JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -4

saaral

Well-known member
அத்தியாயம் -4

அன்று போனவள் அதன் பிறகு சத்தமில்லாமல் மிருதுளாவுடன் ப்ராஜெக்ட் விஷயமாக மட்டுமே நிறுவனத்திற்கு வந்து செல்வாள் . பிரவீனும் வெளிநாட்டில் இருந்த சமயம் விட்டு போன வேலைகளை பார்ப்பதில் மூழ்கினான் .

சஹானாவும் ,பிரவீனும் பார்க்கும் சந்தர்ப்பம் அமையவில்லை . பிரவீனின் மனமோ அவனவளை பார்க்க துடித்தது ஆனால் முடிந்தால் தானே ? இவன் முயற்சி செய்யும் சமயம் அவள் இவன் கண்ணில் கூட படமாட்டாள் .

ஒருமுறை சற்றே கடுப்பில் தங்கையிடம் "என்னமா மிருது உன் பிரிண்ட பார்க்கவே முடில செம பிஸி போல " என்றான் .

"என்னாச்சுன்னு தெரில அண்ணா ப்ராஜெக்ட் விஷயமா மட்டும் தான் அவ இப்ப என்கிட்ட பேசறா ...மித்த நேரம் என்னாலேயே அவளை பிடிக்க முடியலை " மிருதுளாவும் யோசனையுடன் சொன்னாள் .

'ஓஹ் மேடம்க்கு கோவமோ ...பார்த்துக்கலாம் எங்க போய்ட போற நீ ' என்றே எண்ணினான் .

.....................................

அது ஒரு தொழில் அதிபரின் மகன் நடத்தும் இரவு விடுதி . சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பிரம்மாண்டமாக வீற்று இருந்தது . அந்த நடு இரவிலும் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்க பட்டிருந்தது .

அங்கு ஒரு பீஎம்டபிள்யூ கார் வந்து நின்றது . அந்த வாகனத்தின் பின் இருக்கையில் இருந்து இறங்கினாள் ஒரு யுவதி ....அவளை பார்த்தவுடன் அனைவரும் வாய்பிளந்தனர் .

அவளின் தோரணை பிறப்பிலே பணக்காரி நான் என்பதை சொல்லாமல் சொல்லியது . அவள் அணிந்திருந்த உடை , நகை அனைத்தும் செழிப்பை சிந்தின .

ஒய்யாரமாக உள்ளே நடந்து சென்றவள் கண்களை சுழற்றினாள் . அவள் அங்கு யாரை அவ்வாறு தேடுகிறாள் ?...

ஒரு காக்டெய்ல் சொல்லிவிட்டு இறுதியாக இருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்தவளின் பார்வை அங்கு நடப்பவைகளை ஸ்கேன் செய்தன .

சிறு பெண்கள் கூட நட்பு என்னும் போர்வையால் வளைக்கப்பட்டு அங்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் . ஒளி மங்கிய அந்த அறையில் ஆண்களும் , பெண்களும் இருந்த நிலை ?...சற்று தொலைவில் எதுவோ தவறாக நடப்பதாக கண்டுகொண்டாள் .

அந்த கூட்டத்தில் அனைவரின் கவனத்தையும் டீஜே தன் பக்கம் இசையால் திருப்பினான் . நடுவில் போடப்பட்டிருந்த வண்ண விளக்குகளால் மின்னிய மேடையில் அனைவரும் நடனமாடினர் . அந்த இடத்தை விட்டு யாரும் அறியாமல் நகர்ந்த அந்த பெண் அங்கிருந்த படிகளில் ஏறினாள் .

இவளின் மனதிலோ 'எதை மறைக்க இந்த இசையும் நடனமும்? ' என்றே என்னத் தூண்டியது . இவள் கண்களிற்கு உருத்திய விஷயம் எவர் கண்ணுக்கும் புலப்படக்கூடாது என்றே இந்த இசைமழை தொடங்கப்பட்டதாக அவள் நம்பினாள் .

அவளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவள் கண்ட காட்சிகள் நெஞ்சை உறையச்செய்தது . கிட்டத்தட்ட மூன்றுப்பெண்கள் பணக்கார வீட்டு பெண்கள் என்பது முதல் பார்வையிலே அவளுக்கு தெரிந்தது . அவர்களை தடித்தாண்டவராயன் போன்றவர்கள் இழுத்துச்செல்ல முயன்றனர் .

அந்த பெண்கள் தீனமாக 'விடு , விடுங்க டா ' என்று முனங்கினர் . அந்த பெண்கள் மூவரும் சுயநினைவில் இல்லை !. என்ன செய்வது என்று யோசித்தாள் அந்தப் பெண் .

