Subageetha
Well-known member
அன்றில் 15
இரண்டு நாட்கள் விடுப்பு முடிந்து மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பிய ஆனந்த் முழுவதும் வீட்டு நடப்புகளில் இருந்து மீண்டு, பணியில் தன்னை வேகமாக பொருத்தி கொண்டான். அவன் கண்களில் அன்றைய நடப்பு பற்றிய குறிப்பு இருந்தது.
அன்று ரம்யா விடுப்பு குறித்து ஹச் ஆர் மெயில் வந்திருந்தது. இரண்டு நாட்களாக விடுப்பில் இருப்பதாக சொன்னது மெயில். லேசாக புருவம் சுளித்தவனின் கவனத்தை தன் மீது ஈர்த்து கொண்டாள் பிரியா.
ரம்யா வரும் வரை அவ்விடத்திற்கு பிரியா வேலை செய்தாக வேணும்.
மருத்துவ மனையில் அட்மிட் ஆகியிருக்கும் உள் நோயாளிகள், அந்த வாரம் அவன் செய்ய வேண்டிய சத்ர சிகிச்சை பற்றிய குறிப்புகள், உள் நோயாளிகளை சென்று பார்த்தல் என்று அவனது அன்றைய பொழுது கழிந்தது. இரவு ஏழு மணிக்கு பிரியா கிளம்பிவிட, ஒன்பது மணிக்கு கிளம்பலாம் என இதயம் சார்ந்த ஏற்கனவே நடந்த சத்ர சிகிச்சை பற்றிய புத்தகம் ஒன்றில் தன்னை நுழைத்து கொண்டான் ஆனந்த்.
ரம்யா வீட்டில்,
அன்று காலை நடந்த விஷயம் ஒன்றில் கவனம் முழுவதும் இருக்க, மடியில் தலை வைத்து படுத்திருந்த குழந்தை ராகவியின் தலையை கோதியபடியே தன்னுள்ளே மூழ்கியிருந்தாள் ரம்யா . அவள் மனம் முழுவதும் குழப்பம்.
நினைப்பது வேறாயினும் நிதர்சனம், நிஜம் வேறோ?
காலை ஒன்பது மணி இருக்கும். முரட்டு ஆட்கள் இருவரை துணைக்கு வைத்துக்கொண்டு
ஹோண்டா பிரேவியாவில் வந்த அந்த மாமனிதன், அம்மா, அண்ணன் இருவரையும் நிற்க வைத்து, கடன் வசூலிப்பு பற்றி பேச, அவன் கண்களோ, அண்ணியை அங்குலம் அங்குலமாக அளவிட்டது. அண்ணி தன்னுள் கூசிக்கொண்டு நின்றிருந்தாள். அவள் உள்ளே போக முடியாது. அண்ணனால், ஒன்னும் செய்ய முடியவில்லை. ஏதோ, சப்தம் என குழந்தை மிரள, ரம்யா வெளியே வரவில்லை. அவள் அறை சாளரத்தின் வழியே அவளால் ஹாலில் நடப்பதை பார்க்க முடியும். ஹாலில் உள்ளவர்களுக்கு இவ்வறையில் உள்ளவை தெரியாது. ரம்யா அப்பா, ரம்யாவின் பாதுகாப்புக்கென, ஏதோ சொல்லிக்கொண்டு செய்த ஏற்பாடு. அன்று கடுப்பு வந்ததென்னவோ உண்மை.
இன்று, நல்லதாகி போயிற்று.
அந்த மனிதனின் பச்சை வர்ண வார்த்தைகள் வீட்டில் உள்ளோர் மனதில் சிவப்பு நிற காயங்களை பரிசளித்தது.
அவன் அந்த மிருகம் சென்ற பிறகு 'அண்ணி தற்கொலை செய்து கொள்வேன்' என அழுகை.
கடனுக்கு காரணம் என்ன என்று ரம்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை. மாலை, மொட்டை மாடியில் துணி எடுக்க சென்ற அம்மாவின் பின்னோடே சென்றாள் ரம்யா.
'அம்மா', அழைத்த மகளை பார்க்கும் சக்தி அவள் அம்மாவுக்கு இல்லை. திரும்பாமலே, ம்ம்ம்...சொல்லு ரம்யா என்றார் அவர்.
'காலைல வந்தவங்க யாரு? கடன், பணம்னு பேச்சுகுரல் கேட்டது'என்றுவிட்டு, அம்மாவின் பதிலுக்கு காத்திருந்தாள் பெண்.
