JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-7

saaral

Well-known member
அலர் நீ .....அகிலமும் நீ ...... அத்தியாயம்-7
 

saaral

Well-known member
அத்தியாயம்-7

வான்மதி அவளின் அன்னையை அழைத்துக்கொண்டு சென்னை வந்து இரு நாட்கள் ஆகிவிட்டது . அவள் நினைத்ததை போல் சுற்றி உள்ள யாரும் அவளிடம் பழைய கதையை பற்றி கேட்கவில்லை . அவர் அவர்களுக்கு அன்றைய பொழுதை பிரச்சனை இல்லாமல் செலுத்துவதே பெரும் பாடாக இருந்தது .

சென்னையில் புகழ் பெற்ற கல்லூரியில் நாளை விரிவுரையாளராக அவள் சேர வேண்டும் . நேற்றும் இன்றும் இந்த அடுக்குமாடி குடி இருப்பு வீட்டில் சாமான்களை எடுத்து வைத்து சரி செய்யவே நேரம் சரியாக சென்றுவிட்டது . உணவை இருவரும் வெளியில் இருந்து வரவைத்து உண்டனர் . அகிலம் மகளிற்காக அவளின் முன் உற்சாகமாக இருப்பதை போல் காட்டிக்கொண்டார் . தனிமையில் மகள் மட்டும் கணவர் பட்ட துன்பங்களை எண்ணி வருந்தினார் .

மாலை காபி அருந்திவிட்டு பால்கனியில் நின்றுகொண்டு இருந்த மதி அவளுக்கும் சிஸ்டருக்குமான வாக்குவாதத்தை எண்ணிக்கொண்டு இருந்தாள் . ஒரு மாதம் முன் ஒரு அழகான மாலை பொழுது வீட்டிற்கு வந்த சிஸ்டர் எந்த வித மேல் பூச்சும் இல்லாமல் "எப்ப மதி சென்னை கிளம்புற " என்றார் .

"சிஸ்டர் நான் அங்க எல்லாம் போகலை .....இங்கயே இருக்கேன் இந்த வாழ்கை எனக்கு நிறைவை கொடுக்கிறது " பிடிவாதம் நிரம்பிய குரலில் கூறினாள் மதி .

அகிலம் ஒன்றும் புரியாமல் நின்றுகொண்டு இருந்தார் "அகிலம் சென்னைல மதிக்கு ஒரு நல்ல வேலை கிடைத்திருக்கிறது இங்கு வாங்குவதை விட இருமடங்கு அதிக சம்பளம் அதே நேரம் நல்ல அனுபவமாக இருக்கும் அது ஒரு புகழ் பெற்ற கல்லூரி .....அங்கு வேலை கிடைக்க வேண்டும் என்று பலரும் தவிப்பர் ....மதிக்கு அந்த வாய்ப்பு தானாக வந்திருக்கிறது ஒற்றுக்கொள்ள மாட்டீங்கிறாள் " தனது அம்பை அகிலத்தின் பக்கம் செலுத்தினார் .

"மதிமா என்ன இது சிஸ்டர் இவ்ளோ தூரம் சொல்றப்ப நீ மறுப்பது தப்பு ...அவங்க உன் நலத்துக்காக தான சொல்ராங்க " அகிலத்திற்கும் சிஸ்டர் மீது அதீத மரியாதை . அப்பொழுது தந்தை இழந்து தவிப்புடன் நின்றவளை சிஸ்டர் தேற்றினார் என்று எண்ணிக் கொண்டிருந்தவர்க்கு மகளின் அத்தனை பாரத்தையும் போகச்செய்து தாயாக நின்று அரவணைத்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் இன்னும் மரியாதை கூடியது .

"அம்மா புரியாமல் பேசாதீங்க சென்னை போக முடியாது " பிடிவாதம் மாறாமல் நின்றவளை பேசியே இருவரும் கரைத்து சென்னை வர சம்மதிக்க வைத்தனர் . கொடைக்கானல் வீட்டை வாடகைக்கு விட்டு வந்துவிட்டனர் . சென்னை வீடும் சிஸ்டர்கு தெரிந்தவர் வீடு அவர் வெளிநாட்டு வாழ் இந்தியர் என்றும் ... நம்பிக்கையான ஆள் வாடகை தராமல் கூட வீட்டை பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார் . மதி அதை மறுத்தாள் ஆகையால் சொற்பமான வாடகை பெற்றுக்கொள்ள ஒத்துக்கொண்டார் .

