Subageetha
Well-known member
View attachment 373
அன்றில் அத்யாயம் 10
விடியும் சமயங்களில் உலகம் வெகு அழகு... அபூர்வமாய் வெட்கம் கொள்ளும் ஆண்களை போல.'
'விடியலுக்கு காத்திருக்கும் பல உயிர்கள். உயிரை நிலைக்க வைத்திருக்கும் சில உயிர்கள் '
வெகு நேரம் ஒரே நிலையில் உறங்கிய பாலா, ஆனந்த் இருவரும் நடு நிசையில் விழிப்பு தட்ட எழுந்து கொண்டனர். பாலாவின் கால்கள் மரத்து போனதால் அவளால் சட்டென்று எழ முடியவில்லை. சிறிதே சோம்பல் முறித்து தூக்கம் கலைந்தவனுக்கு வெகு காலமாய் எதை தொலைத்தோம் என்பது தெளிவாக புரிந்தது. அவன் முகம் அம்மா தன்னை பற்றி என்ன நினைக்க போகிறாளோ என்ற சிறு பதட்டத்துடன் கூடிய வெட்க சிரிப்பு.
இருவரும் புன்னகை முகமாக எழுந்து கொள்ள, முகம் கழுவி வாயை கொப்பளித்து விட்டு வந்தவர்க்ளுக்கு நேரம் மூன்றென காட்ட, இவ்வளவு நேரம் தூங்கி விட்டோமா என்ற வியப்பு. அவசரமாய் அடுக்களை க்குள் நுழைந்து சாப்பிட என்ன இருக்கிறது என ஆராய்ந்தான் ஆனந்த். ஒன்றும் பெரியதாக இல்லாமல் போக பிரட் பாக்கெட் எடுத்து, வாட்டியவன் பாலையும் காய்ச்சி எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வர, அத்தனை நேரம் அவன் அவசர கதியில் வேலை செய்யும் பாங்கை பார்த்த பாலாவுக்கு கண்கள் கட்டியது. திருமண உறவு ஆரம்பம் ஆன முதலே இதே பாங்கை, ராமனிடம் அனுபவிக்கிறாள். இவள் மீது அவர்கொண்ட அன்பை அவர் வாய் விட்டு சொன்னதில்லை. ஒவ்வொரு செய்கையும் அவரது காதலை வெளிப்படுத்தும்.
இன்று வரை அவர் மாறவில்லை. இனியும் அப்படித்தான். சிவா பிறந்த பொழுது வீட்டு நிர்வாகம் முழுவதும் அவர் ஒருவரே சமாளித்து, வேலைக்கும் சென்று... அப்பப்பா... 'ஆண்கள் ராமன் போல் இருந்தால் பெண்கள் சீதைகள்தாம்.'
உள்ளூர கணவனை நினைத்து, வெளியில் மகனை ரசித்து ஒருவாறு சாப்பிட்டுவிட்டு, சரி ஆனந்த்... அப்பா வருவாங்க. நா போய் காபிக்கு டிகாஷன் போட்டு வச்சிட்டு தூங்க போறேன். நீ போயி படு என அவனை அனுப்பி விட்டு அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள் பாலா.
அவள் நினைவுகள் முழுவதும் வாணிக்கு பார்த்திருக்கும் வரனையே சுற்றி சுற்றி வந்தது.
நிச்சயம் இதை பாலா எதிர்பார்க்கவில்லை. ஆனால், அனு சொன்ன பொழுது மறுத்து கூற வழி இல்லை. கல்யாணம் ஆயிரம் கால பயிர். பெண்ணை நல்ல இடம் பார்த்து வைத்தால் தான் அவள் வாழ்வு சிறக்கும்.
அந்த பையன் நல்ல படிப்பு, வேலை... விசாரித்து பார்த்ததில் ஒழுக்க குறைபாடு ஏதுமில்லை.
முக்கியமாக மிக நெருங்கிய தொடர்பு அவர்கள் குடும்பத்துடன் உண்டு.
'வாணிக்கும் -அந்த பையனுக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்க வேணுமே?
பெண் வீட்டினளாக பாலா கவலை பட ஆரம்பித்து விட்டாள். கை தானாக வேலை செய்தது. இன்னும் உறங்க செல்லாத ஆனந் அம்மாவின் சிந்தனை கண்டு கலவரம் கொண்டான். தன்னை பற்றிய எண்ணங்கள் அம்மாவை சூழ்ந்து படுத்துகிறதோ எனும் எண்ணம் அவனை கவலை கொள்ள செய்தது.
