• Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், jlinepublications@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Dear Guest, Please register in the forum to read stories of the writers and post your valuable comments. Please email: jlinepublications@gmail.com or whatsapp: +91-6384850278 any login related queries.

Buy Tamil Novels online
JLine Bookstore Online

அத்தியாயம் - 19

saaral

Well-known member
அத்தியாயம் -19

சதீஷ் , உள்ளே நுழைந்துகொண்டிருந்த சஹானாவை பார்த்துக்கொண்டிருந்தான் ....என்னதான் சஹானா தான் அம்மு என்று அவன் அறிவு சொன்னாலும் ...மனதினுள் ஏதோ நெருடல் ....

அவன் தவறே செய்த அந்த நொடியிலும் அவனின் மீதான காதலை மட்டுமே காட்டிய அந்த பேதை பெண்ணிற்கும் , நிமிர்வாக நின்று எதிராளியை பந்தாடும் இந்த பெண்ணிற்கும் நிறைய வித்யாசங்கள் .....மலைக்கும் மடுவிற்குமான வித்யாசம் ...

என்னதான் பழி உணர்ச்சி என்றாலும் ஒரு பெண்ணின் குணாதசியத்தில் இத்தனை மாற்றமா ?

இன்னொரு பக்கம் முதலில் சஹானாவை ரசனையாக பார்க்கத்துடங்கிய பிரவீன் , சதீஷின் பார்வையை உணர்ந்து கோபமுற்றான் ....முழுதாக உண்மை தெரியாமல் அவனிற்கு சொல்லவும் இயலாமல் , மெல்லவும் இயலாமல் பிரவீனின் தவிப்பு இருக்கிறதே .....

அனைவரும் சேலை பார்க்க துடங்கினர் ...ஸ்ரீதர் பார்த்து பார்த்து தன்னவளுக்காக எடுத்துப்போட சொன்னான் ....

ஸ்ரீதரின் அலைப்பறையில் அந்த சிப்பந்தி நொந்தே போனார் ...இவருக்கு பெண்களே மேல் என்ற முடிவிற்கு வந்தார் ...

இல்லாத அட்டூழியம் செய்து இறுதியாக சில புடைவைகளை தேர்வு செய்த ஸ்ரீதர் , மிருதுளாவின் மேல் வைத்து பார்த்து ,அவளின் நாணத்தை ரசித்துப்பார்த்தான் .

இப்பொழுது அனைவரின் கவனமும் சஹானாவின் பக்கம் திரும்பியது , சௌம்யா சில புடைவைகள் எடுத்துக்காட்டி ...அவளின் விருப்பத்தை அறிய காத்திருந்தார் ...

எப்பொழுதும் தயாளன் மற்றும் சௌம்யா எடுத்து தரும் உடைகளை அணிந்து பழகியவள் இன்று தடுமாறினாள் .... அவளின் மனதிற்கு இன்னொருவரின் விருப்பமும் தெரிய வேண்டி இருந்தது என்பதை அவளே அறியவில்லை .

ஆனால் அதை அறிந்த பிரவீன் , சஹானா ஒவ்வொரு புடவையாக எடுத்து தன் மேல் வைத்து பார்க்கும் பொழுது , கண்ணாடியின் வாயிலாக தனது விருப்பமின்மையையும் , விருப்பத்தையும் காண்பித்தான் .

பேச்சுகள் , தொடுகை , நெருக்கம் , புகைப்படம் , அடுத்தவர்களுக்கு தெரிவது போல் நெருக்கமாக இருப்பது மட்டுமே காதல் இல்லை ....இவை எதுவும் இல்லாமல் கண் பார்த்து மட்டுமே உணர்வுகளை கடத்துபவர்களின் காதல் மிகவும் புரிதலுடன் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம் ....

சஹானா அவள் மேல் வைத்துக்காட்டிய புடவைகள் எதுவும் பிரவீனிற்கு பிடிக்கவில்லை ....

நேராக சஹானாவிற்கு எதிராக இருந்த புடவை பகுதிற்கு சென்று இரு புடைவைகளை எடுத்து போட சொன்னவன் , கண்களால் தகவல் சொல்லி நகர்ந்தான் ...

எவரும் அறியாமல் ,எதார்த்தமாக நகர்வது போல் நகர்ந்த சஹானா , பிரவீன் எடுத்து போட சொன்ன புடவைகளை கையில் எடுத்தாள் .

