JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

  • Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jbtamil18@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jbtamil18@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

JLine Bookstore Online

தட்பவெட்பம் அத்தியாயம் 15

அத்தியாயம் 15


நான்காம் வருடத்தின் இறுதியில் இருந்தாள் தேஜு. அவளுக்கு இப்பொழுது செயல்திட்ட வகுப்புகள் , பிராக்ட்டிகல் இன்டெர்னல் அது இது என்று அவள் அதிலே பிஸி ஆகிப் போனால் . இதற்கு நடுவில் அவளுக்கு, அவளுடன் படித்த பிந்து என்ற மாணவி இறந்து விட்டாள் என்ற செய்தியில் அவளின் மனதை மிகவும் வாட்டியது . பிந்தும் அவளும் கல்லூரி முதல் நாளிலிருந்து நல்ல தோழிகள் தான். நடுவில் சுனிதா இவளை தன் பக்கம் இழுத்ததால் அவளுடனான நட்பை சரி வரத் தொடர முடியாமல் போயிற்று.


மனம் கனத்தது போல் உணர்ந்தவள் தேவியைத் தேடிச் சென்றாள் தேஜஸ்வினி . தேவியின் மடியில் தலை சாய்த்து அழத் துடங்கி விட்டாள் . அவளைச் சமாதானம் படுத்தி அவளின் அழுகையை நிறுத்த பெரும் பாடு பட்டு விட்டார் தேவி

"இங்க பார் தேஜு எதற்கு இப்படி சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு ? அதான் அந்த பெண்ணுக்குப் படிக்க முடியவில்லை என்று தற்கொலை பண்ணிடா . அதற்கு நீ அழுதால் அவள் மீண்டும் பிறந்து வந்து தேர்வில் தேர்ச்சி பெறுவாளா? எழுந்துபோய் கண்களைத் துடை "

"இல்ல அத்தை அவள் படிக்க முடியாமல் ஒன்றும் தற்கொலை பண்ணிக்கல , அவள் மிகவும் நன்றாகப் படிக்கும் பெண் அத்தை . ஏதோ இருக்கிறது "

அவளின் நிலையைக் கலைக்கும் பொருட்டு வினோத் அவளின் தலையை 'நொங்கு' என்று கொட்டினான் .

"இந்த CBCID வேலையெல்லாம் வேண்டாம் ஒழுங்கா படித்தாயா பட்டம் வாங்கினாயா இருதுக்க. அதை விட்டுவிட்டு யாரோ சாவுக்கு இவை துப்புரவு பண்ணப் போராலாம் "

அவளைப் பற்றி நன்கு அறிந்தவனாகக் கூறினான்

"அது ஒன்றும் யாரோ சாவு இல்லை என்னுடைய ப்ரெண்டு , நல்ல பெண் தெரியுமா ? அதிர்ந்து கூட பேச மாட்டா , மிகவும் நன்றாகப் படிப்பாள், எனக்கே சிலசமயம் அவளைப் பார்த்தால் பொறாமையாக இருக்கும் "

என்று அவள் பிந்து பற்றி அடிக்குக் கொண்டு போனாள்.

"சரி அதை விடு மா என்ன பண்ண முடியும் , எது ஆயினும் அவள் எதிர்த்து நின்று இருக்கவேண்டும் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கக் கூடாது ல "

வினோத் சொன்ன நியாயத்தில் சற்று அவள் அடங்கினாள். அவளின் தலையைத் தடவிக்கொடுத்தபடி அவன் இருக்க .

அதே நேரம் தேவி தேஜுவிடம் வினோத்தின் கல்யாண செய்தியைச் சொன்னதும் அவள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து விட்டாள்.

"இதை ஏன் என்னிடம் முன்னாடியே சொல்லல ."

"ஏண்டி நீ வந்ததிலிருந்து அழுதுகொண்டே இருக்க , சரி கொஞ்சம் பொறுமையா சொல்லலாம் என்று இருந்தால், நீ இப்படிப் பேசுவ "

செல்லமாகக் கடிந்து கொண்டார் தேவி அவளிடத்தில் .

