JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Teaser

saaral

Well-known member
hi friends

Am Saaral .... I just wanna to share a teaser of upcoming story ....


..................
"ஏன்மா நீ வான்மதி தானே " என்றார் .

வான்மதி இறுக்கத்துடன் அமைதிகாத்தாள் . அவரோ விடாமல் அவளிடம் மேடையில் நின்றே வம்புவளர்க்க தொடங்கினார் "எப்பா சிவா இந்த மாதிரி பெண்ணை எல்லாம் எப்படி சொந்தம்னு சொல்லிக்கிட்டு கல்யாணத்துக்கு கூப்பிட்ருக்க ...ச்ச் பெண்ணா இவள் ....இவளின் புகைப்படம் எங்கெல்லாமோ வந்து கேவலமா பேசறாங்கனு என் மகன் சொன்னான் " மதிக்கு புரிந்துவிட்டது இவை சிவா மற்றும் அவனின் நண்பர்களின் கைங்கரியம் என்று .

நிமிர்ந்து நின்ற மதி விரைப்புடன் அவரிடம் திரும்பி கண்களில் கனல் கக்க பேச தொடங்கினாள் "உங்கள் மகன் என் போட்டோவை எங்கு பார்த்ததாக சொன்னான் " அவள் உறுமினாள் .

அந்த பெண்மணியோ தவறு செய்யும் உனக்கே இவ்ளோ கொழுப்பா என்னும் ரீதியில் பார்வையை பார்த்து "அது எதோ சொல்லக்கூடாத இணையத்தளம் என்றான் ....அங்கெல்லாம் உனது போட்டோ அப்படினா நீ எப்படிப்பட்ட பெண்ணாக இருப்பாய் " நமது இந்திய நாட்டில் தான் எவர் தவறு செய்தாலும் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்ணாகவே இருக்கிறாள் . அதும் பெண்களே பெண்ணை பற்றி அவதூறாக பேசும் கொடுமை என்றுதான் மாறுமோ .

"ஒஹ் ...சரி நான் நல்ல பெண்ணாக இல்லாமல் போகிறேன் ....அந்த மாதிரி தளங்களில் உங்கள் மகனிற்கு என்ன வேலை " சரியாக நெற்றியடியாக கேட்டாள் மதி . பல நல் உள்ளங்கள் மனதில் அவளுக்கு சபாஷ் போட்டன .

"அது அது " அவர் தடுமாறுவதை பார்த்து நக்கலாக சிரித்த அவள் " எனது புகைப்படம் என்னை அறியாமல் எடுக்கப்பட்டது என்று என்னால் நிரூபிக்க முடியும் ....அப்படியான தளங்கள் சாதாரண மக்களால் பார்க்கப்படுவதில்லை அதை தேடி பிடித்து பார்த்த உங்கள் மகன் உத்தமனா ...அதை உங்களால் நிரூபிக்க முடியுமா " புருவத்தை உயர்த்தி அதே கோப ஆவேசத்துடன் வினவினாள் மதி .

...............................................

கையைக்கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற மதி தனது அம்மா புரிந்துகொண்டார் என்ற நிம்மதியுடன் அவரின் பின்னே சென்றாள் . மேடையை விட்டு இறங்கும் படிகளில் இறங்கிக்கொண்டு இருந்த மதி இறுதி படியில் கால் வைப்பதற்கு முன் திரும்பி பார்த்தாள் .

அந்த படிகளின் முதல் படியில் இவளையே பார்த்துக்கொண்டு நின்று இருந்த அவனை ஒரு பார்வை பார்த்தாள் . அந்த பார்வையில் என்ன இருந்தது ஆற்றாமையா , குற்றம் சாட்டுவது , கோபம் , வெறுப்பு , இயலாமை ...இன்னதென்று அவனால் பிரிக்க முடியவில்லை . அந்த அவனும் அவளை சலனம் இல்லாமல் எந்த விதமான உணர்வையும் காட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் .

அப்பொழுது அவனின் அருகினில் வந்த சாரதி அவர்கள் "ஹாய் கௌஷிக் வெல்கம் சாரி போர் தி ட்ரோப்பில் " என்று மதியை பார்த்துக்கொண்டே கூறினார் .

மதியின் உதடுகளோ கசப்பாக புன்னகைத்தன அதையும் கௌஷிக் கவனிக்க தவறவில்லை . பொது இடத்தில் வம்பு வேண்டாம் என்று இருவரும் தத்தமது வழியில் சென்றனர் .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top