர் பார்க்க, அவர்கள் அனைவரது கண்களிலும் சொல்லி வைத்தார் போன்று ஒரு பளபளப்புத் தோன்றி மறைந்தது போல் இருந்தது.

தொழிலில் அவனுக்கு ஏற்பட்டிருந்த அனுபவப்பாடத்தில், மின்னுகின்ற கண்கள், அதுவும் ஒரே கூட்டமாய்ப் புன்னகையுடன் நின்றிருக்கும் இவர்களின் கண்கள் மனிதப் பார்வைக்கு இனம் புரியாத ஒரு அச்சத்தை ஏற்படுத்த கூடிய கழுதைப்புலிகளின் கண்கள் என்பதை அன்று அமர் உணர்ந்தான்.

“Hyenas do join forces to protect themselves from danger. And, it is easier for hyenas to catch prey when they do so in teams - ன்னு சொல்லுவாங்க, கேள்விப்பட்டிருக்கீங்களா?”

சலனமற்ற குரலில் அமைதியாக உரைத்த அமரின் கூற்றில் அமர்ந்திருந்த பைக்கில் இருந்து நிதானமாகக் கீழிறங்கினான் பிரஷாந்த்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்க மிஸ்டர் அமர்?”

“ஹைனாக்கள், அதாவது கழுதைப்புலிகள், அதுங்களுக்கு ஆபத்து வரும் போது ஒன்றாக ஒரே படைப் போல் நின்று தங்களைத் தற்காத்துக் கொள்ளும்.. அதே போல் இரையை அடித்துக் கொள்ளும் போதும் அவை தனியா போகாது, அதனுடைய அணியையும் சேர்த்துக் கொண்டு கூட்டமாகத் தான் போ..” என்று அமர் முடிக்கவில்லை, சட்டென்று சிகரெட்டைப் பிடித்திருந்த விரல்களோடு தன் இடது கரத்தை உயர்த்திப் பேசவொட்டாது அமரைத் தடுத்தான் பிரஷாந்த்.

“எங்களுக்கும் இங்கிலீஷ் தெரியும்.. நீங்க ஹைனாஸ்னு யாரை சொல்ல வர்றீங்கன்னு தான் கேட்டேன்.”

“வெல்.. மனிதர்களின் போர்வையில் சில ஹைனாஸ் இங்க சுத்திட்டு இருக்கிறதா கேள்விப்பட்டு நானே அவர்களை நேரில் பார்க்கணும்னு வந்தேன்... ஐ மீன் ப்ரீத்தியோட கேஸை போலீஸில் ஹேண்ட் ஓவர் செய்தாச்சு.. அதுக்குப் பிறகு நீங்க ஏன் இங்க வந்திருக்கீங்கன்னு உங்க ஃப்ரெண்ட் சுதிர் கேட்டதுக்குப் பதில் தான் பிரஷாந்த் இப்ப நான் சொன்னது.. நான் பாலக்காட்டுக்கு வந்ததற்குக் காரணமும் அந்தக் ஹைனாஸ்தான்..”

உணர்ச்சிகளை உள்ளடக்கிய முகத்துடன் பேசும் அமரின் குரல் வெளிப்புறத்திற்கு அமைதியாகவே தெரிந்தது.

ஆயினும் அவனது உள்ளத்திற்குள் ஆக்ரோஷத்தையும் ஆவேசத்தையும் உணர்ந்துக் கொண்டதில் ஒரு கணம் பிரஷாந்தின் முகம் கருமை அடைந்தது.

ஆயினும் முகபாவத்தை உடனே மாற்றியவன், “குட் டே மிஸ்டர் அமர் [good day]..” என்று மட்டும் கூறியவனாய் நண்பர்களை நோக்கி போகலாம் என்பது போல் தலையசைத்து தங்களது வகுப்பு நடக்கும் கட்டிடத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.

அவர்கள் தன்னை விட்டு அகன்றதும் அதே இடத்தில் சில நொடிகள் நின்ற அமர், “யூ டூ பிரஷாந்த்..” என்று சிறிதே உரத்தக் குரலில் கத்த, அமரைத் திரும்பியும் பாராது பிடித்திருந்த சிகரெட்டை சுண்டி வீசி எறிந்த பிரஷாந்த் கையை லேசாக உயர்த்தியவன், கட்டை விரலை ஆட்காட்டி மற்றும் நடு விரல்களுக்கு மத்தியில் நீட்டியவாறே முஷ்டியை மடக்கி “The fig sign” என்னும் சைகையைக் காட்டினான்.

