JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

கடல் காதலுக்கு தடையாகுமா டீஸர்

கடல் காதலுக்கு தடையாகுமா..

அபி அவள் அலுவலக வேலைகளை முடிப்பதற்கும் அவள் கை கடிகாரத்தில் மணி ஐந்தைத் தொடுவதற்கும் சரியாக இருந்தது. ஐயையோ இன்னைக்கும் லேட் ஆகி விடுமோ என்று மனது பதற.. அவசர அவசரமாக தன் கணினியை சுவிட்ச் ஆஃப் செய்தாள்.

பின் அந்த கனமான குளிர் தாங்கும் கோட்டை மாட்டிக்கொண்டு கார் பார்க்கிங் நோக்கி நடந்தாள். ஐந்து மணிக்கே மையிருட்டும், மைனஸ் 2 டிகிரி குளிரும் அபியைத் தாக்க... அவள் தன்னையும் அறியாமல் பெரிய அடிகளாக எடுத்து வைத்து கிட்டத்தட்ட ஓடத்தொடங்கினாள். தன் டொயாட்டா காரை நெருங்கியவள்...கைப்பையிலிருந்த கார் சாவியை எடுப்பதற்காக தன் கை உறைகளை அகற்றிய சில நொடிகளிலேயே கைகள் குளிரில் மரக்கட்டை போல்l விறைக்கத் தொடங்கியது.

காருக்குள் ஏறிய பிறகு அங்கு.. அதைவிட அதிகமாக குளிரத் தொடங்க.. பற்கள் தந்தி அடித்தன. எஞ்சினை ஆன் செய்த கையோடு காரின் உஷ்னத்தைக் கூட்டினாள்.

போச்சு.. இன்னைக்கும் அந்த சாராவுக்கு 5 பவுன்டு தண்டம் கொடுக்கனுமா.. அபி நீ இன்ஜினியரிங் படிச்சு இங்க வேலை பார்க்கிறதுக்கு பதிலா பேசாம ஒரு நர்சரி நடத்திருக்கலாம்னு நினைக்கிறேன். உன்ன விட அவள் தான் கூட சம்பாதிக்கிறா.. என்று மனதுக்குள் எண்ணினாள் அபி.

அவள் கார் ரோட்டில் சீறிப் பாய.. குட் ஈவினிங்.. திஸ் இஸ் பிபிசி ரேடியோ ஹம்பர்சைட்.(Humberside),அண்ட் த டைம் நவ் இஸ் டென் பாஸ்ட் பைவ் என்று ரேடியோ அறிவிப்பு சொல்ல..அபி அப்போது பாதி தூரம் கடந்திருக்க.. அப்பாடி.. இனி இருபது நிமிஷத்துக்குள்ள ஈசியா போய்விடலாம் என்ற நம்பிக்கையும், காரின் கதகதப்பும் அவளை நேர்த்தியாக மூச்சுவிடச் செய்தது. நிம்மதி வந்த மாத்திரத்தில் தன் செல்வனின் நினைவும் வந்தது. தன் அழகான புன்னகையில் மம்மி என்று இரு கைகளையும் நீட்டி அவளை நோக்கி வருவது போல் கற்பனை தோன்றியது.

நர்சரியை வந்து சேர்ந்ததும்.. அரவிந்த் ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டான். அந்த நொடியில் உலகமே மறந்தது அபிக்கு. அதற்குள் அரவிந்தைக் கவனித்துக் கொண்ட சாரா டீச்சர் அவன் செய்த சின்னச் சின்ன செயல்கள்.. சாதனைகள்..மற்றும் அவன் மதிய உணவு என்று அனைத்தையும் ஒப்பித்தாள்.

அரவிந்த் மட்டுமே கடைசியாகச் செல்ல வேண்டிய சிறுவன் போலும். அவர்கள் வெளியேறியதும்..நர்சரியே இருண்டுவிட்டது. பாவம் எப்படி வாழ வேண்டிய சிறுவன்.. இப்படி தனியாக வாழ வேண்டிய சூழலில் வைத்துவிட்டாளே என்று தன்னையே நொந்து கொண்டாள். ஆனால் அரவிந்த் அவள் முகத்தை ஆராய்வதை உணர்ந்து முகத்தை மாற்றிக் கொண்டாள் அபி.

சாரிடா செல்லம்...அம்மா தினமும் லேட்டா வரேன்னு கவலைப்படறியா என்றாள் அபி தன் முகத்தில் நிறைந்த வருத்தத்துடன்.. தன் செல்ல மகனிடம்.

தன் தாயின் நிலை புரிந்த சிறுவன் “மம்மி டோன்ட் வொரி.. வில்லியம் லெப்ட் ஜஸ்ட் நவ்” என்றான் அரவிந்த் ப்ரிட்டிஷ் ஆங்கிலத்தில்.

அவனது கனிவான சொற்களில் நெகிழ்ந்து அவன் தலையை வருடி முத்தமிட்டாள் அபி.

மம்மி மம்மி.. கெஸ் வாட்.. இட்ஸ் கொய்ங் டூ ஸ்னோ டுநைட்.. வில்லியம் டோல்ட் மீ.. என்றான் மழலை மொழியில் அரவிந்த்.

“அரவிந்த்.. தமிழ் தமிழ் டா செல்லம்.. என்று தமிழில் பேச நினைவு படுத்தினாள் அபி.

ஐ வில் ட்ரை என்றான் சுருக்கமாக.

என்ன செய்வது, பிறந்ததிலிருந்தே இங்கிலாந்தில் வாழும் நான்கு வயது சிறுவனிடம் இதற்கு மேல் எப்படி எதிர்பார்ப்பது என்ற எண்ண ஓட்டம் நினைவுபடுத்துயது.

அவன் பாட்டி வந்து இருக்கும் நாட்களில் மட்டும் ஓரளவுக்கு வரும் தமிழ்.. அவர் போனவுடன்.. அதுவும் போய்விடுகிறது. அவளும் முழு நேர பணிக்கு செல்வதால்... அவன் வெள்ளைக்காரர்களுடன் மட்டுமே பெருமளவு பேசும்படி ஆகிவிடுகிறது.

பின் வீட்டைச் சென்று அடைந்தவுடன் இருவரும் இரவு உணவை முடித்தனர். பைஜாமாவில் மாறிய அரவிந்த்...ஜன்னல் திரையை விலக்கி குதூகலத்துடன் குதிக்கத் லிப் தொடங்கினான்.

அரவிந்த் சொன்னது போல் அங்கு வெள்ளிப்பனி மழை கொட்டிக் கொண்டு இருந்தது. அதைக் காண கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அவனுடன் அவளும் ரசித்துவிட்டு மகனை உறங்கச் செய்தாள்.

ஆனால் அபிக்கு தான் தூக்கம் வர மறுத்தது. மகனின் குறும்புத்தனமும்..அவள் மீது அவன் வைத்திருந்த கனிவான அன்பும்.. பாசமும்.. அவளையும் அறியாமல் கௌதமை நினைவுபடுத்தியது யாரை நினைக்கக் கூடாது என்று ஐந்து வருடமாக வைராக்கியமாக இருந்தாளோ அவன் முகம் அவள் கண்முன் திரையாக ஓடியது.

எவ்வளவு போராடியும் தடுக்க முடியாமல் அவள் மனது சென்னையை நோக்கி பறந்தது. அவள் கட்டி வைத்திருந்த தடுப்பையும் மீறி அவள் நினைவுகள் வெள்ளப் பெருக்கெடுத்தது. அவள் போராட்டம் எல்லாம் வீண் போக அவள் நினைவுகள் ஐந்து வருடங்களுக்கு முன் இழுத்துச் சென்றது.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top