"பெரியம்மா இந்த ரெண்டும் ஓகே " என்றாள் .

அவனின் மனதில் திருப்தி ...

"ஹே சஹா ரொம்ப அழகா இருக்கு ....இது என் கண்லயே படலையே ..." என்று சௌம்யா கூறும் அதே சமயம் ...

"ஹ்ம்ம் தேடறவங்க தேடினா மட்டும் தான் அழகான புடவை கண்ணில் படுமாம் " என்று ஸ்ரீதர் மிருதுவிடம் சொல்லிக்கொண்டிருந்தான் .

இங்கு நடந்த எதுவும் அவர்கள் இருவரின் பார்வையில் இருந்து தப்பவில்லை ....

"அண்ணா இதே புடவைல இன்னொரு பீஸ் எடுத்து கொடுங்க " சஹானாவின் இந்த கூற்றில் சதீஷ் குழம்பினான் ....

பிரவீன் கூர்மையாக கவனித்தான் , அதே போன்று இன்னும் இரு புடவைகள் எடுத்து நகர்ந்தாள் சஹானா .

இங்கு சாரதா அவர்களின் மனம் ஆறவில்லை , தன் பெண்ணிற்கு எடுத்திருக்கும் புடவையை விட இந்த நடுத்தர வாழ்கை வாழும் பெண்ணிற்கு எடுத்திருக்கும் புடவை விலை உயர்ந்தது , அதுவும் நான்கு புடவை ...இது மட்டுமே அவரின் மனதில் ...

மிருதுளா தனியாக இருந்த சமயம் அவளின் அருகில் சென்ற சாரதா "மிருது என்னடி இது , உன் மாமியார் சொந்தக்காரங்களுக்கு எல்லாம் உன் புடவையை விட அதிக விலையில் எடுத்துக்கொடுக்கிறாங்க ?" என்றார் .

"ம்மா எதுவும் தெரியாம பேசாத ...இது அவங்க இஷ்டம் "சிறியவள் கண்டித்தாள் .

"என்னடி இப்படி மக்கு மாதிரி பேசற ....இப்பவே இப்படின்னா ....ஆமாம் இந்த மாதிரி கடைக்குள்ள எல்லாம் அந்த பொண்ணு வந்திருப்பாளா ?....அவ நேரம் , அடிச்ச யோகத்துக்கு லச்சக்கணக்குல புடவை எடுத்து கொடுக்கிற ஏமாளிகள் சிக்கிருக்காங்க ..." மோவாயை இடித்துக்கொண்டே கூறினார் , இது சாரதாவின் குணம் ...பணத்தை வைத்து மனிதனின் மனதை இடைபோடத்தெரிந்தவர் .

எதோ சொல்ல வாய் திறந்த மிருதுளா உறைந்தாள் ....

சாரதாவின் பின் சஹானா நின்று இருந்தாள் , அவளின் பின் சதீஷ் அவனின் பின் , ஸ்ரீதர் மற்றும் பிரவீன் ...அனைவரும் அங்கு நின்று இருந்தனர் .

மிருதுளாவின் பார்வையை பார்த்து திரும்பிய சாரதா அதிர்ந்தார் ...அவருக்கு எவரை கண்டும் பயம் இல்லை ஆனால் , மாப்பிள்ளை என்ன நினைப்பர் என்று நடுங்கினார் .

ஸ்ரீதரோ கட்டுப்படுத்திய கோபத்துடன் நின்று இருந்தான் ...

சஹானா எவரிடமும் எதுவும் சொல்லாமல் வேகமாக வெளியேறினாள் , அவளின் பின் செல்ல முனைந்த ஸ்ரீதரை தடுத்து "இங்க எல்லாரையும் சமாளிங்க , சஹானா என் பொறுப்பு " என்று கூறி அவளை தொடர்ந்தான் பிரவீன் ..

சதீஷ் ,அவனின் அம்மாவை கடிந்துகொண்டிருந்தான் .

"மிருது " என்று அழைத்தான் ஸ்ரீதர் .

"எனக்கு என்ன பண்றதுனே தெரியலயே " கையை பிசைந்தாள் மிருது .

"விடு பிரவீன் போயிருக்கார் பார்த்துப்பார் " தன்னவளுக்கு சமாதானம் சொன்னான் .