அப்பொழுது சரியாக அவளின் பின் வந்து நின்ற ஒருவன் "யார் நீ ?" என்று கர்ஜித்தான் .

சட்டென்று சமயோஜிதமாக யோசித்த அந்தப் பெண் "வாஷ் ரூம் " என்றாள் குளறலுடனும் , தள்ளாட்டத்துடனும் .

தன்னை நேராக பார்த்து தள்ளாடிக்கொண்டே நிற்கும் அந்தப் பெண்ணை ஆனந்த் கூர்ந்து பார்த்தான் . அவன் தான் பெரும் தொழில் அதிபரான சத்யாவின் ஒரே மகன் , இந்த விடுதியின் உரிமையாளர் .

அந்தப் பெண்ணை கூர்ந்து கவனித்துக் கொண்டே "தட் சைட் " என்று வலது கையை நீட்டி காண்பித்தான் .

"தங்க்யூ " என்று போதையில் பதில் கூறுவது போல் கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் அவள் . தன்னைத்தாண்டி செல்லும் அவளையே கூர்ந்து கவினித்துக்கொண்டிருந்தவன் 'இவளை எங்கயோ பார்த்திருக்கோமே ....? எங்க ? 'தனக்குள்ளாக யோசிக்க துவங்கினான் .

அதற்குள்ளாக அந்த பெண்களை பிடித்திருந்த தடிதாண்டவராயங்களில் ஒருவன் "பாஸ் " என்று வந்து நின்றான் .

"வாட் ?"வினவினான் ஆனந்த் .

"பாஸ் இன்னும் பார்ட்டி வரலை எல்லாரையும் ஒவ்வொரு ரூம்ல வச்சிருக்கோம் " என்று தகவலாக கூறிவிட்டுச்சென்றான் .

"ஹ்ம்ம் " என்று கூறியவன் மனதில் மீண்டும் அந்த பெண் ...அவளை எங்கயோ பார்த்திருக்கோம் எங்க என்றே என்னத்துவங்கினான் .

கீழ் தலத்தில் ஏதோ சலசலப்பு . ஆனந்த் தனது வேக நடையில் அங்கு சென்றவன் போலீசை கண்டான் ."என்ன சார் திடீர்னு வந்திருக்கீங்க ?"

"சார் கம்பளைண்ட் வந்திருக்கு அகைன்ஸ்ட் யுவர் ஹோட்டல் அண்ட் பப் " அந்த அதிகாரி தயங்கிக்கொண்டே சொன்னார் .அவர் அறிவர் இது சத்யாவின் ஹோட்டல் என்று . அவனின் ஆள் பலமும் அரசியல் பலமும் அறிந்தவராகிற்றே .

"என்ன சார் சொல்றீங்க ? இது யார் ஹோட்டல்னு தெரியும் தானே " கோபமாக வினவினான் ஆனந்த் .

"சார் கம்பிளைன்ட் போர்வேர்ட் செஞ்சது பெரிய இடம் . என்னால் ஒன்னும் செய்ய முடியாது " என்று கூறி ஆனந்தை நகர்த்திவிட்டு வேகமாக உள்ளே சென்றார் .

அந்த போலீஸ் அதிகாரி அந்த இடத்தை முழுதாக சோதனை செய்துமுடித்தபின் வெளியே வந்தவர் அரண்டேபோனார் . அத்தனை பத்திரிகை நண்பர்களும் நின்று இருந்தனர் .

"யார்யா இவங்களுக்கு சொன்னது .?" அருகினில் நின்ற கான்ஸ்டபிள்ளிடம் அடிக்குரலில் சீறினார் .

"சத்தியமா தெரிலை சார் " பாவமாக பதில் அளித்தார் கான்ஸ்டபிள் .

"ஆனந்த் சார் நத்திங் டூயிங் நாங்க உங்களை அர்ரெஸ்ட் பண்ணனும் ...பிகாஸ் நிறைய இல்லீகல் இஸ்ஸுஸ் இங்க இருக்கு ...மீடியாவும் வந்திடுச்சு ..." சொன்னவுடன் ஆனந்தின் முகத்தை துணி கொண்டு மூடி தனது ஆட்களுடன் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றினார் .

ஆனந்த் இதை எதிர் பார்க்கவில்லை நொடிப்பொழுதில் அனைத்தும் நடந்தேறிவிட்டது . அந்த ஆய்வாளர் வாகனத்தை சுற்றிக்கொண்டு தனது இருக்கைக்கு செல்லும் சமயம் அவரை பிடித்துக்கொண்டனர் பத்திரிகை துறை நண்பர்கள் ...