"சரி சரி கல்யாண பெண் யார் " என்று தன் இரு புருவத்தை மேலும் கீழும் அசைத்து அவள் குறும்பாக வினோத்திடம் கேட்டதில் , அதில் வெட்கத்தில் சிரித்தவன் அவளின் தலையில் கொட்டினான்

"இப்போது எதற்கு வெட்கப்படுகிற பார்க்கச் சகிக்கல்ல " கசந்த முகமாக வைத்துக்கொண்டாள்

"ஏண்டி பேச மாட்ட , பெண் யார் என்று தெரிந்துகொள்ள விருப்பமா? ஏன் நீயே அந்த பெண்ணாக இருந்தால் " என்று அவளைப் பார்த்து கண்ணாடிதான் "

அவளின் வாய் மீது இரு கைகளையும் மூடிக்கொண்டு கண்ணின் கரு மணி வெளியில் வந்து விழுந்துவிடும் அளவிற்கு அவளின் விழி விரிந்தது. உணர்வற்று இருந்தவளைத் தேவி அவளின் தோள்பட்டையை உலுக்கினார். அதில் நிஜ உலகிற்கு வந்தவள் அதே நேரம் தான் அமர்ந்து இருந்த நீள் சாய்விருக்கையில் போடபட்டிருந்த சிறிய அளவிலான தலையணையை எடுத்து வினோத்தின் மண்டையைப் பதம் பார்த்தாள்"

"உனக்கு எப்படி அவ்வாறான எண்ணம் தோன்றலாம் என்மீது. நான் என்ன அப்படியா உன்னிடம் பழகினேன் ? எனக்குக் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை தேவி அத்தை நான் எப்போதும் அம்மா ஸ்தானத்தில் தான் பார்ப்பேன் அப்படி இருக்க நான் உன்ன என்னவாக பார்த்து இருப்பேன், ஏன் இவ்வாறெல்லாம் சொல்ற வினு( அவள் செல்லமாக வினோத்தை வினு என்று தான் கூப்பிடுவாள் ). "

என்று அடிக்க ஆரம்பித்தவள் ஓயாமல் அடித்துக் கொண்டிருந்தாள் ஒரு கட்டத்தில் நின்றிருந்த அழுகை திரும்பியது அவளிடம். அவளைக் கண்டு பொறுக்க முடியாத தேவி அவளிடம் மறுபடியும் ஆறுதல் பேசத் துடங்கி விட்டார் வினோத்தைச் சற்று நிந்தித்துக் கொண்டு

"ஏன்டா அறிவு கெட்டவனே அவளே பாவும் இப்போதுதான் அழுகை நிறுத்தினாள் , மறுபடியும் ஏன்டா இப்படி அவளை அழ வைத்துப் பார்க்கிறாய், எதில் எதில் விளையாடுவது என்று உனக்குத் தெரியாது? சிறு குழந்தையா நீங்கள் சொல்லிப் புரிய வைப்பதற்கு ? உனக்கும் அவளுக்குமான உறவை இப்படிதான் அவளிடம் கேலி செய்து விளையாடுவதா ? சின்ன குழந்தை டா அவள்"

"வாமா என்ன திட்டு ஏன் மேடம் மிர்க்கு தெரியாத நான் விளையாட்டுக்குத் தான் சொல்லுவேன் என்று ? அவளிடம் நான் என்றாவது சலனம் ஏற்படும் படி பேசி இருக்கிறேனா? தனிமையில் பேசினாலும் என்னுடைய வார்த்தையோ செய்கையையோ அவளைக் காயப் படுத்தியதா? இல்லை என்று எனக்குத் தெரியும் அவள் என்னை அண்ணா என்று சொன்னது இல்லை. இருந்தும் , அவள் என்னிடம் பழகும் முறை எனக்குப் புரியாதா என்ன ? என்னுடைய கோவும் இப்பொழுது அவள் என்னைப் பேசியது இல்லை . ஏன் அவளுக்குத் தெரியவில்லை தன்னுடன் பழகும் நான் அவளை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்த்தேன் என்று. குழந்தை குழந்தை என்று தலை மீது வைத்துக் கொள்ளாதீர்கள் , அவளுக்குச் சொல்லிப் புரிய வையுங்கள், நான் அவளிடம் எவ்வாறு பேசினேன் என்று என்மீதும் நம்பிக்கை இல்லை. அவள் என்னிடம் எவ்வாறு பேசி இருப்பாள் அதை நினைத்து அவள் மீதும் நம்பிக்கை இல்லை .

