JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

சங்கமித்ரா டீஸர்

சங்கமித்ரா டீஸர்


அந்த சிவசங்கர் சொன்னதை நம்ப முடியாமல் மித்ரா... “என்ன உளறிட்டு இருக்க.. முதல்ல கதவைத் திற நான் இங்க இருந்து போகனும்..” என்று அவள் கதவை நோக்கி அடி எடுக்க..

“நில்லு... உனக்கு என்னைப் பார்த்தா எப்படித் தெரியுது... நான் சீரியஸா பேசிட்டு இருக்கேன்”.. என்று அவன் இரும்புச் சுவராய் அவளை மறித்து நிற்க..

மித்ரா மனதுக்குள் லேசான அச்சம் பிறந்தது. “இங்க பாரு மித்ரா... எத்தனை வி.ஐ.பி.. இந்த கல்யாணத்துக்கு வந்திருக்காங்க தெரியுமா.. பொண்ணு ஓடி போயிட்டான்னு தெரிஞ்சது... எனக்கு பெரிய அவமானமா போயிடும். என்னை இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் நீ தான் மாட்டி விட்ட... அது உன் தப்பு தான். இப்ப அதுக்கான பரிகாரத்தை நீ பண்ணித் தான் தீரணும்.

எக்காரணத்தைக் கொண்டும் வந்திருக்கவுங்க முன்னாடி என்னால அசிங்கப்பட முடியாது. இந்த நிலைமையில் பொண்ணு யாருங்கிறது பிரச்சனை இல்ல.. ஆனா கல்யாணம் மட்டும் நிக்கக் கூடாது. போ.. அந்த ரூமில் போய் புடவையை மாத்திட்டு வா”.. என்று அவன் கட்டளையாய் சொல்லி முடிக்க..

அவன் சொன்னதைக் கேட்ட மித்ராவுக்கு காதே கூசி விடும் போல்... அவன் சொன்ன செய்தி நாராசமாய் ஒலித்தது.

“ஏய்.. உனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருச்சா... நீ யாருன்னே எனக்கு தெரியாது. எனக்கு என்ன தலை எழுத்தா.. நீ சொன்ன உடனே.. உன் பேச்சை கேட்டு.. நான் உன்ன கட்டிக்க.. அதுவும் இல்லாம.. எனக்கு கணவனா வரக்கூடிய தகுதி உனக்கு எதுவுமே இல்ல.. எனக்கு புருஷனா வர்றவன் ராமனா இருக்கணும். உன்னை மாதிரி ஒரு பொம்பளை பொறுக்கியா இருக்க கூடாது. பாரதி நல்லவேளை தப்பிச்சிட்டா..” என்று மித்ரா தன் எதிரில் நின்றவனை தன்னையும் அறியாமல் வக்கிரமாக்கிக் கொண்டு இருந்தாள்.

அவள் சொன்ன சொற்களில் அவன் நிதானத்தை தொலைத்து... “ என்ன டீ சொன்ன... நான் பொம்பளை பொறுக்கியா... நான் என்ன.. இப்படி உன் சேலையைப் பிடிச்சு இழுத்தேனா”.. என்று அவன் கைகளில் அவள் புடவை முந்தானை சிக்கிக் கொள்ள அவன் முழு பலத்தோடு இழுத்த ஒரே இழுப்பில்.. அது அவள் தோள்களில் இருந்து விடை பெற்று அவன் கையோடு போய்ச் சேர்ந்தது.

“இல்ல நடு ரோட்டில் வச்சு உன்னை இப்படி கட்டிப் பிடிச்சேனா”.. என்று மித்ரா சுதாரிக்கும் முன் அவன் வலிய கரங்கள் அவளை அவன் நெஞ்சோடு இழுத்து அணைத்து கட்டி இருந்தன.

“ இல்லை உன் அனுமதி இல்லாம உன் உதட்டுல”.. என்று அவன் ஆரம்பிக்கும் முன்னமே அவன் எண்ணம் புரிந்து விட மித்ரா தன் முழு பலத்தையும் திரட்டி.. “சீ விடுடா”.. என்று அவனிடம் இருந்து விலக.. அவன் பார்வை அவளைத் துளைத்து எடுத்தது.

மித்ரா அவன் தொடுகையிலும் அவன் பார்வையிலும் கூசிப் போனாள். அவள் கரம் சரிந்திருந்த முந்தானையை எடுத்து தன் மானத்தை காத்துக் கொள்ளப் போராட..

அவள் புடவை வர மறுத்தது. அவள் என்ன வென்று குனிந்து பார்க்க.. அந்த அரக்கன் அவள் புடவையை காலால் மிதித்து நிறுத்தி வைத்து இருந்தான்.

“என் புடவையை விடுறா”.. என்று அவள் ஒரு கரத்தால் தன் நெஞ்சை மறைத்து... மறு கரத்தால் புடவையை இழுக்க தோல்வியே மிஞ்சியது.

மித்ரா மனம் புழுவாய் துடிக்க... அவன் பார்வை ஒரு புறம் கொல்ல... அழுதுவிடத் துடித்த கண்களை அடக்கி.. “நீ எல்லாம் ஒரு மனுசனா.. ஒரு பொண்ணு கிட்ட இப்படி அநாகரியமா நடந்துக்கிறியே உனக்கு வெட்கமா இல்ல” என்று மித்ரா கேட்க...

“நான் இந்த அறைக்குள்ள அடி எடுத்து வச்ச நொடியிலையே.. நீ தான் என் மனைவின்றது முடிவாயிடுச்சு... கட்டிக்கப் போறவன் நான். நான்
இப்
படி பார்க்கிறதில எந்த தப்பும் இல்ல... என்று அவன் புது விளக்கம் தர...

“அது நிச்சயம் நடக்காது.. அதுக்கு நான் பாழுங்கிணத்துல விழுந்து செத்திடலாம்”

“ஓ.. தாராளமா போய் சாகு.. ஆனா இன்னைக்கு நீ என் பொண்டாட்டி.. அதுல எந்த மாற்றமும் இல்ல... உனக்கு புடவை வேணும்னா.. போ.. அந்த புடவையை கட்டிக்கிட்டு என்னோட மேடை ஏறு” என்று அவன் தீர்மானமாகச் சொன்னான்.


அன்புடன் லக்ஷ்மி.


 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top