அடுத்த நாள் காலை எவருக்காகவும் காத்திராமல் அழகாக விடிந்தது ....

காலை சீக்கிரம் எழுந்து தனது அன்னைக்கு


சமையலில் உதவி செய்துவிட்டு கல்லூரிக்கு தயாராகி கிளம்பினாள் வான்மதி . இளம் மஞ்சள் நிறத்தில் காட்டன் சேலை அணிந்து சூரியனை பார்த்து நிமிர்ந்து நிற்கும் சூரியகாந்தி மலரை போல் பொலிவுடன் கிளம்பினாள் . என்றும் போல் இன்றும் அகிலம் மகளின் அழகில் சந்தோசம் அடைந்தார் ஆனால் அதே நேரம் மனதின் ஓரத்தில் ஒரு அன்னையாக அவளின் கஷ்டங்களை எண்ணி வருந்தினார் .

கல்லூரிக்குள் தனது இருசக்கர வாகனத்தை செலுத்திய வான்மதி வண்டி நிறுத்தும் இடத்தில் சென்று , வண்டியை நிறுத்தி தலையில் அணிந்திருக்கும் தலைக்கவசத்தை கழட்டினாள் . அவள் வீட்டை விட்டு கிளம்பிய நொடியில் இருந்து ஒரு கருப்பு நிற விலை உயர்ந்த வாகனம் அவளை பின் தொடர்வதை கவனிக்க தவறினாள் .

இனி தங்களின் வாழ்கை சென்னை மாநகரில் எவ்வாறு இருக்கப்போகிறது என்ற கவலையில் மனதினுள் மிகவும் சோர்வுற்று இருந்தாள் மதி .

கல்லூரி முதல்வரின் அறையினுள் சென்றாள் மதி . அந்த அறையில் நடுநாயகமாக போடப்பட்டிருந்த மேஜையின் பின் இருந்த இருக்கையில் நாற்பதுகளின் இடையில் இருக்கும் வயதை ஒத்த ஒருவர் கம்பீரமாக அமர்ந்து இருந்தார் . அவரின் முன் இருந்த பெயர் பலகையில் சகுந்தலா என்று இருப்பதை கண்டவள் புன்னகையுடன் "குட் மோர்னிங் மேம் " என்று கூறி அவர் முன் நின்றாள் .

"குட் மோர்னிங் வான்மதி ....எப்படி இருக்கீங்க " கம்பீரம் குறையாமல் புன்னகை தாங்கிய முகத்துடன் கேட்டார் .

"ஆம் குட் மேம் தாங்க யூ " என்றாள் வான்மதி .

"உங்களை பற்றி சிஸ்டர் நிர்மலா பெருமையாக சொன்னார் ...மேலும் உங்கள் மாணவிகள் உங்கள் மேல் வைத்திருக்கும் பாசத்தை பார்க்கையில் மிகவும் நிறைவாக இருந்தது ....வெள்ளகம் டு ஓவர் காலேஜ் ....இங்கு இருக்கும் மாணவிகள் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் திறமையானவர்கள் அவர்களை உங்களை போன்று இளமையும் அறிவும் நிரம்பிய ஒருவரால் நல்ல வழியில் வழிநடத்திச்செல்ல முடியும் என்று நம்பி தான் இங்கு வேலை செய்ய கேட்டோம் ....உங்கள் வருகைக்கு மிகவும் மகிழ்ச்சி ..." என்று கூறி அங்கு வேலை செய்யும் லட்சுமியை அழைத்து "இவங்க வான்மதி , காமெர்ஸ் பிரிவில் சேர்ந்திருக்கும் புது ஆசிரியர் இவரை மிஸ்ஸஸ் க்ரித்திகாவிடம் அழைத்து செல்லுங்கள் "

வெளியே வந்த வான்மதி அந்த லட்சுமி என்பவரிடம் "மிஸ்ஸஸ் கிருத்திகா யாரு " என்று கேட்டாள் .