இந்த லட்சணத்தில் 'என்னை யாரும் பாப்பா பாப்பா என்று கூப்பிடாதீர்கள் நான் ஒன்றும் பாப்பா இல்லை, (அவளைப் போல் அவன் பேசி காட்டினான்'.) பெரிய மனுஷி மாதிரி பேசிக்கொள்ள வேண்டியது. இனி, விளையாட்டிற்குக் கூட நான் இவளிடம் இப்படி பேசிக்க போவதில்லை"

என்று காட்டமாகக் கத்திவிட்டு அவ்விடம் விட்டு தன் அறைக்குள் சென்று விட்டான். பின் தேவி அவளின் தலையைக் கோதியவாறு

"தேஜு மா அழுதது போதும் கண்ணா எழுத்துக்கோ டா , "

தன் தலையை இடம் வலம் அசைத்தாள்

" வினோத் திட்டியதற்கு அழுகிறாயா ? இல்ல அவன் சொன்ன விஷயத்தை நினைத்து அழுகிறாயா"

என்று அவள் மனதை அறியும் பொருட்டு அவளிடம் கேட்டார் தேவி

"வினு சொல்கிறது சரி தான் அத்தை, அவர்கள் என்னிடம் எவ்வாறு பழகுகிறார்கள் என்றுகூடத் தெரியாது நான் அவர்களை மிகவும் கடுமையாகப் பேசினது என்னுடைய தப்பு தானே , அதற்கு அவர் என்னைத் திட்டினது தப்பு இல்லை. ஆனால் என்னிடம் இனி பேச மாட்டேன் சொல்லிவிட்டுப் போய்விட்டார் அத்தை அதான் என்னால் தாங்க முடியவில்லை"

என்று வெம்பி வெம்பி அழுது ஒரு வழியாக அவள் சொல்லி முடித்தாள் . அவள் காலையிலிருந்து அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போய் , கண்கள் கோவபழம் போலச் சிவந்து இருந்தது, அவளின் மூக்கு நுனி பன்னீர் ராஜா பூவை போன்று இளஞ்சிவப்பு ஆனது.

"அத்தை என்ன தவறாக நினைக்காதீர்கள் நான் எதோ தெரியாமல் பேசிவிட்டேன் "

"எனக்கு தெரியாத தேஜு என்னுடைய பசங்கள் பொண்ணு கிட்ட எப்படி பழகுவார்கள் என்று , அது மட்டும் இல்லை உன்னை பற்றியும் எனக்கு மிக நன்றாகத் தெரியும் நீ வினோத்திடம் எவ்வாறு பழகுகிறாய் என்று , முதல் முறை நீ இந்த வீட்டிற்கு வந்த முதல் நாளே நீ வினோத்திடம் உரிமையாகப் பேசியதும், அவனும் உன்னிடம் எந்த வேற்றுமை இன்றி வினய்யுடன் அவன் எவ்வாறு பழகுவானோ அந்த அளவிற்கு அவன் உன்னிடம் பேசுவதையும் நான் பார்த்திருக்கிறேன் தேஜு மா எனக்குத் தெரியாதா ? அவன் சொன்னது உண்மை தான் நீ அவனை அண்ணா என்று அழைக்காத குறை தான். மற்றபடி, நீயும் அவனைப்போல் எனக்கு ஒரு குழந்தை தான் . சரி கண்ண தொடச்சிட்டு போய் வினோத்திடம் பேசு "

