JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அன்பில் விளைந்த அமுதே டீஸர்

டீஸர்
“டேய் மாறா.. கோழி கூவி எம்புட்டு நேரம் ஆவுது.. நீ இன்னும் தூங்கிட்டு கிடக்க.. நான் வேலைக்கு கிளம்புதேன்.. சோறு பொங்கி கருவாடு வறுத்து வச்சிருக்கேன்.. நீ தின்னுட்டு வெளிய போல..”

“ம்.. சரி ஆத்தா”.. என்று கண்களைத் திறவாமலே அவன் பதில் உரைக்க..

கதவை அரைந்து சாத்தும் சத்தம்.. ஆத்தா சென்றதை உறுதி செய்ய.. மாறனின் கனவுகள் தொடர்ந்தன.

அந்த சின்ன வீடு இப்போது மாளிகையாக மாறி இருக்க.. அந்த பெரிய வீட்டின் அழகிய படுக்கை அறையில் குளிர் ஊட்டப் பட்டு.. பூக்கள் மனம் சேர்க்க.. கொசு வலை தடை இல்லா தூக்கத்தை கொடுக்க.. மாறன் அயர்ந்து உறங்க.. அப்போது பஞ்சினும் மெதுவான கரம்.. அவன் படிக்கட்டு தேகத்தை மெல்ல வருடி அவனைப் பின் இருந்து அணைத்துக் கொள்ள..

அந்த தேவ மங்கையின் ஸ்பரிசமும் மணமும் அவனை சொர்க்கத்துக்கே அழைத்துச் செல்ல.. அவள் புறம் திரும்பி அணைக்கும் ஆசை தலைக்கேற.. மாறன் மெல்ல திரும்ப..
ஆசையுடன் அவள் முகம் பார்த்தவனுக்கு கனவு கலைந்தது.

“ஏய்.. எப்ப டீ நீ வீட்டுக்குள்ள வந்த.. விடு டீ என்ன!!” என்று அவள் அணைப்பில் இருந்து திமிறி மாறன் எழுந்து அமர..

“எதுக்கு மாமா இப்படி மீன் போல துள்ளுற.. நான் தான கட்டி பிடிச்சேன். என் அத்தை மவனைக் கட்டிக்கிற உரிமை எனக்கு இல்லையாக்கும்.” என்று தன் சுடிதாரை சரி செய்து எழுந்து அமர்ந்தாள் பவித்ரா.

“இந்த கதை எல்லாம் போய் உங்க அப்பன் கிட்ட போய் பேசு டீ.. உங்க அப்பன் தான் இந்த ஜில்லாவுக்கே ஒரே போலீஸ் மாதிரி காக்கிச் சட்டையைப் போட்டு விரைப்பா நிக்கிறான்ல”

“போ மாமா.. அதை விட.. நீ காக்கி சட்டைய போட்டு.. ஸ்டைலா நடந்து வர்ற அழகைப் பார்க்கத் தான் எனக்கு ஆசையா இருக்கு”.. என்று அவள் கனவுகளுடன் சொல்ல..

மாறனுக்கும் அந்த நாள் என்று வருமோ என்று ஏக்கம் தோன்ற.. தன்னை சுதாரித்தவன்..

“நான் போலீஸ் டிரஸ் போட்டா.. கெத்தா கம்பீரமா தான் இருப்பேன். ஆனா அதை ரசிக்க வேண்டியது என் பொண்டாட்டி!!.. நீ இல்ல”

பவித்ராவின் முகம் சட்டென மாற.. “மாமா.. இந்த சிறுக்கி கன்னாலம்னு ஒண்ணு கட்டுனா.. உன்னைத் தான் கட்டுவேன். அதே போல என்னை விட்டுட்டு நீ வேற எவள் கழுத்துலயாவது தாலியைக் கட்டுன.. அவள் சங்கை அறுத்திடுவேன்.” என்று சொன்னவள் ஆவேசமாக அங்கிருந்து செல்ல..

“இவளுக்கும் இவங்க அப்பனுக்கும் யாரையாவது அறுக்கிறதே வேலையா போச்சு..” என்று மாறனின் உதடுகள் முணுமுணுக்க.. குளியல் அறைக்குள் புகுந்து.. குளித்து முடித்து வெளியேறினான்.
அவன் துண்டை இடுப்பில் கட்டி கொண்டு.. தன் கையால் ஈரத் தலையை தட்டி விட்டுக் கொண்டே வெளி வர..

விசில் அடித்துக் கொண்டே தன் பீரோவை நோக்கி நடந்தவன்.. அங்கு நின்ற பவித்ராவை கவனியாமல் மோத..

“ஏய் நீ இன்னும் போகலியா..” என்று அவன் அதட்ட..

அதே நேரம் ஆறடி ஜிம் பாடி ஆண் மகனின் மோதலில் மெல்லிய பூ போன்றவள் கீழே விழுந்திடக் கூடாது.. என்று அவன் கரம் அவளை தன்னோடு இழுத்து பிடித்திருக்க.. அவன் தொடுகையில் மயங்கி நின்றாள் பெண் அவள்.

அவள் நிலையை பார்த்து.. அவளுக்கு எதுவும் ஆகி விட்டதோ என்று பயந்தவன்..

“ஏ.. பவி.. என்னடீ ஆச்சு”.. என்று அவன் லேசாக அவளை உலுக்க..

“மாமா.. நீ தொட்டதுல ஒரே லவ் ஃபீலிங்.. உனக்கும் அப்படி தான் இருக்கா” என்று ஆர்வமுடன் அவள் அவன் கண்களை பார்க்க..

“மன்னாங்கட்டி” என்று கண்களில் கோபம் ஜொலிக்க அவளை உதறி நின்றான்.

“நானே இன்னைக்கு பிராக்டிகல் டெஸ்ட் இருக்கு.. உங்க அப்பன் வேற என்ன சதி பண்ணுவானோண்ணு டென்ஷன்ல இருக்கேன். நீ வேற”

“ஒன்னும் கவலைப்படாத மாமா.. இந்த முறை நிச்சயம் உனக்கு வேலை கிடைச்சிடும். காலையிலே நான் உன் பேர்ல கருப்பண்ண சாமிகிட்ட அர்ச்சனை பண்ணிட்டு தான் வந்தேன்.”

இந்தா என்று அந்த திருநீரை அவன் நெற்றியில் பூசி விட..

“ஏய்.. போதும் தள்ளி நில்லு டீ.. எதுடா சாக்குன்னு என்ன ஒட்டி உரச வேண்டியது. உனக்கு வெட்கமா இல்ல”..

“நான் எதுக்கு வெட்கப்படனும். நீ தான் ஒரு பொம்பளைப் பிள்ள முன்னாடி இப்படி நிக்கிறோமேன்னு நினைப்பே இல்லாம.. வெறும் துண்டை கட்டிக் கிட்டு கவர்ச்சியா நிக்கிற..” என்று சிறு வெட்கத்துடன் அவனை ரசித்தபடி அவள் நிற்க..

அப்போது தான் அவன் நிலை அவனுக்கு நினைவு வர.. “அங்கு ஆணியில் தொங்கி கொண்டு இருந்த டீ ஷர்ட்டை அவன் போட்டுக் கொள்ள..

ஏதோ கருகிய வாடை வருதே ஐயையோ.. அடுப்பை அணைக்க மறந்து விட்டேனா.. என்று பவித்ரா அடுப்படி நோக்கி ஓட..

அதற்குள் மாறன் தன் தேர்வுக்கு தயாராகி வர..
“மாமா வாங்க சாப்பாடு ரெடி..”