இனி, குடும்பத்துடன் அதிகம் நேரம் செலவழிக்கணும். கலகலப்பா இருக்கணும். யோசித்து கொண்டே அறைக்குள் புகுந்தவன் நினைவு தானாகவே நிகிலாவை நோக்கி.
'அவள் தனது திருமண செய்தியை மெயில் அனுப்பி இருந்தாள்.
அவர் பாரீசில் அவளது சீனியர். வயதிலும் தான். ஏறத்தாழ பதினெட்டு வயது வித்யாசம் !காதலுக்கு வயது முக்கியம் இல்லை என்றது அவள் அனுப்பி இருந்த மெயில். உண்மை தான்.
அவர் மீதான ஈர்ப்பு தான் அவளை ஆனந்தை விட்டு விலக சொன்னதோ?
ஏதுவாகிலும், இனி அவள் இன்னொருவர் மனைவி ஆகப்போகிறவள்.இன்னும் நாற்பத்தெட்டு மணி நேரத்தில் . பிறன் மனை நோக்குதல் மாபெரும் பாவம். மனம் தர்மோபதேசம் செய்ய, நிகிலாவின் எண்ணங்களை முயன்று வெளியேற்றினான்.
"அவளுடன் இருந்த நாட்கள் இனி தூக்கத்தில் வரும் கனவு போல். நினைத்து ரசிக்கலாம். அமிழ்ந்து உறைய கூடாது".
நினைத்தவாறே உறங்கி போனான்.
ரம்யா இரண்டு நாட்கள் விடுப்பு போதாமல் தவித்தாள். குழந்தை அம்மாவை விட்டால்தானே?
ரம்யா அவள் அம்மாவிடம் குழந்தையை 'பார்த்துக்கொள்ள கேட்க, பாத்துக்க முடியாதவ பெத்துக்க கூடாது,'என பதில் வந்தது அண்ணியிடமிருந்து.
அண்ணனும்,அம்மாவும் இன்றும் மௌன விரதம்.
சற்றே சலித்தவளாக, ராகவியுடன் இன்று மருத்துவ மனை செல்ல தீர்மானித்தாள். மழை சதி செய்ய இன்று நிச்சயம் விடுப்பு எடுக்க முடியாதே, என யோசித்து கேப் ஏற்பாடு செய்து கொண்டு அவள் கிளம்ப,
'அண்ணியோ கொஞ்சம் கெஞ்சி கேக்கறாளா பாருங்க... உங்க தொங்கச்சிக்கு உடம்பு முழுசும் திமிரு', இறங்கி வந்து கேட்டா என்னவாம்? என காது கிழியும் அளவு கூப்பாடு போட்டாள்.
அண்ணி, இவ்ளோ கத்தினா அண்ணனோட காது சவ்வு கிழிஞ்சிரும். இவ்வளவு சத்தம் மனுஷங்க காதுக்கு சரிப்படாது என இரு பொருள் பட ரம்யா சொல்லிவிட்டு ராகவியை அழைத்துக்கொண்டு வண்டியில் ஏற, கணவனுடன் தான் வந்த சமயங்களில் இந்த வீட்டில் தனக்கு கொடுக்க பட்ட மரியாதை... தங்க தாம்பாள தாங்கல் தான் !
நினைக்கும் பொழுதே, நெஞ்சு வெடித்து சிதறியது. விம்மலை கஷ்டப்பட்டு அடக்கினாள் ரம்யா.
அவளுக்கு தெரியும். இப்போது அவள் கணவன் சொத்துக்களை ஏற்றாலும், வீட்டில் அவள் வாழும் வாழ்வு மஹா ராணிக்கு சமம் ஆகி விடும்.
"சுய மரியாதை?"
நடந்தவற்றை ஒரு நாளும் அவளால் மன்னிக்கவும், மறக்கவும் முடியாதே? சாட்சியாக ராகவி. மடியில் குழந்தை படுத்து உறங்கிவிட, முதுகை தடவிகொடுத்தவளின் கண்கள் தாமாகவே வேலையை முன்வந்து ஏற்றது !
சில சமயங்களில் கண்களை அடக்கவே முடியாது. ' வெளியிலும், உள்ளேயும் மழை. ."
பரந்த உலகில் சிறகடித்து பறந்த எனக்கு ஏன் விதி அவனுடன் முடிச்சிட்டது என வழக்கம் போலவே தன்னுள் கேட்டுக்கொண்டாள் ரம்யா.
