JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒரு புன்னகை பூவே அத்தியாயம் 2

revathyrey04

New member
புன்னகை 2 :

சென்னையில் போக்குவரத்து நெருக்கடியிலும், தனது ஜாகுவார் XJ ஐ புயல் வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தான். வேகம்,கோபம், எதிராளிகளை அடியோடு வீழ்த்திவிடும் அளவு விவேகம்,எதிரில் நிற்போரை தன் கூரிய விழிகளால் எடை போதும் திறமை வாய்ந்த, தொழிலில் கால் பதித்த மூன்று வருடங்களில் பல நட்புகளையும், பல பல எதிரிகளையும் சம்பாரித்து வைத்திருக்கும் இளம் தொழிலதிபர்.
தன்னிடம் நெருங்குபவர்களை சிரிக்கத் தெரியாது என்று கூறும் அழுத்தமான உதடுகளாலும், ஒற்றை பார்வையிலும் தள்ளி நிறுத்தி விடுவான்.
ADS Group Of Companies
அந்த பெரிய கேட்டை செக்யூரிட்டி திறந்த நொடி சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவு கடந்து தங்களுடைய சாம்ராஜியமான, முழுவதும் கண்ணாடியால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தங்களின் எட்டு மாடி கோட்டைய்க்குள், சிறிதும் காரின் வேகத்தினை குறைக்காமல், மேலும் கூட்டி,புயல் வேகத்திலேயே தனது மைலாப்புரத்தில் உள்ள முதன்மை அலுவலகத்தில் நிறுத்தி,தனது டிரைவர் காரை அடைய குறைந்தபட்ச இடைவேளியே என்றாலும், அது வரையுமே தன்னால் பொறுத்துக் கொள்ள இயலாது என்பது போல், மேலும் உறும விட்டுக் கொண்டிருந்தான். தனது முதலாளி வரும் போது தான் இருக்க வேண்டும், அதற்குள் தனது வேலையை முடித்து விட்டு திரும்பி வந்து விடலாம் என்றென்னி சென்ற தன் மடத்தனத்தை நொந்துகொண்டு, கிட்டத்தட்ட ஓடி வந்து மூச்சு வாங்க நின்றான். தனது காரை விட்டு கீழ் இறங்கியதும், கார் கீயை வாங்க நின்றிருக்கும் தனது டிரைவரிடம் கோபப் பார்வையை வீசி கீயை குடுத்துவிட்டு அகன்றான்.
தன் முதலாளி தன்மை இத்தோடு விட்டதற்கே தனது குல தெய்வத்திற்கு பெரிய அவசர கும்பிடு ஒன்றை போட்டு விட்டு, செல்லும் முதலாளியை பார்த்தான்.
போர்ஸ்சே (porsche) சன் க்ளாஸை இடது கரத்தில் கழற்றி தன் சட்டையில் மாட்டிக் கொண்டே, வலது கரத்தில் ஜெல் தடவப்பட்ட அடர்ந்த சிகையை கோதியவாரு, மிக அலட்சியமாக அலுவலக தொழிலாளர்களின் காலை வணக்கத்தை சிறு தலை அசைப்புடன் ஏற்றுக் கொண்டு வேக எட்டுகளுடன் தனது அறையை அடைந்தான்.

ஆதி ஆறு அடி அங்குலம், மாநிறத்திற்கும் சுற்று கூடுதலான நிறம், தனது மேல் படிப்பிற்காக சென்ற வெளிநாட்டு வாசத்தின் உதவியில் இன்னும் சிவந்த மேனி நிறம், அழுத்தமான உதடுகள், இறுகிய தாடை, தீர்க்கமான கண்கள், உடற்பயிற்சியினால் முறுக்கேறிய கட்டுப்பாடான உடற்கட்டு, எடுப்பான மீசை என முழு ஆணழகனாக திகழ்ந்தான்.