"சார் இங்க ப்ரோப்லேம் இருக்குனு எப்படி சார் தெரியும் ?"

"யார் சார் காம்ப்ளயின்ட் கொடுத்தது .?"

"சார் இதே மாதிரி ஒரு இஸ்ஸுக்காக தான இரண்டு ஆண்டுகள் முன் பத்திரிகையாளர் திரு போராடினார் , ஒரு கட்டுரை கூட எழுதினாரே " என்று சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன .

இவை அனைத்தையும் உள்ளே உக்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஆனந்தின் மூளை வேகமாக செயல்பட்டது ....தனது கோட் பையில் இருந்த உயர் ரக அலைபேசியை எடுத்தான் .

வேகமாக சில இளங்கங்களை அழுத்தினான் .

அந்த பக்கம் அழைப்பு போய்க்கொண்டே இருந்ததே தவிர யாரும் எடுக்கவில்லை கடுப்புடன் மீண்டும் மீண்டும் முயற்சித்தான் பதில் .....

அனைவர்க்கும் தகுந்தவாறு பதில் அழித்துக்கொண்டு வந்த ஆய்வாளர் வாகனத்தில் ஏறினார் .ஆய்வாளர் வந்து ஏறியவுடன் வண்டி நகர்ந்தது .

ஆனந்த் விடாமல் முயற்சித்துக்கொண்டே இருந்தான் ...பதில் இல்லை . ஆய்வாளர் ஆனந்தை அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்தது , சத்யா (ஆனந்தின் அப்பா ) வக்கீலுடன் வந்து ஜாமீனில் அழைத்துச்சென்றது எதையும் உணரும் நிலையில் இல்லை அவன் .

"பிக் அப் மான் " என்று அலைபேசியுடன் போராடிக்கொண்டிருந்தான் .

அந்த பக்கம் அழைப்பை ஏற்றவுடன் "ஹே அந்த கேர்ள் அவ இன்னும் உயிரோட இருக்காளா ?" பதட்டத்துடன் கேட்டான் ஆனந்த் .

"ஆனந்த் என்ன சொல்ற ஒண்ணுமே புரியலை " சதீஷ் விடிந்தும் விடியாமலும் அழைப்பு விடுத்தது என்னகேட்கிறான் என்று புரியாமல் அமர்ந்து இருந்தான் .

"ஹே சதீஷ் லீசன் அந்த கோத்தகிரி கேர்ள் இன்னும் உயிரோட இருக்கிறாளா ?" ஆனந்தின் குரல் பரபரப்பாக வந்தது .

"வாட் ? ஆர் யூ இன்சேன் ஆனந்த் ....அந்த பொண்ண தள்ளிவிட்டது நீ , உனக்கு தெரியாதது இல்லை எப்படி அவ உயிரோட இருப்பா ....?" சதீஷ் காட்டமாக கேட்டான் .கடந்த சில வருடம் வெறும் ஹாய் , பை நண்பனாக மட்டுமே ஆனந்தை பார்த்து வருகிறான் சதீஷ் .

சதீஷும் , ஆனந்தும் நண்பர்களே ...ஆனந்தின் நட்பால் தப்பான போதனையால் தவறாக செல்ல இருந்த தன்னை காத்தது பிரவீன் என்று சதீஷ் உணர்ந்தே இருந்தான் .அதான் எட்ட நின்று பழகுவது நல்லது என்று ,தனித்து நாடு நாடாக பறக்கிறான் .


"சதீஷ் நான் இன்னைக்கு அவளை பார்த்தேன் " தீவிரமாக கூறினான் ஆனந்த் .

"உலராத ஆனந்த் போதை ஏறினால் போய் தூங்கு " என்று கடுப்படித்துவிட்டு அழைப்பைதுண்டித்தான் சதீஷ் .

"ச்ச ...." என்று தனது அலைபேசியை ஓங்கி சுவற்றில் அடித்து உடைத்தான் ஆனந்த் .

சத்தம் கேட்டு ஆனந்தின் அறைக்கு வந்த சத்யா "ஆனந்த் கூல் எதுக்கு இவ்ளோ டென்ஷன் , டாடி பார்த்துகிறேன் " என்றார் .