தேவி சொன்னதுபோல் அவள் வினோத்தின் அறைக்குச் சென்றாள். அங்கு அவனின் அறையில் போடப்பட்டிருந்த இருவர் உட்காரும் நீளியிருக்கையில் தன் தலையைக் கையால் தாங்கி பிடித்து இருந்தான். தேஜுவிடம் சத்தம் போட்டுவிட்டு வந்த வெறுப்பில் அவன் அமர்ந்திருந்த நிலையை கண்ட தேஜு அவன் கால் அருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்தாள். அவனின் இருக்கைகளைப் பற்றி இழுக்கும் முயற்சியில் தோற்றாள். பின்

"தேஜு எனக்குச் சற்று நேரம் தனிமையைக் கொடு , நீ இங்கிருந்து போய்விடு இல்லை நான் எதாவது பேசி விடுவேன்"

அவளின் விம்மல் ஆரம்பித்தது

"அ......ண்ணா அண்....ணா என்ன மன்னிச்சுடு தெ... தெ... தெரியாமல் பேசிட்டேன் ப்ளீஸ்"

வெம்பி அழித்தவளின் அழுகை கூட அவனை அசைக்கவில்லை அவள் உதிர்த்த அண்ணா என்னும் வார்த்தை அவனை அசைத்தது . அவன் கையை தன் முகத்திலிருந்து எடுத்தவன் அவளை எழுப்பு தன் அருகில் உட்கார வைத்துக் கொண்டு அவளின் கண்ணீரைத் துடைத்தான்

"பாப்பா என்ன கொஞ்சம் பார்"

அவளின் முகத்தைப் பற்றி தன்னை பார்க்கச் செய்தான்

"இப்போது சொல் "

"நீ என்ன தப்ப எடுத்துக்கொள்ளாத, நான் தப்பான அர்த்தத்தில் உன்கிட்ட சண்டை போடலை , எங்கே நான் உன்னிடம் பழகியது உனக்குச் சலனம் ஏற்படுத்தியதோ என்று எனக்குள் பயம் வந்து விட்டது அதான் உன்னைக் கொஞ்சம் பேசிட்டேன் . என்மீது இருந்த பயம் தான் உன்னிடம் அப்படிப் பேச வைத்தது. மன்னிச்சுடு " என்று கைக்கூப்ப வந்தாள். அவளின் கையை உதறியவன்.

"சி கையை இறக்கு டா. எதற்குப் பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற , நான் மறுபடியும் சொல்கிறேன் தேஜு நீ பேசியது எனக்கு வருத்தம் இல்லை , ஆனால் இந்த காலகட்டத்தில் நீ பழகும் மக்கள் என்ன நோக்கத்தில் உன்னிடம் பழகுகிறார்கள் என்று நீ தெரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் பலவிதம் தேஜு ஒரு சிலருக்கு நீ பழகும் விதம், குழந்தை தன்னம், வெகுளியாக நீ ஒரு சில கேள்விகள் கேட்பது எல்லாம் பிடித்துப் போகும் அதை அவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் . ஆனால் ஒரு சிலர் அதை அவர்களின் வாய்ப்புக்காகப் பயன் படுத்துக்கொள்வதற்கும் தயங்க மாட்டார்கள்".

( எங்கே இவன் சொல்வது நம்ப தேஜு மண்டைக்கு ஏறுவது போல் தெரியவில்லை. அவள் அழுவதிலே குறியாக இருந்தாள்.காலையிலிருந்து அழுபவளுக்கு உடல் சோர்வு மனச் சோர்வு மூளை சோர்வும் ஏற்பட்டு விட்டது. அழுகையில் பல பேருக்கு எதிரில் சொல்லப்படும் நியாயம் எதுவும் தலைக்கு ஏறுவதில்லை. அவர்கள் சொல்லும் வார்த்தைகள் ஏறும் ஆனால் அதன் அர்த்தம் அவ்வளவு சீக்கிரம் ஏறிவிடாது . அந்த நிலைமையில் தான் இருந்தாள் இவளும்.அவன் சொல்லுவது புரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் )