சொல்ல சிறிது தயங்கியவர், பெருமூச்சு விட்டு தன்னை சமனம் செய்து கொண்டு சொல்லலானார்.
காலை வந்தவங்ககிட்ட உங்க அப்பா, அஞ்சு லகரம் கடன் வாங்கி இருக்காங்க. மாப்பிள்ளை ஏதோ ரொட்டேஷன் செய்ய கேட்டாராம்.
மாப்பிள்ளை பணம் கேக்குறாருனு சொன்ன மனுஷன் வெளியே மீட்டர் வட்டியில் கடன் வாங்குனத சொல்லல. இந்த விஷயம் எங்களுக்கு உங்கப்பா போய் மூணு மாசம் கழித்துதான் தெரியும். அதுவரை உங்கப்பா வட்டி கட்டி வந்திருக்காரு. மாப்பிளை வரதக்ஷிணை கொடுத்ததா நினைச்சுக்க சொல்லிட்டாராம். திரும்ப கொடுக்கல.
வட்டி கட்டாம, நிறைய சேர்ந்து போய் இப்போ கடன் பத்து லகரம். உங்கப்பா டைரி பாத்துதான் எங்களுக்கு அப்பா கடன் வாங்கி உங்க வீட்டு காரருக்கு கொடுத்தது தெரியும், என்றுவிட்டு, வேறேதும் சொல்லாமல் துணிகளை எடுத்து கொண்டு போய் விட்டார்.
குமாருக்கு பணம் தேவைக்கு அதிகம். கோடீஸ்வரன். கேவலம் ஐந்து லகரத்தின் தேவை? அப்பா பொய் சொல்வதில்லை. கண்டிப்பு சற்று அதிகம்...மற்ற படி,?
தலை வலிக்க தன் அறைக்குள் செல்ல முனைந்தவளிடம் அவள் அப்பா எழுதிய டைரியை கொடுத்து படிக்க சொல்லி விட்டு சென்றான் அவள் அண்ணா.
ராகவி இன்னும் தூங்கி கொண்டு இருக்க மெல்ல டைரி பக்கங்களை புரட்டினாள் பெண். இரவு உறக்கம் ஹோகயா...
அது ஆயிரம் கதைகள் சொல்லியது. அவள் திருமண கடன், நிச்சயம் ஆன பிறகு குமார் நடந்து கொண்ட விதம், குமாரின் சித்தி ரம்யாவுக்கு கொடுத்து உதவிய நகைகள், குமார் இவர்களை படுத்திய பாடு, குழந்தை இன்மைகாக மருத்துவ சிகிச்சை செலவென, இவர்களிடம் ' மலடிய என் தலையில் கட்டி வச்சுடீங்க 'என இவர்களிடம் பணம் கறந்த கதை, கடைசியாக, ஐந்து லகர வரதக்ஷிணை என்று நீண்ட பக்கங்கள் பெண்ணை பெற்றவரின் இன்னொரு ஆதுரமான முகத்தை காட்ட, இறந்த தகப்பனுக்காக இன்று அழுது கரைந்தாள் ரம்யா. தப்பான இடத்தில் கல்யாணம் செய்து கொடுத்து விட்டேன் என முடிந்து இருந்தது அதன் பக்கங்கள்.
திகதி பார்த்தவள் அதிர்ச்சியின் உச்சம் பெற்றது நிஜம்! ஏனெனில், அந்த திகதியில் இருந்து இரண்டு நாட்களுக்கு பிறகு அவர் நிரந்தரமாக இல்லாமல் போனார்.
வீட்டில் இருப்போரின் நடவடிக்கை, போக்கு புரிவது போல் இருந்தது.
அண்ணியின் புது நகை? இதற்கு பதில் எங்கே தேடுவது? நிதானித்தவள், அண்ணனிடம் கேக்க முடிவு செய்தாள். ஹாலில் சாப்பிட்டு கொண்டு இருந்தவரிடம், அண்ணி அறைக்குள் செல்ல காத்திருந்து, செய்கை மூலம் அண்ணனை மாடிக்கு வர சொன்னாள்.
அண்ணனின் பதில், இது அவ அம்மா போன பிறகு, அவங்க நகைகளை பாகம் போட்டதுல இவ பங்கு என்றான். ஓ.. என்றவளிடம் ஆழ்ந்த அமைதி.