ஆனந்த் எதையும் கேக்கும் நிலையில் இல்லை . "ஆனந்த் போலீஸ் பர்டிகுலரா வந்து தேடின மாதிரி இருக்கு ...ஏதோ பெரிய பிரஷர் வந்திருக்கு , இப்போதைக்கு அந்த ப்ரொபேர்ட்டி நம்ம ஆளு பேர்ல இருக்கு அவன் தான் உள்ள போயிருக்கான் அதான் உன்னை ஜாமீனில் எடுக்க முடிஞ்சுது " நடந்ததை விலக்கி கூறினார் .

"லாஸ்ட் டைம் மாரி எதுவும் நாமளா எதுவும் பண்ண முடியாது . புள் மீடியா காவேரஜ் பிளான் பண்ணி செஞ்சிருக்காங்க " இயலாமையுடன் கூறினார் சத்யா . போலீஸ் மீடியாவிற்கு ஆனந்த் பெயரை சொல்வதற்கு முன் அனைத்திற்கும் ஏற்பாடு செய்துவிட்டார் அவர் .

அவரின் சொற்கள் கேட்டு நிமிர்ந்த ஆனந்த் "டாடி அந்த பொண்ணுங்க , ரூம் எல்லாம் " என்றான் கேள்வியாக .

"அதே தான் நானும் கேக்கணும் நினச்சேன் ஆனந்த் என்ன ஆச்சு அங்க நம்ம பசங்க மட்டும் செமயான அடி ,காயத்துடன் மயங்கி இருந்தாங்கனு அந்த இன்ஸ்பெக்டர் சொன்னார் ...வாட்ஸ் கோயிங் ?" கேள்விகேட்டார் .

"ஒஹ் ச்ச " என்று தலையில் கைவைத்து மெத்தையில் அமர்ந்தான் ஆனந்த் .

"ஆனந்த் என்ன ஆச்சு ?"

"டாட் ப்ளீஸ் லீவ் மீ அலோன் " கர்ஜித்தான் .

....................................


பிரவீன் காலை ஐந்து மணிக்கு முழித்துவிட்டான் , அவன் மனம் வெறுமையாக இருந்தது . தன்னவளை காண முடியவில்லை என்ற வருத்தம் நிறைந்து இருந்தது .

இன்று சூர்ய உதயத்தை பார்த்துக்கொண்டே ஜாகிங் போகலாம் என்று எண்ணியவன் கடற்கரைக்கு செல்ல முடிவெடுத்து உடை மாற்றினான் . காரை எடுத்துக்கொண்டு சாலையில் செலுத்தியவன் தன்னை அறியாமல் சஹானாவின் குடியிருப்பு பகுதியுனுள் நுழைந்தான் .

வந்தப் பின் எங்கு இருக்கிறோம் என்று உணர்ந்தவன் ...'பிரவீன் என்னடா நீ டீனேஜ் பசங்க மாதிரி ...ஐயோ முத்திப்போச்சு ,,சஹானா சீக்கிரம் படிப்பை முடி நீ எப்ப என்கிட்ட வருவேன்னு இருக்கு ' மனத்திற்குள்ளாக பேசிக்கொண்டே சஹானாவின் வீட்டு வாயிலைத்தாண்டி சென்றான் .

வீடு பூட்டி இருந்தது .அவளை பார்க்காமல் அவன் மனம் அலுத்துக்கொண்டது . 'ஆமா கோழி கூவரத்துக்கு முன்னாடி நீ வந்து நின்னா உன்னைய பார்த்திருவாங்களா ?' என்று மூளை மனதை அடக்கியது .

தன்னை நினைத்தே புன்னகையுடன் மெதுவாக காரை செலுத்திக்கொண்டிருந்தவன் பார்வை ஓரிடத்தில் நிலைத்தது . காரை வேகமாக திருப்பி அந்த பார்க்கின் முன் சென்று நிறுத்தியவன் இறங்கினான் .

வேக எட்டுக்களுடன் பிரவீன் அந்த கல் மேடையை நெருங்கினான் .

"சஹானா இங்க என்ன பண்ற ? " என்றான் .

பட்டென்று அவனை திரும்பி பார்த்தவளின் கண்கள் வீங்கி சிவந்து இருந்தது . அவளின் நிலை கண்டு பதறினான் பிரவீன் .

"சஹானா இங்க இந்த நேரத்துல என்ன பண்ற ? அதும் தனியா ?, ....கண்ணெல்லாம் ஏன் இப்படி சிவந்திருக்கு அழுதியா ...எனி ப்ரோப்லேம்? " எனவாகிற்றோ என்ற தவிப்புடன் கேள்விகளை அடுக்கினான் .
 
Last edited:
V

Varsha

Guest
நல்லயிருந்த து
சாஹாண தான் அங்கு
செ ன்றதா?
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top