"மண்டையை மண்டையை ஆட்டாதே நான் சொல்லவருவது புரிகிறதா "

"புரிகிறது புரிகிறது சரி நீ சொல் பொண்ணு யார் "

"பொண்ணு நம்ப அம்மாகு தெரிந்த பொண்ணு தான் , அவர்கள் குடும்பமும் பெங்களூரில் தான் வசிக்கின்றார்கள் . பொண்ணு பேரு மீனா "

"அடடா மீனா பேர் ரொம்ப நல்லா இருக்கு , உனக்குப் பிடித்திருக்கா ?"

"ஹ்ம்ம் நிறைய "

"அப்போது நீங்கள் பெங்களூரில் செட்டில் ஆகிடுவீங்களா ?"

"அப்படியும் சொல்லலாம் , வினய் இங்க தானே இருக்க போரான் அப்போ என்ன "

"எனக்கு அவர்கள் பத்தி ஒன்றும் தெரியாது நான் பார்த்தது கூட இல்லையே, சரி அவர்களை விடு தேவி அத்தை இங்க தானே இருபாங்க "

இவர்கள் பேச்சைக் கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் தேவி கையில் சாப்பாடு தட்டை எடுத்துக் கொண்டு காலை முதல் தேஜு ஒன்றும் சாப்பிடாத காரணத்தினால்

"ஆமாம் மா நான் இங்க தான் இருப்பேன் என்னுடைய செல்லம் தேஜு இங்க தானே இருக்கப் போறா அதான் "

"ரொம்ப நன்றி அத்தை,"

தேவியின் கழுத்தை கட்டி கொண்டு அவரின் கன்னத்தில் முத்தம் இட்டாள். தேவி அவளுக்கு ஊட்டிக் கொண்டிருந்தார். வினோத் அவளிடம்

"ஏண்டி காலேஜ் பைனல் இயர் வந்துட்ட இன்னும் உனக்கு பெரியவங்க ஊட்டிவிடணுமா "

"ச்சீ போ உனக்கு என்ன வந்தது , என் அத்தை எனக்கு ஊட்டி விடுகிறார்கள் "

அவளின் பேச்சில் அவளுக்குத் தலையில் வலிக்காமல் ஒரு கொட்டினான்

"வாயாடி ஒழுங்கா கல்யாணத்துக்கு முதல் நாளே வரவேண்டும் சரியா , இல்லை உன்னை தேடி வந்து மிதி மிதி என்று மிதித்து விடுவேன், பிறகு நீ வெறும் நான்கு ஆடி தான் இருப்ப புரிகிறதா "

"இப்போது எதற்கு என்ன கொட்டின நீ கொட்டக் கொட்ட நான் குள்ளமா போய்விடுவேன் பிறகு என்ன யார் கல்யாணம் செய்த்துப்பார் ?"

"ஓ..கோ..... மேடம்கு அந்த கவலை இப்பொழுதே வந்துவிட்டதா ... அம்மா கேட்டியா இவள் சொல்வதை ?"

"ம்ம்ம்ம் கேட்டுட்டு தான் இருக்கிறேன், சரி சொல் தேஜு உனக்கு யாரையாவது பிடித்திருக்கா "

"கண்டிப்பா இல்லை அத்தை , உங்களுக்குத் தெரியாதா எங்க அப்பா இவன்தான் மாப்பிள்ளை என்று எந்த கழுதையைக் காட்டினாலும் சரி சொல்லிவிடுவேன்"

அவள் சொன்ன கழுத்தை என்னும் வார்த்தையில் வயிற்றைப் பிடித்து கொண்டு வினோத் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

தேவிக்கு இவள் இப்படியே வாயாடினால் வினய் பொறுத்துபோவானா ரெண்டுத்துக்கும் பொருந்திப் போகுமா என்ற கவலை வர ஆரம்பித்து விட்டது .

