Subageetha
Well-known member
ஆயிரம் குழப்பங்கள் சூழ்ந்திருப்பினும் அன்றைய காலை பொழுது வாணிக்கு இனியதாகவே மலர்ந்தது. புகைப்படம் வழியே வசீகரம் செய்தவன், அவனை நேரில் பார்க்க போகிறேன் எனும் நினைப்பு இதயத்தில் தித்திப்பை உண்டுபண்ணுவதாய்... வெளியே காட்டிக்கொள்ள அவளுக்கு தயக்கம்.
பதட்டம் என அவள் சொல்ல மாட்டாள். அவளுக்கு யோசிக்க ஆயிரம் விஷயம் உண்டு கல்யாணம் பற்றி.
அவள் ஆர்வம், அழகனாய் விளம்பரத்தில் பார்ப்பவனை நேரில் பார்த்தால் தோன்றும் உணர்வு. சுலபமாக சொல்ல வேணும் என்றால், ம்ம்ம்... வி டி கே நேரில் வந்தால் அவனை ஜொள்ளும் பெண்ணின் மனோ நிலை?
'வரும் ரஞ்சன்... ம்ஹும் மனோ ரஞ்சன் அழகு, அழகு என்பதை விட அவன் புன்னகை சிந்தும் உதடுகள் அதை பிரதிபலிக்கும் கண்கள், அவற்றின் குறுகுறு பார்வை, நீள மூக்கு, அதன் நுனி வெட்டி விடுமோ எனும் அதன் கூர்மை, கண்ணில் படாமல் தப்பிக்க பார்க்கும் மூக்கு நுனியின் சிறு மச்சம், அடர்ந்த புருவங்கள், அவற்றுடன் போட்டி போடும் ட்ரிம் செய்ய பட்ட மீசை... மாநிறத்திற்கு சற்றே கூடுதல் நிறம். உயரம்... ஹான்..ஆறடி இரண்டு அங்குலம் என்றான் சிவாஅண்ணன். அம்மா வைத்திருக்கும் ஜாதகம் மற்றும் விவரங்களில் இருந்ததாம்.
'நான் ஐந்து அடி பத்து அங்குலம். இந்திய பெண்களில் நான் உயரம் சற்று அதிகம் தான். அவனுக்கு அருகில் சரியாய் இருப்பேன் என்று மனதில் கணக்கிட்டாள்.'
உள்ளூர ஏதோ ஊறும் உணர்வு. அவன் வாணியை மனம் வரை தாக்கி விட்டான். தன்னை பற்றி அவன் சிந்திப்பானா என்ற கேள்வி அவளை புரட்டியது. அதற்கு விடை சொல்பவனோ, மாலை நான்கு மணிக்குதான் வருவான்.
தன் எண்ணம் என்ன? என்ன எதிர்பார்க்கிறோம் என்பது அவளுக்கு சுத்தமாகவே புரியவில்லை.
முதன்முதலாக வாணியை பெண் பார்க்கவென வருபவன் இவன் தான். கன்னி பெண்கள் மனதில் உள்ளதை யாரால் அளவிட முடியும்? அவளுக்கு வெட்கம் என்பதை தாண்டி வேறு சிற்சில எதிர்பார்ப்புகள்!
அனு இவளை நிச்சயம் தன் மகளை அவதானித்தாள். "தாய் அறியா சூள் ஏது? "
இந்த தருணங்கள்... அவளும் கடந்து வந்திருக்கிறாள். அதற்கு மேலும்... இன்னமும் வேறு ஏதேதோ ! மகளின் வாழ்க்கை சரியாக அமைய, இந்த வரனே கைகூட அவள் இறைவியை சரணடைந்தாள். தாயை தவிர மக்களிடம் இறங்குபவர் யார்?