பாதி வழியில் காரின் என்ஜினுக்குள் தண்ணீர் புக, மருத்துவ மனைக்கு இன்னும் பத்து நிமிடங்கள் பிரயாணம் செய்தால் போதும் எனும் நிலையில் கார் நின்றுவிட்டது.
தனித்து வந்திருந்தால் நிச்சயம் அவள் நடந்தே சென்றிருப்பாள்.
நல்ல வேளையாக, ஆனந்தனின் கார் அந்த வழியாக வர, இவர்களை பார்த்தவன் தனது வாகனத்தை நிறுத்தி, கெட் இன் ரம்யா என்றான்.
அவன் கண்கள் சிறுமியை பார்க்க, மறுக்க தோன்றாமல் மகளுடன் வண்டியில் ஏறிக்கொண்டாள் அவள்.
'பொண்ணுக்கு என்ன வயசாகுது? ' மெல்ல பேச்சை ஆரம்பித்தான் டாக்டர் ஆனந்த்.
இரண்டரை வயசு சார்... அதற்கு மேலே பேச வழி இல்லாமல் மருத்துவ மனை வந்துவிட, வேலை நேரம் ஆரம்பிக்க இன்னமும் அரை மணி நேரம் இருக்கே... என ராகவியை அழைத்து கொண்டு குழந்தை நல மருத்துவரை நாடி சென்றாள் ரம்யா.
அவள் திரும்ப வரும்போது ராகவி அவளுடன் வரவில்லை. கேள்வியாய் நோக்கியவனை நிமிர்ந்து பார்த்தவள், நிதானித்துக்கொண்டு ராகவிக்கு ட்ரிப்ஸ் போட சொன்னார் டாக்டர். ஸோ, அட்மிட் பண்ணிட்டு வந்திருக்கேன். அங்க சிஸ்டர் ரேவதி தான் டியூட்டி. ராகவிக்கு அவங்க நல்ல பிரண்ட். குழந்தை படுத்த மாட்டா, என அவன் பார்வைக்கு சரியான விளக்கம் சொன்னவளை மெச்சுதலாக பார்த்தான் ஆனந்.
ராகவி, ஏதோ ஒரு வகையில் அவனிடம் தஞ்சம் வர போகிறாள் என அந்த நிமிடம் இருவரும் அறிந்திருக்க வில்லை.
மதியம் வேலைகளை முடித்து கொண்டு ஆனந்திடம் சொல்லி கொண்டு கிளம்பியவளுடன் சென்று குழந்தையை பார்க்க செல்ல அவன் மனம் ஆசை பட்டது தான்.
டாக்டர். விக்டர் சொன்னது போல் தேவையற்ற விஷயங்களில் நுழைவு சரி இல்லை. தன்னை தானே நிதானித்து கொண்டு லேசான தலையசைப்பை விடையாய் கொடுத்தான்.
ரம்யாவை பொறுத்தவரை குழந்தை ராகவியை தவிர மற்ற உறவுகள் இல்லை. நிறைய போராடியாகிவிட்டது.
'பெற்ற தாய், பெயர் தந்த தந்தை, உற்ற நண்பனாய் அண்ணன், இனி உனக்கு நானே எல்லா உறவுகளுமாக என நெருப்பை சாட்சியாக்கி மணந்து கொண்ட கணவன்... '
எல்லாமே பொய்த்து போன பிறகு, ரம்யாவின் மீதம் உள்ள பிடிப்பு, வாழ்க்கையின் ஓட்டம் ராகவி... ராகவி... ராகவி மட்டுமே !
எண்ண ஓட்டங்கள் துரத்த வேகமாக எட்டெடுத்து வைத்தாள் ரம்யா. குழந்தையை இறுக்கி கொள்ள அவள் இதயம் துடித்தது.
தன் அறையின் சாளரம் வழியாக பார்த்த தோழி பிரியா வேகமாக வெளியே வந்தாள் ரம்யாவை நோக்கி.
'இந்த பெண் செய்த பாவம் என்ன? வாழ்க்கை இவளை ஏன் இவ்வளவு சுழற்றி அடிக்கிறது என்று ப்ரியாவின் எண்ண அலைகள்...
'
பிரியா அறையில், மேசையின் மீது "ராகவி வயது இரண்டரை"என பெயர் பதித்த கோப்பு ரம்யாவை பார்த்து சிரிக்கிறது !
மீண்டும் சந்திப்போம் !
தோழி சுகீ.