தொடரும்
 

Thahseena

New member
இப்படி தான் வினய்க்கும்இவளுக்கம் முடிச்சி விழுந்ததா... வினோ தேஜூ ரிலேஷன் சூப்பர் தேவி செம சுவீட் character ஆக இருக்காங்க அவர்கள் ஆசை தப்பு இல்ல வினய் உண்மை சொல்லி தொலைந்து இருக்கலாம்.பின்னாளில் இவள் தனிமரமா ஆவதற்கு தேவி எப்டி விட்டாங்க.. சுனிதா சரியான ஆளா இருப்பா போல ச்ச ச்ச .. பிந்து தான் இவ் வலையில் சிக்கி உயிரை துறந்த பெண்னோ... இதில் ஹீரோ வேற பெண் தேடும் விதத்தில் புது யுக்தியோத சுத்துரான் இனி என்ன பூதம் வரபோகும் தெரியிலை.
 
இப்படி தான் வினய்க்கும்இவளுக்கம் முடிச்சி விழுந்ததா... வினோ தேஜூ ரிலேஷன் சூப்பர் தேவி செம சுவீட் character ஆக இருக்காங்க அவர்கள் ஆசை தப்பு இல்ல வினய் உண்மை சொல்லி தொலைந்து இருக்கலாம்.பின்னாளில் இவள் தனிமரமா ஆவதற்கு தேவி எப்டி விட்டாங்க.. சுனிதா சரியான ஆளா இருப்பா போல ச்ச ச்ச .. பிந்து தான் இவ் வலையில் சிக்கி உயிரை துறந்த பெண்னோ... இதில் ஹீரோ வேற பெண் தேடும் விதத்தில் புது யுக்தியோத சுத்துரான் இனி என்ன பூதம் வரபோகும் தெரியிலை.
மிக்க நன்றிகள் thahseena .. நீங்கள் என் கதையில் வரும் கதை மாந்தர்களை புரிந்துகொண்டு உங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிகள் .. என்னை மன்னித்துவிடுங்கள் நீண்ட இடைவெளி எடுத்துவிட்டேன் . இனி முடிந்தவரையில் என் கவிதையின் அத்தியாயங்களை போடுவேன் என்று நம்புகிறேன் .. மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .. இதே போல் என் கதைகளுக்கு உங்களின் ஆர்வமும் ஆதரவும் என்றும் இருக்கவேண்டும் என்று நம்புகிறேன் .. வணக்கம்
 

Thahseena

New member
மிக்க நன்றிகள் thahseena .. நீங்கள் என் கதையில் வரும் கதை மாந்தர்களை புரிந்துகொண்டு உங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிகள் .. என்னை மன்னித்துவிடுங்கள் நீண்ட இடைவெளி எடுத்துவிட்டேன் . இனி முடிந்தவரையில் என் கவிதையின் அத்தியாயங்களை போடுவேன் என்று நம்புகிறேன் .. மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .. இதே போல் என் கதைகளுக்கு உங்களின் ஆர்வமும் ஆதரவும் என்றும் இருக்கவேண்டும் என்று நம்புகிறேன் .. வணக்neenga poduv

மிக்க நன்றிகள் thahseena .. நீங்கள் என் கதையில் வரும் கதை மாந்தர்களை புரிந்துகொண்டு உங்களின் கருத்துகளை பகிர்ந்துகொள்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சிகள் .. என்னை மன்னித்துவிடுங்கள் நீண்ட இடைவெளி எடுத்துவிட்டேன் . இனி முடிந்தவரையில் என் கவிதையின் அத்தியாயங்களை போடுவேன் என்று நம்புகிறேன் .. மீண்டும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் .. இதே போல் என் கதைகளுக்கு உங்களின் ஆர்வமும் ஆதரவும் என்றும் இருக்கவேண்டும் என்று நம்புகிறேன் .. வணக்கம்
Next epi poduvathurkula padichathai motham maranthe poiduven pola... Epo varuveenga .. Pls keep updated :)
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top