அதன் அர்த்தத்தை உணர்ந்து கொண்ட அமர் வாய்விட்டு சிரித்தவனாய் தனது பைக்கை நிறுத்தி இருக்கும் இடத்தை நோக்கி நடக்க, கல்லூரி வளாகத்திற்குள் அமர் நுழைந்ததில் இருந்து பிரான்னாஸ் அணிக்கும் அவனுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தைகளையும், இறுதியில் அமரை அவமதிப்பது போல் திமிராக ‘fig sign’-ஐ காட்டிய பிரஷாந்தையும், சற்று மறைவாக நின்றவாறே கூர்ந்து பார்த்திருந்த ரிஷிக்கும் அவனது கூட்டாளிகளுக்கும் புரிந்து போனது.

இன்னும் சில நாட்களில் ப்ரீத்தியின் கொலைக்கான காரணமும், கொலையாளிகளின் பெயரும் வெளியில் வரப் போகின்றது.

அன்று இந்தக் கேரளா மாநிலமே அதிரப் போகின்றது.

“A man in the jungle at night, as someone said, may suppose a hyena's growl to be a lion's; but when he hears the lion's growl, he knows damn well it's a lion.” - Sheldon Vanauken

சிரஞ்சீவிதம் தொடரும்.

*******************************************************************************************

[குருக்ஷேத்திரம் படித்திருப்பவர்களுக்கு ஆதித்யா காட்டும் சைகை நியாபகத்தில் இருக்கும்.. அது Devil's Horn or Sign of Devil என்றழைக்கப்படும், ஆனால் ஆதித்யா வேறு பிரஷாந்த் வேறு.. ;-) ;-)]

*****************************************************************************************

References:

Autopsy - a postmortem examination to discover the cause of death or the extent of disease

An autopsy cannot determine if sexual activity was rape or consensual. The problem is that even if there are other evidences, they are likely to be considered to have had consensual but rough sex, and it cannot proved that rape has taken place.. பிரேத பரிசோதனை மூலம் பாலியல் தொடர்பு கொண்டிருந்த பெண் கற்பழிக்கப்பட்டாளா அல்லது அவளது சம்மதத்துடன் தான் அவள் உடலுறவு கொண்டாளா என்பதைத் தீர்மானிக்க முடியாது. பிரச்சனை என்னவென்றால், வேறு ஆதாரங்கள் இருந்தாலும் கூட, அவர்கள் ஒருமித்த ஆனால் முரட்டுத்தனமான உடலுறவு கொண்டிருந்ததாகக் கருதப்பட வாய்ப்பு இருக்கின்றது... கற்பழிப்பு நடந்திருக்கின்றது என்பதை நிரூபணம் செய்ய முடியாது.

An alibi - குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழ்ந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும் வாதம்
 
Last edited:

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ், Sunday post பண்றதுக்கு இப்ப எல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. எதாவது ஒரு வேலை வந்துடுது.. அதனால் திங்கட்கிழமை, வெள்ளிக்கிழமை schedule -ஐ கொஞ்சம் மாற்றி, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் சிரஞ்சீவிதத்தைப் பதிவு செய்யலாம்னு இருக்கேன்.. Let me know your thoughts please.
Thanks
JB
 
Adei Amar…. Enna oru critical aana time la poai confess pannittu irukka ne… 😂😂😂

Ennathan sattam olungu irunthalum panam than velai seyyuthu ella idathilum… Rishi and co ku ithila connection illattiyum they also deserve better punishment for whatever they have done in past… 😒😒😒😒

Prashanth muhathula oru marana beedhi theriyutgu enekku 😂😂😂

I too remembered Aadhi in that sign scene 💞💞💞💞
 

Thani

Member
இந்த பிரசாந்த் கூட்டத்துக்கு ஏழரை ஆரம்பம்... இனிதான் அமரின் ஆட்டம் ஆரம்பம் ...
 

saru

Member
Rishi ku purinjadu paavam prasanthuku puriyala hoom
Arun sudhir pechula nakkal over tan
THonda thonda enna bootham lam varumo
 

Members online

Latest Updates

Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top