மாந்தர் நிறம் மாறி தெரியும் விந்தை? சாரி அண்ணா, நா அந்த நகை நீ வாங்கி போட்டேன்னு நினைத்து... அவளால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
அவனும் வேறு பேசவில்லை. சூழ்நிலை இருவரையும் இறுக்கியது.
அடுத்த நாள் மேலும் விடுப்பு வேண்டாம் என யோசித்து, ராகவிக்கு உடம்பு முடியல பாத்துக்கோங்க என பொதுவில் சொல்லி, கிளம்பி விட்டாள்...
அவள் கிளம்பிய பிறகு, அவள் அம்மா அண்ணி இருவரும் ஓரளவு பார்த்துக்கொள்வார்கள். இப்போது கடன் கட்ட பணம் வேணும். அவளுக்கும் குற்ற உணர்வு. தவறு செய்தவன் அவள் கணவன். முன்னாள் கணவன்.
ராகவியின் உடம்பு பிரச்சனை ஒரு புறம், புதுசாய் தெரிந்த பிரச்சனை இன்னோர் புறமும் அவளை இழுத்தது.
ராகவி குறிப்புகளுடன் அவளால் ஒரு அம்மாவாகதான் ஆனந்த் அறைக்கு செல்ல முடிந்தது. அவன் காரியதர்சியாக அல்ல. பலவேறு நிகழ்வுகள் அவளை மிகவும் சோர்வடைய வைத்திருந்தது. காலையில், உணவு சாப்பிட மறந்து வந்தாள். தன்னை முயற்சி செய்து நிதாநித்து கொண்டாள்.
ஓரளவு காலை பணிகள் முடிந்த பிறகு, ராகவி குறிப்புகளை ஆனந்த் பார்வையில் வைத்தவள் இதயம் வெளியே குதித்து விடுமோ என தவித்தது.
அவளை ஆழ்ந்து பார்த்தவன், நா இதை காலைல எதிர்பார்த்தேன் என்றவாறே கோப்பினுள் தன்னை நுழைத்து கொண்டான். அவனது முகம் பல்வேறு பாவங்களை காட்டியது. முடிவாக, நீங்கள் உங்க கணவரோடு வர முடியுமா? என்றான்.
அவள் முகத்தில் பயம் தாண்டவமாட, 'அவர் இல்லை ' என்றவளை கேள்வியாக நோக்கியவனை, அவர் இந்த உலகத்தில் இல்லை ' என்றவள் குரல் அவளுக்கே கேட்காமல் வெளியே வந்தது.
சரி, வீட்ல வேற யாரவது வருவாங்க அப்டின்னா, உங்க கூட வர சொல்லுங்க, பேசுவோம் என்று முடித்து கொண்டான். அவன் அறிந்த இந்த பெண், விஷயத்தை தாங்க முடியுமா எனும் சந்தேகம். இதயத்தில் சிறு அடைப்பு இருக்கலாம் என்பது குழந்தைநல மருத்துவரது குறிப்பு.
ராகவிக்கு பிரச்சனை இருக்கிறதா என்பதை அறிய இன்னும் சில பல மருத்துவ சோதனைகள் மீதம் உண்டு. பிறகுதான், தெரியும். மனதளவில் ரம்யா சோர்வாக இருப்பதால் சிந்திக்க வேண்டியுள்ளது.
கணவர் இல்லை எனில், அவன் எண்ணங்கள் வெவ்வேறு திசையில் தொடர ஆரம்பித்து... ரம்யாவை நோக்கி நின்றது.
அவன் ஏதும் சொல்ல முடியாது. பாப்போம், என உள் நோயாளிகள் பிரிவு நோக்கி சென்றான். அவளுக்கு தன்னை தானே சமநிலை கொண்டு வர வேணும். மேற்கொண்டு இன்னும் உள்ளது. அன்று அரை மணி நேரம் முன்னதாகவே கிளம்பி விட்டாள்.
அண்ணன் மட்டுமே இன்று அவளுக்கு துணை நிற்க முடியும் என வீட்டுக்கு சென்றால், வீடு அமைதியாக இருந்தது. அண்ணன் மாலைதானே வருவான். அறையில் சாப்பிட்டுவிட்டு ராகவி உறங்கி கொண்டிருக்க, அவளை பார்த்த படியே அமர்ந்து இருந்தாள் அண்ணி.
அண்ணியின் கண்கள் சொன்ன கலவரம்?
மீண்டும் அடுத்த பதிவு விரைவில்.
தோழி
சுகீ.

Last edited: