JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

இன்று அன்றி(ல்)லை அத்யாயம் 2

Subageetha

Well-known member
அன்றி(ல்) 2

என்னதான் தான் தெளிவாக இருப்பதாக காட்டிக்கொண்டாலும் அவள் ஆழ்மனத்தில் ரகு பற்றிய சிந்தனைகள் சிறிது இருக்கத்தான் செய்தது. எங்கோ ஒரு மூளையில். ஒரு கனவு போல. அதை அவள் இந்த ஜன்மம் முடியும் வரை நிச்சயம் மறக்க முடியாது. காலங்கள் பார்வையை மாற்றும் சாத்தியக் கூறுகள் உண்டுதான்.

பாக்டரியில், எதிரே வந்த இரும்பு ராடு மோதியதில்,எலும்பு ஃப்ராக்சர் என ராமன் வீடு வர உறவுகளின் முன்னிலையில் தன்னை காட்டிக்கொள்ளாமல் கண்ணீரை உள்ளே இழுத்த பாலா ....அந்த நிலையிலும் அவளது கலங்கிய கண்களை கண்டவருக்கு உள்ளூர ஓர் இதம். தனக்காக மனைவி கலங்குகிறாள். இது வெறும் அக்கறையால் வருவதல்ல.

ஏறக்குறைய நான்கு மாதங்கள் ஆயிற்று அவர் நிலை சீர்பட. காலையில் வேலைக்கு செல்லும் முன்னர் அவருக்கு காலைக் கடன்களை முடிக்க வைத்து ,குளிக்க வைத்து, சிற்றுண்டி கொடுத்து...அயராமல் தனக்காக உருகும் மனைவி. மதியம் ஒருவேளை ராமனின் அன்னை சாப்பாடு ஊட்டுவார். இரவிலும்,ராமனை கவனிப்பது தன் உரிமை என எடுத்துக்கொண்டு மாங்கு மாங்கென வேலை செய்யும் அவளை பார்க்க பார்க்க அவருள்ளே விளங்க முடியா கவிதைதான்! அந்த நான்கு மாதங்களும் ஆன செலவுகள் கம்பனி பார்த்துக்கொண்டாலும்,பாலாவின் கை இருப்பு குறைந்ததும் நிஜம்தான். அதை பற்றி அவளுக்கென்னவோ கவலை வரவில்லை. கணவனுடன் தனது பந்தம் அழுத்தம் கொள்வதை அவளும், தான் முதலிரவன்று நினைத்தது சரிதான் என்றும் ராமனும் முடிவுக்கு வந்திருந்தனர்.

திருமணநாள் முடிந்து இவை அனைத்துமே ஓரிரு மாதங்களில் நிகழ்ந்துவிட்டது. ராஜாராமன் போட்ட பாலாவின் கழுத்தில் உள்ள மஞ்சள் கயிற்றின் முடிச்சுக்கள் நிச்சயம் வலுவுள்ளவைதான்!

இரண்டு வருடங்கள் முடிந்த நிலையில் பாலா தன் முதல் கருவை வயிற்றில் சுமந்தாள்! தானாகவே இது நிகழும்வரை ராமன் குழந்தை பற்றி பேசியதில்லை...அதற்கு அவர் மனதின் எண்ணமும் காரணம்தான். குழந்தை பிறப்பை தள்ளிபோட்டதில் ராமனுக்கும் பங்கு உண்டுதான். அவர்களது உறவின் ஆழம் முழுமையாக மனைவிக்கு புரியும் முன்னர் உறவுக்கு பாலமாக குழந்தை இருப்பதை அவர் விரும்பவில்லை.

அவர்கள் இருவரின் உறவை பொறுத்தவரை வேறு யாரையும் இடையில் அனுமதிக்க அவருக்கு இஷ்டமில்லை. பாலா அவரிடம் பகிர்ந்து கொண்டவைகளை இருபக்க உறவுகளிடமும் இந்த நொடி வரை அவர் சொல்லியதில்லை. மனைவியை காதலிப்பது எப்படி கணவனின் உரிமையோ,மனைவியை தன்னை காதலிக்க வைப்பதுவும் கணவனின் உரிமைத்தான். அதில்தான் அவனது ஆண்மை வெல்லும் எனும் சிறந்த கொள்கையை தன்னுள்ளே வைத்திருந்தார் அவர்.

