JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

ஒரு புன்னகை பூவே - அத்தியாயம் 9

revathyrey04

New member
புன்னகை 9 :


தன் அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியின் ஒலியில் தன் தூக்கத்தில் இருந்து சோம்பல் முறித்தபடி எழுந்து அமர்ந்தவள் அறையை சுற்றி பார்வையை ஓட்டினாள் தீக்ஷா. இரவில் வெகு நேரம் சென்றே படுத்ததினால் இன்னும் அசந்து தூங்கும் தன் தோழியை தொந்தரவு செய்யாது மெதுவே கட்டிலில் இருந்து இறங்கி வந்து அறையை ஒட்டி உள்ள பால்கனியின் கதவை திறந்து வெளியில் வந்து நின்றாள்.

அந்த அதிகாலை நேரத்திலும் சென்னையில் வாகனங்கள் தங்கு தடையின்றி நகர்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு வருடங்கள் பெற்றோருடனே இருந்து பழக்கப்பட்டவளிற்கு இனி இங்கு தனியாக தங்கி வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் நேற்று ஒரு நாள் இரவு கடந்ததே பல வருடங்கள் போல் தோன்றியது. அதற்காக உறவினர்கஏ் வீட்டிற்கு சென்ற பழக்கம் இல்லை என்று அர்த்தம் இல்லை. அங்கு சென்றாலும் ஓரிரு நாளில் வீட்டிற்கு சென்று விடலாம் என்பதால் பெரிதாக தெரியவில்லை.

நேற்று வீட்டில் இருந்து கிளம்பும் போது தீக்ஷாவின் பெற்றோரே சலித்து போயினர். “அப்பா பேசாம நானும் சேர்ந்து உங்க கூட பிஸ்னஸ் பாக்க வந்திடவா” என்று இந்த பேக்கிங் செய்த மூன்று நாளில் நூறு முறையாவது கெஞ்சும் குரலில் கேட்டிருப்பாள்.

அவளின் அம்மா “அடியேய் இன்டர்வியு போய் செலக்ட் ஆனதுல இருந்து எத்தனை தடவை தான் ஒரே கேள்விய கேட்டிட்டு இருப்ப, இதுக்கு இன்டர்வியு அட்டெண்ட் பண்ணலனா கூட அந்த ஜாப் வேற யாருக்காகவாது கிடைச்சிருக்கும்ல, இதுக்கே இவ்வளவு அக்கப்போருனா நாளைக்கு கல்யாணம் முடிஞ்சு போதும் போது என்ன பண்ணுவியோ” என்று பேசும் தன் மனைவியை பார்த்து மானசீகமாக வாயை பிளந்தார்.

பின்னே தொடர்ந்து மூன்று நாட்களாக இரவில் தங்களின் அறையில் அவரை போட்டு பாடாய் படுத்தியவராயிற்றே.

தங்களின் அறையில் மனைவி பேசுவதை நினைத்து பார்த்தார்.

“ஏங்க இப்ப நம்ம என்ன வசதியில குறைஞ்சு போயிட்டோம், அவ போய் சம்பாரிச்சு தான் நம்ம சாப்டனுமா, இன்னும் இரண்டு தலைமுறைக்கு வேலைக்கே போகாம உட்கார்ந்து சாப்பிட சொத்து இருக்கு, அவளுக்கு கல்யாணம் பண்ற வரைக்கும் நம்ம கூடவே இருக்கட்டுமே, போர் அடிச்சா உங்க கூட பிஸ்னஸ் பாக்கட்டுமே, அத விட்டுட்டு எதுக்கு அடுத்த ஆள்கிட்ட போய் கை நீட்டி சம்பளம் வாங்கனும்” என்று படபடவென பேசினார்.

“அய்யய்யோ, உன் மகள சமாதானம் படுத்துறதா இல்ல உன்ன சமாதானம் படுத்துறதாடி… பகல்ல அவகிட்ட பேசும் போது அப்பா உங்க கூடவே இருக்கட்டுமானு கேட்குறா, நைட் ஆனா அவள வேலைக்கு போக சொல்லி நா கொடுமை படுத்துற மாதிரி நெனச்சிட்டு நீ என்னய கொடுமை பண்ற” என்று நொடித்துக் கொண்டார்.

தன் மனைவியின் முகம் மாறுவதை உணர்ந்து அவரின் கைகளை எடுத்து தன் கைகளில் பாந்தமாய் அடக்கியவர் பேச தொடங்கினார் “இங்க பாருமா, நமக்கு இருக்குறது ஒரே பொண்ணு, ஒரு பையன் இருந்திருந்தா நானும் உன்ன மாதிரி தான் நினைச்சிருப்பேனோ என்னவோ? நமக்கு நிறையா சொத்து இருக்கு, அவளுக்கும் இப்பவே தேவைக்கு அதிகமாவே சேர்ந்து வச்சிருக்கோம், நாள பின்ன நமக்கு எது ஆனாலும் நம்ம சொத்து முழுசும் அவளுக்கு தான், நான் இல்லனு சொல்லல. ஆனா அவளுக்குனு தனியா இந்த சமூகத்துல அந்தஸ்து வேணும், அவ கல்யாணம் பண்ணிட்டு போற இடத்துல நல்லா வாழனும் வாழ்வா தான், ஆனா ஏதோ ஒரு சந்தர்பத்துல அவளுக்கு நம்ம உதவி தேவையானதா இருக்கலாம் அது பொருளாதாரமாவோ இல்ல வேற எதுக்காகவது, அந்த நேரத்துல நம்ம அவ கூட இல்லனா என்ன பண்ண முடியும். அவ யார் கிட்டயும் எதும் எதிர்பார்க்குற மாதிரி இருந்திட கூடாது,
நாம இருந்தா நம்ம பிள்ளையை நாம பார்த்துப்போம். ஒரு வேளை நம்ம இல்லாத சூழ்நிலையில?? “

நம்ம பக்கத்துல இல்லாத அப்பயும் அவள அவளாவே பார்த்துக்க தெரிஞ்சிருக்கனும். நம்ம பொண்ணு வேலைக்கு போக பிடிக்கலனு சொல்லி என்னட்ட கேட்டிருந்தா நா போக சொல்லி இருக்க மாட்டேன், அவளுக்கு தனியா கம்பெணி ஸ்டார்ட் பண்ணி அதுல சக்சஸ் ஆகனும்னு இருக்கா, நம்மள பிரிஞ்சு இருக்கனூமேனு தான் யோசிக்கிறா, உங்க இரண்டு பேர் கிட்டயும் பேசவே நா தனியா எனர்ஜி ஏத்திக்கனும் போலயே” என்று தீவிரமாக பேச ஆரம்பித்தவர் சலிப்பில் முடித்தார்.


“அங்க ஹாஸ்டல் சாப்பாடு எல்லாம் எப்படி இருக்கும்னு தெரியலயேங்க” என்றவரிடம் “அதெல்லாம் நான் யோசிக்காமல் இருப்பேனா? தீக்ஷாவும் யாழினியும் சேர்ந்தே தங்கு மாதிரி டபுள் பெட்ரூம் ப்ளாட் ஏற்பாடு பண்ணிட்டேன். சமையலுக்கும் வீட்டு வேலைக்கும் ஆள் ஏற்பாடு பண்ணியாச்சு, யாழினி வீட்டுலயும் பேசிட்டேன், நாமளும் போனா தங்க வசதியா இருக்கும்” என்றார்.

எல்லா ஏற்பாடுகளையும் யோசித்து முன்னதாகவே செய்த கணவரை நினைத்து பெருமையும், வியப்புமாக பார்த்தவர் அடுத்து ஏதோ சொல்ல வருவதற்குள் “அம்மா தாயே, உன் மக அங்க போய் வேலைக்கு சேரதுக்குள்ள என்னட்ட நீங்க அங்கு வந்து என்கூட தங்கி அங்க பிஸ்னஸ் பாக்குரிங்களா டாடி னு என் வேலைக்கு உல வைக்க பாக்குறா, இதுல நீ வேற” என்று தலைக்கு மேல் இரு கரம் கொண்டு கும்பிடுவது போல் செய்த கணவரை பற்றி தெரியாதா, மகளின் இந்த தற்காளிக பிரிவே அவரை எவ்வளவு சங்கடப் படுத்தும் என.


மனைவியின் புலம்பல்களை நினைத்தவாறு பேசும் மனைவியை புன்சிரிப்புடன் பார்த்தவர் “குட்டிமா எல்லாம் ரெடியா, யாழினியையும் கேளு, கிளம்புவோம்” என்றார்.

“கிளம்பியாச்சாம்பா அவளோட வீட்டுக்கிட்ட இருக்க பஸ் ஸ்டாப்ல வெய்ட் பண்றதா சொன்னா, நாமளும் கிளம்புவோம்” என தீக்ஷா,அவளின் பெற்றோர்,யாழினி மற்றும் அவளின் அம்மா என கிளம்பிய அனைவரும் சென்னையை மாலையில் அடைந்தனர்.

தங்களின் ப்ளாட்டை அடைந்ததும் வேலை செய்பவர்களை அறிமுகம் செய்து விட்டு சிறிது நேரத்தில் பெற்றோர்களும் கிளம்பினர். தோழிகள் இருவரும் நள்ளிரவு தாண்டி தான் தூங்கினார்கள்.

அந்த காலை பொழுது போக்குவரத்தை பார்த்து நின்றிருந்த தீக்ஷா சமையல் செய்பவர் வர இன்னும் நேரமாகும் என்பதால் தானே கிட்சனிற்குள் நுழைந்து காபி கலந்தாள்.

பால்கனியின் ஜன்னல் திட்டில் அமர்ந்து காபி குடித்தவள் “குட் மார்னிங் டியர்… “ என அலைபேசிக்கு வந்த குறுந்தகவலிற்கு பதில் அனுப்ப ஆரம்பித்தாள்.