அறைக்குள் நுழைந்தவுடன் ஆதியின் பி. ஏ ஷர்மிளா கதவை தட்டி அனுமதி பெற்றுக் கொண்டு நுழைந்தாள். உள்ளே சென்றவுடன் தன்னை நிமிர்ந்து பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்தி தன் அன்றாட பணியை தொடர்ந்தாள் ஆதியை சைட் அடிப்பதே முதல் முக்கிய பணி.
உள்ளே வந்து எதுவும் பேசவில்லை என்று ஓரிரு நிமிடங்கள் கழித்து கணினியில் இருந்து பார்வையை மட்டும் திருப்பி “என்ன” என்பது போல் ஒற்றை புருவத்தை ஏற இறங்க பார்த்தான். திடீரென்று தன்னை பார்ப்பான் என்று எதிர்பாராததால் விநாடி நேரத்தில் தன்னை நிலைப்படுத்தி “சார், நம்ம நியூ ப்ராஜெக்ட்டிற்கு வொர்கர்ஸ் வேணும்னு திருச்சியில் இருக்க மௌன்ட் காலேஜில் கேம்பஸ் இன்டர்வியு கன்டக்ட் பண்ணாலாம்னு சொல்லிருந்தோம். ஆனா இன்னும் நம்ம சைடு இருந்து எந்த கன்பர்மேஷனும் குடுக்கல. டுடே காலேஜில் இருந்து பேசுனாங்க. நீங்க செக் பண்ணிட்டா இன்றைக்கு நாம இன்பர்மேஷன் கொடுத்திரலாம்” என்று ஒரு வழியாக சொல்லி முடித்தாள்.
ஓரிரு விநாடிகள் நிதானித்து விட்டு,
“ஓகே நெக்ஸட் மன்த், ஃபர்ஸட் சேடெர்டே கன்டக்ட் பண்ணாலாம்னு கன்பர்மேஷன் மெயில் போட்டிருங்க. தென் நம்ம ஹெச்.ஆர் (HR) டிபார்ட்மன்ட்ல சொல்லி டென் ஸ்டாஃப்ஸ ரெடியா இருக்க சொல்லிங்க, நம்ம ப்ராஜெக்ட் ரொம்ப பெரியது அதனால நாம் ஹண்ரட் (100) ஸ்டூடண்ட்ஸ செலக்ட் பண்ணனும், அதற்கு ஏற்ற மாதிரி ப்ரிபேர் பண்ண சொல்லிடுங்க” பேச்சு முடிந்தது என்பது போல் கணினியில் பார்வையை திருப்பிக் கொண்டான். இவ்வளவு நேரம் இவன் தான் பேசினானா என்று அவன் செயல் இருந்தது.

------------------------------------------------------------
திருச்சி மௌன்ட் காலேஜ்:
(“Dear students,
Next Saturday campus drive will be conduct by ADS group of companies. Totally 100 candidates will be recruit by the company. Above 7.5 cgpa interested candidates will give your name to your class place the coordinator” )
“அன்புள்ள மாணவர்கள்,
அடுத்த சனிக்கிழமை ADS group of companies நடத்தும் வேலை வாய்ப்பில் 100 மாணவர்கள் நிறுவனத்தால் நியமனம் செய்யப்படுவார்கள். 7.5 cgpa மேல் ஆர்வமுள்ள மாணவர்கள் உங்கள் வகுப்பு ப்ளேஸ்மென்ட் ஒருங்கிணைப்பாளரிடம் பெயரை கொடுக்க வேண்டிய கடைசி நாள் வரும் புதன் கிழமை.”

காலேஜ் இறுதி ஆண்டு மாணவர்களின் ப்ளாக் நோட்டிஸ் போர்டில் தான் இந்த சர்க்குலர் போடப்பட்டிருந்தது. அனைத்து மாணவர்களும் தங்களுக்குள் சலசலத்த படி சென்றனர்.
“ஹேய், நம்மலும் ப்ரிபர் பண்ணனும் டி. வர போற கம்பெனி சாதாரணம் இல்ல, அந்த கரண்ட் எம்.டி யோட அப்பா முழு பொறுப்பையும் பார்த்துட்ட அப்ப கூட ஒரு சில ப்ராஜெக்ட் இவங்க கைய விட்டு போயிருக்கு. ஆனா இப்ப அவங்க ஸன் வந்த அப்புறம் எல்லாம் இவங்க தானாம். இவங்க விட்டு குடுத்தா தான் மத்தவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்குமாம். இப்ப இருக்க நியூ எம்.டி சரியான சிடு மூஞ்சியாம் டி. ஆனா வேலை கிடைச்சா சொர்க்கம். அந்த சிடு மூஞ்சி மட்டும் வேலை குடுத்திட்டா, அந்த மகாராசன் பேர கேட்டு எங்க கோவில்ல கெடா வெட்டிரேன்“ என்று தீக்ஷாவின் நெருங்கிய தோழி யாழினி ஏக பெரு மூச்சுடன் தீக்ஷா மற்றும் அவர்கள் தோழிகளிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“அந்த எம்.டி எப்படி இருந்தா நமக்கென்னடி, வேலை மட்டும் கிடச்சா போதும்” என்று தீக்ஷா அத்தோடு முடித்தாள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். ஆனால் மிகவும் கலகலப்பானவள் தன் குடும்பம் மற்றும் நெருங்கிய வகுப்புத் தோழிகளிடம். அதன் பிறகு பேச்சு வேறு பக்கம் சென்றது.