"அப்ப சரி , இந்த அம்மா புத்தி ஏன்தான் இப்படி போகுதோ ?" என்றாள் மிருது .

"உனக்கு தெரியுமா ?"

"என்ன ?"

"உன் அண்ணன் பிரவீனும் , சஹானாவும் காதலிக்கிறாங்கனு உனக்கு தெரியுமா ?"

"ஹ்ம்ம் அண்ணா என்கிட்ட சொல்லிட்டு தான் சஹானாவை பார்க்க போனாங்க , அப்பறம் நம்ம விசயத்துல அண்ணா கிட்ட சஹானா என்ன சொன்னான்னு கேக்க மறந்துட்டேன் , நான் கேட்டப்ப அண்ணா கோபமா பதில் சொல்லாம போய்ட்டாங்க " விடை தெரியாத பல கேள்விகளுக்கு இப்பொழுது விடை அறிந்தவளாக கூறினாள் மிருதுளா .

"எல்லாம் சரி , சஹானாவிற்கும் பிடிச்சிருக்குனு தெரியும் ஆனா ஏன் அண்ணா கிட்ட , வெறுப்பை காட்டுறா ?" பதில் தெரியாத முக்கிய கேள்வியை கேட்டாள் மிருதுளா ..

"எனக்கும் தெரியாது ....சஹானாவிற்கும் , பிரவீனை பிடிக்கும் .. ஆனாலும் ஏன் இந்த வெறுப்பு , அதுவும் பிரவீன் நெருங்கி வர கூடாதுனு இவ தடுக்குற மாதிரி இருக்கு " சரியாக கணித்தான் அந்த உடன் பிறவா அண்ணன் .

.................................................

கீழ் தலத்தில் கார் பார்க்கிங்கில் குருவின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்தாள் சஹானா .

ஆனால் வந்தது குரு இல்லை , பிரவீன் ...

"இவனா ...ச்ச ச்ச இவரா ?" என்றுதான் அவள் நினைத்தாள் .

அவளின் முன் காரை நிறுத்தி இறங்கிக்கொண்டிருந்த அவனின் காதில் , அவளின் கூற்று விழத்தான் செய்தது ...

சுற்றி அவளின் பக்கம் வந்து காரின் மீது சாய்ந்து நின்றவன் "ஆம் நானே தான் " என்றான் .

அவள் புரியாமல் முழித்தாள் ....

"இவனா ச்ச இவரான்னு கேட்டியே , அதுக்கு பதில் சொன்னேன் " சிரிக்கும் கண்களை , குளிர் கண்ணாடியின் பின் மறைத்து ...ஆதரங்களை ,கஷ்டப்பட்டு சிரிக்காமல் இருக்க பூட்டி நின்றான் .

"ஹான் " ...'நம்ம மயின்ட் வாய்ஸ் அவ்ளோ சத்தமாவா கேக்குது ?' சிறுபிள்ளையென முழித்து நின்று இருந்தாள் ....

"மயின்ட் வாய்ஸ் இல்லமா , சத்தமா தான் பேசின " லேசாக வளைந்த உதடுகளையோடு சொன்னான் .

"நல்லாத்தான் சிரிக்கலாம்ல " (ஐயோ சஹானா மீண்டும் சத்தமாக பேசிவிட்டாயே )

"என்னுடைய சில கேள்விக்கு பதில் சொல் , நல்லாவே சிரிக்கிறேன் " அழுத்தமாக கூறினான் .

அவள் முகம் திருப்பி , அலைபேசியை பார்த்துக்கொண்டிருந்தாள் .

"குரு வரமாட்டான் , ஏறு நான் வீட்ல விடறேன் "

"தேவை இல்லை ..."

"சஹானா எல்லாத்துக்கும் தர்க்கம் பண்ணிதான் ஆகணும்னு தேவை இல்லை , வா நான் வீட்ல விடறேன் "

"வேண்டாம் நான் அண்ணாவை கூப்பிடுறேன் " என்று அலைபேசியை மீண்டும் எடுத்தாள் , அதை பறித்தான் அவன் .

"ஹே லூசா நீ , ஸ்ரீதர் அண்ட் மிருது தனியா நேரம் செலவழிக்க யோசிப்பாங்களா , இல்லையா ...ஒழுங்கா ஏறு " அழுத்தமாக கூறினான் .

அவள் கைகளை கட்டிக்கொண்டு வெறுப்புறம் திரும்பி நின்றாள் .

"ஹ்ம்ம் வெள் நான் கிளம்பறேன் , இன்னும் சில நிமிசத்துல சதீஷ் வந்திடுவான் " என்று கூறி மீண்டும் ஓட்டுநர் இருக்கையில் சென்று அமர்ந்தான் .

அவனின் கூற்றை கேட்டவளோ வேகமாக ஏறி , முன் இருக்கையில் அமர்ந்தாள் .

இப்பொழுதும் அடக்கப்பட்ட சிரிப்பு அவனிடம் .

வீடு வந்து சேர்ந்தவள் அவனிடம் எதுவும் சொல்லிக்காமல் இறங்கிச்சென்றாள் .

அவள் அறைந்து சாற்றிய காரின் கதவே சொல்லும் சஹானாவின் கோபத்தின் அளவை .

எதையும் கண்டுகொள்ளாமல் தலையில் கைவைத்து அமர்ந்து இருந்த சஹானாவின் கவனம் கதவின் பக்கம் சென்றது .

அங்கு கீர்த்தனா தான் நின்று இருந்தார் ...

வேகமாக எழுந்து சென்றவள் "அம்மா உள்ள வாங்க , என் ரூம் வரதுக்கு கதவை தட்டுவீங்களா ?" என்று அவரை கைபிடித்து கூட்டி வந்தாள் .

உள்ளே வந்தவரின் கையில் இருக்கும் பையை பார்த்து "அம்மா என்ன இது ?" என்று வினவினாள் .

"இது யாரோ உன்னை கூட்டிவந்த தம்பி கொடுக்க சொன்னுச்சாம் , ராமு கொடுத்தார் (தோட்டத்தில் வேலை செய்பவர் )"என்றார் கீர்த்தனா .

அதை உடனே என்னவென்று பார்க்க ஆசை இருந்தாலும் கட்டுப்படுத்தி , கீர்த்தனாவுடன் சிறிது நேரம் உரையாடினாள் .

................................................

இரவு அனைவரும் உறங்கச்சென்ற பின் , வேகமாக அறையினுள் நுழைந்தாள் சஹானா .

காலை கீர்த்தனா கொடுத்துச்சென்ற பையை எடுத்து வேகமாக பிரித்துப்பார்த்தாள் ....

அதனுள் அவள் தெரிவு செய்த இரு புடவைகளும் , அதே போன்ற இன்னும் இரு புடவை இருந்தது . மேலும் இரு வேறு புடவைகள் ....

'இத எப்ப வாங்கினார் ' என்று யோசிக்க தொடங்கினாள் .

"சஹானா ரெண்டு புடவை செட்டா எடுத்திருக்கார் , ஒருவேளை உண்மை தெரிஞ்சிருக்குமோ ?"

"ச்ச் ச்ச் இல்ல , அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை "

"ஒருவேளை தெரிஞ்சிருந்தா ?"

அவளின் மனம் இரு வேறு நிலையில் நின்று வாதிட்டது ....

அப்பொழுது அலைபேசி வாட்ஸ் ஆப் குறுஞ் செய்தி வந்ததற்கான அடையாளத்தை காட்டியது ...

யார் இந்த நேரத்தில் என்று பார்த்தவள் ,மெய் சிலிர்த்து போனாள் ...

பிரவீன் தான் "ஒய் உனக்கு ரெண்டு புடவை , இன்னும் ரெண்டு .......உனக்கே தெரியும் அப்பறம் இன்னும் ரெண்டு புடவை , நீல நிறம் கீர்த்தனா அத்தைக்கு ....அந்த ரோஜா பூ நிறம் உனக்கானது ...." என்று அனுப்பி இருந்தான் .

ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள் சஹானா .....

"ப்ளூ டிக் வந்திருச்சு சோ நீ பாத்துட்ட.....வெள் அந்த ரோஜா பூ நிற புடவையோ ,நாளன்னைக்கு உன் பிறந்தநாளுக்காக வாங்கினது " என்ற தகவலையும் கூறினான் ....

அப்பொழுதும் அவள் அமைதியாக இருந்தாள் ....

"ரோஜா பூ நிற புடவை இன்னொன்னு எடுக்காததற்கான காரணம் ......" அவன் இழுத்தான் ...

அவள் தவித்தாள் ......

என்ன நடக்கும் ?
 

Members online

No members online now.
Top