திருமணம் நிச்சயம் ஆகி, பாலாவுடனான, இல்லற வாழ்வு பற்றிய கனவுகளில் இரண்டு குழந்தைகள் நிச்சயம் இருந்தனர். பாலாவின் வார்த்தைகளில் இருந்த ஒருவித வலி ,அவரை நிதானப் படுத்திக்கொள்ள வைத்தது.

பாலா ஒருவேளை கரு தரித்திருந்தாலும் அவர் மறுப்பதாய் இல்லை!இடைப்பட்ட நான்கு மாதங்கள் அவர்களுக்குள் உடலுறவிற்கு இடமிருந்திருக்கவில்லை.மனங்கள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைய தேவைப்பட்ட நேரமது. அவளும் தன்னை சுய அலசல் செய்யத் தேவையுமிருந்தது.

காதல் என அவள் நினைத்திருந்தது காதல் தானா? அப்படியாயின் இவ்வளவு விரைவில் எப்படி மாறக்கூடும்? அவளால் புரிந்துகொள்ள முடிந்தது ஒன்று தான். தான் ராமனின் மனைவியாய் தன்னை உணர ஆரம்பித்து நாட்களாகிவிட்டது.

ரகுவிடம் சாதாரணமாக பேசியது சுதாரிப்புக்காக அல்ல. நான்,மனதளவில் பாலாம்பிகா ராஜாராமனாகிவிட்டேன். உண்மையிலும் உண்மை!

பாலா குழந்தை பற்றி ஏதேனும் பேசினாலும்,,,எப்ப வருமோ அப்பதான் வரும்....ரொம்ப கவலை பட்டா இன்னும் லேட் ஆகும் என்றுவிட்டு நகர்ந்து செல்வார் ராமன்.

விஷயம் அறிந்து அவர் பட்ட சந்தோஷத்தை பார்க்கும் பொழுதுதான் அவரது ஆழ்மன ஏக்கம் புரிந்தது. இவ்வளவு ஏக்கம் கொண்டும் ,தன்னை தேற்றினாரே என நினைக்கும் நொடி அவள் கண்கள் நீரை பொழிந்தன.

அடுத்த இரண்டு வருடங்களில் இன்னொரு ஆண்குழந்தை...மூத்தவன் ஆனந்த்,அடுத்தவன் சிவநேசன். வாழ்க்கை அதன் போக்கில் ஓடியது...



இதற்கு நடுவே,ஆனந்த் பிறந்து எட்டு மாதங்களில் பாலாவின் கடைசி தங்கை அனுவிர்க்கு திருமணம் ஆனது. அனுவிற்கான மாப்பிள்ளை பாலாவை விட ஒரு வயது பெரியவன். பொறியியல் படிப்பு. அனு வெறும் +2.

பாலாவை பார்த்தவன் தனக்கு ஏன் அவள் கிடைக்கவில்லை என புழுங்கியதுவும் விதியே! பாலாவிடம் வழிபவன்,ஏனோ ராமனின் மீதும் அனு மீதும் காழ்புணர்வை வளர்த்துக்கொண்டான்.

திருமணமாகி ,சில மாதங்களில் அனுவிடம் காண்பிக்கத் தொடங்கியவன்,ராமனை பார்க்க நேர்ந்தால்,அவரை மற்றையோர் முன்னர் அவமானம் செய்வதை நோக்கமாகக் கொள்ள, பாலாவுக்கோ கோவம், அவள் பிறந்த வீட்டினர்கோ சங்கடம்.

புரிந்து கொண்ட ராமன், அனுவின் கணவன் சம்பத் இருக்கும் சமயம் மாமியார் வீடு செல்வதை தவிர்த்துவிட்டார்.

ரொம்ப சாரிங்க, சம்பத் இப்படி உங்ககிட்ட நடக்குறது எனக்கு மனசு உடையுது என அழும் மனைவியை தேற்றுவதும் அவர் கடமை ஆயிற்று!

கணவன் செல்லாத இடம் ,தனக்கும் வேண்டாம் என பாலாவும் பிறந்த வீடு செல்வதை தவிர்க்க ஆரம்பித்தாள்.

அனு மட்டும் பாலா வீட்டிர்க்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாள். சம்பத் தன்னிடம் நடந்துகொள்ளும் முறையை அவள் தனது அக்கா-அத்தானிடம் மறைக்கவில்லை. ராமனுக்கும்-பாலாவுக்கும் ஏதோ ஒன்று புரியத்தொடங்கியது. வெறும் இருபத்தொரு வயதான சிறு பெண்ணிடம் எப்படி சொல்வது எனதான் புரியவில்லை.