மனோ ரஞ்சன் படத்தை பார்த்த உடனேயே அனுவிற்கு பிடித்து விட்டது. மகளுக்கு ஏற்ற தோற்றம், வயது, படிப்பு, வேலை...விசாரித்து பார்த்ததில் நற்பழக்க வழக்கங்கள், மேலும் சரியான குடும்ப பின்னணி. இந்த குடும்ப பின்னணி பற்றிய சிந்தனைகள் அவளை உறைய வைத்தது நிஜம் !
என்னதான் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த குடும்பமானாலும், எல்லா விஷயங்களும் தெரிந்தவர்கள் ஆனாலும், உண்மை, நிதர்சனத்தை சந்திக்கும் பொழுது நிலைமை மாறிவிடக்கூடுமே?
தன் பரபரப்பை வெளியே காட்டாதிருக்க அனு வெகு பிரயத்தனம் செய்தாள், ஆனாலும், பிரசாத் கண்டுகொண்டார். அனுவை தோளோடு அணைத்து கட்டிலில் வெகுநேரம் இருவரும் அமர்ந்து இருந்தனர். கணவன் மனைவியை தேற்றும் விதமாக, நண்பன் தோழிக்கு ஆறுதல் சொல்லும் நிலையில்... அவர்களுக்குள் முதலில் துளிர் விட்டது நட்பு... பின்னர் அது இரக்கமாக, காதலாக... திருமணமாக பரிமாண முதிர்ச்சி.
இன்று வரை அனு பிரசாத் இருவருக்குள்ளும் இவை அனைத்தும் உயிரோடு இருப்பதால் தான் இவ்வளவு புரிதல்.
கணிதத்தில் மைனஸ் x மைனஸ் = பிளஸ் என்று ஒரு விதி உண்டு.இருவரும் ஏதோ ஒரு வகையில் துவண்டிருந்த நேரம், இணைந்தவர்கள் சரியான இணையாய்.
மாலை மனோரஞ்சன் குடும்பம் வருவதற்கு முன் அனுவின் அண்ணன் குடும்பம் வந்து விட்டது. பிரசாத் வகையில் நெருங்கிய உறவினர் வந்தார்கள். வீடு உறவினர் குரல்களில் உற்சாகம், காரசார விவாதம், என பல கலவை. பாலா ராமன் வீட்டு ஆட்களாய் வந்தவர்களை கவனிக்க இருவருக்கும் பெண்டு நிமிர்ந்தது.
பெண் பார்க்கும் விஷயம் ஒன்றும் பெரிதல்ல. குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக கூடி பேசும் சந்தர்ப்பம்.
ராமன் வெளியே சொல்லி விட்டார் சுமார் இருபது பேருக்கு மதிய உணவுக்கு.
நடு கூடம் அரட்டை கச்சேரியில் கலை கட்டி இருக்க எல்லோருமே ஏதோ ஒரு வகையில் நிம்மதியாக, "பீல் ரிலாக்ஸ்டு " என உள்ளூர உணர்ந்த நிமிடங்கள்.
தன் உடன் ஒத்த வயதில் யாரும் இல்லை எல்லாம் வயது ஏறியவர்கள் எனவே சிவா தான் கொண்டு வந்த மடி கணினியை உயிர்பித்தான்.
பாலா, சில குறிப்புகள் அனுப்பியிருந்தாள். சிவா அவற்றில் தன்னை முழுவதும் ஆழ்த்தி கொண்டான். ஆனந்த் சில புத்தகங்கள் வைத்து படித்துகொண்டு இருந்தான். அவன் எண்ணங்கள் முழுமையாக உறவினர் பேச்சில்.
அவ்வப்போது ராமன், பாலா , அனு பிரசாத், குரல்கள் கேட்க முடிந்தது.மனித நடவடிக்கைகள், அவற்றின் முரண்பாடுகள், ஆனந்த் மனதில் ஆச்சர்யத்தை உண்டு பண்ணியது.
ராமனும் பிரசாத்தும் வெளியே கிளம்ப தானும் வருவதாக ஆனந்த் கிளம்பினான். அவன் அப்பா சித்தப்பா இருவரும் ஒருவரை ஒருவர் அர்த்தம் கொண்ட பார்வை பார்த்து கொண்டனர்.