“ஏய்.. என் ஆத்தா எனக்கு ஏற்கனவே பொங்கி வச்சிட்டு தாண்டீ போயிருக்கு.. நீ எதுக்கு வெட்டியா சீன் போடுற..”
“போ மாமா.. அத்தை உனக்கு வெறும் கருவாடு மட்டும் தான் பொரிச்சு இருந்துச்சு.. நான் உனக்கு மீன் வறுத்து முட்டையும் பொரிச்சிருக்கேன்.”

“பவி நீ என்ன தான் பண்ணி என்ன மயக்க நினைச்சாலும்.. இந்த மாறன் உன் கிட்ட சிக்க மாட்டான். போய் உன் காலேஜுக்கு கிளம்புற வழிய பாரு..”

“ம்.. அதையும் பார்த்திடலாம். பார்த்துட்டே இரு மாமா.. பவி பவின்னு ஒரு நாள் என் பின்னாடி உன்னை நான் சுத்த வைக்கல.. என் பேரு பவித்ரா இல்ல!!”

அப்போது “ம் வாங்க.. உள்ள வாங்க மாமா”.. என்று மாறன் முகம் சட்டென மாறி..கதவு அருகில் அவன் பார்வை நிலைத்து நிற்க..

பவிக்கு பேய் அறைந்ததை போல் முகம் சட்டென மாற.. இதயம் தடதடக்க.. அவன் பார்த்த திசையை திகிலுடன் அவளும் பார்க்க..
அங்கு யாரும் இல்லை..

மாறனின் அழகான சிரிப்பொலி கேட்க.. பவி அவனை முறைக்க.. “ஏண்டி உங்க அப்பன் பேரைச் சொன்னதும் இப்படி பயந்து நடுங்குற.. நீ என்னைக் கட்டிக்கப் போறியா”..

“நான் இங்க இன்னும் நின்னா.. நிஜமாவே எங்க அப்பன் வந்துரும்.. நான் நாளைக்கு வர்றேன்”

“ம்.. வராத.. போ”

“நீ போன்னு சொன்னா கூட வாடின்னு ஆசையா என்ன கூப்பிடற மாதிரி தான் என் காதுல கேட்குது மாமா..”.. என்று தன் மொத்த காதலையும் கண்களில் தேக்கி சொல்ல..

“ஏன் காதுல எதுவும் பிரச்சனை இருக்கா??”

“ம்.. லவ்வு மாமா லவ்வு..”
“லவ்வு இல்லடி வயசுக் கோளாறு”

“சரி மாமா ஆல் தி பெஸ்ட். நல்லா சாப்பிட்டு போய்.. டெஸ்ட்ல சூப்பரா பண்ணு. அப்ப தான் எங்க அப்பன் கிட்ட கெத்தா வந்து பொண்ணு கேட்க முடியும்”..

“இந்த ஆசை வேற உனக்கு இருக்கா.. எனக்கு மட்டும் வேலை கிடைச்சிடுச்சு.. உங்க அப்பன் முன்னாடி பெரிய இடத்து பொண்ணைக் கல்யாணம் பண்ணி.. அந்த ஆளு மூஞ்சில கரியைப் பூசனும்..”

“மாமா.. என்ன கோபப்படுத்தாத.. உனக்கு இன்னைக்கு பரிட்சை என்ற ஒரே காரணத்தற்காக இப்ப சும்மா போறேன்.. வந்து வச்சிக்கிறேன்”.. என்று அவள் கண்கள் சிவக்க வந்த கோபத்தை அடக்கி வெளியில் செல்ல..

“கோபத்துல தாண்டி நீ ரொம்ப அழகா இருக்க”.. என்று சிரித்துக் கொண்டே அவன் உதடுகள் சொன்னதை கேட்கத்தான் அவள் அங்கு இல்லை.
புயல் வந்து போனது போல்.. அமைதியாகிப் போனது மாறனின் வீடு.

அன்புடன் லக்ஷ்மி.

உங்கள் கருத்துகளை மறவாமல் பதிவிடுங்கள் தோழமைகளே.

 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top