அனு கருத் தரிக்க,அதே சமயம் பாலாவும் இரண்டாவது முறையாக கருவுற்றாள். அனு இந்த சமயம் பெற்றவர்களுடன் இருக்கவேண்டும் என யோசித்தவளுக்கு,சம்பத் அடிக்கடி வருவான்.தான் அங்கு இருந்தால் சரிப்படாது எனவும் தோன்றியது.

அம்மா,ரெண்டு கர்பமா இருக்குறவங்க ஒண்ணா இருந்தா சரிவராது. எனக்கு ,லீவும் கிடைக்காது என சாக்கு சொல்ல, கேட்ட அவள் அம்மாவுக்கு புரிந்து கொண்டதன் அடையாளமாக கண்ணீர் வர, ராமனுக்கு சங்கடம்.

ராமனும்,அவர் அம்மா, அண்ணி என இரண்டாவது குழந்தை பிரசவத்தை கவனிக்க,அனு பெண் குழந்தையை பெற்று,இரண்டு மாதங்களில் பாலா ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

ஆண் – பெண் வித்யாசம் இன்னும் மறையவில்லை போலும்! பொறாமையில் சம்பத் அனுவை அதிகமாகவே காயப்படுத்தினான். ராமனை அசிங்கப் படுத்ததான் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலவோ ராமனை விட்டுக்கொடுப்பவளாய் இல்லை. அதுவேறு சம்பத்தை ஆட்டிப் படைத்தது.

அழகு,படிப்பு,அரசு வேலை,இரண்டு ஆண் குழந்தைகள்...ஆனால்,தகுதிக்கு கீழே,கணவன். சம்பத் ஜீரணிக்க முடியாமல் தவித்தான்.

இதன் நடுவில் பாலாவிற்கு இரண்டு முறை பதவி உயர்வு வர, ராமனிற்கோ உற்பத்தி குறைப்பிற்காக, செலவு குறைப்பிற்காக என்று அடிக்கடி தொழிற்சாலை மூடப்பட ,அவரிடம் தொய்வு...மனைவி சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதா என தோன்ற ஆரம்பித்தது...

பாலா கணவனை நன்கு புரிந்தவள் ...அவளுக்கு கணவன்மீது நம்பிக்கை அதிகம்.

பாலா ...நா கொஞ்சநாள் வெளியூர்களுக்கு போயி வேல சின்ன சின்னதா எடுத்து செய்யலாம்னு யோசிக்கிறேன்..ஆம்பள வீட்டுல தங்க கூடாது ...கம்பனி திறக்கும் வரைக்கும் என எங்கோ வெறித்துக்கொண்டு சொன்னவரை ...வேண்டாமே ,என்னுடனேயே இரேன்...கம்பனி திறக்கும்வரை என் சம்பளம் வருகிறதே என்று ஏங்கினாள் மனைவி ,அவள் வார்த்தைகளால் சொல்லாதவை ,அவள் ஏக்க பார்வை சொல்ல....நாளைக்கி நமக்குள்ள பிரச்சனை வரகூடத்துடா...மனச கலைக்க..இது ஒரு காரணமாகிடும்.....கொஞ்ச நாள்..திரும்பிடுவேன்...என்றுவிட்டு,தன் அம்மாவை துணைக்கு வைத்துவிட்டு கிளம்பினார் ராமன் ...அவர் மனம் புரிந்தவளாய் அமைதியானாள் பாலா...

வருடங்கள் செல்ல செல்ல இவை சகஜமானது! குழந்தைகள் வளர வளர ...ராமனுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் சமயம் மனைவிக்கு தானும் பாரமாக கூடாது எனும் எண்ணம்...எனவே, தொழிற்சாலை லாக் அவுட் சமயங்கள் வேறு சிறுவேலைகளை செய்ய கிளம்பிவிடுவார்...உள்ளூரில் செய்ய ஏனோ அவரது மனம் ஒப்பவில்லை.

உறவினர்கள் முன்னிலையில் தனது மனைவியின் மரியாதை குறைந்துவிடுமோ என பயந்தார். நல்ல வேலையுல இருக்குற பொண்ணு,தன்னால அடுத்தவங்க கேலிக்கு ஆளாகக் கூடாது என யோசித்தார்.

தாமதத்திர்க்கு மன்னிக்கவும்.!

மீண்டும் சந்திப்போம்.

உங்கள் தோழி,

சுகீ.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top