---------------------------------------------------------------
“ஃபனா ஃபனா ஃபனா
யாக்கை திரி காதல் சுடர்

அன்பே அன்பே அன்பே அன்பே

ஜீவன் நதி காதல் கடல்

நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே
பிறவி பிழை காதல் திருத்தம் நெஞ்சே

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

இருதயம் கல் காதல் சிற்பம் அன்பே

யாக்கை திரி காதல் சுடர்”
என காதை கிழிக்கும் அளவிற்கு மேல் தட்டு வர்க்க பிள்ளைகள் ஆண், பெண் பேதமின்றி ஆடிக் கொண்டிருந்தார்கள் சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை அடையார் பார்க்கில் இருக்கும் நைட்ஸ் அவுட் க்ளிப்பில். அதில் தன்
நண்பர்களுடன் டார்க் ப்ளு ஜீன்ஸ் பேண்ட், வொய்ட் காலர் இல்லாத டீசர்ட், டீசர்டில் ரேஃபான் சன் க்ளாஸை மாட்டி, ஜெல் தடவப்படாத தன்னைப் போலவே இருக்கும் அடங்காத சிகையை இடது கரத்தில் அழுந்த கோதியபடி, வலது கரத்தால் கோப்பையில் உள்ள மதுவை வாயில் சரித்துக் கொண்டே, உதட்டுல் எப்பொழுதும் இருக்கும் சிரிப்புமாக,சிரிக்கும் பொழுது விழும் கண்ணக் குழியுமாக வசிகரிக்கும் புன்னகையுடன் ஆடிக் கொண்டிருந்தான் தர்ஷன்.

“ஏன்டா மச்சி, அது எப்டிடா கரெக்டா கவர்மென்ட் ஜாப்ல வேலை பார்க்குற மாதிரியே ஷார்ப்பா ஏழு மணிக்கே கிளம்பி,உங்க அப்பாட்ட இருந்தும் எஸ் ஆகிட்டு நைன்க்கு எங்க கூட ஜாய்ன் பண்ணிடுற” என்று தர்ஷனின் உயிரை எடுக்கும் உயிர் தோழன் அஷ்வின் கேட்டான்.
“அது வந்து மச்சி, ஒன்னு எங்கையாது அதிர்ஷ்ட மச்சம் இருக்கனும், இல்ல சமாளிக்க மூளை வேணும். அதப் பத்தி ரொம்ப யோசிக்காம அங்க பாரு, ஒரு ப்யூட்டி என்ன லுக்கு விடுது, நீயும் போய் ஒரு பிகர கரெக்ட் பன்ன பாரு மச்சி போ… ” என்றவாறு தன்னை ஜொள்ளிய ஸவீட்டியைத் தேடிச் சென்றான். “ஹாய் ஸ்வீட்டி, டூ யு வான்ட் டு டான்ஸ் வித் மீ” என்று தன் வலது கரத்தினை நீட்டுனான் தர்ஷன்.
தன்னை ஒரு தரம் கடைக் கண் பார்வை பார்ப்பானா என்று நின்றுக் கொண்டிருந்தவளிற்கு தன்னுடன் நடனம் ஆட அழைத்தும் போகாமல் இருக்க அவள் என்ன லூசா. நீட்டிய தர்ஷனின் வலது கரத்தினை பற்றிக் கொண்டு சந்தோஷமாக சென்றாள்.
பின்ன அவளும் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவனின் ஸ்டைல், தலையினை அவ்வப்போது கோதியவாரு பேசும் விதம், நண்பர்களை வாரி பேசும் பொழுது தன் வலது கண்ணை மட்டும் அடித்து மட்டும் பேசும் மேனரிஸம் என பார்த்து மயங்கிருத்தாள். தர்ஷனும் இவளின் பார்வையை, பார்த்தும் பார்க்காத படியும் இருந்ததால் தான் இன்று நடனம் ஆட அழைத்திருந்தான்.


என்ன தான் தன் மகன் இவ்வாறு பப் க்ளப் என்று சுத்துவதும், பெண்களிடம் பழகுவது பற்றி அறிந்திருந்தாலும், தன் எல்லைக் கோட்டினை தாண்டாமல் இருப்பது பற்றி தெரிந்ததினால் அவன் போக்கில் விட்டு விட்டார் தர்ஷனின் தந்தை ராஜன்.



“நீ உயர்ந்து மேலே செல்லச் செல்ல, இன்னும் கீழேயே இருப்பவர்களுக்கு நீ சிறியவனாய்த் தோன்றுவதில் வியப்பொன்றும் இல்லை. அதனால், அவர்கள் உன் முயற்சிகளைப் பற்றி எள்ளி நகையாடினால், கண்டு கொள்ளாதே. - Mark twain”

பூக்கும்.



 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top