"அவங்க தான் மா நீ இருக்கும் பிரிவின் எச் ஓ டீ ....என் பேரு லட்சுமி கண்ணு இங்க எல்லா வேலைக்கும் என்னை கூப்பிடுவாங்க ....உனக்கும் எதுனாச்சும் வேணும்னா என்னாண்ட சொல்லு உடனே செஞ்சு தரேன் " மனதில் கள்ளம் இல்லாமல் பேசும் அவரை பார்த்து வான்மதி சிரித்துவைத்தாள் .

"மேம் இவங்க புது லெச்சரர்னு சகுந்தலா மேம் சொன்னாங்க " என்று கூறி கிருத்துகா என்பவரிடம் வான்மதியை விட்டு அடுத்தவேலை பார்க்க சென்று விட்டார் லட்சுமி .

"குட் மோர்னிங் " வான்மதி கூறவும் அவளின் பக்கம் திரும்பிய கிருத்திகா என்பவர் "குட் மோர்னிங் மா ...உள்ள வாங்க "

"மேம் ஆம் வான்மதி நியூ ஜோயினி "

"சந்தோசம் ....என் பெயர் கிருத்திகா ...இங்கு பல வருஷமா வேலை பார்க்கிறேன் என் மகள் கணித பிரிவில் இங்கு இரண்டாம் ஆண்டு படிக்கிறாள் ....இப்ப மேனேஜ்மென்ட் மாறியதால் சில புது விரிவுரையாளர்கள் வரவிருக்கிறார்கள் என்று மேம் சொன்னாங்க " அவரும் இயல்பாகவே பேச தொடங்கினார் . வான்மதிக்கு சற்று நிம்மதியாக இருந்தது ....எல்லாரும் நல்லவிதமாக பழகுகிறார்கள் என்று எண்ணிக்கொண்டாள் .

அதன் பிறகு அவளிற்கான வகுப்புகள் அட்டவணை அனைத்தும் எடுத்து சொல்லப்பட்டு வேலையில் மூழ்கினாள் வான்மதி .

மாலை கல்லூரி முடித்து வீட்டிற்கு வந்த வான்மதியை ஆராய்ச்சி பார்வையுடன் வரவேற்றார் அகிலம் . "அம்மா என்ன அப்படி பார்க்கறீங்க " அவரின் பார்வையின் பொருள் விளங்காமல் கேட்டாள் மதி .

"முதல் நாள் எப்படி போச்சு மதி எந்த பிரச்னையும் இல்லையே "

"அம்மா இதான் உங்க கவலையா ? அதெல்லாம் ஏதும் இல்லை அம்மா எல்லாம் நல்லவிதமாக போச்சு ...அங்க இருக்கவங்க எல்லாரும் நல்ல முறையில் பழகுகிறார்கள் " சாதாரணமாக பேசும் மகளை கண்டவுடன் திருப்தி அடைந்த அகிலம் "சிஸ்டர்க்கு கூப்பிட்டு பேசிரு மதி " என்று சொல்லி மகளுக்கு சிற்றுண்டி எடுக்க சென்றார் அகிலம் .

தனது கைபேசி எடுத்து சிஸ்டருக்கு அழைத்த மதி கூடத்தில் இருக்கும் இருக்கையில் அமர்ந்தாள் . இரண்டாம் ரிங்கில் அழைப்பை ஏற்ற சிஸ்டர் நிர்மலா "மதிமா என்ன எப்படி இருக்க ...." என்று கேட்டார் .

"நல்லா இருக்கேன் சிஸ்டர் ...." அவள் குரலை வைத்தே அங்கு அனைத்தும் நலமே என்று உணர்ந்தார் சிஸ்டர் .

"வேலை எல்லாம் பிடிச்சிருக்கு போல "

"ஆமாம் சிஸ்டர் நம் கல்லூரியை போல் இங்கும் அனைவரும் நல்லவிதமாக பழகுகிறார்கள் ...வேலையும் நல்லா இருக்கு " சந்தோசத்துடன் சொன்னாள் மதி .

"இதற்கு தானே நீ சென்னை செல்ல மாட்டேன் என்று அவ்ளோ அடம் பிடித்தாய் " சிறு சிரிப்புடன் கேட்டார் அவர் .

"சிஸ்டர் " என்று உரிமையாக சிணுங்கினாள் மதி .
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top