இன்னும் தூங்கும் தன் தோழியை பார்த்து “இங்க தூக்கம் வராம இருக்கேன், நீ என்னனா தூங்குறியா இந்தா வரேன் இரு” என்று யாழினியின் காதருகில்

“யே அட்ரா அட்ரா
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க

யே அட்ரா அட்ரா
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க

யே அட்ரா அட்ரா
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க நாக்குமுக்க
நாக்குமுக்க” என காட்டு கத்தலில் அடித்து பிடித்து எழுந்து அமர்ந்த யாழினி அறையை பார்த்தவள் வயிற்றை பிடித்து அடக்க மாட்டாது சிரித்த தீக்ஷா பார்வையில் பட்டாள்.

“அடியேய் உன்ன…..” என்று அடி மொத்தி எடுத்து விட்டாள். “சரி சரி விடு, கிளம்பு கோயிலுக்கு போய்டு டீ நகர் போவோம், நாளைக்கு ஆபிஸ் போனும் மர்சேய் பண்ணலாம்” என கிளப்பி இருவரும் வண்டியில் பறந்தனர்.

தீக்ஷாவின் தந்தை மூர்த்தியின் ஏற்பாடு இது. வேலை மற்றும் வெளி இடங்களுக்கு செல்ல வசதியாக இருக்கம் என.


--------------------------------------------------------

ADS Group of companies :

“எக்ஸ்யூஸ்மி சார் “ என்று கதவை தட்டிவிட்டு தன் எம்.டி ஆதியின் முன் வந்து நின்றாள்.

“எஸ் மிஸ் ஷர்மிளா, டு டே தான நியூ ஜாய்னர்ஸ் வருவாங்க,வழக்கம் போல வெல்கம் பார்டி ஆஃப்டர்நூன் லன்ச் எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டீங்க தான? அண்ட் ஹச்.ஆர் டிபார்ட்மன்ட்ட சொல்லி இப்போதைக்கு டீம் ஸ்பிளிடப் பண்ண வேண்டாம் ஒன் வீக் அப்பறம் பார்த்துக்களாம், இப்போ எல்லாருக்கும் சேர்த்து பேஸிக் டிரைனிங் மட்டும் ஏற்பாடு பண்ண சொல்லுங்க” என்று நீளமாக பேசிய தன் எம்.டி யை கண் சிமிட்டாது பார்த்தாள்.

பின்னே தினமும் இவள் நேரில் வந்து கேட்கும் ஆயிரம் கேள்விகளுக்கு “எல்லாத்தையும் என்கிட்ட கேட்டு கேட்டு பண்ண நீங்க எதுக்கு, உங்களுக்கு எக்ஸ்பளைன் பண்றதுக்கு நானே பார்த்துக்களாம் போல, ஜஸ்ட் மெய்ல் மீ எனிதிங் இம்பார்டண்ட்” என்று எரிந்து விழுவான்.


ஆதியை பற்றி நினைத்தபடி நின்றவள் இன்னும் அவன் கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை. இன்னும் தன் கேள்விக்கு பதில் வராது கையில் உள்ள பைலில் இருந்து பார்வையை அவள் புறம் திருப்பினான்.

அடிக்கடி அவள் இவ்வாறு தன் முன் தன்னை மறந்து நிற்பாள் என்று அறிந்ததால் “ உன் பாடு கொஞ்சம் திண்டாட்டம் தான்டா ஆதி” என்றவாறு தனக்குள் புன்னகைத்து கொண்டவன் வெளியில் காட்டாது “ஹலோ மிஸ் ஷர்மிளா..” என்று சற்று அழுத்தத்துடன் அழைத்தான்.

“ஹான் சார்..” என்று தன்னிலை இறங்கி ஆதியின் கேள்விகளுக்கு பதில் அளித்து வெளியேறினாள். “என்னாச்சு இவருக்கு, இவரு இந்த கம்பெணி பொறுப்பு எடுத்த ஆரம்பத்துலயே நம்ம வேலைக்கு சேர்ந்துட்டோம், அப்ப இருந்து மூனு கேன்சஸ் வந்துருக்காங்க, இந்த தடவை மட்டும் எதுக்கு இவ்வளவு எக்ஸைட் ஆகுராறு” என்று யோசித்தபடி வெளியில் வந்து ஆதி சொன்னது போல் அனைத்தையும் முடித்தாள்.

கான்பரன்ஸ் ஹால் முழுவதும் ஒரே கல்லூரி மாணவர்கள் என்பதால் சிறு சலசலப்பு, பேச்சு, சிரிப்புமாக
இருந்தது. ஷர்மிளா மற்றும் இன்னும் மூன்று நபர்கள் உள்ளே நுழைந்ததும் அனைவரின் சத்தமும் அடங்கி அறை முழுவதும் அமைதியானது என்றாள்,உள் நுழைந்ததில் ஒரு நபர் பேச ஆரம்பித்த உடன் தன் வசீகரித்தல் அனைவரையும் தன் புறம் திரும்பினான்.


“உன் நெஞ்சின் வேகம் எல்லாம் கால்கள் இரண்டோடு புகுத்திக்கொள் நீ”



பூக்கும்.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top