வீட்டுக்கு வந்த பெண்களுக்கு புடவை வாங்கணும். எல்லாம் நம்ம அண்ணி, தம்பி பொண்டாட்டி இப்படி.. என்று அனு சொன்னது காரணம். இந்த காலத்தில் உறவுகள் வீட்டுக்கு வருவது, சந்திப்பு அபூர்வ நிகழ்வு.
நா பையனோட இருக்க வெளியூர் வந்திருக்கேன், அமெரிக்கா வந்திருக்கேன் போன்ற செய்திகள் சகஜம். அதை யோசித்து தான் அனு இப்படி சொன்னது. கல்யாணம் நிச்சயம் ஆவது மற்றவை வேறு. வீட்டுக்கு வந்தவர்கள் சந்தோசமா கிளம்பனும் என்ற மனைவி கூற்று ஏனோ பிரசாத்துக்கு சரியாக பட்டது, மிகவும் பிடித்தது.
மௌன போர்வை போர்த்தி இருந்த ஆனந்த் மெல்ல ஆரம்பித்தான்.
"இந்த உறவு காரங்க எப்படி இவ்ளோ சீக்கிரம் மாறி போறாங்க.? நம்ம நிலை சரிவுல இருந்த பொழுது நம்மள தூர நிறுத்தி நோக வச்சாங்க. இப்போ, நாம ஏறி வந்த பிறகு நிறம் மாறிடுச்சு" தன் ஆதங்கத்தை வெளியிட்டான் அவன்.
ராமன் சிரித்தார். உறவுகள் எப்படி இருப்பாங்க அப்டின்னு திருவள்ளுவர் பத்து குறள்களே சொல்லி இருக்கார் ஆனந்த். நாம எப்படி இருக்க வேணும்னும் சொல்லி இருக்கார். நேரம் கிடைச்சா படி. உனக்கு இன்னும் உலகம் புரியும் என்றுவிட்டு அமைதியானார் பிரசாத் சித்தப்பா.
ராமன் ஆனந் தோளில் கை போட்டு கொண்டார். ரொம்ப யோசிச்சு கஷ்ட படாதடா... உன்கிட்ட யாரவது நல்லா பழகினா, நீயும் நல்லா பழகு... இல்ல, எட்டி நில்லு. அவனவன் வாழ்க்கை அவனவனுக்கு. யாரும் காசு பணம் குடுக்க போறது இல்ல... நாமளும் போயி நிக்க போறது இல்ல.
பாக்கும் சமயம் சிரிச்சு பேச, சின்ன சின்ன உதவி செய்ய மனுஷங்க வேணும். யாரும் இல்லாம நிக்க முடியாது. எல்லார்கிட்டயும் குறை -நிறை இருக்கும். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை "னு பள்ளி கூடத்து லேயே சொல்லி குடுக்க காரணம் இதுதான். என்றார்.
திருக்குறள் படிக்கனும் என்று மனதில் குறித்து வைத்தான் ஆனந்.பேசிக்கொண்டே வேலை முடித்து வீடு வந்து சேர்ந்தார்கள் மூவரும்.
மாலை நான்கு மணிக்கு மனோவின் அப்பா அழைத்து சொன்னார் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் கிளம்பி வர என்று. மனோ சென்னை அலுவலகம் சென்றிருந்தான் சிறு மீட்டிங் இருக்கு என்றுவிட்டு. அவர்கள் வீட்டில் எல்லோரும் மனோ வரவு எதிர்பார்த்து காத்து இருக்க, பிரசாத் வீட்டில் அவர்கள் வரவு நோக்கி காத்து இருக்க,
அடுத்த நிகழ்வு நோக்கி நாமும் வைட்டிங்...
மீண்டும் சந்திப்போம்
தோழி சுகீ.

Last edited: